தென் மாவட்டங்களில் பலத்த காற்று: செங்கோட்டையில் கனமழைக்கு வாய்ப்பு; தென்காசி வெதர்மேன் ராஜா தகவல்..

தென் மாவட்டங்களில் இன்று (02.12.2024) பலத்த காற்று வீசும் எனவும், செங்கோட்டையில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தென்காசி வெதர்மேன் ராஜா தெரிவித்துள்ளார். இது பற்றிய அவரது வானிலை அறிவிப்பில், புயல் சின்னமானது அரபிக்கடல் ஈரப்பதத்தை இழுப்பதால் கேரளா மற்றும் தமிழக மலை மாவட்டங்களில் மேற்கு திசை காற்று வலுவடைந்துள்ளது. வழக்கமாக தென்மேற்கு பருவமழை தீவிரமாக உள்ள காலத்தில் காற்று வீசுவது போல இன்று தென் மாவட்டங்களில் பலத்த காற்று வீசும். குறிப்பாக கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் மணிக்கு 55 […]

பெஞ்சல் புயல் எதிரொலி! கேரளா செல்லும் ஐயப்ப பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிப்பு..

ஃபெஞ்சல் புயலின் தாக்கத்தால் கேரளாவில் வருகிற 4 ஆம் தேதி வரை கனமழை தொடரும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி சபரிமலை, பம்பை, நிலக்கல், எருமேலி ஆகிய இடங்களில் நேற்று கனமழை பெய்தது. சபரிமலையில் நேற்று காலை முதல் மழை பெய்த நிலையில் மதியம் பனிமூட்டமும் இருந்தது. மதியம் மழை சற்று ஓய்ந்தாலும், பிற்பகலில் மீண்டும் வலுத்தது. காலையில் குறைவாக பக்தர்கள் வந்த நிலையில் பிற்பகலில் கூட்டம் அதிகமாக இருந்தது. கொட்டும் […]

மாற்றுத்திறனாளிகளுக்கு 4% இடஒதுக்கீடு: தமிழக அரசுக்கு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்…

அரசு துறைகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீத இடஒதுக்கீட்டை தமிழக அரசு நடைமுறைப்படுத்த வேண்டும் என்று பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா். இது தொடா்பாக அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் அரசு வேலைவாய்ப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கான இட ஒதுக்கீட்டின் அளவு 4 சதவீதமாக உயா்த்தப்பட்டுள்ளது. அந்த இடங்களில் தகுதியான மாற்றுத்திறனாளிகளை அமா்த்த சிறப்பு ஆள்தோ்வுகள் நடத்தப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்து ஒன்றரை ஆண்டுகளாகும் நிலையில், இதுவரை அத்தகைய சிறப்பு ஆள்தோ்வு நடத்தப்படவில்லை. சட்டப்பேரவையிலும், பேரவைக்கு வெளியிலும் […]

கன மழை எச்சரிக்கை: பல்வேறு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை!!

கனமழை எச்சரிக்கை மற்றும் புயலால் பாதிக்கப்பட்டுள்ள விழுப்புரம், கடலூர் உள்பட 12 மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு திங்கள்கிழமை(டிச.2) விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். வங்கக் கடலில் உருவான ஃபென்ஜால் புயல் சனிக்கிழமை இரவு 10.30 மணி முதல் 11.30 மணியளவில் மரக்காணம், புதுச்சேரி இடையே கரை கடந்தது. அதையடுத்து புதுச்சேரி, விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை கொட்டியது. புயல் காரணமாக புதுச்சேரி, விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட வடதமிழக கடலோர மாவட்டங்கள் […]

காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நிலவும் ஃபெஞ்சல் புயல்: 13 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!!

காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நிலவும் ஃபெஞ்சல் புயல்: 13 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!! சென்னை: ஃபெஞ்சல் புயல் கரையை கடந்த புதுச்சேரி, விழுப்புரம் பகுதியில் அதிகனமழை கொட்டி தீர்த்தது. அதிகபட்சமாக விழுப்புரம் மாவட்டம் மயிலத்தில் 51 செ.மீ. புதுச்சேரியில் 49 செ.மீ. மழை பெய்துள்ளது. இன்று 13 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலசந்திரன் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: […]

பென்ஜால் புயல் எதிரொலி! பல்லவன், வந்தே பாரத், தேஜஸ், வைகை, உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட ரயில்கள் இன்று ரத்து!

கனமழையால் ரயில் தண்டவாளத்தில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால், சென்னையில் இருந்து இயக்கப்படும் 6 ரயில்கள் இன்று முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. ஃபென்ஜால் புயல் சனிக்கிழமை நள்ளிரவு புதுச்சேரி அருகே கரையைக் கடந்ததை அடுத்து, விழுப்புரம், புதுச்சேரி பகுதிகளில் வரலாறு காணாத மழை பெய்தது. இதனால், விக்கிரவாண்டி – முண்டியம்பாக்கம் இடையேயான தண்டவாளத்தில் பாலத்துக்கு மேல் வெள்ள நீர் சூழ்ந்தது. இதனால், ரயில்கள் இயக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. நேற்றிரவு தென் மாவட்டங்களில் இருந்து […]

பகுதி நேர வேலை (PART TIME JOB) எனும் பெயரில் மோசடி; இருவர் கைது..

ஆன்லைன், சமூக வலைதளங்கள் மற்றும் போலியான இணையதளங்கள் மூலம் ஆஃபர் எனும் பெயரில் தினமும் பல்வேறு வகையான மோசடிகள் நடைபெற்று வருகிறது. ஆன்லைன் விளம்பர ஆஃபர்களை நம்பி பலர் மோசடி கும்பல்களிடம் சிக்கிக் கொள்வதும், தொடர்ந்து சைபர் கிரைம் பிரிவில் புகாரளிப்பதும் தொடர்கிறது. இந்நிலையில், சைபர் கிரைம் காவல்துறை சார்பில், பொதுமக்கள் அளிக்கும் மோசடி குறித்த புகார்களை விசாரித்து உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில், பகுதி நேர வேலை என்ற பெயரில் முதலீடு செய்ய […]

சட்ட விதிகளை மீறி கால்நடைகளை கடத்துவோர் மீது கடும் நடவடிக்கை; தென்காசி மாவட்ட கலெக்டர் எச்சரிக்கை..

சட்ட விதிமுறைகளை மீறி கால்நடைகளை கடத்துவோர் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர் தெரிவித்துள்ளார். தென்காசி மாவட்டத்தில் கால்நடைகளை வாகனங்களில் ஏற்றிச் செல்லும் போதும் இறைச்சிக் கூடங்களில் கால்நடைகள் வெட்டப்படும் போதும் பின்பற்றப்பட வேண்டிய சட்டப்பூர்வமான விதிமுறைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென்காசி மாவட்டத்தில் ஆறு கால்நடை சந்தைகளும், இரண்டு சோதனை சாவடிகள் புளியரை மற்றும் மேக்கரை பகுதிகளில் அமைந்துள்ளன. இம்மாவட்டத்திலுள்ள கால்நடை சந்தைகளில் விற்கப்படும் மற்றும் வாங்கப்படும் […]

விவசாயிகள் சொத்துக்கள் அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்க கூடாது!- பி.ஆர்.பாண்டியன்..

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் பி.ஆர்.பாண்டியன் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-திருச்சி மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி இல்லாமல் திருச்சியில் நடத்தப்படும் கண்காட்சியை உடனடியாக நிறுத்த வேண்டும். விவசாயிகள் சொத்துக்கள் அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்க கூடாது. மத்திய அரசு சர்பாசி சட்டத்தை திரும்ப பெற வேண்டும்.விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயச் சட்டத்தை கொண்டு வரவேண்டும். இதனை வலியுறுத்தி கடந்த 26-ம் தேதி முதல் பஞ்சாப் மாநிலம் கண்ணுரி பார்டரில் ஐக்கிய விவசாயிகள் […]

இந்த மாதம் வங்கிகளுக்கு எத்தனை நாட்கள் விடுமுறை..?

இந்த மாதம் வங்கிகளுக்கு எத்தனை நாட்கள் விடுமுறை..? இந்த டிசம்பர் மாதத்தில் வங்கிகளுக்கு தமிழகத்தில் சனி, ஞாயிறுக்கிழமைகளுடன் சேர்த்து மொத்தம் 8 நாள்கள் விடுமுறை ஆகும். அதை தெரிந்து கொள்வோம்.!  டிசம்பர் 1  டிசம்பர் 8  டிசம்பர் 14  டிசம்பர் 15  டிசம்பர் 22  டிசம்பர் 25  டிசம்பர் 28  டிசம்பர் 29.

கோவையில் 3 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை! மக்கள் வெளியே செல்ல வேண்டாம் – ஆட்சியர் முக்கிய அறிவிப்பு..

கோவையில் 3 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை! மக்கள் வெளியே செல்ல வேண்டாம் – ஆட்சியர் முக்கிய அறிவிப்பு.. ஃபெஞ்சல் புயல் கரையைக் கடப்பதால் கொங்கு மண்டலத்தில் கன மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் நாளை முதல் டிசம்பர் 3 வரை கனமழை பெய்யவுள்ளதால் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி தெரிவித்துள்ளார். கோயம்புத்தூர் மாநகராட்சியில் 24 மணி நேரமும் இயங்கும் அவசர கட்டுப்பாட்டு மையத்தை 0422-2302323 மற்றும் […]

பல கோடி மதிப்புமிக்க திருமங்கை ஆழ்வார் சிலை லண்டனில் இருந்து விரைவில் மீட்கப்பட உள்ளது..

பலகோடி மதிப்புள்ள திருமங்கை ஆழ்வார் சிலையானது, தமிழ்நாடு சிலை திருட்டு தடுப்புப் பிரிவினரின் அயராத முயற்சியால் லண்டனில் இருந்து விரைவில் மீட்கப்பட உள்ளது. இது குறித்த தமிழ்நாடு காவல்துறையின் செய்திக்குறிப்பில், கடந்த 1957 மற்றும் 1967 ஆண்டுகளுக்கு இடையில் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் சௌந்திரராஜ பெருமாள் கோவிலில் இருந்து நான்கு விலை மதிப்பில்லாத சிலைகள் திருடுபோனது. இது சம்பந்தமாக சென்ற 2020 ஆம் ஆண்டு தமிழ்நாடு சிலை திருட்டு தடுப்பு பிரிவினரால் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. திருடுபோன சிலைகள் […]

எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீதான வழக்கை ரத்து செய்ய முடியாது!- உயர்நீதிமன்றம் அதிரடி..

கடந்த 2022 ம் ஆண்டு நடந்த நகர்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இதனை முன்னிட்டு வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா, பரிசு பொருட்கள் உள்ளிட்டவை வழங்கப்படுவதை தடுக்க தனிப்பிரிவுகள் அமைக்கப்பட்டது. அதோடு தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பகுதிகளிலும் காவலர்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அதோடு தேர்தல் அதிகாரிகளும் விழிப்புடன் இருந்தனர். இந்த சூழலில் கரூர் பழனியப்பா நகரில் உள்ள அதிமுக அலுவலகத்தில் வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக பரிசு பொருள்கள் வைக்கப்பட்டுள்ளதாக தேர்தல் அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அதிமுக அலுவலகத்தில் […]

ஃபென்ஜால் புயல் நாளை பிற்பகல் கரையைக் கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்..

ஃபென்ஜால் புயல் நாளை பிற்பகல் கரையைக் கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெள்ளிக்கிழமை மாலை செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியதாவது, வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை காரைக்கால்-மாமல்லபுரம் இடையே ஃபென்ஜால் புயல் கரையைக் கடக்கும். புயல் கரையைக் கடக்கும் போது சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டில் கனமழை பெய்யும். விழுப்பும், கடலூர், புதுச்சேரியிலும் கனமழை பெய்யக்கூடும். புயல் கரையைக் கடக்கும் போது ஒருசில இடங்களில் 90 […]

உசிலம்பட்டி அருகே மரக்கன்றுகள் நடும் விழா. 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே அமைந்துள்ள அ.புதுப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பசுக்காரன்பட்டி கிராமம் அருகே அமைந்துள்ள பந்தாணி கண்மாய் கரையை சுற்றி இயற்கை மற்றும் சுற்றுச் சூழல் மேம்பாட்டினை ஊக்குவிக்கும் விதமாக மரக்கன்றுகள் நடும் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.இந்த நிகழ்வில் ரோட்டரி கிளப் மாவட்ட ஆளுநர் ராஜாகோவிந்தசாமி முன்னாள் மாவட்ட ஆளுநர் ஜெயக்கண்ணன்.துணை ஆளுநர் கணேசன் ஆகியோர் தலைமையில் பழங்கள் தரும் நாவல் மரக்கன்றுகள் பெரு நெல்லி,மா, வேம்பு,தான்றிக்காய் மற்றும் புளியமரக்கன்றுகள் என 250 மரக்கன்றுகளை தானமாக […]

உசிலம்பட்டி நகராட்சி கவுன்சிலர் கூட்டத்தில் திமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சி கவுன்சிலர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது.நகராட்சி ஆணையாளர் பொறுப்பு அசோக்குமார் தலைமையில் நகராட்சி தலைவி சகுந்தலா துணைத்தலைவி தேன்மொழி பொதுப்பணி மேற்பார்வையாளர் பாலமுருகன் மற்றும் சுகாதார ஆய்வாளர் சிவக்குமார் கலந்து கொண்டனர். நகராட்சி அண்ணா திமுக கவுன்சிலர்கள் மற்றும் திமுக கவுன்சிலர்கள் தனித்தனியாக கூட்டங்களை நடத்தினர். அதிமுக கவுன்சிலர்கள் நகராட்சிக்கு தமிழக அரசு போதிய நிதி வழங்க வேண்டும் எனவும் நகராட்சி நிரந்தர ஆணையாளர் மற்றும் பொறியாளர் மற்றும் நகராட்சி மேற்பார்வையாளர் நியமனம் […]

உசிலம்பட்டி பகுதியில்  அனைத்து கடைகள் அடைத்து  போராட்டம் .

ஒன்றிய அரசும் மாநில அரசும் ஒருங்கிணைந்து உருவாக்கிய ஜிஎஸ்டி கவுன்சில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி 10.10.2024 முதல் வணிக பயன்பாட்டிற்கு உள்ள அனைத்து கட்டிடத்துக்கும் மற்றும் குடோன்க்கும் வாடகைக்கு 18/- சதவீதம் ஜிஎஸ்டி வரி ஆர்சிஎம்/ எப்சிஎம் முறையில் விதித்து அதைக் கட்ட அறிவித்துள்ளது. அனைத்து வணியர்களுக்கும் சுமையை ஏற்படுத்தும் இந்த உத்தரவை ரத்து செய்யவும். இந்தப் பாதிப்பை நிவர்த்தி செய்து ஜிஎஸ்டி கவுன்சில் தீர்மானத்தை முழுமையாக நீக்கம் செய்யவும் ஒன்றிய மாநில அரசை வலியுறுத்தி இந்த ஒரு […]

சபரிமலை 18ம் படியில் குரூப் போட்டோ எடுத்த விவகாரம்: போலீசாருக்கு கேரள உயர்நீதிமன்றம் கடும் கண்டனம்..

சபரிமலை 18ம் படியில் குரூப் போட்டோ எடுத்த விவகாரம்: போலீசாருக்கு கேரள உயர்நீதிமன்றம் கடும் கண்டனம்.. சபரிமலை ஐயப்பன் கோயிலில் உள்ள 18ம் படியை பக்தர்கள் மிகவும் புனிதமாக கருதுகின்றனர். கடும் விரதம் இருந்து இருமுடி கட்டி வரும் பக்தர்களுக்கு மட்டுமே இதில் ஏற அனுமதி உண்டு. சபரிமலை தந்திரிகள், மேல்சாந்தி மற்றும் பந்தளம் மன்னர் பிரதிநிதிகள் ஆகியோருக்கு மட்டுமே இருமுடி இல்லாமல் 18ம் படியில் ஏறுவதற்கும், இறங்குவதற்கும் அனுமதி உண்டு. புனிதமான 18ம் படியில் வயதான […]

கொட்டித் தீர்க்கும் கன மழை! சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பள்ளி விடுமுறை..

சென்னை மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று(நவ.29) ஒருநாள் விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் (புயல் சின்னம்) வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாமல்லபுரத்துக்கும், காரைக்காலுக்கும் இடையே சனிக்கிழமை (நவ. 30) கரையைக் கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதையொட்டி, சென்னை தொடங்கி ராமநாதபுரம் வரை கடலோர மாவட்டங்களில் கனமழைக்கான சிவப்பு மற்றும் ஆரஞ்ச் எச்சரிக்கை இன்று விடுக்கப்பட்டுள்ளது. […]

சென்னையில் நாளை மிக கனமழைக்கு வாய்ப்பு! நாளை மறுநாள் ரெட் அலர்ட்!!

சென்னையில் நாளை மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த சில மணி நேரங்களாக நகர்ந்து வந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது, மீண்டும் நகராமல் ஒரே இடத்தில் நிலைகொண்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தென்மேற்கு வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் (புயல் சின்னம்) நாகை மாவட்டத்துக்கு தென்கிழக்கே 280 கி.மீ. தொலைவிலும், புதுச்சேரிக்கு தென்கிழக்கே 380 கி.மீ. தொலைவிலும், சென்னைக்கு தெற்கு-தென்கிழக்கே 480 கி.மீ. தொலைவிலும் […]

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!