கீழக்கரையில் தனியார் குடிநீர் லாரிகள் ஸ்ட்ரைக் வாபஸ்

கீழக்கரை நகரில் கடந்த இரண்டு நாள்களாக குடிநீர் விநியோகம் செய்து வந்த சுகன்யா, ஸ்டார், உள்ளிட்ட தனியார் லாரிகள் நகருக்குள் வராமல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தினமும் பொதுமக்கள் குடிக்கும் தண்ணீரில் அளவுக்கு அதிகமாக குளோரின் பவுடரை கலந்து வரும் கீழக்கரை நகராட்சி ஊழியர்களை கண்டித்து இந்த ஸ்ட்ரைக் நடைபெறுவதாக தெரிவித்துள்ளனர். இதனால் பொதுமக்கள் குடிநீருக்காக கீழக்கரை முக்குரோடு வரை குடங்களுடன் சென்று தண்ணீர் வாங்கி வருகின்றனர். இந்நிலையில் தற்போது சம்பந்தப்பட்ட லாரி உரிமையாளர்களுடன் கீழக்கரை சட்டப் போராளிகள், […]

சித்திரைக்கு முன்பே கீழக்கரையில் சீரியசாகும் குடிநீர் பிரச்சினை…

கீழ்க்கரையில் குடிநீர் பிரச்சினை என்பது எப்பொழுதும் ஒரு தொடர் கதைதான்.  கீழக்கரை மக்களைப் பொறுத்தவரை பெரும்பாலான மக்கள் தனியார் லாரி மற்றும் மாட்டு வண்டியில் வரும் தண்ணீரை நம்பிதான் உள்ளார்கள். கீழக்கரையில் பொதுவாக தனியார் வாகனங்களான சுகன்யா, பிஸ்மி, MSP, போன்ற நிறுவனம் மூலமாகவே தண்ணீர் விற்கப்பட்டு வருகிறது. ஆனால் கடந்த இரண்டு நாட்களாக மாட்டு வண்டியைத் தவிர வேறு எந்த தனியார் நிறுவனங்களும் தண்ணீர் ஊருக்குள் கொண்டு வரவில்லை, ஆகையால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள்.  […]

மக்கள் தேவையை மறந்து அலுவலகப் பிரச்சினைகளை முன்னிறுத்தும் BSNL..

BSNL நிர்வாகம் என்றாலே மக்களுக்கு துரித சேவை புரிவதில் பெயர் பெற்றது என்பது பொது மக்கள் அனைவரும் அறிந்த விசயம். கீழக்கரை BSNL டெலிபோன் அலுவலகத்திற்கு தேவையான விபரங்கள் கிடைக்கும் என்று உள்ளே சென்று பார்த்தால் ஏமாற்றமே மிஞ்சும். பொதுமக்கள் தினம் தினம் பல வகையான தேவைகளுக்காக BSNL அலுவலகத்தை நாடுகிறார்கள். ஆனால் உள்ளே பொதுமக்களுக்கு தேவையான தகவல் எதுவும் ஒட்டப்படாமல் ஊழியர்களின் போராட்டம், கோரிக்கை, தர்ணா போன்ற போஸ்டர்கள் மட்டுமே காண முடிகிறது.  இதனால் BSNL […]

கீழக்கரை – ஏர்வாடி தேசிய நெடுஞ்சாலை குப்பைகளால் சீரழியும் அவலம்..

கீழக்கரை வழியாக ஏர்வாடி மற்றும் அதைத் தொடர்ந்து உள்ள வழிபாட்டு ஸ்தலங்களுக்கு செல்லும் தனியார் மற்றும் அரசு வாகனங்கள் ஏராளம். ஆனால் கீழக்கரை உள்ளே நுழைந்தவுடன் வரவேற்பது இருபுறமும் உள்ள கழிவுகளும், குப்பை மேடுகளும். இந்த கிழக்கு கடற்கரை தேசிய நெடுஞ்சாலை பகுதியில் இரு புறமும் குப்பைகள் கொட்டுவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுவது மட்டுமல்லாமல் சுற்றுலா பயணிகள் முகம் சுழிக்கும் நிலை ஏற்படுகிறது. நகராட்சி நிர்வாகம் தொடர்ச்சியாக நடவடிக்கைகள் எடுத்தாலும் பொதுமக்களும் ஊரின் சுகாதாரத்தைக் காக்கவும், ஊரின் பெயரையும், […]

கீழக்கரையில் நாய் கடித்து இறந்து போன சிறுவனின் வீட்டு அருகே அதே நாய் மீண்டும் சுற்றுவதால் பொதுமக்கள் அச்சம்…

கீழக்கரையில் நாய் கடித்து இறந்து போன சிறுவனின் வீட்டு அருகே அதே நாய் மீண்டும் சுற்றுவதால் அப்பகுதி பொதுமக்கள் பெரிதும் அச்சமடைந்துள்ளனர். கீழக்கரை சாலைதெருவைச் சேர்ந்த முஹம்மது சலீம் மகன் ரய்யான்(4). இச்சிறுவனை கடந்த ஆகஸ்ட் மாதம் அதே பகுதியில் சுற்றி திரிந்த நாய் ஒன்று கடித்து சிகிச்சை பலனின்றி இறந்து போனார். அதனைத் தொடர்ந்து கீழக்கரை நகராட்சியால் ஒருசில நாட்கள் கீழக்கரை முழுவதும் சுற்றிதிரிந்த நாய்களை பிடித்து அப்புறப்படுத்தினர். ஆனால் சிறுவனை கடித்த நாய் தப்பிச் […]

இராமநாதபுரம் மாவட்ட காவல்துறைக்கு முதல் மரியாதை கொடுத்தே ஆக வேண்டும்…

இராமநாதபுரம் மாவட்டம் கடலாடி ஊராட்சி ஒன்றியம் சிக்கல் ஊராட்சியில் கிழக்கு கடற்கரை சாலை அருகே அமைந்துள்ள ஊரணியில் கிணறு வெட்டும் பணியில் காவல் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். இராமநாதபுரம் மாவட்டம் முழுதும் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடும் நிலையில் கண்மாய், ஊரணி போன்ற நீர் நிலைகளில் கிணறு அமைத்து அதன்மூலம் குடிநீர் மற்றும் பிற தேவைகளுக்கு பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் எஸ்.பி.மணிவண்ணன் அறிவுறுத்தலின் பேரில் ஏ.டி.எஸ்பி இன்பமணி கீழக்கரை டி.எஸ்.பி மகேஸ்வரி தலைமையிலான போலீசார் கடந்த இரண்டு நாட்களாக […]

கீழக்கரை பவர் ஹவுசில் ஆபத்தான நிலையில் உயர்அழுத்த மின் கம்பி தூண்கள்….

கீழக்கரையில் ஆபத்தான நிலையில் காட்சி தரும் எலும்புக்கூடான நிலையில் இருக்கும் தூண்கள் பொதுமக்களை அச்சமடைய வைக்கிறது. கீழக்கரை சுற்றிவட்டாரம் அனைத்திற்கும் இப்பகுதியில் இருந்துதான் மின் வினியோகம் செய்யப்படுகிறது. ஏதேனும் மிகப் பெரிய சேதம் ஏற்படும் முன்பு மின்சார வாரியம் விழித்துக் கொண்டு சரி செய்யவில்லை என்றால், மிக பெரிய இழப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. கீழக்கரை மின்வாரிய பவர் ஹவுசில் ஊழியர்களை அச்சமடைய செய்யும் எலும்புக்கூடான உயர் அழுத்த மின்கம்பியை தாங்கி நிற்கும் தூண்கள் கீழக்கரை மின்வாரிய […]

கீழக்கரையில் முதன்மை பூச்சியியல் வல்லுநர் ஆய்வு.. டெங்கு காய்ச்சல் எதிரொலி..

கீழக்கரையும், டெங்கு காய்ச்சலும் ஒன்றோடு ஓன்று ஒன்றிணைந்தது போல் பல வருடங்களாகவே நிரந்தர தீர்வு காண முடியாத ஒரு பிரச்சினையாகவே நீடித்து வருகிறது.  இப்பிரச்சினையை தொடர்ந்து கீழக்கரையில் முதன்மை பூச்சியியல் வல்லுநர் ஆய்வு மேற்கொண்டார். பொது சுகாதார துறையின் மூலம் கீழக்கரையில் காய்ச்சல்கள் தடுப்பு நடவடிக்கை பணிகள் குறித்த கல ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பருத்திக்காரத்தெரு, வடக்குத்தெரு, கிழக்குத்தெரு ஆகிய பகுதிகளில் உள்ள வீடுகளில் கள் ஆய்வு மேற்கொண்டு பொதுமக்களுக்குரிய கொசு தடுப்பு குறித்த அறிவுரைகள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தி […]

கீழக்கரையில் சமையல் எரிவாயு சிலிண்டர்களில் முறைகேடு – பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டுகோள்

கீழக்கரையில் தனியார் கேஸ் ஏஜென்சி மூலம் விநியோகம் செய்யப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர்கள் தரம் மற்றும் எடையில் குறைபாடு உடையதாக இருக்கிறது என்கிற பல்வேறு குற்றசாட்டுகளை முன் வைத்து சமூக ஆர்வலர்களால் விழிப்புணர்வு கையேடு வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்து முத்துமாரி பிரின்டர்ஸ் நிறுவனர் சமூக ஆர்வலர் மலை ராஜா நம்மிடையே பேசுகையில் ”கீழக்கரை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் தனியார் கேஸ் ஏஜென்சி நிறுவனத்தால் விநியோகம் செய்யப்படும் சிலிண்டர்களில் பெருமளவு முறைகேடு நடைபெற்று வருகிறது. பொதுமக்களுக்கு இது […]

பாம்பனில் பேச்சாலை மீன் சீசன் துவங்கியது – மறுபடியும் கிழக்கு கடற்கரை சாலை நாறப் போகுது..? மாவட்ட நிர்வாகம் தடுக்குமா..??

இராமநாதபுரம் மாவட்டத்தில் ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம், தனுஷ்கோடி, ஏர்வாடி, கீழக்கரை, வாலிநோக்கம் உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான விசைப்படகுகள், நாட்டுப் படகுகளில் மீனவர்கள் மீன்பிடி தொழிலில் ஈடுபடுகின்றனர். மன்னார் வளைகுடா கடல் பகுதியில் ஆண்டுதோறும் மார்ச் மாதம் பேச்சாலை மீன்பிடி சீசன் தொடங்கும். இது ஒரு படகுக்கு அதிகபட்சம் 10 டன் வரை கூட சிக்கும். இந்த மீன்களை கேரள மக்கள் அதிகம் விரும்பி சாப்பிடுகின்றனர். மேலும் இதனை கொண்டு மீன் எண்ணெய் தயாரிப்பதாலும், கேரள மக்கள் இதனை […]

சேவை செய்ய நகராட்சி தயார்.. ஒத்துழைக்க பொதுமக்கள் தயாரா?? – ஆணையர் வேண்டுகோள்…

கீழக்கரை நகராட்சி கடந்த 6 மாத காலமாக அரசியல் வாதிகளின் கைகளில் பொறுப்புகள் இருந்த காலத்தை விட தற்போது துரிதமாக நகராட்சி நிர்வாகம் செயல்பட்டு வருகிறது என்றால் நிச்சயமாக மிகையாகாது. ஆனால் பொது மக்களின் பார்வையில் பார்க்கும் பொழுது நகராட்சி நிர்வாகம் மெத்தனப்போக்கை கையாள்கிறதோ என்ற எண்ணம் எழக்கூடும், ஆனால் பிரச்சினையின் ஆணி வேரை ஆராய்ந்து பார்க்கும பொழுது பிரச்சினையின் கோணமே வேறு விதமாக இருக்கிறது. இரு கைகள் சேர்ந்தால்தான் ஓசை எழுப்ப முடியும், அது போல் நகராட்சி […]

அலட்சியப்படுத்தும் கட்டிட காண்ட்ராக்டர்கள்… மெத்தனப் போக்கில் கீழக்கரை நகராட்சி…

கீழக்கரையில் பல இடங்களில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருவது அனைவரும் அறிந்த விசயம்.  ஆனால் கட்டுமானப் பணியில் ஈடுபடும் நிறுவனங்கள் பொதுமக்களுக்கு ஏற்படும் இடையூறுகளை பற்றி எந்தவித கவலையும் இல்லாமல் வாகனம் செல்லும் வழியிலும், மக்கள் நடைபாதையிலும் கட்டுமான பணிகளுக்கு உரிய மண்,  செங்கல் போன்ற பொருட்களை கொட்டி வைப்பது வாடிக்கையான விசயமாகி விட்டது. இதுபோன்ற காரியங்களால் வாகனங்கள் விபத்துக்குள் ஆவதும்,  பொதுமக்கள் காயப்படுவதும் அன்றாட விசயமாகி விட்டது.  இந்தக் காரியத்தில் நகராட்சி கட்டிட நிறுவனங்கள் மீது கடுமையான […]

சாதாரணமாக ‘சிட்டிசன்கள்’ செய்ய முடியாத வேலைகளை பல நேரம் ‘பெட்டிஷன்கள்’ தான் செய்து முடிக்கிறது – கீழக்கரை சட்டப் போராளிகள் கருத்து

கீழக்கரை நகராட்சியில் டெங்கு, மர்ம காய்ச்சல், மலேரியா போன்ற நோய்கள் தீவிரம் அடைந்து வருகிறது. நூற்றுக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மக்கள் நல பாதுகாப்பு கழகம் சார்பாக தமிழக முதல்வர், சுகாதார துறை அமைச்சகம், நகராட்சிகள் இயக்குனரகம் உள்ளிட்ட பல்வேறு அரசு துறையினருக்கு மனு அனுப்பப்பட்டுள்ளது. அதே போல் கீழக்கரை சட்டப் போராளிகள் தளம் வாயிலாகவும் ஏராளமான மனுக்களை முதலமைச்சரின் தனிப் பிரிவு வலை தளத்திற்கு அனுப்பியுள்ளனர். இந்நிலையில் கீழக்கரை நகராட்சி ஆணையாளர் சந்திரசேகரின் அறிவுறுத்தலின் பேரில் […]

கஸ்டம்ஸ் ரோடு பகுதி மக்களின் கஷ்டத்தை போக்கிய நகராட்சிக்கு நன்றி

கீழக்கரை கஸ்டம்ஸ் ரோடு பகுதியில் சாலையின் நடுவே போடப்பட்ட கழிவுநீர் ஜங்க்சன் மூடி உடைந்து 3 மாதங்களுக்கும் மேலாக புதிய மூடி போடப்படாமல் இருந்ததால் வாகன ஓட்டிகளும், பள்ளி சிறுவர்களும், முதியவர்களும் பலமுறை இந்த பள்ளத்தில் விழுந்து அடிபட்டு செல்வது தொடர்கதையாகி வந்தது. இது குறித்து நம் கீழை நியூஸ் வலை தளம் சார்பாக கடந்த வாரம் ”கீழக்கரையில் கஷ்டமப்பா.. கஸ்டம்ஸ் ரோட்டில் ‘உலகத் தரத்துடன்’ போடப்பட்ட ஜங்க்சன் மூடி உடைந்ததால் விபத்தில் சிக்கும் அப்பாவிகள் – நகராட்சியில் […]

சிங்க கொடியுடன் பல நாடுகளுக்கு கப்பலோட்டிய ‘கீழை மன்னர்கள்’ வாழ்ந்த வீடுகளில் குப்பை மேடுகளா..? – அதிர்ச்சியில் உறைந்த மலேசிய வரலாற்று ஆய்வாளர்கள்

கீழக்கரை நகருக்கு மலேசிய இந்திய முஸ்லிம் தேசிய பேரவையினர் வருகை தந்து ஆய்வு மேற்கொண்டுள்ளனர். நகரின் பழமை வாய்ந்த பல்வேறு பகுதிகளுக்கும் சென்று அதன் தொன்மையை அறிந்து வியந்து குறிப்பெடுத்து வருகின்றனர். வள்ளல் சீதக்காதியின் முன்னோர் வீட்டினை பார்வையிட்ட மலேசிய இந்திய முஸ்லீம் பேரவையினர் அங்கு மக்கள் கொட்டும் குப்பைகளை பார்த்து மன வருத்தத்தில் ஆழ்ந்தனர். மேலும் பெரிய தம்பி மரைக்காவின் வீடு இருக்கும் நிலையையும் கண்டு வருந்தினர். உலகத்தின் பல மூலைகளுக்கும் கடல் வழி மார்க்கமாக […]

வள்ளல் சீதக்காதி சாலையில் கேட்பாரற்று பல நாள்களாக ‘படுத்துக் கிடக்கும்’ மின் கம்பம் – நிலை நிறுத்த மின்சார வாரியம் முன் வருமா..?

கீழக்கரை நகரில் பல இடங்களில் சிதிலமடைந்த மின் கம்பங்களை மாற்றிடக் கோரி கீழக்கரை சட்டப் போராளிகள் தளம், மக்கள் நல பாதுகாப்பு கழகம் சார்பாக முதலமைச்சரின் தனிப் பிரிவு வலை தளத்திற்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும், மின்சார வாரியத்திற்கும் தொடர்ந்தது மனுக்கள் வாயிலாக கடந்த 3 மாதங்களாக பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் லெப்பை தெரு மதரஸா அருகாமையில் உள்ள மின் கம்பமும் ஒன்றாகும். மனுவில் சுட்டிக் காட்டப்பட்ட பல்வேறு அபாய மின் கம்பங்களுள் ஒரு சில […]

கீழக்கரையில் கஷ்டமப்பா.. கஸ்டம்ஸ் ரோட்டில் ‘உலகத் தரத்துடன்’ போடப்பட்ட ஜங்க்சன் மூடி உடைந்ததால் விபத்தில் சிக்கும் அப்பாவிகள் – நகராட்சியில் மூடி ரெடியா ..?

கீழக்கரை நகரராட்சி பகுதிகளில் சாக்கடை வாருகால் மூடி போடுவதற்கு ஒப்பந்தம் எடுத்த ஒப்பந்ததார்கள் தரமற்ற பணிகளை செய்ததால் பல்வேறு இடங்களில் மூடிகள் உடைந்து போயுள்ளது. இது குறித்து சட்டப் போராளிகள் சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர்களுக்கு இனி நகராட்சியில் எந்த ஒரு ஒப்பந்த பணியும் வழங்க கூடாது என மனு கொடுக்கப்பட்டு நகராட்சியிடம் இருந்து பதிலும் பெறப்பட்டுள்ளது. இந்நிலையில் கீழக்கரை கஸ்டம்ஸ் ரோடு பகுதியில் கடந்த 6 மாதங்களுக்கு முன்னதாக புதிதாக ‘உலகத் தரத்துடன்..??’ கழிவு நீர் ஜங்க்சன் மூடி […]

மர்ம காய்ச்சல், டெங்கு பாதிப்பில் சிக்கி தவிக்கும் கீழக்கரை மக்கள் – உடனடி நடவடிக்கை கோரி தமிழக முதல்வருக்கு கோரிக்கை மனு

கீழக்கரை நகராட்சி பகுதியில் அங்கிங்கெனாதபடி எங்கு நோக்கினும் டெங்கு காய்ச்சல், மர்ம காய்ச்சல், மலேரியா என்று மக்களை வாட்டி வதைத்து கொண்டிருக்கிறது. குழந்தைகளும், முதியவர்களும், நோய் எதிர்ப்பு சக்தி குறைவான மக்களும் அதிகமாக பாதிக்கப்பட்டு உள்ளனர். தனியார் மருத்துவமனைகளில் தாலியை அடமானம் வைத்து தங்கள் பிள்ளைகளுக்கு வைத்தியம் பார்க்கும் நிலைக்கு நடுத்தர மக்கள் சிக்கி தவிக்கின்றனர். இராமநாதபுரம் தனியார் மருத்துவமனைகளில் நான்கு நாள் சிகிச்சைக்கு ரூ.20000 பில் தீட்டுகின்றனர். இதுவே மதுரை என்றால் பில் தொகை ரூ.30000 […]

இராமநாதபுரத்தில் ‘மாற்றம் முன்னேற்றம்’ இளைஞர் அமைப்பினர் அமைத்த குடிநீர் தொட்டி அகற்றப்பட்டதால் பொதுமக்கள் அதிருப்தி

இராமநாதபுத்தில் 26 வது வார்டு அமைந்திருக்கும் வண்டிக்காரத் தெருவானது, நகரின் மிக முக்கிய கடைவீதி தெருவாகும். இங்கு தான் தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் மணிகண்டனின் வீடு உள்ளது. இந்த வார்டு பகுதியில் கழிவு நீர் பிரச்சனை, குடிநீர் பிரச்சனை என தொடர்ந்து தீர்க்கப்படாத பல்வேறு பிரச்சனைகளுக்கு எந்தவித முன்னேற்றமும் இல்லாத நிலையில் இங்கிருக்கும் இளைஞர்கள் ஒன்று கூடி “மாற்றம் முன்னேற்றம் வி 26” இளைஞர் பொது நல சங்கத்தை ஆரம்பித்து சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். இந்த பகுதியில் […]

கீழக்கரையில் மதுக் கடைகளை அகற்றக் கோரி SDPI மற்றும் பாப்புலர் ஃப்ரண்ட் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு

கீழக்கரை புதிய பேருந்து நிலையம் அருகே பொதுமக்களுக்கு இடையூறாக செயல்படும் டாஸ்மாக் மதுபான கடைகளை உடனடியாக அகற்றக் கோரி, இன்று 20.03.17 SDPI கட்சி மற்றும் பாப்புலர் ஃப்ரண்ட் அமைப்பினர் சார்பாக மாவட்ட ஆட்சியரின் மக்கள் குறை தீர்க்கும் நாளில் மாவட்ட ஆட்சியர் நடராஜனை சந்தித்து கோரிக்கை மனு கொடுக்கப்பட்டுள்ளது. அதில் பள்ளி செல்லும் மாணவ மாணவிகளுக்கும், பேருந்து நிலையம் செல்லும் பொதுமக்களுக்கும், கோயிலுக்கும், வழிபாட்டு தலங்களுக்கு செல்லும் மக்களுக்கும் பெரும் இடையூறாக இருக்கும் டாஸ்மாக் கடைகளை […]

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!