தான், எனக்கு, தன் குடும்பம் என்று சுயநலமாக வாழ்ந்து வரும் இன்றைய உலகில், மற்றவருக்கு வேலைவாய்ப்பை அடையாளம் காட்டுவதை பொழுது போக்காக “ KILAKARAI CLASSIFIED ONLINE” என ஆரம்பித்து இன்று அதையே முழு நேரமாக பல இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புக்கான பல கதவுகளை திறந்துவிட்டிருக்கும் அளவுக்கு தனித்து நிற்கும் நிறுவனம்தான் “TRAVEL ZONE”. இந்நிறுவனம் கீழக்கரை SKV சேக் என்பவரால் கடந்த 2014ம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட நிறுவனமாக ஆரம்பிக்கப்பட்டு வேலை வாய்ப்பு மட்டுமல்லாமல், அதன் […]
Category: நகராட்சி
தித்திக்கும் சுத்தமான தேன் கீழக்கரையிலும் கிடைக்கும்…
கீழை டைரி – 3 BE A BEE காட்டுத் தேன்.. “முயலான் கொம்புத் தேனுக்கு ஆசைப்பட்டதைப் போல!” – இது பழமொழி. இந்த பழமொழி காலப்போக்கில் முயலான் என்ற வார்த்தை மருவி முடவன் என்று மாறி ‘முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப்பட்டதைப் போல’ என புழக்கத்தில் பேசப்படுகிறது. அதாவது, முயலான் என்றால் முயற்சி செய்யாதவன் என்று பொருள். கொம்புத் தேன் என்பது பெரிய மலை உச்சியிலும், காடுகளில் பெரிய பெரிய மரங்களின் உச்சியிலும் தேனீக்களால் தேன் […]
கீழக்கரை காவல் துறையுடன் பொது நல அமைப்புகள் இணைந்து நாளை நடத்தும் போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்து தடுப்பு நிகழ்ச்சியில் ADSP வெள்ளத்துரை சிறப்புரை..
கீழக்கரை நகரில் கடந்த சில ஆண்டுகளாக வாகன போக்குவரத்து நெரிசல் சொல்லொண்ணா துயரத்தை பொதுமக்களுக்கு தந்து வருகிறது. கீழக்கரையில் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு வாகன பெருக்கத்தால் சாலைகள் முழுமையும் எந்நேரமும் வாகனங்கள் நிரம்பி இருக்கிறது. போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடிக்காமல் செயல்படும் வாகன ஓட்டிகளால் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணாக்கர்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். சிறுவர்களால் இயக்கப்படும் இரு சக்கர வாகனங்களால் தொடர்ந்து உயிரிழப்புகள் நிகழ்ந்த வண்ணம் இருக்கிறது. இது சம்பந்தமாக கீழக்கரை காவல் துறையுடன் பொது […]
கீழை டைரி -2. அல் பய்யினாஹ் கல்வி குழுமம்..
கீழை டைரி -2. அல் பய்யினாஹ் கல்வி குழுமம் கீழக்கரையில் சிறப்பான கல்வியை மாணவர்களுக்கு வழங்குவதில் அல் பய்யினாஹ் பள்ளியும் ஒன்றாகும். அப்பள்ளியின் தாளாளர் பள்ளியின் செயல்பாடுகளைப் பற்றி கூறியதாவது:- கீர்த்திமிகு கீழக்கரையில் எத்தனையோ பள்ளிக்கூடங்கள் இருந்தாலும் முதன் முதலாக முத்தாய்ப்பாக மார்க்க கல்வி இணைந்த உலகக்கல்வியை கற்று கொடுக்கும் நோக்கோடு உருவாக்கப்பட்ட பள்ளிக்கூடம் அல் பய்யினாஹ் மெட்ரிகுலேஷன் பள்ளிக்கூடம் என்பதை நம்மில் அறிமுகப்படுத்திக் கொள்வதில் பெருமிதம் கொள்கிறோம். இந்தக் கல்விக்கூடம் கடந்த 2012 ஆண்டு சேர்மனாக ரஃபி […]
நகராட்சியை நவீன படுத்த வந்த உபகரணங்கள், நலிந்து கிடக்கும் அவலம்..
கீழக்கரை நகராட்சியின் சுகாதாரம்தை மேன்படுத்த போவதாக அறிவித்து, அதற்கான நவீன கம்பெக்டர் வாகனம் மற்றும் நவீன ?? குப்பைக் கொட்டும் தொட்டிகளும் பல லட்சம் ரூபாய் செலவில் வந்திறங்கி, நகராட்சி ஆணையரால் அத்திட்டம் தொடங்கியும் வைக்கப்பட்டது. ஆனால் இத்திட்டம் தொடங்கி சில தினங்களிலேயே மக்கள் பெரும் அவதிக்கும், அதிருப்திக்கும் ஆளாகியுள்ளார்கள், காரணம் முறையான பயிற்சி எடுக்காமல் கம்பெக்டர் வாகனம் மூலம் குப்பைகளை அள்ளுவதால், கழிவுகள் சாலைகளிலும் சிந்துகிறது. அதே போல் 4 சக்கரங்களுடன் வாங்கப்பட்ட குப்பை கொட்டும் […]
கீழை டைரி – 1 – அல் ரைஹான் ஹஜ் உம்ரா சர்வீஸ்..
கீழை டைரி – 1 அல் ரைஹான் ஹஜ் உம்ரா சர்வீஸ்.. இன்றைய கீழை டைரியில் பதிவாகிறது “அல் ரைஹான் ஹஜ் உம்ரா சர்வீஸ் – AR RAYHAN HAJ&UMRA SERVICE” . இந்த சேவை கீழக்கரை மேலத் தெரு, மணியார் தெருவில் இயங்கி வருகிறது. இச்சேவையை முஹம்மது என்பர் முன்னிருந்து நடத்தி வருகிறார். இவரின் சேவையின் சிறப்பம்சமாக கீழே உள்ளவற்றை விவரிக்கிறார். 1⃣ஹாஜிகளுக்கும் உம்ரா செல்லக் கூடியவர்களுக்குமான மனநிறைவான, வெளிப்படையான அணுகுமுறையும் பணிவிடையும் 2⃣ வாக்குறுதிகளில் […]
கீழக்கரையில் காவல்துறை அதிகாரி தலைமையில் போக்குவரத்து நெரிசல் சம்பந்தமாக ஆலோசனைக் கூட்டம்..
கீழக்கரையில் இன்று (21-01-2018) காவல்துறை ஆய்வாளர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் காவல் நிலைய அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பல் வேறு சமூக அமைப்புகள் ,வர்த்தக அணி மற்றும் அரசியல் கட்சிகள் நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். காவல்துறை ஆய்வாளர் பேசுகையில் நிர்ணயிக்கப்பட்ட பயணிகள் அளவுக்கு மேலாக ஆட்டோக்களில் பொதுமக்கள் பயணம் செய்தல், முக்கிய சாலைகள் மற்றும் நெடுஞ்சாலைகளில் அதி வேகமாக வாகனங்களை ஓட்டுவதால் ஏற்படும் விபரீதம் மற்றும் அதன் விளைவுகளை விளக்கினார். ஊருக்ககுள் தலைக்கவசம் அணியாமல் செல்பவர்கள் மீது […]
கீழக்கரை நகராட்சியில் ”பேவர் ப்ளாக்” வேலை தொடங்கியது … இப்பொழுது “நிலைக்குமா” அல்லது மீண்டும் “பிளக்குமா”…
கீழக்கரை நகராட்சியில் கடந்த ஆட்சி பொறுப்பில் இருந்தவர்கள் பல இடங்களில் மண் சாலைகள் மற்றும் தார் சாலைகள் இருந்த இடத்தில் பேவர் ப்ளாக் சாலைகள் அமைத்தார்கள். நகராட்சி மூலம் செயல்படுத்தப்பட்ட இந்த பணியில் முறைகேடு என்றும், தரம் இல்லை என்றும் பல் வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன. அதே போல் சமூக ஆர்வலர்கள் மூலமாக தகவல் அறியும் சட்டத்தின் கீழ் தகவல்கள் பெற பட்ட பொழுது தொடர்ந்து சில குறிப்பிட்ட குத்தகைகார்ரகளுக்கே ஒப்பந்தம் வழங்கப்பட்டதும் தெரிய வந்தது. இச்சூழலில் […]
கீழக்கரை அரசு அலுவலகங்களில் தமிழர் திருவிழா கொண்டாட்டம்…
கீழக்கரையில் இன்று (12-01-2018) தாலூகா அலுவலகத்தில் வட்டாட்சியர் கணேசன் முன்னிலையில் தாலூகா அலுவலர்கள் அனைவரும் சேர்ந்து தமிழர் கலாச்சார முறைப்படி பொங்கல் பொங்க வைத்து கொண்டாடினர். கீழக்கரை நகராட்சி அலுவலகத்திலும் நகராட்சி ஆணையாளர் வசந்தி முன்னிலையில் நகராட்சி அலுவலர் பொங்கல் திருவிழாவை கொண்டாடினர். இன்றை முதல் அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்டதால் இன்று முதலே தமிழகத்தில் அனைத்து பகுதிகளிலும் பொங்கல் கொண்டாட்டம் தொடங்கிவிட்டது. —————-/////——————
கடந்த வருடம் கேட்ட கேள்விக்கு பதில் தர தகவல் உரிமை ஆணையத்திடம் நேரடியாக முறையீடு..
கடந்த நவம்பர்.17, 2016ம் ஆண்டு கீழக்கரை நகராட்சியிடம் ஒரே ஒரு கேள்வி என்று கீழக்கரையில் உள்ள பல பிரச்சினைகளுக்கான விளக்கம் கேட்டு கீழக்கரை சட்டப்போராளிகள் சார்பாக தகவல் அறியும் சட்டத்தின் மூலம் கேள்வி கேட்கப்பட்டிருந்தது. ஆனால் இன்று வரை அதற்கான விளக்கமான பதில் கிடைக்கவில்லை. அந்த கேள்வியை ஒட்டி மேல்முறையீடும் செய்யப்பட்டது, ஆனால் அதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்க படாமலே இருந்தது. அதே சமயம் மனுக்கள் மூலமாக மட்டும் எதையும் சாதிக்க முடியாது என்ற விமர்சனங்கள் இருந்தாலும், […]
கீழக்கரையில் தாசில்தார் தலைமையில் ஆர்ப்பாட்டம் ..
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் வட்டாட்சியர் கணேசன் மற்றும் துணை தாசில்தார், சிவக்குமார் தலைமையில் 21அம்ச கோரிக்கைகளை வலியுறித்தி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை கோஷமிட்டு வலியுறுத்திய வண்ணம் அலுவலர்களும், அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
கீழக்கரை தாலுகா கிராம நிர்வாக அலுவலர்கள் தொடர் போராட்டம்…
கீழக்கரை தாலூகாவுக்கு உட்பட்ட VAO – Village Administrative Officer எனும் கிராம நிர்வாக அலுவலர்கள் தாலூகா அலுவலகத்தில் இன்றிலிருந்து போராட்டம் அறிவித்துள்ளனர். கீழக்கரை தாலுகா மொத்தம் 18 கிராம நிர்வாக அலுவலர்களை உள்ளடக்கியதாகும். இவர்கள் பல கோரிக்கைகளை வலியுறுத்தி கீழக்கரை தாலுகா அலுவலகத்தில் இன்று (08-01-2018) இரவு முழுவதும் உள்ளிருப்பு போராட்டம் நடத்துகின்றனர். பின்னர் 10ம் தேதி அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பும், 18 ம் தேதியிலிருந்து தொடர்ந்து வேலை புறக்கணிப்பு போராட்டம் நடத்தவும் […]
போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தம் – கீழக்கரையில் இருந்து நேரடி வீடியோ ரிப்போர்ட் …
தமிழகத்தில் கடந்த நான்கு நாட்களாக போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருக்கும் நிலையில் தமிழகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் கடந்த இரண்டு நாட்களாக தமிழக அரசும் மாற்று ஏற்பாடுகளை செய்து வருகிறது. அதுபோல் தனியார் வாகனங்களும் தங்களால் இயன்ற அளவு பங்களிப்பு செய்து வருகிறார்கள். அது சம்பந்தமாக கீழக்கரை பேருந்து நிலையத்தில் இருந்து நேரடி ரிப்போர்ட் …
கீழக்கரையை விட்டு விலகாத டெங்கும்.. கண்டு கொள்ளாத நகராட்சி நிர்வாகமும்..
கடந்த சில மாதங்கள் முன்பு வரை டெங்கு பரபரப்பு ஊர் முழுவதும் பரவி வந்தது. மாவட்ட ஆட்சியரும் அவருடைய பங்குக்கு நகராட்சி நிர்வாகத்தை முடுக்கி விடுவதை விட சாமானிய மக்களின் இடங்களில் கொட்டி கிடக்கும் குப்பைகளுக்கு பல ஆயிரம் ரூபாயை அபராதமாக விதித்து சென்றார். அதைத் தொடர்ந்து டெங்கு நோயும் கட்டுக்குள் வந்தது போல் ஒரு மாயையும் உண்டானது. ஆனால் உண்மையில் டெங்கு கொசு கீழ்க்கரையை விட்டு விலகுவதாகவே இல்லை. ஆனால் சமீபத்தில் கீழக்கரை வடக்குத் தெரு […]
பயனில்லாமல் தெருக்களில் தொங்கும் தொலைபேசி வயர்களின் நிலை என்ன??
கடந்த 10 அல்லது 15 வருடங்களுக்கு முன்பு சாதாராண தொலைபேசி மட்டுமே உபயோகத்தில் இருந்து வந்த நிலையில் இன்று 90 சதவீதத்திற்கும் மேலான வீடுகளில் தொலைபேசி தொடர்பு துண்டிக்கப்பட்டு அலைபேசிக்கு மாறிவிட்டார்கள் என்பதுதான் யதார்த்த நிலை. ஆனால் தொலைபேசி இல்லாத தெருக்களில் கூட அதற்காக பயன்படுத்தப்பட்ட வயர்கள் அதனுடைய சந்தை மதிப்பு அறியாமல் தொங்கிய நிலையில் உள்ளது. பல இடங்களில் கேபிள் டி.வி வயர்களும் பழைய தொலைபேசி வயர்களும் அடையாளம் தெரியாத அளவு பிண்ணி பினைந்து கிடக்கின்றன. […]
கீழக்கரையில் கிராம நிர்வாக உதவியாளர்கள் ஆர்ப்பாட்டம்..வீடியோவுடன்..
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் கிராம நிர்வாக உதவியாளர்கள் இன்று (05-01-2018) 5(ஐந்து) அம்ச கோரிக்கைகளை வலியுறித்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டம் தாசில்தார் சிவக்குமார் தலைமையிலும் கிராம நிர்வாக உதவியாளர்கள் சங்கத்தலைவர் உத்தம சேகரன் முன்னிலையில் 5அம்ச கோரிக்கைகளை வலியுறித்தி கீழக்கரையில் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்பாட்டம் நடைபெற்றது இதில் கிராம நிர்வாக உதவியாளர்கள் சங்கச் செயலாளர். சரவணக்குமார், பாக்கியவதி, மாவட்ட இணை செயலாளர். பாண்டி உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
கீழக்கரை நகராட்சியில் ஒரே நாளில் மாயமான 10000 பேர் – குளறுபடி செய்த அதிகாரிகளை பணியிடை நீக்கம் செய்ய சட்டப் போராளிகள் கோரிக்கை..வீடியோ விளக்கம்..
கீழக்கரை நகராட்சியில் 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படியும், சமூக ஆர்வலர்கள் தகவல் அறியும் உரிமை சட்டம் வாயிலாக பெறப்பட்ட ஆவணங்களின் படியும், கீழக்கரை நகராட்சியின் அதிகாரபூர்வ வலைத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ள தகவலின் பிரகாரமும், கீழக்கரை நகராட்சியின் மொத்த மக்கள் தொகை 47730 ஆகும். அதில் ஆண்கள் எண்ணிக்கை 25392 , பெண்கள் எண்ணிக்கை 22338. ஆனால் தற்போது வெளியிடப்பட்டுள்ள மறு வரையறை வார்டு பட்டியலில் கீழக்கரை நகராட்சியின் 2011 ஆம் ஆண்டைய மொத்த மக்கள் […]
ஆடல், பாடலுடன் கீழக்கரையில் சுகாதார விழிப்புணர்வு நிகழ்ச்சி..
கீழக்கரையில் இன்று (05-01-2018) நகராட்சி சார்பாக முக்கிய வீதிகளான பஜார் பகுதி, சின்னக்கடை தெரு மற்றும் பல பகுதிகளில் ஆடல், பாடலுடன் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது. இந்த விழிப்புணர்வு பிரச்சாரத்தில் திடக்கழிவு மேலாண்மை, தரம் பிரித்தல், கழிப்பறைகளை உபயோகித்தல் போன்ற விழிப்புணர்வு விளக்கங்களை “முழு சுகாதாரம் தமிழகம் – தூய்மை இந்தியா திட்டம் 2018” என்ற தலைப்பில் செயல்படுத்தி வருகின்றனர். இக்கலை நிகழ்ச்சிகளை கீழக்கரை நகராட்சியுடன் இணைந்து அன்னை கம்சலை கலைக் குழுவினர் நடத்தி வருகின்றனர்.
அரசுப் பேருந்து ஊழியர்கள் வேலை நிறுத்தத்தால் வெறிச்சோடிக் கிடக்கும் கீழக்கரை பேருந்து நிலையம் ..
தமிழகத்தில் நேற்று முதல் (04-01-2018) அரசு பேருந்து ஊழியர்கள் ஊதிய உயர்வு, போனஸ் போன்ற பல கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனால் தமிழகமே ஸ்தம்பித்த நிலையில் உள்ளது. பள்ளிகளுக்கு சென்ற மாணவர்கள் முதல் வேலை நிமித்தமாக வெளியூர் சென்றவர்கள் வரை வீடு திரும்ப முடியாமல் தத்தளித்த வண்ணம் உள்ளனர். இந்த வேலை நிறுத்தத்தால் கீழக்கரை பகுதியிலும் அரசு போக்குவரத்து எதுவும் இல்லை. சில தனியார் பேருந்துகள் மட்டுமே செயல்பட்ட வண்ணம் உள்ளன. இதனால் பேருந்து […]
நகராட்சி வார்டுகளை மறுவரையறை செய்தது பற்றிய மக்கள் கருத்தும்..சட்டப் போராளிகள் குழுமம் ஒருங்கிணைப்பாளர் விளக்கமும்…ஒரு வீடியோ பதிவு..
கீழக்கரையில் கடந்த வாரம் வார்டுகள் மறுவரையறை செய்வதில் உண்டாகிய குழப்பத்தை நீக்க கோரி சமூக ஆர்வலர்கள் மற்றும் அரசியல் கட்சிகள் இணைந்து குழப்படிகளை சீர் செய்ய மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர். அதைத் தொடர்ந்து மறுவரையறை சம்பந்தமாக கருத்து தெரிவிக்க கூடுதல் நாட்களும் நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில் பொதுமக்களிடம் இது சம்பந்தமாக கருத்து கேட்ட பொழுது, ஆச்சரியமளிக்கும் வகையில் அதன் பற்றிய விபரம் அறியாதவர்களாகவே இருந்தனர். பொதுமக்களும் விழிப்புணர்வு பெறும் வகையில் கீழக்கரை சட்டப்போராளிகள் குழும ஒருங்கிணைப்பாளர் […]
You must be logged in to post a comment.