கீழக்கரையில் குடும்ப அட்டைதாரர்கள் தங்களது குடும்ப நபர்களின் ஆதார் எண்ணை இணைக்காவிடின், நியாய விலை கடையில் எந்த பொருட்களும் கிடைக்காது என அரசு அறிவித்தது. கீழக்கரை நகரில் மட்டும் ஆயிரத்திற்கு மேற்பட்ட கார்டுகள் பிளாக் செய்யப்பட்டது. அதன் பின் ஒருசிலரை தவிர அனைவரும் தங்களது கார்டுகளை ஆக்டிவேட் செய்ய தாலூகா அலுவலகம் சென்று ஆன்லைன் பதிவு செய்துவந்தனர். 45 நாட்கள் பின் சம்பந்தப்பட்ட கடைகளில் ஆதார் எண்ணை இணைக்கலாம் என்று வாய்மொழி உத்தரவு வந்தது. இதில் பலர் […]
Category: பிரச்சனை
விடிவு காலம் பிறக்குமா..? வருடம் முழுதும் வற்றாத ஜீவ நதியாய் சாக்கடை ஓடும் வடக்கு தெரு பகுதிக்கு…
செவிடன் காதில் சங்கு ஊதினால் கூட விளங்கி விடும். ஆனால் கீழக்கரை நகராட்சிக்கு மட்டும் செவியிருந்தும் விளங்காத நிலைதான். வடக்குத் தெரு CSI பள்ளி அருகாமையில் வசிக்கும் பொது மக்கள் உண்மையிலேயே பாவம் செய்தவர்கள் தான் போலும். வடக்குத் நெரு நபர் சேர்மனாக இருந்த காலத்திலும் சரி, இன்று சொந்த செலவில் தெருவை சுத்தம் செய்யும் அரசியல்வாதிகள் இருந்தும் இந்த தெருவின் அவல நிலை மட்டும் யாருடைய கண்ணுக்கும் தெரிவதில்லை. இது சம்பந்தமாக நம்முடைய இணையதளத்தில் செய்தியும் […]
மையம் இருந்தும் சேவை இல்லாமல் இருக்கும் இ-சேவை மையம்…
கீழக்கரை அரசு மருத்துவமனை வளாகத்தில் இ-சேவை மையம் திறக்கப்பட்டு தொடர்ந்து இயங்கி வருகிறது. இங்கு பட்டா, சிட்டா நகல், ஆதார், வாக்காளர் அட்டைகள் பெறுவதற்காக நகராட்சி பகுதியைச் சேர்ந்த ஏராளமான பயனாளிகள் தினமும் வந்துசெல்கின்றனர். இதற்காக கம்ப்யூட்டர் ஆப்ரேட்டர்கள் 2 பேர் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இங்கிருந்த பிரிண்டர் மெஷின் பழுதடைந்துள்ளதால் கடந்த 2 மாதமாக இ.சேவை மையம் முடங்கியுள்ளது. இதனால் சான்றிதழ், அட்டைகள் பெறுவதற்காக வரும் பயனாளிகள் ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர். பழுதடைந்த பிரிண்டரை சரி செய்து பொதுமக்கள் அலைக்கழிக்கப்படாத […]
கீழக்கரை தெற்கு தெரு பகுதியில் குடிநீர் குழாய் பழுதால் வீணாகும் குடிநீர்
கீழக்கரை நகராட்சி மூலம் மிக குறைவான அளவே காவிரி கூட்டுக் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. பல தெருக்களில் குடிநீர் சரி வர வரவில்லை என பொதுமக்கள் புகார் தெரிவித்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில் தெற்குத் தெரு இஸ்லாமியா மெட்ரிக் பள்ளியின் பின்புறம் அமைந்திருக்கும் பொது குடிநீர் குழாயில் ஏற்பட்டுள்ள பழுதால் பெருமளவு குடிநீர் வீணாகி, இந்த பகுதி முழுவதும் தண்ணீர் வழிந்தோடியுள்ளது. தற்காலிகமாக தெற்குத் தெரு கிளை தவ்ஹீத் ஜமாத்தை சேர்ந்த சகோதரர்கள் குழாயில் இருந்து […]
கீழக்கரையில் தரமற்ற சாக்கடை மூடிகளால் வீணாகும் மக்கள் பணம்..
கீழக்கரையில் சாக்கடை வாருகால் மூடி போடுவதில் கடந்த ஐந்தாண்டுகளில் மட்டும் ஏறத்தாழ ரூபாய் அறுபது இலட்சத்திற்கும் மேலாக நிதிகள் ஒதுக்கப்பட்டு ஒப்பந்த பணிகள் மூலம் வேலை நடை பெற்றுள்ளது. ஆனால் ஒப்பந்தப்படி மூடிகள் போடப்படாமல் பல்வேறு குளறுபடிகளை செய்து ஒப்பந்ததாரர்கள் அதிகாரிகளை ஏமாற்றியுள்ளனர். நகரின் பல்வேறு இடங்களில் போடப்பட்ட முடிகளும் தரமற்றவைகளாக உள்ளது. இந்த முறைகேடு சம்பந்தமாக ஒப்பந்ததாரர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி கீழக்கரை மக்கள் நல பாதுகாப்புக் கழகம் சார்பாக கீழக்கரை நகராட்சி ஆணையாளருக்கு கடந்த […]
கீழக்கரையில் சுகாதார விழிப்புணர்வு பிரசுரம்..
கீழக்கரையில் நேற்று முதல் பல இடங்களில் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படும் விதமாக சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வு பிரசுரம் வழங்கப்பட்டது. இந்தப் பிரசுரங்கள் கீழக்கரை மக்கள் களம், கீழை நியூஸ் மற்றும் சட்டப்போராளிகள் இணைய தள குழுமம் சார்பாக வினியோகிக்கப்படுகிறது.
கீழக்கரையில் உயர் மின் அழுத்த வயர்கள் பழுது பார்க்கும் பணிகள் தொடக்கம்..
கீழக்கரையில் கடந்த காலங்களில் வீட்டின் அருகாமையில் அமைந்திருக்கும் உயர் மின் அழுத்த வயர்களால் விபத்துக்கள் சில நடந்தது. அதை நிவர்த்தி செய்யும் விதமாக கீழக்கரையில் உள்ள சமூக ஆர்வலர்கள் மற்றும் கீழக்கரை சட்டப்போராளிகள் குழுமம் சார்பாக முதலமைச்சர் தனிப்பிரிவுக்கு மனுக்கள் அனுப்பப்பட்டது. பின்னர் அதைத் தொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன்னர் மனுதாரர்களுக்கு மின்சார வாரியத்திடம் இருந்து விரைவில் நிவர்த்தி செய்யும் பணிகள் தொடங்கும் என்ற அறிவிப்பு அனுப்பப்பட்டது. அதைத் தொடர்ந்து இன்று கீழ்ககரையில் நான்காவது வார்டு பகுதிக்குள் உட்பட்ட […]
இறைச்சி வியாபரிகளை மகிழ்விக்கும் டிசம்பர் மாதம்.. சாமானியனை பரிதவிக்க வைக்கும் இறைச்சி வியாபாரம்..
டிசம்பர் மாதம் வந்தாலே கீழக்கரை களை கட்ட துவங்கி விடும். சீலா மீன் சீசனில் தொடங்கி கல்யாணம் வரை அதிகமாக டிசம்பர் மாதத்திலேயே நடைபெறும். ஆனால் இந்த மாதத்தையும் ஆட்றறைச்சி வியாபாரிகள் தங்களுக்கு சாதாகமாக்கி கிலோ 400 ரூபாய்க்கு விற்கும் இறைச்சியை அசாதாரண முறையில் 500 வரை விற்க தொடங்கி விடுகிறார்கள். வெளிநாட்டில் இருந்து விடுமுறைக்கு வரும் மக்களோ அவசரத்தைக் கருதி வாங்க தொடங்கி விடுகிறார்கள் ஆனால் ஊரிலேயே வாழும் சாமானிய மனிதர்களும் விசேசங்கள் நடத்தும் ஏழை […]
You must be logged in to post a comment.