‘நாங்க… நூறு பேரு’ – கீழக்கரை சட்டப் போராளிகளின் சந்திப்பு நிகழ்ச்சி

கீழக்கரை நகரின் முக்கிய பிரச்சனைகளுக்கு சட்ட ரீதியில் ஜனநாயக வழியில் தீர்வு காண்பதற்காக ‘கீழக்கரை சட்டப் போராளிகள்’ என்கிற பெயரில் வாட்சப் குழுமம் கடந்த 2016 ஆம் ஆண்டு நவம்பர் 6 ஆம் தேதி கீழை நியூஸ் நிர்வாகத்தினரால் துவங்கப்பட்டது. இந்த தளம் வாயிலாக அரசு சார்ந்த உள்ளூர் பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வினை ஏற்படுத்தும் வகையில் தகவல் அறியும் உரிமை சட்டம் விண்ணப்ப பயிற்சி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு ஆன்லைன் பெட்டிஷன், தமிழக முதலமைச்சரின் தனிப்பிரிவு ஆன்லைன் […]

தாசீம்பீவீ அப்துல்காதர் மகளிர் கல்லூரியில் மகளிர் தின விழா..

கீகக்கரை தாசீம்பீவீ அப்துல்காதர் மகளிர் கல்லூரியில் நேற்று (08-03-2018) 11.00 மணியளவில் உலக மகளிர் தினவிழா கொண்டாடப்பட்டது. இறைவணக்கத்துடன் தொடங்கிய இந்நிகழ்வு கல்லூரி முதலவர் முனைவர் எஸ்.சுமையா வரவேற்புரை வழங்கினார். சென்னை சான்ட்விச் ஸ்கொயர் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் இயக்குநர் முகமம்து தன்வீர் இக்பால் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு தன்னுடைய வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகள் பற்றியும் பெண்கள் தொழில் தொடங்குவதற்கான வழிமுறைகள் மற்றும் உத்திகள் பற்றியும் தொழில் தொடங்கி முன்னேற்றம் அடைவது எப்படி என்பது குறித்தும் தொழிலை […]

அல் பையினா மெட்ரிக் பள்ளி ஆண்டு விழா நிகழ்ச்சி – புகைப்பட தொகுப்பு

கீழக்கரை கிழக்குத் தெரு அல் பையினா மெட்ரிக் பள்ளியில் கடந்த வாரம் ஆண்டு விழா நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அல் பையினா கல்வி குழுமத்தின் துணை சேர்மன் முஹம்மது இக்பால் குழந்தைகளுக்கு அடிப்படை அஸ்திவாரமாக இஸ்லாமிய அடிப்படையில் கல்வி வழங்குவதன் அவசியம் குறித்து சிறப்புரை வழங்கினார். அதனை தொடர்ந்து அல் பையினா மெட்ரிக் பள்ளியின் தாளாளர் ஜாபிர் சுலைமான் அல் பையினா மெட்ரிக் பள்ளி கடந்து வந்த பாதை குறித்தும், பள்ளியின் எதிர்கால இலக்கு குறித்தும் […]

கீழக்கரையில் புதிய மருந்தகம் திறப்பு..

கீழக்கரையில் இன்று (28-02-2018) புதிய மருந்தகம் “அப்போலோ ஃபார்மஸி” திறக்கப்பட்டது. இப்புதிய மருந்தகத்தை அந்நிறுவனத்தின் மேலாளர் சிவகுமார் திறந்து வைத்தார். இப்புதிய மருந்தகம் மணீஸ் பேக்கரி ஆட்டோ ஸ்டான்ட் எதிரில் கிராம நிர்வாக அதிகாரி அலுவலகம் அருகில் அமைந்துள்ளது.

உயரழுத்த மின் டவர் கோபுரத்தில் ஏறி இளைஞர் தற்கொலை முயற்சி..

இராமநாதபுரம் பரமக்குடி காக்கா தோப்பு அருகே முருகன் 34, என்ற இளைஞர் மது போதையில் உயரழுத்த மின் டவர் கோபுரத்தில் ஏறி தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. விபரம் அறிந்த பரமக்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அந்த இளைஞரை சமாதானப் படுத்த முயற்சித்தனர்.  ஆனால்  ஒரு மணி நேரத்திற்கு மேலாகியும் போதையில் இருந்த  வாலிபர் கீழே இறங்கி வர மறுப்பு. இந்த வாலிபர் தமிழக  அரசு சார்பில் மானிய விலையில் வழங்மும் […]

கீழக்கரையில் கூடுதலாக ஒரு அரசியல் அமைப்பு தொடக்கம்..

தமிழக மக்கள் நல சங்கத்தின் கீழக்கரை கிளை இன்று தொடங்கப்பட்டது. இதற்கான கூட்டம் இன்று (24-02-2018) நடைபெற்றது. இக்கூட்டத்தில் 75கும் மேற்பட்ட ஆண்களும், பெண்களும் கலந்து கொண்டனர். இந்த சங்கம் வரும் மார்ச் மாதம் முதல் அரசியல் கட்சியாக செயல்படும் என்று அறியப்படுகிறது. இச்சங்கத்தின் கீழக்கரை கிளை தலைவராக செல்வம், செயலாளராக பெருமாள், பொருளாளராக தங்கராஜ், துணை தலைவராக சசிகுமார், நகர் துணை தலைவராக ஹாஜா முகைதீன், துணை செயலாளராக பிரவீன்குமார் மற்றும் நகர் இளைஞர் அணி […]

கமல் அரசியல் பயணம் இன்று (21-02-2018) இராமேஸ்வரத்தில் இருந்து தொடங்கியது… புகைப்படத் தொகுப்பு

நடிகர் கமல்ஹாசனின் அரசியல் பயணம் இன்று இராமேஸ்வரத்தில் உள்ள முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் வீட்டில் இருந்து தொடங்கியது.  முதலில் அப்துல் கலாம் அண்ணணிடம் ஆசிபெற்று அங்கு உணவருந்திவிட்டு அப்துல் கலாம் சமாதியில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் அங்கிருந்து இராமேஸ்வரம் மண்டபம் உச்சிப்புள்ளி வேதாளை வழிpயாக இராமநாதபுரம் அரண்மனை முன்பு சிறிது நேரம் மக்கள் மத்தியில் “உங்கள் வீட்டு விளக்கை அணையவிட மாட்டேன்” என்ற அரசியல் வசனத்துடன் தொடங்கினார்.  பின்னர் அங்கிருந்து பரமக்குடி நோக்கி […]

ம.ம.க 10வருட தொடக்கத்தை முன்னிட்டு பேராசிரியர் பல் வேறு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்..

மனித நேய மக்கள் கட்சியின் 10வருட தொடக்கத்தை முன்னிட்டு பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் கீழக்கரைக்கு வருகை தந்திருந்தார். நிகழ்ச்சியின் தொடக்கமாக கீழக்கரை ஜும்மா பள்ளி அருகில் ம.ம.க கொடியை பேராசிரியர் ஜவாஹிருல்லா ஏற்றி வைத்தார். பின்னர் அதைத் தொடர்ந்து கமுதி பால் கடை அருகில் பிராச்சாரமும் மேற்கொண்டார். இப்பிரச்சாரத்தின் போது பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ், மீனவர்களை பாதிக்க கூடிய சாகர்மாலா திட்டத்தை கை விட வேண்டும் என்பதை வலியுறுத்தினார். இந்நிகழ்ச்சியில் ம.ம.க அமைப்புச் செயலாளர் தாம்பரம் யாகூப், மாநில துணைப் […]

துபாயில் கீழக்கரை மக்கள் சங்கமம்..

ஐக்கிய அரபு அமீரகத்தில் தொழில் ரீதியாகவும், வேலை நிமித்தமாகவும் கீழக்கரையில் உள்ள பல தெருக்களைச் சார்ந்த மக்கள் பல்லாயிரக்கணக்கில் உள்ளனர். அனைவரும் அவர்கள் தெருக்கள் சார்ந்த விசயங்களுக்கு ஒன்று சேர்ந்து பல நற்பணிகளை செய்து வருகின்றனர். இந்நிலையில் பல இடங்களில் பரவிக்கிடக்கும் கீழக்கரை மக்களை ஒன்று சேர்க்கும் நோக்கில் கீழக்கரை டைம்ஸ் ஹமீது யாசின், நஜீம், நசுருதீன் மற்றும் பரக்கத் அலி ஆகியோரின் முயற்சியில் இன்று (09-02-2018-வெள்ளிக்கிழமை)  துபாயில் உள்ள ஜபீல் பார்க்கில் கீழக்கரை மக்கள் அனைவரும் […]

ரியாத் தமிழ் சங்க விழாவில் திமுக எம்.பி திருச்சி சிவா..

சவுதி அரேபியா தலைநகரான ரியாத் தமிழ் சங்கத்தின் 12வது ஆண்டு விழாவை முன்னிட்டு குடியரசு தின விழா மற்றும் தமிழர் திருநாளாக “யாதும் ஊரே, யாவரும் கேளீர்” என்ற தலைப்புடன் கொண்டாடப்பட்டது. இவ்விழாவிற்கு சிறப்பு விருந்தினராக திமுக திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் சிவா கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இந்நிகழ்ச்சி ரியாத் மலாஸ் பகுதியில் உள்ள அல்மாஸ் உணவகம் வளாகத்தில் 04-02-2018 அன்று மாலை 8.30 மணி முதல் நடைபெற்றது. இந்நிகழ்வு பள்ளி மாணவன் ராசிக் கிராத்துடன் தொடங்கியது. […]

கீழக்கரையில் பஸ் கட்டண உயர்வை கண்டித்து திமுக பஸ் மறியல் போராட்டம்..

தமிழகத்தில் இரு வாரங்களுக்கு முன்பு மக்களுக்கு சுமையேற்றும் வகையில் பஸ் கட்டணம் தமிழக அரசால் உயர்த்தப்பட்டது. இதையொட்டி பொதுமக்கள் மத்தியிலும், அரசியல் கட்சிகள் மத்தியிலும் கடும் கண்டனக்குரல் எழும்பியது. அதைத் தொடர்ந்து திமுக செயல் தலைவர் ஸ்டாலின் சில நாட்களுக்கு முன்பு தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெறும் என அறிவிப்பு வெளியிட்டிருந்தார். அதைத் தொடர்ந்து இன்று கீழக்கரையில் பஸ் கட்டண உயர்வை கண்டித்து திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் இணைந்து பஸ் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டபட்டனர். […]

கீழக்கரை வடக்குத் தெரு அல் அமீன் சகோதரர்கள் நடத்திய கட்டுரை போட்டிக்கான பரிசளிப்பு விழா …புகைப்படத் தொகுப்புடன்..

கீழக்கரை வடக்குத் தெரு அல் அமீன் சகோதர்கள் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக மாணவ, மாணவிகளுக்கான கட்டுரைப் போட்டி நடத்தினர். இப்போட்டிக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டு வெற்றியாளர்களுக்கு இன்று (27-01-2018) பரிசுகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு ஆலிம் ஆசிஃப் தலைமை தாங்கி சிறப்புரையாற்றிறார். இந்நிகழ்ச்சியில் ஏராளமானோர் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். புகைப்படத் தொகுப்பு

கீழக்கரை இஸ்லாமிய கல்வி சங்கம் சார்பாக நடைபெற்ற தெருமுனை மார்க்க விளக்க பயான் நிகழ்ச்சி

கீழக்கரை இஸ்லாமிய கல்வி சங்கம் நடத்திய தெருமுனை மார்க்க விளக்க பயான் நிகழ்ச்சி இன்று (26.01.2017) இரவு 8.30 மணியளவில் (சின்னக்கடை தெரு) ஈஸா தண்டையல் தெருவில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு இஸ்லாமிய கல்வி சங்கத்தின் தலைவர். சட்டப் போராளி. தவ்ஹீத் ஜமாலி ஆலீம் தலைமையேற்று மார்க்க சொற்பொழிவு வழங்கினார். அதனை தொடர்ந்து மதரஸ்துல் ராலியா மாணவர்கள் முஹம்மது ரிதுவான் மற்றும் முஹம்மது பயால் மார்க்க விளக்க உரை நிகழ்த்தினார்கள். நிகழ்ச்சியின் நிறைவாக, அப்பகுதியை சேர்ந்த மாணவர்கள் […]

முகம்மது சதக் பாலிடெக்னிக்கில் ஒருங்கிணைந்த வேலை வாய்ப்பு முகாம்..

முகம்மது சதக் பாலிடெக்னிக் வளாகத்தில் 23-01-2018 அன்று ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாம் டி.வி.எஸ் சுந்தரம் ஃபாஸ்டனர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் அலாவுதின் தலைமையுரையாற்றினார். கல்லூரி துணை முதல்வர் சேக்தாவுது மாணவர்களுக்கு வாழ்த்துரை வழங்கினார். மரியதாஸ் நிகழ்ச்சிக்கு வந்த அனைவரையும் வரவேற்றார். இந்த வேலை வாய்ப்பு முகாமில் டிப்ளமோ மின்னியல், இயந்திரவியல், மின்னணுவியல் துறை மற்றும் தொடர்பியல் துறை மாணவர்கள் கலந்து கொண்டனர். இம்முகாமில் டி.வி.எஸ் சுந்தரம் ஃபாஸ்டனர்ஸ் நிறுவன […]

கீழக்கரை காவல் துறையுடன் பொது நல அமைப்புகள் இணைந்து நாளை நடத்தும் போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்து தடுப்பு நிகழ்ச்சியில் ADSP வெள்ளத்துரை சிறப்புரை..

கீழக்கரை நகரில் கடந்த சில ஆண்டுகளாக வாகன போக்குவரத்து நெரிசல் சொல்லொண்ணா துயரத்தை பொதுமக்களுக்கு தந்து வருகிறது. கீழக்கரையில் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு வாகன பெருக்கத்தால் சாலைகள் முழுமையும் எந்நேரமும் வாகனங்கள் நிரம்பி இருக்கிறது. போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடிக்காமல் செயல்படும் வாகன ஓட்டிகளால் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணாக்கர்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். சிறுவர்களால் இயக்கப்படும் இரு சக்கர வாகனங்களால் தொடர்ந்து உயிரிழப்புகள் நிகழ்ந்த வண்ணம் இருக்கிறது. இது சம்பந்தமாக கீழக்கரை காவல் துறையுடன் பொது […]

கீழக்கரை தஃவா குழு சார்பாக மார்க்க சொற்பொழிவு பொதுக்கூட்டம் சிறப்பாக நடைபெற்றது…

கீழக்கரை தெற்குத் தெரு குளத்து மேடு மைதானத்தில் “கீழக்கரை தஃவா குழ” சார்பாக ஏற்பாடு செய்திருந்த  மார்க்க அறிஞர்கள் பங்கேற்ற சொற்பொழிவு பொதுக்கூட்டம் சிறப்பாக நடைபெற்றது. இப்பொதுக்கூட்டத்தில் ஏராளமான ஆண்கள், தாய்மார்கள், கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்கள் ஏராளமான மக்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். புகைப்படத் தொகுப்பு

மதுரை ஜல்லிக்கட்டு ஒருவர் பலி..

பாலமேட்டில் நடந்த ஜல்லிகட்டில் காளிமுத்து, வயது 19 மாடு பிடிக்கும் வீரர் போட்டியை பார்த்து கொண்டிருக்கும் பொழுது மாடு முட்டியதில் பலியானார்.

சவுதி அரேபியா ஜித்தாவில் விளையாட்டு புதிய உத்வேகத்துடன் FRIENDS REPUBLIC CLUB..

சவுதி அரேபியா ஜித்தாவில் இயங்கி வரும் FRIENDS REPUBLIC CLUB எனப்படும் அமைப்பு ஜித்தாவில் பணிபுரியும் பல மாநிலங்களில் உள்ள இளைஞர்களை உள்ளடக்கி கடந்த பல வருடங்களாக இயங்கி வந்தது. கடந்த 12.01.2018 அன்று முறைப்படி பதிவு செய்யப்பட்ட அமைப்பாக அதற்கான பிரத்யோக அனையாளச் சின்னத்துடன் மக்களுக்கு ZAFIRO FINE DINING என்ற ஹோட்டலில் அறிமுகம் செய்யப்பட்டது.  இவ்வமைப்பில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகம் மற்றும் பல மாநிலத்தைச் சார்ந்தவர்கள் உறுப்பினராக இணைந்து கிரிக்கெட், வாலிபால், கூடைப்பந்து மற்றும் […]

கீழக்கரையில் ”தஃவா குழு” சார்பாக மார்க்க விளக்க பொதுக்கூட்டம்..

அவசரமான உலகில் நம் பிறப்பின் அவசியமும், அர்த்தமும் தெரியாமல் தறிகெட்ட குதிரை போலவே ஒவ்வொருவருடைய எண்ணங்களும், செயல்களும் திசை மாறி சென்று கொண்டிருக்கிறது. இன்றைய நவீன உலகில் இஸ்லாமிய சமுதாயமோ மறுமை வாழ்கை என்ற நினைப்பை மறந்தவர்களாக இம்மை வாழ்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் திருமறை குர்ஆன் “நன்மையை ஏவி தீமையை அழிக்கட்டும்” என்று வலியுறுத்துவது போல் ஒரு பிரிவினர் இத்தனை பரபரப்புக்கு இடையிலும் மார்க்கத்தை எத்தி வைக்கும் பணியை செய்து கொண்டுதான் இருக்கிறார்கள். அதன் அடிப்படையில் […]

கீழக்கரையில் உதயமாகும் புதிய மருந்தகம் ..

கீழக்கரையில் நாளை (15-01-2018) அன்று வள்ளல் சீதக்காதி சாலையில் உள்ள அனஸ் காம்ப்டக்ஸ் வளாகத்தில் “3M PHARMACY” என்ற பெயரில் புதிய மருந்தகம் ஆரம்பம் ஆக உள்ளது. கீழக்கரையில் பல சிறப்பு மருத்துவமனைகள் வளர்ந்து வரும் வேளையில் மக்களின் தேவையை தீர்க்க, தரமான மருந்துக்கடைகளும் அவசியமாகிறது. இத்தொழில் சிறப்புற கீழை நியூஸ் நிர்வாகம் வாழ்த்துகிறது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!