தஞ்சை மாவட்டத்தில் கால்நடைகளுக்கு இலவச மாட்டு தீவனம் வழங்கும் நிகழ்ச்சி…

தஞ்சாவூர் மாவட்டம் ,தஞ்சாவூர் ஒன்றியம், ஆலக்குடி கிராமத்தில் சில்ரன் சாரிட்டபிள் ட்ரஸ்டின் சார்பாக கால்நடை உரிமையாளர்களுக்கு இலவசமாக கால்நடை மாட்டு தீவனம் வழங்கப்பட்டது, இந்நிகழ்ச்சிக்கு ஆலக்குடி கிராமத்தின் கால்நடை உதவி மருத்துவ அலுவலர் த சுகன்யா கலந்து கொண்டு பயனாளிகளுக்கு இலவச மாட்டுத்தீவனம் வழங்கினார் . இந்நிகழ்ச்சியில் ஆலக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் உள்ள 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மாட்டுத் தீவனம் வாங்கி சென்றனர் . கால்நடை உரிமையாளர்களுக்கு கால்நடை மாட்டு தீவனம் வழங்கும் […]

தஞ்சாவூர் மாவட்டத்தில் இரத்த சோகையால் பாதிக்கப்பட்ட வளர் இளம் பெண்களுக்கான ஊட்டச்சத்து வழங்கும் நிகழ்ச்சி..

தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் ஒன்றியம், செங்கிப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் ரத்த சோகையால் பாதிக்கப்பட்ட வளர் இளம் பெண்களுக்கான ஊட்டச்சத்து வழங்கும் நிகழ்ச்சி சில்ட்ரன் சாரிட்டபிள் டிரஸ்டின் சார்பாக நடைபெற்றது . இந்நிகழ்ச்சிக்கு செங்கிப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் தலைமை தாங்கினார். பாளையப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் மற்றும் செவிலியர்,மருந்தாளுநர் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் 90க்கும் மேற்பட்ட ரத்தசோகை நோயினால் பாதிக்கப்பட்ட வளர் இளம் பெண்களுக்கு சில்ட்ரன் சாரிட்டபிள் […]

உசிலம்பட்டியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு 100க்கும் மேற்பட்ட மருத்துவ பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள்

மதுரை  தெற்கு மாவட்டம் தி மு க சார்பாக தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.உசிலம்பட்டி அரசு தலைமை மருத்துவமனையில் தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு நகர திமுக சார்பாக மருத்துவமனையில் உள்ள 100தூய்மை பணியாளர் மற்றும் சுகாதாரப் பணியாளர்களுக்கு சீருடை மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது . விழாவில் திமுக உசிலம்பட்டி நகரச் செயலாளர்  எஸ் ஒ ஆர் […]

தமிழக வெற்றிக் கழகம் சார்பாக தஞ்சையில் உள்ள எம்ஜிஆர் மற்றும் பெரியார் சிலைக்கு மாலை..

தமிழக வெற்றிக் கழகம் சார்பாக தஞ்சையில் உள்ள எம்ஜிஆர் மற்றும் பெரியார் சிலைக்கு மாலை அணிந்து அஞ்சலி செலுத்தினர். தந்தை பெரியாரின் 51 ஆண்டு நினைவு தினம் மற்றும் தமிழக முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் 37 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு தஞ்சையில் தமிழக வெற்றி கழகம் சார்பாக மாவட்ட தலைவர் விஜய் சரவணன் தலைமையில் வருகை தந்த தொண்டர்கள் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள தந்தை பெரியார் திருவுருவ சிலைக்கும், வடக்கு வீதியில் […]

சட்டென குறைந்த தங்கம் விலை! இன்றைய நிலவரம் என்ன.?

 தங்கம் விலை ஒருநாள் உயருவதும், மறுநாள் கொஞ்சம் குறைவதுமாக ஆட்டம் காட்டி வருகிறது. இதனிடையே, இஸ்ரேல் – பாலஸ்தீனம் இடையே நிலவிய போர் காரணமாக உச்சத்தை எட்டியது. அவ்வப்போது சற்று சரிந்து வந்த தங்கம் விலை கடந்த மார்ச் மாதம் தொடக்கத்தில் இருந்து தொடர்ந்து அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இந்த நிலையில், இன்று தங்கம் விலை சற்று குறைந்துள்ளது. கடந்த சில வாரங்களாக தங்கம் விலை வரலாறு காணாத உச்சத்தை எட்டி வரும் சூழலில், இன்று சற்று […]

மெட்ரோ ரயில் சேவை சரி செய்யப்பட்டது! இனி சீராக இயங்கும்! மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பு..

தொழில்நுட்ப கோளாறு காரணமாக, விமான நிலையத்திலிருந்து விம்கோ நகர் டெப்போவிற்கு ப்ளூ லைனில் நேரடி ரயில்கள் 18 நிமிட இடைவெளியில் இயக்கப்பட்டது. ரயில்கள் இயக்கப்படுவது தாமதமான நிலையில், சிரமத்திற்கு வருந்துகிறோம் என்று மெட்ரோ நிர்வாகம் தெரிவித்திருந்தது. இந்நிலையில், ரயில் சேவை சீரானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தொழில் நுட்பக் கோளாறு சரிசெய்யப்பட்ட நிலையில், சென்னை மெட்ரோ ரயில் சேவை சீரானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக காலை 8.50 மணி முதல் வழக்கம்போல் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுவதாக மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.

லோன் பெற்ற ஒருவர் இறந்து விட்டால் நிலுவைத் தொகையை யார் செலுத்துவது? வங்கிகளின் விதிமுறை என்ன??

லோன் பெற்ற ஒருவர் இறந்து விட்டால் நிலுவைத் தொகையை யார் செலுத்துவது? வங்கிகளின் விதிமுறை என்ன?? இன்றைய காலகட்டத்தில் ஒருவரின் சம்பாத்தியத்தை வைத்து செலவுகளைச் சமாளிக்க முடிவதில்லை. இதனால் பலரும் கடன் வாங்குகின்றனர். அப்படி கடன் வாங்கிய பிறகு கடன் வழங்குனர் கூறிய காலகட்டத்திற்குள் அதை திருப்பிச் செலுத்த வேண்டும். ஒரு வேலை கடன் வாங்கியவர் ஒரு ஈஎம்ஐ தவணையைத் தவறவிட்டாலும் அதற்கு கடன் வழங்குனர் அபராதம் விதிக்கவோ அல்லது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கவோ உரிமையுண்டு. […]

தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் புதிய தலைவராக தமிழகத்தைச் சேர்ந்த வி.ராமசுப்பிரமணியன் நியமனம்..

தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவராக ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி வி. ராமசுப்பிரமணியனை நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவிட்டுள்ளார். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் 1958-ம் ஆண்டு ஜூன் 30-ம் தேதி பிறந்த வி.ராமசுப்பிரமணியன், சென்னை உயர் நீதிமன்றத்தில் மூத்த நீதிபதியாக பதவி வகித்தார். அதன்பிறகு தெலங்கானா உயர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டு, அங்கிருந்து இமாச்சல பிரதேச உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பதவி வகித்தார். அங்கிருந்து உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்ட வி. ராமசுப்பிரமணியன், கடந்த […]

நெல்லையில் மின்வாரிய இணைப்பு பணி; பொதுமக்கள் பாதிக்கப்படுவதாக மஜகவினர் கலெக்டரிடம் மனு..

நெல்லை மாவட்டத்தில் ஒரே முகவரியில் உள்ள மின் இணைப்புகளை இணைக்கும் பணிகளால் நடுத்தர மக்கள் பாதிக்கப்பட்டு வருவதாக மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் மாநிலத் துணைச் செயலாளர் பிலால் ராஜா தலைமையில் கலெக்டரிடம் அளித்துள்ளனர். அந்த மனுவில், நெல்லை மாவட்டத்தில் மின்வாரியம் ஒரே முகவரியில் ஒன்றுக்கும் மேற்பட்ட மின் இணைப்பு உள்ள வீடுகளில் மின் இணைப்புகளை ஒரே இணைப்பாக மாற்றும் முயற்சியில் இறங்கி உள்ளது. இதனால் நடுத்தர மக்கள் ஏழை மக்கள் கடும் மின் கட்டண உயர்வுக்கு […]

தேஜஸ் இரயில் உட்பட, திருச்சி – திண்டுக்கல் வழித்தடத்தில் மேற்கொள்ள இருந்த பராமரிப்பு பணி ரத்து செய்யப்பட்டு, ரெயில்கள் வழக்கம்போல இயங்கும் என தெற்கு ரெயில்வே அறிவிப்பு..

திருச்சி – திண்டுக்கல் வழித்தடத்தில் பராமரிப்பு பணி மேற்கொள்ள இருப்பதாக கடந்த 10-ந்தேதி தெற்கு ரெயில்வே அறிவித்திருந்தது. இதனால் பல்வேறு ரெயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்படுவதாகவும் தெரிவித்திருந்தது. இந்த நிலையில், திருச்சி – திண்டுக்கல் வழித்தடத்தில் மேற்கொள்ள இருந்த பராமரிப்பு பணி ரத்து செய்யப்பட்டு, ரெயில்கள் வழக்கம்போல இயங்கும் என தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.இதுகுறித்து, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- சென்னை எழும்பூரில் இருந்து வரும் 28, 31 ஆகிய தேதிகளில் காலை 6 மணிக்கு புறப்பட்டு […]

தென்காசி மாவட்டத்தில் காவலர்களுக்கு CCTV கேமராக்கள் கையாளும் பயிற்சி..

தென்காசி மாவட்டத்தில் காவல் ஆளினர்களுக்கு CCTV கேமராக்களை கையாளும் பயிற்சி வகுப்பு மாவட்ட காவல் அலுவலகத்தில் நடந்தது. காவல்துறையின் மூன்றாம் கண் என்று அழைக்கப்படும் CCTV கேமராக்களை கையாளும் பயிற்சி 23.12.2024 அன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் V.R. ஸ்ரீனிவாசன் தலைமையில் தொழில்நுட்ப பிரிவு காவல் ஆய்வாளர் விஜயசேகர் முன்னிலையில் மாவட்ட காவல் அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது. இந்த வகுப்பில் காவல் துறையினருக்கு கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கண்காணித்தல், அவற்றில் பதிவாகி இருக்கும் வீடியோக்களை பதிவிறக்கம் செய்வதற்கான […]

ஆர் எஸ் மங்கலம் உப மின் நிலையத்தில் இன்று (24/12/2024) மின் தடை..

ராமநாதபுரம் மாவட்டம் ஆர் என் மங்கலம் உப மின் நிலையத்தில் இன்று (24.12. 2024) மாதந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. இதனால்  ஆர் எஸ் மங்கலம் டவுன், செட்டியமடை, சூரமடை, பெரியார் நகர், பெருமாள்மடை, தலைக்கான்பச்சேரி, நோக்கங்கொட்டை, சிலுகவயல், இந்திரா நகர், ஆவரேந்தல் பாரனூர், கலங்காப்புலி, சனவேலி, சவரியார்பட்டினம், புள்ளமடை, ஓடைக்கால், கவ்வுர், A.R.மங்கலம், ஆப்ராய், பெத்தனேந்தல், கற்காத்தக்குடி, புத்தனேந்தல் பகுதிகளில் இன்று (டிச.24) காலை 10 மணி முதல் 5 வரை மின்சாரம் நிறுத்தப்படும் […]

கடலில் பழைய துணிகளை விட்டுச்செல்ல வேண்டாம்:திருச்செந்தூர் கோயில் நிர்வாகம் கோரிக்கை!!

திருச்செந்தூர் வரும் பக்தர்கள் கடலில் நீராடிவிட்டு துணிகளை கடற்கரையில் விடுவதால் சுகாதாரக்கேடு ஏற்படுவதால் கோயில் நிர்வாகம் பக்தர்களுக்கு கோரிக்கை வைத்தனர். தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் ஆறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடு. இக்கோயிலுக்கு திருவிழா காலங்கள் தவிர்த்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். இப்பிரசித்தி பெற்ற திருச்செந்தூர் கோயில் கடற்கரையில் அமைந்துள்ளதால் சிறந்த பரிகார ஸ்தலமாக விளங்கி வருகிறது. இந்நிலையில் பரிகார பூஜைகள் செய்துவிட்டு கடலில் புனித நீராடும் […]

தமிழ்நாட்டு பள்ளி தேர்ச்சி முறையில் எந்த மாற்றமும் இல்லை-அமைச்சர் அன்பில் மகேஷ் உறுதி!

தமிழ்நாட்டு பள்ளி தேர்ச்சி முறையில் எந்த மாற்றமும் இல்லை -அமைச்சர் அன்பில் மகேஷ் உறுதி! பள்ளிகளில் 5, 8ம் வகுப்புகளுக்கு ‘ஆல் பாஸ்’ முறை ரத்து என ஒன்றிய கல்வி அமைச்சகம் அறிவித்திருந்தது. தமிழ்நாட்டில் மாற்றமில்லை கல்வி உரிமை சட்டத்தில் ஒன்றிய அரசு கொண்டுவந்துள்ள திட்டங்களால் தமிழ்நாட்டு பள்ளி தேர்ச்சி முறையில் எந்த மாற்றமும் இல்லை தற்போதுள்ள தேர்ச்சி நடைமுறையே தொடரும். பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் உறுதி.

இராமநாதபுரம் நுகர்வோர் நலச்சங்கம் மற்றும் நுகர்வோர் நல மன்றம் சார்பாக அரசு மகளிர் கலைக் கல்லூரி நுகர்வோர் தினவிழா…

இராமநாதபுரம் நுகர்வோர் நலச்சங்கம் மற்றும் நுகர்வோர் நல மன்றம் வணிகவியல் துறை அரசு மகளிர் கலைக்கல்லூரி இணைந்து தேசிய நுகர்வோர் தினவிழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில்  இராமநாதபுரம் நுகர்வோர் நல சங்கம் தலைவர் பிரேம்சதிஸ் , செயலாளர் லதா இராமநாதபுரம் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை அலுவலர் இளங்கோ , ராமநாதபுரம் உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் மருத்துவர் விஜயகுமார்  கீழக்கரை நுகர்வோர் நலச்சங்கம் தலைவர் செய்யது இப்ராஹிம் ,  இராமநாதபுரம் வட்டாரம் குழந்தை […]

தென்காசி மாவட்ட காவலர்களுக்கு பணியிடமாறுதல் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது..

தென்காசி மாவட்ட காவலர்களுக்கு பணியிடமாறுதல் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.. தமிழக காவல்துறையில் பணிபுரிந்து வரும் காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் ஒரு காவல் நிலையத்தில் மூன்று ஆண்டுகள் பணி புரிந்தால் பணியிடமாற்றம் செய்யப்படுவது வழக்கம். இந்நிலையில் தென்காசி மாவட்டத்திலுள்ள காவல் நிலையங்களில் பணிபுரிந்து வரும் காவலர்களில் மூன்று வருடங்களை நிறைவு செய்து வேறு காவல் நிலையத்திற்கு பணியிட மாறுதல் வேண்டி விண்ணப்பித்தவர்களுக்கு நேரடி கலந்தாய்வு இன்று 23.12.2024 மாவட்ட காவல் கண்காணிப்பாளர் V.R. ஸ்ரீனிவாசன்  தலைமையில் மாவட்ட […]

ராமேஸ்வரம்- ஹூப்ளி சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு! புதிய கூடுதல் நிறுத்தமாக சிவகங்கை அறிவிப்பு..

ராமேஸ்வரம் – ஹூப்ளி சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு! புதிய கூடுதல் நிறுத்தமாக சிவகங்கை அறிவிப்பு.. ராமேஸ்வரம் – ஹூப்ளி – ராமேஸ்வரம் சிறப்பு ரயில் டிசம்பர் மாதம் வரை இயக்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது இந்த ரயில்களின் சேவை ஜுன் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஹூப்ளி – ராமேஸ்வரம் வாராந்திர சிறப்பு ரயில் (07355) ஜனவரி 4 முதல் ஜுன் 28 வரை ஹூப்ளியில் இருந்து சனிக்கிழமைகளில் காலை 06.30 மணிக்கு […]

2026-ல் 25 தொகுதிகளை கேட்டுப் பெறவேண்​டும், இது நமது கட்சிக்கான சரியான நேரம் என எண்ணுகிறோம்! விசிக வன்னி அரசு பரபரப்பு கருத்து! இது அவரது தனிப்பட்ட கருத்து! தொல். திருமாவளவன் பதில்..

2026-ல் திமுக கூட்​ட​ணி​யிலேயே தொடர்​வோம் என திரு​மாவளவன் கூறி​யுள்​ளார். என்னைப் ​போன்ற கடைநிலை தொண்டர்​களின் மனநிலை என்னவென்​றால், 2026-ல் 25 தொகுதிகளை கேட்டுப் பெறவேண்​டும், இது நமது கட்சிக்கான சரியான நேரம் என எண்ணுகிறோம்” எம்று விசிக துணைப் பொதுச் செயலாளர் வன்னி அரசு கருத்துத் தெரிவித்திருப்பது மீண்டும் தமிழக அரசியல் களத்தில் பரபரப்பைப் பற்றவைத்துள்ளது. 2024 நாடாளுமன்றத் தேர்தல் முடிந்து ஆறு மாதகாலம்தான் ஆகியிருக்கிறது, ஆனால், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான பரபரப்பு இப்போதே தொற்றிக்கொள்ள ஆரம்பித்துவிட்டது. […]

ஐந்து முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களை ஃபெயில் ஆக்க கூடாது என்கிற கொள்கை ரத்து!

ஐந்து முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களை ஃபெயில் ஆக்க கூடாது என்கிற கொள்கை ரத்து! தோல்வியடைந்த மாணவர்களுக்கு இரண்டு மாதங்களுக்குள் மறு தேர்வு எழுதுவதற்கான வாய்ப்பு வழங்கப்படும். அதிலும் மீண்டும் தோல்வி அடைந்தால், அடுத்த வகுப்பிற்கு ப்ரொமோட் செய்யப்பட மாட்டார்கள். அதிலும் தேர்ச்சி அடையாத மாணவர்களை, அதே வகுப்பில் மீண்டும் தொடர வைக்கலாம். இருப்பினும், இதில் மாநில அரசுகளே இறுதி முடிவு எடுக்கவும் மத்திய அரசு அனுமதி. குழந்தைகளின் கற்றல் திறனை மேம்படுத்தும் நோக்கில் மத்திய […]

உசிலம்பட்டி தி மு க நகர் கழக சார்பாக உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு 250 சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கும் விழா

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வத்தலகுண்டு ரோடு எஸ் கே பி மஹாலில் தி மு க நகர் கழகம் சார்பாக துணை முதல்வர் உதயாநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு நலத்திட்டம் வழங்கும் விழா நடைபெற்றது.மதுரை தெற்கு மாவட்டம் உசிலம்பட்டி தி மு க நகர் கழகம் சார்பில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு உசிலம்பட்டி பகுதியில் உள்ள சுமை தூக்கும் தொழிலாளர்கள் 250 பேருக்கு நலத்திட்டங்கள் உதவிகள் வழங்கும் விழா […]

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!