இராமநாதபுரத்தில் தமுமுக ஆர்ப்பாட்டம்..

இராமநாதபுரம் : பள்ளிவாசல் சொத்துகளை கபளிகரம் செய்ய கொண்டு வரப்பட்டுள்ள வக்ப் திருத்த மசோதாவை முழுமையாக திரும்ப பெற கோரியும், வழிப்பாட்டு தலங்கள் பாதுகாப்புச் சட்டம் 1991 முழுமையாக கடைப்பிடிக்க கோரி ராமநாதபுரம் அரசு போக்குவரத்து கழக பணி மனை முன் தமுமுக சார்பில் இன்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது. தமுமுக துணை பொதுச்செயலாளர் சலிமுல்லாஹ்கான் தலைமை வகித்தார். மே 17 இயக்கம் தலைவர் திருமுருகன் காந்தி கண்டன உரை ஆற்றினார். தமுமுக மாநில செயலாளர் சாதிக் […]

இராமநாதபுரத்தில் தமுமுக ஆர்ப்பாட்டம்..

இராமநாதபுரம் : பள்ளிவாசல் சொத்துகளை கபளிகரம் செய்ய கொண்டு வரப்பட்டுள்ள வக்ப் திருத்த மசோதாவை முழுமையாக திரும்ப பெற கோரியும், வழிப்பாட்டு தலங்கள் பாதுகாப்புச் சட்டம் 1991 முழுமையாக கடைப்பிடிக்க கோரி ராமநாதபுரம் அரசு போக்குவரத்து கழக பணி மனை முன் தமுமுக சார்பில் இன்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது. தமுமுக துணை பொதுச்செயலாளர் சலிமுல்லாஹ்கான் தலைமை வகித்தார். மே 17 இயக்கம் தலைவர் திருமுருகன் காந்தி கண்டன உரை ஆற்றினார். தமுமுக மாநில செயலாளர் சாதிக் […]

2026-இல் தமிழ்நாட்டில் மன்னராட்சி முறை ஒழிக்கப்படும். பிறப்பால் இனி ஒருவர் முதலமைச்சராகக் கூடாது!-விசிக துணை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா பேச்சால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு..

எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ என்ற நூல், இன்று சென்னை நந்தம்பாக்கத்தில் வெளியிடப்பட்டது. த.வெ.க. தலைவர் விஜய் வெளியிட, முதல் பிரதியை அம்பேத்கர் பேரன் ஆனந்த டெல்டும்டே பெற்றுக்கொண்டார். இரண்டாவது பிரதியை ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு பெற்றுக்கொண்டார். முன்னதாக இந்த விழாவில் நூல் உருவாக்கம் குறித்துப் பேசிய விசிக துணைப் பொதுச் செயலாளரும், வாய்ஸ் ஆஃப் காமன் நிறுவனருமான ஆதவ் அர்ஜூனா, “தமிழகத்தின் முதல் ஐபிஎஸ் அதிகாரியான திலகவதி ஐபிஎஸ் எனக்கு பெரியம்மா போன்றவர். எனது தாய்க்கு மிகவும் […]

ஆதவ் அர்ஜூனா கருத்துக்கு அவரே பொறுப்பு! விசிக பொறுப்பல்ல! அவரிடம் விளக்கம் கேட்போம்!- தொல்.திருமாவளவன்…

எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ என்ற நூல், இன்று சென்னையில் த.வெ.க. தலைவர் விஜய் வெளியிட, முதல் பிரதியை அம்பேத்கர் பேரன் ஆனந்த டெல்டும்டே பெற்றுக்கொண்டார். இரண்டாவது பிரதியை ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு பெற்றுக்கொண்டார். இவ்விழாவில் விஜயும், ஆதவ் அர்ஜுனாவும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமா கலந்துகொள்ளாதது குறித்துப் பேசினர். குறிப்பாக, தவெக தலைவர் விஜய், “அம்பேத்கர் அவர்களின் புத்தக வெளியீட்டு விழாவில்கூட கலந்துகொள்ள முடியாத அளவிற்கு, கூட்டணி கட்சிகள் சார்ந்து விசிக தலைவர் திருமாவளவனுக்கு எவ்வளவு […]

அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்துகொள்ள முடியாத அளவிற்கு திருமாவளவனுக்கு பிரஷர் இருக்கிறது என்பதை என்னால் உணர முடிகிறது. திருமாவளவனின் மனசு முழுக்க முழுக்க நம்முடதான் இருக்கும்!- த.வெ.க. தலைவர் பரபரப்பு பேச்சு..

எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ என்ற நூல், இன்று சென்னை நந்தம்பாக்கத்தில் வெளியிடப்பட்டது. த.வெ.க. தலைவர் விஜய் வெளியிட, முதல் பிரதியை அம்பேத்கர் பேரன் ஆனந்த டெல்டும்டே பெற்றுக்கொண்டார். இரண்டாவது பிரதியை ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு பெற்றுக்கொண்டார். இந்த விழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, புத்தகத்தை வெளியிட்ட தவெக தலைவர் விஜய், நிகழ்வில் சிறப்புரையாற்றினார். அப்போது பேசுகையில், “புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்றதை நான் பெருமையாகக் கருதுகிறேன். நாட்டில் அத்தனை சக்திகளும் அம்பேத்கருக்கு தடையாக இருந்தது. அம்பேத்கரின் […]

16-ஆவது நிதிக்குழு எடுக்க உள்ள முடிவுகள், நாட்டின் அடுத்த ஐந்தாண்டுகளுக்கான நிதிச் செயல்பாடுகளுக்கு வடிவம் கொடுக்கும்!- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

16-ஆவது நிதிக்குழு எடுக்க உள்ள முடிவுகள், நாட்டின் அடுத்த ஐந்தாண்டுகளுக்கான நிதிச் செயல்பாடுகளுக்கு வடிவம் கொடுக்கும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;- “அண்மையில், பொருளாதார வல்லுநர் அரவிந்த் பனகாரியா தலைமையிலான 16-வது நிதிக்குழுவின் கூட்டம் தமிழ்நாட்டில் நடைபெற்றது. பல்வேறு துறைசார் நிபுணர்களைக் கொண்ட இந்த குழு இந்தியா எதிர்கொண்டு வரும் பொருளாதாரச் சிக்கல்கள், ஒன்றிய அரசு மற்றும் மாநில அரசுகளுக்கிடையேயான உறவுகளில் உள்ள சமச்சீரற்ற தன்மை ஆகியவற்றை சரிசெய்வதற்காக […]

ஃபென்ஜால் புயல் பாதிப்புகளுக்காக தமிழகத்திற்கு ரூ.944.80 கோடி மத்திய நிதி அரசு நிதி ஒதுக்கீடு..

ஃபென்ஜால் புயல் பாதிப்புகளுக்காக தமிழகத்திற்கு ரூ.944.80 கோடி மத்திய நிதி அரசு நிதி ஒதுக்கியுள்ளது. மாநில பேரிட நிவாரண நிதிக்கு மத்திய அரசின் பங்காக ரூ.944.80 கோடியை வழங்க மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. மத்திய குழு அறிக்கையின் அடிப்படையில் தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து கூடுதல் தொகை விடுவிக்கப்படும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. புயல் பாதிப்புகளை மத்திய குழுவினர் நாளை(டிச.7) நேரில் ஆய்வு செய்ய உள்ளனர். ஃபென்ஜால் புயல் பாதிப்பு சீரமைப்புப் பணிக்காக, […]

டிச.06 பாபரி மஸ்ஜித் இடிப்பு தினம்! – சென்னையில் எஸ்டிபிஐ கட்சி நடத்திய மாபெரும் மக்கள் திரள் ஆர்ப்பாட்டம்!

பாபரி மஸ்ஜித் இடிப்பு தினமான டிச.06 அன்று பாசிச எதிர்ப்பு தினம் என்ற பெயரில் தமிழகம் உள்பட நாடு முழுவதும் எஸ்டிபிஐ கட்சி சார்பாக பெருந்திரள் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. அதன் ஒருபகுதியாக சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில், எஸ்டிபிஐ கட்சியின் சென்னை வடக்கு மண்டல தலைவர் முகமது ரஷீத் தலைமையில் மாபெரும் மக்கள் திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் சென்னை வடக்கு மண்டல செயலாளர் முகமது இஸ்மாயில், மத்திய சென்னை (வ) மாவட்ட தலைவர் […]

சிறுபான்மையினர் நல ஆணையம் சார்பில் கலந்துரையாடல் கூட்டம்; நலத்திட்ட உதவிகள் வழங்கல்..

தென்காசி மாவட்டத்தில் சிறுபான்மையினர் கலந்துரையாடல் கூட்டம் தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையத் தலைவர் அருட்தந்தை சொ.ஜோ அருண் சே.ச தலைமையில் நடைபெற்றது. தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் 05.12.2024 அன்று தென்காசி மாவட்டத்திலுள்ள சிறுபான்மையினர்களுடனான கலந்துரையாடல் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.கமல் கிஷோர், தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணைய துணைத் தலைவர் எம்.எம். அப்துல் குத்தூஸ் (எ) இறையன்பன் குத்தூஸ், அரசு கூடுதல் செயலாளர் / பிற்படுத்தப்பட்டோர் மிக பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை முனைவர் […]

தேவக்கோட்டையில் தமிழக அரசின் பள்ளி மாணவர்களுக்கான விலையில்லா சீருடை அளவெடுக்கும் பணி துவக்கம்..

தேவக்கோட்டையில் தமிழக அரசின் பள்ளி மாணவர்களுக்கான விலையில்லா சீருடை அளவெடுக்கும் பணி துவக்கம்.. தேவகோட்டை – சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளியில் மாணவர்களுக்கான தமிழக அரசின் விலையில்லா சீருடைகள் அளவெடுக்கும் பணி நடைபெற்றது.  குன்றக்குடி சின்ன மருது பெரிய மருது பாண்டியர் தையல் கூட்டுறவு சங்கத்தின் செயலாளர் பாலகிருஷ்ணன் , கணக்கர் ராஜேஸ்வரி , சீருடை சரிபார்ப்பவர் கமலம் மற்றும் சங்க உறுப்பினர்கள் அருள்ஜோதி , லட்சுமிதேவி , முத்துலெட்சுமி ஆகியோர் பள்ளி […]

அமைச்சர் பொன்முடி மீது சேறு வீசிய விவகாரம்: இருவர் மீது வழக்குப்பதிவு!

பெஞ்சல் புயல் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்தது. குறிப்பாக விழுப்புரம் மாவட்டத்தில் வரலாறு காணாத மழை பெய்தது. இதனால் வீடுகளில் வெள்ள நீர் புகுந்தது, வயல் வெளிகளிலும் நீர் புகுந்து மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். உணவு, குடிநீர் போன்ற அத்தியாவசிய பொருட்கள் முறையாக கிடைக்கவில்லை என்று ஆங்காங்கே போராட்டங்களும் நடத்தப்பட்டன. இந்நிலையில் வனத்துறை அமைச்சர் பொன்முடி மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விழுப்புரம் இருவேல்பட்டு கிராமத்தில் கடந்த டிச.3-ம் தேதி ஆய்வுக்கு சென்றிருந்தார். அப்போது மக்கள் போராட்டத்தில் […]

பரமபதம் ஆடும் ஆபரணத் தங்கம் விலை! இன்றைய நிலவரம்..

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை ஏறுவதும், குறைவதுமாக இருந்து வருகிறது. கடந்த 2-ந்தேதி தங்கம் சவரனுக்கு ரூ.480 குறைந்தும், 3-ந்தேதி சவரனுக்கு ரூ.320 உயர்ந்தும், 4-ந்தேதி விலை மாற்றமின்றியும், நேற்று சவரனுக்கு ரூ.80 உயர்ந்தும் விற்பனையானது. இந்த நிலையில், இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 குறைந்துள்ளது. கிராமுக்கு 25 ரூபாய் குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ. 7,115-க்கும் சவரனுக்கு ரூ.200 குறைந்து ரூ. 56,920-க்கும் விற்பனையாகிறது.வெள்ளி விலையில் மாற்றமில்லை.ஒரு கிராம் வெள்ளி 101 ரூபாய்க்கும், பார் […]

பட்டா பெயர் சேர்ப்பு விவகாரம்; தென்காசி கோட்டாட்சியர் விளக்கம்..

பட்டாவில் பெயர் சேர்க்கும் விவகாரத்தில், தன் மீது அடிப்படை ஆதாரமற்ற மோசடி புகார் அளிக்கப்பட்டுள்ளதாக தென்காசி கோட்டாட்சியர் லாவண்யா விளக்கம் அளித்துள்ளார். இது குறித்து தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளதாக கோட்டாட்சியர் தெரிவித்துள்ளார். தென்காசி மாவட்டம், ஊத்துமலை பகுதியை சேர்ந்த விவசாயி கண்ணையா பட்டாவில் தனது மனைவி பெயரை சேர்ப்பது தொடர்பாக ரூ.50 ஆயிரம் கேட்டதாக கூறி கோட்டாட்சியர் மீது மாவட்ட ஆட்சித் தலைவரிடம் புகார் மனு அளித்திருந்தார். இந்நிலையில் இது தொடர்பாக தென்காசி […]

திருஉத்தரகோசமங்கையில் முன்னாள் முதல்வருக்கு அஞ்சலி…

ராமநாதபுரம் மாவட்டம் திருஉத்தரகோசமங்கை பேருந்து நிலையத்தில் அதிமுக கழக ஒன்றிய செயலாளர் செல்லதுரை தலைமையில் எட்டாம் ஆண்டை முன்னிட்டு மறைந்த முன்னால் முதல்வர் ஜெயலலிதா உருவ படத்தினை மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். இதில் அவைதலைவர் சாமிநாதன் மண்டல தகவல் தொழில்நுட்ப செயலாளர் சரவனக்குமார் , தகவல் தொழில்நுட்ப மாவட்ட செயலாளர் குமார் ராஜா (எ) நாகராஜன் , மாவட்ட ஓட்டுநர் சாரா அணி செயலாளர் பழனிமுருகன் கழக அண்ணா தொழில் சங்க இணை […]

மண்டபத்தில் உலக மண்வளம் தின கொண்டாட்டம்..

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் தனியார் பள்ளி வளாகத்தில் தமிழ்நாடு அரசு வேளாண்மைத்துறை மற்றும் ராமநாதபுரம் வேளாண்மை அறிவியல் நிலையம் இணைந்து உலக மண்வள தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுக்கு மண்வளம் பற்றி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. மேலும் மண் வளத்தை பேணிக்காத்தல் குறித்து மாணவ மாணவிகள் உறுதிமொழி ஏற்றனர். இந்நிகழ்ச்சியில் பரமக்குடி நடமாடும் மண் பரிசோதனை நிலையம் வேளாண் அலுவலர்கள் , ராமநாதபுரம் வேளாண்மை உதவி இயக்குனர் , திருப்புல்லாணி தகவல் மற்றும் தரக்கட்டுப்பாடு வேளாண்மை […]

வேளாண்மைத்துறை சார்பில் உலக மண்வள தின நிகழ்ச்சி

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் மற்றும் திருப்புல்லாணி வட்டாரத்தில்தமிழ்நாடு அரசு வேளாண்மைத்துறை மற்றும் ராமநாதபுரம் வேளாண்மை அறிவியல் நிலையம் இணைந்து ராமநாதபுரம் வேளாண்மை இணை இயக்குனர் மோகன்ராஜ் தலைமையில் உலக மண்வள தினம் நிகழ்ச்சி நடைபெற்றது. திருப்புல்லாணி வேளாண்மை உதவி இயக்குனர் செல்வம் கலந்து கொண்டு மண்ணைப் பராமரித்தல் , அளவிடுதல், கண்காணித்தல், நிர்வகித்தல் பற்றிய விவசாயிகளுக்கு விரிவாக விளக்க உரையாற்றினார். மேலும் வேளாண்மை இணை இயக்குனர் மோகன்ராஜ் , வேளாண்மை துணை இயக்குனர் அமர்லால் , வேளாண்மை […]

இராமநாதபுரம் மாவட்ட முழுவதும் போலீசார் தீவிர சோதனை !தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் . !!

இராமநாதபுரம் மாவட்ட காவல்துறையினர் சார்பில் 56 பள்ளிகள் மற்றும் கல்லூரி பகுதிகளிலும், 149 பொது இடங்களிலும் ஆய்வு மேற்கொண்டனர். மேலும் உணவுப் பாதுகாப்புதுறையினருடன் சேர்ந்து 12 பள்ளிகள் மற்றும் கல்லூரிகளின் அருகில் உள்ள இடங்களிலும், 22 பொது இடங்களிலும் தீவிர சோதனையில் ஈடுபட்டனர் இதில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை மொத்தமாகவும், சில்லரையாகவும் விற்பனை செய்த 8 நபர்கள் மீது 8 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 8.061 கி.கி. குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும், […]

உலக சாதனை விருது பெற்ற நான்கு மாத குழந்தை; தென்காசி மாவட்ட எஸ்.பி பாராட்டு..

ஐந்து உலக சாதனை விருதுகளை பெற்று சாதனை படைத்த நான்கு மாத குழந்தைக்கு தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் V.R. ஸ்ரீனிவாசன் பாராட்டு தெரிவித்துள்ளார். தென்காசியை சேர்ந்த தம்பதியினரின் லயா என்ற குழந்தையானது தனது 4 மாதத்தில் 5 உலக சாதனை விருதுகளை பெற்று சாதனை படைத்துள்ளது. அந்த குழந்தையிடம் இரண்டு புகைப்படங்களை காட்டி அதில் உள்ள பெயர்களை சொல்லி எடுக்க சொல்லும் போது சரியாக எடுத்தும், உலக அதிசயங்கள், காய்கறிகள் உள்ளிட்ட பல்வேறு வகையான புகைப்படங்களை […]

தென்காசி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்திய விவசாயி..

பட்டாவில் பெயர் சேர்க்க ரூ.50 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக கூறி விவசாயி கண்ணையா தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டம், ஊத்துமலை பகுதியை சேர்ந்தவர் கண்ணையா. விவசாயியான இவர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அந்த புகார் மனுவில் தன்னுடைய மனைவியான கோமதி அம்மாள் பெயரை பட்டாவில் சேர்ப்பதற்காக மனுநீதி நாள் முகாமில் மனு அளித்ததாகவும், அந்த மனு மீதான விசாரணையானது தற்போது […]

பி.எஸ்.எல்.வி. சி-59 ராக்கெட் இன்று மாலை 4.06 மணிக்கு விண்ணில் ஏவப்படும் என இஸ்ரோ அறிவிப்பு!

பி.எஸ்.எல்.வி. சி-59 ராக்கெட் இன்று மாலை 4.06 மணிக்கு விண்ணில் ஏவப்படும் என இஸ்ரோ அறிவிப்பு! புரோபா-3, கரோனா கிராப் ஆகிய செயற்கைக் கோள்களுடன் பி.எஸ்.எல்.வி. சி-59 ராக்கெட் நேற்று ஏவப்பட இருந்தது. ஆனால், கடைசி நேரத்தில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ராக்கெட் ஏவுதல் திட்டம் திடீரென ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!