மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கவணம்பட்டியைச் சேர்ந்தவர்கள் சுப்பிரமணியன் – பாண்டியம்மாள் தம்பதி., சுப்பிரமணியன் கட்டிட தொழிலாளியாகவும், பாண்டியம்மாள் இல்லத்தரசியாகவும் வாழ்ந்து வந்தனர்.,இவர்களுக்கு திருமணமான நாளிலிருந்து 35 ஆண்டுகளாக குழந்தை இல்லாத சூழலில் கணவருக்கு குழந்தையாக மனைவியும், மனைவிக்கு குழந்தையாக கணவனும் அதிக அளவு பாசத்துடன் இருந்துள்ளனர்.,இந்நிலையில் கடந்த 7ஆம் தேதி சுப்பிரமணியனுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு நேற்று 10ஆம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்., கணவர் உயிரிழந்த நொடி முதல் மீளமுடியாத சோகத்தில் இருந்து வந்த […]
Category: செய்திகள்
பாம்பன் கடலில் கரை ஒதுங்கிய ராட்சத திமிங்கலம்..
இராமநாதபுரம் : இராமேஸ்வரம் அருகே பாம்பன் கடற்கரையில் 2 டன் எடை, 18 அடி நீளம் கொண்ட ராட்சத திமிங்கலம் இறந்த நிலையில் இன்று காலை கரை ஒதுங்கியது. இதனை வனத்துறையினர் கைப்பற்றி உடற்சுறு ஆய்வு செய்து பாம்பன் கடற்கரை மணலில் புதைக்க ஏற்பாடு செய்தனர். இராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களை உள்ளடக்கிய மன்னார் வளைகுடா கடல் பகுதியில் கடற் பசு, திமிங்கலம், சுறா, டால்பின், கடற் குதிரை, கடல் பல்லி, உள்ளிட்ட அரிய வகை கடலவாழ் […]
கன மழை எதிரொலி! எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரி விடுமுறை..
கனமழை காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று ஒருநாள் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். தென்கிழக்கு வங்கக் கடலில் உருவான புயல் சின்னம் செவ்வாய்க்கிழமை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது. இது, புதன்கிழமை (டிச.11) மேற்கு-வடமேற்கு திசையில் இலங்கை – தமிழக கடலோரப் பகுதியை நோக்கி மெதுவாக நகரும். இதன்காரணமாக தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் பல இடங்களில் அடுத்த 4 நாள்களுக்கு இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. […]
வத்தலக்குண்டில் பதவி பறிக்கப்பட்டதால் விரக்தி அடைந்த த.வெ.க நிர்வாகி தற்கொலை முயற்சி!!
வத்தலக்குண்டில் பதவி பறிக்கப்பட்டதால் விரக்தி அடைந்த த.வெ.க நிர்வாகி தற்கொலை முயற்சி!! திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே எழில்நகரை சேர்ந்த அபினேஷ்(26) தமிழக வெற்றி கழகத்தில் வத்தலகுண்டு ஒன்றிய தலைவராக பொறுப்பு வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் வத்தலகுண்டு பேருந்து நிலையம் முன்பு புதிதாக அமைக்கப்பட்ட கொடிமேடை கல்வெட்டில் வத்தலகுண்டு ஒன்றியத்திற்கு புதிய நிர்வாகிகள் பெயர் பொறிக்கப்பட்டிருந்தது இதனால் அதிர்ச்சி அடைந்த அபினேஷ், உள்ளிட்ட த.வெ.க கட்சியினர் 30-க்கும் மேற்பட்டோர் கொடியேற்று விழா தினத்தன்று புதியவர்களுக்கு […]
கடவுளே அஜித்தே’ என்ற இந்த கோஷம் என்னை கவலையடையச் செய்திருக்கிறது!- நடிகர் அஜித் குமார் கவலை..
பொதுவாக அஜித் படங்களோ அல்லது அஜித் படங்கள் குறித்த அப்டேட்டோ வெளிவருவதற்கு தாமதமாகும் போது, அவருடைய ரசிகர்கள் ‘அப்டேட்’ கேட்டு அலப்பறையைக் கொடுப்பதை தொடர்ந்து செய்துவருகின்றனர். வலிமை படத்தின்போது இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் மொயின் அலியிடம் கூட அப்டேட் கேட்டதையெல்லாம் நம்மால் மறந்துவிட முடியாது. இப்படி பல்வேறு அலப்பறைகளை கொடுத்துக்கொண்டிருக்கும் அஜித் ரசிகர்கள் தற்போது கையில் எடுத்திருக்கும் கோஷம்தான் ‘கடவுளே அஜித்தே’. விடாமுயற்சி படத்துக்காக புது ஸ்டைலை பின்பற்றத் தொடங்கியிருக்கும் அவர்கள், தியேட்டர்களிலும் பொது நிகழ்ச்சிகளிலும் சம்பந்தமே […]
திண்டுக்கல்லில் வாலிபரை கொடூர கொலை செய்த வழக்கில் முன்னாள் ராணுவ வீரர் மற்றும் அண்ணன்-தம்பி உட்பட 7 பேர் கைது..
திண்டுக்கல்லில் வாலிபரை கொடூர கொலை செய்த வழக்கில் முன்னாள் ராணுவ வீரர் மற்றும் அண்ணன்-தம்பி உட்பட 7 பேர் கைது.. திண்டுக்கல், தோமையார்புரம் அருகே முட்புதரில் நேற்று சின்னாளப்பட்டி சேர்ந்த பாலமுருகன்(39) என்பவரை கை, கால்கள் கட்டப்பட்டு கண்கள் துணியால் மூடப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுகுறித்து தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதுகுறித்து S.P.பிரதீப் உத்தரவின் பேரில் புறநகர் DSP. சிபிசாய் சௌந்தர்யன் மேற்பார்வையில் தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன் […]
“டிஜிட்டல் கைது: ஆன்லைனில் விசாரணை” எனும் பெயரில் பணமோசடி; மூவர் கைது..
“டிஜிட்டல் கைது” ஆன்லைன் விசாரணை” எனும் பெயரில் மோசடியில் ஈடுபட்ட மூன்று குற்றவாளிகளை சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர். இது குறித்து சென்னை சைபர் குற்றப்பிரிவு, தலைமையகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளதாவது, போலீஸ் அதிகாரிகளாக ஆள்மாறாட்டம் செய்து மக்களை ஏமாற்றும் டிஜிட்டல் கைது சைபர் மோசடிகள் வியத்தகுமுறையில் உயர்ந்து வருகின்றன. இணையவழியில் அப்பாவி மக்களை தொடர்பு கொள்ளும் மோசடியாளர்கள், தங்களை அரசுதுறையின் அதிகாரிகள் போல அடையாளம் காட்டிக் கொள்வார்கள். சட்டத்துக்கு புறம்பான செயலில் ஈடுபட்டதாக […]
பாஜக கட்சி மற்றும் ஆட்சி குறித்து அவதூறு பிரசாரம் செய்யும் திமுகவினரை வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலில் தமிழக மக்கள் தோற்கடிப்பார்கள்!-தமிழக பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ். பிரசாத் அறிக்கை..
மதியம் மோடி அரசுக்கு எதிராக டங்ஸ்டன் விவகாரத்தில் திமுக – அண்ணா திமுகவின் புதிய திராவிட மாடல் கூட்டணியின் சட்டசபை அரசியல் நாடகம் எடுபடாது. மத்திய அரசு மதுரை டங்ஸ்டன் சுரங்கத்திற்கு அனுமதி அளித்து, சுரங்கம் தோண்டப்பட்டால் முதல்வர் பதவியில் இருந்து விலகுவேன் என்று சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் பேசியது, ரத்து செய்யக் கூறும் தீர்மானம் நிறைவேற்றியது அப்பட்டமான அரசியல் நாடகம். மத்திய அரசின் சதியால் தமிழகத்தில் மதுரை அரிட்டாப்பட்டி, நாயக்கர் பட்டியில் “அத்தைக்கு மீசை முளைத்தால்” […]
முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் பிறந்த நாளை முன்னிட்டு பழனி கோவிலில் அதிமுகவினர் தங்கத்தேர் இழுத்து வழிபாடு..
முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் பிறந்த நாளை முன்னிட்டு பழனி கோவிலில் அதிமுகவினர் தங்கத்தேர் இழுத்து வழிபாடு.. அதிமுக கழக துணை பொதுசெயலாளரும் ,திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளரும் ,நத்தம் சட்டமன்ற உறுப்பினருமான நத்தம் விசுவநாதன் 75 வது பிறந்த நாளை முன்னிட்டு பழனி பெரியம்மா பட்டி ஊராட்சி மன்ற தலைவர் சதிஷ்குமார் தலைமையில் , மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர் அசோக் முன்னிலையில் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் சிறப்பு வழிபாடு செய்தும் தங்கத்தேர் […]
திருவண்ணாமலை தீபத் திருவிழா! பல்வேறு வழித்தடத்தங்களில் சிறப்பு இரயில்கள் இயக்கம்..
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் சுவாமி திருக்கோயில் திருக்கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி, விழுப்புரத்திலிருந்து திருவண்ணாமலைக்கு டிசம்பர் 12,13,14,15-ஆம் தேதிகளில் தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்களை இயக்குகிறது. இதுகுறித்து தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்ட மக்கள் தொடர்பு அலுவலகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் கோயிலில் நடைபெற்று வரும் கார்த்திகை தீபத் திருவிழாவில் முக்கிய நிகழ்வாக, அங்குள்ள கோயில் மலை உச்சியில் டிசம்பர் 13-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) மகாதீபம் ஏற்றப்படவுள்ளது. இத்திருநாளில் அதிகளவில் பக்தர்கள் கலந்து கொள்வார்கள் […]
ஆரணி அருகே நகைக்காக மூதாட்டியை கொலை செய்து தலைமறைவாக இருந்த இருவர் அதிரடி கைது..
ஆரணி அருகே நகைக்காக மூதாட்டியை கொலை செய்து தலைமறைவாக இருந்த இருவர் அதிரடி கைது.. திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த ராட்டினமங்கலம் EB நகரைச் சேர்ந்த மூதாட்டி சிந்தாமணி வயது 75 என்பவரை 11.11.2024. அன்று நகைக்காக கொலை செய்துவிட்டு தலை மறைவாக இருந்த கொலை குற்றவாளிகள் மதுமிதா வயது 40. கவின் என்கிற வெங்கடேசன் வயது 30 இவர்கள் இருவரும் தலைமறைவாக இருந்ததால், இவர்களைப் பிடிக்க வேலூர் சரகம் காவல்துறை துணைத் தலைவர் தேவராணி உத்தரவின் […]
பாகிஸ்தானில் பிறந்த கிறித்துவ மதத்தைச் சேர்ந்த நபருக்கு 43 ஆண்டுகள் கழித்து இந்தியாவில் குடியுரிமை..
பாகிஸ்தானில் பிறந்த கிறித்துவ மதத்தைச் சேர்ந்த நபருக்கு 43 ஆண்டுகள் கழித்து இந்தியாவில் குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானின் கராச்சி நகரில் பிறந்தவர் ஷேன் செபாஸ்டியன் பெரேரா. வடக்கு கோவாவின் அஞ்சுனா கிராமத்தைச் சேர்ந்த இவரது பெற்றோர் பல ஆண்டுகளுக்கு முன்பு கராச்சிக்கு குடிபெயர்ந்தனர். அங்கே, கடந்த 1981, ஆகஸ்ட் மாதம் ஷேன் பிறந்தார். அவர் பிறந்த 4 மாதங்களில் அவரது குடும்பம் மீண்டும் கோவாவிற்கு வந்துவிட்டனர். ஷேன் சிறுவயதில் இருந்து கோவாவில் வளர்ந்து அங்கேயே தனது பள்ளிப்படிப்பையும் […]
மதுரை வெளிச்சநத்தத்தில் 45 அடி உயர கொடிக் கம்பத்துக்கு அனுமதி தந்த விவகாரத்தில் வி.ஏ.ஓ. பரமசிவம் சஸ்பெண்ட்..
மதுரை வெளிச்சநத்தத்தில் 45 அடி உயர கொடிக் கம்பத்துக்கு அனுமதி தந்த விவகாரத்தில் வி.ஏ.ஓ. பரமசிவம் சஸ்பெண்ட்.. மதுரை வெளிச்சநத்தத்தில் 45 அடி உயர கொடிக் கம்பத்துக்கு அனுமதி தந்த விவகாரத்தில் வி.ஏ.ஓ. பரமசிவம் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். 25 அடி உயர கொடிக் கம்பத்துக்கு மட்டுமே அனுமதி உள்ள நிலையில் 45 அடி உயர கம்பத்துக்கு அனுமதி தந்ததாக புகார் அளிக்கப்பட்டது. 45 அடியாக கொடிக் கம்பத்தை உயர்த்த அனுமதி தந்ததாக வி.ஏ.ஓ. பரமசிவத்தை சஸ்பெண்ட் செய்து […]
துவக்கப்பள்ளி கூடுதல் வகுப்பறை கட்டுமானப் பணி : ராமநாதபுரம் ஆட்சியர் ஆய்வு..
இராமநாதபுரம் மாவட்டம் நயினார்கோயில் ஊராட்சி ஒன்றியம் பெருங்களூர் துவக்கப் பள்ளியில் ரூ.29 லட்சம் மதிப்பில் 2 கூடுதல் வகுப்பறை கட்டடங்கள் கட்டப்பட்டு வருவதை ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். நயினார்கோயில் வட்டார வளர்ச்சி அலுவலர் திருநாவுக்கரசு, ஊராட்சி ஒன்றிய பொறியாளர்கள் கணபதி சுப்ரமணியன், ஜெயந்தி உடனிருந்தனர்.
திருவண்ணாமலையில் மகா தேரோட்டம்: “அண்ணாமலைக்கு அரோகரா” கோஷத்துடன் பக்தர்கள் பரவசம்..
திருவண்ணாமலையில் மகா தேரோட்டம்: “அண்ணாமலைக்கு அரோகரா” கோஷத்துடன் பக்தர்கள் பரவசம்.. திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா கடந்த 4-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. வருகிற 13-ந் தேதி காலை பரணி தீபம் மாலை 6 மணிக்கு மலை உச்சியில் மகா தீபமும் ஏற்றப்படுகிறது. தீபத் திருவிழாவை யொட்டி தொடர்ந்து இரவு மாட வீதிகளில் அண்ணாமலையார் உண்ணாமுலையம்மன் வீதி உலா நடந்து வருகிறது. வெள்ளி தேரோட்டம் நடைபெற்றது. தீபத் திருவிழாவில் 7-வது நாளான பஞ்ச மூர்த்திகள் […]
உசிலம்பட்டியில் நடைபெற்ற விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வட்டாச்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் மாதாந்திர விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் தலைமையிடத்து துணை வட்டாச்சியர் ராஜ்குமார், துணை வட்டாச்சியர்கள் தாணு மூர்த்தி, மகேந்திர பாபு தலைமையில் நடைபெற்றது.,இந்த கூட்டத்தில் உசிலம்பட்டி 58 கால்வாய் சங்க விவசாயிகள், மதுரை மாவட்ட நன்செய் புன்செய் விவசாய சங்க விவசாயிகள் உள்ளிட்ட பல்வேறு சங்க விவசாயிகள் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கைகளை முன்வைத்தனர்.,ஊரணி, ஓடைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற புகார்களுக்காகவும், மனுக்களுக்காகவும் காத்திருக்காமல், சம்மந்தப்பட்ட […]
அங்கன்வாடி மைய குழந்தைகளின் தகவல்கள்: ராமநாதபுரம் ஆட்சியர் சரிபார்ப்பு..
இராமநாதபுரம் மாவட்டம் நயினார்கோயில் ஒன்றியம் பெருங் களூர் அங்கன்வாடி மைய பதிவேடுகளில் உள்ள தகவல் படி குழந்தைகளின் எடை, உயரம் அளவீடு செய்து சரி பார்த்தார். எடை குறைவான குழந்தைகள் மீது சிறப்பு கவனம் எடுத்து உரிய ஊட்டச்சத்துகளை வழங்குவதுடன் தாய்மார்களுக்கு தக்க அறிவுரை அடிக்கடி வழங்கி குழந்தைகளை ஆரோக்கியத்துடன் பாதுகாக்க அங்கன்வாடி பணியாளர்கள் உறுதுணையாக இருக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் அறிவுறுத்தினார். நயினார்கோயில் வட்டார வளர்ச்சி அலுவலர் திருநாவுக்கரசு, ஊராட்சி […]
பேவர் பிளாக் சாலையின் தரம் ராமநாதபுரம் ஆட்சியர் ஆய்வு..
இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம் நயினார்கோயில் ஒன்றியம் பெருங்களூர் ஊராட்சியில் ரூ.2.97 லட்சம் மதிப்பீட்டில் பேவர் பிளாக் சாலையின் தரத்தன்மை குறித்து ஆய்வு செய்து சாலையின் இரு புறத்தையும் பலப்படுத்தி நன்கு அமைக்க வேண்டுமென பொறியாளர்களுக்கு மாவட்ட ஆட்சியர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் அறிவுறுத்தினார். நயினார்கோயில் வட்டார வளர்ச்சி அலுவலர் திருநாவுக்கரசு, ஊராட்சி ஒன்றிய பொறியாளர்கள் கணபதி சுப்ரமணியன், ஜெயந்தி உடனிருந்தனர்.
ராமநாதபுரத்தில் டிச.13ல் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் :மாவட்ட ஆட்சியர் தகவல்..
இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு & தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் டிச.13 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இது தொடர்பாக இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் தெரிவித்ததாவது: தமிழக அரசின் சார்பில் ஒவ்வொரு மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வேலை நாடும் இளையோர் பயன்பெறும் பொருட்டு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் ஒவ்வொரு மாதம் நடத்தப்பட்டு வருகிறது. இம்முகாமில் தனியார் துறை நிறுவனங்கள் தங்கள் நிறுவனத்திற்கு […]
தமிழ்நாடு மின்சார வாரியத்தை லாபத்தில் இயக்க ஊழல்கள், முறைகேடுகளை களைய வேண்டும்!- அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்..
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,தமிழ்நாடு மின்சார வாரியம் கடந்த 2022-23ஆம் ஆண்டு வரை ரூ.1.62 லட்சம் திரண்ட இழப்புடன், இந்தியாவிலேயே அதிக இழப்பை சந்தித்த மின்வாரியங்கள் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்திருப்பதாக பாராளுமன்ற மாநிலங்களவையில் மத்திய அரசு தெரிவித்திருக்கிறது. இந்த இழப்புக்கு மத்திய அரசால் பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும் தமிழ்நாடு மின்சாரவாரியத்தில் நிலவும் ஊழல்களும் , முறைகேடுகளும் தான் இத்தகைய இழப்புகள் ஏற்படுவதற்கு முக்கியக் காரணங்கள் ஆகும்.இந்தியாவில் உள்ள அனைத்து மின்வாரியங்களும் சேர்ந்து […]