கீழக்கரையில் சுகாதாரத்திற்கான நிரந்தர தீர்வு என்பது எட்டாக் கனியாகவே உள்ளது. தினமும் ஏதாவது ஒரு தெருவில் கழிவு நீர் ஓடுவதும், பின்னர் பல கோரிக்கைகளுக்கு பிறகு அதை நிவர்த்தி செய்வதும் வாடிக்கையான செயலாகி விட்டது. அதுவும் ஜும்ஆ தினமான வெள்ளிக்கிழமை என்றால் வழக்கத்திற்கு மாறாக அதிகமான கழிவு நீர் பெருக்கெடுத்து ஓட ஆரம்பித்து விடும். இன்று (26-05-2017) கீழக்கரை தெற்குத் தெரு பெரிய பள்ளி வாசல் அருகில் கழிவு நீர் வாய்காலில் இருந்து காலையில் இருந்தே வழிந்து […]
Category: பிரச்சனை
கீழக்கரை பாரத வங்கி வாடிக்கையாளர்களின் தோழனா?? இல்லை அலைகழிக்கும் எதிரியா??…
கீழக்கரையில் உள்ள பாரம்பரிய மிக்க வங்களில் ஒன்று பாரத ஸ்டேட் வங்கியாகும். இன்று எத்தனையோ சிறப்பான தனியார் வங்கிகள் சேவைக்கு வந்தாலும், இன்றும் பாரத வங்கிதான் அரசாங்கத்தால் இயக்கப்படும் முறையான வங்கி என்ற எண்ணத்திலேயே ஏராளமான ஆண்களும் பெண்களும் உள்ளனர். ஆனால் அந்த எண்ணத்தையே பாரத வங்கியினர் அவர்களுக்கு சாதகமாக்கி கொண்டு பொதுமக்களை வங்கி சேவையில் எவ்வளவு அலைக்கழிக்க முடியுமோ அந்த அளவுக்கு அலைக்கழிக்கிறார்கள். வங்கியில் உள்ள சேவைகள் அனைத்தும் மக்களின் பயன்பாட்டிற்கும் மக்களின் நலனுக்காகவுமே உருவாக்கப்பட்டது. […]
கோடை வெயிலுக்கு பால்கனி கதவு திறப்பு… இரவு நேரத் திருடர்களுக்கும் கொண்டாட்டம்…
தமிழகம் மற்றும் இந்தியாவில் இந்த வருடக் கோடைவெயில் மிகவும் கடுமையாக கொளுத்தி வருகிறது. இதற்கு கீழக்கரையும் விதி விலக்கல்ல. கடந்த ஒரு மாத காலமாக வெயிலின் கொடுமை ஒரு புறம், மின்சார தடை ஒரு புறம். இந்த வெப்பத்தில் இருந்து மக்கள் தற்காத்து கொள்வதற்காக இரவு நேரங்களில் காற்றோட்டத்திற்காக வீடுகளில் உள்ள பால்கனி கதவை திறந்து வைத்து இருக்கிறார்கள். ஆனால் இந்த பால்கனி திறப்பே திருடர்களுக்கு திருடவதற்கு ஏதுவாகி விடுகிறது. சில தினங்களுக்கு முன்பு இரவு 02.00 […]
பல லட்சம் செலவில் போடப்பட்ட பேவர் ப்ளாக் சாலை மண்ணோடு மண்ணாகிப் போகும் அபாயம்..
கீழக்கரையில் கடந்த வருடம் நகராட்சியால் பல லட்சங்கள் செலவு செய்து பல பகுதிகளில் பேவர் ப்ளாக் சாலை போடப்பட்டது. சாலையின் தரம் குறைவாக உள்ளது என்ற குற்றச்சாட்டு எழுந்தாலும் பல பகுதிகளில் போட்டு முடிக்கப்பட்டது. ஆனால் பல பகுதிகளில் சாலைகள் மேல் மண்கள் குவிக்கப்பட்டு, பேவர் ப்ளாக் சாலை இருப்பதே தெரியாமல் மண்ணுக்குள் மூழ்கி வருகிறது. இதை நகராட்சி உடனடியாக தடுத்து நிறுத்தாவிட்டால் மக்கள் வரிப்பணத்தில் போடப்பட்ட பேவர் ப்ளாக் சாலை அடையாளம் தெரியாமல் போய்விடும். இதைத் […]
கடலில் கலக்கும் கழிவு நீரை முறைப்படுத்தி கடற்கரையில் நடைபாதை அமைக்கும் பணியை தொடர வலுக்கும் கோரிக்கை ..
கீழக்கரை கடற்கரையில் வெளியூர் சுற்றால பயணிகளை கவரும் வகையில் நடைபாதை அமைக்க அடிக்கல் விழா அமைச்சர் மணிகண்டன் தலைமையில் சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்றது. அதைத்தொடர்ந்து அதற்கான பணிகளும் துரிதமாக ஆரம்பமானது. இந்நிலையில் நடைபாதை அமைக்கும் இடத்தில் கழிவுநீர் கலக்கும் இடத்தைச் சுட்டிக்காட்டி அதை முறையான கழிவு நீர் மேலான்மை திட்டம் ( Waste Water Management) அமைத்து சீர் செய்தால், உள்ளூர்வாசிகளுக்கு மகிழ்ச்சி தரக்கூடியதாகவும், அதே சமயம் வெளியூரில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையும் […]
ஜும்மா பள்ளி சாலை உடனடியாக சீர் செய்யப்பட்டது – புதிய ஆணையர் நடவடிக்கை..
கடந்த வாரம் கீழக்கரை ஜும்மா பள்ளி சாலையில் அடிக்கடி ஏற்படும் கழிவுநீர் பிரச்சினை பற்றி கீழை நியூஸ் இணையதளத்தில் செய்தி வெளியிட்டு இருந்தோம். இது சம்பந்தமாக கீழை நியூஸ் நிர்வாகிகள் முஜம்மில் மற்றும் சாலிஹ் ஹுசைன் நேற்று (10-05-2017) நேரடியாக ஆணையரை சந்தித்து கீழக்கரையில் உள்ள சுகாதார பிரச்சினை மற்றும் இதர பிரச்சினைகளையும் சந்தித்து விளக்கினார்கள். ஆணையர் பிரச்சினையை கேட்டறிந்தவுடன் களத்திற்கு உடனடியாக சென்று ஆய்வுகள் செய்து அதற்கான பணிகளை முடுக்கி விட்டார். அதே போல் வடக்குத் […]
கீழக்கரையில் பாலிதீன் பைகள் உபயோகம்-நகராட்சி அதிரடி சோதனை..
கீழக்கரை நகராட்சியின் எல்லைக்குள் பாலதீன் பைகளை உபயோகம் செய்யவும், விற்கவும் தடை செய்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு நகராட்சியால் தடை விதிக்கப்பட்டது. ஆனால் அதையும் மீறி பல வியாபாரிகள் பக்கத்தில் உள்ள ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் வாங்கி வந்து உபயோகிக்கும் போக்கை கடை பிடித்து வந்தனர். அதை தடுக்கும் விதமாக இன்று நகராட்சி ஆய்வாளர்கள் மற்றும் ஊழியர்கள் வள்ளல் சீதக்காதி சாலையில் இயங்கி வரும் பல வியாபார தலங்களில் சோதனையில் ஈடுபட்டனர். விதியை மீறி பாலிதீன் […]
என்று தானாக விழிக்கும் கீழக்கரை நகராட்சி???..
கீழக்கரை நகராட்சியை பொறுத்த வரை நகராட்சி செய்யும் சுகாதார பணிகளை காட்டிலும் சமூக அமைப்புகளும், சமூக ஆர்வலர்களும் செய்யும் பணிகளே அதிகம் என்றால் மிகையாது. அதுவே நகராட்சி ஊழியர்களின் அலட்சியத்திற்கு காரணமாகி விட்டதோ என்று எண்ண தோன்றுகிறது. கீழை நகரை குறிப்பிட்ட இடைவெளியில் சுத்தம் செய்வதும், சுகாதாரமான வைத்துக் கொள்வதும் நகராட்சியின் கடமையாகும், ஆனால் அதிகமான பகுதிகளில் ஊழியர்களை அழைத்து சுத்தம் செய்யக் கூறினால் மட்டுமே பணிகள் நடக்கின்றது. அவ்வாறு செய்ய தவறும் பட்சத்தில் குப்பைகளின் மேடாகி […]
நிரந்தர சுகாதார தீர்வுக்காக காத்திருக்கும் கீழக்கரை ஜும்மா பள்ளிவாசல் சாலை..
கீழக்கரையில் மிகவும் பழமையான மற்றும் முக்கியஸ்தர்கள் முதல் வெளியூர் பயணிகள் வரை காண விரும்பும் இடம் மன்னர் காலத்தில் கலை அம்சத்துடன் கட்டப்பட்ட ஜும்மா பள்ளி ஆகும். ஆனால் இன்றைய ஆட்சியளர்களுக்கும், நகராட்சியாளர்களுக்கும் அதனுடைய பெருமை தெரியாத காரணத்தினாலோ என்னவோ அதனுடைய சுற்றுப்புற சுகாதாரம் எப்பொழுதும் ஒரு கேள்வி குறியாகவே இருக்கிறது. அவ்வப்போது அவ்வழியில் செல்வோர்கள் எல்லாம் முகம் சுழிக்கும் அளவுக்கு தெருவில் வெள்ளமாக ஊற்றெடுத்து ஓடும் கழிவு நீர், பின்னர் மக்களின் புகாருக்கு பிறகு தற்காலிகமாக […]
கீழக்கரையில் அறிவிக்கப்படாத மின் வெட்டு.. மின்வெட்டு நேரத்தை மாற்றியமைக்க பொதுமக்கள் கோரிக்கை..
கோடைகாலம் ஆரம்பித்தவுடன் மின்வெட்டு பயமும் மக்கள் மனதில் தொற்றி கொள்கிறது. இந்த பயம் கடந்த வருடம் கொஞ்சம் குறைவாக இருந்தது, ஆனால் இந்த வருடம் அதிகரித்து விட்டது. கீழக்கரையில் இன்று காலை 11 மணி முதல் அறிவிக்கப்படாத மின் வெட்டு தொடங்கிவிட்டது. கடுமையான கோடை காலத்தில் இதுபோன்ற உச்சி வெயில் நேரத்தில் மின் தடை செய்வது பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை உண்டாக்கியுள்ளது, மேலும் நோயாளிகள் மற்றும் வயோதிகர்கள் பெரும் அவதிக்குள்ளாகிறார்கள். இந்த மின்வெட்டு இனி காலை மற்றும் […]
கீழக்கரை தெற்கு தெரு மற்றும் வடக்குத் தெருவில் உயர் அழுத்த மின் கம்பிகளில் உரசி செல்லும் மரக்கிளைகள் – மின்சார வாரியம் ஆபத்தை உணருமா..?
கீழக்கரை தெற்கு தெரு முஸ்லீம் பொதுநல சங்கம் அருகே உள்ள மரத்தின் கிளை அதன் அருகாமையில் உள்ள உயர் அழுத்த மின் கம்பிகளின் மீது உரசி செல்வதால் பகுதி பொதுமக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர். இந்த பகுதி பொதுமக்கள் அதிகம் புழங்கும் இடமாக இருக்கிறது. முஸ்லீம் பொதுநல சங்கத்தை சேர்ந்த இளைஞர்களும், வாலிபர்களும் கூடும் பிரதான சாலையாகவும் இருக்கிறது. தெற்குத் தெரு பள்ளிவாசலுக்கு செல்பவர்களும், பள்ளிக்கூடம் செல்லும் மாணவர்கள் கடந்து செல்லும் பாதையாகவும் இது இருக்கிறது. எந்நேரமும் ஆபத்தை […]
கீழக்கரையில் மீன் விலை கிடு கிடு உயர்வு..
கீழக்கரை மற்றும் கடல் சார்ந்த பகுதிகளில் மீன் பிடி தொழில் ஓரு முக்கியமான தொழிலாகும். அத்தொழில் மூலம் கிடைக்கும் வாழ்வாதாரத்தை நம்பி பல நூற்று கணக்கான குடும்பங்கள் இப்பகுதியில் வாழ்ந்து வருகின்றார்கள். இந்நிலையில் கடந்த 15ம் தேதி முதல் அரசாங்கம் மீன் கடலில் உற்பத்தி காலத்தை முன்னிட்டு மீன் தடை வருடாந்தோரும் விதிப்பது போல் இந்த வருடமும் விதித்துள்ளது. ஆகையால் சந்தைக்கு விற்பனைக்கு வரும் மீன் வரத்து வெகுவாக குறைந்துள்ளது. இதனால் கீழக்கரையில் மீன் விலை நாளுக்கு […]
ஏர்வாடியில் வீண் விரயம் ஆகும் மக்கள் பணம்.. பயனில்லாமல் கிடக்கும் ஈ சேவை மையம்..
கீழக்கரை ஏர்வாடியில் 13 லட்சம் செலவில் பேருந்து நிலையம் அருகில் கட்டி முடிக்கப்பட்ட இ சேவை மையம் ஒரு வருடம் ஆகியும் எந்த ஏற்பாடுகளும் செய்யப்படாமல் பாழடைந்த நிலைமையில் உள்ளது. ஏர்வாடி மக்கள் தங்கள் தேவைகளுக்காக பக்கத்தில் உள்ள ஊர்களுக்கே செல்ல வேண்டிய சூழ்நிலையில் உள்ளார்கள். அவ்வாறு சிரமம் எடுத்து சென்றாலும் அங்கும் இ சேவை மையங்கள் பழுதடைந்த நிலையிலேயே இருப்பது மிகவும் வேதனையான விசயம். ஏர்வாடி நகராட்சி நிர்வாகம் கண் திறக்குமா??
கீழக்கரையில் நோக்கம் நிறைவேறாமல் மூடிக் கிடக்கும் அம்மா மருந்தகம்..
தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவுக்கு முன்பு ஏழை எளியவர்களுக்கு உதவ வேண்டும் என்ற நோக்கில் அம்மா மருந்தகம் 85 இடங்களுக்கு மேலாக தமிழ்நாடு கூட்டுறவு பண்டகசாலை மூலம் திறக்கப்பட்டு, ஏழை மக்களால் பாராட்டுதலையும் பெற்றது. மேலும் வறியவர்களுக்கு உதவும் வகையில் அரசாங்கத்தால் அத்தியாவசிய மருந்துகளான சர்க்கரை நோய் போன்றவைகளுக்கு 12 முதல் 15 சதவீதம் தள்ளுபடி சலுகையும் வழங்கப்பட்டது. ஆனால் பரிதாபம், எல்லா அறிவிப்புகள் கீழக்கரை மக்களுக்கு எந்த பலனும் இல்லாமல் கீழக்கரை வள்ளல் சீதக்காதி […]
மக்கள் தேவையை உணர்ந்து கீழக்கரை நகராட்சி நிர்வாகம் உதவி..
கீழக்கரையில் வீடுகளில் சேரும் குப்பைகளை கீழக்கரை வெல்பர் அசோசியேசன் வீடுகளில் வந்து குப்பைகளை வாங்கி, அவர்களால் கையாளப்படும் டிராக்ட்டர் வண்டிகளில் சேகரித்து தோனிப்பாலம் சென்று குப்பைகளை கொட்டி வருவது வழக்கம். ஆனால் கடந்த சில தினங்களாக குப்பைகளை அள்ளி வந்த டிராக்டர் பழுதடைந்த காரணத்தால் கீழக்கரையில் உள்ள பல தெருக்களில் பொதுமக்கள் பெரும் சிரமத்துக்கு உள்ளானார்கள். பொதுமக்கள் குப்பைகளை ஆங்காங்கே ரோட்டிலும், தெருவிலும் வீச ஆரம்பித்ததால் பொது இடங்களில் குப்பை மேடாகும் சூழல் உருவானது. இது குறித்து […]
கீழக்கரை குத்பா பள்ளி தெருவின் அவல நிலை.. கண்டும் காணாமல் இருக்கும் நகராட்சி நிர்வாகம்…
கீழக்கரையில் மிகவும் பழமை வாய்ந்ததும், அனைத்து பெரியவர்களும் அதிகமாக தொழ வரும் இடம் குத்பா பள்ளி என்றே கூறலாம். ஆனால் கடந்த சில மாதங்களாக அப்பள்ளி செல்லும் வழி மற்றும் நடுத்தெரு சாலையெங்கும் வழிந்தோடும் சாக்கடையை நிறுத்த எந்த ஒரு நடவடிக்கையும் எடுத்தபாடில்லை. இது சம்பந்தமாக விசாரித்த பொழுது, பெயர் வெளியிட விரும்பாத நகராட்சி அதிகாரி கூறியதாவது, அத்தெருவில் குறிப்பிட்ட ஒரு வீட்டில் இருந்து தான் கழிவு நீர் வெளியேறுகிறது, சம்பந்தப்பட்ட வீட்டினரை அணுகிய பொழுது, அவர்கள் […]
ஆயிரக்கணக்கில் சுற்றுலாப் பயணிகள் வரும் ஏர்வாடியின் அவல நிலை..
கீழக்கரை, ஏர்வாடி உள்ளூர் ஆட்களை விட தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகளை கவர்ந்திழுக்கும் ஊர் என்றே கூறலாம். ஆனால் அவ்வூரின் சுற்றுப்புற சுகாதார சீர் கேடு நகராட்சி நிர்வாகம் இருக்கிறதா என்ற கேள்வியை எழுப்புகிறது. ஏர்வாடி நகருக்குள் தினமும் ஆயிரகணக்கான மக்கள் அந்த ஊரில் உள்ள பிரசித்திப்பெற்ற தலங்களைக் காண வந்த வண்ணம் இருப்பார்கள். அவர்களின் வருகையினால் பல வியாபாரங்களும், தொழில்களும் உயிர்ப்புடன் இருக்கிறது என்றால் மிகயாகாது. ஆனால் முக்கிய தலங்களின் நுழைவுப் பகுதியிலும், ஊரில் உள்ள […]
சாலைத் தெரு சாக்கடை வழியும் தெருவாக மாறி வரும் அவலம்..
கீழக்கரை சாலைத் தெரு பெருமை வாய்ந்த ஓடக்கரை பள்ளி அமைந்து உள்ள பகுதியாகும். மேலும் இச்சாலை எப்பொழுதும் மக்கள் நடமாட்டம் நிறைந்த சாலையாகும். ஆனால் இத்தெருவில் தொழுகைப் பள்ளி வழியாக பெருக்கெடுத்து ஓடும் சாக்கடை நீர் தீராத ஒரு பிரச்சினையாக இருக்கிறது. இது சம்பந்தமாக மீண்டும் மக்கள் பொதுத்தளம், SDPI கட்சி மற்றும் பல சமூக அமைப்பினர் நகராட்சி நிர்வாகத்திடம் நிரந்தரமாக தீர்வு காணும்படி வேண்டுகோள் வைத்துள்ளனர். கீழக்கரை நகராட்சி நிர்வாகம் பொதுமக்கள் ஒத்துழைப்பு இருந்தால்தான் தீர்வு […]
நீண்ட போராட்டதிற்கு பிறகு வள்ளல் சீதக்காதி சாலை பழுதடைந்த மின் கம்பங்கள் மாற்றம்..
கீழக்கரை வள்ளல் சீதக்காதி சாலையில் பல மின் கம்பங்கள் பழுதடைந்து எந்நேரமும் விழக்கூடிய அபாயகரமான சூழ்நிலையில் இருந்தது. இது சம்பந்தமாக கீழக்கரையில் உள்ள பல சமூக அமைப்புகளும், ஆர்வலர்களும் மின் நிர்வாத்திற்கும் முதல் அமைச்சர் தனி பிரிவுக்கும் தொடர்ச்சியான புகார் மனுக்களை அனுப்பிய வண்ணம் இருந்தனர். அத்தனைப் போராட்டத்திற்கும் விடிவு காலம் பிறந்தது போல் இன்று கீழக்கரை வள்ளல் சீதக்காதி சாலையில் மின்சாரம் நிறுத்தப்பட்டு புதிய மின் கம்பங்கள் மாற்றும் பணி தொடங்கியது. பழுதடைந்த மின் கம்பங்கள் […]
கீழக்கரை சுகாதாரத்துறை மற்றும் நகராட்சி கூடுதல் ஒப்பந்தப் பணியாளர்கள் நியமனம் செய்து சுகாதார ஆய்வு பணி…
கீழக்கரை சுகாதாரத்துறை மற்றும் நகராட்சி கூடுதல் ஒப்பந்தப் பணியாளர்கள் நியமனம் செய்து சுகாதார ஆய்வு பணி தற்சமயம் கீழை நகரில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கீழக்கரையில் கடந்த சில மாதங்களாகவே டெங்கு காய்ச்சல் மற்றும் வைரஸ் காய்ச்சல் போன்ற நோய்கள் வெகுவாக பரவி வருவது அனைவரும் அறிந்த விசயம். அதை தடுக்கும் முயற்சியில் நகராட்சியும் பல வகையான நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. அதே சமயம் பொதுமக்களின் ஒத்துழைப்பும் மிக அவசியம் என்பதை வலியுறுத்தி நகராட்சி ஆணையரும் சில வாரங்களுக்கு […]
You must be logged in to post a comment.