கடலாடி வட்டாரத்தில் மழையால் பாதித்த பகுதிகள்: மாவட்ட ஆட்சியர் இன்று (15/12/2024) ஆய்வு…

இராமநாதபுரம் மாவட்டம் கடலாடி வட்டத்தில் தொடர் மழையால் பாதித்த பகுதிகளை மாவட்ட ஆட்சியர் சிம்ரன்ஜீத் சிங் காலோன்  இன்று ஆய்வு செய்தார். கடலாடி வட்டம், எஸ்.தரைக்குடி ஊராட்சி செவல்பட்டி சாலையில் தேங்கிய தண்ணீர் பகுதிக்கு டிராக்டர் மூலம் மாவட்ட ஆட்சியர் சென்று பொதுமக்களை சந்தித்து பாதிப்புகள் குறித்து கேட்டறிந்தார். நல்லான்பட்டி, வாலாம்பட்டி, முத்துராமலிங்கபுரம், வி.சேதுராஜபுரம், ராமலிங்கம்பட்டி, கொக்கரசன்கோட்டை பகுதிகளி தொடர் மழையால் சேதமான சாலைகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இப்பகுதிகளில் தேங்கிய மழை நீரை வெளியேற்ற […]

தேசிய மக்கள் மன்றத்தில்  999 வழக்குகளுக்கு ரூ.7,80,30,350 தீர்வுத்தொகை..

இராமநாதபுரம் : தேசிய அளவிலான மக்கள் நீதிமன்றம் இன்று நடைபெற்றது. தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு, மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு உத்திரவின்படி ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று நடந்த மக்கள் நீதிமன்றத்தில் முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி, A.K.மெஹ்பூப் அலிகான் தலைமை வகித்தார், விரைவு மகிளா நீதிமன்ற நீதிபதி K.கவிதா, தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் C.மோகன்ராம், சார்பு நீதிபதி M. அகிலா தேவி. சார்புநீதிபதி S. பிரசாத், நீதித்துறை நடுவர் எண்-1 N.நிலவேஸ்வரன், நீதித்துறை நடுவர் எண்-II G.பிரபாகரன், […]

தமிழகத்தில், எங்கே எப்போது எவ்வளவு மழை பொழியும்! சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு..

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக நாளை தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது மேலும் வலுப்பெற்று, மேற்கு- வடமேற்கு திசையில், தமிழக கடலோரப்பகுதிகளை நோக்கி அதற்கடுத்த இரு தினங்களில் நகரக்கூடும். நேற்று லட்சத்தீவு மாலத்தீவு பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று அதே பகுதிகளில் நிலவுகிறது. […]

இராமநாதபுர மாவட்டத்தில் மணல் கொள்ளை தடுக்க இரவு பகலாக தீவிர சோதனை..

ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்கானிப்பாளர் சந்தீஷ் இ.கா.ப உத்தரவுபடி திருப்பாலைக்குடி காவல் சரகத்தில் தீவிர வாகன சோதனை இரவு முழுவதும் நடை பெற்றது.  அப்போது தனிப்பிரிவு தலைமை காவலர் சந்திர சேகருக்கு கிடைத்த ரகசிய தகவலை அடுத்து சார்பு ஆய்வாளர் அர்சுன கோபால் சிறப்பு சார்பு ஆய்வாளர் ஜெயபிரகாஷ் தலைமை காவலர்கள், சரவணகுமார், சரவனன் முதல்நிலைகாவலர் சிக்கந்தர், காவலர்கள் செல்வகுமார், சுரேஷ் ஆகீயோர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்பொழுது காலை 3.45 மணி  அளவில் […]

குடும்ப அட்டைக்கு 6000 நிவாரண உதவி; சமூக நல்லிணக்க கூட்டமைப்பு கோரிக்கை..

தென்காசி மாவட்டத்தில் பெய்த அதிகனமழை மாவட்டம் முழுவதையும் புரட்டி போட்டுள்ளது. வரலாறு காணாத பெருமழை மற்றும் வெள்ளம் காரணமாக தொழில் துறைகள் அனைத்தும் முடங்கியுள்ளது. வியாபாரிகள் மற்றும் பொதுமக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையை கருத்தில் கொண்டு குடும்ப அட்டைக்கு ரூபாய் 6000 நிவாரண உதவி வழங்க வேண்டும் என சமூக நல்லிணக்க கூட்டமைப்பு தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. தென்காசி மாவட்டத்தில் பரவலாக அதி கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது. தொடர் மழை காரணமாக, மூன்று […]

காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்..

காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட இரங்கல் செய்தியில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மூத்த தலைவரும் ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினருமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அவர்களின் மறைவால் மிகுந்த வேதனை அடைகிறேன். தந்தை பெரியார், சொல்லின் செல்வர் ஈ.வி.கே. சம்பத் என மிகப்பெரும் அரசியல் பாரம்பரியமிக்க குடும்பத்தைச் சேர்ந்த நண்பர் இளங்கோவன். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர், சட்டமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர், மத்திய அமைச்சர் […]

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், சட்டப்பேரவை உறுப்பினருமான ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல்நலக் குறைவு காரணமாக காலமானார்..

உடல்நலக் குறைவால் மறைந்த காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் உடலுக்கு சென்னையில் நாளை இறுதிச்சடங்குகள் நடைபெறும் என்று குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்று வந்த ஈவிகேஎஸ் இளங்கோவன் இன்று காலை காலமானார். அவரது உடல் தனியார் மருத்துவமனையில் இருந்து இன்று அவரது இல்லத்துக்குக் கொண்ட செல்லப்பட்டு அவரது உறவினர்கள் அஞ்சலி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நாளை சத்தியமூர்த்தி பவனில் கட்சித் தொண்டர்களும் அரசியல் கட்சித் தலைவர்களும் அஞ்சலி செலுத்த வைக்கப்படவிருக்கிறது. அதன்பிறகு நாளை […]

குற்றாலம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட யானை உயிரிழப்பு..

குற்றாலம் மெயின் அருவியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் மூன்று வயது ஆண் யானை அடித்து செல்லப்பட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்தில் வங்கக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனை தொடர்ந்து வியாழக்கிழமை ரெட் அலர்ட் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அதிகனமழை கொட்டித் தீர்த்தது. இதன் காரணமாக குற்றாலம் அனைத்து அருவிகளிலும் பெரும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.  இந்நிலையில் குற்றாலம் மெயின் அருவியிலிருந்து 300 மீட்டர் தூரத்தில், மூன்று வயது […]

மண்டபத்தில் இலவச கண் , பொது மருத்துவ முகாம்…

இராமநாதபுரம் இராமநாதபுரம் மாவட்ட பார்வையிழப்பு தடுப்பு சங்கம், மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை, ஹெல்பேஜ் இந்தியா சார்பில் இலவச கண், பொது மருத்துவ முகாம் மண்டபம் பேரூராட்சி திருமண மஹாலில் இன்று நடந்தது. பேரூராட்சி தலைவர் ராஜா துவக்கி வைத்தார். கவுன்சிலர் முபாரக் தலைமை வகித்தார். அக்வா அக்ரி மண்டபம் கிளை முருகேசன், பரம்பரை விசைப்படகு மீனவர் சங்கத்தலைவர் ஆஸாத் முன்னிலை வகித்தனர்.  டாக்டர் அழகுவேல் மணி தலைமையில் பொது மருத்துவம், டாக்டர் ரம்யா தலைமையில் கண் […]

பழநியில் நடைபெற்ற தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் கூட்டம்! புதிய மாவட்ட தலைவர் தேர்ந்தெடுப்பு

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பாக நான்காம் ஆண்டு தொடக்க விழா மற்றும் புதிய நிர்வாகிகள் அறிமுக விழா மற்றும் பொதுக்குழு கூட்டம் நடந்தது தொடர்ந்து நடைபெற்றபொதுக்குழு விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக வணிகர் சங்கங்களின் மாநில தலைவர் விக்ரமராஜா மற்றும் பழனி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து நடைபெற்ற பொது குழுவில் பழனி மாவட்ட வணிகர் சங்க பேரமைப்பின் மாவட்ட தலைவராக ஜேபி […]

மதுக்கூரில் புதிய ஜாமி ஆ பள்ளிவாசல் திறப்பு விழா! இஸ்லாமிய கலாச்சார பேரவை மாநிலச் செயலாளர் முபாரக் அலி பங்கேற்பு!

மதுக்கூரில் புதிய ஜாமி ஆ பள்ளிவாசல் திறப்பு விழா! இஸ்லாமிய கலாச்சார பேரவை மாநிலச் செயலாளர் முபாரக் அலி பங்கேற்பு! தஞ்சை மாவட்டம் மதுக்கூரில் புதிய ஜாமிஆபள்ளிவாசல் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ளது. இன்று நடைபெற்ற திறப்பு விழா நிகழ்வில் மஜக சார்பில் இஸ்லாமிய கலாச்சார பேரவையின் மாநில செயலாளர் அறந்தாங்கி முனைவர்.முபாரக் அலி கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார். தற்போது பள்ளிவாசலின் சிறப்புகள் குறித்தும் அதன் பயன்பாடுகள் குறித்தும் உரையாற்றினார். இந்நிகழ்வில் அவரோடு தஞ்சை ( தெற்கு) மாவட்ட […]

தொடர்ந்து பெய்து வரும் கனமழை; அரையாண்டு தேர்வுகள் தள்ளிவைப்பு: ஜனவரியில் நடத்த திட்டம்.?

அரையாண்டு தேர்வுகள் கனமழையால் தள்ளிவைப்பு: ஜனவரியில் நடத்த திட்டம்.? கனமழை விடுமுறையால் பள்ளி மாணவர்களுக்கு நடைபெறாத அரையாண்டுத் தேர்வுகளை ஜனவரியில் நடத்த பள்ளிக்கல்வித் துறை திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. தமிழகத்தில் பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தின் கீழ் இயங்கும் அனைத்து விதமான பள்ளிகளிலும் 6 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான அரையாண்டுத் தேர்வு கடந்த டிசம்பர் 9-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதுதவிர தொடக்கப் பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் குழந்தைகளுக்கான […]

அடுத்த 24 மணி நேரத்தில் மீண்டும் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது!- கன மழை பெய்யும்..

வங்கக்கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தெற்கு அந்தமான் கடல் பகுதியில் உருவான வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறுகிறது. வங்கக்கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது. இது படிப்படியாக வலுவடைந்து மேற்கு, வடமேற்கில் நகர்ந்து, டெல்டா மற்றும் வடகடலோர மாவட்டங்களை நெருங்க வாய்ப்புள்ளது. […]

இரவு முழுவதும் சிறையில் இருந்த நடிகர் அல்லு அர்ஜூன்! தற்போது ரிலீஸ் ஆனார்..

கூட்ட நெரிசலில் சிக்கி ரசிகை பலியான விவகாரத்தில் தெலங்கானா உயா்நீதிமன்றம் வழங்கிய இடைக்கால ஜாமீனின் ஆவணங்கள் முழுமையாக கிடைக்காத நிலையில், வெள்ளிக்கிழமை இரவு முழுவதும் சிறையிலேயே கழித்த நடிகர் அல்லு அர்ஜுன் தற்போது சிறையிலிருந்து வெளியே வந்தார். நடிகா் அல்லு அா்ஜுன் நடித்த புஷ்பா-2 திரைப்படம் கடந்த 5-ஆம் தேதி வெளியானது. அதற்கு முந்தைய நாள் இரவே ஹைதராபாதில் உள்ள திரையரங்கில் இத்திரைப்படத்தின் சிறப்புக் காட்சி வெளியானது. இதனால், திரையரங்கில் மக்கள் கூட்டம் அலைமோதியது. அப்போது, திரைப்படத்தில் […]

தென்காசி மாவட்டத்தில் வருவாய் பேரிடர் துறை அமைச்சர் ஆய்வு..

தென்காசி மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலத்தால் தமிழக முழுவதும் கனமழை பெய்து வரும் நிலையில், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டது. இந்நிலையில் (12.12.2024) காலை முதல் தென்காசி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வந்த நிலையில், 13.12.2024 அன்று தென்காசி மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் […]

மாநிலங்களின் சுயமரியாதையை மீட்க ஜனநாயக சக்திகள் ஒன்றிணைய வேண்டிய தருணம் இது!- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கட்சித் தொண்டர்களுக்கு கடிதம்..

மாநிலங்களின் சுயமரியாதையை மீட்க ஜனநாயக சக்திகள் ஒன்றிணைய வேண்டிய தருணம் இது என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கட்சித் தொண்டர்களுக்கு அவர் இன்று (வெள்ளிக்கிழமை) எழுதியுள்ள கடிதத்தில், பெரியார் எனும் மாமனிதர் கொண்டிருந்த இலட்சிய வைராக்கியத்தின் தொடக்கம்தான் அவர் பங்கேற்ற வைக்கம் போராட்டம். அந்தப் போராட்டத்தில் கிடைத்த வெற்றி என்பது இலட்சிய நோக்கத்துடன் பயணிக்கும் இயக்கத்திற்கு கிடைத்த மிகப் பெரிய உந்துசக்தி. அதன் தொடர்ச்சிதான் திராவிட இயக்கத்தின் கொள்கைப் பயணம். அந்தப் பயணம் அரசியல் களத்திலும் […]

ராமேஸ்வரத்தில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் பிறந்தநாளை முன்னிட்டு சிற்ப்பு பிரார்த்தனை..

அம்மா மக்கள் முன்னேற்றக் கழக கட்சியின் பொதுச் செயலாளர் டி டி வி தினகரனின் 61 ஆம் ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு இன்று (13/12/2024) ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக கட்சியின் நகர கழகச் செயலாளர் சுதாகர் ஏற்பாட்டில் டிடிவி தினகரன் நீண்ட ஆயுளுடன் வாழ்வதற்கு ஆயுஷ் ஹோமம் நடைபெற்றது வேதாச்சாரியார்கள் மந்திரங்கள் முழங்க நடைபெற்ற ஆயுஷ் ஹோம விழாவில் ராமநாதபுரம் அம்மா மக்கள் முன்னேற்ற கழக மாவட்ட செயலாளர் முருகன் […]

நாளை (டிச.14) எந்தெந்த மாவட்டங்களில் மழையும்! பள்ளி மற்றும் கல்லூரி விடுமுறையும்..

கனமழை காரணமாக தமிழகத்தில் தென்காசி, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளையும்(டிச.14) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்தத் தாழ்வு காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக தென் மாவட்டங்களில் இடைவிடாது கனமழை பெய்து வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி பள்ளி, கல்லூரிகளுக்கு நாளையும் விடுமுறை அறிவித்து மாவட்ட நிர்வாகங்கள் நடவடிக்கை எடுத்துள்ளன. நாளை(டிச.14) விடுமுறை அளிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்… 1, தென்காசி- பள்ளி, கல்லூரிகள். […]

குரூப் 2, 4 தேர்வு பாடத்திட்டம் மாற்றம்! டி.என்.பி.எஸ்.சி. புதிய அறிவிப்பு..

டி.என்.பி.எஸ்.சி., குரூப் 2, குரூப் 4 தேர்வுகளுக்கான பாடத்திட்டம் மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. இதுகுறித்து டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில், தேர்வர்களின் நலன் கருதியும், அரசுத்துறைகளின் தேவையைக் கருத்தில் கொண்டும், ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு – 2 (தொகுதி 2 மற்றும் 2A பணிகள்)க்கான முதல்நிலைத் தேர்வின் பொதுத் தமிழ் மற்றும் பொது ஆங்கிலத்திற்கான பாடத்திட்டமும், ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு-4 (தொகுதி4 பணிகள்)-க்கான தமிழ் தகுதி மற்றும் மதிப்பீட்டுத் தேர்விற்கான பாடத்திட்டமும் மாற்றி […]

இருமேனி ஊராட்சி மன்ற அலுவலக புதிய கட்டடம் திறப்பு..

இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஒன்றியம் இருமேனி ஊராட்சியில் ரூ.30 லட்சம் மதிப்பில் ஊராட்சி மன்ற அலுவலக புதிய கட்டட திறப்பு விழா இன்று நடந்தது. ராமநாதபுரம் மாவட்ட திமுக செயலாளர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் எம்எல்ஏ திறந்து வைத்தார். மண்டபம் வட்டார வளர்ச்சி ஆணையர் சோமசுந்தர், வட்டார வளர்ச்சி அலுவலர் ஷங்கர பாண்டியன், ஊராட்சி தலைவர் சிவக்குமார், துணைத்தலைவர் ஐனுல் அரபியா, ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் பிரபாகரன், ஊராட்சி தலைவர்கள் கார் மேகம் […]

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!