பெரியாரை பற்றி சர்ச்சை பேச்சு! சீமான் மீது பல்வேறு இடங்களில் புகார்..

கடலூரில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:- தமிழை சனியன் என்று சொன்ன பெரியார் எந்த மொழியில் எழுதினார். மொழியையே இழிவாக பேசும் போது அப்புறம் என்ன சமூக மாற்றம். சீர்த்திருத்தம், அரசியல் இருக்கிறது. அடிப்படையே தவறாக உள்ளது. கம்பன், இளங்கோவடிகள், திருவள்ளுவரை எதிரி என்றீர்கள். திருப்பி பெரியாரை கொள்கை வழிகாட்டி என்றால், எந்த இடத்தில் கொள்கை வழிகாட்டி. மதுவுக்கு எதிரான போராட்டத்தில்? ஆயிரம் தென்னை மரங்களை பெரியார் வெட்டி சாய்த்தார். […]

கள்ளக்குறிச்சியில் பொங்கல் பரிசு தொகுப்பு. ! மாவட்ட ஆட்சியர் துவக்கி வைப்பு.!!

கள்ளக்குறிச்சியில் பொங்கல் பரிசு தொகுப்பு. ! மாவட்ட ஆட்சியர் துவக்கி வைப்பு.!! *தமிழ்நாடு முதலமைச்சர் மு .க .ஸ்டாலின் பொங்கல் பரிசு தொகுப்பு சென்னையில் வழங்கி தொடங்கி வைத்ததை தொடர்ந்து கள்ளக்குறிச்சியில் பொங்கல் பரிசு தொகுப்பை மாவட்ட ஆட்சியர்  பிரசாந்த் குடும்ப அட்டைக்காரர்களுக்கு வழங்கினார்  கள்ளக்குறிச்சி மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் முருகேசன் உடன் இருந்தார் கள்ளக்குறிச்சி மாவட்ட செய்தியாளர் பாபு

பழனி அருகே இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு தைத்திருநாளை முன்னிட்டு 16 ம் தேதி ஜல்லிக்கட்டு போட்டி! தீவிரமாக நடைபெற்று வரும் ஏற்பாடுகள்..

பழனி அருகே இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு தைத்திருநாளை முன்னிட்டு 16 ம் தேதி ஜல்லிக்கட்டு போட்டி! தீவிரமாக நடைபெற்று வரும் ஏற்பாடுகள்.. திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே பெரிய கலையமுத்தூர் கிராமத்தில் ஹை கோர்ட் பத்ரகாளியம்மன் கோயிலில் தைப்பொங்கலை முன்னிட்டு ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படுகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக கோயிலில் கும்பாபிஷேக பணிகள் நடைபெற்று வந்ததால் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறாமல் இருந்தது. கும்பாபிஷேக பணிகள் நிறைவுற்ற நிலையில் இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டியை விமர்சையாக நடத்துவதற்கு […]

மீண்டும் உச்சம் தொட்ட தங்கம்! இன்றைய நிலவரம் என்ன!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜன.,09) சவரனுக்கு ரூ.280 உயர்ந்து, ரூ.58,080க்கும், ஒரு கிராம் ரூ.7,260க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச அளவில் நிலவும் பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் காரணமாக ஆபரணத் தங்கத்தின் விலையில் மாற்றம் நிகழ்கிறது. ஜனவரி 1ம் தேதி, ஆண்டின் முதல் நாளில் சவரனுக்கு ரூ.320 உயர்ந்தது. நேற்று (ஜன.,08) சவரனுக்கு 80 ரூபாய் உயர்ந்தது. ஒரு கிராம் தங்கம் ரூ.7,225க்கும், ஒரு சவரன் ரூ.57,800க்கும் […]

பழனி முருகன் கோவிலில் 296 பணியிடங்களுக்கு 1 லட்சம் பேர் விண்ணப்பம்!

பழனி முருகன் கோவிலில் 296 பணியிடங்களுக்கு 1 லட்சம் பேர் விண்ணப்பம்! திண்டுக்கல்,பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் மற்றும் அதன் உபகோவில்கள், கல்வி நிறுவனங்களில் காலியாக உள்ள 296 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு கடந்த மாதம் வெளியிடப்பட்டது. இதனையடுத்து இளைஞர்கள், இளம்பெண்கள் நேரடியாகவும், தபால் மூலமாகவும் விண்ணப்பங்கள அளித்தனர். நேற்று விண்ணப்பிக்க கடைசி நாள் என்பதால் ஏராளமானோர் விண்ணப்பம் செய்தனர். இதுகுறித்து கோவில் அதிகாரிகள் கூறும்போது, இதுவரை சுமார் 1 லட்சம் விண்ணப்பங்கள் வரப்பெற்றுள்ளன என்றனர்.

காந்திகிராம பல்கலைக்கழகத்தில் முதுகலை படிப்பில் சேர ‘கியூட்’ நுழைவு தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்!

காந்திகிராம பல்கலைக்கழகத்தில் முதுகலை படிப்பில் சேர ‘கியூட்’ நுழைவு தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்! திண்டுக்கல், காந்திகிராம பல்கலைக்கழகத்தில் M.A, Msc, உள்ளிட்ட 23 முதுகலை படிப்புகள் உள்ளது. இந்த படிப்புகளுக்கு 2025-26-ம் கல்வியாண்டுக்கான சேர்க்கை, பல்கலைக்கழக பொது நுழைவுத் தேர்வு (கியூட்) மதிப்பெண் அடிப்படையில் நடைபெறுகிறது. மேற்கண்ட முதுகலை பட்டப்படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் http://cuetpg.ntaonline.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம். மேலும் தகவல்களை www. ruraluniv.ac.in என்ற பல்கலைக்கழக இணையதளத்தில் இருந்து பெற்றுக்கொள்ளலாம். ‘கியூட்’ தேர்வுக்கு விண்ணப்பிக்க […]

திண்டுக்கல் மாவட்டம் பல்வேறு இடங்களில் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் திடீர் சோதனை; அபராதம் மற்றும் கடைகளுக்கு சீல் வைப்பு..

திண்டுக்கல் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்த 22 கடைகளுக்கு சீல்,70 கிலோ புகையிலை பொருட்கள், 100 கிலோ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல், ரூ.6,58,000 அபராதம்! திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் பூங்கொடி உத்தரவின் பேரில் மாவட்ட உணவு பாதுகாப்புதுறை அதிகாரி கலைவாணி தலைமையிலான உணவு பாதுகாப்புத்துறையினர் திண்டுக்கல், நத்தம், ஆத்தூர், நிலக்கோட்டை, வத்தலகுண்டு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடைகளில் திடீர் சோதனை மேற்கொண்டபோது 22 கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களும், 4 […]

இபிஎஸ் உறவினா்களின் நிறுவனங்களில் 3-வது நாளாக வருமான வரித்துறை தொடர்ந்து சோதனை!

ஈரோட்டில் முன்னாள் முதல்வா் எடப்பாடி பழனிசாமியின் உறவினா்களின் நிறுவனங்களில் வருமான வரித் துறை அதிகாரிகள் 3-வது நாளாக சோதனை மேற்கொண்டுள்ளனர். அதேபோல், சென்னை தேனாம்பேட்டை, பூக்கடை, திருவொற்றியூர், சாத்தங்காடு உள்ளிட்ட பகுதிகளில் கட்டுமானம் மற்றும் மெட்டல் நிறுவனங்களுக்கு சொந்தமான 6-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. ஈரோடு செட்டிபாளையம், தெற்கு ஸ்டேட் வங்கி நகரில் முன்னாள் முதல்வா் எடப்பாடி பழனிசாமியின் உறவினரான என்.ராமலிங்கம் என்பவருக்கு சொந்தமான கட்டுமான நிறுவனத்தில் வருமான வரித் துறையினா் செவ்வாய்க்கிழமை […]

பாம்பன் நான்கு வழிச்சாலை புதிய பாலத்தை மாற்றியமைக்க கோரி நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி கடிதம் .!

பாம்பன் நான்கு வழிச்சாலை புதிய பாலத்தைமாற்றியமைக்க கோரி பொதுப்பணிகள் மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சருக்கு ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி கடிதம்.! ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அருகே பாம்பன் நான்கு வழிச்சாலை புதிய பாலத்தை குடியிருப்புகளை பாதிக்காத வகையில் மாற்றியமைக்க கோரி பொதுப்பணிகள் மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் எ வ வேலுவிடம் நாடாளுமன்ற உறுப்பினர் கே நவாஸ்கனி எம்பி ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர் பாட்சா முத்துராமலிங்கம் ஆகியோர் சந்தித்து கடிதம் வழங்கினார். இது […]

திருப்பதி; வைகுண்ட ஏகாதசி தரிசன டோக்கன் பெற கட்டுக்கடங்காத கூட்டம்! நெரிசலில் சிக்கி 6 பேர் பலி!

திருப்பதியில் வைகுண்ட ஏகாதசி டோக்கன்களைப் பெற பக்தர்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் கூடியிருந்ததால் வரிசையில் காத்திருந்த பக்தர்கள் கூட்டத்தில் கடும் நெரிசல் ஏற்பட்டது. வைகுண்ட ஏகாதசி வெள்ளிக்கிழமை(ஜன. 10) கொண்டாடப்படும் நிலையில், இதற்காக திருப்பதி உள்பட வைணவத் திருத்தலங்களில் சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது. இந்த நிலையில், திருப்பதியில் வைகுண்ட ஏகாதசி நாளில் சாமி தரிசனம் செய்ய விரும்பும் பக்தர்களுக்கான சர்வ தரிசன டோக்கன்கள் விஷ்ணு நிவாசம் வளாகத்தில் வழங்கப்படுவதாக இருந்தது. இதை பெறுவதற்காக ஆயிரக்கணக்கான பக்தர்கள் அங்கே காத்திருந்தனர். அப்போது […]

யுஜிசி-யின் புதிய விதி கூட்டாட்சி தத்துவத்துக்கும், அரசமைப்புச் சட்டத்துக்கும் எதிரானது! திருமாவளவன்..

ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் வெளியிட்டுள்ள UGC வரைவு நெறிமுறைகளின் படி, கல்வித்துறை சாராத தொழில் துறை நிபுணர்கள், பொதுத்துறை சார்ந்தவர்கள் போன்றவர்களை பல்கலைக்கழக துணை வேந்தர்களாக நியமிக்க ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான அதிகாரத்தை மாநில ஆளுநர்களுக்கு வழங்கும் வகையில் UGC விதிமுறைகளில் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது. அதே போல துணை வேந்தரை தேடும் குழுவில் மாநில அரசின் பிரதிநிதியை நீக்கிவிட்டு, அதற்கு பதில் ஆளுநரால் நியமிக்கப்படும் பல்கலைக்கழக உறுப்பினரே இடம்பெறுவார் என்றும் திருத்தும் கொண்டுவரப்பட்டுள்ளது. […]

கூடல் நகர் ரயில் பாதை மேம்பாட்டு பணிக்கு ஜன.9ம் தேதி 9 ரயில்கள் மாற்றுபாதையில் இயக்கம்

கூடல் நகர் ரயில் பாதை மேம்பாட்டு பணிகளுக்காக நாளை ஒன்பது ரயில்கள் மாற்றுப் பாதையில் இயக்கம் மதுரை அருகே உள்ள கூடல் நகர் ரயில் நிலையத்தில் வியாழக்கிழமை அன்று (ஜனவரி 9) ரயில் பாதை மேம்பாட்டு பணிகள் நடைபெற இருக்கிறது. இந்தப் பணிகள் காலை 10.35 மணி முதல் மாலை 05.35 மணி வரை நடைபெறுகிறது இதன் காரணமாக மதுரை, திண்டுக்கல் வழியாக இயக்கப்பட வேண்டிய ஒன்பது ரயில்கள் விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி வழியாக இயக்கப்படுகிறது. அதன்படி […]

கீழக்கரையில் கள்ளத்தனமாக மது விற்பனையை தடுக்க கோரி பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம்.!

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை பேருந்து நிலையம் அருகில் பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பில் கீழக்கரை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் கள்ளதனமாக மது பாட்டில் மற்றும் போதை பொருட்கள் விற்பனை செய்வதை தடை செய்ய கோரியும் கள்ள சந்தையில் போதை பொருள் விற்பனை செய்யும் கும்பல்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தியும் இதற்கு துணை போகும் அதிகாரிகளை பணியிடை மாற்றம் செய்ய கோரியும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.     ஆர்ப்பாட்டத்திற்கு மக்கள் அதிகாரம் பொறுப்பாளர் ரவி தலைமை […]

ஷேக் ஹசீனா பாஸ்போர்ட்டை ரத்து செய்த வங்கதேசம்! அவரது விசாவை நீட்டித்த இந்திய அரசு.?

அண்டை நாடான வங்கதேசத்தில் இடஒதுக்கீட்டுக்கு எதிராக கடந்த ஆண்டு ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் மாணவர் அமைப்பினர், பொதுமக்கள் இணைந்து நடத்திய புரட்சி மிகப்பெரிய வன்முறையாக வெடித்தது. இதன் காரணமாக பிரதமர் பதவியில் இருந்து விலகிய ஷேக் ஹசீனா, இந்தியாவில் தஞ்சம் அடைந்தார். இதையடுத்து வங்கதேசத்தில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு, ராணுவத்தின் கண்காணிப்பில் அங்கு இடைக்கால அரசு அமைந்துள்ளது. இந்த நிலையில் வங்கதேசத்தைவிட்டு ஷேக் ஹசீனா வெளியேறி 5 மாதங்கள் ஆகியுள்ள நிலையில், அந்நாட்டில் நடைபெற்ற வன்முறை தொடர்பாக […]

நமது இளைஞர்கள் தான் எதிர்கால பொருளாதாரத்தை இயக்கப் போகிறார்கள்; அமைச்சர் PTR பேச்சு!

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள மகளிர் கிறித்துவக் கல்லூரியில் The Rise அமைப்பின் சார்பில், உலக அளவில் வளர்ந்து வரும் அடுத்த தலைமுறை உயர் தொழில்நுட்பமான “Deep Tech” குறித்த தொழில்முறை கருத்தரங்கு நடைபெற்றது. இதில் அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பங்கேற்று சிறப்புரையாற்றினார். அப்போது பேசிய அவர், ”கல்வி ஒன்றுதான் நமது சமூகத்தை மாற்றியுள்ளது. இதனால்தான் நாம் அனைவரும் பொருளாதர ரீதியாக வளர்ச்சி அடைந்துள்ளோம். இந்த வளர்ச்சியில் பெண்களின் முன்னேற்றம் மிகப்பெரிய உந்துசக்தியாக உள்ளது. இது ஒரு சமூகத்தின் […]

மதுரையில் தலைமை ஆசிரியர்கள் நடத்திய குழந்தைகளுக்கான தற்காப்பு பாதுகாப்பு நிகழ்ச்சி.!

  மதுரை சிம்மக்கல் பகுதியில் உள்ள தனியார் அரங்கில் HCL foundation மற்றும் OFERR நிறுவனமும் இணைந்து எனது பள்ளி நிகழ்ச்சி என்ற தலைப்பில் நடைபெற்றது. இதில் மாநகராட்சி கல்வி குழு தலைவர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். OFERR நிறுவனத்தின் திருச்சி மண்டல ஒருங்கிணைப்பாளர் ஈஸ்வரன் முன்னிலை வகித்தார். மதுரை மாநகராட்சி கல்வி அதிகாரி ஜெய்சங்கர், HCL foundation program officer ராஜலட்சுமி, ஆகியோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் மதுரை மாநகராட்சிக்குட்பட்ட 24 பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் […]

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட  நெற்பயிர்களுக்கு 40 சதவீதம் வரை நிவாரணம் உயர்த்தி வழங்கப்படும் அமைதி பேச்சுவார்த்தையில் முடிவு !

சுரக்குடிப்பட்டி, வெண்டையம்பட்டி, இராயமுண்டான்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் கடும் மழை வெள்ள பாதிக்கப்பட்ட  நெற்பயிர்களுக்கு 40 சதவீதம் வரை நிவாரணம் உயர்த்தி வழங்கப்படும் அமைதி பேச்சுவார்த்தையில் முடிவு:   தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் தாலுக்காவிற்க்கு உட்பட்ட சுரக்குடிப்பட்டி, இராயமுண்டான்பட்டி, வெண்டையம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த மாதம் பெய்த கடும் மழை வெள்ளத்தால் நடவு செய்யப்பட்ட இளம் பயிர்கள் நீரில் மூழ்கி முற்றிலும் அழுகியது.இதனால் மீண்டும் நாற்று வாங்கி நடவு செய்யவேண்டிய நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டனர்.உரிய இழப்பீடு கேட்டு இந்திய கம்யூனிஸ்ட் […]

கூரையில்லாத பள்ளியில், தமிழ் மீடியத்தில் கல்வி கற்று இஸ்ரோ தலைவராக  நாராயணன் உயர்ந்தது எப்படி, ஓர் முழுப்பார்வை..

  கூரையில்லாத பள்ளியில், தமிழ் மீடியத்தில் கல்வி கற்று இஸ்ரோ தலைவராக  நாராயணன் உயர்ந்தது எப்படி, ஓர் முழுப்பார்வை.. அவரை பல்வேறு தரப்பினர் பாராட்டி வருகின்றனர். இஸ்ரோவின் தலைவராக உள்ள சோம்நாத் பதவி காலம் நிறைவடைய உள்ளது. இதையடுத்து புதிய தலைவராக வி. நாராயணனை மத்திய அரசின் நியமனக்குழு தேர்வு செய்துள்ளது. தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மேலட்டுவிளை என்ற கிராமத்தை சேர்ந்தவர் தான் நாராயணன். இவர் ஏழை குடும்பத்தில், மறைந்த வன்னியபெருமாள், எஸ்.தங்கம்மாள் ஆகியோரின் மூத்த […]

ஞானசேகரன் திமுகவைச் சேர்ந்தவர் இல்லை அவர் அனுதாபி!பாதிக்கப்பட்ட மாணவியின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அரசியல் கட்சிகள் செயல்படுங்கள்!- முதலமைச்சர்..

அண்ணா பல்கலைக் கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பாக பல போராட்டங்கள் முன்வைக்கப்பட்டுவருகிறது. மேலும், இதுதொடர்பாக, முதல்வர் ஸ்டாலின் விளக்கம் அளிக்கவில்லை என்று எதிர்கட்சியினர் பேசி வந்த நிலையில் இன்று சட்டமன்றத்தில் முதல்வர் ஸ்டாலின் நீண்ட விளக்கம் கொடுத்தார். இது குறித்து அவர் அளித்துள்ள விளக்கத்தில், “நான் எதிர்க்கட்சிகளை கேட்க விரும்புவது  யார் அந்த சார்? என்று குற்றம்சாட்டுகிறீர்கள் உண்மையாகவே உங்களிடம் அதற்கு ஆதாரம் இருந்தால், உயர்நீதிமன்ற உத்தரவுப்படி அமைக்கப்பட்டுள்ள சிறப்பு புலனாய்வு குழுவிடம் கொடுங்கள் […]

பாமகவின் போராட்டத்தை தடுத்து நிறுத்தியதைப் போல திமுகவின் போராட்டத்தைத் தடுக்க எந்த முயற்சியையும் காவல்துறை மேற்கொள்ளவில்லை; அன்புமணி ராமதாஸ் காட்டம்..

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் அனுமதியின்றி போராட்டம் நடத்துவோர் அனைவர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்படும் என்றும், அவ்வாறு போராடிய திமுகவினர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும் சட்டப்பேரவையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியிருக்கிறார். காவல்துறையின் பாரபட்சமும், திமுகவினரின் அத்துமீறல்களும் பூசணிக்காய் அளவுக்கு இல்லாமல், இமயமலை அளவுக்கு பரந்து விரிந்து கிடக்கும் நிலையில், அதை நடுநிலை விளக்கம் என்ற ஒரு பிடி சோற்றைக் கொண்டு மறைக்க முயன்றிருக்கிறார் முதல் அமைச்சர். அரசியல் அடிப்படைத் தெரிந்த […]

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!