ஆபரணத்தங்கத்தின் விலை கடந்த வாரம் ஏறுவதும், குறைவதுமாக இருந்தது. இதனை தொடர்ந்து வாரத்தின் முதல் நாளான நேற்று தங்கம் சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ஒரு சவரன் ரூ. 57,040 விற்பனையானது. இந்த நிலையில், இன்று தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. சவரனுக்கு ரூ.600 உயர்ந்து ஒரு சவரன் ரூ. 57,640-க்கும் கிராமுக்கு 75 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ. 7,205-க்கும் விற்பனையாகிறது.கடந்த மூன்று நாட்களாக விலை மாற்றமின்றி விற்பனையான வெள்ளி விலை இன்று உயர்ந்துள்ளது. […]
Category: செய்திகள்
இனியாவது எடப்பாடி பழனிச்சாமி பொய் பேசுவதை நிறுத்தி கொள்ள வேண்டும்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை..
ஃபெஞ்சல் புயல், மதுரை டங்ஸ்டன் சுரங்கத்திற்கு ஒன்றிய அரசு அனுமதி உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளுக்கு அடுத்து இரு நாட்கள் தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம் நடைபெறும் என சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு அவர்களால் அறிவிக்கப்பட்டது. அதன்படி, இன்று (டிசம்பர் 9) தமிழ்நாடு சட்டப்பேரவை கூடியது. சட்டப்பேரவை கூட்டத்தின் தொடக்கத்தில், முரசொலி செல்வம், ரத்தன் டாடா உள்ளிட்ட 10க்கும் மேற்பட்டோருக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, பெரியகருப்பன், செந்தில் பாலாஜி மற்றும் தங்கம் தென்னரசு ஆகியோர் […]
இன்று முதல் கன மழை! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்க..
வங்கக்கடலில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த தாழ்வு பகுதியாக மாறுவதில் தொடர்ந்து தாமதம் நீடிக்கிறது என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து இந்திய வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய, கிழக்கு இந்திய பெருங்கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, அதே இடத்தில் நிலவுகிறது. குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த தாழ்வு பகுதியாக மாறுவதில் தொடர்ந்து தாமதம் நீடிக்கிறது. காற்றழுத்த […]
இன்று டிசம்பர் 10 மனித உரிமைகள் தினம்…
இன்று டிசம்பர் 10 மனித உரிமைகள் தினம் உலகம் முழுவதும் அனுசரிக்கப்பட்டு பல்வேறு விழிப்புணர்வு நிகழ்வுகளும் நடத்தப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக கீழக்கரை மக்கள் நல பாதுகாப்பு கழகம் சாரபாக விழிப்புணர்வு பிரசுரங்களும் விநியோகம் செய்யப்பட்டது. இதன் தொடர்ச்சியாக மக்கள் நல பாதுகாப்பு கழகம் நிர்வாகிகள் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இன்றைய தினம் உலகில் மனித நேயம் தழைத்தோங்கவும், மனித நேயம் காக்கப்படவும், மனித குலத்தின் மாண்புகள் உயரவும், மனிதர்கள் அனைவரும் சமம் என்ற உயர்ந்த சிந்தனை அனைவரின் மனதிலும் […]
இராமநாதபுரம், இராமேஸ்வரம் பகுதிகளில் இலவச டியூஷன் சென்டர்கள் திறப்பு…
இராமநாதபுரம் : அமிர்தா குழுமமானது கல்வி மட்டுமின்றி மக்களின் வாழ்க்கை மேம்பாட்டிற்காக பல்வேறு நலத்திட்டங்களை மேற்கொண்டு வருகிறது. அதனடிப்படையில் மாதா அமிர்தானந்தமயி ஆசியுடன் இராமநாதபுரம் மாவட்ட மாணவர்களின் கல்வித்திறனை மேம்படுத்தும் உயர் நோக்கில் இராமநாதபுரம்) அருகே ஆர்.எஸ். மடை, எம்.கே.நகர், இராமேஸ்வரம் , ஜெ.ஜெ.நகர் ஆகிய இடங்களில் அமிர்தா ரைட் இலவச டியூஷன் சென்டர் தொடங்கப்பட்டுள்ளது. இம்மையங்கள் மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்கு உறுதுணையாக திகழ்கிறது. பெற்றோரின் வேண்டுதலுக்கு இணங்க வழுதூர், வேதாளை ஆகிய இடங்களிலும் இலவச டியூஷன் […]
தனுஷ்கோடி ஆற்றில் மீன்பிடி உரிமம்: சமரச கூட்டத்தில் உடன்பாடு..
இராமநாதபுரம் :தனுஷ்கோடி ஆற்றில் சேராங்கோட்டை கிராம மக்கள் மீன்பிடித்தல் தொடர்பாக ராமேஸ்வரம் தாலுகா அலுவலகத்தில் சமரச கூட்டம் நடந்தது. இராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் ராஜமனோகரன் தலைமை வகித்தார். ராமநாதபுரம் மீன்வளத்துறை துணை இயக்குநர் பிரபாவதி, ராமேஸ்வரம் உதவி இயக்குநர் அப்துல் காதர் ஜெய்லானி முன்னிலை வகித்தனர். தனுஷ்கோடி ஆற்றில் ஒரு சாரார் மட்டும் மீன்பிடிக்கும் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும். ஆற்றில் தனி நபர் ஒருவருக்கு முறைகேடாக வழங்கிய உள் குத்தகை தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க […]
ரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநராக சஞ்சய் மல்ஹோத்ரா நியமனம்! யார் இவர் முழுப் பிண்ணனி என்ன?
ரிசர்வ் வங்கியின் ஆளுநராக சஞ்சய் மல்ஹோத்ராவை நியமனம் செய்து மத்திய அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சஞ்சய் மல்ஹோத்ரா டிசம்பர் 11ஆம் தேதி முதல் 3 ஆண்டுகளுக்கு பணியில் இருப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வருவாய் துறை செயலாளராக உள்ள சஞ்சய் மல்ஹோத்ராவை ரிசர்வ் வங்கியின் ஆளுநராக மத்திய அரசு நியமித்துள்ளது. ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த் தாஸின் பதவிக்காலம் வரும் 11ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இந்த நிலையில், ரிசர்வ் வங்கியின் ஆளுநராக சஞ்சய் மல்ஹோத்ராவை மத்திய அரசு நியமித்து […]
கீழக்கரை அரசு மருத்துவமனையில் நோயாளிகளை சந்தித்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியினர்..
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் சார்பில் நகர் செயலாளர் ஹபீப் முஹமது தம்பி மற்றும் மாநில இளைஞரணி செயலாளரும் நகர் ஆலோசகருமான நைய்னா முகம்மது ஆகியோர் தலைமையில் தாலுகா அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் உள் நோயாளிகளை சந்தித்து நலம் விசாரித்தனர். அதனைத் தொடர்ந்து மருத்துவர்கள் சிகிச்சை வழங்குவதை பற்றியும் செவிலியர்கள் பணிகளைப் பற்றியும் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளிடம் விசாரித்து அவர்களுக்கு உணவு பொருள்கள் மற்றும் பழங்கள் வழங்கி […]
கீழக்கரை மக்தூமியா உயர்நிலைப் பள்ளியின் புதிய தாளாளர் தேர்வு..
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை பழைய குத்பா பள்ளி ஜமாத் பரிபாலனக் கமிட்டிக்கு உட்பட்ட மக்தூமியா உயர்நிலைப் பள்ளியின் புதிய நிர்வாகிகள் தேர்வு ஜமாத் தலைவர் ஜனாப் ஹாஜா ஜலாலுதீன் செயலாளர் ஜனாப் ஷர்ஃப்ராஸ் நவாஸ் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. இதில் பள்ளியின் புதிய தாளாளராக அந்த ஜமாத்தை சேர்ந்த வழக்கறிஞர் M.நாதியா ஹனிபா Bsc, MBA LLB தேர்வாகியுள்ளார். அதனைத் தொடர்ந்து புதிய கல்வி குழு மற்றும் புதிய நிர்வாக கமிட்டி உறுப்பினர்கள் தேர்வு நடைபெற்றது .இதில் […]
சட்ட சபையில் டங்ஸ்டன் தீர்மானம்: மத்திய அரசுக்கு இன்று இரவுக்குள் அனுப்பத் திட்டம்..
மதுரை மாவட்டம் மேலூர் அருகே அரிட்டாபட்டி, நரசிங்கம்பட்டி மலைப்பகுதியில் இருந்து சுற்றி உள்ள 5 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் டங்ஸ்டன் கனிம சுரங்கம் அமைப்பதற்கு இந்துஸ்தான் ஜிங்க் லிமிடெட் நிறுவனத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியது. இந்த அனுமதியை மத்திய அரசு ரத்து செய்யக்கோரி முல்லை பெரியாறு ஒரு போக பாசன விவசாயிகள் சங்கம் சார்பில் கடந்த 29-ந் தேதி மேலூரில் கண்டன ஆர்ப்பாட்டம், கடையடைப்பு நடந்தது. மேலும் தொடர்ந்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்த […]
மன்னர் பரம்பரை மனநிலையை உடைத்தெறிவேன்!விசிக-வில் இருந்து நீக்கப்பட்ட ஆதவ் அர்ஜுனா பரபரப்பு சபதம்..!
மன்னர் பரம்பரை மனநிலையை உடைத்தெறிவேன்!விசிக-வில் இருந்து நீக்கப்பட்ட ஆதவ் அர்ஜுனா பரபரப்பு சபதம்..! விசிக-வில் துணை பொதுச் செயலாளராக இருந்த ஆதவ் அர்ஜுனாவை நீக்கி திருமாவளவன் உத்தரவிட்ட நிலையில் ஆதவ் அர்ஜுனா பரபரப்பு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதன் விவரம் வருமாறு: தானாக விடியுமென்று தவறாக நம்பாதே வீணாக மனம் நொந்து எல்லாம் விதியென்று வெம்பாதே! நீயாக முன்வந்து நெருப்பாக விழி சிவந்து நிலையாக போரிட்டால் நிச்சயமாய் விடியலுண்டு உனக்கு! ‘அதிகாரத்தை அடைவோம்’ என்று எழுச்சித் தமிழர் எந்த […]
மக்கள் குறை தீர் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள்..
இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரக கூட்ட அரங்கில் மக்கள் குறை தீர் நாள் கூட்டம் இன்று நடந்தது. இதில் 322 பேர் தங்களில் பல்வேறு கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சியர் சிம்ரன் ஜீத் சிங் காலோனிடம் வழங்கினர். இதில மாற்றுத்திறனாளி நலத்துறை சார்பில் 6 பேருக்கு ரூ.62 ஆயிரம் மதிப்பில் உபகரணங்களை மாவட்ட ஆட்சியர் சிம்ரன்ஜித் சிங் காலோன் வழங்கினார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜலு, முதன்மை கல்வி அலுவலர் சின்னராசு, சமூக பாதுகாப்பு திட்ட […]
பரமக்குடி சவுராஷ்ட்ரா பள்ளி மாணவர்களுக்கு ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் பாராட்டு..
இராமநாதபுரம் : தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் தொழில் முனைவோர் மேம்பாடு புத்தாக்க மேம்பாட்டு திட்டம் 2.0 சார்பில் மாநில அளவிலான அறிவியல் கண்டுபிடிப்பு போட்டியில் கண்ணுக்கு புலனாகாதா நுண்ணுயிரிகளை எளிதாக கண்டுபிடிக்கும் நுண்ணோக்கி கண்டுபிடித்த பரமக்குடி சௌராஷ்டிரா மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவியருக்கு ரூ 10 ஆயிரம் பரிசுத்தொகை வென்றனர் இம்மாணவர்களை கண்டுபிடிப்பிற்கு வழிகாட்டிகளாக திகழ்ந்த ஆசிரியர்களை மாவட்ட ஆட்சியர் சிம்ரன்ஜித் சிங் காலோன் இன்று பாராட்டினார். மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜலு, முதன்மை கல்வி அலுவலர் சின்னராசு, […]
கடுக்காய்வலசை அரசு பள்ளி மாணவர்களுக்கு ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் பாராட்டு..
இராமநாதபுரம் : தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் தொழில் முனைவோர் மேம்பாடு புத்தாக்க மேம்பாட்டு திட்டம் 2.0 சார்பில் மாநில அளவிலான அறிவியல் கண்டுபிடிப்பு போட்டியில் பார்வையற்றோர் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு பிறர் உதவியின்றி செல்ல ஜிபிஆர்எஸ் கருவி கண்டுபிடித்த மண்டபம் வட்டாரம் கடுக்காய்வலசை அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள மாநில அளவில் மூன்றாம் இடம் பிடித்து ரூ10 ஆயிரம் பரிசு வென்றனர்இம்மாணவர்களை கண்டுபிடிப்பிற்கு வழிகாட்டிகளாக திகழ்ந்த ஆசிரியர்களை மாவட்ட ஆட்சியர் சிம்ரன்ஜித் சிங் காலோன் இன்று […]
அறிவியல் புத்தாக்க போட்டியில் பரிசு குவித்த ராமநாதபுரம் மாணவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் பாராட்டு..
இராமநாதபுரம் : தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் தொழில் முனைவோர் மேம்பாடு புத்தாக்க மேம்பாட்டு திட்டம் 2.0 சார்பில் மாநில அளவிலான அறிவியல் கண்டுபிடிப்பு போட்டியில் ராமநாதபுரம் மீன்வள தொழில்நுட்ப கல்லூரி மாணவர்கள் ராமகோபால், வேல்முருகன், செல்வகணேஷ் ஆகியோர் கேபிள் கிளைடு வே எனும் புதிய தொழில்நுட்ப சாதனம் கண்டுபிடித்து ரூ 1 லட்சம் பரிசுத்தொகை வென்றனர். இந்த மாணவர் 3 பேரையும், அரிய கண்டுபிடிப்பிற்கு வழிகாட்டிகளாக திகழ்ந்த சிவசுடலைமணி, பொன் வேல்முருகன் ஆகியோரை மாவட்ட ஆட்சியர் சிம்ரன்ஜித் […]
சுகாதாரத்துறை ஏற்பாட்டில் கொசு ஒழிப்பு பணி : ஊராட்சி மன்றத் தலைவர்கள் கண்காணிப்பு..
இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் உத்தரவு படி, மாவட்ட சுகாதார அலுவலர் டாக்டர் அர்ஜுன் குமார் ஆலோசனைப்படி புதுவலசை ஊராட்சியில் வீடுகள் தோறும் கொசு ஒழிப்பு பணி இன்று நடந்தது. இப்பணியை மாவட்ட மலேரியா அலுவலர் வேலுச்சாமி, உச்சிப்புள வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சுரேந்திரன், சுகாதார ஆய்வாளர் வைரவசுந்தரம் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் மீரான் ஒலி ஆகியோர் கண்காணித்தனர். இதே போல் பனைக்குளம் ஊராட்சி வீடுகள் தோறும் […]
காரைக்குடியில்சம்பை ஊற்று நீர் , பாதுகாக்க கோரி தாசில்தார் அலுவலகம் முற்றுகை போராட்டம்…
காரைக்குடியில் சம்பை ஊற்று நீரை சட்டவிரோதமாக பயன்படுத்தும் ,நீர் நிலைகளை மாசுபடுத்தும் கெமிக்கல் மற்றும் ஒர்க் ஷாப், கார், பைக் கம்பெனிகளை மூட கோரியும் சம்பை நீர் நீரோட்ட பகுதியில் கட்டிடம் கட்ட தடை செய்யக்கோரியும் தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் கே. எம்.சரீப் தலைமையில் காரைக்குடியில் தாசில்தார் அலுவலகம் முற்றுகை போராட்டம் நடைபெற்றது. விடுதலை தமிழ் புலிகள் கட்சித் தலைவர் குடந்தை அரசன் மற்றும் தோழமைக் கட்சிகள் உள்ளிட்டோர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசாரால் […]
மகாரதம் பவனி !பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்து தி.மலை மாவட்ட காவல்துறை அறிவிப்பு..
மகாரதம் பவனி !பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்து தி.மலை மாவட்ட காவல்துறை அறிவிப்பு.. தி.மலை மாவட்ட காவல்துறை பொது மக்களுக்கு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில் : மகாரதம் பவனி நாளை போக்குவரத்து நெறிமுறை மற்றும் அறிவுரைகள்.. பக்தர்களுக்கு நீர் மோர் வழங்குதல், திலகமிடுதல், ஆசிர்வதித்தல் மற்றும் மிரட்டியும் பணம் வசூலிப்பது குற்றமாகும். மகாரத பவனி நடைபெறும் மாட வீதிகளை நோக்கி செல்லக்கூடிய வீதிகளான அசலியம்மன் கோவில் தெரு, பேய் கோபுர 3வது தெரு, பேய் கோபுரம் பிரதான சாலை, […]
தாயாரை மீட்டு தரக்கோரி மகள் கண்ணீர் மல்க மனு..
இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம் கடலாடி தாலுகா ஆ. புனவாசல் பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜ். இவரது மனைவி பத்ரகாளி. இவரை வீட்டு வேலைக்காக ஏஜன்ட்கள் கொக்கா டி இருளாண்டி, திருச்சி நாசர் ஆகியோர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் மஸ்கட் நாட்டிற்கு அனுப்பினர். அங்கு பத்ரகாளி தொடர் சித்ரவதையால் தற்போது மிகவும் உடல் நலம் பாதித்துள்ளார். இதனால் பத்ரகாளியை மீட்டு தாயகம் கொண்டு வர நடவடிக்கை எடுக்கக் கோரி அவரது மகள் நபியா மக்கள் குறை தீர் […]
பழனியில் பாமக (வடக்கு) மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது..
பழனியில் பாமக (வடக்கு) மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது.. திண்டுக்கல் வடக்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி சார்பில், மாவட்ட செயற்குழு கூட்டம் பழனியில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இதற்கு மாவட்ட செயலாளர் வைரமுத்து தலைமை தாங்கினார். தொழிற்சங்க செயலாளர் ராஜரத்தினம், அமைப்பு செயலாளர் நடராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக நகர செயலாளர் பிரபாகரன் அனைவரையும் வரவேற்றார். பின்பு நடந்த கூட்டத்தில், தமிழ்நாடு உழவர் பேரியக்கம் சார்பில் திருவண்ணாமலையில் நடைபெற உள்ள மாநாட்டில் கட்சியினர் […]
You must be logged in to post a comment.