ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை புதிய கட்டடத்தில் நள்ளிரவில் மின் கசிவு ஏற்பட்டதால் 2வது மாடியில் தீ விபத்து ஏற்பட்டது. உடனடியாக மின்சாரம் துண்டிக்கப்பட்டு நோயாளிகள் அனைவரையும் பாதுகாப்பாக முதல் தளத்திற்கு ஊழியர்கள் அழைத்து வந்தனர்.இதன்படி 380க்கும் மேற்பட்ட நோயாளிகள் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டனர். ஐந்து தளங்களைக் கொண்ட மருத்துவமனையில் இரண்டாவது தளத்தில் உள்ள இன்வெர்ட்டர் அறையில் நேற்றிரவு 11.20 மணியளவில் திடீரென மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த மருத்துவமனை […]
Category: செய்திகள்
திருச்சியில் தொழிலதிபர் வீட்டில் நகை பணம் கொள்ளை.! போலீஸ் விசாரணை .!!
தஞ்சை மாவட்டம், ஒரத்தநாடு பகுதியைச் சோ்ந்தவா் சண்முகம் (65). தொழிலதிபா் மற்றும் ஒப்பந்ததாரரான இவா் திருச்சி, பொன் நகா் 2ஆவது பிரதான சாலையில் உள்ள வீட்டில் வசிக்கிறாா். இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன் ஒரத்தநாட்டில் உறவினரின் துக்க நிகழ்வுக்கு குடும்பத்துடன் சென்ற சண்முகம் புதன்கிழமை காலை திரும்பினாா். அப்போது வீட்டின் காவலாளி முருகேசனை மா்ம நபா்கள் செவ்வாய்க்கிழமை இரவு தாக்கி கட்டிப்போட்டு விட்டு வீட்டில் இருந்த நகை, பணத்தை கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து அவா்கள் […]
ஸ்ரீரங்கம் சொர்க்கவாசல் திறப்பு வரும் 10ம் தேதி திருச்சிக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு.!
திருச்சி ஸ்ரீரங்கத்தில் வைகுண்ட ஏகாதசி பெருவிழா நடந்து கொண்டிருக்கிறது இதன் தொடர்ச்சியாக வருகிற பத்தாம் தேதி சொர்க்கவாசல் திறப்பு நடைபெற இருக்கிறது. 21 நாட்கள் நடைபெறும் வைகுண்ட ஏகாதசி திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பரமபத வாசல் (சொர்க்க வாசல்) வருகின்ற ஜனவரி 10 ஆம் தேதி அதிகாலை 5.15 மணிக்கு திறக்கப்பட உள்ளது. இதையொட்டி, ஸ்ரீரங்கத்துக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் வைகுண்ட ஏகாதசி விழாவிற்கு போதுமான பாதுகாப்பு அளிப்பதற்காக உள்ளுர் மற்றும் […]
திருச்சி பஞ்சப்பூர் புதிய பேருந்து நிலையத்தில் ஆறு நகரும் படிக்கட்டுகள் ஆறு மின் தூக்கிகளும் இணைக்கப்படுகின்றன ஆட்சியர் ஆய்வு.!
தமிழகத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க அரசு அமைந்த பிறகு மீண்டும் திருச்சி மாவட்டம் பஞ்சப்பூரில் ஒருங்கிணைந்த பேருந்து முனையம் அமைக்க அனுமதியளிக்கப்பட்டு, கடந்தாண்டு செப்டம்பர் முதல் பணிகள் தொடங்கின. தற்போது, கட்டுமானப் பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன. இந்நிலையில், கட்டுமானப் பணிகளை ஆட்சியர் மா.பிரதீப்குமார், மாநகராட்சி ஆணையர் வே. சரவணன், கோட்டாட்சியர் கே. அருள், நகரப் பொறியாளர் சிவபாதம் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள், மாநகராட்சி அலுவலர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். ஆய்விற்குப் பின் […]
கன்னியாகுமரி, அரூர், பெருந்துறை உள்ளிட்ட 13 புதிய நகராட்சிகளை உருவாக்க தமிழக அரசு அரசாணை வெளியீடு..
கன்னியாகுமரி, அரூர், பெருந்துறை உள்ளிட்ட 13 புதிய நகராட்சிகளை உருவாக்க தமிழக அரசு அரசாணை வெளியீடு. தமிழகத்தில் 16 மாநகராட்சிகளுடன் 158 நகா்ப்புற மற்றும் ஊரகப் பகுதிகளை இணைக்க மாநில அரசு உத்தேசமாக முடிவு செய்துள்ளது. இதற்கான உத்தரவுகளை நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து அந்தத் துறையின் சாா்பில் புதன்கிழமை வெளியிடப்பட்ட செய்தி: தமிழகத்தில் கடந்த 2021-ஆம் ஆண்டு ஆறு புதிய மாநகராட்சிகள் மற்றும் 28 நகராட்சிகள் உருவாக்கப்பட்டன. கடந்த ஆகஸ்ட் […]
ராமநாதபுரம் அருகே பயங்கர விபத்து! லாரி மீது மோதிய ஆம்புலன்ஸ்! மூன்று பேர் பரிதாபமாக உயிரிழப்பு..
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அடுத்த மரைக்காயர் பட்டினத்தைச் சேர்ந்தவர் வரிசை கனி (65). உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்ட அவரை தனியார் ஆம்புலன்ஸ் மூலம் ராமநாதபுரத்தில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அப்போது அவருடன் மகள் அனீஸ் பாத்திமா (40), மருமகன் சகுபர் சாதிக் (47), ஹர்ஷத் (45), கதீஜா ராணி (40), ஆயிஷா பேகம் (35) ஆகியோர் இருந்துள்ளனர். அப்போது மதுரை – ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலை வாலாந்தரவை அருகே ஆம்புலன்ஸ் அதிவேகமாக சென்று கொண்டிருந்தது. அந்நேரத்தில் […]
பெங்களூர் கார்மேலாராம் ரெயில் நிலையத்தில் நிற்காமல் செல்லும் ரெயில்கள் .! தவிக்கும் தமிழ்நாடு பயணிகள் .!!
நாகர்கோவில் பெங்களூர் ரயிலை குறிப்பிட்ட நிறுத்தத்தில் நிறுத்தாமல் ரத்து செய்துவிட்டனார் இதனால் பெங்களூர் தமிழ்நாடு தென் மாவட்ட பயணிகள் அவதி அடைந்து வருகின்றனர் பெங்களூர் கார்மேலராம் ரயில்வே நிலையம் அருகே ஐ.டி கம்பெனிகள் தனியார் நிறுவனங்கள் ஸ்கூல் வணிக நிறுவனங்கள் என ஏராளமான தனியார் துறை அரசு அலுவலகங்கள் இயங்கி வருகின்றன இப்பகுதியில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பொதுமக்கள் வசித்து வருகின்றனர் அதேபோல் அண்டை மாநிலமான தமிழகத்திலிருந்து படித்த பல்வேறு நபர்கள் இங்கு உள்ள தனியார் நிறுவனங்களில் […]
நேர்மையுடன் செயல்பட்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்த சலவை தொழிலாளி..
பொட்டல்புதூர் பகுதியில் சலவை தொழிலாளி ஒருவர் தனது நேர்மையான செயற்பாட்டால் அனைத்து சமுதாய மக்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். தென்காசி மாவட்டம் கடையம் அருகில் உள்ள ஊர் பொட்டல் புதூர் பகுதியை சேர்ந்த சலவை தொழிலாளி குமார். தினமும் ஊர் மக்களின் துணியினை சலவை செய்து இஸ்திரி போட்டுக் கொடுக்கும் பணியினை செய்து வருகிறார். இந்த நிலையில், அருகில் உள்ள வெங்காடம் பட்டியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் பூ.திருமாறன் பெரிய தொகையை தவறுதலாக பேண்ட் பாக்கெட்டில் வைத்து அதனை […]
சாலை விதிகளை மதிக்கும் நாணயமானவர்களுக்கு நாணயம் பரிசு .!
தஞ்சையில் ஹெல்மெட் அணிந்து இருசக்கர வாகனத்தில் வந்தவர்களுக்கு 1 கிராம் தங்க நாணயம் பரிசு விபத்தில்லா 2025ம் ஆண்டை அனுசரிக்க வலியுறுத்தி ஜோதி அறக்கட்டளை சார்பில் ஏற்பாடு இருசக்கர வாகனம் இயக்கும்போது தலைக்கவசம் அணியாமல் செல்வதால் ஏற்படும் விபத்துகள் குறித்தும் , அணிந்து செல்வதால் உள்ள நன்மைகள், உயிர் பாதுகாப்பு குறித்தும் தஞ்சை ஜோதி அறக்கட்டளை சார்பில் தஞ்சை மாவட்ட காவல்துறையுடன் இணைந்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தி வருகிறது . அதன் ஒரு பகுதியாக பிறந்திருக்கும் 2025 […]
உசிலம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் சுற்று சுவர் கட்ட பூமி பூஜை நடைபெற்று.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் உள்ள விளையாட்டு மைதானத்தில் சுற்று சுவர் கட்ட பூமி பூஜையில் உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் பி அய்யப்பன் கலந்து கொண்டார்.உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் பி அய்யப்பன் எம் எல் ஏ தொகுதி நிதியில் இருந்து ரூபாய் 10 லட்சம் ஒதுக்கீடு செய்து அரசு மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் பராமரிப்பு செய்ய விளையாட்டு மைதானத்தில் சுற்றி சுவர் கட்ட பூமி பூஜையில் பி அய்யப்பன் எம் எல் ஏ தலைமையில் பள்ளி […]
கீழக்கரையில் புகாரி ஷரிப் 10 ம் ஆண்டு நிறைவு விழா.! உலக நன்மைக்காக இறைவனிடம் கண்ணீர் மல்க கூட்டுப் பிரார்த்தனை செய்த இஸ்லாமியர்கள் ..!!
இராமாநாதபுரம் மாவட்டம் கீழக்கரை பழைய குஃத்பா பள்ளிவாசலில் புகாரி ஷாரிப் பத்தாம் ஆண்டு நிறைவு விழா பழைய குஃத்பா பள்ளி ஜமாத் தலைவர் ஹாஜா ஜலாலுதீன் , செயலாளர் சப்ராஸ் நவாஸ் , பொருளாளர் சுல்தான் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. கீழக்கரை அனைத்து ஜமாத்தார்கள் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். முகமது சதக்கத்துல்லா ஆலின் கிராத் ஓதி துவங்கி வைத்தார் . கீழக்கரை புகாரி ஷெரிஃப் டிரஸ்ட் அல்ஹாஜ் பி எஸ் எம் ஹபிபுல்லா கான் […]
தஞ்சையில் சத்யா நடைபயிற்சி சங்கத்தின் சார்பில் புத்தாண்டு கொண்டாட்டம்.
தஞ்சாவூர் சத்யா நடை பயிற்சி சங்கத்தின் சார்பில் புத்தாண்டு கொண்டாட்டம் மிக கோலாகலமாக கொண்டாடப்பட்டது.,இதில் 200க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் கலந்து கொண்டு கேக் வெட்டி மகிழ்ச்சியுடன் புத்தாண்டு வாழ்த்துக்களை ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொண்டனர்.சங்கத்தின் நோக்கம் சங்க உறுப்பினர்கள் தினம் தோறும் நடைப்பயிற்சி மற்றும் உடற்பயிற்சி தொடர்ந்து செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.சத்யா நடை பயிற்சி சங்கத்தின் செயலாளர் ஜெயக்குமார் வருகை தந்த அனைவருக்கும் நன்றி கூறினார்.
கருப்பாநதி அணையில் இருந்து பிசான பருவ சாகுபடிக்கு தண்ணீர் திறப்பு; விவசாயிகள் மகிழ்ச்சி..
கருப்பாநதி நீர்த்தேக்கத்தில் இருந்து பிசான பருவ சாகுபடிக்கு தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவரால் தண்ணீர் திறந்து விடப்பட்டது. விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தமிழக முதல்வர் ஆணையின் படி தென்காசி மாவட்டம் கடையநல்லூர் வட்டம் கருப்பாநதி நீர்த்தேக்கத்தில் இருந்து பசலி பிசான பருவ சாகுபடிக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் 31.12.2024 அன்று தண்ணீர் திறந்து வைத்தார். கருப்பாநதி பாசன திட்டத்தின் கீழுள்ள பெருங்கால், பாப்பான்கால், சீவலன் கால், இடைகால், கிளாங்காடு, ஊர்மேல் அழகியான் ஆகிய கால்வாய்களின் கீழ் […]
கீழக்கரை-இராமநாதபுரம் நெடுஞ்சாலையின் அவலத்தை தீர்க்க 11/01/2025 அன்று ஜனநாயக வழி நடைபயணம்..
கீழக்கரை – இராமநாதபுரம் நெடுஞ்சாலை கடற்கரையோர முக்கிய ஊர்களை இணைக்கும் நெடுஞ்சாலை ஆகும். இச்சாலையில் தினமும் உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்தும் நூற்றுகணக்கான வாகனங்கள் கடந்து செல்கின்றன. ஆனால் சரியான பராமரிப்பு இல்லாமை மற்றும் சமீபத்தில் பெய்த கடும் மழையாலும் நெடுஞ்சாலை குண்டும், குளியுமாக மாறி பல விபத்துக்களுக்கு காரணமாகி வருகிறது. இது சம்பந்தமாக அதிகாரிகளிடம் கீழக்கரையில் உள்ள பல்வேறு அமைப்புகள் புகார் அளித்தும் எந்த வகையான தீர்வும் கிடைக்கவில்லை. சமீபத்தில் கீழக்கரையில் நடைபெற்ற நிகழ்வுகளுக்கு அமைச்சர்கள் […]
பரமக்குடியில் தேசிய நுகர்வோர் தின விழா.!
இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் தேசிய நுகர்வோர் தின விழாவை முன்னிட்டு பரமக்குடி நுகர்வோர் உரிமை பாதுகாப்பு கழகம் பரமக்குடி அரசு கலைக் கல்லூரி மற்றும் குடிமக்கள் நுகர்வோர் மன்றம் இணைந்து இன்றைய தினம் காலை 10 மணிக்கு கல்லூரி கலை அரங்கில் விழா நடைபெற்றது. விழாவிற்கு கல்லூரி முதல்வர் சிவகுமார் தலைமை தாங்கி நடத்தினார். குடிமக்கள் நுகர்வோர் மன்றத்தின் ஒருங்கிணைப்பாளர் விஜயகுமார் வரவேற்று பேசினார்கள். நிகழ்ச்சியில் பரமகுடி நுகர்வோர் சங்கத்தின் தலைவர் கே.ஜே மாதவன் செயலாளர் ராஜேந்திரன் முன்னிலை […]
இராமநாதபுரத்தில் அய்யன் திருவள்ளுவர் மாதிரி சிலைக்கு மாவட்ட ஆட்சியர் மரியாதை..
கன்னியாகுமரியில் அய்யன் திருவள்ளுவரின் 133 அடி உயர உருவச்சிலை நிறுவியதன் வெள்ளி விழா தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கன்னியாகுமரியில் நடைபெற்றது. இதை தொடர்ந்து 133 அடி உயர மாதிரி அய்யன் திருவள்ளுவரின் சிலை அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள அய்யன் திருவள்ளுவர் மாதிரி சிலைக்கு மாவட்ட ஆட்சியர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் மாலை அணிவித்து […]
இராமநாதபுரத்தில் தடையை மீறி அதிமுக ஆர்ப்பாட்டம் : 15 பெண்கள் உள்பட 240 பேர் மீது வழக்கு..
அண்ணா பல்கலை மாணவி பாலியல் தொல்லை விவகாரம் தொடர்பாக நீதி கோரி ராமநாதபுரத்தில் தடையை மீறி அதிமுக சார்பில் நேற்று (டிச.30) காலை ஆர்ப்பாட்டம் நடந்தது. ராமநாதபுரம் மாவட்ட அதிமுக செயலாளர் எம் ஏ முனியசாமி தலைமை வகித்தார். அதிமுக மகளிரணி இணை செயலாளர் கீர்த்திகா முனியசாமி முன்னிலை வகித்தார். முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா தலைமையில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. மாவட்ட இணைச் செயலாளர் கவிதா சசிகுமார், மாநிலங்களவை முன்னாள் உறுப்பினர் நிறைகுலத்தான், முன்னாள் மாவட்ட செயலாளர்கள் […]
பதவிக்காலத்தை மேலும் 2 ஆண்டு நீட்டிக்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் ஊராட்சித் தலைவர்கள் மனு..
இராமநாதபுரம் மாவட்டத்தில் மண்டபம், ராமநாதபுரம், திருப்புல்லாணி, கடலாடி, கமுதி, முதுகுளத்தூர், நயினார்கோவில், பரமக்குடி, போகலூர், ஆர் எஸ் மங்கலம், திருவாடானை என 11 ஊராட்சி ஒன்றியங்கள், 429 ஊராட்சிகள் உள்ளன. இந்த உள்ளாட்சி அமைப்பு தேர்தலில் வென்று ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர், ஒன்றிய கவுன்சிலர்கள், மாவட்ட கவுன்சிலர்கள், ஊராட்சித் தலைவர்கள், வார்டு உறுப்பினர்களின் கடந்த 5 ஆண்டு கால பதவிக்காலம் ஜன.5 ல் நிறைவடைகிறது. இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்ட ஊராட்சித் தலைவர்கள் கூட்டமைப்பு […]
விக்கிரமங்கலம்அருகே மழையால் நெற்பயிர்கள் சேதம்
விக்கிரமங்கலம் அருகே புயல் மழையால் நூற்றுக்கும் மேற்பட்ட ஏக்கர் நெற்கதிர்கள் சேதம்ம.மதுரை விக்கிரமங்கலம் அடுத்துள்ள அய்யனார்குளம் ஊராட்சிக்கு உட்பட்ட ஏ ஆண்டிபட்டி கிராமத்தில் திருமங்கலம் பாசன கால்வாய் 98-வது மடையில் சுமார் 250 ஏக்கர் நெல் விவசாயம் செய்து உள்ளனர் இதில்150 ஏக்கருக்கு மேல் நெல்விளைச்சல் ஆகும் முன்பு தற்போது வீசிய புயல் சூறாவளி காற்று மழையால் நெற்கதிர் பால் பிடிக்காமல் வயலில் சாய்ந்து விட்டது இதனால் விவசாயிகளுக்கு பெருத்த நஷ்டம் ஏற்படுத்தி உள்ளது,இப்பகுதி விவசாயிகள் கூறும் […]
தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் உரத்த சிந்தனை -பாரதி உலா 2024..
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த செ.நாச்சி பட்டு கிராமத்தில் ஸ்ரீ சக்தி பாலிடெக்னிக் கல்லூரியில் உரத்த சிந்தனை 10ம் ஆண்டு பாரதி உலா 2024 நிகழ்வு கல்லூரி தாளாளர் அக்ரி. எஸ் .வெங்கடசலபதி தலைமையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. கல்லூரி இயக்குனர் ரேகா ரெட்டி, உரத்த சிந்தனை பொது செயலாளர் உதயம் ராம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியின் முன்னதாக கல்லூரி முதல்வர் செந்தில் முருகன் அனைவரையும் வரவேற்று பேசினார். கல்லூரி மாணவர்கள் மற்றும் மாணவர்களின் பேச்சரங்கம் […]
You must be logged in to post a comment.