புற்றுநோயின் அறிகுறிகள் மற்றும் பாதுகாப்பு வழிமுறைகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி…

தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் ஒன்றியம் ,தொன்ராயன்பாடி பஞ்சாயத்தில் சில்ட்ரன் சாரிட்டபிள் டிரஸ்ட் இன் சார்பாக புற்றுநோயின் அறிகுறிகள் மற்றும் பாதுகாப்பு வழிமுறை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது . நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக சிறப்புரை ஆற்ற வந்த மகிமை ராகினி (பெண்கள் சுகாதார தன்னார்வலர் மாறனேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் )பெண்களுக்கான புற்றுநோயின் அறிகுறிகள் என்ன? மார்பக புற்றுநோய் என்றால் என்ன? கர்ப்பப்பை வாய் புற்றுநோய் என்றால் என்ன? என்பதை பற்றி தெளிவாக கலந்து கொண்ட […]

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர் சங்கத்தின் சார்பில் சிபிஎஸ்சி திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி சாலை மறியல் போராட்டம்.! 50-க்கும் மேற்பட்டோர் கைது .!!

  ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கத்தின் சார்பில் சிபிஎஸ் திட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி சங்கத்தின் மாவட்ட தலைவர் விஜயகுமார் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது   அதைத் தொடர்ந்து சி பி எஸ் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி சுமார் 50-க்கும் மேற்பட்ட ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்    திடீர் சாலை மறியல் போராட்டத்தால்  போக்குவரத்து பாதிக்கப்பட்டது கேணிக்கரை […]

பொங்கல் பண்டிகை எதிரொலி! கூட்ட நெரிசலை தவிர்க்க பெங்களூரு- தூத்துக்குடி இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கம்..

கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் ரெயில்வே நிர்வாகம் விழாக்காலங்களில் சிறப்பு ரெயில்களை இயக்கி வருகிறது. அந்த வகையில் தற்போது பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சேலம் வழியாக பெங்களூரு- தூத்துக்குடி மற்றும் தூத்துக்குடி – மைசூர் இடையே சிறப்பு ரெயில் இயக்கப்படும் என்று ரெயில்வே நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி பெங்களூரு – தூத்துக்குடி சிறப்பு ரெயில் (06569) நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) பெங்களூரூவில் இருந்து இரவு 8 மணிக்கு புறப்பட்டு கிருஷ்ணராஜபுரம், பங்காருபேட்டை வழியாக மறுநாள் அதிகாலை […]

இஸ்ரோவின் புதிய தலைவராக தமிழகத்தைச் சேர்ந்த வி.நாராயணன் நியமனம்!

இஸ்ரோவின் புதிய தலைவராக தமிழகத்தைச் சேர்ந்த நாராயணனை மத்திய அரசு நியமித்துள்ளது. இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தில் தலைவராக தற்போது உள்ள சோம்நாத்தின் பதவிக்காலம் விரைவில் முடிவடைய உள்ளதால் புதிய தலைவர் நியமிக்கப்பட்டுள்ளார். இஸ்ரோவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள நாராயணன் கன்னியாகுமரி மாவட்டத்தை பூர்வீகமாக கொண்டவர். இவர் திருவனந்தபுரத்தில் வலியமலாவில் உள்ள எல்.பி.எஸ்.சியின் இயக்குனராக பணியாற்றியுள்ளார். வரும் 14ஆம் தேதி இஸ்ரோ தலைவராக நாராயணன் பொறுப்பேற்க உள்ளார். 2 ஆண்டுகள் வரை அந்த பதவியில் அவர் இருப்பார் என […]

ஈரோடு இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி போட்டி- சீமான் அறிவிப்பு..

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நிருபர்களிடம் கூறியதாவது:-தமிழக சட்டப்பேரவையில் வெளியேறிய கவர்னரின் செயல் கண்டிக்கத்தக்கதாகும். தமிழ்த்தாய் வாழ்த்துதான் முதலில் ஒலிக்கப்படும் என்பதும், இறுதியாகத்தான் தேசியகீதம் ஒலிக்கப்படவேண்டும் என்பதும் தமிழ்நாட்டில் நடைபெறும் ஒரு நிகழ்வாகும்.அதை மாற்றியமைக்க கவர்னர் முயற்சி செய்வது தமிழ் இனத்தை அவமதிப்பதாக கருதப்படுகிறது. இதை தி.மு.க. தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு ஆர்ப்பாட்டம் செய்து வருகிறது.அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் துன்புறுத்தலை கண்டித்து, நாம் தமிழர் கட்சி சார்பில் […]

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து ராமநாதபுரத்தில் மாவட்ட திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் .!

ராமநாதபுரம் மாவட்ட திமுக சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் டி பிளாக் அருகே தமிழ்நாட்டையும் தமிழ்த்தாய் வாழ்த்தையும் தொடர்ந்து அவமானப்படுத்தும் தமிழக ஆளுநர் ஆர். என். ரவியை கண்டித்தும், ஒன்றிய அரசு ஆளுநரை திரும்ப பெறக்கோரியும் மாவட்ட அவைத்தலைவர் சத்தியமூர்த்தி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  இந்த ஆர்ப்பாட்டத்தில், மாநில நிர்வாகிகள் சுப.த.திவாகர், குணகேசரன், ராமர், இன்பா ஏ.என்.ரகு, முன்னாள் அமைச்சர் சுந்தரராஜன், முன்னாள் எம்.பி பவானிராஜேந்திரன், மண்டபம் ஒன்றியம் பிரவீன் மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர் […]

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்! தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்தது..

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிப்ரவரி 5-ம் தேதி நடைபெறும் என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையர் செவ்வாய்க்கிழமை அறிவித்தார். மேலும், ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில் பதிவான வாக்குகள் பிப்ரவரி 8-ம் தேதி எண்ணப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உடல் நலக்குறைவால் உயிரிழந்ததைத் தொடர்ந்து, ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. விரைவில் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத் தேர்தல் அறிவிக்கப்படும் […]

நேபாளம், திபெத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் பலி எண்ணிக்கை 126 ஆக உயர்ந்தது..

நேபாளம் – திபெத் எல்லையில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 126 ஆக உயர்ந்துள்ளதாக சீன அரசு தகவல் தெரிவித்துள்ளது. சீன எல்லைக்குள்பட்ட திபெத் – நேபாளம் எல்லைப் பகுதியில் இன்று காலை 6.35 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுக் கோலில் 6.8 ஆகப் பதிவானது. இந்த நிலநடுக்கத்தால் பலியானோர் எண்ணிக்கை 126 ஆக உயர்ந்துள்ளது. மேலும் பலர் காயமடைந்துள்ளனர். சீனாவில் திபெத் தன்னாட்சிப் பகுதியில் உள்ள ஜிகாஸில் […]

டங்ஸ்டன் போராட்டம் மோடி அரசுக்கு எதிரானது என்றுகூட தெரியாதவரா பழனிசாமி?- அமைச்சர் ரகுபதி காட்டம்..

டங்ஸ்டன் போராட்டம் மோடி அரசுக்கு எதிரானது என்றுகூட தெரியாதவரா பழனிசாமி? சுரங்கம் அமைக்க முயலும் ‘ஒன்றிய பா.ஜ.க அரசை’ ஒரு வார்த்தை கூட குறிப்பிட்டுவிடாதபடி பார்த்து பார்த்து பதிவிட்டுள்ளார் பழனிசாமி” என அமைச்சர் ரகுபதி பதிலடி கொடுத்துள்ளார். இது குறித்து அமைச்சர் ரகுபதி வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-மதுரை அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் நடத்திய நடைபயணப் போராட்டத்திற்கு காவல்துறை அனுமதியை மறுத்துள்ளது’ என சொல்லியிருக்கிறார் எதிர்க் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி.டங்ஸ்டன் சுரங்கத்தை […]

இஸ்ரோவின் பி.எஸ்.எல்.வி. சி-60 ராக்கெட் வெற்றி! தேவகோட்டை பள்ளி மாணவர்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்..

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில், விண்வெளியில் இரு தனித்தனி விண்கலன்களை ஒன்றாக இணையச் செய்யும் தொழில்நுட்பத்தை இஸ்ரோ வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டதற்கு வண்ண பலுன்கள் பறக்கவிட்டு மாணவர்கள் பாராட்டு தெரிவித்தனர். இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) பி.எஸ்.எல்.வி., ஜி.எஸ்.எல்.வி., எஸ்.எஸ்.எல்.வி. ரக ராக்கெட்டுகள் மூலம் செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தி வருகிறது. காலநிலை கண்காணிப்பு, பேரிடர் மேலாண்மை, தகவல் தொடர்பு செயற்கைக்கோள்கள் மற்றும் வணிக ரீதியில் வெளிநாட்டு செயற்கைக்கோள்களும் விண்ணில் ஏவப்படுகிறது. […]

தஞ்சாவூர் பாரத் கல்லூரியில் சமத்துவ பொங்கல் திருவிழா

பாரத் கல்வி குழுமத்தின் சார்பாக தமிழர்கள் தைத்திருநாளாம் பொங்கல் விழாவை பாரத் கல்லூரி வளாகத்தில், ஊட்டச்சத்து உணவு கட்டுப்பாட்டு துறையும், பாரத் மகளிர் மன்றம் மற்றும் உள்தர உறுதி கட்டுப்பாட்டு துறை இணைந்து சமத்துவ பொங்கல் விழாவை கோலாகலமாக கொண்டா டினர். பாரத் கல்லூரியின் இப் பொங்கல் விழாவினை முன்னிட்டு மாணவ, மாணவிகள் தமிழகத்தின் பாரம்பர உடையான சேலை, தாவணி .வேஷ்டி, சட்டை ஆகிய உடைகளை அணிந்து மேலும் பொங்கலை மண் அடுப்பு, மண்பானை, கரும்பு இவைகளை […]

கருமாத்தூரில் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கருமாத்தூரில் கறவை மாடுகளுடன் இலவசமாக பால் வழங்கி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதில் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் சார்பில் முத்துப்பாண்டி. வெண்மணி சந்திரன். மானூத்து மகேந்திரன். மானூத்து ஜெயபாண்டி .சி பி எம் முன்னாள் ஒன்றிய செயலாளர் முருகன் விக்கிரமங்கலம் ரவி. கேசம் பட்டி ஜெயக்குமார் வடக்கம்பட்டி குருசாமி வடக்கம்பட்டி ரவி. கருமாத்தூர் ஜெயராஜ் தளபதி ராமர் மற்றும் பால் உற்பத்தியாளர்கள் கலந்து கொண்டனர்.தமிழக அரசு கோரிக்கைகளை நிறைவேற்ற நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் […]

தேசிய அளவில் தென்காசி அரசு தலைமை மருத்துவமனை முதலிடம்..

தேசிய அளவில் தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளது. தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை 557 படுக்கை வசதியுடன் பல்வேறு சிறப்பான சிகிச்சை வசதிகளுடன் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. 2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம் தேசிய அளவில் சிறப்பாக செயல்படும் மருத்துவ மனைகளுக்கு வழங்கப்படும் NQAS எனும் தேசியதர சான்றினை பெற்றது. 2023 ஆம் ஆண்டு KAYAKALP எனப்படும் மருத்துவமனை மற்றும் சுற்றுப்புறம் தூய்மை பராமரிப்பினை ஆய்வு செய்து […]

தஞ்சாவூரில்,கட்டுமான தொழிலாளர்கள், அமைப்புச்சாரா தொழிலாளர்கள் பொங்கல் போனஸ் கோரி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்.

கட்டுமான தொழிலாளர்கள், அமைப்புச்சாரா தொழிலாளர்கள் சங்கம் சார்பில், பொங்கல் பண்டிகைக்கு முன்பாக பொங்கல் போனஸ் ரூபாய் 15,000 வழங்க வேண்டும் என தமிழக முழுவதும் நடைபெறும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தினையொட்டி தஞ்சையில் தலைமை தபால் அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஏஐசிசி டியு மாவட்ட தலைவர் கே .ராஜன் தலைமை வழங்கிய தலைமை வகித்தார்.ஏஐசிசிடியு மாவட்ட குழு உறுப்பினர்கள் ஜெயபால் ,நடராஜன் , அல்போன்ஸ் ,ஏ ஐ சி டபிள்யூ எஃப் நகர […]

HMPV வைரஸ் பரவல் எதிரொலி, மாஸ்க் அணிவது கட்டாயம்: முதல் மாநிலமாக கர்நாடகாவில் அமல்..

HMPV வைரஸ் பரவல் எதிரொலியாக இந்தியாவிலேயே முதல் மாநிலமாக கர்நாடகாவில் மாஸ்க் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அம்மாநிலத்தில் 2 குழந்தைகளுக்கு HMPV தொற்று உறுதியான நிலையில், பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொது இடங்களுக்கு செல்லும்போது மக்கள் மாஸ்க் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. வைரஸ் பரவலை பொறுத்து மற்ற மாநிலங்களிலும் சில கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மாஸ் காட்டிய திண்டுக்கல் மாவட்ட, தவெக நிர்வாகிகள்!

பழனி அருகே கீரனூரில் பல்வேறு தடைகளை உடைத்து கொடியேற்றியும் , இனிப்புகள் வழங்கியும் ,பொதுகூட்டம் நடத்தி மாஸ் காட்டிய தமிழக வெற்றி கழகத்தினர். திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே கீரனூரில் ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட உணவு மற்றும் உணவுப் பொருட்கள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி தொகுதியில்,தவெக பொதுக்கூட்டம் மற்றும் கொடியேற்றும் நிகழ்விற்கு கடந்த இரண்டு மாதங்களாக காவல்துறை அனுமதி மறுக்கப்பட்டு அலைக்கழிப்பு செய்த வந்து நிலையில் கீரனூர் பேரூர் பொறுப்பாளர் முகமது அலி ஜின்னா […]

பழனி தைப்பூசத் திருவிழாவுக்கு சிறப்பு ரயில்கள் இயக்க வேண்டும்; திண்டுக்கல் எம்.பி. கோரிக்கை..

பழனி தைப்பூசத் திருவிழாவுக்கு சிறப்பு ரயில்கள் இயக்க வேண்டும்: திண்டுக்கல் எம்.பி. கோரிக்கை.. பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் வரும் 2025-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 5-ஆம் தேதி முதல் 14-ஆம் தேதி வரை நடைபெறவுள்ள தைப்பூச திருவிழாவையொட்டி சிறப்பு ரயில்கள் இயக்க வேண்டும் என திண்டுக்கல் மக்களவை உறுப்பினர் ஆர். சச்சிதானந்தம் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக தென்னக ரயில்வே பொது மேலாளருக்கு அவர் எழுதிய கடிதத்தில், “பழனி தண்டாயுதபாணி திருக்கோயிலின் தைப்பூச திருவிழா […]

சட்டமன்ற மரபுகளை மதிக்காமல், தமிழக மக்களை அவமதிக்கும் ஆளுநர் ரவியை பதவி நீக்க வேண்டும்!-அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தல்!

சட்டமன்ற மரபுகளை மதிக்காமல், தமிழக மக்களை அவமதிக்கும் ஆளுநர் ரவியை பதவி நீக்க வேண்டும்!-அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தல்!  சட்டமன்ற மரபுகளை மதிக்காமல் தமிழக மக்களை அவமதிக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவி பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர். தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை! தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி, சட்டப்பேரவை கூட்டத்தில் உரை நிகழ்த்தாமல் புறக்கணித்து விட்டு வெளியேறியிருக்கிறார். நீண்டகால தமிழக சட்டப்பேரவை மரபின்படி, ஆளுநர் உரைக்கு முன்பாக தமிழ்த்தாய் வாழ்த்து […]

ராமநாதபுரம் அரண்மனையில் தேமுதிக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் .!

ராமநாதபுரம் மாவட்டம் அரண்மனையில் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில் மாவட்ட செயலாளர் சிங்கை ஜின்னா தலைமையில் அண்ணா பல்கலைக்கழக பாலியல் வழக்கை உண்மை குற்றவாளிகளை கண்டறிந்து உடனடியாக கைது செய்யக்கோரியும் போதை இல்லா தமிழகத்தை உருவாக்க கோரியும் நியாய விலை கடைகளில் பொங்கல் பரிசாக ஆண்டுதோறும் வழங்கப்படும் ரூபாய்1000 உடனே வழங்க கோரியும் தமிழக அரசை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. . இதில் ராமநாதபுரம் நகர செயலாளர் பாண்டி மாவட்ட இளைஞரணி செயலாளர் முத்துக்குமார் […]

இலங்கையில் இருந்து தமிழகத்திற்கு கடத்த முயன்ற   தங்கம் பறிமுதல் .! 3 பேர் கைது.!!

இலங்கையில் இருந்து தமிழகத்திற்கு கடத்த முயன்ற   தங்கம் பறிமுதல் : 3 பேர் கைது       இலங்கையிலிருந்து தமிழகத்திற்கு கட்டதி வரப்பட்ட 11கிலோ 300 கிராம் தங்கத்தினை இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்து இலங்கையை சேர்ந்த 3 பேரை கைது செய்து விசாரிக்கின்றனர்.     தமிழகம் அருகே இலங்கை இருப்பதால் கடல் வழியாக தங்கம், போதை பொருட்கள், பீடியிலைகள், பலசரக்கு பொருட்கள் கடத்தல் அதிகமாக நடந்து வருகிறது. கடத்தல் குறித்து இந்திய, இலங்கை […]

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!