மாஸ் காட்டிய திண்டுக்கல் மாவட்ட, தவெக நிர்வாகிகள்!

பழனி அருகே கீரனூரில் பல்வேறு தடைகளை உடைத்து கொடியேற்றியும் , இனிப்புகள் வழங்கியும் ,பொதுகூட்டம் நடத்தி மாஸ் காட்டிய தமிழக வெற்றி கழகத்தினர். திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே கீரனூரில் ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட உணவு மற்றும் உணவுப் பொருட்கள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி தொகுதியில்,தவெக பொதுக்கூட்டம் மற்றும் கொடியேற்றும் நிகழ்விற்கு கடந்த இரண்டு மாதங்களாக காவல்துறை அனுமதி மறுக்கப்பட்டு அலைக்கழிப்பு செய்த வந்து நிலையில் கீரனூர் பேரூர் பொறுப்பாளர் முகமது அலி ஜின்னா […]

பழனி தைப்பூசத் திருவிழாவுக்கு சிறப்பு ரயில்கள் இயக்க வேண்டும்; திண்டுக்கல் எம்.பி. கோரிக்கை..

பழனி தைப்பூசத் திருவிழாவுக்கு சிறப்பு ரயில்கள் இயக்க வேண்டும்: திண்டுக்கல் எம்.பி. கோரிக்கை.. பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் வரும் 2025-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 5-ஆம் தேதி முதல் 14-ஆம் தேதி வரை நடைபெறவுள்ள தைப்பூச திருவிழாவையொட்டி சிறப்பு ரயில்கள் இயக்க வேண்டும் என திண்டுக்கல் மக்களவை உறுப்பினர் ஆர். சச்சிதானந்தம் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக தென்னக ரயில்வே பொது மேலாளருக்கு அவர் எழுதிய கடிதத்தில், “பழனி தண்டாயுதபாணி திருக்கோயிலின் தைப்பூச திருவிழா […]

சட்டமன்ற மரபுகளை மதிக்காமல், தமிழக மக்களை அவமதிக்கும் ஆளுநர் ரவியை பதவி நீக்க வேண்டும்!-அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தல்!

சட்டமன்ற மரபுகளை மதிக்காமல், தமிழக மக்களை அவமதிக்கும் ஆளுநர் ரவியை பதவி நீக்க வேண்டும்!-அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தல்!  சட்டமன்ற மரபுகளை மதிக்காமல் தமிழக மக்களை அவமதிக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவி பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர். தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை! தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி, சட்டப்பேரவை கூட்டத்தில் உரை நிகழ்த்தாமல் புறக்கணித்து விட்டு வெளியேறியிருக்கிறார். நீண்டகால தமிழக சட்டப்பேரவை மரபின்படி, ஆளுநர் உரைக்கு முன்பாக தமிழ்த்தாய் வாழ்த்து […]

ராமநாதபுரம் அரண்மனையில் தேமுதிக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் .!

ராமநாதபுரம் மாவட்டம் அரண்மனையில் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில் மாவட்ட செயலாளர் சிங்கை ஜின்னா தலைமையில் அண்ணா பல்கலைக்கழக பாலியல் வழக்கை உண்மை குற்றவாளிகளை கண்டறிந்து உடனடியாக கைது செய்யக்கோரியும் போதை இல்லா தமிழகத்தை உருவாக்க கோரியும் நியாய விலை கடைகளில் பொங்கல் பரிசாக ஆண்டுதோறும் வழங்கப்படும் ரூபாய்1000 உடனே வழங்க கோரியும் தமிழக அரசை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. . இதில் ராமநாதபுரம் நகர செயலாளர் பாண்டி மாவட்ட இளைஞரணி செயலாளர் முத்துக்குமார் […]

இலங்கையில் இருந்து தமிழகத்திற்கு கடத்த முயன்ற   தங்கம் பறிமுதல் .! 3 பேர் கைது.!!

இலங்கையில் இருந்து தமிழகத்திற்கு கடத்த முயன்ற   தங்கம் பறிமுதல் : 3 பேர் கைது       இலங்கையிலிருந்து தமிழகத்திற்கு கட்டதி வரப்பட்ட 11கிலோ 300 கிராம் தங்கத்தினை இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்து இலங்கையை சேர்ந்த 3 பேரை கைது செய்து விசாரிக்கின்றனர்.     தமிழகம் அருகே இலங்கை இருப்பதால் கடல் வழியாக தங்கம், போதை பொருட்கள், பீடியிலைகள், பலசரக்கு பொருட்கள் கடத்தல் அதிகமாக நடந்து வருகிறது. கடத்தல் குறித்து இந்திய, இலங்கை […]

பாம்பன் பகுதி மீனவர்கள் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் .!

ராமநாதபுரத்தில் இருந்து ராமேஸ்வரத்திற்கு நான்கு வழிச்சாலை அமைக்கும் பணிக்காக பாம்பன் பகுதியில் தங்களது குடியிருப்பு பகுதிகளை கையகப்படுத்த நெடுஞ்சாலை துறை அளவீடு செய்து வருவதாகவும் இவ்வாறு செய்வதால் ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன், தெற்குவாடி, தோப்புக்காடு, கே கே நகர், சின்னப்பாலம் ஆகிய பகுதிகளை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் 5000க்கும் மேற்பட்ட மீனவ பொதுமக்கள் பாதிக்கப்படுவார்கள் அவர்களது குடியிருப்பு பகுதி அழிந்து போகும் என்பதாலும், தங்களது வாழ்வாதாரமே அழிந்து விடும் என்பதாலும் பாம்பன் தெற்குவாடி, தோப்புக்காடு, கேகே […]

மண்டபம் அருகே ஐயப்ப பக்தர்கள் வந்த பேருந்து கட்டுப்பாட்டை இழந்து சாலை அருகே தலை குப்புற கவிழ்ந்து விபத்து.!

இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே ஐயப்ப பக்தர்கள் வந்த பேருந்து கட்டுப்பாட்டை இழந்து சாலை அருகே தலை குப்புற கவிழ்ந்து விபத்து: நால்வருக்கு காயம்: அதிர்ஷ்டவசமாக அனைவரும் உயிர்த்தப்பினர்:   ஆந்திர மாநிலத்தில் இருந்து சபரிமலைக்கு யாத்திரையாக வந்த ஐயப்ப பக்தர்கள் ராமேஸ்வரத்தில் சாமி தரிசனம் செய்துவிட்டு சொந்த ஊர் திரும்ப போது மண்டபம் அருகே பேருந்து கட்டுப்பாட்டை இழந்து சாலையின் அருகே உள்ள பள்ளத்தில் தலைக்குப்புற கவிழ்ந்து விழுந்து விபத்துக்குள்ளானது. நால்வர் காயம் அதிர்ஷ்டவசமாக அனைவரும் […]

இலங்கை தமிழ் அகதிகளுக்கு தமிழகத்தில் எந்த வசதியும் செய்து தரப்படவில்லை என இலங்கை தமிழ் அகதிகள் கண்ணீர் விட்டு அழுது கெஞ்சி ஆட்சியரிடம் மனு

இலங்கையில் தான் கஷ்டம் என்று தமிழகத்துக்கு வந்தால் இங்கே அதைவிட கஷ்டமாக இருக்கிறது. இலங்கை தமிழ் அகதிகளுக்கு தமிழகத்தில் எந்த வசதியும் செய்து தரப்படவில்லை என இலங்கை தமிழ் அகதிகள் கண்ணீர் விட்டு அழுது கெஞ்சி கேட்கின்றனர். தங்களை இலங்கைக்கே மீண்டும் திருப்பி அனுப்பும்படி வேதனையுடன் ஆட்சியரிடம் மனு கொடுத்த இலங்கை தமிழ் அகதிகள். ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அகதிகள் முகாமில் யுத்த காலத்திலும், அந்நாட்டில் பொருளாதார சிக்கல் ஏற்பட்ட போதும் அங்கிருந்து அகதிகளாக தஞ்சம் வந்த […]

பள்ளி கட்டிடத்தை சரி செய்து தரக்கோரி பாட்டுப்பாடி, ஆட்டம் ஆடி ஆட்சியரிடம் புகார் அளிக்க வந்த அரசு பள்ளி மாணவ மாணவிகள்..!

ராமநாதபுரத்தை அடுத்த வித்தானூர் பகுதியில் அரசு துவக்க பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது.இந்த அரசு பள்ளிக்கு சரியான கட்டிட வசதி இல்லாததால் மகளிர்மன்ற கட்டிடத்தில் மாணவ மாணவிகளுக்கு பாடம் எடுக்கப்பட்டு வருவதாகவும், இது தொடர்பாக பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறி பாதிக்கப்பட்ட கிராம பொதுமக்கள் மற்றும் மாணவ மாணவிகள் மாவட்ட ஆட்சியிடம் மனு அளிக்க வந்தனர். அப்போது பள்ளிப் பாடத்தின் பாடலை பாட்டுப்பாடி ஆட்டம் போட்டு மாணவ மாணவிகள் […]

மயானத்துக்கு போக வழியில்லாம வயலுக்குள்ள பொணத்தை தூக்கிட்டு போறோம்”- புகைப்படங்களுடன் வந்து ஆட்சியர் அலுவலகத்தில் புலம்பிய பொதுமக்கள்..!

ராமநாதபுரம் மாவட்டம் நயினார் கோவிலை அடுத்த நெடுங்குறிச்சி கிராமத்தில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். தங்களுக்கென ஒதுக்கப்பட்ட சுடுகாட்டு பகுதிக்கு செல்ல எந்த ஒரு அடிப்படை வசதியும் செய்து தரப்படவில்லை என, குற்றம் சாட்டும் அந்த கிராம மக்கள் போதிய சாலை வசதி செய்து தரப்படாததால் சுடுகாட்டிற்கு, இறந்தவர்களின் சடலங்களை அடக்கம் செய்வதற்காக கொண்டு செல்வதில் கடும் சிரமம் ஏற்படுவதாகவும், வேறு வழியின்றி உடல்களை வயல்வெளிக்குள் தூக்கிச் செல்வதாகவும் வேதனை தெரிவித்துள்ளனர். கடந்த நான்கு ஆண்டுகளாக […]

டாஸ்மார்க் அகற்ற கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தஞ்சை மாவட்ட ஆட்சியரிடம் மனு

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (CPI) அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம்(AIYF )தஞ்சாவூர் மாநகர குழு சார்பில் தஞ்சை மாவட்ட ஆட்சியரிடம் மனு .. தஞ்சாவூர் மாநகராட்சி கீழவாசலில் இயங்கி வரும் டாஸ்மாக் (கடை எண் 7901 ) கடையினால் பெண்களும் ,பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் வணிக பெருமக்களும் போக்குவரத்து நெரிசலினால் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். போக்குவரத்து நெரிசலை சரிசெய்யவும், டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்ய வலியுறுத்தி அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் 11-09-2024 அன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பிரச்சனையின் […]

“இப்பவே உன்னை தூக்கிச்சென்று காணா பிணமாக்கி விடுவேன்.” உசிலம்பட்டியில் அரைகுறை ஆடையில் வந்து பெண்ணிற்கு கொலை மிரட்டல் விடுத்த தனியார் பைனான்ஸ் ஊழியர்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியைச் சேர்ந்தவர் சிந்து.இவருடைய பெயரை பயன்படுத்தி அவருடைய உறவினர் சங்கர் உசிலம்பட்டி அருகே தி.விலக்கிலுள்ள செல்லப்பாண்டி என்பவரின் பைணான்ஸ் கடையில் பணம் பெற்று விட்டு தலைமறைவானார்.இது தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் பணம் கேட்டு செல்லப்பாண்டி பைனான்ஸ் ஊழியர் மதன் என்பவர் சிந்து வீட்டிற்கு அடிக்கடி வந்து மிரட்டியதாகக் கூறப் படுகின்றது.இந்நிலையில் நேற்று இரவில் யாரும் இல்லாத நிலையில் சிந்து வீட்டிற்கு அரைகுறை (ஷாhட்ஸ் டிசர்ட்) வந்த மதன் அவரிடம் பணம் கேட்டுள்ளார்.சிந்து […]

தென்காசி மாவட்டத்தில் நேர்மை மிக்க சலவைத் தொழிலாளிக்கு பாராட்டு விழா..

தென்காசி மாவட்டத்தில் சலவைத் தொழிலாளி முத்துக் குமார் “மகாத்மா காந்தி” விருது வழங்கி சமூக நல ஆர்வலர்களால் பாராட்டப்பட்டார். தென்காசி மாவட்டம் பொட்டல்புதூர் பகுதியை சேர்ந்த சலவைத் தொழிலாளி முத்துக்குமார். அருகில் உள்ள வெங்காடம்பட்டி பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர் திருமாறன் தவறுதலாக தனது பேண்ட் பாக்கெட்டில் பணத்தை வைத்து விட்டு கால் சட்டையினை சலவை செய்வதற்கு அனுப்பியிருந்தார். அந்த பணத்தை எண்ணிக் கூட பார்க்காமல் நேர்மையுடன் திருமாறனிடம் ஒப்படைத்தார் சலவைத் தொழிலாளி முத்துக் குமார்.  இந்நிலையில் […]

முதலுதவி தாமதத்தால் முன்னாள் பேரூராட்சி தலைவர் உயிரிழப்பு..

தென்காசி மாவட்டத்தில் விபத்தில் சிகிச்சை பெற்று வந்த சுரண்டை பேரூராட்சி முன்னாள் தலைவர் முதலுதவி தாமதம் ஆகி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தென்காசி மாவட்டம் சுரண்டை சிவ குருநாதபுரத்தை சேர்ந்தவர் டி.கே.எம். மாதாள பாண்டியன்.வயது (70). இவர் சுரண்டை பேரூராட்சியாக இருந்த போது 10 ஆண்டுகள் பேரூராட்சி மன்ற தலைவராக பணியாற்றினார். இவர் கடந்த 30ஆம் தேதி மாலை 6 மணி அளவில் கடையம் அருகே உள்ள மாதாபுரத்தில் அவருக்கு சொந்தமான செங்கல் சூளையில் […]

வரும் மூன்று மாதத்திற்குள் தமிழ்நாடே உசிலம்பட்டியை திரும்பி பார்க்கும் வகையில் உசிலம்பட்டியில் முக்கிய நிகழ்ச்சி உள்ளது – அமைச்சர் மூர்த்தி

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே தி.விலக்கு பகுதியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு செல்லம்பட்டி வடக்கு ஒன்றியம் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா அமைச்சர் பி.மூர்த்தி, தேனி எம்.பி., தங்கதமிழ்செல்வன், தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன் தலைமையில் நடைபெற்றது., இந் நிகழ்வில் விவசாயிகளுக்கு கரவை மாடுகள், ஆடுகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச மூன்று சக்கர வாகனங்கள், பொங்கல் பரிசு பொருட்கள் என ஆயிரக்கணக்கான பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.,இந்த விழாவில் நலத்திட்ட […]

தென்காசி மாவட்ட புதிய எஸ்.பி பொறுப்பேற்பு..

தமிழ்நாடு அரசால் நியமிக்கப்பட்ட தென்காசி மாவட்ட புதிய எஸ்.பி அரவிந்த் இன்று பொறுப் பேற்றுக் கொண்டார். தென்காசி மாவட்ட புதிய காவல் கண்காணிப்பாளராக திருச்சி துணை கமிஷனராக பணியாற்றி வந்த அரவிந்த் தமிழ்நாடு அரசால் நியமனம் செய்யப்பட்டார்.   அதனை தொடர்ந்து தென்காசி மாவட்டத்தின் 6-வது மாவட்ட காவல் கண்காணிப்பாளராக S.அரவிந்த் இன்று (06.01.2025) ஆம் தேதி பதவி ஏற்றுக் கொண்டார். இவர் 21.07.2005 ஆம் ஆண்டு காவல் பணியில் இணைந்து துணை எஸ்.பியாக திருவாரூர், கரூர், திருநெல்வேலி, […]

சத்தியபாதை மின் இதழ்..

சத்தியபாதை 2025 ஜனவரி மாத  மின் இதழ்.. படிக்க கீழே சொடுக்கவும்.. ஜனவரி 2025 மாத சத்தியபாதை மின் இதழ்..

தமிழ்நாடு ஸ்டேட் மினி 11 வயது உட்பட்டவர்களுக்கான ரேங்கிங் இறகு பந்து விளையாட்டு போட்டி..

திருவண்ணாமலை அடுத்த போளூர் பகுதியைச் சேர்ந்த டி.எஸ்.ஷாதின் கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற தமிழ்நாடு ஸ்டேட் மினி 11 வயது உட்பட்டவர்களுக்கான ரேங்கிங் இறகு பந்து விளையாட்டு போட்டியில் கலந்து கொண்ட 38 மாவட்டங்களில் இருந்து கலந்து கொண்ட 128 மாணவர்களில் கலந்து கொண்டு 16வது இடம் பெற்று சாதனை புரிந்துள்ளார். பயிற்சியாளர் கே.டி.ஆர்.கார்த்தி உடன் உள்ளார்

திருச்சி மணப்பாறையில் தமிழ்நாடு பாரத சாரண சாரணியர் இயக்க வைர விழா பணிகளை பார்வையிட்ட அமைச்சர்..

திருச்சி மணப்பாறையில் தமிழ்நாடு பாரத சாரண சாரணியர் இயக்க வைர விழா நடக்கும் பணிகளை பார்வையிட்ட அமைச்சர் m பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் / தமிழ்நாடு பாரத சாரண சாரணியர் இயக்க தலைவருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி திருச்சிராப்பள்ளி மாவட்டம், மணப்பாறை சிப்காட் வளாகத்தில் தமிழ்நாடு பாரத சாரண சாரணியர் இயக்க வைரவிழா மற்றும் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு பெருந்திரளணி நடைபெறவுள்ளதை முன்னிட்டு மணப்பாறை சிப்காட் வளாகத்தில் இவ்விழாவினை சிறப்பான முறையில் நடத்திடும் வகையில் மேற்கொள்ளப்பட்டு […]

திருச்சி தெற்கு மாவட்ட மாநகர கலை இலக்கிய பகுத்தறிவு பேரவையின் சமத்துவ பொங்கல் விழா..

திருச்சி தெற்கு மாவட்ட மாநகர கலை இலக்கிய பகுத்தறிவு பேரவையின் சார்பாக சமத்துவ பொங்கல் விழா அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பங்கேற்பு. கழக இளைஞரணிச் செயலாளர் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி, திருச்சி தெற்கு மாவட்டத்தில் 47வது நிகழ்ச்சியாக மாவட்ட மற்றும் கிழக்கு மாநகர கலை இலக்கிய பகுத்தறிவுப் பேரவை ஏற்பாட்டில் சமத்துவ பொங்கல் விழா காட்டூர் பகுதியில் நடைபெற்றது. தெற்கு மாவட்டச் செயலாளர் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மாநகரச் செயலாளர் […]

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!