கீழக்கரையில் இன்று (12-01-2018) தாலூகா அலுவலகத்தில் வட்டாட்சியர் கணேசன் முன்னிலையில் தாலூகா அலுவலர்கள் அனைவரும் சேர்ந்து தமிழர் கலாச்சார முறைப்படி பொங்கல் பொங்க வைத்து கொண்டாடினர். கீழக்கரை நகராட்சி அலுவலகத்திலும் நகராட்சி ஆணையாளர் வசந்தி முன்னிலையில் நகராட்சி அலுவலர் பொங்கல் திருவிழாவை கொண்டாடினர். இன்றை முதல் அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்டதால் இன்று முதலே தமிழகத்தில் அனைத்து பகுதிகளிலும் பொங்கல் கொண்டாட்டம் தொடங்கிவிட்டது. —————-/////——————
Category: நிகழ்வுகள்
இராமநாதபுரம் நகராட்சி பள்ளியில் செஞ்சிலுவை சங்கம் சார்பாக பொங்கல் விழா..
இராமநாதபுரம் அறிஞர் அண்ணா நகராட்சி நடுநிலைப் பள்ளியில் ரெட் கிராஸ் சார்பாக நடைபெற்ற பொங்கல் விழா. தமிழக மண்ணின் மைந்தர்கள் விழாவான பொங்கல் விழா தமிழர்களின் பாரம்பரியத்துடன் கொண்டாடப்பட்டது. இதில் பள்ளி மாணவ, மாணவிகள் உட்பட ஏராளமான பள்ளி நிர்வாகிகள் மற்றும் ஆசிரிய பெருமக்களும் கலந்து கொண்டனர். இந்த பொங்கல் திருவிழாவில் ஏராளமான செஞ்சிலுவை சங்க நிர்வாகிகளும், உறுப்பினர்களும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். ————-///————
கீழக்கரையில் இருந்து சென்னைக்கு மேலும் ஒரு சொகுசு பேருந்து…
சென்னைக்கு கீழக்கரையில் இருந்து பல நிறுவனங்கள் பேருந்து சேவை செய்து வருகின்றனர். அதையும் தாண்டி ராமநாதபுரத்தில் இருந்து தினமும் இரண்டு ரயில் சேவையும் உள்ளது. ஆனால் கீழக்கரையில் இருந்து சென்னைக்கு செல்லும் பயணிகள் எண்ணிக்கை தினம், தினம் அதிகரித்த வண்ணம்தான் உள்ளது. மக்களின் தேவையை பூர்த்தி செய்யும் வண்ணம் கீழக்கரையில் இருந்து சென்னைக்கு “ஷாமா சர்தார் டிராவல்ஸ்” நிறுவனம் படுக்கை வசதி மற்றும் ஏ.சி வசதியுடன் சென்னைக்கு பேருந்து சேவையை தொடங்கியுள்ளனர். இந்த சேவையின் குறிப்பிட்ட அம்சம், […]
நல் உணவே மருந்து.. உணவுக்கு வழிகாட்டும் MYFA அமைப்பு…
கீழக்கரை புதுத்தெரு MYFA சார்பில் கடந்த இரண்டு ஆண்டுகளாக தேவையுடைய குடும்பங்களின் மாதாந்திர உணவுத் தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டு வருகிறது. இந்த மாதாந்திர உணவுத் திட்டம் மூலம் சுமார் 70 க்கும் மேற்ப்பட்ட குடும்பங்கள் பயன்பெற்று வருகிறார்கள். இந்த உணவு திட்டம் சம்பந்தமாக MYFA சங்க செயலாளர் பாதுஷா கூறியதாவது, ”இந்த திட்டமானது கடந்த இரண்டு வருடங்களாக சிறப்பாக நடத்தி வருகின்றோம். இத்திட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஓவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு மாதத்திற்கு தேவையான அனைத்து பொருட்களும் வழங்குகிறோம். மேலும் […]
15-01-2018 அன்று மக்கள் பாதை சார்பாக உச்சிநத்தம் சூரங்குடி அருகே சமத்துவ பொங்கல்..
ராமநாதபுரம் மாவட்டம் உச்சிநத்தம், சூரங்குடி அருகே உள்ள அப்துல் கலாம் கலையரங்கில் நேர்மையாளர் உ.சகாயம் IAS வழிகாட்டுதலில் இயங்கும் மக்கள் பாதை சார்பாக சமத்துவ பொங்கல் நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சியை ப்ரண்டஸ் சர்வீஸ் கிளப், கலாம் நண்பர்கள் நற்பணி மன்றம் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் குருதி கொடை முகாம் (Blood Donation Camp), மரக்கன்றுகள் நடுதல், மக்கள் பாதையின் திட்ட விளக்கக்கூட்டம் ஆகியவை நடைபெற உள்ளன. இந்நிகழ்வில் மாணவர்கள், இளைஞர்கள் , தன்னார்வலர்கள் மற்றும் மக்கள் […]
கீழக்கரை மோகன் எலெக்ட்ரானிக்ஸ் சிறந்த விற்பனையாளராக தேர்வு..
2017ம் ஆண்டுக்கான சிறந்த விற்பனை முகவராக கீழக்கரை மோகன் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் என சன் டைரக்ட் நிறுவனம் அறிவித்துள்ளது. இதற்கான STAR PERFORMER OF THE YEAR என்ற விருதை சன் டைரக்ட் விற்பனையாளர் SAK COMMUNICATION, உரிமையாளர் அமீர்கான், மோகன் எலக்ட்ரானிக்ஸ் உரிமையாளர் மோகனிடம் வழங்கினார். மேலும் மோகன் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தை கவுரவிக்கும் வகையில் தங்க மோதிரமும் பரிசாக வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் சன் டைரக்ட் பிரதிநிதிகள், வாடிக்கையாளர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
கீழக்கரை வடக்குத் தெரு தொழுகை பள்ளியில் திருட்டு..
கீழக்கரை வடக்குத் தெரு மஸ்ஜிதுல் மன்பஃயில் இன்று காலை தொழுகை நேரத்தை காட்டக்கூடிய கடிகாரம் திருடப்பட்டுள்ளது. இன்று அதிகாலை தொழ வந்தவர்கள் பள்ளியில் தொழுகை நேரத்தை காட்டும் கடிகாரம் திருடு போனதை அறிந்து காவல்துறையிடம் ஜமாத் நிர்வாகம் சார்பாக புகார் தெரிவித்துள்ளனர். இத்திருட்டு சம்பவம் அங்கு பொருத்தி இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியிருக்கும் என்று நம்பப்படுகிறது. ஆனால் இன்று மின்சார தடை உள்ளதால் உடனடியாக துப்புதுலக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
மாணவர்களை உலகத் தரத்திற்கு உயர்த்தும் கீழக்கரை கண்ணாடி வாப்பா பள்ளி…
கல்வி மட்டுமே உலகத்தில் மாற்றத்தை கொண்டு வரக்கூடிய மிகப் பெரிய ஆயுதம் இது நெல்சன் மண்டேலாவின் வார்த்தைகள். இந்த வார்த்தைகளை மெய்மைபடுத்தும் முயற்சியில் ஈடுபடும் நிறுவனம் தான் THE BISHOP’S MODEL UNITED NATION ஆகும். இந்த கல்வி நிறுவனம் இந்தியாவில் உள்ள பல கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்களை ஒன்று திரட்டி ஐக்கிய அமைப்பில் நடைபெறும் நிகழ்வுகளை போலவே உலகில் நடைபெறும் அன்றாட விசயங்களை கலந்துரையாட செய்து மாணவர்களை தயார் செய்கிறார்கள். இந்நிகழ்வு வருடந்தோறும் இந்தியாவில் […]
கீழக்கரையில் மக்கள் சேவையில் களம் இறங்கிய “சாலை வெல்ஃபேர் அசோசியேசன்”.
கீழக்கரை நகர் வளர்ச்சிக்கு என்றுமே அரசாங்கத்தை நம்பி இருந்தது இல்லை என்பதற்கு அடையாளமே அங்கு சமூக பணிகள் புரிந்து வரும் எண்ணற்ற சமூக நலச் சங்கங்களே. அந்த நல்நோக்கோடு இன்று அந்த வரிசையில் இணைந்துள்ளது “சாலை வெல்ஃபேர் அசோசியேசன் “. சமீபத்தில் சமூக பணிகளை தொடங்கிய இவ்வமைப்பின் அதிகாரபூர்வமான அலுவலகம் இன்று (07-01-2018) காலை 11.30 மணியளவில் 13/26, சாலை தெரு என்ற முகவரியில் ஆரம்பம் செய்யப்பட்டது. இந்த அமைப்பு மூலம் கல்வி உதவி, மருத்துவ உதவி, […]
சுற்றுப்புற சூழலுக்கு முன்னுரிமை கொடுக்கும் ஐக்கிய அரபு அமீரகம் – ஒரு பார்வை.
ஐக்கிய அரபு அமீரகம் எல்லா நிலையிலும் சுகாதாரத்தை பேணுவதில் முன்னிலை வகிக்கும், அதே போல் சூழலை பேண தவறும் நபர்களை கூட அந்நாட்டின் சட்ட திட்டம் சுகாதாரத்தை பேண வைத்து விடும். உதாரணமாக ராசல் கைமா அமீரகத்தில் உள்ள அல் ஜையிஸ் மலைப்பகுதியில் தினமும், அதிலும் முக்கியமாக விடுமுறை நாட்களில் ஆயிரக்கணக்கான மக்கள் குடும்பத்துடன் வருவதுண்டு. வரும் மக்கள் குப்பைகளை கீழே போட்டு அசுத்தப்படுத்தி விடக்கூடாது என்பதற்காக அந்தப் பகுதிக்குள் நுழையும் பொழுதே நகராட்சி சார்பாக குப்பைகள் […]
கீழக்கரையில் புதிய உதயம் – அல்மாஸ் ஆப்பக்கடை – ஒரு நேரடி ரிப்போர்ட்…
கீழக்கரையில் கடற்கரை ஓரத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது “அல்-மாஸ் ஆப்பக்கடை”. இங்கு வகை வகையான ஆப்பம் முதல் அனைத்து வகையான சிக்கன், மட்டன், ஆட்டுக்கால்சூப் போன்ற உணவு வகைகளும் கிடைக்கின்றது. இக்கடையின் உரிமையாளர் கூறுகையில் நாங்கள் இங்கு வியாபாரம் தொடங்கும் பொழுது தூரமாக உள்ளதே என்று எண்ணினோம், ஆனால் எங்களுடைய சுவையின் மீது நம்பிக்கை வைத்தே தொடங்கினோம் என்றார். அல் மாஸ் ஆப்பக்கடை உரிமையாளர் கூறியது போலவே மக்கள் அங்கு கிடைக்கும் சுவையான உணவுக்கு தேடி வருவதை நாம் காண […]
கீழக்கரையில் கிராம நிர்வாக உதவியாளர்கள் ஆர்ப்பாட்டம்..வீடியோவுடன்..
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் கிராம நிர்வாக உதவியாளர்கள் இன்று (05-01-2018) 5(ஐந்து) அம்ச கோரிக்கைகளை வலியுறித்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டம் தாசில்தார் சிவக்குமார் தலைமையிலும் கிராம நிர்வாக உதவியாளர்கள் சங்கத்தலைவர் உத்தம சேகரன் முன்னிலையில் 5அம்ச கோரிக்கைகளை வலியுறித்தி கீழக்கரையில் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்பாட்டம் நடைபெற்றது இதில் கிராம நிர்வாக உதவியாளர்கள் சங்கச் செயலாளர். சரவணக்குமார், பாக்கியவதி, மாவட்ட இணை செயலாளர். பாண்டி உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
ஆடல், பாடலுடன் கீழக்கரையில் சுகாதார விழிப்புணர்வு நிகழ்ச்சி..
கீழக்கரையில் இன்று (05-01-2018) நகராட்சி சார்பாக முக்கிய வீதிகளான பஜார் பகுதி, சின்னக்கடை தெரு மற்றும் பல பகுதிகளில் ஆடல், பாடலுடன் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது. இந்த விழிப்புணர்வு பிரச்சாரத்தில் திடக்கழிவு மேலாண்மை, தரம் பிரித்தல், கழிப்பறைகளை உபயோகித்தல் போன்ற விழிப்புணர்வு விளக்கங்களை “முழு சுகாதாரம் தமிழகம் – தூய்மை இந்தியா திட்டம் 2018” என்ற தலைப்பில் செயல்படுத்தி வருகின்றனர். இக்கலை நிகழ்ச்சிகளை கீழக்கரை நகராட்சியுடன் இணைந்து அன்னை கம்சலை கலைக் குழுவினர் நடத்தி வருகின்றனர்.
இராமநாதபுர மாவட்ட வருவாய் துறை அலுவலர்கள் வேலை நிறுத்தம்.. பேச்சு வார்த்தையில் சுமூகம்…
நேற்று (03-01-2018) கீழக்கரையில் காவல்துறை அதிகாரி வெள்ளித்துரையின் போக்கை கண்டித்து வருவாய்த்துறை அலுவலர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர், அதை தொடர்ந்து தொடர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடப்போவதாகவும் அறிவித்து இருந்தனர். இந்நிலையில் மக்கள் நலன் கருதி மாவட்ட ஆட்சித்தலைவர் (பொறுப்பு) மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் சம்பந்தப்பட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் வெள்ளதுரை ஆகியோர் உடன் இன்று (04-01-18) மதியம் பேச்சுவார்ரத்தை நடந்தது. பின்னர் அப்பேச்சுவார்த்தையில் சுமூக தீர்வு ஏற்பட்டதின் அடிப்படையில் அனைத்து இயக்க நடவடிக்கைகளும் […]
வருவாய்துறைக்கும், காவல்துறைக்கும் மோதலா?? ஏ.டி.எஸ்.பி ஐ கண்டித்து வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம், வீடியோ தொகுப்புடன்..
இன்று (03-01-2018) கீழக்கரை நகராட்சி, வட்டாட்சியர் அலுவலகம் முன்பு வருவாய் துறை அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் , சமீபத்தில் நடந்த உத்திரகோசமங்கை திருவிழாவில் கீழக்கரை தாசில்தார் கணேசனிடம் கண்ணியக்குறைவான வார்த்தை பிரயோகம் செய்து தரக்குறைவான முறையில் நடந்து கொண்டார் என்று கூறி, காவல்துறை அதிகாரி வெள்ளத்துரை பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் வரும் திங்கள் கிழமை அன்று மாவட்ட அளவில் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபடப்போவதாகவும் அறிவித்துள்ளனர். இது சம்பந்தமாக காவல்துறை அதிகாரி […]
கீழக்கரை புதிய?? பேருந்து நிலையம் கூரை விழுந்து ஒருவர் படுகாயம்..
கீழக்கரையில் ௨ள்ள நகராட்சி பேருந்து நிலையத்தின் பரிதாப நிலையின் காரணமாக அப்பேருந்து நிலையத்தில் உள்ள மேற்கூரை உடைந்து விழுந்ததில் மூக்குபொறி என்பவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இவர் கீழக்கரையில் உள்ள மீனவர் குப்பம் பகுதியை சேர்ந்தவர் இருக்கு கீழக்கரையில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து ஏற்பட்ட பிறகாவது நகராட்சி நிர்வாகம் விழுத்துக் கொள்ளுமா??
வாலிபால் போட்டியில் வெற்றிக் கனிகளை குவித்து வரும் கீழக்கரை புதுத்தெரு (MYFA) இளைஞர்கள்…
கீழக்கரை புதுத்தெரு MYFA அணியினர் வாலிபால் போட்டியில் தொடர்ந்து பல வெற்றிகளைப் பெற்றுள்ளனர். சிவகங்கை மாவட்டம் இளையான்குடி புதூரில் (26.12.2017) அன்று நடைபெற்ற வாலிபால் போட்டியில் நான்காம் பரிசு Rs.10,000 வென்றனர். இராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புள்ளியில் (29.12.2017) அன்று நடைபெற்ற வாலிபால் போட்டியில் மூன்றாம் பரிசு Rs.10,000/- வென்றனர் இராமநாதபுரம் மாவட்டம் வேதாளையில் (01.01.2018) அன்று நடைபெற்ற வாலிபால் போட்டியில் முதல் பரிசு வென்று சாதனை படைத்துள்ளனர். வெற்றி நாயகர்களை வாழ்த்துவதில் கீழை நியூஸ் நிர்வாகம் மகிழ்ச்சியடைகிறது.
கீழக்கரை பொதுமக்கள் நலன் கருதி வார்டுகள் மறுவரையறை சம்பந்தமாக சீராய்வு செய்ய ஆட்சியரிடம் மனு – மக்கள் கருத்துக்கள் வீடியோவாக விரைவில்…
கீழக்கரை உசைனியா மஹாலில். நேற்று (01-01-2018) அனைத்து அமைப்புகள், அரசியல் கட்சிகள் மற்றும் சங்கங்கள் சார்பாக சமீபத்தில் கீழக்கரை வார்டுகள் மறுவரையறையில் ஏற்பட்டுள்ள குளறுபடிகள் சம்பந்தமாக கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில் ஆட்சியரிடம் புகார் மனு அளிப்பது என முடிவெடுக்கப்பட்டு, இன்று (02-01-2018) காலை இராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் கிழக்கு தெரு ஜமாஅத் துணைப்பொருளாளர் முகம்மது அஜீகர், மக்கள் டீம் அப்துல் காதர், இந்தியா தவ்ஜீத் ஜமாஅத் இராமநாதபுரம் […]
இந்திய செஞ்சிலுவை சங்கம் சார்பாக கொள்கை விளக்க பயிற்சிப்பட்டறை..
இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி ராமநாதபுரம் மாவட்ட கிளை சார்பாக கீழக்கரை செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரி யூத் ரெட் கிராஸ் (YRC) மாணவ மாணவியர்களுக்கு ரெட் கிராஸ் கொள்கைகள் விளக்கபயிற்சிப் பட்டறை நடைபெற்றது. முதல்வர் முனைவர் இ. ரஜபுதீன் தலைமையில் கீழக்கரை ரெட் கிராஸ் புரவலர் T. முனியசங்கர் முன்னிலையில் கல்லூரி கூட்ட அரங்கில் ரெட் கிராஸ் சேர்மன் எஸ். ஹாரூன் பயிற்சியை துவக்கி வைத்தார். யூத் ரெட் கிராஸ் ஒருங்கிணைப்பாளர் முனைவர் […]
கீழக்கரையில் வார்டு மறுவரையறை சம்பந்தமான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது…
கீழக்கரை வார்டுகள் மறு வரையறை குறித்து அனைத்து கட்சிகள் மற்றும் இயகக்ங்கள் மற்றும் ஜமாத்தார்கள் மற்றும் சங்கங்களின் நிர்வாகிகள் மற்றும் சமூக நல அமைப்புகள் மற்றும் பொது மக்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் இன்று ஹூசைனியா மஹாலில் 01.01.2018 மாலை 6.50 மணிக்கு நடைபெற்றது. அக்கூட்டத்தில் வரவேற்புரையை மக்கள் டீம் காதர் வழங்கினார். இந்நிகழ்ச்சியினை கீழை அஸ்ரப் நகர் தலைவர் (SDPI.கட்சி) தொகுத்து வழங்கினார். இக்கூட்டத்திற்கான விளக்க உரையை மக்கள் நல பாது காப்பு கழகம்.செயலாளர். முஹைதீன் இப்ராஹிம் […]
You must be logged in to post a comment.