குற்றாலம் அருவியில் மாவட்ட கலெக்டர், மாவட்ட எஸ்.பி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் ஆய்வினை தொடர்ந்து பொதுமக்கள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டத்தில் கடந்த வாரம் இடைவிடாது கொட்டி தீர்த்த கன மழையால் அணைகள், குளங்கள் மற்றும் ஏரிகள் நிரம்பி அருவிகளில் நீர் ஆர்ப்பரித்து கொட்டி தீர்த்தது. பொதுமக்கள் பாதுகாப்பு கருதி குற்றால அருவிகளில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து கனமழை மற்றும் வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளை சீரமைக்கும் பணி நடைபெற்று வந்தது. இந்நிலையில், குற்றாலத்தில் […]
Category: செய்திகள்
தென்காசியில் புதிய இ-சேவை மையம் திறப்பு..
தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இயங்கி வரும் ஆதார் சேவை மைய கட்டிடத்தில், தமிழ்நாடு அரசின் புதிய இ-சேவை மையம் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் துவங்கி வைக்கப்பட்டுள்ளது. புதிய இ-சேவை மையத்தினை 18.12.2024 அன்று மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே. கமல் கிஷோர் துவக்கி வைத்தார். பின்னர் மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்ததாவது, தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்றைய தினம் புதிய இ-சேவை துவங்கி வைக்கப்பட்டுள்ளது. புதிய இ-சேவை மையத்தில், சாதிச் சான்றிதழ், […]
“சிறுபான்மையினருக்கு என்றென்றும் அரணாகத் திகழும் திராவிட மாடல் அரசு”: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு..
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (18.12.2024) முகாம் அலுவலகத்திலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக, தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையத்தின் சார்பில் திருச்சியில் நடைபெற்ற சிறுபான்மையினர் உரிமைகள் நாள் விழாவில் ஆற்றிய உரை:- அனைவருக்கும் என் மாலை வணக்கம். திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் நடைபெறும் சிறுபான்மையினர் உரிமைகள் நாள் விழாவிற்கு என்னுடைய வாழ்த்துகளை முதலில் தெரிவித்துக் கொள்கிறேன். நாடு இன்று எதிர்கொண்டிருக்கும் சூழல்களையெல்லாம் பார்க்கும்போது, சிறுபான்மையினர் நலனில் அக்கறையும் – ஜனநாயகத்தின் மீது பற்றும் […]
இராமநாதபுரம் மாவட்டம் வேதாளை ஊராட்சியில் பறிக்கப்பட்ட தபால் நிலைய தரத்தைத் திருப்பி கொடுக்க வேண்டும்.! -எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தல்..
இதுதொடர்பாக எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; இராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் ஊராட்சி ஒன்றியத்தில் வேதாளை கிராமம் என்பது மிகவும் பழைமையான பல நூற்றாண்டு பாரம்பரியமிக்க கிராமம் ஆகும். இந்த கிராமத்தில் சிறுபான்மை சமுதாய மக்களும், மீனவர்களும் பெரும்பான்மையாக வாழ்ந்து வருகின்றனர். சுமார் 20,000 மக்கள் தொகையைக் கொண்ட இந்த ஊராட்சியில் 6000 வாக்காளர்கள் உள்ளனர். பல ஆண்டுகளாக 623804 என்ற அஞ்சல் குறியீட்டைக் கொண்ட இந்த ஊராட்சியின் தபால் நிலையம் […]
மண்டபம், முதுகுளத்தூர், கடலாடி, சாயல்குடி பகுதிகளில் நாளை (19/12/2024) மின் தடை : மின்வாரியம் அறிவிப்பு..
இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணி நாளை (19.12.2024) மேற்கொள்ளப்பட உள்ளது. இதனால் அரியமான், சுந்தரமுடையான், வேதாளை, மரைக்காயர்பட்டினம், மண்டபம், பாம்பன், அக்காள்மடம், தங்கச்சிமடம், அரியாங்குண்டு, ராமேஸ்வரம், வடகாடு, வேர்க்கோடு, புதுரோடு, சம்பை, ஓலைக்குடா பகுதிகளில் நாளை காலை 10 மணியில் இருந்து மாலை 5 மணி வரை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படும் என ராமநாதபுரம் ஊரக உதவி செயற்பொறியாளர் சோமசுந்தரம் தெரிவித்துள்ளார். முதுகுளத்தூர் துணை […]
பத்திரிகையாளர் குடும்ப உதவி நிதித்திட்டத்தில் உதவித் தொகையை உயர்த்தி அரசாணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு!- தமிழ்நாடு உழைக்கும் பத்திரிகையாளர் சங்கம் (WJUT) நன்றி அறிக்கை..
பத்திரிகையாளர் குடும்ப உதவி நிதித்திட்டத்தில் உதவித் தொகையை உயர்த்தி அரசாணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு!- தமிழ்நாடு உழைக்கும் பத்திரிகையாளர் சங்கம் (WJUT) நன்றி அறிக்கை.. இது தொடர்பாக “தமிழ்நாடு உழைக்கும் பத்திரிகையாளர் சங்கத்தின்” மாநிலத் தலைவர் அ.ஜெ.சகாயராஜ், மாநிலப் பொதுச் செயலாளர் பா.பிரதீப்குமார், மாநிலப் பொருளாளர் இரா.ராம்ஜி ஆகியோர் வெளியிட்டுள்ள நன்றி அறிக்கையில் கூறியிருப்பதாவது; தமிழகத்தில் உழைக்கும் பத்திரிக்கையாளர்கள் மீது அக்கறையோடும் கரிசனத்தோடும் நடந்து கொள்ளும் தமிழக முதல்வர் அவர்கள் மீண்டும் உதவித்தொகையினை அதிகரித்து அரசாணை வெளியிட்டது […]
இராமநாதபுரத்தில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் சிறப்பு முகாம்: மாவட்ட ஆட்சியர் ஆலோசனை கூட்டம்..
இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டத்தில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் ராமநாதபுரத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் வளர்ச்சித் திட்டப்பணிகள் அரசு நலத்திட்ட உதவிகள் பயனாளிகளுக்கு சென்றடைவது குறித்து மாவட்ட ஆட்சியர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் ஆய்வு செய்தார். இராமநாதபுரத்தில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் வளர்ச்சித் திட்டப்பணிகள் மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் செயல்பட்டு வருவதை மாவட்ட ஆட்சியர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் இன்று பார்வையிட்டு ஆய்வு செய்து அலுவலர்களுடன் ஆலோசனை […]
தமிழக வெற்றிக் கழக ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகிகளின் கோஷ்டி பூசல் உச்சகட்டம்..
ராமநாதபுரத்தில் தமிழக வெற்றிக் கழக மாவட்ட தலைவராக மலர்விழி ஜெயபாலா உள்ளார். தமிழக வெற்றிக் கழக நிறுவனர் விஜய் உத்தரவு படி, ஒவ்வொரு மாவட்டத்திலும் கழக நிர்வாகிகள் கழக வளர்ச்சிக்காக பல்வேறு நிகழ்வுகளை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் தமிழக வெற்றிக் கழக ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகிகள் இரு கோஷ்டிகளாக செயல்பட்டு வருகின்றனர். இரு கோஷ்டியினர் கடந்த சில நாட்களாக மோதல் வெடித்துள்ளது. இந்நிலையில் டிச.16 ல் தமிழக வெற்றிக் கழக ராமநாதபுரம் மாவட்ட அமைப்பாளர் ராஜா, ஆலோசகர் […]
திமோர் நாட்டிற்கு தமிழக மாணவ மாணவியர் கல்விப்பயணம்..
திமோர் நாட்டில் மருத்துவம் படிக்க தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் மாணவ மாணவியர்கள் ஆர்வத்துடன் கல்விப் பயணம் மேற்கொண்டனர். அப்போது சிறப்பாக மருத்துவ கல்வி பயின்று முழுமையான மருத்துவராக தாயகம் திரும்பி மக்களுக்கு மருத்துவ சேவை புரிய வேண்டுமென பீஸ் மருத்துவப் பல்கலைக்கழக இயக்குனர் ஐசக் பாஸ்கர், சமூக நல ஆர்வலர் திருமாறன், தினமலர் தினேஷ் ஆகியோர் மாணவ மாணவியரிடம் அறிவுறுத்தினர். நமது நாட்டின் மக்கள் தொகைக்கு ஏற்ப மருத்துவர்கள் உருவாகும் உன்னத நோக்கத்துடன் தமிழக மாணவ […]
90 ஆடுகள் உயிரிழந்த பெரும் சோகம்; நிவாரணம் வழங்க வலியுறுத்தல்..
தென்காசி மாவட்டத்தில் பெய்த கன மழை காரணமாக ஆட்டுப் பண்ணைக்குள் தண்ணீர் புகுந்து 90 ஆடுகள் உயிரிழந்ததால் பெரும் சோகம் ஏற்பட்டுள்ளது. ஆடுகளை இழந்துள்ளவர்களுக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வலியுறுத்தப்பட்டு வருகிறது. தென்காசி மாவட்டம் ஆய்க்குடி பேரூராட்சி கம்பிளி கிராமத்தில் கிருஷ்ணசாமி என்பவரின் தோப்பில், கம்பிளி பகுதியை சேர்ந்த மாரியப்பன், சாம்பவர் வடகரையை சேர்ந்த குத்தால ராமன் ஆகிய இருவரும் ஆட்டு பண்ணைகள் அமைத்து பராமரித்து வருகின்றனர். இந்நிலையில் தென்காசி மாவட்டத்தில் இரண்டு […]
ஒன்றிய அரசின் ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா அரசியல் சாசனத்திற்கு எதிரானது; கனிமொழி எம்.பி பேட்டி..
ஒன்றிய அரசால் மக்களவையில் கொண்டு வரப்பட்டுள்ள ஒரே நாடு ஒரே தேர்தல் சட்ட மசோதா அரசியலமைப்பு சாசனத்திற்கும், மக்களுக்கும், கூட்டாட்சிக்கும் எதிரானது என கனிமொழி எம்.பி தெரிவித்துள்ளார். ஒன்றிய அரசின் ஒரே நாடு ஒரே தேர்தல் சட்ட மசோதா டிசம்பர் 17ஆம் தேதி மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவை திமுக உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகள் கடுமையாக எதிர்த்து வருகின்றன. இந்நிலையில் இந்த சட்ட மசோதா நாடாளுமன்ற கூட்டுக் குழுவுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இது குறித்து திமுக […]
30 வருடங்களுக்குப் பின் மீண்டும் நகரத் தொடங்கிய உலகின் மிகப்பெரிய பனிப்பாறை..
30 வருடங்களுக்குப் பின் மீண்டும் நகரத் தொடங்கிய உலகின் மிகப்பெரிய பனிப்பாறை.. உலகின் மிகப்பெரிய பனிப்பாறை என்று அறியப்படும் A23a சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாக எந்த நகர்வும் இல்லாமல் ஒரே இடத்தில் இருந்த நிலையில் தற்போது மீண்டும் நகரத் தொடங்கியுள்ளது. லண்டனில் உள்ள கிரேட்டர் லண்டன் நகரை விட இருமடங்கு பெரிய அளவில் சுமார் ஒரு டிரில்லியன் டன் எடையுள்ள இந்த பனிப்பாறை பனிப்பாறை, 1986 ஆம் ஆண்டு அண்டார்டிகாவின் ஃபில்ச்னர் பனிக்கட்டியில் இருந்து உடைந்தது. […]
இலங்கைக்கு இரவில் கடத்த வீட்டில் பதுக்கிய 611 கிலோ கடல் அட்டை பறிமுதல்..
இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே வேதாளை பகுதியில் ஒரு வீட்டில் பதுக்கி வைத்துள்ள பதப்படுத்திய கடல் அட்டைகளை கடல் வழியாக இலங்கைக்கு கடத்தப்பட உள்ளதாக தனிப்பிரிவு சார்பு ஆய்வாளர் வடிவேல் முருகனுக்கு தகவல் கிடைத்தது. இதன்படி தீவிர சோதனையில் வேதாளை தெற்கு தெரு ராஜா முஹமது(40) என்பவரது வீட்டில் யாருமில்லாத நிலையில் வீட்டின் பின்புறம் பதப்படுத்தி சாக்கு மூடைகளில் இருந்த 611 கிலோ கடல் அட்டையை கைப்பற்றினர். இது தொடர்பாக ராஜா முஹமது மீது […]
இராமநாதபுரத்தில் டிச.21 ல் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான வினாடி வினா போட்டி முதல் நிலை தேர்வு..மாவட்ட ஆட்சியர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் தகவல்..
இராமநாதபுரம் : தமிழ் வளர்ச்சி துறை சார்பில் விருதுநகர் மாவட்ட நிர்வாக ஒருங்கிணைப்பில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான மாநில அளவிலான வினாடி வினா முதல்நிலை போட்டித்தேர்வு ராமநாதபுரம் மாவட்டத்தில் டிச. 21 மதியம் 2 மணியளவில் ராமநாதபுரம் முஹமது சதக் தஸ்தகிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறவுள்ளது. தேர்வில் பங்குபெறும் தேர்வர்கள் தங்கள் அலுவலகம், பள்ளி, கல்லூரியில் பணிபுரிவதற்கான அடையாள அட்டையை கொண்டு வந்தால் மட்டுமே தேர்விற்கு அனுமதிக்கப்படுவர். தேர்வு நேரத்திற்கு 1 மணி நேரம் முன்னதாக தேர்வு […]
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நகராட்சி அலுவலகத்தில் பரபரப்பு.. சம்பளம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம்..
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் தூய்மை பணியாளர்கள் பணியாற்றி வருகிறார்கள் இவர்களுக்கு முறையான சம்பளம், இ எஸ் ஐ, பிஎப் போன்ற தொகைகளை வழங்காமலும் பணி உபகரணங்கள் வழங்காமலும் தொடர்ந்து கேட்டு வந்த நிலையில் இன்று மேட்டுப்பாளையம் நகராட்சி அலுவலகத்தில் சிஐடியு ஒப்பந்த தூய்மை பணியாளர் ஆண்கள் பெண்கள் உள்ளிட்ட ஏராளமான தொழிலாளர்கள் தங்கள் பணிகளை புறக்கணித்துவிட்டு நகராட்சி அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் இதனால் மேட்டுப்பாளையம் நகராட்சி பகுதியில் குப்பைகளை அகற்ற […]
திருவாடானை பகுதியில் நெற் பயிர்கள் கண்மாயிலிருந்து வெளியேறும் நீரில் மூழ்கி சேதம்: நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை..!
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை பகுதியில் அதிகளவில் கண்மாய்கள், ஊரணிகள் உள்ளன. நூறு ஏக்கருக்கு மேல் பாசன வசதி கொண்ட கண்மாய்கள் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டின் கீழும், அதற்கு கீழ் பாசனம் உள்ள சிறுகண்மாய்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் பராமரிப்பிலும் இருந்து வருகின்றன. இந்த பாசனக் கண்மாய்களுக்கு உட்பட்டு பல நூறு ஏக்கர் விவசாய விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில், கடந்த சில தினங்களாக யெய்து வரும் தொடர் மழை காரணமாக பெரும்பாலான கண்மாய்கள் நிரம்பிவிட்டன. அவ்வாறு நிரம்பிய […]
திருவாடானை அருகே தரைப்பாலம் வழியாக தண்ணீரோடுவதால் போக்குவரத்து நிறுத்தம். கிராம மக்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் அவதி..
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே எட்டுக்குடி பாண்டுகுடி நகரிக்கத்தான் ஓரியூர் உட்பட 10 கிராமங்களுக்கு செல்லக்கூடிய சாலையில் அமைந்துள்ள தரைப்பாலத்தில் பருவமழை காலங்களில் மழைநீர் சூழ்ந்து காணப்படும் இதனால் அவ்வழியில் வாகனங்கள் சொல்ல முடியாத நிலையில் உருவாகும். இந்தப் பாலத்தினால் மழைக்காலங்களில் கிராம மக்கள் அடிப்படை தேவைகளை கூட பூர்த்தி செய்ய முடியாத நிலையில் உள்ளனர் மேலும் பள்ளி மாணவ மாணவிகள் பள்ளிக்கு செல்வதற்கும் மிகுந்த சிரமப்படுகின்றனர் மேலும் அவசர சிகிச்சைக்காக நோயாளிகள் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல […]
வாக்குக்கு பணம் கொடுப்பவர்களுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை: ராமதாஸ் வலியுறுத்தல்..
வாக்குக்கு பணம் கொடுப்பவர்களுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை: ராமதாஸ் வலியுறுத்தல்.. அரசியல்வாதிகள் நிறைய படித்திருக்க வேண்டும். அப்போதுதான் நல்ல முடிவெடுக்க முடியும். மக்களுக்கு சேவை செய்ய முடியும். அதிகாரிகளை தன்னுடன் வைத்திருக்கலாம். ஆனால், அதிகாரிகள் சொல்வதையெல்லாம் அரசியல்வாதிகள் செய்யக்கூடாது. மக்களின் நலனுக்காக பல போராட்டங்களை நடத்தியிருக்கிறேன். ஆனால், சாதி என்ற குறுகிய வட்டத்துக்குள் என்னை அடைத்துவிட்டார்கள். நல்ல கல்வி, சுகாதாரம், விவசாயம் இவைதான் நமக்குத் தேவை. ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற சட்டத்தை கொண்டு […]
ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மரணம்: ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிப்பு..
2021-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளில் 159 இடங்களை தி.மு.க. கூட்டணி கைப்பற்றியது. அ.தி.மு.க. கூட்டணி 75 தொகுதிகளில் வெற்றி பெற்றது. தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்ற காங்கிரஸ், போட்டியிட்ட 25 தொகுதிகளில் 18 இடங்களில் வெற்றி பெற்றது. இதில் ஈரோடு கிழக்கு தொகுதியில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனின் மகன் திருமகன் ஈ.வெ.ரா வெற்றி பெற்று முதன் முறையாக சட்டமன்றத்துக்குள் நுழைந்தார். இந்நிலையில், கடந்த ஆண்டு ஜனவரி 4 ஆம் தேதி திருமகன் ஈ.வெ.ரா மாரடைப்பு காரணமாக […]
வரும் சட்டமன்ற தேர்தலில் மதுரை மாவட்டத்தின் 10 தொகுதியிலும் வெற்றி பெறுவதில் உசிலம்பட்டி தொகுதி முதன்மையாக இருக்கும் – அமைச்சர் மூர்த்தி பேச்சு
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே சீமானுத்து ஊராட்சிக்குட்பட்ட மெய்யணம்பட்டியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு திமுக உசிலம்பட்டி வடக்கு ஒன்றியத்தின் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஒன்றிய செயலாளர் அஜித்பாண்டி தலைமையில் மாநாடு போன்று நடைபெற்றது.,இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி, மதுரை தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன் கலந்து கொண்டு விவசாயிகளுக்கு டிராக்டர், மாற்றுத்திறனாளிகளுக்கு இருசக்கர வாகனங்கள், மருத்துவ பணியாளர்கள், உசிலம்பட்டி வடக்கு ஒன்றியத்திற்குட்பட்ட […]