இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம், திருப்புல்லாணி வட்டாரங்களில் தமிழ்நாடு அரசு வேளாண் துறை, ராமநாதபுரம் வேளாண் அறிவியல் நிலையம் சார்பில் உலக மண்வள தினம் கொண்டாடப்பட்டது. ராமநாதபுரம் வேளாண் இணை இயக்குனர் மோகன்ராஜ் தலைமை வகித்தார். அவர் பேசுகையில், மண்ணை மலடு ஆக்காமல், அதன் வளம் காக்க வேண்டும் மண் மாசடைவதை தடுக்க வேண்டியது அனைவரின் கடமை என்றார். மண் பராமரிப்பு குறித்து திருப்புல்லாணி வேளாண் உதவி இயக்குனர் செல்வம் விளக்கம் அளித்து துவக்கி வைத்தார். […]
Category: செய்திகள்
திண்டுக்கல் மாவட்டம், சாணாா்பட்டி அருகே குளத்தில் மூழ்கி 3 சிறுவா்கள் உயிரிழப்பு..
திண்டுக்கல் மாவட்டம், சாணாா்பட்டி அருகே குளத்தில் மூழ்கி 3 சிறுவா்கள் உயிரிழப்பு.. திண்டுக்கல் மாவட்டம், சாணாா்பட்டி அருகே கொசவப்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் முத்துப்பாண்டி. இவரது மகன் கோகுல் (13). அதே பகுதியைச் சோ்ந்தவா்கள் மணிமாறன் மகன் யாதேஸ்வா் (10), ஞானசெல்வம் மகன் டாங்குலின் இன்பராஜ் (10). இவா்களில் கோகுல் கொசவப்பட்டியிலுள்ள பள்ளியில் 8-ஆம் வகுப்பு பயின்று வந்தாா். இதேபோல, யாதேஸ்வா், டாங்குலின் இன்பராஜ் ஆகியோா் வெவ்வேறு பள்ளிகளில் 5-ஆம் வகுப்பு பயின்று வந்தனா். இந்த நிலையில், சனிக்கிழமை […]
பரபரப்பான அரசியல் சூழல்! நாளை கூடுகிறது சட்டசபை! எகிறும் எதிர்பார்ப்புகள்..
தமிழக சட்டசபையின் இந்த ஆண்டின் முதல் கூட்டம் கடந்த பிப்ரவரி மாதம் 12-ந்தேதி கவர்னர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது.கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் அடுத்த 2 நாட்கள் நடந்தது. தொடர்ந்து, பிப்ரவரி 15-ந்தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பதில் உரையுடன் கூட்டம் நிறைவடைந்தது.அதன்பிறகு, பிப்ரவரி 19-ந்தேதி சட்டசபை மீண்டும் கூடியது. அன்றைய தினம் 2024-2025-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டும், அதற்கு அடுத்த நாள் வேளாண் பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டது. அடுத்த 2 நாட்கள் பட்ஜெட் […]
திண்டுக்கல் ரயில் நிலையத்தில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் கதவுகள் திறக்காததால் பரபரப்பு!! கொடைரோடு நிலையத்தில் இறங்கிய பயணிகள்..
திண்டுக்கல் ரயில் நிலையத்தில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் கதவுகள் திறக்காததால் பரபரப்பு!! கொடைரோடு நிலையத்தில் இறங்கிய பயணிகள்.. சென்னையில் இருந்து திருநெல்வேலிக்கு சென்ற வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் திண்டுக்கல் ரயில் நிலையத்திற்கு வந்தபோது கதவுகள் திறக்கப்படாமல் பழுதானதால் குறிப்பிட்ட நேரத்திற்குள் பயணிகள் இறங்க முடியவில்லை. இதை தொடர்ந்து திண்டுக்கல் ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டு சென்ற வந்தே பாரத் ரயிலின் அபாய சங்கலியை அழுத்தி பயணிகள் ரயிலை நிறுத்தினாலும் ரயில் நீண்ட தூரம் சென்று விட்டதால் […]
பிறப்பால் ஒருவர் முதல்-அமைச்சராவதாக ஆதவ் அர்ஜுனா சொல்லியிருப்பது ஏன் என்று எனக்கு புரியவில்லை. துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் தேர்தலில் எம்.எல்.ஏ.வாக ஜெயித்துவிட்டுதான் வந்திருக்கிறார் !- டிடிவி தினகரன்..
சென்னையில் நேற்று நடைபெற்ற ‘எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ நூல் வெளியீட்டு விழாவில் வி.சி.க. பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா பேசியபோது, தமிழ்நாட்டில் மன்னராட்சி ஒழிக்கப்பட வேண்டும் என்றார். பிறப்பால் ஒரு முதல்-அமைச்சர் இங்கு உருவாகக் கூடாது. தமிழ்நாட்டை ஒரு கருத்தியல் தலைவர்தான் ஆள வேண்டும்” என்று தெரிவித்தார். இந்நிலையில் ஆதவ் அர்ஜுனா பேசிய கருத்து குறித்து அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது அவர் கூறியதாவது;- “தேர்தல் அரசியல் மூலம் மக்கள் ஒரு கட்சிக்கு வாக்களித்து […]
திருவாடானை அருகே பாமக கொடியேற்று விழா..
இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை ஒன்றியம் தாமோதரன்பட்டினம் கிழக்கு கடற்கரை சாலை சந்திப்பில் பாமக கொடி ஏற்று விழா நடந்தது. திருவாடானை ஒன்றிய பாமக செயலாளர் தர்மராஜ் தலைமை வகித்தார். ஒன்றிய இளைஞர் அணி செயலாளர் அய்யப்பன், மீனவர் அணி தலைவர் ராகவேந்திரன் முன்னிலை வகித்தனர். கட்சி கொடி ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. கிளை செயலாளர் கலைச்செல்வன், மூர்த்தி, துணை செயலாளர் பிரபாகரன், பொருளாளர் தீபேஷ் கண்ணன், பிரசன்னா, வில்லாயுதம், அய்யப்பன், பாண்டி, நாகேந்திரன் உள்பட […]
இராமநாதபுரம் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி ஆலோசனை கூட்டம்..
இராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சியை பலப்படுத்த காங்., கிராம ஊராட்சி, வார்டு, நகர், வட்டார மாவட்ட அளவில் கமிட்டி அமைக்க வட்டார, நகர் தலைவர்கள் கூட்டம் இன்று நடந்தது. மாவட்ட பொறுப்புக்குழு ஒருங்கிணைப்பாளரும், திருவாடானை சட்டமன்ற உறுப்பினருமான ராம.கருமாணிக்கம் தலைமை வகித்தார். மாவட்ட பொருளாளரும், மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினரும், நகர்மன்ற உறுப்பினருமான இராஜாராம் பாண்டியன் முன்னிலை வகித்தார். இதில் மாநில பார்வையாளர்கள் டாக்டர். செல்வராஜ், அடையாறு பாஸ்கரன் ஆகியோர் பங்கேற்றனர். மாநில செயலாளர் ஆனந்தகுமார், […]
சினிமாவில் பெரிய ஹீரோவாக நடித்துவிட்டால், அனைத்தையும் செய்துவிட்டார்கள் என்று மக்கள் கருதிவிட மாட்டார்கள்! முதலில் ஒரு கவுன்சிலராக வாங்க அப்புறம் பேசலாம்!-சி.வி.எம்.பி.எலிழரசன் காட்டம்..
தமிழ்நாட்டில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து மக்கள் பயன்பாட்டுக்கு உழைத்து வருகிறது. கடந்த 10 ஆண்டு அதிமுக ஆட்சி காலத்தில் நிகழ்ந்த பிரச்னைகளை சரி செய்து, மக்களாட்சியை சிறப்பாக செய்துகொண்டு வருகிறது. பெண்கள், ஆண்கள், இளைஞர்கள், திருநங்கைகள், விவசாயிகள், விளையாட்டு உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் அனைவருக்குமான அரசாக திராவிட மாடல் அரசு சிறப்பாக செயல்பட்டு மக்கள் மனதில் மேலும் சிறப்பு அந்தஸ்தை பெற்று வருகிறது. இருப்பினும் எதாவது குறை சொல்ல வேண்டும் என்றே எதிர்க்கட்சிகள் […]
உங்கள் எதிர்பார்ப்புகளை செயலாற்றுவதற்காகவா? நாங்கள் இயக்கம் வைத்துள்ளோம்?-அம்பேத்கர் வாழ்க்கை வரலாற்று நூல் வெளியீட்டு விழாவில் தொல். திருமாவளவன் கேள்வி..
பிறர் நினைப்பதையும், அவர்கள் விரும்புவதையும் சொல்ல வேண்டும் எனவும் அவர்கள் விரும்புவதை முடிவாக எடுக்க வேண்டும் எனவும் எதிர்பார்க்கிறார்கள் உங்கள் எதிர்பார்ப்புகளை செயலாற்றுவதற்காகவா? நாங்கள் இயக்கம் வைத்துள்ளோம்?” என்று திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார்.. சென்னை அசோக் நகரில் உள்ள விசிக தலைமை அலுவலகத்தில் அம்பேத்கர் குடும்பத்தைச் சேர்ந்தவர் மற்றும் சமூக செயற்பாட்டாளருமான ஆனந்த் டெல்டும்டே எழுதிய அம்பேத்கரின் வாழ்க்கை வரலாற்று நூலான ICONOCLAST நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்நூல் வெளியீட்டு விழாவில் விசிக தலைவர் திருமாவளவன், […]
இறுமாப்புடன் சொல்கிறேன், தமிழகத்தில் 200 தொகுதிகளில் வெற்றி பெறுவோம்!- திமுக எம்.பி. கனிமொழி பேச்சு..
இறுமாப்புடன் சொல்கிறேன், தமிழகத்தில் 200 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என திமுக எம்.பி. கனிமொழி கூறியுள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா தொகுத்துள்ள ‘எல்லோருக்குமான தலைவர் – அம்பேத்கர்’ என்ற நூல் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று (டிசம்பர் 6) நடைபெற்றது. இந்த விழாவில் விசிக தலைவர் தொல். திருமாவளவன், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் ஆகியோர் பங்கேற்கவிருப்பதாகக் கூறப்பட்ட நிலையில், இரு தலைவர்களும் ஒரே மேடையில் பங்கேற்பது குறித்து […]
ஆன்லைனில் முதலீடா? மோசடி!! காவல்துறை எச்சரிக்கை..
மொபைல் மூலம் இணைய பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில், ஆன்லைனில் இணையதளம், டெலிகிராம் மற்றும் வாட்ஸப் உள்ளிட்ட ஆன்ட்ராய்டு செயலி வாயிலாக முதலீடு எனும் பெயரில் பல்வேறு நிதி மோசடிகள் நடைபெற்று வருகிறது. சமூக ஊடகங்களான வாட்ஸப் மற்றும் டெலிகிராம் மற்றும் யூடியூப் சேனல்கள் மூலம் “உங்கள் முதலீடு இரட்டிப்பாகும், வீட்டிலிருந்து கொண்டே ஆன்லைன் மூலம் அதிக பணம் சம்பாதிக்கலாம்” இது போன்ற கவர்ச்சிகரமான விளம்பரங்கள் மூலம் பொதுமக்களை முதலீடு செய்ய வைத்து ஏமாற்றி வருகின்றனர். இதனை […]
ராமநாதபுரத்தில் 991 பேருக்கு ரூ.2.66 கோடி மதிப்பில் நலத்திட் உதவிகள் பால் வளத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் வழங்கினார்..
இராமநாதபுரம் : இந்திய அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கிய அண்ணல் அம்பேத்கர் நினைவு நாளை முன்னிட்டு தமிழக அரசின் பல்வேறு துறைகள் சார்பில் தூய்மை பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியை தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். இதையொட்டி, ராமநாதபுரத்தில் ஆதிதிராவிடர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப் பட்டோர் மற்றும் சிறுபான்மையினருக்கான அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வு ராமநாதபுரத்தில் நடந்தது மாவட்ட ஆட்சியர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் தலைமை […]
இந்தியா முழுவதுமுள்ள 93 ரயில் அஞ்சல் நிலையங்களும் தமிழ்நாட்டில் உள்ள 10 ரயில் அஞ்சல் நிலையங்களும் மூட உத்தரவு ! சு.வெங்கடேசன், எம்.பி.அவசர கடிதம்..
இந்தியா முழுவதுமுள்ள 93 ரயில் அஞ்சல் நிலையங்களும் தமிழ்நாட்டில் உள்ள 10 ரயில் அஞ்சல் நிலையங்களும் மூட உத்தரவு ! சு.வெங்கடேசன், எம்.பி.அவசர கடிதம்.. இந்திய அஞ்சல் துறைக்கு எதிராகவும்,தனியார் கூரியர் நிறுவனங்களுக்கு ஆதரவாகவும் எடுக்கப்பட்டுள்ள இந்த முடிவை ஒன்றிய அரசு கைவிட வேண்டும்.தமிழ்நாட்டில் உள்ள பத்து ரயில் அஞ்சல் அலுவலகங்கள் மூடல்.உத்தரவை திரும்பப்பெற ஒன்றிய அமைச்சருக்கு சு.வெங்கடேசன் எம்பி கடிதம். இந்தியாவின் ரயில் அஞ்சல் அலுவலகங்கள் இந்திய மக்களின் வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்தவை. கடைசி நிமிடத்தில் […]
நாட்டிலேயே முதல் முறையாக படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயில்! விரைவில் சோதனை ஓட்டம் நடத்தப்படும் என அறிவிப்பு..
நாட்டிலேயே முதல் முறையாக படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயில் விரைவில் சோதனை ஓட்டம் நடத்தப்படும் என்று ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், சோதனை ஓட்டங்கள் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டதும், படுக்கை வசதிகொண்ட வந்தே பாரத் ரயில் சேவை தொடங்கும் தேதி அறிவிக்கப்படும் என்றார். முதற்கட்டமாக படுக்கை வசதிகொண்ட வந்தே பாரத் ரயில்களை குறைந்த தொலைவு கொண்ட விரைவு ரயில் […]
அம்பேத்கருக்கு வீர வணக்கம்..
இராமநாதபுரம்: இந்திய அரசியலமைப்பு சட்ட மேதை புரட்சியாளர் அம்பேத்கர் நினைவு நாளை முன்னிட்டு ஏர்வாடி அருகே புல்லந்தை கிராமத்தில் அம்பேத்கர் உருவச் சிலைக்கு திராவிடத் தமிழர் கட்சி மாவட்ட செயலாளர் சக்திவேல் தலைமையில் மாலை அணிவித்து வீர வணக்கம் செலுத்தப்பட்டது. மாவட்ட தலைவர் புவனேஷ்வரன், மாவட்ட அமைப்பு செயலாளர் காளிதாஸ், முன்னிலை வகித்தனர். மதுபாலன், ஜெகநாதன், கார்த்திக், ரெத்தினேஷ், ஊடகப்பிரிவு அரிவரசு மற்றும் அருண்அதியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ராமநாதபுரம் சுற்றுச்சூழல் தன்னார்வலருக்கு சேவை செம்மல் விருது..
இராமநாதபுரம் : தமிழ்நாடு தன்னார்வலர்கள் அமைப்பு சார்பில் சென்னை ஐஐடி வளாகத்தில் சேவை செம்மல் விருது வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் தமிழகத்தில் 38 மாவட்டங்கள், புதுச்சேரி உள்பட 39 மாவட்டங்களில் கடந்த ஓராண்டில் தன்னலமற்ற சேவை செய்து வந் தோரை அடையாளம் கண்டு, அவர்களின் சேவைகளை அங்கீகரித்து 39 பேருக்கு விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. இதில் ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளி, கல்லூரி வளாகங்களில் நிழல், பலன் மரக்கன்றுகள், சுற்றுச்சூழல் விழிப்புணர்வு, பசுமை கிராமம் […]
தேவிபட்டினத்தில் எஸ்டிபிஐ கட்சியினர் ஆர்ப்பாட்டம்..
இராமநாதபுரம் மாவட்டம் தேவிப்பட்டினத்தில், எஸ்டிபிஐ கட்சியின் இராமநாதபுரம் கிழக்கு மாவட்ட தலைவர் ரியாஸ் கான் தலைமையில் மக்கள் திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக எஸ்டிபிஐ கட்சியில் தமிழ் மாநில செயலாளர் நஜ்மா பேகம் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார் முன்னதாக மாவட்ட செயலாளர் நஜீம் அனைவரையும் வரவேற்றார். இராமநாதபுரம் சட்டமன்ற தொகுதி தலைவர் பீர் மொஹிதீன் கண்டன கோஷம் எழுப்பினார், திருவாடானை சட்டமன்ற பொறுப்பாளர் ஹனீப் நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கினார் மாவட்ட பொதுச் […]
வலையில் சிக்கிய அரிய வகை நட்சத்திர ஆமை:கடலில் பத்திரமாக விட்ட மீனவர்கள்..!
தொண்டி கடலில் சிக்கிய அரிய வகை நட்சத்திர ஆமையை, மீட்டு மீண்டும் பத்திரமாக கடலில் விட்ட மீனவர்களுக்கு பாராட்டு குவிகிறது. ராமநாதபுரம் மாவட்டம்,தொண்டி புதுக் குடியை சேர்ந்த மீனவர் ராமகிருஷ்ணன், பாலமுருகன், மணிகண்டன் ஆகியோர் தொண்டி புதுக்குடி கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்தபோது, அவர்களது வலையில் 15 கிலோ எடை கொண்ட அதிசய நட்சத்திர ஆமை ஒன்று சிக்கியது. உடன் அதை பத்திரமாக வலையில் இருந்து எடுத்து உயிருடன் கடலில் மீண்டும் விட்டனர். தடை செய்யப்பட்ட கடல் ஆமையை […]
தாமோதர பட்டினம் கடலோர பகுதிகளில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்ட கடலோர பாதுகாப்பு படையினர்..
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே தாமோதரப்பட்டினம் கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் கடலோர காவல் படை சார்பு ஆய்வாளர் கதிரவன் தலைமையிலான காவலர்கள் வாகனங்களை நிறுத்தி வாகன சோதனையில் ஈடுபட்டனர். தொடர்ச்சியாக கிழக்கு கடற்கரை சாலை வழியாக கடல் அட்டை, வெடி பொருட்கள், தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் கடத்தப்பட்டு வருவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் கடலோர பாதுகாப்பு படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் சமீபத்தில் மாவட்ட எஸ்பி தலைமையில் தடை செய்யப்பட்ட குட்கா போதை […]
பாபரி மஸ்ஜித் இடிப்பு தினம் : எஸ்டிபிஐ ஆர்ப்பாட்டம்..
தேவிபட்டினத்தில், எஸ்டிபிஐ ராமநாதபுரம் கிழக்கு மாவட்ட தலைவர் ரியாஸ் கான் தலைமையில் இன்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது. எஸ்டிபிஐ தமிழ் மாநில செயலர் நஜ்மா பேகம். மாவட்ட பொதுச் செயலர் அப்துல் ஜமீல். விம் மாவட்ட தலைவர் ரம்ஜான் பேகம், மாவட்ட துணைத் தலைவர் சுலைமான், செயலர் ஆசாத் செயற்குழு உறுப்பினர்கள் நவ்வர்ஷா, செய்யது அலி பொருளாளர், ஹசன் அலி, மீனவர் அணி மாவட்ட தலைவர் பகுருதீன், பொறியாளர் அணி மாவட்ட தலைவர் சேக் ஜலால் ஊடக […]
You must be logged in to post a comment.