இந்தியாவின் முதல் ஜென் பீட்டா தலைமுறை குழந்தை ஜன.1 அன்று மிசோரமில் பிறந்தது. 2025 ஜனவரி ஒன்று அதிகாலை 12 மணிக்கு பிறகு பிறக்கும் அனைத்து குழந்தைகளும் ஜென் பீட்டா தலைமுறை என்று அழைக்கப்படுகின்றன. 2025 ஜனவரி ஒன்று அதிகாலை 12 மணிக்கு பிறகு பிறக்கும் அனைத்து குழந்தைகளும் ஜென் பீட்டா தலைமுறை என்று அழைக்கப்படுகின்றன. இந்த ஜென் பீட்டா உலகின் 7 ஆவது தலைமுறையாகும். தொழில்நுட்ப ஒருங்கிணைப்பு, பன்முகத்தன்மையின் சிறப்பான பங்களிப்பு, இந்த தலைமுறைக்கு […]
Category: செய்திகள்
அண்ணா பல்கலைக்கழக பாலியல் வழக்கில் ஞானசேகரன் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது..
அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது பல்வேறு வழக்குகள் ஏற்கனவே நிலுவையில் உள்ளது. இது தொடர்பாக சிறப்பு புலனாய்வுக் குழு (SIT) விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்த விசாரணைக் குழு அதிகாரிகள் இன்று காலை ஞானசேகரன் வீட்டில் சோதனை மேற்கொண்டனர்.சுமார் 5 மணி நேரம் சோதனை நடத்தினர். இதில் ஞானசேகரன் பயன்படுத்தி வந்த லேப்டாப் மற்றும் முக்கிய ஆவணங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.இந்நிலையில், இந்த […]
மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி விரிவாக்கம்: பொதுமக்கள் கருத்தை 6 வாரங்களில் தெரிவிக்கலாம் என தமிழ்நாடு அரசு அறிவிப்பு!
நகரமயமாதலின் வீச்சு, நிர்வாகத் தேவைகள், மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை திறம்படவும், முழுஅளவிலும் வழங்குதல் (comprehensive manner), உள்ளாட்சிப் பகுதிகளின் எதிர்கால வளர்ச்சிக்கான தேவைகள் ஆகியவற்றை கருத்திற்கொண்டு, தகுதியான மேலும் பல்வேறு உள்ளாட்சி அமைப்புகளின் மறுசீரமைப்பை மேற்கொள்ள தமிழக அரசு முடிவு செய்தது. அதன்படி பெருநகர சென்னை மாநகராட்சி, மதுரை, திருச்சிராப்பள்ளி உள்ளிட்ட16 மாநகராட்சிகளுடன், 4 நகராட்சிகள், 5 பேரூராட்சிகள் மற்றும் 149 ஊராட்சிகளை இணைக்கவும், திருவாரூர், திருவள்ளுர், சிதம்பரம் உள்ளிட்ட 41 நகராட்சிகளுடன் 147 ஊராட்சிகள் […]
விமன் இந்தியா மூவ்மெண்ட் சார்பாக பாலியல் அத்துமீறல்களை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்.!
விமன் இந்தியா மூவ்மெண்ட் சார்பாக பாலியல் அத்துமீறல்களை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் ராமநாதபுரம் மாவட்டம் பெரியபட்டினத்தில் எஸ் டி பி ஐ கட்சியின் பெண்கள் அமைப்பான விமன் இந்தியா மூவ்மெண்ட் சார்பாக பாலியல் அத்துமீறல்களை கண்டித்தும் , பெண்களுக்கு எதிராக அரங்கேறி வரும் கொடுமைகளை கண்டித்தும் , திமுக அரசை கண்டித்தும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விம் மாவட்ட தலைவி ரம்ஜான் பேகம் தலைமை தாங்கினார். விம் நகர் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். அரசுக்கு எதிராகவும் பெண்களுக்கு […]
இனி மாநகர பேருந்துகளிலும் சிங்காரச் சென்னை ஸ்மார்ட் அட்டையை பயன்படுத்தலாம்- நாளை திட்டம் தொடக்கம் !
பேருந்துகளிலும் நடத்துனர்களிடம் ஸ்கேன் செய்யும் கருவிகள் வழங்கப்படும். எனவே இந்த ஒரு கார்டை ரீ சார்ஜ் செய்து அதன் மூலம் மூன்று சேவைகளையும் பயன்படுத்திக்கொள்ள முடியும். எந்த சேவையை பயன்படுத்த வசதியாக இருக்கிறதோ மக்கள் அதை பயன்படுத்த முடியும். இதனால் அவர்கள் கவுன்ட்டர்களின் நிற்க வேண்டிய அவசியம் இருக்காது. இந்த திட்டத்துக்கான பணிகள் முடிவடைந்துள்ள நிலையில், இந்த திட்டம் நாளை தொடங்கப்படவுள்ளது. போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் திட்டத்தை நாளை பல்லவனிடம் பணிமனையில் துவக்கி வைக்கிறார். முதற்கட்டமாக, […]
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய மாநிலச் செயலாளராக பெ.சண்முகம் தேர்வு..
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில புதிய செயலாளராக தமிழ்நாடு விவசாய சங்க மாநில தலைவரும், கட்சியின் மத்திய குழு உறுப்பினருமான சண்முகம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். விழுப்புரத்தில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24வது மாநில மாநாட்டில், 80 உறுப்பினர்கள் சண்முகத்தை தேர்வு செய்துள்ளனர். இந்நிலையில், மதவெறி சக்திகளை எதிர்க்கும் திமுகவுடன் தொடர்ந்து பயணிப்போம் என்று சிபிஎம் கட்சியின் புதிய மாநில செயலாளர் சண்முகம் பேட்டி அளித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்கள் சந்திப்பதில் அவர் மேலும் கூறியதாவது:- மதவெறி, சாதிவெறிக்கு […]
பொங்கல் திருநாளை முன்னிட்டு இராமநாதபுரம் மாவட்டத்திற்கு கூடுதல் சிறப்பு ரயில்கள் இயக்க தெற்கு ரயில்வே பொது மேலாளரிடம் நவாஸ்கனி எம்பி கோரிக்கை.!
பொங்கல் திருநாளை முன்னிட்டு வெளியூர் மற்றும் வெளிமாநிலங்களில் பணிபுரியும் இராமநாதபுரம் மாவட்டத்தைச் சார்ந்த மக்கள் சொந்த ஊருக்கு வந்து செல்லும் வகையில் மண்டபம் வரையிலான கூடுதல் சிறப்பு ரயில்கள் இயக்க தெற்கு ரயில்வே பொது மேலாளரிடம் ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் கே நவாஸ்கனி எம்பி கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் அனுப்பியுள்ள கோரிக்கையில் குறிப்பிட்டிருந்ததாவது., என்னுடைய இராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட மக்கள் பலரும் வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களில் பணிபுரிவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் பொங்கல் திருநாளை […]
புற்றுநோயின் அறிகுறிகள் மற்றும் பாதுகாப்பு வழிமுறைகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி.!
தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் ஒன்றியம் மாறனேரி பஞ்சாயத்தில் சில்ட்ரன் சாரிட்டபிள் டிரஸ்ட் இன் சார்பாக புற்றுநோயின் அறிகுறிகள் மற்றும் பாதுகாப்பு வழிமுறை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது நிகழ்ச்சியில் பெண்கள் சுகாதார தன்னார்வலர் மகிமை ராகினி மாறனேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் பெண்களுக்கான புற்றுநோயின் அறிகுறிகள் என்ன என்றும் மார்பக புற்றுநோய் என்றால் என்ன என்றும் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் என்றால் என்ன என்பதை பற்றி தெளிவாக உரையாற்றினார் குறிப்பிட்ட அறிகுறிகள் ஏதேனும் உங்களுக்கு இருக்கும் […]
திருச்சி தேசிய நூலக வார விழா அமைச்சர் அன்பில் மகேஷ் பங்கேற்பு.!
.திருச்சிராப்பள்ளி மாவட்ட மைய நூலகத்தில் இன்று (04.01.2025) நடைபெற்ற 57-வது தேசிய நூலக வார விழாவில் மாண்புமிகு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி 57-வது தேசிய நூலக வாரவிழா, இளைஞர் இலக்கிய திருவிழா மற்றும் அய்யன் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கி, நன்கொடையாளர்களை பாராட்டி விழாப் பேருரையாற்றினார். முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரியில் முத்தமிழறிஞர் கலைஞர் 2000 ஆம் ஆண்டு 133 அடி உயர […]
திருச்சி விமான நிலையத்தில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரை சோதனை செய்வது ஏன் .! துரை வைகோ கேள்வி .!!
திருச்சி விமான நிலையத்தில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரை சோதனை செய்வதா? துரை வைகோ. திருச்சியில் சர்வதேச விமான நிலையம் அமைந்துள்ளது. இந்த விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் குருவிகள் என நினைத்து பயணிகள் குறிப்பிட்ட நபர்களை தொடர்ந்து பரிசோதிக்கும் வகையில் நடந்து கொள்வதாக கூறப்படுகிறது. இது அவர்களின் பணி என்றாலும் கூட சிலரை டார்க்கெட் செய்து சோதிக்கப்படுவதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் உள்ளன. இந்நிலையில் தான் திருச்சி சர்வதேச விமான நிலைய வளர்ச்சி ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. […]
தேவகோட்டை அருகே அரசுப் பள்ளியில் பொங்கல் விழா .!
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே கண்ணங்குடி ஊராட்சி ஒன்றியம் மங்களம் அரசு நடுநிலைப்பள்ளியில் பொங்கல் விழா . தலைமையாசிரியர் சுப.கவிதா தலைமையில் நடைபெற்றது. மாணவர்கள் பட்டாம்பூச்சி போல் உடையணிந்து பங்கேற்றனர். இதில் ஆசிரியர்கள் ஸ்ரீகலா, ச.கவிதா, பாண்டிச்செல்வி, ராணி, ஷீபா விண்ணரசி, சங்கீதா ஆகியோர் ஒருங்கிணைத்தனர். சத்துணவு அமைப்பாளர் ஞானப்பிரகாசம், உதவி அமைப்பாளர் நாச்சம்மை மற்றும் ஆசிரிய பெருமக்கள் மாணவ மாணவிகள் கலந்து கொண்டு பொங்கல் வைத்து குதூகலமாக கொண்டாடினர்.
தி.மு.க-வினரால் பெண்களுக்கு பாதிப்பு; சி.பி.ஐ விசாரணை தேவை”: ஆளுநர் இடத்தில் தமிழக பாஜக மகளிர் பிரிவு மனு..
தமிழகத்தில் தி.மு.க-வினரால் பெண்களுக்கு தொடர்ந்து பாதிப்பு ஏற்பட்டு வருவதாக தமிழிசை சௌந்தர்ராஜன் குற்றம்சாட்டியுள்ளார். அண்ணா பல்கலைக்கழக விவகாரம் தொடர்பாக பா.ஜ.க மகளிர் அணியினர், (ஜன 4) தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். இதைத் தொடர்ந்து நடந்த செய்தியாளர் சந்திப்பில் தமிழிசை சௌந்தர்ராஜன் கலந்து கொண்டார். அப்போது, “அறிவிக்கப்படாத அவசரநிலை தமிழகத்தில் நிலவுகிறது. இதற்கு வன்மையான கண்டனத்தை பா.ஜ.க தெரிவித்துக் கொள்கிறது. இந்த விவகாரத்தில் தொடர்ச்சியாக ‘சார்’ என்ற நபர் சம்பந்தப்பட்டிருப்பதாக கூறப்பட்டு […]
தமிழ்நாடு அரசின் விருதுகள் யார் யாருக்கு வெளியானது அறிவிப்பு! திருவள்ளுவர் தினத்தன்று முதலமைச்சர் வழங்குகிறார்..
2025ம் ஆண்டிற்கான திருவள்ளுவர் விருது- 2024ம் ஆண்டிற்கான பேரறிஞர் அண்ணா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், மகாகவி பாரதியார் விருது, தந்தை பெரியார் விருது, அண்ணல் அம்பேத்கர் விருது, முத்தமிழறிஞர் கலைஞர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 2025ம் ஆண்டுக்கான திருவள்ளுவர் விருது செந்தமிழ்ச் செம்மல் பெரும் புலவர் மு.படிக்கராமுக்கு வழங்கப்படுகிறது. 2024ம் ஆண்டுக்கான தந்தை பெரியார் விருது விடுதலை ராஜேந்திரனுக்கு வழங்கப்படுகிறது.2024ம் ஆண்டுக்கான பேரறிஞர் அண்ணா விருது- தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டை சேர்ந்த எல்.கணேசனுக்கு வழங்கப்படுகிறது. 2024ம் ஆண்டிற்கான […]
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு; கூடுதல் விடுமுறை; துள்ளி குதிக்கும் பள்ளி மாணவர்கள்! முதலமைச்சர் அசத்தல் அறிவிப்பு!
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் 17.01.2025 அன்று விடுமுறை அறிவித்தது தமிழ்நாடு அரசு !இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “இவ்வாண்டு தமிழ்நாட்டில் 14.01.2025 செவ்வாய்கிழமை அன்று தைப் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுவதாலும், 15.01.2025, 16.01.2025, 18.01.2025 மற்றும் 19.01.2025 ஆகியவை அரசு விடுமுறை நாட்கள் என்பதாலும் மாணவர்கள், அவர்தம் பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் தங்களது […]
ஜனநாயக சக்திகளின் குரல்களை, கோரிக்கைளை எதிர்கொள்வதில் அரசுக்கு ஏன் அச்சம்? -எஸ்டிபிஐ கட்சி கேள்வி..
ஆர்ப்பாட்டம், தர்ணா உள்ளிட்ட ஜனநாயக போராட்டங்களுக்கு அனுமதி மறுக்கும் காவல்துறை! ஜனநாயக சக்திகளின் குரல்களை, கோரிக்கைளை எதிர்கொள்வதில் அரசுக்கு ஏன் அச்சம்?- எஸ்டிபிஐ கட்சி கேள்வி.. இதுதொடர்பாக எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; இந்தோனேசியாவிலிருந்து தரம் குறைந்த நிலக்கரியை வாங்கி, போலி பில்கள் மூலம் தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கு மூன்று மடங்கு விலைக்கு விற்று, சுமார் 6000 கோடி ரூபாய் வரை முறைகேட்டில் ஈடுபட்டது அதானி நிறுவனம். இந்த […]
அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் “ஆதாரமற்ற தகவல்களை பகிர வேண்டாம்!-தமிழக காவல்துறை..
தமிழக காவல் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;- சென்னை ஐகோர்ட்டு உத்தரவுபடி, சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி மீதான பாலியல் துன்புறுத்தல் தொடர்பான வழக்குகளை விசாரிக்க சென்னை அண்ணா நகர் துணை ஆனையாளர் மருத்துவர் புக்யா சினேஹா தலைமையில் அனைத்து மகளிர் சிறப்புப் புலனாய்வுக் குழு (SIT) அமைக்கப்பட்டது இந்த சிறப்புப் புலனாய்வுக் குழு இவ்வழக்குகளில் தற்போது விசாரணை மேற்கொண்டு வருகிறது.இதனிடையே, சில செய்தி ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்கள், சிறப்புப் புலனாய்வுக் குழுவின் விசாரணையில் கிடைக்கப்பெற்ற […]
பெண்களுக்கு எதிரான இணையதள குற்றம் மற்றும் தண்டனைச் சட்டம் என்ன?
இன்றைய சமுதாயத்தில் பெண்களின் பங்களிப்பு என்பது இன்றியமையாத ஒரு பங்களிப்பாக இருப்பதால் ஆண்களுக்கு பெண் குறைந்தவள் இல்லை என்று காட்டும் வகையில் பெண்கள் அவர்களுடைய தனித்திறமையை காட்டி முன்னேற்றம் அடைந்து கொண்டே இருக்கிறார்கள். இருந்தாலும் பெண்கள் ஒதுக்கப்பட்டாலும் பெண்கள் இணையதளத்தில் மிரட்டப்படுகிறார்கள் இனி அப்படி பயந்து வாழ தேவையில்லை இந்த சட்டங்கள் நிறைய இருக்கிறது அதை பற்றி தான் தொடர்ந்து தெரிந்து கொள்ளப்போகிறோம். இன்டர்நெட் மூலம் பெண்களுக்கு சமூக வலைத்தளங்களில் ஏற்படக்கூடிய குற்றங்கள் பெருகிவருகிறது அந்த குற்றங்களுக்கு […]
படிக்கப் புத்தகம் கொடுத்து பரிசும் வழங்கிய தேவகோட்டை பள்ளி!-புத்தகம் படிக்கும்போது எழுதியவரின் எழுத்தாற்றல், சொல்லாற்றல், சிந்தனை அனைத்தையும் உள்வாங்கிக்கொள்ளுங்கள் கல்லூரி முதல்வர் அறிவுரை..
படிக்கப் புத்தகம் கொடுத்து பரிசும் வழங்கிய தேவகோட்டை பள்ளி!-புத்தகம் படிக்கும்போது எழுதியவரின் எழுத்தாற்றல், சொல்லாற்றல், சிந்தனை அனைத்தையும் உள்வாங்கிக்கொள்ளுங்கள் கல்லூரி முதல்வர் அறிவுரை.. சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளியில் புத்தகம் வாசித்து சிறப்பாக பின்னூட்டம் அளித்த மாணவர்களுக்கு பரிசுகளை தேவகோட்டை ஆனந்தா கல்லூரி முதல்வர் வழங்கினார். பள்ளி ஆசிரியை முத்துலட்சுமி வரவேற்றார். தலைமையாசிரியர் லெ . சொக்கலிங்கம் தலைமை தாங்கினார். பள்ளி நூலகத்தில் இருந்து புத்தகம் படித்து சிறப்பாக பின்னூட்டம் வழங்கிய மாணவர்களுக்கு […]
பாஜக நிர்வாகி குஷ்பு ஆட்டு மந்தையில் அடைத்து வைக்கப்பட்டாரா?- நடந்தது என்ன அமைச்சர் சேகர்பாபு விளக்கம்!
சென்னை துறைமுகம் மற்றும் எழும்பூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வால்டாக்ஸ் சாலை உட்வார்ப்பு மற்றும் பெரியமேடு அரசு கால்நடை மருத்துவமனை எதிரில் உள்ள நேவல் மருத்துவமனை சாலை ஆகிய பகுதிகளில் வீதி வீதியாக நடைபயணம் மேற்கொண்டு அந்த பகுதி மக்களின் குறைகளை அமைச்சர் சேகர்பாபு மற்றும் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ஆகியோர் கேட்டறிந்தனர். இதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு பேசியதாவது, “பொதுமக்கள் கூறும் கோரிக்கைகள் உடனடியாக நிறைவேற்றப்படுகிறது. பொதுமக்களே என் தொலைபேசிக்கு அழைத்து வாழ்த்துகிறார்கள். […]
“காசு யாருக்கு வேணும்?” அமைச்சர் பொன்முடி வழங்கிய காசோலையை வாங்க மறுத்து கதறிய சிறுமியின் தாய்!
“காசு யாருக்கு வேணும்?” அமைச்சர் பொன்முடி வழங்கிய காசோலையை வாங்க மறுத்து கதறிய சிறுமியின் தாய்! விக்கிரவாண்டி தனியார் பள்ளியில் கழிவுநீர் தொட்டியில் விழுந்து மூன்றரை வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்திய நிலையில், அமைச்சர் பொன்முடி நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். முதல்வர் அறிவித்த நிவாரணத்திற்கான காசோலையை சிறுமியின் தாயாரிடம் அமைச்சர் பொன்முடி வழங்கிய நிலையில், அதனை வாங்க மறுத்து தாய் கதறிய சம்பவம் அங்கிருந்தவர்களை கலங்க வைத்துள்ளது.
You must be logged in to post a comment.