இன்று (03-01-2018) கீழக்கரை நகராட்சி, வட்டாட்சியர் அலுவலகம் முன்பு வருவாய் துறை அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் , சமீபத்தில் நடந்த உத்திரகோசமங்கை திருவிழாவில் கீழக்கரை தாசில்தார் கணேசனிடம் கண்ணியக்குறைவான வார்த்தை பிரயோகம் செய்து தரக்குறைவான முறையில் நடந்து கொண்டார் என்று கூறி, காவல்துறை அதிகாரி வெள்ளத்துரை பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் வரும் திங்கள் கிழமை அன்று மாவட்ட அளவில் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபடப்போவதாகவும் அறிவித்துள்ளனர். இது சம்பந்தமாக காவல்துறை அதிகாரி […]
Category: நகராட்சி
புறக்கணிக்கப்படும் வடக்குத் தெரு 19,20 வார்டு பகுதி.. நகராட்சி நிர்வாகம் செயல்பாட்டில் உள்ளதா என்ற சந்தேகத்தை எழுப்பும் அவல நிலை…
கீழக்கரையில் தற்போதைய சூழலில் நகராட்சியில் நேரடியாக சென்று மனு கொடுத்தாலே சிரமத்துடன் பணிகள் நடக்கும் நிலைதான் உள்ளது. நகராட்சியின் பணியே மக்களின் நேரடியாக கண்டறிந்து பொதுமக்களின் சுகாதாரத்தை பேணும் நிலை மாறி, பொதுமக்கள் அவர்களுடைய பணிகளை செய்ய வற்புறுத்தும் சூழலாக மாறிவிட்டது. கீழக்கரை வடக்குத் தெரு தைக்கா அருகில் உள்ள பெண்கள் தொழுகைப் பள்ளி அமைந்திருக்கும் பகுதியில் கடந்த பல மாதங்களாக சாக்கடை நீர் அடைத்து தொழுகை பள்ளிக்குள் செல்லும் அபாய நிலையில் உள்ளது. இந்த பிரதான […]
லாரி மோதி மின்சார கம்பம் சேதம்.. நூற்று கணக்கான வீடுகளுக்கு மின்சாரம் தடை..
கீழக்கரையில் இன்று காலையில் புது கிழக்கு தெரு பகுதியில் மணல் ஏற்றி வந்த லாரி ஓன்று மின்சார கம்பத்தின் மீது மோதியதால் அக்கம்பம் சாய்ந்தது. இதனால் அப்பகுதியில் நூற்றுக் கணக்கான வீடுகளுக்கு மின்சார பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இது சம்பந்தமாக சம்பவ இடத்தை பார்வையிட்ட கீழக்கரை நகர் நல சங்க செயலாளர் பசீர் மரைக்கா கூறுகையில், பழுதடைந்த மின்சார கம்பம் மிகவும் மெலிதான தரமற்ற இரும்பு கம்பிகளால் கான்கிரீட் வார்க்கப்பட்டு செய்யப்பட்டுள்ளதால், சாதாராண அதிர்வை கூட தாங்கிக்கொள்ள முடியாத […]
சாக்கடையில்லா கீழை நகர் கனவுத் திட்டம்.. என்றுமே கனவுதான்.. வீட்டிற்குள் கழிவு நீர் ஓடும் அவலம்…- வீடியோ தொகுப்புடன்..
கீழக்கரை நகராட்சியின் மெத்தனப்போக்கின் காரணமாக 20வது வார்டு சி.எஸ்.ஐ சர்ச் பகுதி மற்றும் 21 வது வார்டு மக்கள் தினம் தினம் பெரும் அவதிக்குள்ளாகிறார்கள். இப்பகுதியல் கால்வாயில் ஓட வேண்டிய கழிவு நீர் வீட்டிற்குள் வீட்டிற்குள் வழிந்தோடும் அவல நிலை. இந்த பகுதியில் காலங்கள் மாறினாலும், காட்சிகளும், ஆட்சிகளும் மாறினாலும் இப்பகுதியின் சாக்கடை நிலைமை மட்டும் மாறுவதில்லை. இது யாருடைய குற்றம்?? நகராட்சியின் குற்றமா?? அரசியல்வாதிகளின் குற்றமா?? இல்லவே இல்லை தகுதியற்றவர்களை ஆட்சி மகுடத்தில் வைத்து அழகு […]
வீணாகும் கீழக்கரை மக்கள் வரிப்பணம் …
கீழக்கரை நகராட்சிக்கு கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பாக வறட்சி நிதியாக பல லட்சங்கள் வந்தது. அந்த நிதியில் அமைச்சர் மணிகண்டன் உத்தரவின் பேரில் கீழக்கரையில் உள்ள 11 வார்டுகளுக்கு அமைச்சர் பெயர் பொருத்திய கல் வெட்டுடன் ஆழ்கிணறுகள் அமைக்கப்பட்டு தண்ணீர் டேங்கும், பம்புகளும் பொறுத்தப்பட்டது. தமிழக அமைச்சர் தன் பெயர் பொறித்த காரணத்தால் சில இடங்களில், கிழக்கு நாடார் தெரு உட்பட ஆறு இடங்களில் அதிரடியாக தொடங்கி வைக்கப்பட்டு பொதுமக்கள் உபயோகத்திற்கு அர்பணிக்கப்பட்டது. ஆனால் சின்னக்கடை தெரு, […]
கீழக்கரையில் பள்ளி நேரங்களும், குடி தண்ணீர் வினியோக லாரிகளும்…
கீழக்கரையின் தண்ணீர் தேவையை அதிக அளவில் நிறைவேற்றுவது வெளியூரில் இருந்து வரும் குடி தண்ணீர் லாரிகள் மூலமாகத்தான். ஒரு நாள் தண்ணீர் லாரி வரவில்லை என்றாலும் கீழக்கரை மக்களின் பாடு திண்டாட்டம் ஆகி விடுகிறது. ஆனால் அதே சமயம் தண்ணீர் லாரிகள் காலை மற்றும் மதிய வேலைகளில் பள்ளிக்ககூடங்கள் ஆரம்பம் ஆகும் நேரம் மற்றும் பள்ளி முடிந்து குழந்தைகள் வரும் நேரம் முக்கிய வீதிகளில் வந்து விடுவதால் அநேக நேரங்களில் முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு […]
கீழக்கரை வடக்குத் தெரு பகுதியில் அபாயகரமாக தொங்கும் மின்கம்பிகள்.. கண்டு கொள்ளாத மின்சார வாரியம்…
கீழக்கரை வடக்குத் தெரு 20வது வார்டு பகுதியில் பல வருடங்களாக குழந்தைகள் கைக்கும் எட்டும் வகையில் மின்சார வயர்கள் தொங்கிய நிலையில் உள்ளது. மேலும் அங்குள்ள வாய்கால் மூடிகளும் உயர்த்தி வைக்கப்பட்டுள்ளதால் நடந்து செல்பவர்களின் தலையில் உரசும் நிலையிலேயே உள்ளது. இது சம்பந்தமாக பல முறை மின்சார வாரிய ஊழியர்களிடம் காண்பித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. இது சம்பந்தமாக இத்தெரு மக்கள் அம்மா அழைப்பு மையத்திலும் புகார் மனு அளித்துள்ளனர். மேலும் இந்த 20 வார்டு பகுதியிலேயே […]
பகலிலும் வெளிச்சம் தரும் கீழக்கரை மின்சார வாரியம்..
மின்சாரத்தை சேமியுங்கள் என்று ஒரு பக்கம் விளம்பரம், மறுபக்கம் தேவைக்கு வெளிச்சம் இல்லாமல் பகல் நேரத்திலும் எரிந்து கொண்டிருக்கும் கீழக்கரை சாலை விளக்குகள். கீழக்கரை வடக்குத் தெரு பகுதியில் பல இடங்கள் இரவு நேரங்களில் இருளடைந்து கிடக்கிறது, இரவில் எரிய வேண்டிய சாலை விளக்குகளோ பகலில் எரிந்து கொண்டிருக்கிறது. கீழக்கரை மின்சார வாரியம் மக்களின் பிரச்சினைகளை கருத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்குமா??
கீழக்கரையில் கிராம அலுவலர்கள் விடாத மழையிலும் அயராத போராட்டம் ..
கீழக்கரையில் இன்று (29/11/2017) கிராம நிர்வாக அலுவலர்கள் ஐந்து அம்ச கோரிக்கையை வலியுறுத்தி நகராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் செய்தனர். கீழக்கரையில் கடந்த இரண்டு நாட்களாக அடை மழை பெய்வதையும் பொருட்படுத்தாது தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்தில் கீழக்கரை வட்ட தலைவர் கருப்பையா, வட்ட செயலாளர் தமிழ்செல்வன், வட்ட பொருளாளர் மாரியப்பன் ஆகியோர் தலைமையில் மொத்தம் 19 கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
கீழக்கரை கிறிஸ்தவ சமுதாயத்தின் கோரிக்கைகளை நிறைவேற்றுமா அரசாங்கம்??..
கீழக்கரையில் இஸ்லாமியார்கள் அதிகமாக வாழும் பகுதியாக இருந்தாலும் இந்து மத சகோதரர்கள், கிறிஸ்தவ மத சகோதரர்கள் என பல சமுதாய மக்கள் நல்லிணக்கத்துடன் வாழ்ந்து வருகிறார்கள். அதுபோல் இவ்வுலகை விட்டு மறைந்தவர்களை அடக்கம் செய்வதற்கென அனைத்து சமுதாயத்தினருக்கும் தனி வசதிகளும் உள்ளன. அதுபோல் கிறிஸ்தவ சமுதாயத்திற்கான அடக்கஸ்தலம் கீழக்கரை தட்டான் தோப்பு முருகன் கோயில் பின்புறம் அமைந்துள்ளது. இந்த அடக்கஸ்தலத்தில் இருந்த கல்லறைகளும் உடைக்கப்பட்டு சேதமடைந்து மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இந்த கல்லறைக்கு பாதுகாப்பான சுற்றுச் […]
மக்கள் பிரச்சினையை கருத்தில் கொள்ளாத கீழக்கரை மின்சார வாரியம்..
கீழக்கரையில் பல வருடங்களாக பழைய பேருந்து காவல்நிலையம் அருகே இயங்கி வந்த மின்சார கட்டணம் செலுத்தும் அலுவலகம் சில வருடங்களுக்கு முன்பு ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் உள்ள துணை மின் நிலைய அலுவலகத்திற்கு மாற்றப்பட்டது. இது பொது மக்களுக்கு பெரும் சிரமத்தை உண்டாக்கியது. இப்பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில், கீழக்கரையில உள்ள அனைத்து கவுன்சிலர்களும் சேர்ந்து 2013ம் ஆண்டு புதிய பேருந்து நிலையம் அருகே மக்களுக்காக மின்சார கட்டணம் செலுத்த கட்டிட வசதியை செய்து கொடுத்தனர். […]
கீழக்கரையில் காவலர்களையே அச்சுறுத்தும் காவல்நிலையம் ..
நம் நாட்டின் பாதுகாப்பில் ராணுவத்திற்கு அடுத்து முக்கியத்துவம் மிகுந்தவர்கள் காவலர்கள். ஒவ்வொரு காவலர்களும் தினம் தினம் பல வகையான பிரச்சினைகளை சந்திக்க கூடியவர்களாக இருக்கிறார்கள். கால நேரம் பார்க்காமல், இரவு பகல் என்ற பாராபட்சம் இல்லாமல், வெயில் மழை எதுவாக இருந்தாலும் ஆட்சியாளர்கள் முதல் சாமானிய மனிதன் வரை பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிப்பவர்கள் காவலர்கள். இந்த முக்கியம் வாய்ந்த பணியை செய்யும் அவர்களுக்கு பணி செய்யும் இடத்தை கண்ணியம் உடையதாக அமைத்துக் கொடுக்க வேண்டியது அத்துறை […]
இரவு நேரங்களில் உலா வரும் பெருச்சாளிகளால் கீழக்கரையில் நோய் பரவும் அபாயம் …
இரவு நேரங்களில் உலா வரும் பெருச்சாளிகளால் கீழக்கரையில் இரவு நேரங்களில் தெருக்களில் பெருச்சாளிகளின் நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. தெருக்களில் உலா வரும் பெருச்சாளிகள் சில நேரங்களில் ஆங்காங்கே செத்து மடிந்து கிடக்கின்றன. இதனால் அபாயகரமான நோய்களும் பரவ வாய்ப்பு உள்ளது. இது போன்று உலவும் எலிகளால் இரவு நேரங்களில் பொதுமக்களுக்கும் அச்சுறுத்தலாக உள்ளது. இதனால் ப்ளேக் நோய் போன்ற கொடிய நோய்களும் தாக்கக்கூடிய அபாயம் உள்ளது. இது சம்பந்தமாக சமூக ஆர்வலர்களும் கீழக்கரை […]
கீழக்கரை வடக்குத் தெரு பிரதான சாலையின் அவல நிலை… நேரடி வீடியோ ரிப்போர்ட் ..
கீழக்கரை வடக்குத் தெரு 18,19,20 மற்றும் 21 வார்டுகளை உள்ளடக்கிய, பிரதான சாலைகளை கொண்ட முக்கிய தெருவாகும். இச்சாலை வழியாக பள்ளிக்கு செல்லும் வாகனங்கள் முதல் பொதுமக்கள் வரை சென்று வருகிறார்கள். இச்சாலையில் சாக்கடைகள் ஓடும் வாருகால் மூடிகள் உடைந்து சாலையில் சாக்கடை வெள்ள பெருக்காக ஓடுகிறது. நேற்று ஒரு குழந்தையும் அக்குழியில் விழுந்து, அதிர்ஷடவசமாக காப்பாற்றபட்டுள்ளார். இதற்கு நகராட்சி நிர்வாகம் நிரந்தர தீர்வு காணும் என்ற எதிர்பார்ப்பில் மக்கள் காத்திருக்கிறார்கள்.
கீழக்கரையில் அலட்சியமாக தூக்கி எறியப்பட்டு கிடக்கும் ஹைமாஸ் தெரு விளக்குகள்..
கீழக்கரையில் பல இடங்களில் பெயரளவில் ஹைமாஸ் விளக்கு அதிகமான இடத்தில் இருந்தாலும் பயன்பாட்டில் இருப்பது சிலவை மட்டும்தான். முக்கியமான பகுதிகளில் விளக்குகள இல்லாமல் பொதுமக்கள் மிகவும் சிரமத்துக்கு ஆளாகிறார்கள். உதாரணமாக கிழக்குத் தெரு ஜமாத் பள்ளி அருகில் உள்ள ஹைமாஸ் நீண்ட நாட்களாக எறிவது இல்லை, அதே போல் அரசியல் மற்றும் தனிப்பட்ட காரணங்களுக்காக கமுதி பால்கடை அருகில் இருந்து எடுக்கப்பட்ட ஹைமாஸ் விளக்கு கடற்கரையில் நிறுவப்படும் என்று கீழக்கரை ஆணையரால் பல முறை வாக்குறுதி அளித்தும் […]
அ(க)ழிவு நிலைக்கு சென்று கொண்டிருக்கும் நகராட்சி வளாகத்தில் பயன்பாடில்லாமல் கிடக்கும் கழிப்பறைகள்..
தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் இந்தியாவில் அனைத்து பகுதிகளுக்கும் கழிப்பறை வசதி செய்து கொடுக்கும் வகையில் நவீன கழிப்பறைகள் அரசங்கத்தால் கொடுக்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் ஒரு பகுதியாக கீழக்கரை நகராட்சிக்கு வழங்கப்பட்ட நவீன கழிப்பறைகள் கீழக்கரை அரசு மருத்துவமனை வளாகத்தில் எந்த பயன்பாடும் இல்லாமல் அழிய கூடிய நிலையில் கேட்பாரற்று கிடக்கிறது. அவ்வாறு கிடக்கும் கழிப்பறைகளை முறைபடுத்தி புதிதாக அமைக்கப்பட்டுள்ள கடற்கறை பூங்காவில் அமைத்தால் சுற்றுலா பயணிகளுக்கும், கடற்கரைக்கு வருபவர்களுக்கும் உபயோகமாக இருக்கும். நகராட்சி நிர்வாகம் மக்கள் […]
தேங்கும் மழைநீருக்கு நிரந்தர தீர்வு காணுமா நகராட்சி.. ஒரு நேரடி பார்வை..
கீழக்கரையில் முக்கியமான தெருக்களில் ஒன்று NMT தெரு என்றழைக்கப்படும் நெய்னா முகம்மது தண்டல் தெரு. ஆனால் இங்குள்ள சிறிய தெருவில் சின்ன மழைக்கும் மக்கள் நடமாட முடியாதபடி மழைநீர் தேங்கி விடும். பின்னர் நகராட்சி லாரி மூலம் நீரை அகற்றவது ஒரு தொடர் நிகழ்வு. ஆனால் இப்பிரச்சினைக்கு தீர்வு காணும் விதம் அத்தெருவில் உள்ள பள்ளத்தை சரி செய்து நிரந்தர சாலை அமைத்தால் தீர்வு ஏற்படும், ஆனால் அதை செய்ய நகராட்சி முனைப்பு காட்டுவதில்லை. ஆனால் மறுபுறம் […]
கீழக்கரையில் இரவு முழுவதும் பெய்த மழையினால் பல இடங்கள் பாதிப்பு..
இன்று காலை ஒரு கவிஞன் கூறியது போல் காதலி போல் மகிழ்ச்சியுடன் தொடங்கிய மழை, செல்லும் பொழுது ஊர் மக்களுக்கு பல இன்னல்களை தந்து விட்டு சென்றுள்ளது. நம்முடைய நிருபர் சித்திக் களத்தில் நேரடியாக சென்று சேகரித்த தகவல்கள் உங்கள் பார்வைக்கு… கீழக்கரை அகமது தெருவில் மரக்கிளைகள் உடைந்து மின்சார கம்பத்தின் மீது விழுந்து ஆபத்து விளைவிக்கும் நிலையில் உள்ளது. கீழக்கரையில் நேற்று இரவு முதல் மழையின் காரணமாக பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. கீழக்கரை ஜின்னா […]
ஒரு வருடத்திற்கு முன்பு அடையாளம் காட்டப்பட்ட டெங்கு கொட்டகை.. நகராட்சியின் அலட்சியத்தால் பலி போகும் உயிர்கள்..
கீழக்கரை வடக்குத் தெரு மைய பகுதியில் சில வருடங்களுக்கு முன்பு வரை தனியாரால் பராமரிக்ப்பட்டு வந்த ட்ரக் கொட்டகையை யாரும் மறந்திருக்க முடியாது. ஆனால் அரசுக்கு சொந்தமான நிலம் என்று வந்த நீதிமன்ற தீர்ப்பையொட்டி நகராட்சியின் பராமரிப்புக்கு கீழ் சென்றது. தனியார் வசம் இருந்தவரை வேலி போட்டு அடைக்கப்பட்டு இருந்த இடம், நகராட்சியின் வசம் வந்த உடன் குப்பை கொட்டும் கூடாரமாகவே மாறிப்போனது. பின்னர் இது சம்பந்தமாக கடந்த ஜுலை மாதம் நகராட்சி ஆணையரிடம் நேரடியாக பேட்டி […]
கீழக்கரை நகராட்சியில் ஆட்சியர் தலைமையில் அதிரடியாக டெங்கு எதிரொலியால் சோதனை..
கீழக்கரை நகராட்சி எல்லையில் நேற்று(23-10-2017) ஆட்சியர் தலைமையில் நேற்று சுகாதார சோதனை காலை 08.00 மணி முதல் வியாபார ஸ்தலம் உட்பட பல இடங்களில் நடைபெற்றது. இச்சோதனையின் போது கோட்டாட்சியர் ( R. T. O.), வட்டாட்சியர், நகராட்சி ஆணையர் மற்றும் நகராட்சி ஊழியர்களுடன் நகர் முழுதும் ஆய்வு மேற்கொண்டனர். இச்சோதனையின் போது கொசு உற்பத்தியாகும் வகையிலும், சுகாதாரமற்ற இடங்களையும், நோய் பரப்பும் வகையில் பராமரிப்பின்றி கிடந்த இடங்கள், சுகாதாரமற்ற கடைகள் மற்றும் உணவு விற்கும் வியாபார […]
You must be logged in to post a comment.