மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே வாடிப்பட்டி ஒன்றியம் மேலக்கால் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் கீழ மட்டையான் கிராமத்தில் நடைபெற்றது கிராம சபை கூட்டத்தில் துப்புரவு பணியாளர்களுக்கு தமிழக அரசு அறிவித்துள்ள திட்டங்களுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் கிராம சபை கூட்டங்கள் நடைபெற்று பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்ட நிலையில் மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஒன்றியம் மேலக்கால் ஊராட்சிக்கு உட்பட்ட கிராம சபை கூட்டம் கீழ மட்டையான் கிராமத்தில் நடைபெற்றது […]
Category: செய்திகள்
உசிலம்பட்டி காங்கிரஸ் கட்சி சார்பில் 79 வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் காங்கிரஸ் கட்சி சார்பாக மதுரை ரோட்டில் உள்ள அரசு போக்குவரத்து பணிமனை முன்பாக சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. உசிலம்பட்டி அரசு போக்குவரத்து பணிமனை முன்பாக காங்கிரஸ் கட்சியினர் 79 வது சுதந்திர தினம் விழாவில் காங்கிரஸ் மாநில பொதுக்குழு உறுப்பினர் டி. சரவணகுமார் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். இந்திய தேசிய தொழிலாளர்கள் யூனியன் காங்கிரஸ் தொழிற்சங்க பலகையை திறந்து வைத்தனர். மாநில பொதுக்குழு உறுப்பினர் எம் மகேந்திரன் தலைமை வைத்தார். […]
சோழவந்தான் எம் வி எம் கலைவாணி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் சுதந்திர தின விழா கொண்டாட்டம். கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
மதுரை மாவட்டம் சோழவந்தான் எம் வி எம் கலைவாணி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் இந்தியாவின் 79வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது பள்ளி தாளாளர் எம் வி எம் மருதுபாண்டியன் தேசியக் கொடியினை ஏற்றி வைத்து பள்ளி மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கி சிறப்புரை ஆற்றினார். பள்ளி நிர்வாகி எம் வள்ளிமயில் எம் வி எம் குழும தலைவர் மணி முத்தையா தலைமை தாங்கி தேசிய தலைவர்களின் சிலைகளுக்கு மாலை அணிவித்தனர். பள்ளி முதல்வர் தீபா ராகினி வரவேற்றார். […]
கீழக்கரை வடக்குத்தெரு சமூக நல தர்ம அறக்கட்டளை (NASA) சார்பாக சுதந்திர தின நிகழ்வு..
வடக்குத்தெரு சமூக நல தர்ம அறக்கட்டளை – நாசா வின் சார்பாக இந்திய நாட்டின் 79 வது சுதந்திர தின கொடியேற்ற நிகழ்ச்சி இன்று காலை 8 மணியளவில் கீழக்கரை வடக்குத்தெருவில் உள்ள நாசா அலுவலகம் அருகில் நடைபெற்றது. இந்நிகழ்வுக்கு அரசு மருத்துவர் ஜவாஹிர் ஹுசைன் அவர்கள் கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றிவைத்து, மக்களுக்கு சுதந்திர தின உரை நிகழ்த்தினார். நாட்டு மக்கள் அனைவரும் ஒற்றுமை மற்றும் சகோதரத்துவ அன்புடன் வாழ வேண்டும், பிரிவினைவாத கருத்துக்கு […]
உசிலம்பட்டி அருகே தண்ணீர் வரி கட்டியவர்களுக்கே 100 நாள் வேலைத்திட்டம் கொடுக்கப்படும் என கிளர்க் மிரட்டுவதாக கிராம மக்கள் குற்றம் சாட்டினர்
மதுரை மாவட்;டம் உசிலம்பட்டி அருகே கீரிபட்டி கிராமம்.இக்கிராமத்தில் 1000க்கும் மேற்ப்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.இக்கிராம தற்காலிக எழுத்தராக (கிளர்க்) சுகந்தி என்பவர் பணியாற்றி வருகின்றார்.இவர் இக்கிராம மக்களிடம் 100 வேலைத்திட்டம் வேண்டுமென்றால் தண்ணீர் வரி கட்டவேண்டுமென்றும் அவ்வாறு ரூ.200 கட்டுபவர்களுக்கே 100 நாள் வேலைத்திட்டத்தில் வாய்ப்பு வழங்கப்படும் என கட்டாயப்படுத்தி பணம் வசூல் செய்வதாகக் கூறப்படுகின்றது.இது தொடர்பாக சிலர் கிளர்க்கை அலுவலகத்தில் முற்றுகையிடடு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.பின்னர் கலைந்து சென்றனர்.இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்ப்பட்டது.இதுகுறித்து பாண்டியன் என்பவர் கூறுகையில் […]
நீக்கப்பட்ட 65 லட்சம் வாக்காளர் விவரங்களை வெளியிடுக: தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
பிகாரில் சிறப்பு திருத்த முறையால் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்ட 65 லட்சம் வாக்காளர்களின் விவரங்களை, காரணங்களுடன் மாவட்ட தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் வெளியிடுமாறு தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட 65 லட்சம் வாக்காளர்களின் அடையாளத்தை ஆகஸ்ட் 19 ஆம் தேதிக்குள் வெளியிட வேண்டும் என்றும், ஆகஸ்ட் 22 ஆம் தேதிக்குள் அது தொடர்பான அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் தேர்தல் ஆணையத்திடம் உச்ச நீதிமன்றம் வலியுறுத்தியிருக்கிறது. பிகாரில் சிறப்புத் […]
பேருந்து வராததை கண்டித்து பொதுமக்கள் தர்ணா
தாராபட்டி கிராமத்திற்கு முறையாக பேருந்து வராததை கண்டித்து பொதுமக்கள் தர்ணா மதுரை மாவட்டம் கொடிமங்கலம் ஊராட்சி தாராபட்டி கிராமத்திற்கு முறையாக பேருந்து வராததை கண்டித்து பொதுமக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர் கொடிமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட தாராப்பட்டி கிராமத்தில் 26 எச் என்ற அரசு பேருந்து தினசரி ஒன்பது முறை காலை 6:30 ஏழு முப்பது எட்டு முப்பது பத்து முப்பது நண்பர்கள் ஒரு மணி மாலை 4 மணி இரவு 8 மணி இரவு 10 மணி […]
2026 சட்டமன்றத் தேர்தலில் சோழவந்தான் தொகுதியில் புதிய தமிழகம் கட்சி போட்டியிட்டு நிச்சயம் வெற்றி பெறும்டாக்டர் கிருஷ்ணசாமி அதிரடி பேட்டி
மதுரை அலங்காநல்லூர் ஒன்றிய பகுதிகளில் கிராமம் கிராமமாக சுற்றுப்பயணம் மேற்கொண்ட புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கட்சி கொடிகளை ஏற்றி வைத்து பொதுமக்களை சந்தித்து தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது: சென்னையில் போரட்டத்தில் ஈடுபட்டு வருபவர்கள் 15 ஆண்டு காலம் ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்தவர்கள் , அவர்கள் வேறு நிறுவனத்தின் கீழ் பணிபுரியும் போது புதிய பணியாளர்களாகவே கணக்கில் கொள்ளப்படும் சம்பளம் குறைந்துவிடும். அதனால்தான் அவர்களது அடிப்படை உரிமைகளை கேட்டு […]
சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவிலில் நடிகர் ரஜினிகாந்த் திரைப்படத்துறையில் 50 ஆண்டுகள் நிறைவு செய்ததையொட்டி சிறப்பு வழிபாடு இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருள்மிகு ஸ்ரீ ஜெனகை மாரியம்மன் கோவிலில் நடிகர் ரஜினிகாந்த் திரைத்துறையில் 50 ஆண்டுகள் நிறைவு செய்ததை முன்னிட்டும் உலகம் முழுவதும் ரஜினிகாந்த் நடித்த கூலி திரைப்படம் வெளியாவதை யொட்டியும் அவரது ரசிகர்கள் சிறப்பு வழிபாடு செய்து இனிப்பு வழங்கி கொண்டாடினர். வாடிப்பட்டி ஒன்றிய செயலாளர் வி. முத்து தலைமையில் நடைபெற்றது. திருவேடகம் கிரி முன்னிலை வகித்தார். நிர்வாகிகள் ராஜா, , மீனு ஆனந்த் முருகன் ,கருப்பட்டி கண்ணன் விரும்பி, திலீப் பண்ணை செல்வம், […]
கமுதியில் லஞ்சம் வாங்கிய விஏஓ ப்ரோக்கர் கைது.!
கமுதியில் லஞ்சம் கேட்ட VAO, ரசாயனம் தடவிய ரூ.4,000-உடன் கையும் களவுமாக சிக்கினார்! இராமநாதபுரம்: வாரிசு சான்றிதழ் பெற ஆன்லைனில் விண்ணப்பித்த ஒருவரிடம், கமுதி தாலுகா தவசிக்குறிச்சி VAO பிரேமானந்தன் ரூ.4,000 லஞ்சம் கேட்டதாக புகார் எழுந்தது. லஞ்சம் கொடுக்க விரும்பாத அவர், நேராக இராமநாதபுரம் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசை அணுகினார். போலீசார் ரசாயனம் தடவிய ரூ.4,000-ஐ ஏற்பாடு செய்தனர். VAO-வின் உத்தரவுப்படி, அந்த பணத்தை கமுதியை சேர்ந்த S.P. டிரேடர்ஸ் உரிமையாளர் […]
ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் முளைக்கொட்டு உற்சவம் விழா.!
ராமநாதபுரம் மாவட்டம் தெற்கு காட்டூரில் முத்துமாரியம்மன் முளைக்கொட்டு உற்சவம் ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஒன்றியத்துக்கு உட்பட்ட தெற்கு காட்டூர் கிராமத்தில் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் முளைக்கொட்டு உற்சவம் சிறப்பாக நடைபெற்றது. கடந்த 5-ம் தேதி முத்து பரப்புடன் தொடங்கிய விழா ஏழு நாட்கள் பால், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள் உள்ளிட்ட 11 வகை அபிஷேகங்களுடன் நடைபெற்றது. இரவு கும்மியாட்டம், ஒயிலாட்டம் போன்ற கலை நிகழ்ச்சிகள் மக்களை மகிழ்வித்தன. செவ்வாய்க்கிழமை வழுதூரில் இருந்து கரக ஊர்வலம் கொண்டு […]
மாற்றுத்திறன் படைத்தோரை மகிழ்வித்த வனத்துறை..
பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளை அருவியில் குளிக்க செய்து மகிழ்வித்த தென்காசி மாவட்ட வனத்துறையை பொது மக்கள் பாராட்டினர். தென்காசி மாவட்டம் பொதிகை மலையின் வனப் பகுதிகள் மட்டுமின்றி மிகச்சிறந்த சுற்றுலா பகுதியாக விளங்கும் குற்றால அருவிகளையும் உள்ளடக்கியது ஆகும். இந்த அருவிகளில் நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை பகுதியில் இருந்து பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் குளிப்பதற்கு வந்திருந்தனர். இதனை அறிந்த மாவட்ட வன அலுவலர் அகில் தம்பி மற்றும் உதவி வன பாதுகாவலர் நெல்லை நாயகம் மற்றும் […]
சோழவந்தானில் கால்வாயில் உடைப்பு ஏற்பட்டு வயல்களில் புகுந்த தண்ணீரால் நெற்பயிர்கள் நீரில் மூழ்கிசேதம்
மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழை காரணமாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் விவசாய நிலங்களுக்குள் தண்ணீர் புகுந்து நெல் பயிர்கள் அழுகும் நிலைக்கு சென்றுள்ளது மதுரை மாவட்டம் சோழவந்தான் பசும்ப நகர் மீனாட்சி நகர் ஆலங்கொட்டாரம் ஆகிய பகுதிகளில் மழை நீர் வடிகால் வசதி செய்யாத நிலையில் கால்வாயில் உடைப்பு ஏற்பட்டு வயல்களுக்குள் தண்ணீர் புகுந்ததால் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கி அழுகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது […]
சோழவந்தான் பேருந்து நிலையத்தை புறக்கணிக்கும் பேருந்துகளால் பயணிகள் பொதுமக்கள் கடும் அவதி
மதுரை மாவட்டம் செக்கானூரணி பணிமனையில் இருந்து இயக்கப்படும் நிலக்கோட்டை அரசு ஆதிதிராவிடர் மகளிர் கல்லூரி செல்லும் பேருந்து நிலக்கோட்டையில் இருந்து வரும் பொழுது தென்கரை பாலத்தில் இருந்து சோழவந்தான் பேருந்து நிலையத்திற்குள் வராமல் நேரடியாக மாரியம்மன் கோவில் வழியாக திருமங்கலம் செல்வதால் இந்த பேருந்துக்காக சோழவந்தான் பேருந்து நிலையத்தில் காத்திருக்கும் பயணிகளின் நிலை கேள்விக்குறியாகி உள்ளது இதனால் சோழவந்தான் பேருந்து நிலையம் மற்றும் வட்ட பிள்ளையார் கோவில் பேருந்து நிறுத்த பகுதியில் காத்திருக்கும் பயணிகள் வெகு நேரமாக […]
ம.சு.பல்கலை கழக விழாவில் ஆளுநரிடம் பட்டம் பெறாத மாணவி..
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில், ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் பட்டம் பெறுவதை தவிர்த்து துணை வேந்தரிடம் மாணவி பட்டம் பெற்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மனோன் மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தின் 32-வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. முதுகலை, முனைவர் பட்டங்களைப் பெறும் 650-க்கும் மேற்பட்டோர் பட்டமளிப்பு விழா அரங்கில் அனுமதிக்கப் பட்டிருந்தனர். தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்குப் பட்டங்களை வழங்கினார். இந்நிலையில் ஜீன் […]
உசிலம்பட்டி அருகே 20க்கும் மேற்பட்ட மாவட்டச் செயலாளர்கள்உடன் தவெக பொதுச் செயலாளர் ஆலோசனை
உசிலம்பட்டியில் உள்ள தனியார் மண்டபத்தில் மதுரையில் நடைபெறும் தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாவது மாநாடு குறித்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஆனந்த் – 20 க்கும் மேற்பட்ட மாவட்ட செயலாளர்கள், மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்., மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே மெய்யணம்பட்டியில் உள்ள தனியார் மண்டபத்தில் தமிழக வெற்றி கழகத்தின் 2 வது மாநில மாநாடு வரும் 21 ஆம் தேதி மதுரையில் நடைபெற உள்ளது குறித்து மதுரை புறநகர் மேற்கு மாவட்ட நிர்வாகிகளுடனான ஆலோசனை […]
புதிய வருவாய் கோட்டாட்சியர் பொறுப்பேற்பு..
தென்காசி மாவட்டத்தில் புதிய வருவாய் கோட்டாட்சியராக வைஷ்ணவி பால் ஐஏஎஸ் பொறுப் பேற்று கொண்டார். முன்னதாக தென்காசி மாவட்ட வருவாய் கோட்டாட்சியராக பணியாற்றி வந்த லாவண்யா அரசால் பணியிட மாற்றம் செய்யப்பட்ட நிலையில், தென்காசி புதிய வருவாய் கோட்டாட்சியராக வைஷ்ணவி பால் ஐஏஎஸ் நேரடியாக பணி நியமனம் செய்யப்பட்டார். இந்நிலையில், தென்காசி உட்கோட்ட நிர்வாக நீதிபதி மற்றும் வருவாய் கோட்டாட்சியராக வைஷ்ணவி பால் ஐஏஎஸ் 11.08.2025 அன்று பொறுப் பேற்றுக் கொண்டார். புதிய கோட்டாட்சியருக்கு அரசு அலுவலர்கள் […]
தினசரி, வாரச் சந்தை அடிக்கல் நாட்டு விழா
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் சிறப்பு நிலை பேரூராட்சியில் 2.25 கோடி மதிப்பீட்டில் தினசரி வாரச்சந்தை அடிக்கல் நாட்டு விழா சங்கராபுரம் சட்டமன்ற உறுப்பினர் உதயசூரியன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் எம் எம்.எஸ்.பிரசாந்த் முன்னிலையில் பூமி பூஜை நடைபெற்றது. பேரூராட்சி தலைவர் லாவண்யா ஜெய்கணேஷ் வரவேற்புரை நிகழ்த்தினார். இவ்விழாவில் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் அரசு , காந்தி , வீராசாமி , சாரங்கன் , ஹபீபா சிராஜ்தீன் ,மகாலட்சுமி பாண்டியன், அன்னபூரணி நாகராஜன், பத்மாவதி சிவகுமார், சிவசக்தி […]
மண்ணுக்கும் மக்களுக்கும் ஒன்பதாம் ஆண்டு விழாவை முன்னிட்டு மரக்கன்று வழங்கினர்
உசிலம்பட்டி அருகே பிரபல நடிகர் சௌந்திரராஜா வின் மண்ணுக்கும் மக்களுக்கும் அறக்கட்டளையின் 9ஆவது ஆண்டை முன்னிட்டு அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கு மரங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி 100 க்கும் அதிகமான மரக்கன்றுகள் வழங்கி ஊக்கப்படுத்திய சம்பவம் பலரின் பாராட்டுகளைப் பெற்றது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டியைச் சேர்ந்தவர் நடிகர் சௌந்திரராஜா, சசிக்குமாரின் சுந்தரபாண்டியன் திரைப்படம் மூலம் அறிமுகமாகி விஜய், கார்த்தி உள்ளிட்ட பல்வேறு முன்னணி நடிகர்களுடன் துணை நடிகராகவும், வில்லன் கதாப்பாத்திரங்களிலும் நடித்து பிரபலமான இவர்., நடிகர் […]
வேடசந்தூர் அருகே பெண்ணிடம் அரிவாள் கத்தியை உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களை காட்டி மிரட்டி செயின், தோடு பறிப்பு..
வேடசந்தூர் அருகே பெண்ணிடம் அரிவாள் கத்தியை உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களை காட்டி மிரட்டி செயின், தோடு பறிப்பு. திண்டுக்கல் வேடசந்தூர் அருகே நாகம்பட்டியில் தோட்டத்து வீட்டில் குடியிருக்கும் பாண்டியம்மாள்(43) இவரின் கணவர் ஆண்டிவேல் வேலை காரணமாக கோயம்புத்தூர் சென்றிருந்த நிலையில் வீட்டில் தனியாக இருந்த நிலையில் 30 வயது மதிக்கத்தக்க 3 வாலிபர்கள் அரிவாள், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் வீட்டிற்குள் நுழைந்து பாண்டியம்மாவின் கழுத்தில் அரிவாளை வைத்து கழுத்தில் அணிந்திருந்த 1 1/2 பவுன் செயின், […]
You must be logged in to post a comment.