கீழக்கரையில் பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியாவின் 10வது ஆண்டு துவக்க விழா நிகழ்ச்சி

பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியாவின் 10வது ஆண்டு துவக்க விழா நிகழ்ச்சி இன்று 17.02.17 பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியாவின் நகர் செயற்குழு உறுப்பினர் அஹமது நதிர் தலைமையில் 500 பிளாட் பகுதி தலைவர் சகோதரர் நபில் நகர் செயற்குழு உறுப்பினர் அவர்கள் மற்றும் முஸ்லிம் பஜார் லெப்பை டீ கடை அருகில் செயற்குழு உறுப்பினர் ஹமீது பைசல் கொடி ஏற்றி துவங்கி வைத்தார். வரவேற்புரை. ஹுசைன் ரஹ்மான் PFI.நகர் செயற்குழு உறுப்பினர். நிகழ்த்தினார். அதை தொடர்ந்து […]

கீழக்கரை வடக்கு தெரு அல்-மதரஸத்துல் முஹம்மதியாவில் நடைபெற்ற பரிசளிப்பு விழா நிகழ்ச்சி..

கீழக்கரை வடக்கு தெரு சமூக நல அமைப்பு (NASA) வின் கீழ் இயங்கி வரும் சிறுவர்களுக்கான அல் மதரஸத்துல் முஹம்மதியா இஸ்லாமிய பாட சாலையில் நேற்று 16.02.2017 இரவு 8.30 மணியளவில் மதரஸா மாணவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியினை மதராசாவின் தலைமை நிர்வாகியும், சிறந்த மார்க்க கல்வியாளரான சகோ.ஆஷிஃப் தலைமை தாங்கினார். கீழக்கரை மக்கள் நல பாதுகாப்பு கழகத்தின் பொருளாளர், கீழக்கரை மக்கள் களத்தின் துணை தலைவர்.முஹம்மது சாலிஹ் ஹுசைன் சிறப்புரையாற்றி, மார்க்க கல்வியில் […]

கீழக்கரையில் இன்று 17.02.17 மாற்றுத் திறனாளிகளுக்கான விழிப்புணர்வு முகாம்

இராமநாதபும் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலத்துடன் மக்கள் நல பாதுகாப்பு கழகம், கீழக்கரை மக்கள் களம் இணைந்து நடத்தும் மாற்றுத் திறனாளிகளுக்கான விழிப்புணர்வு முகாம் இன்று 17.02.17  வெள்ளிக்கிழமை மாலை 4 மணியளவில் கிழக்குத்தெரு தீனியா மெட்ரிகுலேசன் பள்ளி வளாகத்தில் நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் தேசிய மாற்றுத் திறனாளிகள் வேலைவாய்ப்பு மற்றும் மறுவாழ்வு மையம் – சென்னை, மாவட்ட தொழில் மையம், மகளீர் மேம்பாட்டு திட்டம், மாவட்ட முன்னோடி வங்கி உள்ளிட்ட அரசுத்துறை அமைப்பினர் கலந்து […]

கீழக்கரையில் புதிய மெடிக்கல் ஷாப் ”ஹெல்த் கேர் பார்மஸி” துவக்கம்

கீழக்கரை வடக்குத் தெரு வள்ளல் சீதக்காதி லேனில் ”ஹெல்த் கேர் பார்மஸி” என்ற பெயரில் புதிய மெடிக்கல் ஷாப் ஒன்றினை, சாலை தெருவை சேர்ந்த சகோதரர்கள் முஹம்மது யூசுப், ஹசன் பாய்ஸ் இன்று (13.02.2017) திங்கள் கிழமை காலை துவங்கியுள்ளனர். இறைவன் அருளால் இவர்களுடைய வியாபாரத்தில் பரக்கத் கிடைக்க கீழை நியூஸ் வலை தளம் சார்பாக மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

கீழக்கரையில் புதிய நிறுவனம் ‘ட்ரீம் கன்ஸ்ட்ரக்சன்’ துவக்கம்

கீழக்கரை வடக்குத் தெரு சேகப்பா சாலையில் ‘ட்ரீம் கன்ஸ்ட்ரக்சன்’ என்ற பெயரில் ஒப்பந்த அடிப்படையில் கட்டிட வேலைகள் செய்கிற நிறுவனம் ஒன்றினை, நடுத் தெருவைச் சேர்ந்த முஹம்மது பயாஸ் மற்றும் நண்பர்கள் இன்று (12.02.2017) ஞாயிற்றுக் கிழமை  காலை துவங்கியுள்ளனர். இவருடைய வியாபாரம் செழிக்க கீழை நியூஸ் வலை தளம் சார்பாக மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

ஐக்கிய அரபு அமீரகத்தில் மாபெரும் சிறப்பு கருத்தரங்கம்.

இன்று (09-02-2017) ஐக்கிய அரபு அமீரகம் அபுதாபியில் அமீரக காயிதே மில்லத் பேரவை சார்பில் சிறப்பு கருத்தரங்கம் நடத்ப்படுகிறது. இந்தக் கருத்தரங்கில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர். K.M காதர் மொகிதீன், இஸ்லாம் எங்கள் வழி இன்பத் தமிழ் எங்கள் மொழி என்ற தலைப்பில் சிறப்புரையாற்றுகிறார். இந்நிகழ்ச்சி அபுதாபி கேரளா சமூக நல மையம் – Kerala Social Centre அரங்கில் (மதினா ஜாயில் ஷாப்பிங் மால் எதிரில்) மாலை 07.00 மணி முதல் நடை […]

கீழக்கரை தெற்கு தவ்ஹீத் ஜமாத் சார்பாக டெங்கு நோய் ஒழிப்பு பிரச்சார பேரணி.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இராமநாதபுரம் தெற்கு மாவட்டம் கீழக்கரை தெற்கு கிளை சார்பாக 8.2.2017 அன்று டெங்கு நோய் ஒழிப்பு பிரச்சார பேரணி நடைபெற்றது. இதில் மக்தப் மதரஸாவில் பயிலும் மாணவ மாணவிகள் தூய்மையை பற்றி இஸ்லாம் கூறும் குர்ஆன் வசனங்கள் மற்றும் நபிமொழி அடங்கிய பதகைகளை ஏந்திய வண்ணம் நகரின் முக்கிய வீதிகளில் பேரணியாக வந்து டெங்கு நோய் ஒழிப்பு பற்றி விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தனர். மேலும் பொதுமக்களுக்கு டெங்கு நோய் ஒழிப்பு பற்றிய துண்டு […]

கீழக்கரை வடக்கு தெரு முஹைதீனியா பள்ளியில் நாளை சிறார்களுக்கு ஆதார் அட்டை எடுக்கும் பணி நடைபெறுகிறது ..

கீழக்கரையில் நாளை (07-02-2017) வடக்குத் தெரு முஹைதீனியா பள்ளி வளாகத்தில் 4 வயதுக்கு உட்பட்ட சிறார்களுக்கு ஆதார் அட்டை எடுக்கும் பணி காலை 10.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை நடைபெற உள்ளது.  ஆதார் எடுக்கும் பணி இன்றும் (06-02-17) நடைபெற்றது. முகாமுக்கு வரும்பொழுது சிறார்களின் பிறப்பு சான்றிதழ் மற்றும் பெற்றோர்களின் ஆதார் அட்டை நகல் கொண்டு வருமாறு வலியுறுத்தப்படுகிறார்கள்.

கீழக்கரை அணியின் தொடரும் வாலிபால் வெற்றி..

இன்று கட்டுமாவடியில் திப்புசுல்தான் அணியினரால் முதலாம் ஆண்டு கைப்பந்து போட்டி நடத்தப்பட்டது. இப்போட்டியில் பல்வேறு அணியினர் கலந்து கொண்டனர்.  இன்று நடைபெற்ற இறுதி போட்டியில் கீழக்கரையைச் சார்ந்த MVC ( Moore Volleyball Club) அணியினர் முதல் பரிசை வென்றனர். கீழக்கரையில் இருந்து வெளியூரிக்கு சென்று கீழக்கரை அணியினர் வெற்றி பெறுவது கடந்த ஒரு மாதத்தில் மூன்றாவது வெற்றியாகும். கீழக்கரையைச் சார்ந்த அணியினர் மென்மேலும் வெற்றிகள் பல பெற கீழைநியூஸ் நிர்வாகக்குழு வாழ்த்துகிறது.

கீழக்கரை சார்பு ஆய்வாளருக்கு வழியனுப்பு நிகழ்வு..

கீழக்கரை காவல் நிலையத்தில் கடந்த சில வருடங்களாக நட்புறவோடு சிறப்பாக பணியாற்றி நம் நகர மக்களின் அன்பை பெற்ற சார்பு ஆய்வாளர் சிவசுப்ரமணியம் அவர்கள் பணி மாறுதலின் காரணமாக  கீழக்கரையை விட்டு மதுரை மாற்றலாக செல்கிறார். கீழக்கரை இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரி தலைமையில் அவருடைய கடந்த கால பணிக்காக பாராட்டு நிகழ்வு நடைபெற்றது. கீழக்கரைக்கு அவர் நட்புடன் செய்த பணிக்கு மரியாதை செய்யும் விதமாக மக்கள் நல பாதுகாப்புக் கழகம் சார்பாக கழகத்தின் செயலாளர் முகைதீன் இபுறாகீம், பொருளாளர் […]

தொடரும் நிலவேம்பு கசாயம் வினியோகம்..

கீழக்கரையில் கடந்த சில மாதங்களாகவே டெங்கு காய்ச்சலின் பாதிப்பு அதிகமாக உள்ளது.  அதனால் சிறுவர் முதல் முதியவர்கள் வரை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார்கள்.  இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காணும் விதமாக கீழக்கரை நகராட்சி சுகாதாரத்துறை மற்றும் பல்வேறு சமூக அமைப்புகளும் நகர் முழுவதும் நிலவேம்பு கசாயம் வழங்கி வருகிறார்கள். இதன் தொடர்பாக மக்கள் நல பாதுகாப்புக் கழகம், கீழக்கரை சட்ட போராளிகள் குழுமம், கீழக்கரை மக்கள் களம் மற்றும் பல சமூக நல அமைப்புகள் இணைந்து நிலவேம்பு கசாயம் வழங்கும் சிறப்பு […]

இன்று சின்னக்கடை தெருவில் சிறார்களுக்கான ஆதார் அட்டை எடுக்கும் பணி..

கீழக்கரையில் இன்று 31-01-2017,சின்னக்கடை தெரு மக்கள் ஊழியர் முஸ்லீம் சங்கத்தில் சிறுவர்களுக்கு ஆதார் அட்டை போட்டோ எடுக்கும் பணி நடைபெறுகிறது. முகாமுக்கு வரும்பொழுது சிறார்களின் பிறப்பு சான்றிதழ் மற்றும் பெற்றோர்களின் ஆதார் அட்டை நகல் கொண்டு வருமாறு வலியுறுத்தப்படுகிறார்கள்.

தொடர்ந்து வாகை சூடும் வடக்கு தெரு அல்ஜதீத் வாலிபால் அணி..

கீழக்கரை வடக்குத் தெருவைச் சார்ந்த அணியாகும் அல் ஜதீத் வாலிபால் கிளப்.  இந்த கிளப்பின் அணி உள்ளூர் மற்றும் வெளியூரில் பல போட்டிகளில் கலந்து கொண்டு பரிசுகளை வென்றுள்ளனர். இந்த வாரம் இராமேஸ்வரம் SRM VOLLEYBALL TOURNAMENT நடைபெற்றது.  இந்த போட்டியில் அல் ஜதீத் வாலிபால் கிளப் முதல் பரிசை வென்றுள்ளது.  அடுத்ததாக இரண்டாவது மற்றும் மூன்றாவது பரிசினை முகம்மது பாய்ஸ் கிளப், ஒப்பிலான் மற்றும் CVC கிளப், கீழக்கரை முறையே வென்றுள்ளனர். வெற்றி பெற்ற அணியினருக்கு […]

ஆலந்தூர் வாழ் இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் சார்பாக குடியரசு தின வாழ்த்து…

சென்னை ஆலந்தூர் மற்றும் ஆதம்பாக்கம் பகுதி வாழ் அனைத்து இஸ்லாமிய சகோதர சகோதரிகளின் சார்பாக குடியரசு தின நலவாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டது வர்தா புயலால் செடிகளையும் மரங்களையும் இழந்த பொதுமக்களுக்கு மரகன்றுகள் , பழ மரகன்றுகள் மூலிகை செடிகள் மற்றும் கொசுவிரட்டி (துளசி ) செடிகளும் கொடுக்கப்பட்டது இந்நிகழ்ச்சியை துவக்கி வைத்து சிறப்பு அழைப்பாளர்காளாக திரு. செல்வின் சாந்தகுமார் ஆய்வாளர் S1- காவல் நிலையம் , S.ஜிந்தா மதார் காஞ்சி மாவட்ட வடக்கு செயலாளர், மனித நேய ஜனநாயக […]

சிறுவர்களுக்கான ஆதார் அட்டை..

அறிவிப்பு வரும் 30-01-2017 – திங்கட்கிழமை அன்று கீழக்கரை, கைரத்துல் ஜலாலியா பள்ளி அரபி மதரஸா வளாகத்தில் காலை 10.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை நடைபெறும்.  இம்முகாமுக்கு செல்பவர்கள் குழந்தைகளின் பிறப்புச் சான்றிதழ் நகல் மற்றும் பெற்றோர்களின் ஆதார் அட்டை நகல் எடுத்துச் செல்லும்படி அறிவுறுத்தப்படுகிறார்கள். இந்த அறிவிப்பை கிழக்கு தெரு ஜமாஅத் பள்ளி நிர்வாகம் பொதுமக்கள் பயன் பெறும் பொருட்டு வெளியிட்டுள்ளார்கள்.

நிலவேம்பு கசாயம், புது கிழக்கு தெரு பகுதியில் வினியோகம்..

கீழக்கரையில் இன்றும் நிலவேம்பு கசாயம் வினியோகம் தொடர்கிறது.. நேற்று தொடங்கிய நில வேம்பு கசாயம் வினியோகம் இன்று புதிய கிழக்கு தெரு பகுதியில் தொடர்கிறது.  அனைத்து மக்களும் பயனடையுமாறு சமூக ஆர்வலர்கள் அழைப்பு விடுத்துள்ளார்கள். இந்நிகழ்ச்சி மக்கள் நல பாதுகாப்புக் கழகம்,கீழக்கரை மக்கள் பொதுதளம்,கீழக்கரை சட்ட போராளிகள் தளம் மற்றும் கீழக்கரை மக்கள் களம் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கீழக்கரையில் குழந்தைகளுக்கான ஆதார் அட்டை முகாம்..

கீழக்கரையில் இன்று (28-01-2017) காலை 10 மணி முதல் மாலை 5 மணிக்கு வரை 2012 ம் வருடம் 2 வது மாதத்திற்க்கு பின் பிறந்த சிறு குழந்தைகளுக்கு ஆதார் அட்டை போட்டோ எடுக்கும் முகாம் நடை பெறுகிறது. இம்முகாம் கீழக்கரை ஹமீதியா ஸ்கூல், மறவர் தெரு தொடக்கப் பள்ளி உட்பட பள்ளிகளில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இம்முகாமுக்கு செல்பவர்கள் குழந்தைகளின் பிறப்புச் சான்றிதழ் நகல் மற்றும் பெற்றோர்களின் ஆதார் அட்டை நகல் எடுத்துச் செல்லும்படி அறிவுறுத்தப்படுகிறார்கள். தற்பொழுது […]

அம்மா திட்ட முகாம்- பயனாளிகள் மகிழ்ச்சி..

கீழக்கரை தாலுகா திருஉத்திரகோசமங்கை கிராமத்தில் உள்ள சமுதாயக்கூடத்தில் கீழக்கரை தாசில்தார் (பொ) திரு கணேசன் வட்ட வழங்கல் அலுவலர்  திரு கே எம் தமிம்ராஜா மண்டல துணை தாசில்தார் பெனித்குமார் முன்னிலையிலும் நடைபெற்றது இம்முகாமில் பயனாளிகளுக்கு முதியோர் உதவித்தொகைகளும், குடும்பஅட்டையில் பெயர்சேர்த்தல் பெயர்நீக்கம்,பெயர் திருத்தம், முகவரி மாற்றம் உள்ளிட்ட கோரிக்கைகளுடன் வரப்பெற்ற அனைத்து மனுக்களும் பரிசீலிக்கப்பட்டு உரிய உத்தரவுகள் 69 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது இம்முகாமில்  திருஉத்திரகோசமங்கை வருவாய் ஆய்வாளர் திருமதி கோகிலா, கிராம நிர்வாக அலுவலரகள் திரு முனிஸ்வரன், பூபதி, முன்னாள் ஊராட்சித்தலைவர் திரு உத்தண்டவேலு […]

கீழக்கரை நகர்.SDPI. கட்சியின் அலுவலகம் திறப்பு விழா!!!!

கீழக்கரை நகர் SDPI. கட்சியின் அலுவலகம் தமிழ் மாநிலப் பொதுச் செயலாளர்.SDPI. கட்சியின் கொடியை ஏற்றினார் அதனை தொடர்ந்து அலுவகத்தை திறந்து வைத்தார்.பின்பு சிறிது நேரம் கிழக்கு மாவட்ட தலைவர்.அப்பாஸ் அலி ஆலிம் உறையாற்றினார். அதனை தொடர்ந்து தமிழ் மாநிலப் பொதுச் செயலாளர் பி.அப்துல் ஹமீது அவர்கள் நகர் நிர்வாகிகள் பல இன்னலுகளுக்கு பிறகு அலுவலகம் திறக்ககபட்டுள்ளது இதற்க்காக முயற்சி எடுத்த அனைவருக்கும் வாழ்த்துக்கள் என்றும் சில கருத்துக்களை பதிவு செய்தார். தலைவர்.குதுபு ஜமான் , துணைத் தலைவர்.பாதுஷா, நகர் […]

கீழக்கரை கைரத்துல் ஜலாலியா பள்ளியில் குடியரசு தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது

கீழக்கரை கைரத்துல் ஜலாலியா பள்ளியில் குடியரசு தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. நமது நாட்டின் 68ஆவது குடியரசு தின விழாவை முன்னிட்டு கிழக்குத்தெரு ஜமாஅத் நிர்வாகத்தின் கீழ் இயங்கி வரும் கைராத்துல் ஜலாலியா தொடக்கப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சட்ட போராளி S.அஹமது அஸ்லம் அவர்கள் இந்திய தேசியக்கொடியை ஏற்றி வைத்து சிறப்புரை ஆற்றினார்கள். அது போல் கைராத்துல் ஜலாலியா மேல்நிலைப்பள்ளியில் K.S.M.நூருல் அமீன் தலைமையில் கொடியேற்றபட்டு நிகழ்ச்சி இனிதே நிறைவடைந்தன.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!