கீழக்கரையில் பெய்த மழை மனதுக்கு இதமாக இருந்தாலும், அதனால் ஏற்படும் சுகாதாரக் கேடு பயத்தை உண்டாக்குகிறது…

கீழக்கரையில் நேற்று பலமான மழை பெய்து, ஏங்கி கொண்டிருந்த மக்களுக்கு ஒரு மன நிம்மதியை கொடுத்தது, ஆனால் வீதியெங்கும் தேங்கி கிடக்கும் மழை நீரும், வாறுகால்கள் அடைத்து வழிந்தோடும் சாக்கடை நீரும் தொற்றுநோய் பரவக் கூடிய பயத்தை உருவாக்குகிறது. கீழக்கரையில் பெய்த மழை மனதுக்கு இதமாக இருந்தாலும், அதனால் ஏற்படும் சுகாதாரக் கேடு பயத்தை உண்டாக்குகிறது… தேங்கி கிடக்கும் நீரால்தான் டெங்கு போன்ற காய்ச்சல்கள் பரவுகின்றன என்ற பிரச்சாரம் செய்து வரும் வேலையில் நகராட்சி நிர்வாகம், மழை […]

கீழக்கரை ஹமீதியா ஆண்கள் மேல்நிலை பள்ளி மற்றும் செய்யது ஹமீதா கலை கல்லூரியில் டெங்கு விழிப்புணர்வு கண்காட்சி மற்றும் முகாம்…

கீழக்கரை ஹமீதியா ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் இன்று (10-08-2017) கீழக்கரை நகராட்சி சார்பாக டெங்கு காய்ச்சல் கருத்தரங்கம் நடைபெற்றது. இந்நிகழ்வில் மாவட்ட அளவிளானா அதிகாரிகள் மற்றும் கீழக்கரை ஆணையர் வசந்தி கலந்து கொண்டு சிறப்புரை வழங்கினர். அதேபோல் இன்று (10-08-2017) கீழக்கரை செய்யது ஹமீதா கலை கல்லூரியில் மாணவர்கள் மத்தியில் டெங்கு காய்ச்சல் ஏற்படுத்தும் விதமாக டெங்கு தடுப்பு கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இம்முகாமிற்கு சிறப்பு விருந்தினராக ராமநாதபுரம் ரோட்டரி சங்க கவர்னர் சந்திரபோஸ் கலந்து கொண்டார். இந்நிகழ்வில் […]

மனித உயிர் பலியாகும் முன்பு விழித்துக் கொள்ளுமா கீழக்கரை நகராட்சி??..

கீழக்கரை பழைய போலீஸ் ஸ்டேசனில் இருந்து உள்ளே செல்லும் பிரதான சாலை சி.எஸ்.ஐ பள்ளி சாலையாகும். கீழக்கரையில் பல அதிகாரிகள் மாறி விட்டனர், ஆனால் அந்த சாலையின் அவல நிலை மட்டும் மாறவேயில்லை. ஒரு புறம் காலி மனையில் கொட்டப்பட்ட குப்பைகள், மறுபுறம் பல வருடங்கள் மூடாமலே கிடக்கும் வாறுகால். இன்று(07-08-2017) மாலை திறந்து கிடக்கும் கால்வாயில் நாய் ஒன்று விழுந்து சாக்கடையில் மூழ்கியது. சில மாதங்களுக்கு முன்பு மாடு ஒன்று சாக்கடையில் விழுந்து காயம் ஏற்பட்டது. […]

கீழக்கரைக்கு வரும் காவிரி குடிநீர் குழாய் உடைப்பை சரி செய்ய சமூக சேவகர் கோரிக்கை…

கீழக்கரைக்கு குடி தண்ணீர் காவிரி குடி நீர் திட்டம் மூலம் குழாய் மூலமாக வருகிறது. ஆனால் இராமநாதபுரம் மற்றும் கீழக்கரைக்கு இடைபட்ட வழியில் பல கிராமத்து மக்களால் குழாய்கள் உடைக்கப்பட்டு தண்ணீர் எடுக்கப்படுகிறது. மேலும் சில இடங்களில் கேட் வால்வுகள் உடைக்கப்பட்டும் தண்ணீர் எடுக்கப்படுகிறது. இதனால் கீழக்கரைக்கு வரும் தண்ணீர் தடைபடுவதுடன், பல கழிவுகள் கலந்து அசுத்த நீராக கீழக்கரை நகருக்கு வந்தடைகிறது. இது சம்பந்தமாக நடவடிக்கை எடுக்க கோரி சமூக ஆர்வலர் சித்தீக் அம்மா அழைப்பு […]

பள்ளி மாணவர்கள் செல்லும் வழியில் ஆபத்தான நிலையில் வாறுகால் மூடி..

கீழக்கரை தெற்குத் தெருவில் இருந்து பள்ளிக்கூடங்கள் மற்றும் பள்ளிவாசலுக்கு செல்லும் சாலை வழியாக தினமும் நூற்று கணக்கான மாணவர்கள் பள்ளி கூடங்களுக்கு சென்று வருகிறார்கள். இந்த பாதையில் சாக்கடைக்காக போடப்பட்டுள்ள வாறுகால் மூடிகள் உடைந்து ஆபத்தான நிலையில் காட்சியளிக்கிறது. அவ்வழியில் நடந்து செல்லும் மாணவர்கள் கவனக் குறைவாக உடைந்த பகுதியில் காலை வைத்தால் உயிருக்கே ஆபத்து ஏற்பட வாய்ப்பிருக்கிறது. மேலும் இதே வழியில் ஆட்டோ மற்றும் பிற வாகனங்கள் செல்வதால், வாறுகால் மூடியின் உடைப்பும் பெரிதாகி கொண்டே […]

கீழக்கரையில் 08-08-2017 (செவ்வாய்கிழமை) அன்று மின் தடை…

கீழக்கரை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில்  (08-08-2017 – செவ்வாய் கிழமை) காலை 09.00 மணியில் இருந்து மாலை 05.00 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக மின்சாரம் தடை இருக்கும். இது பற்றி செயற்பொறியாளர் கூறுகையில் நாளை கீழக்கரை, ஏர்வாடி, மாயாகுளம், உத்திரகோசமங்கை, மோர்குளம் ஆகிய பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு காரணமாக தடை இருக்கும், ஆகையால் பொதுமக்கள் முன் நடவடிக்கை எடுத்துக் கொள்ளட்டும் என்று கூறினார்.

கீழக்கரை நகரின் சுகாதாரத்தை பேண நகராட்சி அதிரடி நடவடிக்கை..

கீழக்கரை நகரில் நகராட்சி நிர்வாகம் எவ்வளவுதான் முயற்சிகள் எடுத்தாலும், பொதுமக்களின் முழுமையான ஒத்துழைப்பு இல்லாமையாலும், அத்யாவசிய பொருட்களை ஏற்றி வரும் வாகனங்களும் முறையாக விதிமுறைகளை கடைபிடிக்காத காரணங்களால் நகராட்சி நிர்வாகம் சுகாதார பணிகளை மேற்கொள்வதில் தடங்கல்கள் ஏற்பட்ட வண்ணம்தான் உள்ளது. இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் விதமாக சுகாதார பணிகளுக்கு ஓத்துழைக்காத வீட்டினர் மற்றும் தொழில் நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை அபராதத்துடன் எடுக்கப்படும் என்று நகராட்சி நிர்வாகம் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது. இனிமேலாவது நகராட்சிக்கு முழுமையான ஓத்துழைப்பு […]

கீழக்கரை ஹைரத்துல் ஜலாலியா பள்ளியில் டெங்கு விழிப்புணர்வு முகாம்..

கீழக்கரை ஹைரத்துல் ஜலாலியா பள்ளியில் இன்று (02-08-2017) அன்று டெங்கு காய்ச்சல் பற்றிய விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இம்முகாமில் டெங்கு கொசு உருவதற்கான காரணங்கள் மற்றும் அதை தடுப்பதற்கான வழிமுறைகள் பட விளக்கத்துடன் பள்ளி மாணவர்களுக்கு விளக்கப்பட்டது. மேலும் டெங்கு காய்ச்சலை தடுப்பதற்கான வழிமுறைகளும் விளக்கப்பட்டது. இம்முகாமில் 700கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். மேலும் பள்ளி நிர்வாகிகள் மற்றும் ஆசிரிய பெருமக்களும் கலந்நு கொண்டு சிறப்பித்தனர். இந்த விழிப்புணர்வு முகாமை கீழக்கரை நகராட்சி […]

நிரந்தர விடுதலை கிடைக்குமா இந்த சாக்கடையிலிருந்து?..

கீழக்கரை வடக்குத் தெருவில் இருந்து தெற்கு தெரு செல்லும் வழியில் உள்ள இடைபட்ட சாலை கடை தெருவை இணைக்கும் சாலையாகும். இந்த வழியில் பள்ளிக்கு நடந்து செல்லும் மாணவர்கள் மற்றும் வாகனம் தொடர்ந்து சென்ற வண்ணம் இருக்கும். அதே போல் சாக்கடை நீரும் வற்றாத ஜீவநதியாக ஓடிக்கொண்டிருக்கும். சுகாதாரத்தில் அக்கறை கொண்ட சில சகோதரர்கள் தங்களின் முயற்சியால் நகராட்சி ஊழியர்களை வைத்து ஒழுங்குபடுத்துவார்கள், ஆனால் சில நாட்களிலேயே மீண்டும் கழுவு நீர் பெருக்கெடுத்து ஒட ஆரம்பித்து விடும். […]

இருட்டில் மூழ்கி கிடக்கும் தெற்கு தெரு ஜாமி ஆ நகர் வழி பகுதி..

கீழக்கரை முக்கிய வீதியும் ஆள் நடமாட்டமும் அதிகமாகி வரும் பகுதி தெற்குத் தெரு மற்றும் ஜாமி ஆ நகரில் இருந்து வரும் நடைபாதை பகுதியாகும். ஆனால் பல நாட்களாக சாலையோர மின்கம்பத்தில் விளக்கு எரியாமல் மக்கள் அவதிப்படுவது இதுவரை யார் கண்ணிலும் படாமல் இருப்பது மிகவும் ஆச்சரியத்தை தரக்கூடியதாக உள்ளது. இப்பகுதியை கடக்கும் பொழுது மக்கள் மனதில் ஒரு வித பயத்துடனே இருட்டில் நடந்து செல்கிறார்கள். இப்பகுதியில் உள்ள தவ்ஹீத் ஜமாத் தொழுகை பள்ளியின் உள்ள விளக்கு மட்டுமே […]

கீழக்கரையில் மீண்டும் தலை தூக்கும் நாய் தொல்லை…

கீழக்கரை நகராட்சி பகுதியில் நாய்கள் அதிகரித்து பொதுமக்களுக்கு பெருமளவில் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றது. கீழக்கரை நகராட்சி பகுதிகளில் சுற்றித்திரியும் நாய்களை பிடிக்க நடவடிக்கை மேற்கொள்ள இன்று (19-07-2017) காலை 10.00 மணியளவில் மக்கள் நல பாதுகாப்புக் கழகத்தின் செயலாளர் முகைதீன் இப்ராகீம், பொருளாளர் முகம்மது சாலிஹ் ஹூசைன், கீழக்கரை மக்கள் பொது தளத்தின் ஆம்புலன்ஸ் கமிட்டி தலைவரும், கீழக்கரை கிழக்கு தெரு ஜமாஅத் துணைப்பொருளாளரும், சமூக ஆர்வலருமான முகம்மது அஜிகர், மக்கள் டீம் தளத்தின் ஒருங்கினைப்பாளர் அப்துல் […]

பொதுமக்களைப் பற்றி கவலை கொள்ளாத கட்டிட நிறுவனங்கள் ..

கீழக்கரையில் பல பகுதிகளில் கட்டுமானப்பணிகள் நடந்த வண்ணம் உள்ளது.  ஆனால் கட்டுமானப் பணியில் ஈடுபடும் ஒப்பந்தக்காரர்கள் எந்த நிலையிலும் பொதுமக்களின் சிரமங்களைப் பற்றி சிறிது கூட கவலைப் படாமல் பொதுமக்கள் நடந்து செல்லும் பாதைகளிலும், வாகனங்கள் செல்லும் சாலைகளை ஆக்கிரமித்த வண்ணம்தான் கட்டுமானப் பொருட்களான கற்கள், மண்களை கொட்டிய வண்ணம் உள்ளனர். கீழே உள்ள படம் வடக்குத் தெரு தைக்காவில் இருந்து மதிக்கடை வழியாக செல்லும் சாலை, தினமும் ஆட்டோக்களும், பள்ளி வாகனங்களும் செல்லக் கூடிய சாலை, […]

நீர்த்துப் போன நீர் பந்தல்கள்..

கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு கீழக்கரையில் பல இடங்களில் நகராட்சி நிர்வாகம் உட்பட பல சமுதாய அமைப்புகள் போட்டி போட்டுக் கொண்டு நீர் பந்தல், மோர் பந்தல், சர்பத் பந்தல், ஜூஸ் பந்தல் என பல வகையான பந்தல்கள் அமைத்தன, மக்களின் தாக்கத்தையும் தீர்த்தன் சில நாட்கள் மட்டும். வெயில் உக்கிரம் குறைந்த பாடில்லை, ஆனால் உருவான பந்தல்கள் உருமாறி விட்டன. கீழக்கரையில் வெயிலுக்கு உருவான சில பந்தல்களை பார்வையிடச் சென்றோம். நகராட்சியால் அமைக்கப்பட்ட நீர் பந்தல் […]

மின்சார சேமிப்பு விளம்பரம் ஒரு பக்கம்.. வீண் விரயம் மறுபக்கம்..

நகராட்சி மூலம் மின்சாரத்தை சிக்கனப்படுத்தவும், சேமிக்கவும் வலியுறுத்தி பல வகையான விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்படுவது அனைவரும் அறிந்ததே, ஆனால் அதற்கு நேர்மாறாக பல இடங்களில் பகல் நேரங்களிலும் தெரு விளக்குகள் எரிந்து கொண்டிருப்பது மின்சார வாரிய அதிகாரிகளின் அலட்சிப் போக்கையே காட்டுகிறது. தமிழகத்தில் வறட்சி, தண்ணீர் பற்றாக்குறை, அடிக்கடி மின் உற்பத்தியில் தடங்கல் என்ற நிலை இருக்கும் சமயத்தில் இது போன்ற செயல்கள் மிகவும் கண்டிக்கத்தக்கதாகும்.

அரசு அறிவிப்பைக் காற்றில் பறக்க விடும் மருத்துவர்கள்..

கடந்த சில மாதங்களுக்கு முன்பு மருத்துவர்களுக்கு அறிவுறுத்தும் விதமாக மத்திய அரசால் அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டது, அதாவது மருத்துவர்கள் மருந்துகளின் மூலப் பெயர்களை மட்டுமே எழுத வேண்டும், தயாரிக்கும் நிறுவனம் சந்தைப்படுத்தும் பெயரை மருத்துவச் சீட்டில் எழுதக்கூடாது என்பதாகும். இதன் மூலம் மருந்து வாங்கும் நபர்கள் தங்களுடைய பொருளாதாரத்துக்கு ஏற்றவாறு மருந்துகள் வாங்க முடியும். ஆனால் எந்த ஒரு மருத்துவரும் அந்த அறிவிப்பை ஒரு பொருட்டாக எடுத்துக் கொண்டதாகவே தெரியவில்லை. ஆனால் அதையும் தாண்டி பல மருத்துவர்கள் […]

சாலையில் கொட்டப்படும் மணல் – தொடரும் அவலம்..

கீழக்கரையில் கட்டுமானப் பணிகளுக்காக மணல் கொட்டப்படும் அவலம் தொடர்ந்த வண்ணமே உள்ளது. இன்று (09-07-2017) காலை வள்ளல் சீதக்காதி சாலையில் கொட்டப்பட்டிருந்த மணலால் பாதசாரிகள் மற்றும் வாகன ஓட்டுனர்கள் பெரும் அவதிக்குள்ளானார்கள். அது சம்பந்தமாக நம் கீழை நியூஸ் இணையதளத்திலும் பல முறை சுட்டிக்காட்டி செய்திகள் வெளியிட்டு இருந்தது கவனிக்கதக்கது. இப்பிரச்சினையில் கடுமையான நடவடிக்கை எடுக்காத வரை இப்பிரச்சினை தீர்வுக்கு வராது. https://keelainews.in/2017/03/28/klkroad-280317-03/

கீழக்கரை நகராட்சி சார்பாக தூய்மை இந்தியா இயக்கம் 2017 விழிப்புணர்வு கூட்டம்…

கீழக்கரையில் இன்று (29-06-2017) நகராட்சி சார்பாக தூய்மை இந்திய இயக்கம் 2017 விழிப்புணர்வு கூட்டம் மக்தூமியா பள்ளியில் தலைமை ஆசிரியை கிருஷ்ணவேனி முன்னிலையில் நடைபெற்றது.  இந்த விழிப்புணர்வு முகாம் கீழக்கரை ஆணையர் வசந்தி ஆணபை;படி சுகாதார ஆய்வாளர் திண்ணாயிரமூர்த்தி  தலைமையில் நடைபெற்றது. இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் ஆசிரியர் மற்றும் ஆசிரியைகள் மத்தியில் ஈரமான குப்பபைகள் மற்றும் உலர்ந்த குப்பைகளை பச்சை மற்றம் நீல நிற கூடைகளில் பிரித்துப்போடுவது பற்றி விளக்கம் அளிக்கப்பட்டது.  இந்நிகழ்ச்சியில் அப்பள்ளியின் மூத்த நிர்வாகியும் […]

பெருநாளைக்கு தயாராகும் கறிக்கடைகள்.. வரத்து குறைவால் விலை உயரும் அபாயம்….

ஈகைப் பெருநாளுக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், பெருநாளைக்கு முக்கிய பங்கு வகிக்கும் கிடாக்கறி வியாபரிகளும் பெருநாள் வியாபாரத்திற்கு தயார்படுத்த தொடங்கிவிட்டார்கள். இந்த வருடம் தண்ணீர் பஞ்சம் அதிகமாக உள்ளதால் கடைகளில் கிடாக்களின் வரவு குறைவாகவே உள்ளது. இது சம்பந்தமாக இத்தொழிலில் பல வருடங்களாக இருக்கும் ஜலீல் என்பவரிடம் கேட்ட பொழுது, இந்த வருடம் தண்ணீர் பஞ்சம் அதிகமாக இருப்பதால், சந்தையில் குறைந்த அளவே விற்பனைக்கு வந்துள்ளது, மேலும் கிடாவின் விலையும் சராசரி விலையை விட […]

கீழக்கரையில் உறுதிமொழி மற்றும் கவிதையுடன் தொடங்கிய திடக்கழிவு மேலான்மை விழிப்புணர்வு பணி…

கீழக்கரை நகராட்சி சார்பாக இன்று (21-06-2017) திடக்கழிவு மேலான்மை விழிப்புணர்வு (Solid Waste Managment Awareness) பணிகள் உறுதிமொழி மற்றும் கவிதையுடன் தொடங்கியது. இப்பணிகள் இன்று கீழக்கரை அன்பு நகர் பகுதியில் சுமார் 172 வீடுகளில் மேற்கொள்ளப்பட்டது. ஒவ்வொரு வீட்டில் உள்ளவர்களுக்கும் குப்பைகளை கையாள்வது மற்றும் எவ்வகையான குப்பைகளை பிரித்து நகராட்சி வழங்கியுள்ள ப்ளாஸ்டிக் வாளிகளில் போடுவது என்ற செய்முறை விளக்கங்கள் நகராட்சி ஊழியர்களால் செய்து காண்பிக்கப்பட்டது. பின்னர் அப்பகுதியில் உள்ள ஒவ்வொரு குடும்பத் தலைவி/தலைவர்களிடம் சுகாதாரம் […]

கீழக்கரை வடக்குத்தெரு தைக்கா அருகில் உள்ள கால்வாய் முடிகளை ஒழுங்குபடுத்த நகராட்சி ஆணையர் ஆய்வு..

கீழக்கரையில் உள்ள வடக்குத்தெரு தைக்கா அருகில் உள்ள கால்வாய் மூடிகள் உடைந்த நிலையில் பல மாத காலங்களாக அபாயகரமான நிலையில் இருந்து வருகிறது. இது சம்பந்தமாக எழுந்த புகாரை அடுத்து நகராட்சி ஆணையர் வசந்தி இன்று நேரடி ஆய்வு செய்து விரைவில் சரி செய்வதாக உறுதியளித்துள்ளார். மேலும் நகரில் உள்ள பல்வேறு குறைகளை ஆணையர் வசந்தி நேரடியாக சென்று ஆய்வு செய்து நடவடிக்கை எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது. மேலும் தொடர்ந்து பல்வேறு மக்கள் குறைகளை கீழை நியூஸ் […]

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!