புகழ்பெற்ற தென்னிந்திய பின்னணிப் பாடகர் பி. ஜெயச்சந்திரன் 80 வயதில் காலமானார். ஒரு வருடத்திற்கும் மேலாக கல்லீரல் தொடர்பான நோய்களுக்கு சிகிச்சை பெற்று வந்த அவர், திரிச்சூரில் உள்ள அமலா மருத்துவமனையில் காலமானார். மாலை 7 மணியளவில் பூக்குன்னத்தில் உள்ள அவரது வீட்டில் ஜெயச்சந்திரன் திடீரென மயக்கமடைந்தை அடுத்து அவர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இரவு 7:54 மணிக்கு அவரது மரணம் உறுதி செய்யப்பட்டது. 50 ஆண்டுகளுக்கு மேல் நீடித்த பி. ஜெயச்சந்திரனின் இசைப் பயணத்தில், ஆயிரத்திற்கும் […]
Category: செய்திகள்
திருப்பதி கூட்ட நெரிசலில் சிக்கி பலியான குடும்பத்துக்கு ரூ.25 லட்சம்! ஒருவருக்கு தேவஸ்தானத்தில் வேலை! அதிகாரிகள் சஸ்பெண்ட்! சந்திரபாபு நாயுடு அதிரடி..
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசி முன்னிட்டு வைகுண்ட துவார தரிசனத்திற்கான இலவச டோக்கன் விநியோகிக்கும் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 6 பேர் உயிரிழந்தனர். திருப்பதி சென்று வந்தால் திருப்பம் வரும் என்பார்கள் அதற்கு ஏற்றார் போல உலக புகழ்பெற்ற இக்கோவிலில் தினமும் தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருந்து ஏழுமலையானை தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் திருப்பதியில் உள்ள ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு வைகுண்ட […]
மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் பெண்களின் வங்கிக் கணக்கில் இன்றிலிருந்து ரூ.1,000 வரவு..
மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின்கீழ் மாதந்தோறும் ரூ.1,000 மாநில அரசு வழங்கி வருகிறது. இந்த மாதம் 15ஆம் தேதி பொங்கல் பண்டிகை விடுமுறை ஆகும். இதையொட்டி, 15ஆம் தேதியன்று பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை ரூ.1,000 வழங்க முடியாத நிலை நேரிட்டுள்ளது. அதேபோல், 11ம் தேதி முதல் தொடர் விடுமுறை வருகிறது. ஆதலால் பெண்களின் வங்கிக் கணக்கில் இன்றிலிருந்து ரூ.1,000 டெபாசிட் செய்யப்பட இருக்கிறது.
பொங்கல் பரிசுத் தொகுப்பில் ரூ.1000 ஏன் இல்லை? – தங்கம் தென்னரசு விளக்கம்..
பொங்கல் பரிசுத் தொகுப்பில் ரூ.1000 ஏன் இல்லை? என சட்டப்பேரவையில் உறுப்பினர்கள் கேள்வி எழுப்பிய நிலையில், நிதியமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம் அளித்துள்ளார். இது குறித்து நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பேசுகையில், “பொங்கல் தொகுப்புக்காக தமிழ்நாடு அரசு ரூ. 280 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. வெள்ள நிவாரணப் பணிகளுக்கு ஒன்றிய அரசிடம் ரூ. 37,000 கோடி கேட்கப்பட்டது. ஆனால், ரூ. 276 கோடி மட்டுமே கிடைத்தது. எஸ்.எஸ்.ஏ திட்டத்தில் ரூ 2100 கோடியை ஒன்றிய அரசு வழங்கவில்லை. […]
பெரியாரைப் பற்றி சர்ச்சை கருத்து! சீமான் மீது குவியும் புகார்கள்..
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய விவகாரம் தமிழகத்தில் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக நீலாங்கரையில் உள்ள சீமான் வீட்டில் தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி காரை அடித்து நொறுக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. சீமான் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி குவியும் புகார்கள்: இந்நிலையில், திமுக சட்டத்துறை மாநில துணை செயலாளர் மருது கணேஷ், திமுக நிர்வாகி ரகு, தமிழர் முன்னேற்றப்படை தலைவர் […]
கோவையில் சர்ச்சையை கிளப்பிய பீப் கடை விவகாரம்! பாஜக நிர்வாகி மீது வழக்குப் பதிவு..
கோவை மாவட்டம், உடையாம்பாளையம் பகுதியில் சாலையோரமாக தள்ளுவண்டியில் பீப் கடையை தம்பதி ஒருவர் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இந்த கடைக்கு வந்த பா.ஜ.க பிரமுகர் சுப்ரமணி என்பவர், இங்கு பீப் கடை போடக்கூடாது என மிரட்டல் விடுத்துள்ளார். இவர் மிரட்டும் வீடியோ சமூகவலைதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட கடை உரிமையாளர் தம்பதிகள் இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதில், கடையை எடுக்க சொல்லி என்னை பல முறை பா.ஜ.க சுப்ரமணி […]
கீழக்கரையில் தொழில்நுட்ப திறன் மேம்பாடு பயிற்சி முகாம்
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரியில், தொழில் துறை தேவைகளுக்கான அறிவியல் மற்றும் தொழில்நுட்ப திறன் மேம்பாடு’ என்ற தலைப்பில் தமிழ்நாடு மாநில அறிவியல் தொழில்நுட்ப மன்றத்தின் (TNSCST) சார்பாக மூன்று நாட்கள் நடைபெற்ற பயிற்சி முகம் நடைபெற்றது. கல்லூரியின் துணை முதல்வர் மற்றும் வேலைவாய்ப்பு அலுவலர் கணேஷ் குமார் ஆகியோர் வரவேற்புரை வழங்கினார். இதில் இராமநாதபுரம். சிவகங்கை மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த இறுதியாண்டு பயிலும் பாலிடெக்னிக் மாணவர்கள் பங்கேற்றார்கள். . விழாவில் […]
இந்திய அரசியலமைப்பு தினம் அனுசரிப்பு
தஞ்சாவூர் லயன்ஸ் கோல்டன் ஹாலில் தஞ்சாவூர். மாநகர மாவட்ட காங்கிரஸ் கட்சியின் வழக்கறிஞர் பிரிவு சார்பில் இந்திய அரசியலமைப்பு தினம் லயன்ஸ் வழக்கறிஞர் ஜான்சன் தலைமையில் நடைபெற்றது. அண்ணல் அம்பேத்கர் இயற்றிய அரசியல் சட்டத்தை பாதுகாப்பதென்றும் மதத்தின் பெயரால் இனத்தின் பெயரால் அரசியலமைப்பு சட்டத்தை மாற்றக் கூடாது என்றும் அரசியல் சட்டம் ஏழை. எளிய சாமானிய மக்களின் நம்பிக்கைக்கு உரியதாக காப்போம் என உறுதிமொழி யேற்கப்பட்டது. சிறப்பு விருந்தினராக கூடுதல் வழக்கறிஞர் ஜெனரல் சந்திரமோகன்,வழக்கறிஞர் ராஜ் மோகன். […]
திருப்பதி கூட்ட நெரிசலில் சிக்கி பலியான தமிழகத்தைச் சேர்ந்த பெண்ணின் குடும்பத்திற்கு நிதியுதவி அறிவிப்பு..
ஆந்திரம் மாநிலம், திருமலை திருப்பதி கோவிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த மல்லிகாவின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவி அறிவித்துள்ளார் முதல்வர் மு.க. ஸ்டாலின். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சேலம் மாவட்டம், மேட்டூர் வட்டம், மேச்சேரி கிராமம், தாசனூரைச் சேர்ந்த மல்லிகா (55) புதன்கிழமை திருமலை திருப்பதி கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய சென்றிருந்தபோது, அங்கு சொர்க்கவாசல் திறப்பிற்காக வழங்கப்பட்ட இலவச தரிசனத்திற்கான நுழைவுச்சீட்டை வாங்கும்போது எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட கூட்ட […]
பெரியாரை பற்றி சர்ச்சை பேச்சு சீமான் பேசியது சரி தான்! ஆதாரம் நான் தருகிறேன்! பாஜக தலைவர் அண்ணாமலை..
பெரியார் பேசியதற்கான ஆதாரத்தை வெளியிடத் தயார் என்று சீமானுக்கு ஆதரவாக அண்ணாமலை தெரிவித்துள்ளார். நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், பெரியார் பற்றி அவதூறாகப் பேசியதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. நேற்று(புதன்கிழமை) செய்தியாளர்களுடன் பேசிய சீமான், பெரியாருக்கும் சமூக சீர்திருத்தத்துக்கும் என்ன சம்மந்தம்? எனப் பேசியிருந்தார். அதைத் தொடர்ந்து இன்று, “பெரியார் என்ன சமூக சீர்திருத்தம் செய்தார்? பெரியாருக்கு கொள்கை என்ற ஒன்றே இல்லை. வள்ளலாரைத்தாண்டி பெரியார் என்ன சமூக சீர்திருத்தம் செய்துவிட்டார்?” என்று மீண்டும் […]
இந்தியாவின் செல்வாக்கு மிக்க 100 முஸ்லிம்கள் பட்டியலில் ;பேராசிரியர் KM காதர் மொகிதீன் இடம் பெற்றுள்ளார்..
இந்தியாவின் செல்வாக்கு மிக்க 100 முஸ்லிம்கள் பட்டியலில் ;பேராசிரியர் KM காதர் மொகிதீன் இடம் பெற்றுள்ளார்.. இந்தியாவில் மிகுந்த செல்வாக்குடைய 100 முஸ்லிம்களைக் கொண்ட 2024ஆம் ஆண்டுக்கான பட்டியலை, சிறுபான்மையினர் ஊடக அறக்கட்டளையும் (Minority Media Foundation) முஸ்லிம் மிரர் செய்தி நிறுவனமும் இணைந்து வெளியிட்டுள்ளன. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் காதர் மொகிதீன் MA Ex MP உள்ளிட்டோர் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். பல்வேறு துறைகளில் அவர்களின் சாதனைகள், தலைமைப் பண்பு, […]
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், பனையூரில் நாளை நடக்கிறது தவெக மாவட்ட பொறுப்பாளர்கள் கூட்டம்!
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான விஜய், தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சியை அண்மையில் தொடங்கினார். இதையடுத்து தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் கடந்த ஆண்டு அக். 27ம் தேதி பிரமாண்டமாக நடந்தது. இந்த மாநாட்டில் லட்சக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்றனர். மாநாட்டில் விஜய்யின் பரபரப்பான பேச்சு தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. மாநாட்டை தொடர்ந்து 2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள தமிழக வெற்றிக்கழகம் […]
பழனியில் பனைத் தொழிலாளர்களுக்கு மதுவிலக்கு போலீசார் ஆலோசனைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது..
பழனியில் பனைத் தொழிலாளர்களுக்கு மதுவிலக்கு போலீசார் ஆலோசனைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.. திண்டுக்கல் மாவட்டம் பழனி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் ஏராளமான விவசாய நிலங்கள் உள்ளன. இவற்றில் காணப்படும் ஆயிரக்கணக்கான பனை மரங்களில் தொழிலாளர்கள் பதநீர் இறக்கும் தொழில் மற்றும் கருப்பட்டி தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுக்கு பழனி மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல்துறை டிஎஸ்பி முருகன் தலைமையில் பதநீர் இறக்கும் தொழிலுக்கு உரிமம் பெறுவதற்கான நடைமுறைகள் உரிமம் பெற்றவர்கள் பின்பற்றும் […]
என்னை நோக்கி செருப்பு வீசினால்; ஏழு அல்லது எட்டு சைஸ் செருப்பாக இருக்க வேண்டும்; இதேபோல் முட்டை வீசினாலும் நாட்டுக்கோழி முட்டையாக வீசுங்க!- சீமான்
புதுச்சேரியில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் கலந்தாய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம், அவரின் பெரியார் பற்றிய கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது பற்றியும், திமுக-வினர் சீமானின் பேச்சுக்கு ஆதாரங்கள் கேட்பது பற்றியும் கேள்விகள் கேட்கப்பட்டன. அதற்கு பதிலளித்து பேசிய சீமான், “பெரியார் குறித்து பேசியதற்கான ஆதாரங்கள் அனைத்தையும் அவர்களே (திமுக) வைத்துக் கொண்டு என்னிடம் கேட்டால் எந்த விதத்தில் நியாயம்? க.ப.அரவாணன் உள்ளிட்ட பல்வேறு […]
தற்குறி சீமானை தமிழக மக்கள் மன்னிக்க மாட்டார்கள்; செல்வப் பெருந்தகை கடும் தாக்கு!
தந்தை பெரியார் குறித்து அவதூறாக பேசிய நாம் தமிழர் கட்சி தலைவர் சீமானுக்கு அரசியல் கட்சி தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள்.இந்நிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, சீமானை தமிழக மக்கள் மன்னிக்க மாட்டார்கள் என கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-தமிழக மக்களுக்கு பகுத்தறிவு, சுயமரியாதை, சமூகநீதி பெற்றுத் தர தனது வாழ்நாள் முழுவதும் ஓய்வறியா உழைப்பை அளித்த தந்தை பெரியாரை, தமிழக […]
பெரியாரை பற்றி சர்ச்சை பேச்சு! சீமான் மீது பல்வேறு இடங்களில் புகார்..
கடலூரில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:- தமிழை சனியன் என்று சொன்ன பெரியார் எந்த மொழியில் எழுதினார். மொழியையே இழிவாக பேசும் போது அப்புறம் என்ன சமூக மாற்றம். சீர்த்திருத்தம், அரசியல் இருக்கிறது. அடிப்படையே தவறாக உள்ளது. கம்பன், இளங்கோவடிகள், திருவள்ளுவரை எதிரி என்றீர்கள். திருப்பி பெரியாரை கொள்கை வழிகாட்டி என்றால், எந்த இடத்தில் கொள்கை வழிகாட்டி. மதுவுக்கு எதிரான போராட்டத்தில்? ஆயிரம் தென்னை மரங்களை பெரியார் வெட்டி சாய்த்தார். […]
கள்ளக்குறிச்சியில் பொங்கல் பரிசு தொகுப்பு. ! மாவட்ட ஆட்சியர் துவக்கி வைப்பு.!!
கள்ளக்குறிச்சியில் பொங்கல் பரிசு தொகுப்பு. ! மாவட்ட ஆட்சியர் துவக்கி வைப்பு.!! *தமிழ்நாடு முதலமைச்சர் மு .க .ஸ்டாலின் பொங்கல் பரிசு தொகுப்பு சென்னையில் வழங்கி தொடங்கி வைத்ததை தொடர்ந்து கள்ளக்குறிச்சியில் பொங்கல் பரிசு தொகுப்பை மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் குடும்ப அட்டைக்காரர்களுக்கு வழங்கினார் கள்ளக்குறிச்சி மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் முருகேசன் உடன் இருந்தார் கள்ளக்குறிச்சி மாவட்ட செய்தியாளர் பாபு
பழனி அருகே இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு தைத்திருநாளை முன்னிட்டு 16 ம் தேதி ஜல்லிக்கட்டு போட்டி! தீவிரமாக நடைபெற்று வரும் ஏற்பாடுகள்..
பழனி அருகே இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு தைத்திருநாளை முன்னிட்டு 16 ம் தேதி ஜல்லிக்கட்டு போட்டி! தீவிரமாக நடைபெற்று வரும் ஏற்பாடுகள்.. திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே பெரிய கலையமுத்தூர் கிராமத்தில் ஹை கோர்ட் பத்ரகாளியம்மன் கோயிலில் தைப்பொங்கலை முன்னிட்டு ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படுகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக கோயிலில் கும்பாபிஷேக பணிகள் நடைபெற்று வந்ததால் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறாமல் இருந்தது. கும்பாபிஷேக பணிகள் நிறைவுற்ற நிலையில் இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டியை விமர்சையாக நடத்துவதற்கு […]
மீண்டும் உச்சம் தொட்ட தங்கம்! இன்றைய நிலவரம் என்ன!
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜன.,09) சவரனுக்கு ரூ.280 உயர்ந்து, ரூ.58,080க்கும், ஒரு கிராம் ரூ.7,260க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச அளவில் நிலவும் பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் காரணமாக ஆபரணத் தங்கத்தின் விலையில் மாற்றம் நிகழ்கிறது. ஜனவரி 1ம் தேதி, ஆண்டின் முதல் நாளில் சவரனுக்கு ரூ.320 உயர்ந்தது. நேற்று (ஜன.,08) சவரனுக்கு 80 ரூபாய் உயர்ந்தது. ஒரு கிராம் தங்கம் ரூ.7,225க்கும், ஒரு சவரன் ரூ.57,800க்கும் […]
பழனி முருகன் கோவிலில் 296 பணியிடங்களுக்கு 1 லட்சம் பேர் விண்ணப்பம்!
பழனி முருகன் கோவிலில் 296 பணியிடங்களுக்கு 1 லட்சம் பேர் விண்ணப்பம்! திண்டுக்கல்,பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் மற்றும் அதன் உபகோவில்கள், கல்வி நிறுவனங்களில் காலியாக உள்ள 296 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு கடந்த மாதம் வெளியிடப்பட்டது. இதனையடுத்து இளைஞர்கள், இளம்பெண்கள் நேரடியாகவும், தபால் மூலமாகவும் விண்ணப்பங்கள அளித்தனர். நேற்று விண்ணப்பிக்க கடைசி நாள் என்பதால் ஏராளமானோர் விண்ணப்பம் செய்தனர். இதுகுறித்து கோவில் அதிகாரிகள் கூறும்போது, இதுவரை சுமார் 1 லட்சம் விண்ணப்பங்கள் வரப்பெற்றுள்ளன என்றனர்.
You must be logged in to post a comment.