கீழக்கரைக்கு குடி தண்ணீர் காவிரி குடி நீர் திட்டம் மூலம் குழாய் மூலமாக வருகிறது. ஆனால் இராமநாதபுரம் மற்றும் கீழக்கரைக்கு இடைபட்ட வழியில் பல கிராமத்து மக்களால் குழாய்கள் உடைக்கப்பட்டு தண்ணீர் எடுக்கப்படுகிறது. மேலும் சில இடங்களில் கேட் வால்வுகள் உடைக்கப்பட்டும் தண்ணீர் எடுக்கப்படுகிறது. இதனால் கீழக்கரைக்கு வரும் தண்ணீர் தடைபடுவதுடன், பல கழிவுகள் கலந்து அசுத்த நீராக கீழக்கரை நகருக்கு வந்தடைகிறது. இது சம்பந்தமாக நடவடிக்கை எடுக்க கோரி சமூக ஆர்வலர் சித்தீக் அம்மா அழைப்பு […]
Category: பிரச்சனை
பள்ளி மாணவர்கள் செல்லும் வழியில் ஆபத்தான நிலையில் வாறுகால் மூடி..
கீழக்கரை தெற்குத் தெருவில் இருந்து பள்ளிக்கூடங்கள் மற்றும் பள்ளிவாசலுக்கு செல்லும் சாலை வழியாக தினமும் நூற்று கணக்கான மாணவர்கள் பள்ளி கூடங்களுக்கு சென்று வருகிறார்கள். இந்த பாதையில் சாக்கடைக்காக போடப்பட்டுள்ள வாறுகால் மூடிகள் உடைந்து ஆபத்தான நிலையில் காட்சியளிக்கிறது. அவ்வழியில் நடந்து செல்லும் மாணவர்கள் கவனக் குறைவாக உடைந்த பகுதியில் காலை வைத்தால் உயிருக்கே ஆபத்து ஏற்பட வாய்ப்பிருக்கிறது. மேலும் இதே வழியில் ஆட்டோ மற்றும் பிற வாகனங்கள் செல்வதால், வாறுகால் மூடியின் உடைப்பும் பெரிதாகி கொண்டே […]
கீழக்கரையில் 08-08-2017 (செவ்வாய்கிழமை) அன்று மின் தடை…
கீழக்கரை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் (08-08-2017 – செவ்வாய் கிழமை) காலை 09.00 மணியில் இருந்து மாலை 05.00 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக மின்சாரம் தடை இருக்கும். இது பற்றி செயற்பொறியாளர் கூறுகையில் நாளை கீழக்கரை, ஏர்வாடி, மாயாகுளம், உத்திரகோசமங்கை, மோர்குளம் ஆகிய பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு காரணமாக தடை இருக்கும், ஆகையால் பொதுமக்கள் முன் நடவடிக்கை எடுத்துக் கொள்ளட்டும் என்று கூறினார்.
கீழக்கரை நகரின் சுகாதாரத்தை பேண நகராட்சி அதிரடி நடவடிக்கை..
கீழக்கரை நகரில் நகராட்சி நிர்வாகம் எவ்வளவுதான் முயற்சிகள் எடுத்தாலும், பொதுமக்களின் முழுமையான ஒத்துழைப்பு இல்லாமையாலும், அத்யாவசிய பொருட்களை ஏற்றி வரும் வாகனங்களும் முறையாக விதிமுறைகளை கடைபிடிக்காத காரணங்களால் நகராட்சி நிர்வாகம் சுகாதார பணிகளை மேற்கொள்வதில் தடங்கல்கள் ஏற்பட்ட வண்ணம்தான் உள்ளது. இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் விதமாக சுகாதார பணிகளுக்கு ஓத்துழைக்காத வீட்டினர் மற்றும் தொழில் நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை அபராதத்துடன் எடுக்கப்படும் என்று நகராட்சி நிர்வாகம் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது. இனிமேலாவது நகராட்சிக்கு முழுமையான ஓத்துழைப்பு […]
நிரந்தர விடுதலை கிடைக்குமா இந்த சாக்கடையிலிருந்து?..
கீழக்கரை வடக்குத் தெருவில் இருந்து தெற்கு தெரு செல்லும் வழியில் உள்ள இடைபட்ட சாலை கடை தெருவை இணைக்கும் சாலையாகும். இந்த வழியில் பள்ளிக்கு நடந்து செல்லும் மாணவர்கள் மற்றும் வாகனம் தொடர்ந்து சென்ற வண்ணம் இருக்கும். அதே போல் சாக்கடை நீரும் வற்றாத ஜீவநதியாக ஓடிக்கொண்டிருக்கும். சுகாதாரத்தில் அக்கறை கொண்ட சில சகோதரர்கள் தங்களின் முயற்சியால் நகராட்சி ஊழியர்களை வைத்து ஒழுங்குபடுத்துவார்கள், ஆனால் சில நாட்களிலேயே மீண்டும் கழுவு நீர் பெருக்கெடுத்து ஒட ஆரம்பித்து விடும். […]
இருட்டில் மூழ்கி கிடக்கும் தெற்கு தெரு ஜாமி ஆ நகர் வழி பகுதி..
கீழக்கரை முக்கிய வீதியும் ஆள் நடமாட்டமும் அதிகமாகி வரும் பகுதி தெற்குத் தெரு மற்றும் ஜாமி ஆ நகரில் இருந்து வரும் நடைபாதை பகுதியாகும். ஆனால் பல நாட்களாக சாலையோர மின்கம்பத்தில் விளக்கு எரியாமல் மக்கள் அவதிப்படுவது இதுவரை யார் கண்ணிலும் படாமல் இருப்பது மிகவும் ஆச்சரியத்தை தரக்கூடியதாக உள்ளது. இப்பகுதியை கடக்கும் பொழுது மக்கள் மனதில் ஒரு வித பயத்துடனே இருட்டில் நடந்து செல்கிறார்கள். இப்பகுதியில் உள்ள தவ்ஹீத் ஜமாத் தொழுகை பள்ளியின் உள்ள விளக்கு மட்டுமே […]
கீழக்கரையில் மீண்டும் தலை தூக்கும் நாய் தொல்லை…
கீழக்கரை நகராட்சி பகுதியில் நாய்கள் அதிகரித்து பொதுமக்களுக்கு பெருமளவில் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றது. கீழக்கரை நகராட்சி பகுதிகளில் சுற்றித்திரியும் நாய்களை பிடிக்க நடவடிக்கை மேற்கொள்ள இன்று (19-07-2017) காலை 10.00 மணியளவில் மக்கள் நல பாதுகாப்புக் கழகத்தின் செயலாளர் முகைதீன் இப்ராகீம், பொருளாளர் முகம்மது சாலிஹ் ஹூசைன், கீழக்கரை மக்கள் பொது தளத்தின் ஆம்புலன்ஸ் கமிட்டி தலைவரும், கீழக்கரை கிழக்கு தெரு ஜமாஅத் துணைப்பொருளாளரும், சமூக ஆர்வலருமான முகம்மது அஜிகர், மக்கள் டீம் தளத்தின் ஒருங்கினைப்பாளர் அப்துல் […]
பொதுமக்களைப் பற்றி கவலை கொள்ளாத கட்டிட நிறுவனங்கள் ..
கீழக்கரையில் பல பகுதிகளில் கட்டுமானப்பணிகள் நடந்த வண்ணம் உள்ளது. ஆனால் கட்டுமானப் பணியில் ஈடுபடும் ஒப்பந்தக்காரர்கள் எந்த நிலையிலும் பொதுமக்களின் சிரமங்களைப் பற்றி சிறிது கூட கவலைப் படாமல் பொதுமக்கள் நடந்து செல்லும் பாதைகளிலும், வாகனங்கள் செல்லும் சாலைகளை ஆக்கிரமித்த வண்ணம்தான் கட்டுமானப் பொருட்களான கற்கள், மண்களை கொட்டிய வண்ணம் உள்ளனர். கீழே உள்ள படம் வடக்குத் தெரு தைக்காவில் இருந்து மதிக்கடை வழியாக செல்லும் சாலை, தினமும் ஆட்டோக்களும், பள்ளி வாகனங்களும் செல்லக் கூடிய சாலை, […]
நீர்த்துப் போன நீர் பந்தல்கள்..
கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு கீழக்கரையில் பல இடங்களில் நகராட்சி நிர்வாகம் உட்பட பல சமுதாய அமைப்புகள் போட்டி போட்டுக் கொண்டு நீர் பந்தல், மோர் பந்தல், சர்பத் பந்தல், ஜூஸ் பந்தல் என பல வகையான பந்தல்கள் அமைத்தன, மக்களின் தாக்கத்தையும் தீர்த்தன் சில நாட்கள் மட்டும். வெயில் உக்கிரம் குறைந்த பாடில்லை, ஆனால் உருவான பந்தல்கள் உருமாறி விட்டன. கீழக்கரையில் வெயிலுக்கு உருவான சில பந்தல்களை பார்வையிடச் சென்றோம். நகராட்சியால் அமைக்கப்பட்ட நீர் பந்தல் […]
மின்சார சேமிப்பு விளம்பரம் ஒரு பக்கம்.. வீண் விரயம் மறுபக்கம்..
நகராட்சி மூலம் மின்சாரத்தை சிக்கனப்படுத்தவும், சேமிக்கவும் வலியுறுத்தி பல வகையான விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்படுவது அனைவரும் அறிந்ததே, ஆனால் அதற்கு நேர்மாறாக பல இடங்களில் பகல் நேரங்களிலும் தெரு விளக்குகள் எரிந்து கொண்டிருப்பது மின்சார வாரிய அதிகாரிகளின் அலட்சிப் போக்கையே காட்டுகிறது. தமிழகத்தில் வறட்சி, தண்ணீர் பற்றாக்குறை, அடிக்கடி மின் உற்பத்தியில் தடங்கல் என்ற நிலை இருக்கும் சமயத்தில் இது போன்ற செயல்கள் மிகவும் கண்டிக்கத்தக்கதாகும்.
அரசு அறிவிப்பைக் காற்றில் பறக்க விடும் மருத்துவர்கள்..
கடந்த சில மாதங்களுக்கு முன்பு மருத்துவர்களுக்கு அறிவுறுத்தும் விதமாக மத்திய அரசால் அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டது, அதாவது மருத்துவர்கள் மருந்துகளின் மூலப் பெயர்களை மட்டுமே எழுத வேண்டும், தயாரிக்கும் நிறுவனம் சந்தைப்படுத்தும் பெயரை மருத்துவச் சீட்டில் எழுதக்கூடாது என்பதாகும். இதன் மூலம் மருந்து வாங்கும் நபர்கள் தங்களுடைய பொருளாதாரத்துக்கு ஏற்றவாறு மருந்துகள் வாங்க முடியும். ஆனால் எந்த ஒரு மருத்துவரும் அந்த அறிவிப்பை ஒரு பொருட்டாக எடுத்துக் கொண்டதாகவே தெரியவில்லை. ஆனால் அதையும் தாண்டி பல மருத்துவர்கள் […]
சாலையில் கொட்டப்படும் மணல் – தொடரும் அவலம்..
கீழக்கரையில் கட்டுமானப் பணிகளுக்காக மணல் கொட்டப்படும் அவலம் தொடர்ந்த வண்ணமே உள்ளது. இன்று (09-07-2017) காலை வள்ளல் சீதக்காதி சாலையில் கொட்டப்பட்டிருந்த மணலால் பாதசாரிகள் மற்றும் வாகன ஓட்டுனர்கள் பெரும் அவதிக்குள்ளானார்கள். அது சம்பந்தமாக நம் கீழை நியூஸ் இணையதளத்திலும் பல முறை சுட்டிக்காட்டி செய்திகள் வெளியிட்டு இருந்தது கவனிக்கதக்கது. இப்பிரச்சினையில் கடுமையான நடவடிக்கை எடுக்காத வரை இப்பிரச்சினை தீர்வுக்கு வராது. https://keelainews.in/2017/03/28/klkroad-280317-03/
பெருநாளைக்கு தயாராகும் கறிக்கடைகள்.. வரத்து குறைவால் விலை உயரும் அபாயம்….
ஈகைப் பெருநாளுக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், பெருநாளைக்கு முக்கிய பங்கு வகிக்கும் கிடாக்கறி வியாபரிகளும் பெருநாள் வியாபாரத்திற்கு தயார்படுத்த தொடங்கிவிட்டார்கள். இந்த வருடம் தண்ணீர் பஞ்சம் அதிகமாக உள்ளதால் கடைகளில் கிடாக்களின் வரவு குறைவாகவே உள்ளது. இது சம்பந்தமாக இத்தொழிலில் பல வருடங்களாக இருக்கும் ஜலீல் என்பவரிடம் கேட்ட பொழுது, இந்த வருடம் தண்ணீர் பஞ்சம் அதிகமாக இருப்பதால், சந்தையில் குறைந்த அளவே விற்பனைக்கு வந்துள்ளது, மேலும் கிடாவின் விலையும் சராசரி விலையை விட […]
கீழக்கரை வடக்குத்தெரு தைக்கா அருகில் உள்ள கால்வாய் முடிகளை ஒழுங்குபடுத்த நகராட்சி ஆணையர் ஆய்வு..
கீழக்கரையில் உள்ள வடக்குத்தெரு தைக்கா அருகில் உள்ள கால்வாய் மூடிகள் உடைந்த நிலையில் பல மாத காலங்களாக அபாயகரமான நிலையில் இருந்து வருகிறது. இது சம்பந்தமாக எழுந்த புகாரை அடுத்து நகராட்சி ஆணையர் வசந்தி இன்று நேரடி ஆய்வு செய்து விரைவில் சரி செய்வதாக உறுதியளித்துள்ளார். மேலும் நகரில் உள்ள பல்வேறு குறைகளை ஆணையர் வசந்தி நேரடியாக சென்று ஆய்வு செய்து நடவடிக்கை எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது. மேலும் தொடர்ந்து பல்வேறு மக்கள் குறைகளை கீழை நியூஸ் […]
கீழக்கரை நகருக்குள் நுழைய எந்த வாகன நுழைவு கட்டணமும் கிடையாது.. ஆணையர் திட்டவட்டம்…அறிவிப்பு பலகை வைக்கப்படும்..
இராமநாதபுரம் மற்றும் ஏர்வாடியில் இருந்து கீழக்கரை நகருக்கு வாகனங்கள் நுழையும் முக்கு ரோடு பகுதியில் குத்தகைக்காரர்கள் என்ற போர்வையில் வெளியூரில் இருந்து வரும் அனைத்து வாகனங்களுக்கும் வசூல் செய்யப்பட்டு வந்தது. இது சம்பந்தமாக கீழக்கரையில் உள்ள பல சமூக அமைப்புகள் மற்றும் அரசியல் சார்ந்த அமைப்புகள் கண்டனம் எழுப்பினார்கள், நகராட்சிக்கு புகாரும் தெரிவித்தனர். ஆனால் புகார் தெரிவித்த சில நாட்களுக்கு குத்தகைக்காரர்கள் காணாமல் போவார்கள், ஆனால் மீண்டும் சில நாட்களில் முளைத்து விடுவார்கள். இது சம்பந்தமாக கீழக்கரைக்கு […]
நண்பர்களாகிய ஆட்டோ ஓட்டுனர்கள் … அனுமதியில்லாத ஆட்டோ நிலையத்தால் சாலையில் போக்குவரத்துக்கு பகைவர்களாகிறார்கள்…
கீழக்கரையில் பிரதான சாலை வள்ளல் சீதக்காதி சாலையாகும். காலை முதல் மாலை வரை எப்பொழுதும் வாகனப் போக்குவரத்து மிகவும் அதிகமாக இருக்கும். இச்சாலையில்தான் அரசு அலுவலகங்கள், முக்கியமான வியாபார ஸ்தலங்கள், பள்ளிகள் என நிறைந்து உள்ளது. ஆனால் இச்சாலையை அகலப்படுத்த வாய்ப்பில்லாத நிலையில் தினமும் போக்குவரத்து நெரிசல் அதிகமாகிக் கொண்டே போகிறது. இந்த தினசரி நெரிசலுடன் முறையில்லாமல் சாலை ஓரங்களில் நிறுத்தப்படும் வாகனங்கள் மற்றும் எந்த அனுமதியும் இல்லாமல் முளைக்கும் ஆட்டோ நிலையங்கள் போக்குவரத்து நெரிசல்களை அதிகப்படுத்துகிறது. […]
நீங்கள் கீழக்கரை வாசியா?? பல் வலியா?? அப்படியென்றால் உங்களுக்கு வாரத்திற்கு ஒரு முறைதான் பல் வலி வர வேண்டும்…இல்லையென்றால் வசதி படைத்தவர்களாக இருக்க வேண்டும்…
ஆலும், வேலம் பல்லுக்கு உறுதி அதாவது ஆலமரக் குச்சியும், வேலமரக் குச்சியும் பல் விலக்கும் தூரிகையாக பயன்படுத்தினால் பல்லும் ஈறும் உறுதியாக இருக்கும் என்பது பழமொழி. அக்காலத்தில் சாம்பல், உப்பு ,போன்றவற்றை கொண்டு பல் துலக்கியதால் இறுதி வரை பல் உறுதியாக இருந்தது. ஆனால் மேல் நாட்டு கலாச்சாரம் படையெடுத்தது, சாம்பம், உப்பு பல்லுக்கு கேடு என்று பற்பசையை பல வகையில் அறிமுகப்படுத்தினார்கள். இளைய தலைமுறை ஆலையும், வேலையும், சாம்பலையும், உப்பையும் மறந்து விட்ட நிலையில் உங்கள் […]
குப்பையில்லா நகராட்சி, ப்ளாஸ்டிக் இல்லா நகராட்சி – கழிவுகள் கையாள்வது பற்றிய விழிப்புணர்வு கலந்தாய்வு கூட்டம்…
கீழக்கரை நகராட்சியில் இன்று (31-05-2017) காலை 11.00 மணியளவில் கீழக்கரை திடக்கழிவு மேலான்மை மற்றும் கையாளுதல் விதிகள் 2016ன் படி அத்திட்டங்களை செயல்படுத்தும் வழிமுறைகளைப் பற்றி கீழக்கரையில் உள்ள வர்த்தக உரிமையாளர்களுடன் விழிப்புணர்வு கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் குப்பைகளை பிரித்தளித்தல், பிளாஸ்டிக் ஒழிப்பு பற்றிய விதிமுறைகள் விவாதிக்கப்பட்டது. இக்கூட்டம் கீழக்கரை ஆணையர் M.R.வசந்தி தலைமையிலும், தலைமை எழுத்தர் சந்திரசேகர் முன்னிலையிலும், வர்த்தக சங்க செயலர் ரோட்டரி சுப்பிரமணியன் அவர்களால் தொடங்கப்பட்டது. இக்கூட்டத்தில் திடக்கழிவு விதிகள் பற்றியும், […]
திறப்பதற்கு (குடியை கெடுப்பதற்கு) சில நிமிடங்கள்.. மூடுவதற்கு (நல்வழி படுத்த) ஆறு மாத அவகாசம்…
கடந்த சில மாதங்களாக தமிழகம் முழுவதும் அரசால் நடத்தப்படும் டாஸ்மாக் சாராயக்கடையை அடைக்க கோரி பல இடங்களில் போராட்டங்களும், அதே போராட்டங்கள் மூலம் பல இடங்களில் கடைகள் சூறையாடப்படும் அளவுக்கு சென்றது. ஆனால் எதற்கும் அசைந்து கொடுக்காமல் தமிழக அரசாங்கம் மூடப்பட்ட கடைகளை மற்ற பிற இடங்களில் திறப்பதற்கான முயற்சியிலேயே இருந்து வந்தது. இதைத் தொடர்ந்து கீழக்கரையில் சில நாட்களுக்கு முன்னர் புதிய பேருந்து நிலையத்திற்கு செல்லும் வழியில் உள்ள மதுக்கடைகளை நாம்தமிழர் கட்சியினர் முற்றுகையிடப்போவதாக அறிவித்து […]
கீழக்கரையில் ரமலான் மாதத்தில் கடைகளை கூடுதல் நேரம் திறந்து வைக்க பொதுமக்கள் கோரிக்கை …
புனித மாதமான ரமலான் மாதம் நேற்று முதல் தமிழகமெங்கும் ஆரம்பம் ஆகியுள்ளது. இந்த புனித மாதத்தில் இஸ்லாமியர்கள் இரவு நேர தொழுகையை முடித்து விட்டு இரவு பத்து மணிக்கு மேல்தான் அன்றாட தேவைகளுக்காக பொருட்களை வாங்க கடைத் தெருவுக்கு செல்வார்கள். ஆனால் இந்த வருடம் காவல் துறையினரின் கெடுபிடியால் சாதாரண நாட்களைப் போல இரவில் 11.00 மணிக்குள் கடைகள் அடைக்கப் பட்டு விடுவதால் பொதுமக்கள் மிகவும் சிரமத்துக்கு ஆளாகிறார்கள். இதுபற்றி கீழக்கரை தெற்கு தெரு ஜமாத்தை சார்ந்தவர் […]
You must be logged in to post a comment.