கீழக்கரை நகராட்சி நிர்வாகமும் சுகாதாரத்துறையும் விழித்துக் கொள்ள வேண்டிய தருணம்..

கீழக்கரை நகர் ரமலான் முழுவதும் பரபரப்பாக இருக்கும் மாதம்.  அதில் மிகவும் முக்கியமாக உணவகங்கள், அதிலும் மாலை நேரத்தில் நோன்பு திறப்பதற்காக விற்கப்படும் உணவு வகைகளான போண்டா, பஜ்ஜி, பஃப் போன்ற வகைகள் அமோகமாக விற்கப்படும். ஆனால் இந்த உணவு வகைகள் அனைத்தும் சுகாதார முறைப்படி விற்கப்படுகிறதா என்பது பெரிய கேள்வி குறியாகும்.  ஏற்கனவே கலப்பட பொருட்கள் மிகுந்து கிடக்கும் இந்த உணவு சந்தையில் ஆரோக்கியிமில்லாமல் சமைக்கப்படும் உணவுகளால் பொதுமக்கள் பல் வேறான நோய்களால் பாதிக்கப்படுகிறார்கள் என்பதே […]

நேற்று கீழை நியூஸ் செய்தி – இன்று தெரு விளக்கு சரி செய்யப்பட்டது- மின்சார வாரியத்துக்கு நன்றி..

கீழக்கரை வடக்குத் தெரு தைக்கா அருகில் முக்கிய பகுதியில் தெரு விளக்கு பல மாதங்களாக எரியவில்லை என்று செய்தி வெளியிடப்பட்டது. அதைத் தொடர்ந்து இன்று மின்சார வாரியத்தால் தெரு விளக்கு சரி செய்யப்பட்டது.  நோன்பு நேரத்தில் இரவு நேரங்களில் வெளிச்சம் இல்லாமல் அவதிப்பட்ட மக்களுக்கு தெரு விளக்கு சரி செய்யப்பட்டது நிம்மதியை தந்துள்ளது. இப்பகுதி மக்கள் மின்சார வாரியத்திற்கும் நன்றிகளை தெரிவித்தனர்.

வருவாய் கோட்டாட்சியர் விசாரணைக்கு ‘சட்டப் போராளிகள்’ஆஜர் – கீழக்கரை தாலுகா அதிகாரிகளை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டுகோள்

கீழக்கரை வட்டாட்சியர் அலுவலகத்தில் பணி நேரத்தில் அதிகாரிகள் தங்கள் இருக்கைகளில் இல்லாததால் தாலுகா அலுவலகத்திற்கு பல்வேறு அரசு நலத் திட்டங்களுக்கு விண்ணப்பிப்பதற்காக வரும் பொதுமக்கள் பெரும் அவதி அடைந்து வருவதை சுட்டிக் காட்டி கடந்த மாதம் மாண்புமிகு தமிழக முதலமைச்சரின் தனிப் பிரிவிற்கு கீழக்கரை ‘சட்ட விழிப்புணர்வு இயக்கம்’ சார்பாக 65 க்கும் மேற்பட்ட சட்டப் போராளிகள் மனு செய்திருந்தனர். அதே போல் கீழக்கரை மக்கள் நல பாதுகாப்புக் கழகம், இந்திய தவ்ஹீத் ஜமாஅத் உள்ளிட்ட சமூக நல அமைப்பினர் […]

விடாது துரத்தும் டெங்கு.. அச்சத்தில் கீழக்கரை மக்கள்.. என்றும் போல் உறக்கத்தில் நகராட்சி…:

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரைக்கும் டெங்கு காய்ச்சலுக்கும் தொடரும் பந்தம் போல் தொடர்ச்சியாக பொது மக்கள் டெங்கு காய்ச்சலால் பாதித்த வண்ணம் உள்ளனர். இதற்கு முக்கிய கீழக்கரை நகரில் ஆங்காங்கே மழை போல் உருவெடுத்தது கிடக்கும் குப்பை கிடங்குகள்.  இது சம்பந்தமாக 6 மாதங்களுக்கு முன்பே SDPI, மக்கள் டீம், சட்ட போராளிகள், விடுதலை சிறுத்தை, நகர் நல இயக்கம், நாம் தமிழர் மற்றும் இன்னும் பல சமூக அமைப்புகளும் புகார் மனுக்களை அளித்தனர்.  அச்சமயத்தில் மாவட்ட ஆட்சி […]

அமைப்புகளும், மனுக்களும் கூடினாலும் பிரச்சினைகளுக்கு கீழக்கரையில் தீர்வில்லை.. கீழக்கரை ஊர்மக்கள் / கூட்டமைப்பு சார்பாக மனு…

கீழக்கரை நகராட்சியில் நடைபெற்று வரும்  நிர்வாகச் சீர்கேடுகள் என்பது  சீர் செய்வது கடினம் என்ற அளவுக்கு புற்று நோய் போல் முற்றி கொண்டேதான் வருகிறது.  கீழக்கரையில் உள்ள அரசியல் கட்சிகள், சமூக ஆர்வலர்கள் மற்றும் அவர்கள் சார்ந்த அமைப்புகள் மனுக்கள் கொடுத்தாலும் செவிடன் காதில் சங்கு ஊதிய கதையாகவே உள்ளது. கடந்த 31.01.2018 அன்று கீழக்கரை நகராட்சி ஆணையாளராக இருந்த வசந்தி குறுகிய காலத்திலேயே பல அதிருப்பதிகளுடன்  பணியிடம் மாறுதலுக்கு பின்  பரமக்குடி ஆணையாளர் நாராயணன்  கீழக்கரை […]

கீழக்கரையில் நாளை (26-04-2018) மின் வெட்டு..

கீழக்கரையில் நாளை (26/04/2018-வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்பை முன்னிட்டு காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை மின் வெட்டு இருக்கும். இச்சமயத்தில் கீழக்கரை நகர், மாயாகுளம் கல்லூரி பகுதி, மோர்குளம், காஞ்சிரங்குடி, உத்திரகோசமங்கை இன்னும் இதன் எல்லைக்குள் உள்ள பகுதிகளில் மின்சார வினியோகம் இருக்காது.  

கீழக்கரை ‘ஸ்பைஸி ஹலால்’ நிறுவனத்தின் சுவைமிகு தயாரிப்புகள் – சமைக்க வேண்டாம்.. அப்படியே சாப்பிடலாம் (கீழை டைரி -12 – ஒரு வீடியோ தொகுப்புடன்..)

கீழக்கரை புதுத்தெருவை சேர்ந்த சகோதரர்கள் முகம்மது சஹீது, சித்திக் இபுறாகீம், ஃபவுசுல் அலியுர் ரஹ்மான் ஒன்றிணைந்து ‘ஸ்பைஸி ஹலால்’ என்கிற பெயரில் துணை உணவு தயாரிப்பு நிறுவனத்தினை துவங்கி சிறப்பாக செய்து வருகின்றனர். உள்ளூரில் தரமான மூலப் பொருள்களுடன், கை தேர்ந்த சமையல் கலைஞர்களின் கண்காணிப்பில், பக்குவமாக தயாரிக்கப்படும் மாசிப் பொரியல், இறால் பொரியல், நெத்திலி பொரியல், சென்னா கூனி பொரியல் உள்ளிட்ட அசத்தும் பொரியல் வகையறாக்களை வாங்கி ருசிக்கும் ‘ஸ்பைசி ஹலால்’ பிரியர்கள், இந்த பொரியல் வகைகள் தங்கள் […]

கீழக்கரையில் அஞ்சாமல் நடக்கும் கஞ்சா வியாபாரத்தால் சீரழியும் இளைஞர்கள் – காவல்துறை கடும் நடவடிக்கை எடுக்க சமூக நல அமைப்பினர் மனு

கீழக்கரை நகரில் பள்ளி கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களை குறி வைத்து நடக்கும் கஞ்சா வியாபாரத்தால் இளைய சமுதாயம் போதையில் மயங்கி சின்னாபின்னமாகி சீரழிந்து வருகின்றனர். அந்தி மயங்கும் வேளைகளில் தெருவுக்கு தெரு இருள் சூழ்ந்த பகுதிகளில் உலவும் கஞ்சா வியாபாரிகளிடம் தங்கள் பொன்னான எதிர்காலத்தை தொலைத்து வருகின்றனர். இதனால் இன்று வீட்டுக்கு வீடு கஞ்சா அடிமைகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. கீழக்கரை நகரில் படு ஜோராக எவ்வித அச்சமும் இல்லாமல் தொழில் […]

மூன்று நாள் தொடர் மழையில் ஈரமாகிய நிலங்கள்.. நோயின் பயத்தில் மக்கள்..

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் கடந்த மூன்று தினங்களாக கோடை காலத்தை வரவேற்கும் விதமாக அடை மழை பெய்தது.  இதனால் மக்கள் மனதும், நிலங்களும் குளிர்ச்சி ஆனது. ஆனால் செயல்பாடு இல்லாமல் இருக்கும் நகராட்சியை நினைத்து மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.  அதிகாரிகள் இல்லாத நிர்வாகம், சீர் இல்லாத நிர்வாகமாகவே மாறியுள்ளது. மழை பெய்து மூன்று நாட்கள் ஆகியும் சாலைகளில் தேங்கி கிடக்கும் கழிவு நீரை சீராக்க எவ்விதமான முயற்சியும் எடுக்கவில்லை.  டெங்கு காய்ச்சல் போன்ற நோய்கள் ஏற்கனவே […]

கீழக்கரை தாலுகா அலுவலகத்தில் ‘ஓ.பி’ அடிக்கும் அதிகாரிகளை கண்காணிக்க பயோ மெட்ரிக் வருகை பதிவு, CCTV கேமரா அமைக்க சட்டப் போராளிகள் முதல்வருக்கு மனு

கீழக்கரை நகராட்சி அலுவலகத்தில் செயல்பட்டு வரும் கீழக்கரை தாலுகா அலுவலகத்திற்கு நாளொன்றுக்கு நூற்றுக்கணக்கான பொதுமக்கள் பல்வேறு அரசு நலத் திட்ட உதவிகளுக்கு விண்ணப்பிப்பதற்காகவும், திருமண உதவி சான்றிதழ், முதியோர் உதவி தொகை, வாரிசு சான்றிதழ் பெறுவதற்காகவும் வந்து செல்கின்றனர். கீழக்கரை தாலுகா அலுவலகத்திற்கு கீழக்கரை பகுதி பொதுமக்கள் மட்டுமல்லாது ஆலங்குளம், எக்கக்குடி, ஏர்வாடி, இதம்பாடல், களிமண்குண்டு, காஞ்சிரங்குடி, மல்லல், மாணிக்கனேரி, நல்லிருக்கை, பள்ள மோர்குளம், பனைக்குளம், பெரியப்பட்டினம், ரெகுநாதபுரம், திருப்புல்லாணி, வேளானூர் உள்ளிட்ட 25 கிராமவாசிகளும், பாமர […]

கீழக்கரையில் டெங்கு காய்ச்சலை ஒழிக்க கோரி பொதுநல அமைப்புகள் சார்பாக மாவட்ட ஆட்சியரிடம் மனு

கீழக்கரை நகரின் பல வார்டு பகுதிகளில் டெங்கு காய்ச்சலால் பலர் பாதிக்கப்பட்டு தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பள்ளிகூடங்களில் பொதுத் தேர்வுகள் நடைபெற்று வரும் சூழலில் பள்ளி மாணவர்கள் பலர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருப்பது பெற்றோர்கள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் கீழக்கரை நகரில் நிலவும் சுகாதரக்கேட்டினை சீர் செய்து டெங்கு காய்ச்சலை ஒழிப்பது சம்பந்தமாக உள்ளூரில் இருக்கும் பொதுநல அமைப்புகள், சமூக நல சங்கங்கள் மாவட்ட ஆட்சியரின் மக்கள் குறை […]

கீழக்கரை மெடிக்கல் மிஷன் மருத்துவமனையில் புதிய ‘பல் மருத்துவப் பிரிவு’ துவக்கம் – ( பெண் பல் மருத்துவர்களின் பிரத்யேக பேட்டி) – கீழை டைரி 11

கீழக்கரை கிழக்குத் தெருவில் இயங்கி வரும் கீழக்கரை மெடிக்கல் மிஷன் மருத்துவமனையில் புதிய பல் மருத்துவப் பிரிவு கடந்த சில மாதங்களுக்கு முன் நவீன வசதிகளுடன் துவங்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. 60,000 க்கும் மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட கீழக்கரை நகரில் பல் மருத்துவம் என்பது என்பது அவசியமான ஒன்றாக இருக்கிறது. கீழக்கரை நகரில் இருந்து பல் மருத்துவம் பயின்ற கிழக்குத் தெருவை சேர்ந்த டாக்டர்.ஹஃப்ஸா பாத்திமா, டாக்டர்.சில்வியா ஜெயத்துடன் இணைந்து கீழக்கரை மெடிக்கல் மிஷன் மருத்துவமனையின் […]

கீழக்கரையில் குரங்குகளை பிடிக்க நான்கு இடங்களில் கூண்டுகள் வைக்கப்பட்டது

கீழக்கரை நகராட்சி பகுதிகளில் குரங்குகள் அட்டூழியம் தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில் மக்கள் நல பாதுகாப்புக் கழகம், சட்டப் போராளிகள் இயக்கத்தினர் மாவட்ட ஆட்சியரின் மக்கள் குறை தீர்க்கும் நாளில் குரங்குகள் பிரச்சனைக்கு தீர்வு வேண்டி மனு செய்திருந்தனர். அதன் அடிப்படையில் கீழக்கரை வனச் சரக ஆய்வாளர் சிக்கந்தர் பாட்சா குரங்குகளை பிடிக்க உரிய நடவடிக்கை எடுக்கும் பொருட்டு பொதுமக்களுக்கு இடையூறு செய்து வரும் குரங்குகளை பிடித்து அதன் வாழ்வாதார பகுதிகளில் விட பரமக்குடியில் இருந்து பிரத்யேக […]

கீழக்கரையில் ‘டெங்கு கொசு’ உற்பத்தியாகும் பகுதி கண்டுபிடிப்பு – நடவடிக்கை எடுக்குமா நகராட்சி..?

கீழக்கரையில் மீண்டும் டெங்கு காய்ச்சல் தலையெடுக்க ஆரம்பித்துள்ளது. 3 வது வார்டு புதுக் கிழக்குத் தெரு மற்றும் 8 வது வார்டு பழைய குத்பா பள்ளி தெரு உள்ளிட்ட பகுதிகளில் டெங்கு காய்ச்சலால் பல குழந்தைகள் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் இந்த டெங்கு கொசு எங்கு உற்பத்தியாகிறது என்பது புரியாத புதிராகவே இருந்து வந்தது. தற்போது இந்த டெங்கு கொசுவின் உற்பத்தி தொழிற்சாலை கீழக்கரை நகரின் மைய பகுதியான லெப்பை டீக்கடை அருகாமையில் […]

மக்களை ஏமாற்றும் கீழக்கரை நகராட்சி – வடிவேலு கிணற்றை காணோம் பாணியில் ஊரணியை காணோம்??…

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் அனைத்து துறை அரசு அலுவலகங்களான நகராட்சி, தாலுகா அலுவலகம், காவல் நிலையம், அரசு மருத்துவமனை, புதிய பேருந்து நிலையம், பிஎஸ்என்எல் அலுவலகம் போன்றவைகளை கீழக்கரை சார்ந்த இஸ்லாமிய பெருமக்கள் கீழக்கரை பகுதியை சார்ந்த பொதுமக்களுக்கு பயன்பட வேண்டும் என்ற உயரிய நோக்கில் நிலத்தை இலவசமாக கொடுத்தாலும், அரசு அதிகாரிகள் சரியாக செயல்படுவதில்லை. நேற்று தினந்தந்தி நாளிதழில் நகராட்சி சார்பாக நடைபெற்ற பணிகளை பட்டியலிட்டு விளம்பரம் செய்துள்ளனர். அதில் கீழக்கரையில் உள்ள அனைத்து ஊரணிகளும் […]

கீழக்கரை நகராட்சியில் நாய்களை பிடிக்கும் பணி துவங்கியது..

கீழக்கரை நகராட்சியில் கடந்த சில வருடங்களாக நாய்களின் பெருக்கம் அதிகரித்துள்ளது. மேலத் தெரு, சாலை தெரு, புதுக் கிழக்குத் தெரு, ரஹ்மானியா நகர் உள்ளிட்ட தெருக்களில் வசிப்போர் இரவு நேரங்களில் நாய்களின் அட்டகாசத்தால் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். அதே போல் அதிகாலை தொழுகைக்காக பள்ளிவாசல் செல்லும் இஸ்லாமிய மக்களும் நாய்களின் தொந்தரவால் அச்சமடைந்து உள்ளனர். இந்நிலையில் கடந்த இரண்டு வாரத்தில் மட்டும் கீழக்கரை நகரில் ஐந்திற்கும் மேற்பட்ட பள்ளி சிறுவர்களையும் மூத்த […]

கீழக்கரையில் கவிழ்ந்து கிடக்கும் ‘தூய்மை இந்தியா’ – சீர்படுத்தி ‘சிறுவர் பூங்கா’ அமைக்க சட்டப் போராளிகள் கோரிக்கை

கீழக்கரை வடக்குத் தெரு மைய பகுதியில் சில வருடங்களுக்கு முன்பு வரை தனியாரால் பராமரிக்ப்பட்டு வந்த ட்ரக் கொட்டகை நிலமானது ‘அரசுக்கு சொந்தமான நிலம்’ என்று வந்த நீதிமன்ற தீர்ப்பையொட்டி கீழக்கரை நகராட்சியின் பராமரிப்புக்கு கீழ் சென்றது. தனியார் வசம் இருந்தவரை வேலி போட்டு அடைக்கப்பட்டு இருந்த இடம், நகராட்சியின் வசம் வந்த உடன் குப்பை கொட்டும் கூடாரமாகவே மாறிப்போனது. இதனால் இந்த பகுதி மக்கள் டெங்கு. சிக்கன் குன்யா, மலேரியா போன்ற வியாதிகளினால் தொடர்ச்சியாக பாதிப்புக்கு […]

கீழக்கரை மின்சாரவாரியத்திற்கு திமுக சார்பாக கோரிக்கை மனு…

கீழக்கரையில் பல இடங்களில் Transformer முதல் மின் கம்பம் வரை மிகவும் சிதிலம் அடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது. அதிலும் முக்கியமாக சொக்கநாதர் கோவில் அருகே உள்ள டிரான்ஸ்பார்மர், 500 ப்ளாட் பகுதி, அல் அக்‌ஷா நகர், புது கிழக்கு தெரு, 14 & 15 வார்டு பகுதிகளில் மாற்ற கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. அதே போல் வருகின்ற கோடை காலத்தை கருத்தில் கொண்டு பராமரிப்பு பணிகளையும் பொதுமக்களுக்கு பாதிப்பு இல்லாத வகையில் மேற்கொள்ளுமாறு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இக்கோரிக்கையை […]

கீழக்கரையில் குரங்குகளை பிடிக்க கூண்டுகள் தயார் – வனத் துறையினருக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தர ‘சட்டப் போராளிகள்’ வேண்டுகோள்

கீழக்கரையில் சமீப காலமாக காட்டுக் குரங்குகளின் அட்டகாசம் அதிகரித்த வண்ணம் உள்ளது. கீழக்கரை நகரில் மரங்கள் அடர்ந்த பகுதி இல்லாததால் கூட்டமாக திரியும் இந்த குரங்குகள் கூட்டம் நெருக்கமாக கட்டப்பட்டிருக்கும் வீடுகளுக்குள் புகுந்து அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட சமையல் பொருள்களை சூறையாடி வருகிறது. மேலும் கைக் குழந்தைகளும், பள்ளி செல்லும் சிறுவர்களும் தாவித் திரியும் இந்த குரங்குகளை கண்டு அஞ்சி நடுங்கி வருகின்றனர். இதனால் பொதுமக்களுக்கு இடையூராக இருக்கும் காட்டு குரங்குக்களை அகற்ற மாவட்ட ஆட்சியர் […]

ஆழ்ந்த நித்திரையில் கீழக்கரை நகராட்சி.. மீண்டும் தலை தூக்கும் வெறி நாய் தொல்லைகள்…

கீழக்கரையில் வெறி நாய் தொல்லை என்பது தீராத பிரச்சினையாகவே இருந்து வருகிறது. கடந்த வருடம் ஒரு சிறுவனின் உயிர் பலியாகியது, அது போல் ஒரு இளம் பெண்ணும் வெறி நாயினால் பெரும் காயத்திற்கு உள்ளானர். அதைத் தொடர்ந்து சமூக ஆர்வலர்களின் தொடர் அழுத்தத்தால் வெறி நாய்களை பிடிக்க தனியார் தன்னார்வ நிறுவனம் மூலம் ஏற்பாடுகள் செய்யப்பட்டது. அதை சரிவர செயல்படுத்தாத காரணத்தால் மீண்டும் வெறி நாய்களின் அட்டகாசம் தலை தூக்கியுள்ளது. இன்று (22-03-2018) கீழக்கரை புதுத் தெருவில் […]

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!