கீழக்கரை பகுதிகளில் பெரும்பாலான சொந்த பந்தங்களின் வீடுகளுக்கு செல்லும் போது உங்கள் பிள்ளைகள் எங்கே என நாம் கேட்டால், கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருக்கிறான், கால்பந்து விளையாடிக் கொண்டிருக்கிறான். கராத்தே, குங்க்பூ பயிற்சியில் எதிரியை துவம்சம் செய்து கொண்டிருக்கிறான் என்று அதிர்ச்சி பதில் தருகின்றனர். இவையெல்லாம் எந்த மைதானத்தில் நடக்கிறது..? என்று கேட்டால் அவர்கள் தரும் பதில் நம்மை கதிகலங்க வைக்கிறது. இது போன்ற விளையாட்டுகளை எல்லாம் நம் பிள்ளைகள் விளையாடி மகிழ்வது வீட்டுக்குள்ளே.. மூலையில் அமர்ந்து, வீடியோ கேம் […]
Category: கீழை டைரி
கீழை டைரி
கீழக்கரையில் தொன்று தொட்டு தொடரும் சுத்தமான பசும்பால் வியாபாரம் – ‘மில்க் மேன்’ கொம்பூதி குப்புசாமியின் மலரும் நினைவுகள்
பிறந்த குழந்தைகளுக்கு தாய்ப்பாலுக்கு பிறகு என்ன உணவு கொடுக்க வேண்டும் என்பதில் எல்லா பெற்றோருக்கும் குழப்பம் வரும். குழந்தையின் முதல் உணவு பால் தான். இயற்கை தரும் இனிய ஊட்டச்சத்து பானம். பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர், மனிதன் விவசாயத்திலும் கால்நடை வளர்ப்பிலும் ஈடுபட்டபோது பிற விலங்குகளின் பாலைப் பயன்படுத்தத் தொடங்கினான். ஆடு, பசு, எருமை, கழுதை, குதிரை… ஏன் ஒட்டகப்பால் வரை மனிதன் பருகாத பாலே இல்லை. ஆனால், ‘தாய்ப்பாலுக்குப் பிறகு பசும்பாலே குழந்தைகளுக்கு எளிதில் ஜீரணம் […]
கீழக்கரை வீதிகளில் ‘ஜவ்வு மிட்டாய்’ வாங்க அலைபாயும் சிறுவர் கூட்டம் – மலரும் நினைவுகள்
கீழக்கரை பகுதியில் 40 வயதைக் கடந்து விட்டவர்கள், தாங்கள் சிறுவர்களாய் விளையாடி திரிந்த காலத்தில், தெருக்களுக்குள் பம்பாய் மிட்டாய் என்ற இந்த ஜவ்வு மிட்டாயை நண்பர்களோடு சேர்ந்து கொண்டு விதவிதமான டிசைன்களில் வாங்கி சாப்பிட்டதை மறந்திருக்க முடியாது. கீழக்கரை பகுதியில் இதற்கு சவுக்கு மிட்டாய், சவ்வு மிட்டாய், பொம்மை மிட்டாய் என பல பெயர்களில் அழைப்பதுண்டு. அதிலும் நிச்சயமாக நோன்பு பெருநாள், ஹஜ்ஜுத் பெருநாள் மணல் மேட்டு கண்காட்சி திடலில், ஊஞ்சலில் அமர்ந்தவாறு, பால்ய நண்பர்களுடன் புத்தாடைகள் […]
You must be logged in to post a comment.