அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு பொங்கல் பரிசு- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செயல்படுத்தி வரும் நாட்டிற்கே வழிகாட்டக்கூடிய பல முன்னோடி நலத்திட்டங்களை கடைக்கோடித் தமிழருக்கும் கொண்டு சேர்த்திட அயராது உழைத்திடும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, 2023-2024-ஆம் ஆண்டிற்கான மிகை ஊதியம் மற்றும் பொங்கல் பரிசு வழங்கிட 163 கோடியே 81 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டுள்ளார்கள். இந்த உத்தரவின்படி, 1)‘சி’ மற்றும் ‘டி’ பிரிவைச் (C & D Group) சார்ந்த […]

தேவகோட்டை பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா நோட்டு,புத்தகம் வழங்கும் விழா!

தேவகோட்டை பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா நோட்டு,புத்தகம் வழங்கும் விழா! சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் மூன்றாம் பருவத்திற்கான தமிழக அரசின் விலையில்லா புத்தகங்கள்,நோட்டுக்களை தேவகோட்டை வட்டார கல்வி அலுவலர் லெட்சுமி தேவி தலைமையிலும் , பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழக பொறுப்பாளர்கள் முன்னிலையில் அனைத்து மாணவர்களுக்கும் வழங்கப்பட்டது. ஆசிரியர்கள் ஸ்ரீதர் , முத்துலெட்சுமி ஆகியோர் நிகழ்விற்கான ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.ஏராளமான பெற்றோர்களும் இந்நிகழ்வில் […]

வடகரை பேரூராட்சி பகுதியில் எஸ்டிபிஐ கட்சியினர் போராட்டம்..

பொது மக்களுக்கான அடிப்படை வசதிகள் சரிவர செய்து தரப்படவில்லை எனக்கூறி வடகரை பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து எஸ்டிபிஐ கட்சியினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆயிரக் கணக்கான மக்கள் வசித்து வரும் வடகரை பகுதியில் சாலை வசதி, கழிவுநீர் வாய்க்கால், தெரு விளக்கு, குப்பைத் தொட்டி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் சரிவர செய்து தரப்பட வேண்டும் என எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து எஸ்டிபிஐ கட்சி சார்பில் 50-க்கும் மேற்பட்ட […]

தேவகோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மாதாந்திர சாதாரணக் கூட்டம்

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மாதாந்திர சாதாரணக் கூட்டம் ஒன்றிய பெருந்தலைவர் பிர்லா கணேசன் தலைமையில் துணைத் தலைவர் ராஜாத்தி மாவட்ட கவுன்சிலர் செந்தில்குமார் முன்னிலையில் நடை பெற்றது.கடந்த ஐந்து ஆண்டுகளில் பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன,அதற்கு முழு ஒத்துழைப்பு கொடுத்த ஒன்றிய கவுன்சிலர்கள் அரசு அதிகாரிகள், மற்றும் பொதுமக்கள் அனைவருக்கும் நன்றி கூறினார், கூட்டத்தில் ஆணையாளர்,வட்டார வளர்ச்சி அலுவலர்,கவுன்சிலர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

செங்கத்தில பள்ளி திறந்த முதல் நாளில் வட்டார கல்வி அலுவலர் திடீர் ஆய்வு

திருவண்ணாமலை அடுத்த மேல்பெண்ணாத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் வட்டார கல்வி அலுவலர் சகிலா திடீர் ஆய்வு செய்தார்.மேல்பெண்ணாத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 350க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் பயின்று வருகின்றனர் அரையாண்டு விடுமுறைக்கு பிறகு பள்ளி திறந்த முதல் நாளில் வட்டார கல்வி அலுவலர் ஷகிலா திடீரென வருகை புரிந்து இறைவணக்க கூட்டத்தை பார்வையிட்டு பள்ளியில் அடிப்படை வசதிகள் உள்ளதா என்றும் பள்ளி மாணவர்கள் கற்றல் திறன் குறித்து மாணவ,மாணவிகளிடம் படிக்க சொல்லி சோதித்தார். நிகழ்வின் […]

கற்பழிப்பு விவகாரம் பற்றி பேச பாஜகவிற்கு தகுதி இல்லை திருச்சி விமான நிலையத்தில் துரை வைகோ பேட்டி.

தமிழக பள்ளிகல்வித் துறை அமைச்சர் மிகவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். மேலும், 500 அரசுப் பள்ளிகளை தனியாருக்கு தாரைவார்க்கும் முயற்சி நடைபெறுவதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.ஆனால் எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட அனைவரும் தவறாக புரிந்துகொண்டு பேசுகிறார்கள். அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி 500 அரசுப் பள்ளிகளில் இருக்கும் அடிப்படை, கட்டமைப்பு மேம்படுத்த தனியார் பள்ளிகளுடன் இணைந்து செயல்படுவோம் என்று தான் கூறினார்.மத்திய அரசிடம் அமைச்சர் மற்றும் அதிகாரிகள் பிச்சை எடுப்பது போல் நிதியை கேட்டார்கள். ஆனால் மத்திய அமைச்சர் […]

நான்கு பேருந்தில் மூன்று பேருந்து ‘கட்’ – கோவையில் 3 கிராம மக்கள் கடும் அவதி*

*நான்கு பேருந்தில் மூன்று பேருந்து ‘கட்’ – கோவையில் 3 கிராம மக்கள் கடும் அவதி* கோவை மாதம்பட்டி அருகே உள்ள மத்திப்பாளையம் கிராமத்திற்கு நான்கு பேருந்துகள் இயக்கப்பட்ட நிலையில் கொரோனா தொற்றுக்குப் பிறகு ஒரே ஒரு பேருந்து மட்டுமே இயக்கப்படுகிறது. குறிப்பாக மத்திப்பாளையம், சென்னனூர், கிருஷ்ணராயம்புதூர் கிராமத்தில் இருந்து வேலைக்கு செல்லும் பெண்கள் ஆண்கள் மற்றும் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் பேருந்து வசதி இல்லாததால் நடந்து செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இயக்கப்படும் ஒரு பேருந்தும் […]

பெண்கள் உயர்ந்தால் தான், சமூகம் உயரும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்புரை!!

பெண்ணடிமை தீர்ந்து, பெண் அதிகாரம் பெறும் அந்த மாற்றத்தை நோக்கித் இன்றைக்கு தமிழ்நாடு மிக வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கிறது. அதற்காகதான் இத்தனை திட்டங்களை நாம் செயல்படுத்திக் கொண்டு வருகிறோம். பெரிய அளவிலான பல திட்டங்களை இப்படி நம்முடைய அரசு செய்து கொண்டு வந்தாலும், சிறிய, சிறிய அளவிலான திட்டங்களும் மிகவும் முக்கியமானதாக அமைந்திருக்கிறது. அந்த வகையில்தான், என்னுடைய கொளத்தூர் தொகுதியில் அனிதா பெயரில், அரியலூர் பகுதியைச் சார்ந்த, தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சார்ந்த மாணவி தன்னுடைய மருத்துவ கனவு […]

பெண் பத்திரிகையாளர் பற்றி விமர்சனம்; எஸ்.வி.சேகருக்கு ஒரு மாத சிறை தண்டனை!!

கடந்த 2018-ம் ஆண்டு நடிகர் எஸ்.வி.சேகர் பெண் பத்திரிகையாளர் குறித்து விமர்சித்து ஒரு பதிவை முகநூல் பக்கத்தில் வெளியிட்டார். இதற்கு பத்திரிகையாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அவரது வீட்டின் முன்பு போராட்டங்களும் நடத்தின. இதனிடையே எஸ்வி சேகருக்கு எதிராக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் அடிப்படையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் அப்போது வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு சென்னையில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது. இந்த […]

யார் அந்த சார்? அண்ணா பல்கலை கழக விவகாரம் நேர்மையான விசாரணை நடத்த வேண்டும்; தொல். திருமாவளவன் வலியுறுத்தல்..

அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் கைதான ஞானசேகரன் சம்பவத்தன்று ‘சார்’ என்று குறிப்பிட்டு பேசியதாக கூறப்படுகிறது. இதனால் யார் அந்த சார்? என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பி இருந்தார். இதற்கு அப்படி யாரும் இல்லை, மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி அரசியல் செய்வதாக தி.மு.க. வை சேர்ந்த அமைச்சர்கள் தெரிவித்து இருந்தனர். இந்த நிலையில், யார் அந்த சார்? என்பது தொடர்பாக நேர்மையான விசாரணை […]

தமிழ்நாட்டில் புதிதாக ஐந்து மாவட்டங்கள் உதயம்: ஜனவரி 26 – இல் அறிவிப்பு வெளியாக வாய்ப்பு?

தமிழ்நாட்டில் புதிதாக ஐந்து மாவட்டங்கள் உதயம்: ஜனவரி 26 – இல் அறிவிப்பு வெளியாக வாய்ப்பு? புதிய மாவட்டங்கள்: 1. விருத்தாச்சலம் 2. செய்யாறு 3. பொள்ளாச்சி 4. கும்பகோணம் 5. ஆத்தூர் புதிய வட்டங்கள்: 1. ஸ்ரீ முஷ்ணம் 2. திட்டக்குடி 3. வேப்பூர் 4. ஜமுனாமாத்தூர் 5. போளூர் 6. ஆரணி 7. செய்யாறு 8. வெண்பாக்கம் 9. வந்தவாசி 10. கிணத்துக்கடவு 11. பொள்ளாச்சி 12. ஆனைமலை 13. வால்பாறை 14. உடுமலை […]

இராமநாதபுரம் அரசு மருத்துவமனை தீ விபத்தால் உரிய சிகிச்சை கிடைக்காமல் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்த சோகம்! – தமிழக அரசு ரூபாய் 50 லட்சம் நிவாரணம் வழங்க எஸ்டிபிஐ கட்சி கோரிக்கை!

இதுதொடர்பாக எஸ்டிபிஐ கட்சியின் மாநில துணைத் தலைவர் அப்துல் ஹமீது வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; இராமநாதபுரம் மரைக்காயர் பட்டினம் பகுதியைச் சார்ந்த வரிசை கனி என்பவருக்கு நேற்று இரவு உடல்நலக் குறைவு ஏற்பட்டதால், அவரை ராமநாதபுரம் மருத்துவமனைக்கு அவரது குடும்பத்தினர் ஆம்புலன்ஸில் அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால் எதிர்பாராத விதமாக அந்த ஆம்புலன்ஸ் வாலாந்தரவை அருகே கோர விபத்தில் சிக்கியுள்ளது. இந்த விபத்தில் ஆம்புலன்ஸில் சென்ற வரிசை கனி, அவரது மகள் அனீஸ் பாத்திமா, மருமகன் சகுபர் சாதிக் […]

உசிலம்பட்டி அருகே கிணற்றில் விழுந்த புள்ளிமான் மீட்பு

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே சீமானுத்து – கல்லூத்து கிராமத்தில் அன்னம்பார்பட்டியைச் சேர்ந்த சிங்கராஜ் என்பவரது தோட்டத்தை வில்லாணியைச் சேர்ந்த செல்வராஜ் குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வருகிறார்.,இன்று இவரது தோட்டத்து கிணற்றில் புள்ளிமான் தவறி விழுந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்ததைக் கண்ட செல்வராஜ் உசிலம்பட்டி வனச் சரக அதிகாரிகளுக்கு தகவல் அளித்துள்ளார்.,தகவலின் பேரில் விரைந்து வந்த உசிலம்பட்டி வனச் சரக வனத்துறையினர் மற்றும் உசிலம்பட்டி தீயணைப்புத்துறை வீரர்கள் சுமார் 50 அடி ஆழமுள்ள கிணற்றில் கயிறு […]

செம்மொழிப் பூங்கா மலர்க் கண்காட்சி: தொடக்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்..

சென்னையில் அமைந்துள்ள செம்மொழிப் பூங்காவில் மலர்க் கண்காட்சியை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். மலர்க் கண்காட்சியைத் தொடங்கி வைத்த முதல்வர் ஸ்டாலின், செம்மொழிப் பூங்காவை அலங்கரித்துள்ள வண்ண வண்ண மலர்களை பார்த்து ரசித்து வருகிறார். சென்னையில் தொடர்ந்து நான்காவது ஆண்டாக செம்மொழிப் பூங்காவில் இன்று மலர்க் கண்காட்சி தொடங்கியிருக்கிறது. நீலகிரி, கொடைக்கானல், ஏற்காடு போன்ற குளிர் பிரதேசங்களில் மட்டும் நடத்தப்பட்டு வந்த மலா்க் கண்காட்சி, முதல் முறையாக கடந்த 2022-ஆம் ஆண்டு சென்னையில் […]

மாணவர்களுக்கு 3 ஆம் பருவ பாடப் புத்தகம் விநியோகம்..

இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஊராட்சி ஒன்றியம் ஓம் சக்தி நகர் ஆரம்பப்பள்ளி மூன்றாம் பருவ வகுப்பு துவக்க நிகழ்ச்சி இன்று (02/01/2025) நடந்தது.  ராமநாதபுரம் மாவட்ட கல்வி அலுவலர் பிரின்ஸ் ஆரோக்கியராஜ் கலந்துகொண்டு மாணவர்களுக்கு இனிப்பு வழங்கி புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தார் அனைத்து மாணவர்களுக்கும் மூன்றாம் பருவ பாடப் புத்தகங்கள் வழங்கினார். பள்ளி தலைமை ஆசிரியர் ராபர்ட் ஜெயராஜ், ஆசிரியைகள் கிருஷ்ணவேணி, பேபி சுகன்யா, சாமுண்டீஸ்வரி, காலை உணவு திட்ட பொறுப்பாளர்கள் அழகு சுந்தரி, புவனா, செல்வராணி […]

ராமநாதபுரம் அரசு மருத்துவமனை புதிய கட்டடத்தில் பயங்கர தீ விபத்து: நோயாளிகள் பாதுகாப்பாக வெளியேற்றம்..

ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை புதிய கட்டடத்தில் நள்ளிரவில் மின் கசிவு ஏற்பட்டதால் 2வது மாடியில் தீ விபத்து ஏற்பட்டது. உடனடியாக மின்சாரம் துண்டிக்கப்பட்டு நோயாளிகள் அனைவரையும் பாதுகாப்பாக முதல் தளத்திற்கு ஊழியர்கள் அழைத்து வந்தனர்.இதன்படி 380க்கும் மேற்பட்ட நோயாளிகள் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டனர். ஐந்து தளங்களைக் கொண்ட மருத்துவமனையில் இரண்டாவது தளத்தில் உள்ள இன்வெர்ட்டர் அறையில் நேற்றிரவு 11.20 மணியளவில் திடீரென மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த மருத்துவமனை […]

திருச்சியில் தொழிலதிபர் வீட்டில் நகை பணம் கொள்ளை.! போலீஸ் விசாரணை .!!

 தஞ்சை மாவட்டம், ஒரத்தநாடு பகுதியைச் சோ்ந்தவா் சண்முகம் (65). தொழிலதிபா் மற்றும் ஒப்பந்ததாரரான இவா் திருச்சி, பொன் நகா் 2ஆவது பிரதான சாலையில் உள்ள வீட்டில் வசிக்கிறாா். இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன் ஒரத்தநாட்டில் உறவினரின் துக்க நிகழ்வுக்கு குடும்பத்துடன் சென்ற சண்முகம் புதன்கிழமை காலை திரும்பினாா். அப்போது வீட்டின் காவலாளி முருகேசனை மா்ம நபா்கள் செவ்வாய்க்கிழமை இரவு தாக்கி கட்டிப்போட்டு விட்டு வீட்டில் இருந்த நகை, பணத்தை கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து அவா்கள் […]

ஸ்ரீரங்கம் சொர்க்கவாசல் திறப்பு வரும் 10ம் தேதி திருச்சிக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு.!

திருச்சி ஸ்ரீரங்கத்தில் வைகுண்ட ஏகாதசி பெருவிழா நடந்து கொண்டிருக்கிறது இதன் தொடர்ச்சியாக வருகிற பத்தாம் தேதி சொர்க்கவாசல் திறப்பு நடைபெற இருக்கிறது. 21 நாட்கள் நடைபெறும் வைகுண்ட ஏகாதசி திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பரமபத வாசல் (சொர்க்க வாசல்) வருகின்ற ஜனவரி 10 ஆம் தேதி அதிகாலை 5.15 மணிக்கு திறக்கப்பட உள்ளது. இதையொட்டி, ஸ்ரீரங்கத்துக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் வைகுண்ட ஏகாதசி விழாவிற்கு போதுமான பாதுகாப்பு அளிப்பதற்காக உள்ளுர் மற்றும் […]

திருச்சி பஞ்சப்பூர் புதிய பேருந்து நிலையத்தில் ஆறு நகரும் படிக்கட்டுகள் ஆறு மின் தூக்கிகளும் இணைக்கப்படுகின்றன ஆட்சியர் ஆய்வு.!

தமிழகத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க அரசு அமைந்த பிறகு மீண்டும் திருச்சி மாவட்டம் பஞ்சப்பூரில் ஒருங்கிணைந்த பேருந்து முனையம் அமைக்க அனுமதியளிக்கப்பட்டு, கடந்தாண்டு செப்டம்பர் முதல் பணிகள் தொடங்கின. தற்போது, கட்டுமானப் பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன. இந்நிலையில், கட்டுமானப் பணிகளை ஆட்சியர் மா.பிரதீப்குமார், மாநகராட்சி ஆணையர் வே. சரவணன், கோட்டாட்சியர் கே. அருள், நகரப் பொறியாளர் சிவபாதம் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள், மாநகராட்சி அலுவலர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். ஆய்விற்குப் பின் […]

கன்னியாகுமரி, அரூர், பெருந்துறை உள்ளிட்ட 13 புதிய நகராட்சிகளை உருவாக்க தமிழக அரசு அரசாணை வெளியீடு..

கன்னியாகுமரி, அரூர், பெருந்துறை உள்ளிட்ட 13 புதிய நகராட்சிகளை உருவாக்க தமிழக அரசு அரசாணை வெளியீடு. தமிழகத்தில் 16 மாநகராட்சிகளுடன் 158 நகா்ப்புற மற்றும் ஊரகப் பகுதிகளை இணைக்க மாநில அரசு உத்தேசமாக முடிவு செய்துள்ளது. இதற்கான உத்தரவுகளை நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து அந்தத் துறையின் சாா்பில் புதன்கிழமை வெளியிடப்பட்ட செய்தி: தமிழகத்தில் கடந்த 2021-ஆம் ஆண்டு ஆறு புதிய மாநகராட்சிகள் மற்றும் 28 நகராட்சிகள் உருவாக்கப்பட்டன. கடந்த ஆகஸ்ட் […]

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!