கீழக்கரை செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இன்று 06.03.17 திரைப்பட நடிகர் விவேக் தலைமையில் மரம் நடு விழா நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவிற்கு கல்லூரி முதல்வர் முனைவர் ராஜபிதீன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக திரைப்பட நடிகர் சின்ன கலைவாணர் பத்மஸ்ரீ விவேக் கலந்து கொண்டு மரம் நடு விழாவினை துவங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார். அவர் பேசுகையில் ”இராமநாதபுரம் மாவட்டம் பல்வேறு சிறப்புக்களுக்கு உரியது. இம்மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி கல்லூரியில் […]
Category: நிகழ்வுகள்
கீழக்கரை தாலுகாவிற்கு தாசில்தாராக பதவி உயர்வு செய்யப்பட்டுள்ள தமீம் ராசாவுக்கு மக்கள் நல பாதுகாப்பு கழகம் சார்பாக வாழ்த்து
கீழக்கரை தாலுகாவிற்கு சமூக பாதுகாப்பு திட்ட அலுவலகத்தின் புதிய தாசில்தாராக தமீம் ராசா பதவி உயர்வு வழங்கப்பட்டு நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவினை மாவட்ட ஆட்சியர் அனுப்பியுள்ளார். அதில் பணி நியமனம் பெற்றவர்கள் புதிய பணியிடத்தில் உடனடியாக பதவியேற்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் இது வரை துணை வட்டாட்சியராக கீழக்கரை தாலுகாவில் வட்ட வழங்கல் அதிகாரியாக சிறப்பாக பணியாற்றி வந்த தமீம் ராசா இன்று 06.03.17 முறைப்படி அலுவலகத்திற்கு வந்து பொறுப்பேற்று கொண்டார். இந்நிலையில் தமீம் ராசாவுக்கு, […]
*விடுதலை சிறுத்தைகள் கட்சி இஸ்லாமிய ஜனநாயக பேரவையின் அறிமுக கூட்டம்.*
இராமநாதபுரம் மாவட்டம் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் உள் பிரிவான இஸ்லாமிய ஜனநாயக பேரவையின் மாவட்ட துணை அமைப்பாளராக செய்யது யாசீன் சில நாட்களுக்கு முன் மாநில தலைவரால் நியமிக்கப்பட்டார். கட்சியின் சார்பாக அறிமுக கூட்டம் இன்று மாவட்ட அமைப்பாளர் ரியாஸ் கான் தலைமையில் கீழக்கரையில் நடைபெற்றது. அறிமுக கூட்டத்தில் கீழக்கரை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நகர் செயலாளர் முகைதீன் இப்ராகீம் வரவேற்பு ஆற்றினார். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் இராமநாதபுரம், சிவகங்கை மாவட்ட மண்டல செயலாளர் முகம்மது யாசீன்,மாவட்ட செயலாளர் […]
கீழக்கரை நகராட்சியின் தீவிர நோய் தடுப்பு முயற்சிகள் – நிலவேம்பு கசாயம் வழங்குதல், கொசு மருந்து தெளிப்பு பணிகள் தீவிரம்
கீழக்கரை நகராட்சி பகுதிகளில் மலேரியா, டெங்கு காய்ச்சல் என தலா குடும்பத்திற்கு ஒருவர் பாதிக்கப்பட்டு, இராமநாதபுரம் மற்றும் மதுரையில் உள்ள பல்வேறு தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் கீழக்கரை நகராட்சி ஆணையாளர் சந்திரசேகரரின் அறிவுறுத்தலின்பேரில் துப்புரவு மேற்பார்வையாளர்கள் ஹாஜா, சக்தி, மனோகரன் தலைமையில் 8 வது வார்டு பழைய குத்பா பள்ளிவாசல் பகுதி, கிழக்குத் தெரு பாத்திமா காலனி பகுதி, பெத்தரி தெரு, கஸ்டம்ஸ் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் வீடு வீடாக சென்று, சுகாதாரம் […]
மாவட்ட ஆட்சியர் தலைமையில் அனைத்து முஸ்லீம் ஜமாஅத் நிர்வாகிகள் பங்கேற்ற ரூபெல்லா தடுப்பூசி குறித்த ஆலோசனை கூட்டம்
இராமநாதபுரம் மாவட்டம் மற்றும் பரமக்குடி சுகாதார பகுதி மாவட்டத்தில் உள்ள அனைத்து முஸ்லீம் ஜமாஅத் பிரதிநிதிகளும் பங்கேற்ற தட்டம்மை ரூபெல்லா தடுப்பூசி சம்பந்தமான விழிப்புணர்வு கூட்டம் நேற்று 02.03.17 மாலை 4 மணியளவில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் சுகாதார துணை இயக்குனர் மீனாட்சி மற்றும் மருத்துவர்கள் கலந்து கொண்டு குழந்தைகளுக்கு ரூபெல்லா தடுப்பூசி போடுவது குறித்த அடுத்த கட்ட நகர்வு பற்றி ஆலோசித்து முஸ்லீம் ஜமாத்தினரின் கருத்துக்களை கேட்டறிந்தனர்.
கீழக்கரையில் மாற்றுத் திறனாளிகள் நலத் துறை சார்பாக நடைபெற்ற குழந்தைகளுக்கான பிசியோ தெரபி பயிற்சி வகுப்பு
கீழக்கரை நடுத்தெரு பெத்தம்மா கபுரடி பகுதியில் இயங்கி வரும் மாற்றுத் திறனாளிகளுக்கான குழந்தைகள் பள்ளியில் இன்று 02.03.17 மாற்றுத் திறனாளிகள் நலத் துறை சார்பாக குழந்தைகளுக்கான பிசியோ தெரபி பயிற்சி வகுப்பு நடைபெற்றது. இந்த பயிற்சியினை மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகம் சார்பாக பல்நோக்கு மறுவாழ்வு உதவியாளர் இளஞ்செல்வி தலைமையில் மாற்றுத் திறன் படைத்த குழந்தைகளுக்கு பிசியோ தெரபி செயல்வழி முறைகளை, முறைப்படி செய்து காட்டினார். வகுப்புக்கான ஏற்பாடுகளை மக்கள் நல பாதுகாப்பு கழகத்தின் செயலாளர் முகைதீன் இப்ராகீம் […]
கீழக்கரை அல் பய்யினா மெட்ரிக் பள்ளியில் நடைபெற்ற பரிசளிப்பு விழா நிகழ்ச்சி
கீழக்கரை கிழக்குத் தெருவில் இயங்கி வரும் அல் பய்யினா மெட்ரிகுலேஷன் பள்ளியின் மாணவ செல்வங்களுக்கான பரிசளிப்பு நிகழ்ச்சி இன்று 01.03.17 மாலை 4.30 மணியளவில், பள்ளி வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது. இந்த பரிசளிப்பு விழா நிகழ்ச்சியினை பள்ளியின் தாளாளர் ஜாபிர் சுலைமான் தலைமையேற்று நடத்தினார். பள்ளியின் சட்ட ஆலோசகர் முஹம்மது சாலிஹ் ஹுசைன் வரவேற்புரை நிகழ்த்தினார். சிறப்பு விருந்தினராக டாக்டர் ஹலீனா ரஜியா தவ் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். இந்த விழாவிற்கு ஹைராத்துல் ஜலாலியா மேல் […]
மாயாகுளத்தில் நடைபெற்ற மகளிர்க்கான இலவச தையல் பயிற்சி முகாம்
கீழக்கரை அருகே மாயாகுளத்தில் வெளிச்சம் தொண்டு நிறுவனம் சார்பாக மகளிர்க்கான இலவச தையல் பயிற்சி முகாம் 26.02.2017 அன்று மாலை 5 மணியளவில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கீழக்கரை காவல் ஆய்வாளர் புவனேஸ்வரி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு இலவச தையல் பயிற்சி முடித்த பெண்களுக்கு சான்றிதழ்களை வாங்கினார். இந்த நிழச்சிக்கு வெளிச்சம் தொண்டு நிறுவனத்தின் நிறுவனர் அற்புதகுமார் தலைமை ஏற்றிருந்தார். திட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜேஷ் குமார் வரவேற்புரை பேசினார். அம்பேத்கார் நகர் தலைவர் தர்மலிங்கம், நாடார் பேட்டை […]
கண்ணொளிக்கு அழகூட்ட புதிய கண் கண்ணாடி கடை இராமநாதபுரத்தில் திறப்பு…
கண்ணுக்கு மை அழகு என்பது பழைய கவிதை, ஆனால் கண்ணுக்கு அழகூட்ட கண்ணாடியும், லென்சும் அழகு என்பது புதிய உலகு வார்த்தை. அதை மெய்ப்படுத்தும் விதமாக குழந்தை முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரையும் திருப்தி பட வைக்க தொடங்கப்பட்டது தான் சமீபத்தில் இராமநாதபுரம் அரசு மருத்துவமனை சாலையில் கனகமணி மருத்துவமனைக்கு எதிரில் திறக்கப்பட்டு இருக்கும் ‘மைமூன் ஆப்டிகல்ஸ்’. இங்கு அனைத்து தரப்பட்ட மக்களும் பயனடையும் வகையில் அனைத்து வகையான, அனைத்து முன்னனி நிறுவனங்களின் கண் கண்ணாடி […]
கீழக்கரை வடக்குத் தெரு முகைதீனியா பள்ளியின் “வெள்ளி விழா மற்றும் 10வது மழலையர் பட்டமளிப்பு விழா” சிறப்பாக நடைபெற்றது….
கீழக்கரை வடக்குத் தெரு முகைதீனியா பள்ளியின் வெள்ளி விழா மற்றும் 10வது மழலையர் பட்டமளிப்பு விழா நேற்று (25-02-2017) பள்ளி வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவின் சிறப்பு விருந்தினர்களாக மாவட்ட வருவாய் அதிகாரி அலி அக்பர் மற்றும் முகம்மது சதக் பாலிடெக்னிக் முதல்வர் அலாவுதீன் ஆகியோர் கலந்து கொண்டார்கள். இந்நிகழ்ச்சியில் மழலையிரின் பட்டமளிப்பு விழா “PRETTY POPPIES – The World of Blooming Buds” என்ற அடையாளத்துடன் சிறப்பாக நடத்தப்பட்டது. இந்நிகழ்வில் ஆர்வத்துடன் அனைத்து மழலைச் […]
கீழக்கரை அல் மதரஸத்துல் ராழியா சிறுவர் மதரஸாவில் நடைபெற்ற மாணவர்களுக்கான சொற்பயிற்சி மன்றம்
கீழக்கரை வள்ளல் சீதக்காதி சாலையில் இயங்கி வரும் இஸ்லாமிய கல்வி சங்கத்தின் நிர்வாகத்தின் கீழ் செயல்படும் அல் மதரஸத்துல் ராழியா சிறுவர் மதரஸாவில் நேற்று 25.02.17 இரவு 8.30 மணியளவில் மதரஸா மாணவர்களுக்கான 19 வது சொற்பயிற்சி மன்றம் சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியினை ஆலீம் ஹுசைன் மஸ்லிஹி தலைமை ஏற்று நடத்தினார். ஆலீம் தவ்ஹீத் ஜமாலி, ஆலீம் அப்துல் நாசர் ஜமாலி, ஆலீம் சேகு கஸ்ஸாலி சதக்கி ஆகியோர் கலந்து கொண்டனர். சிறப்பாக உரையாற்றிய 5 […]
இஸ்லாமிய கல்வி சங்கம் சார்பாக நடைபெற்ற ஒழுக்கநெறிகள் குறித்த தெருமுனை பிரச்சாரம்
கீழக்கரை வள்ளல் சீதக்காதி சாலையில் சிறப்பாக இயங்கி வரும் இஸ்லாமிய கல்வி சங்கத்தின் சார்பாக, பொதுமக்களுக்கான அழகிய வாழ்வியல் வழிமுறைகளுக்கான தெருமுனை பிரச்சாரம் மாதமிருமுறை தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. இன்று 24.02.17 இரவு 8.30 மணியளவில் ‘நல் வார்த்தை பேசுங்கள்’ என்கிற அழகிய தலைப்பின் கீழ் சேரான் தெருவில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. இதில் அந்த தெருவை சார்ந்த ஏராளமான மாணவ மாணவியரும், அவர்களின் பெற்றோர்களும் கலந்து கொண்டனர். இந்த சிறப்பான பிரச்சாரத்தை இஸ்லாமிய கல்வி சங்கத்தின் தலைவர். சட்டப் […]
கீழக்கரையில் ‘ரூபெல்லா தடுப்பூசி’ விழிப்புணர்வு – அரசு ஊழியர்கள் தங்கள் குழந்தைகளுக்கு தடுப்பூசி போட்டனர்
கீழக்கரையில் கடந்த சில வாரங்களாக தட்டம்மை ரூபெல்லா தடுப்பூசி குறித்த பீதிகள் சமூக வலைத்தளங்களில் பெருமளவு பகிரப்பட்டு வந்தது. இந்த தடுப்பூசி மருந்து அளிக்கப்படும் குழந்தை கள், வாந்தி, மயக்கத்தால் பாதிக்கப்படுவதாகவும், மரணம் அடைவதாகவும் சமூக வலைதளங்களில் தகவல்கள் பரப்பப்படுகின்றன. பெற்றோர் அச்சமடைந்துள்ளதால் வதந்திகளால் அவர்கள் ஒப்புதல் பெற்ற பின்பே, தற்போது குழந்தைகளுக்கு தடுப்பூசி போடப்படுகிறது. இது சம்பந்தமான பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் பள்ளிகூடங்களில் நடத்தப்பட்டு மருத்துவர்களால் விளக்கமளிக்கப்பட்டது. இருப்பினும் பெற்றோர்களுக்கு ஏற்பட்ட பயத்தால் மிக குறைந்த […]
கீழக்கரை நகர் நல இயக்கம் சார்பாக ‘பன்றிக்காய்ச்சல்’ குறித்த விழிப்புணர்வு பேனர் வெளியீடு
தமிழகத்தில் தற்போது பன்றிக்காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், திருச்சி, கோவை, திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பன்றிக்காய்ச்சலால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு அரசு, தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் கீழக்கரை நகர் நல இயக்கம் சார்பாக பொதுமக்களுக்கும், பள்ளி மாணவ மாணவிகளுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பன்றி காய்ச்சல் குறித்த விழிப்புணர்வு பேனர் தயார் செய்யப்பட்டு அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பப்பட்டு வருகிறது. இதனை பள்ளியின் மாணாக்கர்கள் படித்து விழிப்புணர்வு பெரும் […]
கீழக்கரையில் சிறுவர்களுக்கான இருதய சிகிச்சை முகாம் – நாடார் பேட்டை பள்ளியில் நடைபெறுகிறது
கீழக்கரை ரோட்டரி சங்கம் மற்றும் சென்னை அப்போலோ மருத்துவமனை சார்பில் இலவச இருதய பரிசோதனை முகாம் இன்று 19.02.2017 காலை 9 மணி முதல் நாடார் பேட்டை மெட்ரிகுலேசன் பள்ளி வளாகத்தில் பெற்று வருகிறது. இந்த முகாமில் பிறந்த குழந்தை முதல் 16 வயது வரை கலந்து கொண்டு ஆலோசனை பெற்று வருகின்றனர். இருதய அறுவை சிகிச்சை தேவைப்படும் குழந்தைகளுக்கு சென்னை அப்போலோ குழந்தைகள் மருத்துவமனையில் இலவசமாக இருதய அறுவை சிகிச்சை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முகாமில் […]
கீழக்கரையில் மூன்று சிறந்த பெண்மணிகளுக்கு சாதனையாளர் விருது
கீழக்கரையில் நேற்று 17.02.2017 அன்று நடைபெற்ற மாற்றுத் திறனானிகளுக்கான விழிப்புணர்வு விழாவில் மூன்று பெண்மணிகளுக்கு சாதனையாளர் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. இந்த விருதுகளை மக்கள் நல பாதுகாப்பு கழகம், கீழக்கரை மக்கள் களம் இணைந்து வழங்கியது. இந்த விருதுகளை இராமநாதபுரம் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அதிகாரி தங்கவேலு வழங்கி கவுரவித்தார். விருது பெற்ற சாதனையாளர்களின் விபரம் : சாதனை பெண்மணி : 1 கீழக்கரை காவல் நிலையத்தில் சிறப்பாக செயலாற்றி கொண்டிருக்கும் கீழக்கரை இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரிக்கு 68 வது […]
ஏர்வாடியில் தாசீம் பீவி மகளிர் கல்லூரியின் நாட்டு நல பணி திட்ட சிறப்பு முகாம் துவக்க விழா
கீழக்கரை தாசீம் பீவி மகளிர் கல்லூரியின் நாட்டு நல பணி திட்டம் சார்பாக ஏர்வாடி எலைட் மெட்ரிகுலேசன் பள்ளியில் நேற்று 17.02.2017 பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளுக்கான துவக்க விழா நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியினை தாசீம் பீவி மகளிர் கல்லூரியின் முதல்வர்.சுமையா துவங்கி வைத்து சிறப்புரையாற்றினார். ஏர்வாடி எலைட் மெட்ரிகுலேசன் பள்ளியின் தாளாளர் முகம்மது அலி ஜின்னா சார்பாக பள்ளியின் முதல்வர் சத்தியமூர்த்தி, துணை முதல்வர் வசந்தி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். இந்நிகழ்ச்சியில் ஏர்வாடி ஜமாஅத் […]
மாற்றுத் திறனாளிகளுக்கு ‘இலவச சட்ட உதவி’ – மக்கள் நல பாதுகாப்பு கழகத்தின் சட்ட ஆலோசகர் அறிவிப்பு
கீழக்கரையில் நேற்று 17.02.17 இராமநாதபும் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலத்துடன் மக்கள் நல பாதுகாப்பு கழகம், கீழக்கரை மக்கள் களம் இணைந்து நடத்திய மாற்றுத் திறனாளிகளுக்கான விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று சிறப்புரையாற்றிய மக்கள் நல பாதுகாப்பு கழகத்தின் சட்ட ஆலோசகர், மாவட்ட மக்கள் கண்காணிப்பகத்தின் தலையீட்டு பிரிவு ஆலோசகர், இராமநாதபுரம் மாவட்டத்தின் மூத்த வழக்கறிஞர் சேக் இப்ராகீம் பேசுகையில், இராமநாதபுரம் மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் அரசின் நலத் திட்டங்களை அறியாமல் இருந்து வருகின்றனர். […]
கீழக்கரையில் நடைபெற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான விழிப்புணர்வு முகாம் – அரசுத்துறை அதிகாரிகள் பங்கேற்பு
இராமநாதபும் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலத்துடன் மக்கள் நல பாதுகாப்பு கழகம், கீழக்கரை மக்கள் களம் இணைந்து நடத்திய மாற்றுத் திறனாளிகளுக்கான விழிப்புணர்வு முகாம் நேற்று 17.02.17 வெள்ளிக்கிழமை மாலை 4 மணியளவில் கிழக்குத்தெரு தீனியா மெட்ரிகுலேசன் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மக்கள் நல பாதுகாப்பு கழகத்தின் தலைவர் தமீமுதீன் தலைமையுரை ஆற்றினார். கழகத்தின் பொருளாளர் முஹம்மது சாலிஹ் ஹுசைன் வரவேற்புரை நிகழ்த்தினார். ஆசிரியை ஆபிதா பேகம் மாற்றுத் திறனாளிகளுக்கு ஊக்கமளிக்கும் வகையில் […]
கீழக்கரை தாலுகா சார்பாக அம்மா திட்ட முகாம்..
கீழக்கரை தாலுகா திருஉத்திரகோசமங்கை பிர்க்கா பனைக்குளம் குருப் நல்லாங்குடி கிராமத்தில் உள்ள சமுதாயக் கூடத்தில் கீழக்கரை சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் ஆ.கணேசன் தலைமையிலும், வட்ட வழங்கல் அலுவலர் திரு.கே எம் தமிம்ராஜா மண்டல துணை தாசில்தார் பெனித்குமார் முன்னிலையிலும் அம்மா திட்டம் முகாம் நடைபெற்றது. இம்முகாமில் 6 (ஆறு) பயனாளிகளுக்கு முதியோர் உதவித் தொகைகளும், குடும்ப அட்டையில் பெயர்சேர்த்தல் பெயர் நீக்கம் , பெயர் திருத்தம், முகவரி மாற்றம் உள்ளிட்ட கோரிக்கைகளுடன் வரப் பெற்ற அனைத்து மனுக்களும் பரிசீலிக்கப்பட்டு உரிய […]
You must be logged in to post a comment.