தரமில்லாமல் கட்டப்பட்டு தேய்ந்து போன ஜெட்டி பாலம் – தெளிவாக தெரியும் ஊழல் பெருச்சாளிகளின் கால் தடம்

கீழக்கரையில் மீன் வள துறையின் மூலமாக கடந்த 2006 ஆம் ஆண்டு ரூ5 கோடியே 31லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு புதிய ஜெட்டி பாலம் கட்டும் பணி துவங்கியது. ஆறு ஆண்டுகள் நடைபெற்ற இந்த புதிய பாலத்தின் கட்டுமானப் பணி 2011 ஆம் ஆண்டு துவக்கத்தில் முழுமையாக நிறைவடைந்து. இந்த பாலத்தின் கட்டுமான பணிகள் நடைபெற்று கொண்டிருக்கும் போதே, சமூக ஆர்வலர்கள் பலரும், பாலத்தின் கட்டுமான பணிகள் தரமற்ற முறையில் நடைபெறுவதாக தொடர்ந்து குற்றம் சாட்டினார். ஆனால் அப்போதைக்கு […]

விடிவு காலம் பிறந்தது வடக்குத் தெரு காவிரி குடி நீர் ஜங்க்சன் மூடிக்கு..

கீழக்கரை வடக்குத் தெருவில் சேதமடைந்து கிடந்த ஜங்கசன் மூடிக்கொண்டு இன்று விடிவு காலம் பிறந்தது கீழக்கரை வடக்குத் தெரு மணல்மேடு பகுதியில் கடந்த மாதம் மணல் ஏற்றிச் சென்ற லாரி ஒன்று காவிரி குடிநீர் செல்லும் ஜங்க்சன் மூடி மீது ஏறி சேதமடைந்தது. இதனால் அவ்வழியில் செல்லும் வாகனங்கள் விபத்து ஏற்படும் வகையில் பள்ளம் ஏற்பட்டு இருந்தது. இது சம்பந்தமாக பொதுமக்களும் நகராட்சி நிர்வாகத்திடம் புகார் செய்திருந்தார்கள். நம் கீழைநியூஸ் இணையதளத்திலும் செய்தி வெளியிட்டிருந்தோம். கீழக்கரை மணல் […]

15000 க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு நகராட்சி சார்பாக கொசு மருந்து புகை அடிக்கும் ‘தனி ஒருவன்’ – திருந்துமா நகராட்சி..? மாறுமா மக்களின் துயர காட்சி..??

கீழக்கரை நகரில் இருக்கும் மொத்தம் 21 வார்டுகளில் 15 ஆயிரத்திற்கும் அதிகமான வீடுகள் உள்ளன. 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். 35 க்கும் மேற்பட்ட தெருக்களை கொண்ட நான்கு சதுர கிலோ மீட்டர் பரப்புள்ள கீழக்கரை நகர் முழுமைக்கும் கீழக்கரை நகராட்சி சார்பாக கணேசன் என்கிற ஒரே ஒரு ஒப்பந்த பணியாளர் மட்டும் தனி ஒருவனாக கொசு மருந்து புகை அடித்து சாதனை புரிந்து வருகிறார். இதனால் டெங்கு மற்றும் மலேரியா கொசுக்களின் அதிரடி அட்டகாசம் நகர் […]

இராமநாதபுரம் RTO அலுவலகத்தில் தாகத்திற்கு தண்ணீர் இல்லாமல் தவிக்கும் பொதுமக்கள் – குடில் இருக்கிறது.. ஆனால் குடிநீர் இல்லை..?

இராமநாதபுரம் வட்டார போக்குவரத்து துறை RTO அலுவலகத்திற்கு, தினமும் ஓட்டுநர் உரிமம் விண்ணப்பிக்கவும், உரிமங்களை புதுப்பிக்கவும், வாகனங்களுக்கான ஆண்டு தணிக்கை FC வாங்கவும், அனைத்து போக்குவரத்து சம்பந்தமான சேவைகளை பெறவும், வண்டிகள் மீதான அனைத்து வரிகளையும் கட்டணங்களையும் செலுத்தவும், சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் நிவாரணம் பெறுவதற்காகவும் என நூற்றுக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். தற்போது இராமநாதபுரம் மாவட்டத்தில் வெயில் மிக கடுமையாக வாட்ட துவங்கி விட்டது. இந்நிலையில் வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு வரும் பொதுக்கள் தாகத்திற்கு தண்ணீர் கிடைக்காமல் […]

‘நான் தான் டெங்கு கொசு பேசுகிறேன்..’ – கீழக்கரையில் SDPI கட்சியினர் நூதன முறையில் விழிப்புணர்வு வால் போஸ்டர்

காய்ச்சல்களின் தலை நகரமாக உருவெடுத்திருக்கும் கீழை மாநகரில் தற்போது கதாநாயகனாக இருக்கும் ‘டெங்கு கொசு’ நேரடியாக நம்மிடம் வந்து பேசுவது போல கீழக்கரை நகர் எஸ்.டி.பி.ஐ கட்சியினர் நகர் முழுவதும் நூதன முறையில் வால் போஸ்டர் ஒட்டியுள்ளனர். இந்த சுவரொட்டியினை பொதுமக்கள் ஆர்வமுடன் வாசித்து டெங்கு கொசு குறித்த விழிப்புணர்வினை பெற்று வருகின்றனர்.

கீழக்கரை மேலத் தெருவில் மீண்டும் சுடர் விடும் ஹைமாஸ் விளக்குகள் – நடவடிக்கை எடுத்த நகராட்சிக்கு நன்றி

கீழக்கரை நகரில் நகராட்சி நிர்வாகத்தினரால் ஏர்வாடி விலக்கு, VAO ஆபீஸ் அருகாமை, தட்டாந்தோப்பு, புதிய பேருந்து நிலையம், பழைய மீன் மார்க்கெட், கட்டாலிம்சா பங்களா, மேலத் தெரு பள்ளிவாசல், கிழக்குத் தெரு ஆட்டோ ஸ்டான்ட், கஸ்டம்ஸ் சாலை உள்ளிட்ட மொத்தம் 9 இடங்களில் ஹைமாஸ் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது. ஆனால் அவை சரியாக பல இடங்களில் எரியாததால் பொதுமக்கள் இரவு நேரங்களில் நடமாட அச்சமடைந்து வந்தனர். இந்நிலையில் கீழக்கரை மக்கள் நல பாதுகாப்பு கழகம், சட்டப் போராளிகள் தளம் […]

கீழக்கரையில் தாலுகா மருத்துவமனை மற்றும் நகராட்சி நிர்வாகத்தினர் செயலிழந்ததாக குற்றச்சாட்டு – ‘நாம் தமிழர்’ கட்சியினர் நகர் முழுவதும் சுவரொட்டி

கீழக்கரை தாலுகாவில் அரசு பொது மருத்துவமனை மற்றும் நகராட்சி நிர்வாகத்தினர் செயலிழந்து இருப்பதாக குற்றம் சாட்டி கீழக்கரை நகர் நாம் தமிழர் கட்சியினர் நகர் முழுவதும் சுவரொட்டி ஒட்டியுள்ளனர். அதில் அரசு பொது மருத்துவமனையில் மருத்துவர்கள் பற்றாக்குறை நிலவுவதால் செவிலியர்களே மருத்துவம் பார்க்கும் அவல நிலை உள்ளதாகவும், சுகாதாரமற்ற நிலையில் மருத்துவமனை இருப்பதாகவும் பல்வேறு குற்றச்சாட்டுகளை தெரிவித்துள்ளனர். அதே போல் கீழக்கரை நகராட்சி நிர்வாகத்தில் பொதுமக்கள் தாங்கள் குறைகளை நிவர்த்தி செய்ய கோரி, மனுக்கள் வாயிலாக பல்வேறு பிரச்சனைகள் சம்பந்தமாக […]

துபாயில் வெளிநாட்டு பணியாளர்கள் சுகாதாரத்தில் அக்கறை காட்டாத நிறுவனங்களுக்கு ‘2 இலட்சம் திர்ஹம்’ அபராதம் – விரைவில் விடிவு காலம் பிறக்கிறது

வளைகுடா நாடுகளுள் யு.ஏ.ஈ என்பது ஷார்ஜா, அஜ்மான், அபுதாபி, துபாய், ராஸ் அல் கைமா, புஜைரா, உம்முல் கைம், போன்ற 7 நகரங்கள் இணைந்த ஒரு சிறிய நாடு. இங்கு ஏனைய வளைகுடா நாடுகளை போல எண்ணெய் வளம் பெரிய அளவில் இல்லையென்றாலும், வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்கு துபாய் என்ற நகரம் ஒன்றே போதும். அந்த அளவிற்கு மேற்கத்திய கலாச்சாரங்களை, வேறெந்த அரபு நாடுகளிலும் இல்லாத அளவிற்கு புகுத்தி அந்நிய முதலீட்டை பெருமளவு பெற்றுள்ளனர். அதே போல […]

கீழக்கரை முஸ்லீம் பஜாரில் போக்குவரத்துக்கு இடையூறாக ‘திடீர்’ ஆட்டோ ஸ்டாண்ட் – சமூக ஆர்வலர்கள் காவல் துறையில் புகார்

கீழக்கரை முஸ்லீம் பஜார் லெப்பை டீக் கடை அருகாமையில் தற்போது திடீரென பேங்க் ஆட்டோ ஓட்டுநர் நல சங்கம்  என அறிவிப்பு பலகை வைக்கப்பட்டு, இந்த பகுதியில் 10 க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் நிறுத்தப்பட்டு வருகிறது. ஏற்கனவே பல்வேறு கடுமையான போக்குவரத்து நெரிசலில் சிக்கி இருக்கும் இந்த வங்கி சாலையில் தற்போது ஆட்டோக்களும் நிறுத்தப்பட்டிருப்பது மேலும் பல சிக்கல்களை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து சமூக ஆர்வலர்கள் தமுமுக நகர் தலைவர் சிராஜுதீன், கீழக்கரை நகர் நல இயக்கத்தின் […]

கீழக்கரை DSP அலுவலகம் அருகே வேகத் தடை அமைக்க கோரி ‘கீழக்கரை நகர் நல இயக்கம்’ மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு

கீழக்கரையில் இருந்து ஏர்வாடி செல்லும் கிழக்கு கடற்கரை சாலையில் கீழக்கரை DSP அலுவலகம் அருகே இருக்கும் நான்கு வழி சாலை சந்திப்பில் நிரந்தர வேகத் தடை ஏதும் அமைப்படாமல் இருப்பதால் விபத்துக்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. இந்த சாலையில் கடந்த காலங்களில் பல விபத்துக்கள் நிகழ்ந்து உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது. இது குறித்து கீழக்கரை நகர் நல இயக்கத்தின் செயலாளர் சேகு பஷீர் அஹமது கூறுகையில் ”இந்த சாலை போக்குவரத்து மிகுந்த பிரதான சாலையாக இருக்கிறது. 3000 க்கும் […]

கீழக்கரையில் டெங்கு காய்ச்சல் எதிரொலி – சுகாதார துறையினர் அதிரடி ஆய்வு – பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டுகோள்

கீழக்கரை நகரில் தற்போது டெங்கு காய்ச்சல் தீவிரமடைந்துள்ளது. நடுத் தெரு 12 வது வார்டு பகுதியில் பலர் டெங்குவால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் கீழக்கரை நடுத் தெரு பகுதியில் இன்று 07.03.17 சுகாதார அதிகாரி செல்லக்கண்ணு மற்றும் மாவட்ட இளநிலை பூச்சியியல் வல்லுநர் ரஹ்மான் தலைமையில், 10 க்கும் மேற்பட்ட சுகாதாரத்துறையினர் வீடு வீடாக சென்று ஆய்வு செய்து குடும்ப தலைவிகளுக்கு நல்லறிவுரை வழங்கி வருகின்றனர். ஆனால் பல வீடுகள் பூட்டியே […]

கீழக்கரை மணல் மேடு அருகே மூடியில்லாத அபாய குழி – வாகன ஓட்டிகள் உஷார்..

கீழக்கரை வடக்குத் தெரு கொந்தக்கருணை அப்பா மணல் மேடு அருகாமையில் கடந்த மாதம் மணல் ஏற்றி வந்த லாரியொன்று எதிர்பாராத விதமாக காவிரி கூட்டுக் குடிநீர் ஜங்க்சன் மூடியை உடைத்து கொண்டு பின் சக்கர டயர் உள்ளிறங்கியது. இந்த விபத்தில் உடைந்த தரமற்ற மூடிக்கு பதிலாக இன்று வரை புதிய தரமான மூடி போடப்படாமல் உள்ளது. இதனால் இந்த பகுதியில் நடமாடும் சிறுவர்களும், இந்த பகுதியை கடந்து செல்லும் வாகன ஓட்டிகளும் நிலை தடுமாறி விபத்தில் சிக்கும் […]

வள்ளல் சீதக்காதி சாலையில் வேகத் தடை அமைத்திடுக – இஸ்லாமிய கல்வி சங்கம் ‘கையெழுத்து இயக்கம்’ துவங்கியது.

கீழக்கரை வள்ளல் சீதக்காதி சாலை நெய்னா மாட்டு இறைச்சிக்கடை அருகே நான்கு வழி சாலையில் ஏற்கனவே வேகத் தடை அமைக்கப்பட்டு இருந்தது. ஆனால் தற்போது நெடுஞ்சாலை துறையினரால் புதிய சாலை அமைக்கப்பட்ட போது, இந்த இடத்தில வேகத் தடை அமைக்காமல் விடுபட்டுள்ளது. இது சம்பந்தமாக இஸ்லாமிய கல்வி சங்கம், மக்கள் நல பாதுகாப்பு கழகம் பல்வேறு மனுக்களை மாவட்ட நிர்வாகத்திற்கும், நெடுஞ்சாலை துறையினருக்கும் கடந்த மாதம் அனுப்பியுள்ளனர். ஆனால் இது நாள் வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் […]

கீழக்கரை நடுத் தெருவில் வழிந்தோடும் சாக்கடை நதி – பொதுமக்கள் நிலை தடுமாறி நீந்தி செல்லும் அவலம்

கீழக்கரை 18 வது வார்டு நடுத் தெரு ஜும்மா பள்ளிவாசல் பின் புற பகுதியில் இன்று 05.03.17 அதிகாலை முதல் சாக்கடை நதி பெருக்கெடுக்க துவங்கியுள்ளது. கமகமக்கும் வாசனையோடு வழிந்தோடும் இந்த சாக்கடை நதியினை கடந்து செல்லும் முதியவர்களும், பள்ளிக் குழந்தைகளும், பள்ளிவாசலுக்கு தொழுகைக்கு செல்பவர்களும், வாகன ஓட்டிகளும் பெரும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். இந்த பகுதியில் அடிக்கடி இது போன்று தொடரும் சாக்கடை நீரோட்டத்தால் பகுதி மக்கள் பெரும் மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளனர். ஏற்கனவே மலேரியா, […]

கீழக்கரை சாலைகளில் ‘ஹாயாக’ உலா வரும் கால்நடைகளால் விபத்து ஏற்படும் அபாயம்

கீழக்கரை நகரில் வள்ளல் சீதக்காதி சாலை, செக்கடி மார்க்கெட் பகுதி, முஸ்லீம் பஜார் லெப்பை ஹோட்டல் பகுதி, புதிய பேருந்து நிலையம், சேரான் தெரு, நடுத் தெரு உள்ளிட்ட பகுதிகளில் சர்வ சுதந்திரமாக மாடுகள் ‘ஹாயாக’ சுற்றித் திரிகின்றன. கீழக்கரை சாலைகளில் மக்களோடு மக்களாக மாடுகளும் வலம் வருகிறது. இவைகள் கீழக்கரை குப்பை மேடுகளில் கிடைக்கும் கழிவு பொருள்களையும், பிளாஸ்டிக் பைகளையும், சாலைகளில் உள்ள ஓட்டல்கள், டீக்கடைகள் முன் போடும் இலைகளையும், தின்றுவிட்டு சாலைகளில் படுத்து கிடக்கின்றன. […]

தமிழக மீன் வளத் துறையினரை கண்டித்து 5 மாவட்ட நாட்டுப்படகு மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம் துவங்கினர்

தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள இரட்டைமடி மற்றும் சுருக்கு மடி, அதிக எச்.பி கொண்ட விசைத் திறன் கொண்ட படகுகள் ஆகியவற்றை தடுக்க தவறிய மீன் வளத்துறையைக் கண்டித்து ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சை, நாகை, திருவாரூர் ஆகிய 5 மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் ஒரு லட்சம் நாட்டுப்படகு மீனவர்கள் இன்று 03.03.17 வெள்ளிக்கிழமையிலிருந்து கால வரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை துவங்கியுள்ளனர். இவர்களுக்கு ஆதரவாக தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்ட நாட்டுப்படகு மீனவர்கள் இன்று வெள்ளிக்கிழமை ஒரு நாள் மட்டும் […]

நீச்சல் குளத்தை துரித நடவடிக்கை எடுத்து துப்புரவு செய்த நகராட்சி நண்பர்களுக்கு நன்றி – நிரந்தர தீர்வு ஏற்படுத்த வேண்டுகோள்

சின்னக்கடை தெருவில் கீழக்கரை நகராட்சி சார்பாக நீச்சல் குளம் என்கிற தலைப்பில் சற்று முன் நம் கீழை நியூஸ் வலை தளத்தில் செய்தி வெளியிட்டு இருந்தோம். இது குறித்து பல்வேறு சமூக வலைத்தளங்களிலும், சமூக ஆர்வலர்கள் பலர், இது சம்பந்தமான புகைப்படங்களை பகிர்ந்திருந்தனர். உடனடியாக கீழக்கரை நகராட்சி ஆணையாளர் சந்திரசேகரின் அறிவுறுத்தலின் பேரில் துரித முயற்சி எடுத்த சுகாதார மேற்பார்வையாளர் ஹாஜா உள்ளிட்ட நண்பர்களுக்கு கீழை நியூஸ் வலை தளம் சார்பாக நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம். அதே […]

சின்னக்கடை தெருவில் அபாய மின் கம்பம் அகற்றப்பட்டது – தொடர் முயற்சி எடுத்த கீழக்கரை சட்டப் போராளிகளுக்கு பகுதி மக்கள் பாராட்டு

கீழக்கரை சின்னக்கடை தெருவில் ஒரு வீட்டின் மீது சாய்ந்தவாறு முறித்து விழும் நிலையில் அபாய மின் கம்பம் ஒன்று ஓராண்டு காலமாக பொதுமக்களை அச்சுறுத்தி வந்தது. அதே போல நகரின் பல்வேறு பகுதிகளிலும் இது போன்ற அபாய கம்பங்கள் காணப்படுகிறது. இது குறித்து மக்கள் களத்தின் அங்கமான சட்டப் போராளிகள் தளம் வாயிலாகவும், மக்கள் நல பாதுகாப்பு கழகம் மூலமாகவும் 70 க்கும் மேற்பட்ட மனுக்கள் முதலமைச்சரின் தனிப் பிரிவிற்கும், மாவட்ட நிர்வாகத்தினருக்கும், மின்சார வாரியத்தினருக்கும் தொடர்ச்சியாக […]

சின்னக்கடை தெருவில் நகராட்சி சார்பாக ‘நீச்சல் குளம்’ – சாலை அமைக்காததால் சிறு மழைக்கே பொதுமக்கள் சிரமம்

கீழக்கரை 12 வது வார்டு சின்னக்கடை தெரு நெய்னா முஹம்மது தண்டையல் தெருவிலிருந்து நடுத் தெரு செல்லும் சாலை போடும் பணிக்காக கடந்த நகர் மன்றத்தால் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஒப்பந்த பணி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் பணிகள் ஏதும் இன்று வரை நடைபெறாமல் நிலுவையில் உள்ளது. இதனால் சிறு சாரல் மழை பெய்தாலும் கூட தண்ணீர் நிரம்பி நீச்சல் குளமாய் காட்சியளிக்கிறது. இதனால் இந்த சாலையை கடந்து செல்ல முடியாமல் முதியவர்களும், பள்ளி சிறுவர்களும், வாகன ஓட்டிகளும், பாதசாரிகளும் […]

இராமநாதபுரம் மாவட்டத்தில் ஹைட்ரோ கார்பன் எரிவாயு கிணறுகள் தோண்டும் திட்டத்தைக் கைவிடக் கோரி ‘பேராசிரியர் ஜவாஹிருல்லா’ அறிக்கை

இராமநாதபுரம் மாவட்டத்தில் மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் ஹைட்ரோ கார்பன் எரிவாயு கிணறுகள் தோண்டும் திட்டம் கைவிடப்பட வேண்டும் என்று மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர். பேராசிரியர் ஜவாஹிருல்லா கூறியுள்ளார். ஹைட்ரோ கார்பன் எரிவாயு கிணறுகள் தோண்டும் திட்டத்தில் கீழ் வரும் இராமநாதபுரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகள் இடம் பெற்றுள்ளன. 1. திருப்புல்லாணி (SN 236) 2. பெரியபட்டிணம் (SN 26) 3. ரெகுநாதபுரம் (SN 61/1C) 4. பனைக்குளம் (SN 81/1D) 5. களரி (SN 6) […]

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!