கீழக்கரை மட்டுமல்லாமல் தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சலால் சாமானியன் முதல் பொறியாளர் வரை டெங்குவால் பலி என்ற செய்தி வந்த வண்ணம் உள்ளன. தமிழக அரசு முறையான நடவடிக்கை எடுக்க தவறிவிட்டது என்ற குற்றச்சாட்டு பலதரப்பில் எழுப்பபட்டாலும் தன்னார்வ நிறுவனங்களும் மக்கள் மத்தியில் விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மற்றும் தடுப்பு மருந்தான நிலவேம்பு கசாயமும் வினியோகித்த வண்ணம்தான் உள்ளனர். இதை தொடர்ந்து கீழக்கரையிலும் மக்கள் நல பாதுகாப்பு கழகம் சார்பாக நாளை (15-10-2017, ஞாயிறு) முதல் செவ்வாய் (18-10-2017) […]
Category: நகராட்சி
கீழக்கரை நகராட்சி எல்லைக்குள் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் நகராட்சி தீவிரம்…
கடந்த ஒரு மாத காலமாக கீழக்கரை நகராட்சி எல்லலைக்குள் உட்பட்ட ஆக்கிரமிப்புகளுக்கு முறையான அறிவிப்பு கொடுக்கப்பட்டு அகற்றப்பட்டு வருகின்றன. அதன் தொடர்ச்சியாக இன்று (13-10-2017) நகராட்சி புதிய பஸ் நிலைய பகுதிகளில் சாலைகளை ஆக்கிரமிக்கும் வகையில் அமைந்திருந்த மேற்கூரை, ஹோட்டல்களில் சாலைகளை மறித்து போடப்பட்டிருந்த அடுப்புக்கள், மேசை போன்ற ஆக்கிரமிப்புகளை நகராட்சி ஆணையாளர் வசந்தி அவர்கள் தலைமையில் அகற்றப்பட்டு வருகிறது. இந்த துரித பணி டெங்கு நோய் குறித்து ஆய்வு பணிக்காக கீழக்கரைக்கு வருகை தந்த மாவட்ட […]
கீழக்கரை நகராட்சிக்கு வலுத்து வரும் எதிர்ப்பு..நாம் தமிழர் கட்சி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து சுவரொட்டி ..
கீழக்கரையில் கடந்த சில மாதங்களாகவே நகராட்சியின் தாமதாமான நடவடிக்கை மற்றும் ஊரில் பெருகி வரும் சுகாதாரப் பிரச்சினைகள், தீர்க்கப்படாத கழிவு நீர் பிரச்சினைகள் தொடர்ந்த வண்ணமே உள்ளது. புதிய ஆணையர் பொறுப்பேற்றவுடன் துரிதமான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மத்திய அரசின் திட்டங்களை பள்ளிகள் மூலமாகவும், கல்லூரிகள் மூலமாகவும் விளம்பரப்படுத்திலேயே தற்போதைய நிர்வாகம் முனைப்பு காட்டுவதாக தெரிகிறது. கீழக்கரை நகராட்சி நிர்வாகம் புதிய புதிய இடங்களில் துப்புரவு பணிகள் மேற்கொள்வதாக விளம்பரபடுத்தினாலும், பல வருடங்களாக சுகாதாரத்தில் […]
தொடரும் தெரு நாய்களின் அட்டூழியம், மவுனம் கலையுமா கீழக்கரை நகராட்சி…
கீழக்கரையில் தெரு நாய்களின் பெருக்கமும், பாதிப்பும், அச்சுறுத்தல்களும், அராஜகங்களும் நாளுக்கு நாள் கூடிக் கொண்டே இருக்கிறது. இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் பலரும் நகராட்சி மற்றும் மாவட்ட ஆட்சியர்க்கு புகார் மனுக்கள் பல எழுதியும் எந்த பலனுமில்லை. கீழக்கரையில் நேற்று இரவு 01.00 மணி அளவில் பிரபுக்கள் தெருவில் வசிக்கும் நெய்னா முகம்மது என்பவரது வீட்டில் வளர்க்கப்பட்ட ஒரு வெள்ளாடு அதன் குட்டி ஒன்றையும் பத்து பதினைந்து தெருநாய்கள் ஒன்று சேர்ந்து கடித்து குதறியுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் பயத்தில் […]
கீழக்கரை நகராட்சி சார்பாக தொடர்ச்சியாக நகரை தூய்மைபடுத்தும் நிகழ்ச்சி…
கீழக்கரை நகராட்சியும், ஹமீதியா பள்ளி NSS மாணவர்களும் இணைந்து டெங்கு கொசு விழிப்புணர்வு உண்டாக்கும் வகையில் தொடர்ச்சியான துப்புரவு பணிகளில் கடந்த 29ம் தேதி முதல் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிகழ்வின் தொடர்ச்சியாக இன்று (02-10-2017) 3வது வார்டில் உள்ள மீனவர் குப்பம் சுத்தப்படுத்தும் நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் முன்னாள் துணை சேர்மன் மற்றும் நகராட்சி உயர் அதிகாரி டாக்டர்.மாஃபியா ஆகியோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் கழிவு நீர் நடைபாதையில் நுழைந்து அசுத்தம் ஏற்படாத வகையில் நிலத்தடி கழிவு […]
மீண்டும் தலைதூக்கும் நாய் தொல்லை.. SDPI கட்சி நகராட்சிக்கு மனு..
கீழக்கரை சுற்று வட்டார பகுதிகளில் மக்களை அச்சுறுத்தும் நாய்கள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. அதுவும் முக்கியமாக பேருந்து நிலையம் மற்றும் பல பகுதிகளில் சுற்றி திரியும் சோறி நாய் மற்றும் நாய்களின் அதிகரிப்பால் பஸ் நிலையம் செல்லும் பொது மக்கள் மற்றும் பள்ளி கல்லுரி மாணவ மாணவிகள் மிகுந்த அச்சத்துக்கு உள்ளாகி வருகின்றனர். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் நகராட்சி ஆணையரிடம் sdpi கட்சி மற்றும் பல சமூக அமைப்புக்கள் மனு கொடுத்தும் எந்த வித முன்னேற்றமும் ஏற்படவில்லை. இப்பிரச்சினையை […]
தலையை உரசும் மின்சார கம்பிகள்.. பயத்தில் வடக்குத் தெரு மக்கள்…
கீழக்கரையில் மின்வெட்டு எப்பொழுது என்ற குழப்பத்திலேயே மக்களை வைத்திருக்கும் மின்சார வாரியம், உயிரை எடுக்க தயார் நிலையில் இருக்கும் மின் வயர்களை பல முறை சுட்டிக்காட்டியும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது மிகவும் வேதனையான விசயம். கீழக்கரையில் வடக்குத்தெரு பகுதியில் உள்ள பல இடங்களில் மின் கம்பம் மிகவும் தாழ்வாக உள்ளது. அதே போல் வாகனங்கள் செல்லும் வழிகளிலும் வயர்கள் தாழ்வாக இருப்பதால் லாரிககள் போன்ற பெரிய வாகனங்கள் அவ்வழியாக செல்வது மிகவும் கடினமாகி விடுகிறது. வாகன்தை […]
*கீழக்கரை தாலுகா மருத்துவமனையில் பணி நேரத்தில் மாயமாகும் மருத்துவர்கள் – நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் மக்கள் நல பாதுகாப்புக் கழகம் மற்றும் பலர் மனு*
கீழக்கரை தாலுகா அரசு மருத்துவமனையில் பணி நேரத்தில் வேலை செய்யாமல் மாயமாகும் மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மக்கள் நல பாதுகாப்புக் கழகத்தினர், சமூக ஆர்வலர்கள் மற்றும் பல தனி நபர்கள் இணைந்து மக்கள் குறை தீர்க்கும் நாளான இன்று மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து மனு கொடுத்துள்ளனர். அந்த மனுவில் கீழக்கரை தாலுகா அரசு பொது மருத்துவமனையில் பெரும்பாலான வேலை நேரங்களில் மருத்துவர்கள் இல்லாததால் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் கடுமையான மன வேதனைக்கு உள்ளாகி […]
இருண்டு கிடக்கும் அடையாளங்கள்.. இருண்டதால் வழி தவறும் பிரயாணிகளும் பேருந்துகளும்…
கீழக்கரை முக்குரோடு என்பது கீழக்கரையை பிற ஊர்களில் இருந்து இணைக்கும் முக்கிய சாலையாகும். 24மணி நேரமும் அரசு மற்றும் தனியார் வாகனங்களின் போக்குவரத்து இருந்து கொண்டே இருக்கும். அதிகாலை மற்றும் இரவு நேரங்களில் வெளியூர் செல்லும் வாகனங்கள் ஊருக்கு உள்ளே வராத காரணத்தால் பொதுமக்கள் இந்த முக்கு ரோடு பகுதிக்கு வந்தே செல்ல வேண்டிய நிலை. ஆனால் இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த இந்த முக்கு ரோடு பகுதயில் வெளிச்சம் தந்து கொண்டிருந்த உயர்அழுத்த மின்விளக்கு பல வாரங்களாக […]
மின்சாரம் இல்லாத நகராட்சி கீழக்கரை – இருண்டு கொண்டிருக்கும் டிஜிட்டல் இந்தியா…
கீழக்கரையில் மாதாந்திரப் பணி நேரங்களில் மின்தடை காலம் நேரம் போன்ற விபரங்கள் இரு நாட்களுக்கு முன்பாகவே நாளிதழ் மற்றும் சமூக வலைதளங்கள் வாயிலாக அறிவிப்பு வரும். ஆனால் இன்று (23-09-2017) காலை 9.30 மணி முதல் எந்த ஒரு முன்னறிவிப்பும் இன்று மின்சார தடை ஏற்பட்டுள்ளது. இது குறித்து முன்னாள் தினமலர் நிருபர் அப்துல்லாஹ் கூறுகையில் ” காலை முதல் மதியம் ஆகியும் மின்சாரம் இல்லை. சாதாரணமாக மின்தடை நேரங்களை விட மோசமாக உள்ளது. முன்னறிவிப்பு ஏதும் இல்லாததால் […]
கீழக்கரையில் தூய்மை இந்தியா திட்டம் வெற்றியா?? அல்லது தோல்வியா??
கீழக்கரை நகராட்சியும் அவர்களுக்கு இருக்கும் வசதிகளையும், ஊழியர்களையும் வைத்து இயன்ற அளவு பணிகளை செய்துதான் வருகிறார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை??. உதாரணமாக டெங்கு விழிப்புணர்வு பிரச்சாரங்கள் பள்ளிகள் மற்றும் கல்லூரி வழியாக பல வழிகளிலும், அதேபோல் தூய்மை இந்தியா திட்டத்தையும் கீழக்கரையின் ஓவ்வொரு பகுதிகளிலும் உறுதிமொழியுடன், செயல்படுத்தி கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் பொதுமக்களின் பங்களிப்பும், விழிப்புணர்வும் குறைவு என்றே கூறலாம். பல நேரங்களில் நகராட்சி செயல்பாடு தாமதமாக இருந்தாலும், பொதுமக்கள் அவரவர் இடங்கள் என்பதை மறந்து, […]
கீழக்கரை நகராட்சி பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற தீவிரம்…
கீழக்கரை முக்கிய சாலைகளில் போக்குவரத்து செல்வதற்கு மிகவும் இடையூராக பல ஆக்கிரமிப்புகள் உள்ளன. இந்த ஆக்கிரமிப்புகளை செப்டம்பர் மாதம் 25ம் தேதிக்குள் அகற்ற கீழக்கரை ஆணையரால் அறிக்கை விடப்பட்டுள்ளது. அவ்வாறு 25ம் தேதி காலை 10 மணிக்குள் அகற்றப்படாத பட்சத்தில் நகராட்சியால் அகற்றப்பட்டு, சம்பந்தப்பட்டவர்களிடம் அதற்கான தொகை வசூலிக்கப்படும் என்று அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. கீழக்கரை நகரின் நலனை விரும்பும் மக்கள் ஆணையரின் வேண்டுகோளை ஏற்று ஆக்கிரமிப்புகளை அகற்ற முன் வர வேண்டும்.
கீழக்கரை நகராட்சியில் வீட்டு வரிக்காக மறு அளவீடு தொடக்கம்..
கீழக்கரை நகராட்சி உள்ளடங்கிய பகுதிகளில் வீட்டு வரி வசூல் நகராட்சி நிர்வாகத்தினரால் தொடங்கப்பட்டது. ஆனால் இதற்கான முறையான பிரசுரங்களோ, அறிவிப்புகளோ இல்லாத காரணத்தால் வீட்டில் உள்ள பெண்கள் அதிகாரிகளை வீட்டினுள் அனுமதிக்க தயங்கிவந்தனர். இப்பிரச்சினையை 15வது வார்டைச் சார்ந்த சாதிக் என்பவர், கீழக்கரையில் மக்கள் பிரச்சினைக்காக சட்ட ரீதியாக போராடி வரும் சட்டப்போராளிகள் குழுமத்தில் இது சம்பந்தமாக பதிவிட்டார். அவருடைய கருத்துக்கு நடவடிக்கை எடுக்கும் விதமாக சட்டப்போராளிகள் தளத்தின் முதன்மை நிர்வாகி சாலிஹ் ஹுஸைன், நகராட்சி ஆணையர் […]
சிறு மழையும் தாங்காத கீழக்கரை சாலைகள் – என்று விழிக்கும் நகராட்சி.
கீழக்கரை மக்கள் மழைக்காக தவமாக தவம் இருந்து வருகிறார்கள். ஆனால் மழைக்கு அடுத்து ஏற்படும் சாக்கடை தேக்கத்தை நினைத்தால் அனைவருக்கும் மனதில் ஒரு பீதிதான் கிளம்புகிறது. இன்று பெய்த சிறிய மழையில் கடைத் தெருவில் இருந்து வடக்குத் தெரு வழியாக உள்ளே செல்லும் வழிகள் மழை நீரும், கழிவு நீரும் சேர்ந்து நடக்க முடியாத சூழலை உருவாகியுள்ளது. மாற்றுபாதையாக இருந்து வரும் CSI சர்சில் தொடங்கும் சாலையும், மழை நீரால் மிதக்கிறது. இந்த சாலையில்தான் அதிகமான மருத்துவமனைகள் […]
கீழக்கரை புதிய பேருந்து நிலையம் அதிரடியாக தூய்மைப்படுத்தப்படுகிறது..
கீழக்கரை புதிய பஸ் நிலையம் இன்று (12-09-2017) அதிரடியாக சுத்தம் செய்யப்பட்டது. கீழக்கரை நகராட்சி சுகாதாரப் பணியாளர்கள் பஸ் நிலையம் முழுவதையும் சுத்தப் படுத்தும் பணியில் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர். ஆனால் இந்த தூய்மைப்பணி மக்கள் நலன் கருதி செய்யப்படவில்லை. இன்னும் சில நாட்களில் பஸ் நிலையத்தை புதுப்பிக்க ( Renewal ) செய்ய வேண்டி இருப்பதால் பஸ் நிலையத்தை பார்வையிட ( RTO ) போக்குவரத்து அலுவலர் வருகைதரவிருப்பதால் தான் இப் பணி நடைபெறுவதாகவும் கூறப்படுகிறது. இப்பணிகள் […]
நகராட்சியின் அலட்சியத்தால், லட்சியத்தை அடைய முடியாமல் சோர்ந்து போகும் கல்லூரி மாணவர்கள்..
கீழக்கரையில் கடந்த இரண்டு மாதங்களாக முகம்மது சதக் கல்லூரி மாணவர்கள் மற்றும் தன்னார்வலர்கள், வள்ளல் சீதக்காதி மணி மன்டபத்தின் அருகில் உள்ள பகுதியை தத்தெடுத்து பொதுமக்கள் குடும்பத்துடன் பொழுதை கழிப்பதற்கு ஏதுவாக மைமூனார் பூங்கா என்ற பெயரில் பூங்கா ஒன்றை வடிவமைத்து வந்தார்கள். ஆனால் இன்று காலை 7.30 மணி வரை தூய்மையாக காட்சியளித்த அந்த இடம் நகராட்சியின் கவனக்குறைவாலும், பொதுமக்களின் பொறுப்பின்மையாலும் அருகில் இருந்த சாக்கடை குழாய் அடைத்து அப்பூங்கா முழுவதும் சாக்கடையால் நிரம்பி விட்டது. […]
கீழக்கரை நகராட்சியில் ‘அனைவருக்கும் வீடு’ திட்ட முகாம் 13, 14 மற்றும் 15 தேதிகளில் நடைபெறுகிறது – ஏழை மக்கள் பயன் பெற வேண்டுகோள்
‘அனைவருக்கும் வீடு’ என்கிற பெயரில் மத்திய, மாநில அரசுகளின், 2.10 லட்சம் ரூபாய் மானியத்தில், பட்டா நிலத்தில் வீடு கட்ட விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என குடிசை மாற்று வாரியம் அழைப்பு அறிவித்துள்ளது. தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் சார்பில், மத்திய அரசின் அனைவருக்கும் வீடு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. பட்டா உள்ள குடிசைப்பகுதி மக்கள், சொந்தமாக வீடு கட்ட, 2.10 லட்சம் ரூபாய் மானியம் வழங்கப்படுகிறது. அதன்படி, சொந்த இடத்தில், குடிசை அல்லது சாதாரண வீட்டில் வசிப்போர், அரசு மானியத்தை […]
கீழக்கரை தாலுகாவில் பல கோரிக்கைகளை வலியுறுத்தி அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்..
கீழக்கரையில் இன்று (22-08-2017) தாலூகா அலுவலர்கள், ஆசிரியர் கூட்டமைப்பு ( ஜாக்டோ -ஜியோ அமைப்பினர் ) மத்திய அரசுக்கு இணையான சம்பள உயர்வு, 2003 ம் வருடத்திற்கு பிறகு பணியமர்த்தப்பட்ட அரசு அலுவலர்களுக்கு ஓய்வு ஊதியம் பாகுபாடின்றி எல்லோருக்கும் ஒரே மாதிரி வேண்டும் உட்பட்ட பல கோரிக்கைகளை வழியுறுத்தி, 100 க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டுபட்டனர். இந்த திடீர் வேலை நிறுத்தத்தால் பல ஊர்களில் இருந்து கீழக்கரைக்கு அரசு அலுவலகம் சார்ந்த பணிக்கு வரும் பொதுமக்கள் பெரும் […]
தூய்மை சாலையான கீழக்கரை வள்ளல் சீதக்காதி சாலை.. என்றும் இப்பணி தொடர வேண்டும் என்பது மக்கள் எதிர்பார்ப்பு..
கீழக்கரையின் பிரதான சாலையாகும் வள்ளல் சீதக்காதி சாலை. ஆனால் சமீப காலமாக சாலைகளில் கொட்டப்பட்ட மணல் மற்றும் பல குப்பைகளால் அசுத்தமான சூழ்நிலை நிலவி வந்தது. இதன் காரணமாக வாகனங்கள் செல்லும் பொழுது தூசி மற்றும் புழுதி காற்றால் பெரும் அவதிக்குள்ளானார்கள். இன்று காலை நகராட்சி ஆணையாளர் வசந்தி தலைமையிலும், முதன்மை அதிகாரி சந்திரசேகர், ஆய்வாளர் திண்ணாயிரமூர்த்தி மற்றும் மேற்பார்வையாளர் மனோகரன் முன்னிலையில் நகராட்சி பணியாளர்கள் வள்ளல் சீதக்காதி சாலையை முழுமையாக சுத்தப்படுத்தினர். இந்தப்பணியை ஒரு நாளுடன் […]
கீழக்கரைக்கு சுதந்திரம் கிடைக்குமா?? இந்த வற்றாத சாக்கடை, குப்பையில் இருந்து…
நம் நாடு இன்று 71வது சுதந்திர தினத்தை சிறப்பாக நாடு முழுவதும் தேசியக் கொடி ஏற்றி விடுதலை போராட்டத்தில் வீர மரணம் அடைந்தவர்களை நினைவுகூறும் வண்ணம் கொண்டாடப்பட்டு வருகிறது. பாரதப் பிரதமரும் தன்னுடைய சுதந்திர தின உரையில் நம் நாடு அனைத்து தடைகளையும் உடைத்து சுத்தமான, சுகாதாரமான இந்தியாவை நோக்கி செல்கிறது என்று பேசியது மிகவும் பெருமையாக உள்ளது. ஆனால் கீழக்கரை போன்ற தாலுகா அந்தஸ்தில் உள்ள ஊரில் மக்களுக்கு சுகாதாரத்தை சீர் குலைக்கும் சாக்கடை பிரச்சினைக்கு […]
You must be logged in to post a comment.