ராமநாதபுரம் சின்னக்கடை பகுதியில் சாலையோர வியாபாரிகள் ராமநாதபுரம் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து சாலையில் அமர்ந்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர் . இது தொடர்பாக எஸ் டி பி ஐ கட்சியின் கிழக்கு மாவட்ட தலைவர் ரியாஸ்கான் வெளியிட்ட அறிக்கையில் ராமநாதபுரம் சின்னக் கடை பகுதியில் சாலை ஓரத்தில் வியாபாரம் செய்து வரும் சிறு வியாபாரிகளை ஒடுக்கும் நோக்கத்தோடு எந்தவித முன்னறிவிப்பும் இன்றி சாலையோர வியாபாரிகளின் காய்கறிகள் உள்ளிட்ட வியாபாரப் பொருட்களை நகராட்சி நிர்வாகம் குப்பை வண்டியில் ஏற்றி […]
Category: பிரச்சனை
கீழக்கரை மூணாவது வார்டு பகுதியில் மின் விளக்கு எரியாமல் பொதுமக்கள் அவதி ! நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுகோள் !!
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை மூணாவது வார்டுக்கு உட்பட்ட சதக்கத்துல் ஜாரியா நடுநிலைப் பள்ளியில் எதிர்ப்புற சந்தில் பொதுமக்கள் மற்றும் பெண்கள் அதிகமாக பயன்படுத்தக்கூடிய பாதை உள்ளது . இப்பாதை இரவு நேரங்களில் இருளடைந்து காணப்படுவதால் பெண்களும் குழந்தைகளும் அவ்வழியில் செல்வதற்கு அச்சப்பட்டு வருகின்றனர். மேலும் வயதானவர்கள் அவ்வழியில் பலமுறை விழுந்ததாகவும் சொல்லப்படுகிறது . நகர்மன்ற உறுப்பினர் கண்டும் காணாமல் இருப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. அப்பகுதியில் நீண்ட காலமாக பாராளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி நிதியிலிருந்து சூரிய […]
அராஜக போக்கை கையாளும் கீழக்கரை நகராட்சி.. மக்களை அச்சுறுத்தும் பணியில் நகராட்சி மேலாளர்..
கீழக்கரையில் விதிக்கப்பட்டு வரும் சட்டவிரோதமான வரிவிதிப்பை கண்டித்து கடந்த 18/03/2019 அன்று அனைத்து ஐக்கிய ஜமாத் சார்பாக நிரந்தரமான புதிய ஆணையர், சொத்து வரிக்கு நீதிமன்றம் மூலம் தீர்வு காணுதல் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. ஆனால் இந்த முடிவுகள் அனைத்து முறையான ஆவுணங்கள் மற்றும் முகாந்திரத்தின் அடிப்படையிலேயே முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில் மதுரையில் வீட்டு வரி சம்பந்தமான வேறு வழக்குக்கு நீதிமன்றம் 5000/- அபாரதம் விதித்த செய்தியின் நகலை எடுத்து மக்களை பயமுறுத்தும் நோக்கில் நகராட்டி அலுவலகத்தில் […]
சுகாதார சீர்கேட்டின் உச்சக்கட்டத்தில் கீழக்கரை அரசு மருத்துவமனை, நகராட்சி – அரசாணையை ஊதாசினப்படுத்திய நகராட்சி நிர்வாகம்…
கீழக்கரை நகராட்சி நிர்வாகத்திற்கு உட்பட்ட நகராட்சி அலுவலகம் மற்றும் அரசு மருத்துவமனையில் நிலவி வரும் அவல நிலையை கீழக்கரை மக்கள் நல பாதுகாப்பு கழகம், சட்ட விழிப்புணர்வு இயக்கம் மற்றும் பல் வேறு அமைப்புகள் முதலமைச்சர் தனிப் பிரிவுக்கு மனுக்கள் பதிவு செய்தனர். ஆனால் அதற்கும் முறையான நடவடிக்கை எடுக்காததால் தகவல் அறியும் உரிமை ஆணை மூலமாக நீதிமன்றம் மூலமாக நகராட்சி அலுவலகத்தை நேரடியாக ஆய்வு செய்ய அனுமதி பெறப்பட்டது. அதன் அடிப்படையில் கடந்த வாரம் சட்ட […]
கீழக்கரை நகராட்சியின் மெத்தனப் போக்கு… ஹமீதியா தொடக்கப்பள்ளி அருகாமையில் குவிந்து கிடக்கும் குப்பைகள்…
கீழக்கரையில் சுகாதாரம் என்பது கேள்வி குறியாகவே மாறிவிட்டது, நகராட்சியின் மெத்தனப் போக்கால். கடந்த பல வருடங்களாக தனியார் நிறுவனத்தால் சேவை நோக்கில் செய்து வந்த சுகாதார பணியையும் நிறுத்திவிட்டார்கள். அரசாங்கமே தன் பணியை செய்வது பாராட்டுக்குரியது, ஆனால் கீழக்கரையில் நிலைமை தலைகீழ், சுகாதாரம் என்பது சீர்குலைந்து கொண்டே வருகிறது. மேலே நீங்கள் காணும் புகைப்படங்கள் சிறுவர்கள் அதிகமாக செல்லும் ஹமீதியா தொடக்கப்பள்ளி பகுதி. இது போன்ற இடங்களே கவனிப்பாரற்று கிடக்கும் பொழுது வேறு இடங்களைப் பற்றி கூற […]
மழையால் கீழக்கரை சாலைகளில் விழுந்து கிடக்கும் மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்குமா நகராட்சி??
கீழக்கரை மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் பருவ மழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் பல இடங்களில் மரங்கள் விழுந்து பொதுமக்கள் நடப்பதற்கு மிகவும் சிரம்ப்பட்டு வருகிறார்கள். நகராட்சி அதிகாரிகளிடம் தெரிவித்தாலும் இன்று (ஞாயிறு) விடுமுறை என்பதால் அடுத்த நாள் சாலையை சரி செய்வதாக பதில் தருகிறார்கள். இராமநாதபுரத்தில் மழைக்காக செய்த முன்னேற்பாடு பணிகள் கீழக்கரைக்கு பொருந்தாதா??? அல்லது பணியாளர்கள் விடுமுறை கழிந்து வரும் வரை பொது மக்கள் அவதிப்பட வேண்டுமா??. தகவல்:- மக்கள் டீம்.
திருப்புல்லானியில் இருந்து சேதுக்கரை செல்லும் வழியில் அதிகரிக்கும் மணல் கொள்ளை…
திருப்புல்லாணியில் இருந்து சேதுக்கரை செல்லும் ரோட்டில் மேலப்புதுக்குடி அருகே அனுமதியில்லாமல் மணல் கொள்ளையடிப்பதாக அங்குள்ள மக்கள் கூறுவதை அறிந்து கொள்ள அங்கு சென்ற பொழுது, 30 அடி அகலம், ஆறடி பள்ளத்தில் கிலோ மீட்டர் தூரத்துக்கு மண் அள்ளப்பட்டு அங்குள்ள பல பனை மரங்கள் வீழ்ந்தும், இன்னும் பல வீழக்கூடிய நிலையிலும் இருந்தது வேதனையான காட்சியாக இருந்து. நீங்கள் காணும் புகைப்படம் அனைத்தும். 10/09/2018 அன்று காலையில் எடுக்கப்பட்டது. அப்பகுதியில் பிள்ளையார் கூட்டம் ஊரணியில் தண்ணீர் பிடிக்க […]
சாக்கடைக்குள் மூழ்கும் கீழக்கரை ரிஃபாய் தைக்கா..
கீழக்கரையும் சுகாதாரமின்மையும் நகமும் சதையும் போல் பிரிக்க முடியாத ஒன்றாகி வருகிறது. எத்தனை களப் பணியாளர்கள் நியமித்தாலும், சுகாதாரம் என்பது கேள்வி குறியாகவே உள்ளது. கீழக்கரையின் முக்கிய பகுதியான முஸ்லிம் பஜார் ரிஃபாய் தைக்கா கிட்டத்தட்ட சாக்கடையில் மூழ்கும் நிலையில் உள்ளது. எத்தனையோ தெருக்களுக்கு வலிய சென்று சுத்தம் செய்யும் நகராட்சி ஊழியர்கள், தேவையுடைய இந்த தெருவை கவனிப்பார்களா?? இதற்கு முக்கிய காரணம் அப்பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான குப்பை கிடங்குதான் என்று அத்தெரு மக்கள் கூறுகிறார்கள். […]
தூய்மை இந்தியா திட்டம் கீழக்கரைக்கு விதி விலக்கா?? நாறி கிடக்கும் தெருக்கள்..
கீழக்கரை நகராட்சி இருந்தும், பகுதி நேர ஆணையர் போலவே அங்குள்ள செயல்பாடுகளும் முறையில்லாத வகையில் செயல்பட்டு வருகிறது. கீழக்கரை நகராட்சியில் சுகாதாரம் என்பது ஒரு பெரிய கேள்வி குறியாகவே உள்ளது. கீழக்கரையில் சொக்கநாதர் ஆலயம் எதிர்புரம், மேலத்தெரு செய்யிதினா அபுபக்கர் சித்திக் பள்ளி வாசல் பகுதி, வடக்குத் தெரு CSI பள்ளி பகுதி, கொந்த கருணை அப்பா பள்ளி செல்லும் வழி, புதுக்குடி, வண்ணாங்குடிருப்பு, தட்டாந்தோப்பு, சதக்கதுல்லா அப்பா வளாகம் பின்புறம் மற்றும் இன்னும் பிற பகுதிகளிலும் குப்பை கிடங்குகள் […]
அனைத்து பணிக்கும் நகராட்சி தேவையில்லை – களத்தில் இறங்கிய அல் அமீன் சகோதரர்கள் ..
இன்று (30/07/2018) சில மணிக்கு முன்னால் சாக்கடையில் கலக்கும் குடிநீர் என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம். அச்செய்தியை பார்த்தவுடன் கீழக்கரை வடக்குத் தெரு அல் அமீன் அமைப்பைச் சார்ந்த சகோதரர்கள் உடனடியாக நகராட்சியை எதிர்பார்க்காமல், கையில் இருந்து செலவு செய்து புதிய குழாய் பொறுத்தியுள்ளார்கள். மேலும் இது சம்பந்தமாக கூறிய அல் அமீன் அமைப்பு உறுப்பினர் ஒருவர், தற்காலிமாக குடிநீர் வீணாவதை தடுக்க ஏற்பாடு செய்துள்ளோம். இன்னும் ஒரு சில நாட்களில் நிரந்தரமாக தீர்வு காணும் வண்ணம், […]
கீழக்கரையில் வீணாகும் குடிநீர் – சாக்கடையுடன் கலக்கும் அவலம்.. வீடியோ பதிவு..
கீழக்கரை தெற்குத் தெவில் இருந்து வடக்குத் தெருவை நோக்கி செல்லும் முச்சந்தி சந்திப்பில் உள்ள குடிநீர் குழாய் உடைந்து பல நாட்களாக குடிநீர் வீணாகிய வண்ணம் உள்ளது. அவ்வழியாக தினமும் பல நகராட்சி ஊழியர்கள் கடந்து சென்ற வண்ணம்தான் உள்ளனர். ஆனால் யாரும் இதை சீர் செய்ய முயற்சி எடுக்கவில்லை என்பது மிகவும் வேதனையான விசயம். அப்பகுதி மக்களும் தங்களால் இயன்ற அளவு தண்ணீர் வீணாவதை தடுக்க முயற்சி செய்தாலும், தண்ணீர் சாக்கடையில் கலந்த வண்ணம்தான் உள்ளது. […]
“வாழ தகுதியற்ற ஊராக மாறுகிறதா கீழக்கரை??”- மருத்துவர்கள் எச்சரிக்கை.. சமூக ஆர்வலர்களின் முயற்சிகளை அலட்சியப்படுத்தும் நகராட்சி ..
“SMART CITY – KILAKKARAI” கேட்பதற்கு மிகவும் இனிமையாகவும் சந்தோசமாகவும் இருக்கிறது. ஆனால் எப்பொழுது ஆகப் போகிறது என்பது யாருக்கும் தெரியாத விடை. ஆனால் மறுபுறம் கீழக்கரையோ தினம், தினம் சுகாதாரத்தில் பின்னோக்கி சென்ற வண்ணமே உள்ளது. கீழக்கரையில் எங்கு திரும்பினாலும் சாக்கடை, குப்பை மேடுகள், கடற்கரையில் கலக்கும் கழிவு நீர், தெருக்களில் சாக்கடை வாருகால் மூடிகள் உடைந்து ஓடும் சாக்கடை, தேங்கி நிற்கும் கழிவு நீர், சொறி நாய்கள் மற்றும் பன்றிகளின் நடமாட்டம். ஊரெங்கும் நிறைந்திருக்கும் […]
மின்சார தேவை ஒரு புறம்.. வீண் விரயம் மறுபுறம்..
கீழக்கரையில் கிட்டதட்ட நாற்தாயிரத்திற்கு மேலான மக்கள் 21 வார்டுகளில் வசித்து வருகின்றனர். அதே போல் கீழிக்கரையில் மின்சார வினியோகமும் விடுமுறை மற்றும் பெருநாள் காலங்களில் அதிகமாக இருக்கும். இதை அடிப்படையாக வைத்து மாதந்தோறும் பராமரிப்பு என ஒரு மின் தடை உண்டு, ஆனால் எந்த வகையான பராமரிப்பு என்று யாரும் புரிந்து கொள்ள முடியாது காரணம் அதையும் தாண்டி பல நாட்கள் அறிவிக்கப்படாத மின் வெட்டுக்கள் உண்டாகும். ஆனால் பொதுமக்கள் மத்தியில் எப்பொழுதுமே இது மின்சார சேமிப்புக்கான […]
நாய்களுக்கும், கால்நடைகளுக்கும் கூடாரமாக மாறி வரும் கீழக்கரை தெருக்கள்…
கீழக்கரை நகர் வீதிகளில் உல்லாசமாக திரியும் தெரு நாய்களும், ஒய்யாரமாக சுற்றி வரும் கால்நடைகளும் நாளுக்கு நாள் பெருகிய வண்ணம் உள்ளது. கீழக்கரையில் சில மாதங்களுக்கு முன்பு தெரு நாய்களை அப்புறப்படுத்த மனுக்கள் கொடுக்கப்பட்டு சில நாட்கள் நடவடிக்கை எடுக்கப்பட்டது, பின்னர் மீண்டும் தெரு நாய்களின் தொல்லை அதிகரித்துள்ளது. அதே போல் கீழக்கரை நகர் முழுதும் உள்ள ரோடு மற்றும் வீதிகளில் ஒய்யாரமாக சுற்றித் திரியும் மாடுகளால் பாதசாரிகள் மற்றும் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகிறார்கள். […]
கீழக்கரையில் ஈத் பெருநாளன்று சிறுமிகளை ஈவ் டீசிங் செய்த பிரச்சனையில் இரு தரப்பினரிடையே மோதல் – இருவர் படுகாயம்..பெருகி வரும் வன்முறை கலாச்சாரம்….
கீழக்கரை பழைய குத்பா பள்ளி தெரு பகுதியில் நேற்று முன் தினம் பிற்பகலில் சிறுமிகளை ஈவ் டீசிங் செய்த பிரச்சனையில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் இருவர் படுகாயம் அடைந்து அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 16/06/2018 அன்று ஈத் பெருநாளன்று பிற்பகலில் சேரான் தெருவை தேர்ந்த முஹம்மது நபீல் என்பவர் தன்னுடைய 12 வயது சகோதரியை இரு சக்கர வாகனத்தில் ஏற்றிக் கொண்டு பழைய மீன் கடை வழியாக வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது அந்த பகுதியில் நின்று […]
கீழக்கரை நகராட்சி நிர்வாகமும் சுகாதாரத்துறையும் விழித்துக் கொள்ள வேண்டிய தருணம்..
கீழக்கரை நகர் ரமலான் முழுவதும் பரபரப்பாக இருக்கும் மாதம். அதில் மிகவும் முக்கியமாக உணவகங்கள், அதிலும் மாலை நேரத்தில் நோன்பு திறப்பதற்காக விற்கப்படும் உணவு வகைகளான போண்டா, பஜ்ஜி, பஃப் போன்ற வகைகள் அமோகமாக விற்கப்படும். ஆனால் இந்த உணவு வகைகள் அனைத்தும் சுகாதார முறைப்படி விற்கப்படுகிறதா என்பது பெரிய கேள்வி குறியாகும். ஏற்கனவே கலப்பட பொருட்கள் மிகுந்து கிடக்கும் இந்த உணவு சந்தையில் ஆரோக்கியிமில்லாமல் சமைக்கப்படும் உணவுகளால் பொதுமக்கள் பல் வேறான நோய்களால் பாதிக்கப்படுகிறார்கள் என்பதே […]
நேற்று கீழை நியூஸ் செய்தி – இன்று தெரு விளக்கு சரி செய்யப்பட்டது- மின்சார வாரியத்துக்கு நன்றி..
கீழக்கரை வடக்குத் தெரு தைக்கா அருகில் முக்கிய பகுதியில் தெரு விளக்கு பல மாதங்களாக எரியவில்லை என்று செய்தி வெளியிடப்பட்டது. அதைத் தொடர்ந்து இன்று மின்சார வாரியத்தால் தெரு விளக்கு சரி செய்யப்பட்டது. நோன்பு நேரத்தில் இரவு நேரங்களில் வெளிச்சம் இல்லாமல் அவதிப்பட்ட மக்களுக்கு தெரு விளக்கு சரி செய்யப்பட்டது நிம்மதியை தந்துள்ளது. இப்பகுதி மக்கள் மின்சார வாரியத்திற்கும் நன்றிகளை தெரிவித்தனர்.
வருவாய் கோட்டாட்சியர் விசாரணைக்கு ‘சட்டப் போராளிகள்’ஆஜர் – கீழக்கரை தாலுகா அதிகாரிகளை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டுகோள்
கீழக்கரை வட்டாட்சியர் அலுவலகத்தில் பணி நேரத்தில் அதிகாரிகள் தங்கள் இருக்கைகளில் இல்லாததால் தாலுகா அலுவலகத்திற்கு பல்வேறு அரசு நலத் திட்டங்களுக்கு விண்ணப்பிப்பதற்காக வரும் பொதுமக்கள் பெரும் அவதி அடைந்து வருவதை சுட்டிக் காட்டி கடந்த மாதம் மாண்புமிகு தமிழக முதலமைச்சரின் தனிப் பிரிவிற்கு கீழக்கரை ‘சட்ட விழிப்புணர்வு இயக்கம்’ சார்பாக 65 க்கும் மேற்பட்ட சட்டப் போராளிகள் மனு செய்திருந்தனர். அதே போல் கீழக்கரை மக்கள் நல பாதுகாப்புக் கழகம், இந்திய தவ்ஹீத் ஜமாஅத் உள்ளிட்ட சமூக நல அமைப்பினர் […]
விடாது துரத்தும் டெங்கு.. அச்சத்தில் கீழக்கரை மக்கள்.. என்றும் போல் உறக்கத்தில் நகராட்சி…:
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரைக்கும் டெங்கு காய்ச்சலுக்கும் தொடரும் பந்தம் போல் தொடர்ச்சியாக பொது மக்கள் டெங்கு காய்ச்சலால் பாதித்த வண்ணம் உள்ளனர். இதற்கு முக்கிய கீழக்கரை நகரில் ஆங்காங்கே மழை போல் உருவெடுத்தது கிடக்கும் குப்பை கிடங்குகள். இது சம்பந்தமாக 6 மாதங்களுக்கு முன்பே SDPI, மக்கள் டீம், சட்ட போராளிகள், விடுதலை சிறுத்தை, நகர் நல இயக்கம், நாம் தமிழர் மற்றும் இன்னும் பல சமூக அமைப்புகளும் புகார் மனுக்களை அளித்தனர். அச்சமயத்தில் மாவட்ட ஆட்சி […]
அமைப்புகளும், மனுக்களும் கூடினாலும் பிரச்சினைகளுக்கு கீழக்கரையில் தீர்வில்லை.. கீழக்கரை ஊர்மக்கள் / கூட்டமைப்பு சார்பாக மனு…
கீழக்கரை நகராட்சியில் நடைபெற்று வரும் நிர்வாகச் சீர்கேடுகள் என்பது சீர் செய்வது கடினம் என்ற அளவுக்கு புற்று நோய் போல் முற்றி கொண்டேதான் வருகிறது. கீழக்கரையில் உள்ள அரசியல் கட்சிகள், சமூக ஆர்வலர்கள் மற்றும் அவர்கள் சார்ந்த அமைப்புகள் மனுக்கள் கொடுத்தாலும் செவிடன் காதில் சங்கு ஊதிய கதையாகவே உள்ளது. கடந்த 31.01.2018 அன்று கீழக்கரை நகராட்சி ஆணையாளராக இருந்த வசந்தி குறுகிய காலத்திலேயே பல அதிருப்பதிகளுடன் பணியிடம் மாறுதலுக்கு பின் பரமக்குடி ஆணையாளர் நாராயணன் கீழக்கரை […]
You must be logged in to post a comment.