சோழவந்தான் மார்க்கெட் ரோடு பகுதியை ஒருவழி பாதையாக மாற்ற பொதுமக்கள் வாகன ஓட்டிகள் கோரிக்கை

சோழவந்தானில் அதிகரித்து வரும் மக்கள் தொகை மற்றும் நகருக்குள் வந்து செல்லும் பொதுமக்களால் பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வருகிறது சோழவந்தான் நகரின் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்திற்கு நெருக்கடியாக ஆக்கிரமிப்புகள் தொடர்ச்சியாக அதிகரித்து வருவதாக போக்குவரத்து துறை ஓட்டுனர் மற்றும் நடத்துனர்கள் மற்றும் பொதுமக்கள் வாகன ஓட்டிகள் தொடர் புகார்களை தெரிவித்து வருகின்றனர் சோழவந்தானில் பெரிய கடை வீதி முதல் பேருந்து நிலையம் வரை உள்ள சாலையை ஒருவழி பாதையாக மாற்ற பலமுறை கோரிக்கை விடுத்தும் […]

பெண் கவுன்சிலர்கள் அவமானப்படுத்தப்படுவதாக புகார்

சோழவந்தான் பேரூராட்சியில் பெண் கவுன்சிலர்கள் அவமானப்படுத்தப்படுவதாக பரபரப்பு புகார் பேரூராட்சி கூடுதல் கட்டிடம் திறப்பு விழாவிற்காக தயார் செய்த கல்வெட்டுகளில் பெண் கவுன்சிலரின் பெயரை முழுமையாக பதிவிடாமல் பாரபட்சம் காட்டி பழிவாங்கப்படுவதாக அதிகாரிகளிடம் நியாயம் கேட்ட வார்டு கவுன்சிலர் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது மாவட்ட ஆட்சித்தலைவரிடம் புகார் அளிக்கப் போவதாக தகவல் ஆளுங்கட்சியினரால் மாற்று கட்சி கவுன்சிலர்கள் பழிவாங்கப்படுவதாக பரபரப்பு குற்றச்சாட்டு மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சியில் மொத்தம் 18 வார்டுகள் உள்ளது இதில் சரி பாதி […]

திருக்குர்ஆனின் ஒளியில் விஞ்ஞானம்.!

திருக்குர்ஆனின் ஒளியில் விஞ்ஞானம்.! குரோம்சோம்களின் கலாட்டா.! அத்தியாயம் 5 “அவற்றிலிருந்து ஆண்,பெண் என ஜோடியை ஏற்படுத்தினான்” (அல்குர்ஆன் 75;39) இந்த திருக்குர்ஆனின் வசனம் இன்று உலகில் ஏற்படுகிற ஏராளமான பிரச்சினைகளுக்கு தீர்வாக அமைகிறது. அரபுமண்ணில் பெண்குழந்தைகள் உயிருடன் குழியில் புதைக்கப்பட்டனர். இதுபோன்ற தவறுகளை செய்துவிட்ட நபித்தோழர்கள் முஸ்லீமான பிறகு அல்லாஹ்விடம் தனது செயல்களுக்காக பாவமன்னிப்பு தேடினார்கள். நமது மண்ணிலும் பெண்குழந்தை1444 பெற்றால்‌‌ கள்ளிப்பால் ஊற்றி கொன்றனர். பெண்குழந்தை பிறப்பதற்கு பெண்ணே காரணம் என்ற அறியாமையை மேலேயுள்ள திருக்குர்ஆன் […]

தமிழ்நாட்டில் 100 சதவிகித எஸ்ஐஆர் படிவங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாக இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவிப்பு..

தமிழ்நாட்டில் 100 சதவிகித எஸ்ஐஆர் படிவங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாக இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழ்நாடு, கேரளம், மேற்கு வங்கம், அசாம் உள்ளிட்ட 9 மாநிலங்களிலும், புதுச்சேரி, அந்தமான் நிகோபார் உள்ளிட்ட 3 யூனியன் பிரதேசங்களிலும் எஸ்ஐஆர் எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை இந்திய தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தில் கடந்த 4-ஆம் தேதி முதல் தொடங்கி வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் இன்றுடன் நிறைவடந்த நிலையில், எஸ்ஐஆர் […]

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில்சென்னையில் டிசம்பர் 19-ம் தேதி கவன ஈர்ப்பு பேரணி:மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் தகவல்

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை இணைத்து செயல்படும் சங்கங்களின் கூட்டமைப்பு மாநில மையம் சார்பில் 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு பேரணி நடைபெற இருப்பதாக மாநில பொருளாளரும், மாநில ஒருங்கிணைப்பாளர் மதுரை ப. செந்தில்குமார் தெரிவித்துள்ளார். இ கிராம ஊராட்சியில் பணிபுரியும் ஊராட்சி செயலாளர்களுக்கு தேர்வு நிலை சிறப்பு நிலை ஊதியம் வழங்க வேண்டும்,ஊதியம் அரசு கருவூலம் மூலம் வழங்க வேண்டும், கிராம ஊராட்சியில் பணிபுரியும் மேல்நிலை நீர் தேக்க தொட்டி இயக்குனர் சிறப்பு […]

சோழவந்தான் மதுரை ரோட்டில் சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகளால் விபத்து அபாயம் பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளன இங்கு விரிவாக்கப்பட்ட பகுதியான ஆர் எம் எஸ் காலனி குடியிருப்பு உள்ளது அதன் அருகில் சோழவந்தான் காவல் நிலையம் தீயணைப்பு நிலையம், பெட்ரோல் பங்க் உள்ளது இங்கே பொதுமக்களுக்கு அச்சுறுத்தும் வகையில் நெடுஞ்சாலையில் சுமார் 20க்கும் மேற்பட்ட மாடுகள் குறுக்கும் நெடுக்குமாக காலை முதல் இரவு வரை சென்று கொண்டே இருக்கின்றன இது குறித்து வாகனங்களில் செல்வோரும் அந்தப் பகுதி மக்களும் பேரூராட்சி நிர்வாகத்திடம் நேரடியாகவும் வாய்மொழியாகவும் […]

சோழவந்தானில் திமுக சார்பில் நலத்திட்டம் வழங்கியதில் பாரபட்சம் காட்டியதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு

சோழவந்தானில் திமுக சார்பில் நலத்திட்டம் வழங்கியதில் பாரபட்சம் காட்டியதாக பொதுமக்கள் குற்றச்சாட்டுபாதியிலேயே வெங்கடேசன் எம் எல் ஏ கிளம்பி சென்றதால் ஏமாற்றம் மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சியில் உள்ள 18 வார்டுகளில் திமுக சார்பில் பொதுமக்களுக்கு டிபன் பாக்ஸ் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது அதன்படி நேற்று காலை அதாவது இன்று சோழவந்தான் பேரூராட்சி தெற்கு தெரு பகுதியில் 10 முதல் 18 வரை உள்ள வார்டுகளுக்கு முதல் கட்டமாக டிபன் பாக்ஸ் வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது அதன்படி […]

தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு பேரவை சார்பில் தேசிய மனித உரிமைகள் தினம் கொண்டாடப்பட்டது

தேசிய மனித உரிமைகள் தினம் தமிழ் நாடுநுகர்வோர் பாதுகாப்பு பேரமைப்புமாநில தலைவரும் அகில இந்திய மக்கள் உரிமைகள் பாதுகாப்பு கழகம் தேசிய பொதுச்செயலாளர் டாக்டர் செ பால்பர்ணபாஸ் ஆணைக்கிணங்க மதுரை மாவட்ட தலைவர் பொன் ஆதிசேடன் தலைமையில் மாவட்ட செயலாளர் கூ ரமேஷ் முன்னிலையில் தேசிய மனித உரிமைகள் தின விழா கொண்டாடப்பட்டது உலகளாவிய பிரகடனம் மனித உரிமைகள் தினம் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 10 ஆம் தேதி சர்வதேச சமூகத்தால் அனுசரிக்கப்படுகிறது. இது 1948 ஆம் […]

திருக்குர்ஆனின் ஒளியில் விஞ்ஞானம்..!

திருக்குர் ஆனின் ஒளியில் விஞ்ஞானம்..! குகைவாசிகள் நீண்ட உறக்கத்திற்கு பின் எழுதல்.! அத்தியாயம் 4 “அவர்கள் தங்கிய காலத்தை இருசாராரில் நன்கறிந்தவர் யார் என்பதை அறிவிப்பதற்காகப் பின்னர் அவர்களை எழுப்பினோம்..!” (அல்குர்ஆன் 18:12) குகைவாசிகள் 300 அல்லது‌ 309 ஆண்டுகள் தூங்கியதாக சில மாறுபட்ட கருத்துக்கள் இருந்தாலும் நீண்ட ஆண்டுகள் தூங்கினார்கள் என்பது மறுக்க முடியாத உண்மையாகும். குகைவாசிகளின் எண்ணிக்கையிலும் அவர்களுடன் சென்ற நாயையும் சேர்த்து 4,6,8 என்று மாறுபட்ட கருத்துக்கள் உண்டு. அல்லாஹ்வே சரியான எண்ணிக்கையை […]

umeed இணையதளத்தில் இதுவரை பதிவு செய்யப்பட்ட வக்ஃபு சொத்துக்கள் எவ்வளவு.?

மத்திய அரசின் umeed இணையதளத்தில் வக்ஃபு சொத்துகளை பதிவு செய்ய கொடுக்கப்பட்ட காலக்கெடு 6/12/2025 ம் தேதியோடு முடிந்துவிட்டது. இந்தியா முழுவதும் உள்ள மொத்த வக்ஃபு சொத்துகளில் பாதி சொத்துகள் கூட மேற்படி இணையதளத்தில் பதிவு செய்யப்படவில்லை. இந்தியாவில் மொத்தம் 8.8 இலட்சம் வக்ஃபு சொத்துகள் இருக்கிறது இதில் உத்திரபிரதேச மாநிலத்தில் மட்டும் 2.4 இலட்சம் வக்ஃபு சொத்துகள் இருக்கிறதுஇதற்கு அடுத்ததாக மேற்கு வங்காள மாநிலத்தில் 80.480 வக்ஃபு சொத்துகள் உள்ளன. பஞ்சாப் 75.511 வக்ஃபு சொத்துகளோடு […]

மனைவியை கொலை செய்த கணவருக்கு ஆயுள் சிறை..

கடையநல்லூர் பகுதியில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட குடும்ப தகராறில் மனைவியை தையல் மிஷினில் உள்ள பெல்ட்டால் கழுத்தை இறுக்கி கொலை செய்த கணவருக்கு ஆயுள் தண்டனை மற்றும் பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதித்து தென்காசி கூடுதல் மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.   தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள மேல நீலிதநல்லூர் மேட்டு தெருவை சேர்ந்த மாரியப்பன் வெள்ளதாய் தம்பதியினரின் மகள் வேல்மதிக்கும், கடையநல்லூர் முத்து கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்த கருப்பையா என்பவரது மகன் ராமர் […]

சோழவந்தானில் அகில இந்திய விவசாய சங்கம் சார்பாக நகல் எரிப்பு போராட்டம்

மதுரை மாவட்டம் சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் முன்பாக மத்திய அரசை கண்டித்து அகில இந்திய விவசாய சங்கங்கள் சார்பாக நகல் எரிப்பு போராட்டம் நடைபெற்றது மாவட்டத் தலைவர் வேல்பாண்டி தலைமை தாங்கினார்.மாநில தலைவர் ரவீந்திரன் மத்திய அரசுக்கு எதிரான கண்டன கோஷங்களை எழுப்பினார். விதை மசோதா 2025 ரத்து செய், மின்சார திருத்த சட்டம் 2025 ரத்து செய், தொழிலாளர் நலச் சட்டங்கள் நான்கு தொகுப்புகள் ஆக்கியதை திரும்பப்பெறு என்று கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் […]

தொடர்ந்து 9-வது நாளாக இண்டிகோ விமான சேவை பாதிப்பு; பயணிகள் கடும் அவதி..

சென்னை விமான நிலையத்தில் இருந்து புறப்படும் 14 இண்டிகோ விமான சேவைகள் இன்று(டிச. 10) ரத்து செய்யப்பட்டுள்ளதாக விமான நிலைய நிர்வாகம் அறிவித்துள்ளது. விமான ஊழியர்கள் தட்டுப்பாடு காரணமாக தொடர்ந்து 9-வது நாளாக இண்டிகோ நிறுவனம் சிக்கலை சந்தித்துள்ளது. சென்னையில் இருந்து மலேசியா, தாய்லாந்து ஆகிய நாடுகளுக்கு செல்லும் விமானங்களும், தில்லி, ஹைதராபாத், கொல்கத்தா, கொச்சி, பெங்களூரு உள்ளிட்ட நகரங்களுக்குச் செல்லும் விமானங்கள் என 14 இண்டிகோ சேவைகள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளன. தொடர்ந்து 9-வது நாளாக […]

நல்லிணக்க விருதுடன் 1 கோடி பரிசு பெற்ற ஊராட்சிகள்..

தமிழ்நாடு முதலமைச்சரிடம் சமூக நல்லிணக்க விருதுடன் ரூ. 1 கோடி பரிசு பெற்ற கலிங்கப்பட்டி, கே. ஆலங்குளம் ஊராட்சி அலுவலர்களுக்கு தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் வாழ்த்து தெரிவித்தார். தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சமூக நல்லிணக்கத்தையும், சமூக ஒற்றுமையினையும் கடை பிடித்தமைக்காக தமிழ்நாடு முதலமைச்சரால் 2025-ஆம் ஆண்டிற்கான சமூக நல்லிணக்க ஊராட்சி விருது மற்றும் ரூ.1 கோடி மதிப்பிலான காசோலை தென்காசி மாவட்டம், கலிங்கப்பட்டி, கே. ஆலங்குளம் ஊராட்சிக்கு வழங்கப்பட்டது. அவ்விருதினை மாவட்ட […]

சோழவந்தானில் மழை நீர் தேங்கியதால் குடியிருப்பு வாசிகள் கடும் அவதிகுப்பைகளை சேகரிக்க முடியாமல் பேரூராட்சி பணியாளர்கள் சிரமம்

மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சி மூன்றாவது வார்டு அண்ணாமலை நகர் பகுதியில் மழைநீர் வடிகால் மற்றும் கழிவு நீர் கால்வாய் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாததால் சில தினங்களுக்கு முன்பு பெய்த மழை நீர் வெளியேறாமல் தெருக்களிலும் குடியிருப்பு பகுதிகளிலும் தேங்கியுள்ளது இதனால் இந்த பகுதியில் குடி இருப்பவர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர் குறிப்பாக அண்ணாமலை நகரின் பல்வேறு பகுதிகளில் தெருக்களில் சேரும் சகதியுமாக காணப்படுகிறது மேலும் மழைநீர் வெளியேறாத நிலையில் மழை நீருடன் கழிவு […]

SIR படிவம் நாளை 11:12:2025/ வியாழன் அன்றே கடைசி:நீங்கள் பூர்த்தி செய்து BLO விடம் கொடுத்த SIR படிவம் “SUBMITTED” ஏற்றுக்கொள்ள பட்டதா, சரிபார்த்து கொள்ளுங்கள்..

SIR படிவம் நாளை 11:12:2025 / வியாழன் அன்றே கடைசி:நீங்கள் பூர்த்தி செய்து BLO விடம் கொடுத்த SIR படிவம் “SUBMITTED” ஏற்றுக்கொள்ள பட்டதா, உடனே சரிபார்த்து கொள்ளுங்கள்.. https://voters.eci.gov.in/login SIR FORM பூர்த்தி செய்து கொடுத்தபின்னர் ஆன்லைனில் STATUS பார்க்கும் போது.. இது போன்று வருகிறது என்றால் உங்கள் FORM இன்னும் SUBMIT ஆகவில்லை என்று அர்த்தம் ஆனால் உங்கள் படிவத்தில் ஏதும் பிழை என்று நினைக்க வேண்டாம். சில தினங்களில் submit ஆகிவிடும். இதில் […]

சோழவந்தான் அருகே தென்னை நார் மதிப்பு கூட்டு பொருட்கள் உற்பத்தி பயிற்சி முகாம் நடைபெற்றது.

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே கரட்டுப்பட்டியில் தமிழ்நாடு அரசின் சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையின் தமிழ்நாடு கயிறு வணிக மேம்பாட்டு நிறுவனம் (டான் காயார்) மற்றும் வைகை காயர் குழுமம் இணைந்து தென்னை நார் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிப்பு பயிற்சி முகாம் நடைபெற்றது. இரண்டு நாள் பயிற்சி முகாமில் காயர் நீடில் பெல்ட், ரப்பரைஸ்டு காயர், பல்வேறு தோட்டக்கலை பொருட்கள், தென்னை நார் மரபலகை உள்ளிட்ட பொருட்களின் தயாரிப்பு பயிற்சி வழங்கப்பட்டது. […]

சோழவந்தான் ரயில்வே மேம்பாலத்தில் முழங்கால் அளவு பள்ளத்தில் விழுந்துஇருவர் படுகாயம்

சோழவந்தான் ரயில்வே மேம்பால பகுதியில் ஐந்துக்கும் மேற்பட்ட இடங்களில் சாலையின் நடுவே முழங்கால் அளவு பள்ளம் ஏற்பட்டுள்ளதால் இந்த வழியாக வாகனங்களில் செல்பவர்கள் விபத்தில் சிக்கி காயம் ஏற்பட்டு மருத்துவமனை செல்வது தொடர்கதையாக நடைபெற்று வருகிறது சில மாதங்களுக்கு முன்பு மேம்பாலத்தில் ஏற்பட்டுள்ள பள்ளத்தை அதிகாரிகள் தற்காலிகமாக சரி செய்து சென்றனர் ஆனால் அதன் அருகிலேயே தற்போது ஐந்துக்கும் மேற்பட்ட இடங்களில் முழங்கால் அளவு பள்ளம் ஏற்பட்டுள்ளது இதனால் மேம்பாலத்தில் வாகனத்தில் செல்பவர்கள் விபத்தில் சிக்கும் சம்பவம் […]

சோழவந்தான் அருகே கருப்பட்டி நாச்சிகுளம் பகுதியில் திமுக சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது

மதுரை வடக்கு மாவட்டம் வாடிப்பட்டி வடக்கு ஒன்றியம் கருப்பட்டி மற்றும் நாச்சிகுளம்ஊராட்சி பகுதிகளில் திமுக சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது கருப்பட்டி கிராமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு வாடிப்பட்டி வடக்கு ஒன்றிய துணைச் செயலாளர் ஜெகன் தலைமை தாங்கினார் ஒன்றிய செயலாளர் பால ராஜேந்திரன் வாடிப்பட்டி பேரூராட்சி தலைவர் பால்பாண்டியன் வாடிப்பட்டி பேரூராட்சி துணைத் தலைவர் கார்த்திக் நாச்சிகுளம் பாஸ்கரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர் சோழவந்தான் வெங்கடேசன் எம் எல் ஏ பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார் தொடர்ந்து […]

தமிழகத்தில் குளிர் அதிகரிக்கும்..

தமிழகத்தில் குளிர் அதிகரிக்கும் என தென்காசி மாவட்டத்தை சேர்ந்த வானிலை ஆராய்ச்சியாளர் வெதர் மேன் ராஜா தெரிவித்துள்ளார். இது பற்றிய அவரது வானிலை அறிவிப்பில், வட இந்திய பகுதியில் இருந்து வீசும் வறண்ட வாடைக் காற்றானது தமிழகம் வரை ஊடுறுவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்று இரவு முதல் குளிர் அதிகரிக்கும். தமிழகத்தின் வெப்ப நிலையானது இயல்பை விட 5°© வரை குறையும் என எதிர்பார்க்கப்படுவதால் தமிழ்நாட்டின் பெரும்பாலான மாவட்டங்களில் 15°©- 20°© வரை குறைந்தப்பட்ச வெப்பநிலை […]

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!