மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தேனி ரோட்டில் உள்ளது அரசு மேல்நிலைப்பள்ளி மைதானம்.இந்த அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் தினந்தோறும் காலையில் பெண்கள் ஆண்கள் நடை பயிற்சியில் ஈடுபடுகின்றனர்.மேலும் இளைஞர்கள் சிறுவர்கள் பல்வேறு விளையாட்டுப்பயிற்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில் உசிலம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் செடி கொடிகள் மற்றும் பாதைகளில் மழைநீர் தேங்கியும் உடற்பயிற்சி செய்ய வரும் பொது மக்களுக்கு இடையூறாக இருந்து வந்தது. அதிகாலையில்; உடற்பயிற்சி செய்ய வரும் பொது மக்களுக்கும் மற்றும் மாணவ மாணவிகளுக்கும் இடையூறாக […]
Category: செய்திகள்
திமுக இளைஞரணி சார்பில் ராமநாதபுரம் சட்டமன்றத் தொகுதி சமூக வலைதளப் பயிற்சி..
இராமநாதபுரம் : திமுக இளைஞரணி சார்பில் ராமநாதபுரம் சட்டமன்றத் தொகுதி சமூக வலைத்தளப் பயிற்சி நடந்தது. மாவட்ட திமுக செயலாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் எம்எல்ஏ தலைமை வகித்து துவக்கி வைத்தார். ராமநாதபுரம் மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளர் சம்பத்ராஜா வரவேற்றார். சமூக செயற்பாட்டாளர் சூர்யா கிருஷ்ணா மூர்த்தி, சமூக தளத்தில் பணியாற்றுவது குறித்து அன்பகம் விக்னேஷ் ஆனந்த் பயிற்சி அளித்தனர். திமுக இளைஞரணி மாநில துணை செயலாளர்கள் இன்பா ரகு, ஜி.பி. ராஜா பேசினர். மாவட்ட இளைஞரணி […]
கீழக்கரை சையது ஹமிதா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வேலை வாய்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி .!
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை சையது ஹமிதா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கல்லூரி காலங்களில் வேலைவாய்ப்பை அடைதல் என்ற தலைப்பில் இன்போசிஸ் மற்றும் ஐசிடி அகாடமி இணைந்து மாணவர்களுக்கான வேலை வாய்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது விழாவிற்கு சிறப்பு விருந்தினராக ஐசிடி அகடமின் மேலாளர் பூர்ண பிரகாஷ் கலந்துகொண்டு மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு பற்றி சிறப்புரையாற்றினார் முஹம்மது சதக் அறக்கட்டளையின் இயக்குனர் ஹபிப் முகமது சதக்கத்துல்லா அவர்கள் முன்னிலை வகித்தார் கல்லூரியின் முதல்வர் முனைவர் ராஜசேகர் தலைமை […]
உசிலம்பட்டி அருகே வகுரணி கண்மாய்க்கு தண்ணீர் திறக்க வலியுறுத்தி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே வகுரணி கிராமத்தில் பெரிய கண்மாய் உள்ளது. இதன் அருகில் உள்ள நல்லுத்தேவன்பட்டி கண்மாய் நிரம்பி, குருவிளாம்பட்டி கண்மாய்க்கு தண்ணீர் திறக்கப்பட்டு, அதற்கு பிறகு வகுரணி கண்மாயக்கு பொதுப்பணித்துறை அதிகாரிகள் தண்ணீரை திறந்து விட்டனர்.. ஆனால் திறந்த மறுநாளே தண்ணீரை நிறுத்திவிட்டு அசுவமாநிதி ஓடை வழியாக வடுகபட்டி கண்மாய்க்கு தண்ணீரை திறந்து விடப்பட்டதால் பொதுமக்கள், விவசாயிகள் அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் கிராம மக்கள் முறையிட்டும் தண்ணீர் திறக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த வகுரணி […]
ஒற்றை பெற்றோரின் குழந்தைகளுக்கு உயர் கல்வி வழிகாட்டல் விழிப்புணர்வு முகாம்..
இராமநாதபுரம் : குழந்தை உரிமைகளும் நீங்களும் வழிகாட்டல் படி, ராமநாதபுரம், சாயல்குடி பகுதிகளில் ஒற்றை பெற்றோரின் குழந்தைகள் உயர் கல்வி உறுதிசெய்வதற்கான விழிப்புணர்வு கூட்டம் ரூரல் வொர்க்கஸ் டெவலப்மென்ட் சொசைட்டி சார்பில் 1 வாரம் நடந்தது. ரூரல் வொர்க்கஸ் டெவலப்மென்ட் சொசைட்டி இயக்குனர் சத்தையா தலைமை வகித்தார். மரியஸ்டெல்லா வரவேற்றார். குந்தைகளுக்கு முழு பாதுகாப்பு, தன்னம்பிக்கை ஏற்பட குழந்தைகளின் விருப்பத்தை நிறைவேற்ற அனைவரும் உறுதுணையாக இருக்க வேண்டும் என சாயல்குடி காவல் சார்பு ஆய்வாளர் கார்த்திக் பேசினார். […]
குரான் ஒப்புவித்தல் போட்டி : மதரஸா மாணவ, மாணவிகளுக்கு பரிசு..
இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அருகே காஞ்சிரங்குடி மன்பவுல் ஹைராத் மதரஸா மாணவ மாணவிகளுக்கு குரான் ஒப்புவித்தல் 2 ஆம் ஆண்டு போட்டி பரிசளிப்பு விழா நேற்றிரவு (27.12.2024) நடந்தது. தமுமுக மாநில துணை பொதுச்செயலாளர் சலீமுல்லா கான் பரிசு வழங்கினார். தமுமுக மாவட்ட தலைவர் இப்ராஹீம், மாவட்ட செயலாளர் அப்துல் ரஹீம், முன்னாள் மாவட்ட பொருளாளர் பரக்கத்துல்லா, மருத்துவ அணி மண்டல செயலாளர் சுலைமான், மஸ்ஜித் தக்வா இமாம் அய்யூப் புகாரி, திருப்புல்லாணி ஒன்றிய மனிதநேய மக்கள் […]
ஒரத்தநாட்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நூற்றாண்டு விழாவையொட்டி மாபெரும் பொதுக்கூட்டம்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 100வது ஆண்டு விழா மற்றும் சுதந்திரப் போராட்ட வீரர், கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் ஆர் .நல்லகண்ணு நூற்றாண்டு விழா மாபெரும் பொதுக்கூட்டம் தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு பேருந்து நிலையத்தில் நடைபெற்றது. இந்த பொதுக் கூட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் வாசு. இளையராஜா தலைமை வகித்தார். ஒன்றிய துணை செயலாளர் கோசிமின் வரவேற்பு உரை ஆற்றினார். தஞ்சை மாவட்ட செயலாளர் முத்து. உத்திராபதி தொடக்க உரையாற்றினார். கட்சியின் மாநில கட்டுப்பாட்டு உறுப்பினர், பாராளுமன்ற உறுப்பினர் […]
தேமுதிக தலைவர் விஜயகாந்த் முதலாம் ஆண்டு குருபூஜை: திருவண்ணாமலை மாவட்ட தேமுதிக கட்சியினர் அனுசரிப்பு..
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் மறைந்து ஓராண்டு ஆகிறது. அவரது நினைவு தினத்தை ஆண்டுதோறும் குரு பூஜை தினமாக கடைபிடிக்க தே.மு.தி.க.வினர் முடிவு செய்து உள்ளனர். அதன்படி தேமுதிகவினர் முதலாம் ஆண்டு குருபூஜை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள தேமுதிக கட்சியினர் தொண்டர்கள் மொட்டை அடித்து துக்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர் திருவண்ணாமலை மாவட்டக் கழக செயலாளர் வி.எம்.நேரு தலைமையில் முதலாம் ஆண்டு குருபூஜை நடைபெற்று வரும் நிலையில், திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த கொட்டகுளம் கிராமத்தில் புதுப்பாளையம் மேற்கு ஒன்றியம் […]
டி எஸ் பி ஆய்வு
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் காவல் நிலையத்தில் திருக்கோவிலூர் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் பார்த்திபன் ஆய்வு மேற்கொண்டார்: அருகில் காவல் ஆய்வாளர் விநாயக முருகன் மற்றும் காவல்துறையினர் உடன் இருந்தனர்.
பெண்களின் பாதுகாப்பு திராவிட மாடல் அரசுக்கு மிக முக்கியமானது; அமைச்சர் கீதா ஜீவன் பேட்டி..
பெண்களின் பாதுகாப்பும் முன்னேற்றமும் திராவிட மாடல் அரசாங்கத்திற்கு மிக முக்கியமானது மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதாஜீவன் தெரிவித்துள்ளார். இது குறித்த செய்தியாளர் சந்திப்பில், கிண்டி அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் தனக்கு நடந்த வன்கொடுமை தொடர்பாக தைரியமாக புகார் கூறிய மாணவிக்கு நன்றிகள், பாராட்டுகள். ஏனென்றால், நேர்ந்த கொடுமை இனி யாருக்கும் நடக்கக் கூடாது என அவர் தைரியமாக புகார் அளித்ததற்கு பாராட்டுகள். இவ்வாறு பெண்கள் தைரியமாக புகாரளிக்க முன்வர வேண்டும். அப்படி வந்தால் தான் குற்றச் செயல்கள் […]
தொடர் கன மழையால் நெற்பயிர்கள் சேதம்; இழப்பீடு வழங்க தஞ்சை விவசாயிகள் கோரிக்கை..
தஞ்சாவூர் மாவட்டம், திருவோணம் தாலுகா பகுதியில் தொடர் கனமழையால் நெற்கதிர்கள், நெல் பயிர்கள், கடலை பயிர்கள் என பல ஏக்கர் சேதம் அடைந்துள்ளது. இது தொடர்பாக 27.12.2024 அன்று மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் தஞ்சாவூர் மாவட்ட விவசாயிகள் நலச்சங்கத்தின் மாவட்ட செயலாளர் வி.கே.சின்னத்துரை தலைமையில் பாதிக்கப்பட்ட விவசாயிகள் இடைப்பழம் நோய் தாக்கப்பட்ட நெல் கதிர்கள் மற்றும் பயிர்களுடன் சென்று ஆட்சியரிடம் பயிர்களை காண்பித்து உரிய அரசு நிவாரணமும், காப்பீடு செலுத்தப்பட்ட விவசாயிகளுக்கு […]
நேதாஜி, முத்துராமலிங்க தேவரை அவதூறு பேசியோரை கண்டித்து முதுகுளத்தூரில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் : 200 பேர் கைது..
இந்திய சுதந்திர போராட்ட வீரர்கள் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், பசும்பொன் உ. முத்துராமலிங்கத் தேவர் ஆகியோரை டிச.1ல் திருநெல்வேலியில் அவதூறாக பேசியோரை கண்டித்து, ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் ஆப்பநாடு மறவர் சங்கம் சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆப்பநாடு மறவர் சங்கத்தலைவர் டாக்டர் ராம்குமார் தலைமை வகித்தார். இதில் 3000 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர் அப்பகுதி மக்கள் போலீசாரின் தடுப்பை மீறி முதுகுளத்தூர் பேருந்து நிலையத்தில மறியலில் ஈடுபட்டனர். இதனையடுத்து எஸ்பி., சத்தீஷ் அங்கு விரைந்தார். […]
தமிழ்நாடு முதல்வருக்கு நன்றி தெரிவித்த தூய்மைப் பணியாளர்கள்..
தென்காசி மாவட்டத்தை சேர்ந்த தூய்மைப் பணியாளர்கள் மற்றும் மகளிர் சுய உதவிக்குழுவினர் தமிழ்நாடு முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்துள்ளனர். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 06.12.2024 அன்று சென்னை ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற்ற தூய்மைப் பணியாளர்களை தொழில் முனைவோர்களாக மாற்றும் உன்னத திட்டத்தின் கீழ் தூய்மைப் பணியாளர்களுக்கு நவீன கழிவு நீர் அகற்றும் வாகனங்கள் வழங்கிய விழாவில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். ஆதிதிராவிடர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினருக்கு தேவையான நலத் […]
மேட்டுப்பாளையம் வட்டாட்சியர் அலுவலகத்தில் தூய்மை பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம்
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நகராட்சியில் ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு ஒப்பந்தம் அளித்த ஒப்பந்ததாரர் முறையாக சம்பளம் வழங்காமலும் அவர்களிடமிருந்து பிடித்தம் செய்யப்பட்ட இஎஸ்ஐ இ பி எப் போன்ற தொகைகளை முறையாக செலுத்தாததாலும் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர் இந்தப் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர கடந்த 18ஆம் தேதி மேட்டுப்பாளையம் வட்டாட்சியர் தலைமையில் நகராட்சி நிர்வாகம் ஒப்பந்ததாரர் காவல்துறையினர் தூய்மை பணியாளர்கள் அனைவரையும் அழைத்து அமைதி மற்றும் சமூக பேச்சுவார்த்தைக்கு […]
முன்னாள் பாரத பிரதமர் மன்மோகன் சிங் மறைவு .!திருவண்ணாமலை காங்கிரஸ் சார்பாக அஞ்சலி.!!
திருவண்ணாமலை தெற்கு மாவட்டம் காங்கிரஸ் சார்பாக முன்னாள் இந்திய பாரத பிரதமர் பொருளாதார மேதை .டாக்டர் மன்மோகன் சிங் மறைவையொட்டி அவர்கள் திருஉருவ படத்துக்கு திருவண்ணாமலை தெற்கு மாவட்ட தலைவர் செங்கம் ஜி குமார் தலைமையில் மாலை அணிவித்து மலர்தூவி கண்ணீர் அஞ்சலி செலுத்தப்பட்டது இந்த நிகழ்ச்சியில் நகரத் தலைவர் காந்தி, ராஜி, மாரி, சுப்பிரமணி, காமராஜ் நேரு அண்ணாமலை ரத்தினம் ஆகியோர் கலந்து கொண்டு கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்கள் இதைத்தொடர்ந்து திருவண்ணாமலை நகர காங்கிரஸ் அலுவலகத்தில் […]
போளூர் திமுக கட்சி சார்பில் ஆலோசனைக் கூட்டம்..
திருவண்ணாமலை மாவட்டம் போளூரில் திமுக கட்சி அலுவலகத்தில் போளூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட ஒன்றிய, பேரூர் கழக செயலாளர்கள் தேர்தல் பணிக்குழு ஒருங்கிணைப்பாளர்களுடனான ஆலோசனை கூட்டம் கழக மாநில மருத்துவரணி துணைத் தலைவர், போளூர் சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளர் டாக்டர்.எ.வ.வே.கம்பன் கூட்டத்தில் கலந்து கொண்டு பல்வேறு ஆலோசனை வழங்கி சிறப்புரையாற்றினார். ஆலோசனை கூட்டத்தில் போளூர் தொகுதியைச் சேர்ந்த மாவட்ட ஒன்றிய கிளைக் கழக தேர்தல் பணிக்குழு நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்
போளூர் சாரண மாவட்டம் -ஒரு நாள் பயிற்சி முகாம்
திருவண்ணாமலை அடுத்த போளூர் சாரண மாவட்டம் பாரத சாரணர் இயக்கத்தின் சார்பில் மாவட்ட கல்வி அலுவலர் கார்த்திகேயன் உத்தரவின் பேரில் மாவட்ட செயலர் ரமேஷ் ஆலோசனையின் படி செழியன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் சாரண சாரணிய மாணவர்களுக்கு ஒரு நாள் பயிற்சி முகாம் அளிக்கப்பட்டது. இந்த முகாமில் மாணவர்களுக்கு சாரண இயக்கத்தின் வரலாறு இறைவணக்க பாடல் கொடி பாடல் முதலுதவி கயிற்று கலை மற்றும் உடற்பயிற்சி ஆகியவை பயிற்சி அளிக்கப்பட்டது. இப் பயிற்சியை சிறப்பாக ஏற்பாடு செய்த செழியன் […]
கோமுகி அணை 46 அடி ஆழம் இருந்தும் 28 அடி நீரே சேமிக்க முடிகிறது நீர்பிடிப்பு முழுவதும் மண் மேடாக மாறிய கோமுகி அணை, தூர்வாரி ஆழப்படுத்த கோரிக்கை
கோமுகி அணை கடந்த 1967ம் ஆண்டு சுமார் 1000 ஏக்கர் பரப்பளவில் 46 அடி வரை நீரை தேக்கி வைக்கும் வகையில் காமராஜர் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டது. இதில் ஆற்றுப் பாசனத்தின் மூலம் 5,860 ஏக்கர் விவசாய நிலமும், முதன்மை கால்வாய் பாசனத்தின் மூலம் 5000 ஏக்கர் விவசாய நிலமும் பாசன வசதி பெறுகிறது. அதாவது முதன்மை பாசன கால்வாய் மூலம் வடக்கநந்தல், மாத்தூர், மண்மலை, மாதவச்சேரி, பால்ராம்பட்டு, செல்லம்பட்டு, கரடிசித்தூர் ஆகிய 7 கிராமங்களை சேர்ந்த […]
அண்ணா பல்கலைக்கழக பாலியல் வழக்கில் சிபிஐ விசாரணை வேண்டும்: இபிஎஸ் வலியுறுத்தல்..
அண்ணா பல்கலைக்கழக பாலியல் வழக்கில் சிபிஐ விசாரணை வேண்டும்: இபிஎஸ் வலியுறுத்தல்.. அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி விடுத்துள்ள அறிக்கையில்; அண்ணா பல்கலைக்கழக வளாக பாலியல் வழக்கில், காவல்துறை மாணவியின் தனிப்பட்ட விவரங்களுடன் FIR-ஐ எப்படி இணையத்தில் வெளியிட்டது? பாதிக்கப்பட்டவரின் பெயரை வெளியிடக்கூடாது என்ற அடிப்படை கூட ஸ்டாலின் மாடல் அரசின் காவல்துறைக்கு தெரியாதா? காமக்கொடூரன் ஞானசேகரன் அண்ணா பல்கலைக்கழகத்தில் மேலும் ஒரு மாணவியை இதேபோன்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. இவனை […]
கரியாலூர் காவல் நிலையத்தில் எஸ்.பி., திடீர் ஆய்வு !
*கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலையில் உள்ள கரியாலூர் சட்டம் ஒழுங்கு காவல் நிலையத்தில் கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரஜத் சதுர்வேதி திடீர் ஆய்வு கொண்டார்.* *இந்த ஆய்வின் போது கள்ளக்குறிச்சி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் தேவராஜ் மற்றும் காவல் ஆய்வாளர் ஏழுமலை ஆகியோர் இருந்தனர்.*