கீழக்கரை நகராட்சி நடுத் தெரு ஜும்மா பள்ளி பகுதியில் இன்று அதிகாலை முதல் கீழை மர செக்கு நிறுவனம் அருகாமையில் இருந்து ஜும்மா பள்ளி பின் வாசல் வரை வழிந்தோடும் சாக்கடை நீரால் பொதுமக்கள் பெரும் அவதி அடைந்து வருகின்றனர். பள்ளி செல்லும் சிறுவர்களும், நடைபாதையில் செல்லும் பெரியவர்களும் நடந்து செல்ல வழி இல்லாமல் தட்டுத் தடுமாறி பாதையை கடந்து சென்று வருகின்றனர். பல்லலாண்டு காலமாக அடிக்கடி திடீரென சாக்கடை நீர் பெருக்கெடுத்து ஓடும் பகுதியாக இந்த […]
Category: நகராட்சி
தலைமை இல்லாமல் தடுமாறும் கீழக்கரை நகராட்சி ..
தமிழகத்தில் கீழ்நிலை ஊழியர்களால் செயல்படுத்தப்படும் ஓரே நகராட்சி, கீழக்கரை நகராட்சியாக மட்டுமே இருக்க முடியும். நகராட்சி ஆணையர் கிடையாது, சுகாதார ஆய்வாளர் கிடையாது, வருவாய் அதிகாரியும் நிலை கிடையாது, கட்டிட அனுமதி வழங்கும் அதிகாரியும் நிலை கிடையாது. கேள்வி கேட்டால் பதில் கூற அதிகாரிகள் கிடையாது. வரி வசூல் பாக்கி, பொதுமக்கள் ஒத்துழைப்பு கிடையாது என்று பொதுமக்கள் மீது பழி, ஆனால் வரி செலுத்த வந்தால் பணம் வசூல் செய்ய அலுவலகத்தில் ஆள் கிடையாது. இதுதான் இன்றைய […]
கீழக்கரை நகராட்சி கமிஷனருடன் சட்டப் போராளிகள் இயக்கத்தினர் சந்திப்பு
கீழக்கரை நகராட்சிக்கு பரமக்குடி நகராட்சி ஆணையாளர் நாராயணன் கூடுதல் பொறுப்பாக மதுரை மண்டல நகராட்சிகள் இயக்குநரால் நியமிக்கப்பட்டுள்ளார். ஆரம்பத்தில் பள்ளி ஆசிரியராக பணியை துவங்கிய இவர் தமிழ்நாடு மாநில பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் நடத்தப்பட்ட குரூப் தேர்வில் மாநில அளவில் எட்டாவது இடத்தை அடைந்து நகராட்சி ஆணையராக பணியமர்த்தப்பட்டார். இதற்கு முன்னர் 2014 ஆம் ஆண்டு முதல் 2017 ஆண்டு வரை திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் இரண்டாம் நிலை நகராட்சியில் மூன்றாண்டு காலம் சிறப்பாக பணி புரிந்துள்ளார். […]
கீழக்கரை நகராட்சி அலுவலகத்தில் விடுமுறை முடிந்தும் ஆதார் ‘மய்யம்’ திறக்கப்படாததால் பொதுமக்கள் அவதி
கீழக்கரை நகராட்சி அலுவலகத்தில் செயல்பட்டு வரும் ஆதார் பதிவு மய்யம் நேற்று (08.03.2018) வியாழக் கிழமை விடுமுறை என்பதாக திடீரென அறிவிப்பு செய்யப்பட்டு இருந்தது. இதனால் புதிய ஆதார் எண் பதிவு, பெயர் திருத்தம், முகவரி மாற்றம்ம் அலை[பேசி எண் இணைப்பு உள்ளிட்ட சேவைகளுக்காக நகராட்சி அலுவலகம் வந்திருந்த பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாயினர். இந்நிலையில் இன்று (09.03.2018) வெள்ளிக்கு கிழமையும் ஆதார் மய்யம் திறக்கப்படாததால் பொதுமக்கள் வீண் அலைச்சலுக்கு உள்ளானதோடு, பெரும் மன உளைச்சலுக்கும் உள்ளாகியுள்ளனர். இது […]
கீழக்கரை ஹோட்டல்களில் பிளாஸ்டிக் கவர்கள் உபயோகத்தை தடை செய்ய கோரி ‘நாம் தமிழர்’ கட்சியினர் கோரிக்கை மனு
கீழக்கரை ஹோட்டல்களில் உணவு வகைகளை பார்சல் செய்வதற்கும், சாப்பாடு பரிமாறுவதற்கும் பிளாஸ்டிக் கவர்கள் பயன்படுத்தபடுகிறது, இதனால் பொதுமக்கள் முதலில் வயிற்று வலியில் ஆரம்பம் ஆகி அல்சர் கேன்சர் என்று பெரிய கொடிய நோய்களில் கொண்டு பொய் விட்டு விடுகிறது. அதே வேளையில் நம் பண்டைய கலாச்சாரமான உணவு பரிமாறுதலுக்கு வாழையிலை பயன்படுத்துவதால் விட்டமின் ஏ சத்துக்கள் உடலில் சேரும் இயற்கை விவாசாயமும் வளரும். இதனை கருத்தில் கொண்டு ஹோட்டல்களில் மக்களின் நலனை கருத்தில் கொண்டு வாழையிலை பயன்படுத்த […]
கீழக்கரை அரசு மருத்துவமனைக்கு விடிவு காலம் பிறக்கிறதா??
கீழக்கரை தாலுகாவில் உள்ள முக்கியமான அரசு மருத்துவமனையாகும், கீழக்கரை நகராட்சிக்கு உட்பட்ட அரசு மருத்துவமனை. இங்கு தினமும் நூற்றுக்கணக்கான நோயாளிகள் மருத்துவத்திற்காக வந்து செல்கிறார்கள். ஆனாலும் ஊரில் செயல்பட்டு வரும் சமூக அமைப்புகள் மருத்துவமனையில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்ய கோரி பல மனுக்களை அரசின் கவனத்திற்கு அளித்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில் கீழக்கரை மருத்துவமனையின் நுழைவு வாயிலில் உள்ள மேற்கூரை மிகவும் பழுதடைந்து கான்கிரீட் துண்டுகள் விழுந்த வண்ணம் இருந்தது. இதனால் இங்கு வரும் வாகனங்கள், […]
மின்சார கேபிள் துண்டிப்பு இருளில் முழ்கிய ராமேஸ்வரம், +2 மாணவர்கள், சுற்றுலாபயணிகள் அவதி..
மண்டபம் அருகே மின்சார கேபிள் மர்ம நபர்களால் துண்டிக்கப்பட்டதால் சுற்றுலாத்தலமான ராமேஸ்வரம் உட்பட 20 க்கும் மேற்ப்பட்ட மீனவக்கிராமங்கள் பத்து மணி நேரத்திற்கும் மேலாக இருளில் முழ்கியது. பொது தேர்வு எழுதும் மாணவர்கள் அவதியுற்று வருகின்றனர் சுற்றுலா பயணிகள் தங்கும் விடுதிகளில் மின்சாரம் பயன்படுத்த மின்சாரவாரியம் தடைவிதித்துள்ளது மண்டபம் துணை மின் நிலையத்திலிருந்து இராமேஸ்வரம் செல்லும் உயர் மின் அழுத்த கேபிள் வயரை மண்டபம் அருகே ஜே.சி.பி இயந்திரம் மூலம் துண்டித்ததால் ராமேஸ்வரம் , பாம்பன், தங்கச்சிமடம் […]
கீழை டைரி – 10 மரைக்காஸ் க்ரூப்பின் மற்றொரு நிறுவனம் ..“MARAIKA’S SANDWICH CAFÉ”
கீழக்கரை மரைக்காஸ் க்ரூப்பின் மற்றொரு நிறுவனம் “MARAIKA’S SANDWICH CAFÉ’ கீழக்கரையில் மரைக்காஸ் டூர்ஸ் அண்ட் டிராவல்ஸ் நிறுவனத்தினர் புதிதாக மக்களுக்கு சுவையான மற்றும் விலை குறைவாக வழங்கும் நோக்கத்துடன் தொடங்கப்படும் நிறுவனம்தான் “MARAIKA’S SANDWICH CAFÉ’ . இந்த நிறுவனம் வள்ளல் சீதக்காதி சாலையில் வரும் வெள்ளிக்கிழமை (02-03-2018) அன்று மாலை 02.00 மணியளவில் திறக்கப்பட உள்ளது. இங்கு சுவையான சான்விச், சமோசா, ஸ்ப்ரிங் ரோல், பிட்சா, பர்கர், சிக்கன் சீஸ் பால், கட்லட், நக்கட்ஸ், […]
கீழை டைரி-9, கீழக்கரையில் புதியதொரு பன்முக நவீன அரங்கம்..
கீழக்கரையில் தினமும் பல அமைப்புகள் சார்ந்தும், வியாபார நிறுவனம் சார்ந்தும் நிகழ்ச்சிகள் நடைபெற்ற வண்ணமே உள்ளது. ஆனால் அதற்கேற்றார் போல் அனைத்து வசதிகளும் நிறைந்த அரங்கு என்பது குறைவாகவே இருந்து வந்தது. இக்குறையை போக்கும் வண்ணம் வரும் 27-02-2018, செவ்வாய் கிழமை அன்று மாலை கீழக்கரை அரசு மருத்துவமனைக்கு எதிரில் ரகுமத்து நினைவரங்கம் என்ற பெயரில் பன்முக செயல்பாடுகளுக்கு பயன் பெரும் வகையில் நவீன அரங்கம் திறக்கப்பட உள்ளது. இந்த அரங்கின் சிறப்பம்சங்கள்:- 1. வியாபார கூட்டங்கள் […]
தண்ணீர் தட்டுப்பாடு ஒரு புறம்.. குடி நீர் வீணாகுது மறுபுறம்.. செவி சாய்க்காத கீழக்கரை நகராட்சி..
கடந்த சில நாட்களுக்கு முன்பு கீழக்கரையில் உள்ள தண்ணீர் பஞ்சத்தை பற்றிய சிறப்பு செய்தி வெளியிட்டிருந்தோம். அதே போல் இன்னும் சில வருடங்கள் இதே நிலை தொடர்ந்தால் தண்ணீர் இல்லா ஊராக மாறும் அபாயம் உள்ளதையும் சுட்டிக்காட்டி இருந்தோம். ஆனால் கீழக்கரை நகராட்சியோ இதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதை கூட சேமித்து வைப்பதற்கான நடவடிக்கை எடுக்காமல் மெத்தனப் போக்கையே கையாள்கிறது. கீழக்கரை வடக்குத் தெரு பகுதி மற்றும் 3வது வார்டு பெத்ரி பகுதியில் (இப்பகுதியில் போல் […]
மூன்றாம் உலகப்போர் தண்ணீருக்கா??.. கீழக்கரையும் கடும் தண்ணீர் பஞ்சத்தை நோக்கி செல்லும் அபாயம்..
சமீபத்தில் மூன்றாம் உலகப்போர் நடந்தால் அதற்கு முக்கிய காரணம் தண்ணீராகத்தான் இருக்கும் என்பதை பார்க்க நேர்ந்தது, சிந்திக்கவும் வைத்தது. ஏனென்றால் சமீபத்தில் தென் ஆப்ரிக்காவில் உள்ள கேப் டவுன் எனும் நகரம் “DAY ZERO” எனும் நீரில்லா நிலையை அறிவித்துள்ளது. “DAY ZERO” என்பது அரசாங்கம் வீடு மற்றும் அலுவலகங்களில் உள்ள தண்ணீர் இணைப்பு துண்டிக்கப்பட்டு ரேசன் முறையில் வழங்கப்படும். இந்த பட்டியலில் இந்தியாவில் உள்ள பெங்களூரும் உள்ளது, அதைத் தொடர்ந்து பெய்ஜிங், டோக்யோ, மாஸ்கோ, மியாமி, […]
கீழை டைரி -8, இயற்கையின் பக்கம் அழைத்துச் செல்லும் “கீழை மரச் செக்கு எண்ணெய்”…
அவசரமான நவீன உலகில், மக்களுக்கு ஆரோக்கியத்தின் மீதிருந்த அக்கறை குறைந்து எல்லாம் அதி வேகமாக கிடைக்க வேண்டும் என்ன எண்ணத்திலேயே ஓடிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அந்த ஓட்டத்தில் வாழ்கையை இழந்தவர்களாக. ஆனால் அது போன்ற மக்களின் கவனத்தை ஈர்த்து இயற்கை உணவை மக்களுக்கு வழங்கி வருகிறார்கள் “கீழை மரச் செக்கு எண்ணை”.. இங்கு இயற்கையான முறையில் தயாரிக்கும் நல்லெண்ணை, கடலை எண்ணை, சுத்தமான நெய் அத்துடன் அனைத்து விதமான இயற்கை உணவு வகைகளும் விற்பனை செய்யப்படுகிறது. நமது […]
கீழை டைரி 7, வீட்டு சுவையில் தம் பிரியாணி “ROYAL DUM BIRIYANI”
பிரியாணி என்றால் விரும்பாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். கல்யாண பந்திகளில் முந்திய உணவாக இருப்பது என்றுமே “பிரியாணி” தான். அந்த சுவையான பிரியாணியை தினமும் அருஞ்சுவையுடன் வழங்கி வருகிறார்கள் “ROYAL DUM BIRIYANI”. ROYAL DUM BIRIYANI கடையில் தம் பிரியாணி, நெய் சோறு,மட்டன் பிரியாணி, பீய்ப் பிரியாணி மற்றும் தினசரி இரவு வேளையில் சுவையான இடியாப்ப பிரியாணி, கொத்து புராட்டா, சிலோன் முர்தப்பா போன்ற சுவையான சிறப்பு உணவுகளும் கிடைக்கிறது. இங்கு ஆர்டரின் பெயரில் விசேஷங்களுக்கு […]
கீழை டைரி – 6, இனிப்புகளின் சாம்ராஜ்ஜியம் “ராவியத் ஸ்வீட்ஸ்”, தடம் பதிக்கிறது உணவு வகையில்…
கீழக்கரை இனிப்பு வகைக்கு முகவரி, அது “ராவியத் ஸ்வீட்ஸ்”. கீழக்கரை பாரம்பரிய இனிப்பு வகைகளான தொதல், பனியம், பொறிக்கஞ்சட்டி கொளுக்கட்டை, வெள்ளாரியாரம் என அனைத்து வகையான இனிப்பு வகைகளும் ஓரே இடத்தில் கிடைக்கும். தற்போது “ராவியத் ஸ்வீட்ஸ்”, மைதா சேர்க்காமல் கோதுமை மற்றும் பிராய்லர் கோழி சேர்க்காமல் புதுப் பொலிவுடன் மட்டன் முர்தபா(எ) லாப்பா சூடாகவும், சுவையாகவும், நியாயமான விலையில் தயாரித்து விற்க தொடங்கியுள்ளார்கள். இங்கு முக்கிய அம்சமாக வீட்டு விசேஷங்களுக்கு ஆர்டரின் பெயரில் சிறந்த முறையில் […]
கீழக்கரை நகராட்சி வார்டு மறுவரையறையில் குளறுபடி – நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனருடன் சட்டப் போராளிகள் சந்திப்பு
கீழக்கரை நகராட்சியில் வார்டு மறுவரையறை செய்யப்பட்டதில் குளறுபடி உள்ளதாக வழங்கப்பட்ட மனுக்களின் அடிப்படையில், நிர்வாக மண்டல இயக்குனர் ஜானகி ரவீந்திரன் மாவட்ட வாரியாக நேற்று (10.02.18) முதல் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் நேற்று இராமநாதபுரம் வருகை தந்த நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனர், நிர்வாக குளறுபடிகளை மொத்த குத்தகைக்கு எடுத்திருக்கும் கீழக்கரை நகராட்சி நிர்வாகத்தையும் ஆய்வு மேற்கொண்டார். இதனையடுத்து கீழக்கரை சட்டப் போராளிகளுக்கு இராமநாதபுரம் வந்திருக்கும் நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனரை சந்திக்க வருமாறு கீழக்கரை […]
முன்னாள் MLA வீட்டின் எதிரே சாயும் நிலையில் அபாய மின் கம்பம் – கயிறு கட்டி பொதுமக்களை காக்கும் அவலம்
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை வடக்குத் தெருவில் கடலாடி முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் MLA ஹாமீது இபுறாகீம் வீட்டின் எதிர் புறம் 19/14 என்கிற நகராட்சி குறியிட்ட மின் கம்பம் ஒன்று பொதுமக்களின் உயிருக்கு ஊறு விளைவிக்கும் விதமாக நிற்கிறது. கடந்த 1975 ஆம் ஆண்டு காலத்தில் நிலை நிறுத்தப்பட்ட இந்த பழமையான இரும்பினாலான மின் கம்பம் மிகவும் துருப்பிடித்த நிலையில் சிதிலமடைந்து காணப்படுகிறது. இந்த 43 ஆண்டு கால மின் கம்பம் என்று சாய்ந்து விழுந்து பேராபத்தை ஏற்படுத்தி விடுமோ..? […]
கீழை டைரி 5, கீழக்கரையில் சர்வதேச சுவையில் திண்பண்டங்கள் – அதுதான் “ஆமீர் தயாரிப்புகள்”..
கீழக்கரையில் சமீபத்தில் அழகிய முறையில் பேக் செய்யப்பட்டு சந்தைக்கு வந்திருக்கும் பொருள்தான் “AAMIR FOODS”. இந்நிறுவனம் சுவையான முறுக்கு, ரிப்பன் பக்கோடா காரச்சேவ் வகைகள் மற்றும் குளோப் ஜாமுன் வீட்டிலேயே கை பக்குவத்தில் தயாரிக்கப்பட்டு சர்வதே சந்தையில் கிடைக்கும் சுவையுடன் விற்பனைக்கு கீழக்கரை பகுதிக்கு வந்துள்ளது. இது சம்பந்தமாக இதன் உரிமையாரை சந்தித்த பொழுது, இந்நிறுவனத்தின் உரிமையாளர் பல வருடங்கள் சவுதி அரேபியாவில் உலக அளவில் பிரபலமான உணவு பொருட்கள் தயாரிக்கும் நிறுவனத்தில் பணிபுரிந்துள்ளார், அந்த அனுபவத்தின் […]
கீழக்கரை நகராட்சியின் அதிகாரபூர்வ வலைத்தளத்தில், சட்டத்திற்கு புறம்பாக அதிரடியாக திருத்தப்பட்ட நகராட்சி ‘மக்கள் தொகை’ – நீதி மன்றத்தில் வழக்கு தொடுக்க ‘சட்டப் போராளிகள்’ முடிவு
கீழக்கரை நகராட்சியில் 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பினை அடிப்படையாக கொண்டு, வார்டு மறுவரையறை செய்யப்பட்டுள்ளதாக அறிவித்து இருந்தனர். ஆனால் அவசர கோலத்தில் தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டு இருந்த நகராட்சி மறுவரையறை பட்டியலில் குறிப்பிடப்பட்டு இருந்த 2011 ஆம் ஆண்டின் கீழக்கரை மொத்த மக்கள் தொகைக்கும், தகவல் அறியும் உரிமை சட்டம் வாயிலாக கடந்த 2013 ஆம் ஆண்டு பெறப்பட்டிருந்த கீழக்கரை நகராட்சியின் மொத்த மக்கள் தொகைக்கும் ஏறத்தாழ 10000 வித்தியாசம் இருந்தது. ஆனால் தகவல் அறியும் […]
கையொப்பம் இல்லாமல் அனுப்பப்பட்டு வரும் அழைப்பு கடிதம் – கீழக்கரை நகராட்சிக்கு மக்கள் நல பாதுகாப்புக் கழகம் கண்டனம்
கீழக்கரை நகராட்சியில் வார்டு மறுவரையரை குளறுபடிகள் சம்பந்தமாக ஆன்லைன் மூலமும், நேரடியாகவும், பதிவுத் தபால் வழியாகவும் ஆட்சேபனை மனு செய்திருந்த நூற்றுக்கும் மேற்பட்ட மனுதாரர் அனைவருக்கும் கீழக்கரை நகராட்சி ஆணையராக பணியாற்றிய திருமதி வசந்தியிடம் இருந்து மதுரையில் நடைபெறும் கருத்து கேட்பு கூட்டத்திற்கான அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. ஆனால் அந்த அழைப்பு கடிதத்தில் எந்த ஒரு நகராட்சி அதிகாரியின் கையொப்பமும் இல்லாமல் கை விடப்பட்டுள்ளது. இதனால் கையொப்பம் இல்லாத கடிதத்தை வாங்கி வாசித்த மனுதாரர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இது குறித்து […]
விபத்தை தடை செய்ய வேகத்தடை அவசியம் – மக்கள் டீம் கோரிக்கை ..
கீழக்கரையின் நகரம் அதிகப்பட்சமாக 5 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு குறைவாக இருந்தாலும், பல வகையான அழகூட்டும் பேவர் ப்ளாக் சாலை, தார் சாலைகளால் அலங்கரிக்கப்பட்டு வருகிறது. அதே சமயம் அழகை அழிக்கும் வண்ணம் அழிக்க முடியாத அளவுக்கு குப்பை மேடுகளும் நிறைந்த வண்ணம்தான் உள்ளது என்பது கவனிக்கல வேண்டிய விசயம். இத்தனை அழகான சாலைகள் இருந்தாலும், அச்சாலைகளில் கனரக வாகனங்களை விட அதிகமாக ஆட்டோ மற்றும் இரண்டு சக்கர வாகனங்களே அதிகம் செல்கின்றன. இவ்வாகனங்கள் அதிகம் அதிகம் […]
You must be logged in to post a comment.