சத்தியபாதை பிப்ரவரி மாத இதழ்..

சத்தியபாதை மாத இதழின் மின் இதழை படிக்க கீழே சொடுக்கவும்.. Sathiyapathai_Feb.2025 மின் இதழ்..

வக்ஃப் திருத்த சட்ட மசோதா நகல் எரிப்பு போராட்டம்…

மத்திய அரசு பாராளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ள வக்பு சட்ட திருத்த மசோதாவிற்க்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக மதுரை எஸ்டிபிஐ ஒருங்கிணைந்த மாவட்டம் சார்பாக வக்ஃபு திருத்த சட்ட நகல் எரிப்பு போராட்டம் ஒபுளாபடித்துரை பகுதியில் நடைபெற்றது. கட்சியின் தெற்கு மாவட்ட துணைத் தலைவர் அபுதாஹிர் தொகுப்புரை வடக்கு மாவட்ட அமைப்பு பொதுச் செயலாளர் பக்ருதீன் வரவேற்புரை நிகழ்த்தினர். தெற்கு மாவட்ட தலைவர் சீமான் சிக்கந்தர், வடக்கு மாவட்ட தலைவர் பிலால்தீன் கண்டன உரை நிகழ்த்தினார். தெற்கு மாவட்ட […]

இரு சக்கர வாகனம் ஓட்டி வந்த வாகன ஓட்டிகள் 100 பேருக்கு அரை கிலோ ஸ்வீட் வழங்கி காதலர் தின வாழ்த்துகள் தெரிவித்த காவல் துறையினர்..

தஞ்சை மாநகர காவல் துறையினர் ஹெல்மெட் அணிந்து இரு சக்கர வாகனம் ஓட்டி வந்த வாகன ஓட்டிகள் 100 பேருக்கு அரை கிலோ ஸ்வீட் வழங்கி காதலர் தின வாழ்த்துகள் தெரிவித்தனர். இருபாலர் மட்டும்தான் காதலர் தினம் கொண்டாட வேண்டும் என்பது இல்லை அனைவரிடமும் அன்பை வெளிப்படுத்தி காதலர் தின வாழ்த்துகள் கூறலாம் என்பதை வெளிப்படுத்தும் வகையில் தஞ்சை மாநகர காவல்துறையினர் தஞ்சை புதிய பேருந்து நிலையம் சாலையில் காதலர் தினத்தை ஓட்டி ஹெல்மெட் விழிப்புணர்வு நிகழ்ச்சியை […]

நெல்லையில் இலச்சினை வெளியீட்டு விழா..

நெல்லை பொதிகைத் தமிழ்ச் சங்கத்தின் 10-வது ஆண்டு தொடக்க விழாவிற்காக புதியதாக உருவாக்கப்பட்டு உள்ள சிறப்பு இலச்சினை (லோகோ) வெளியீட்டு விழா நெல்லையில் நடைபெற்றது. திருநெல்வேலியை தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் பொதிகைத் தமிழ்ச் சங்கத்தின் 10-வது ஆண்டு தொடக்க விழா வருகின்ற மார்ச் மாதம் 7-ஆம் நாள் அன்று பாளையங்கோட்டையில் வெகு விமரிசையாக நடக்க உள்ளது.   விழாவில், சிறப்பு மலர் ஒன்று வெளியிடப்பட உள்ளது. இந்த விழாவிற்காக சிறப்பு இலட்சினை (லோகோ) ஒன்று […]

நெல்லையில் 262 கிலோ கஞ்சா தீயிட்டு அழிப்பு..

திருநெல்வேலி சரகத்தில் கஞ்சா வழக்குகளில் கைப்பற்றப்பட்ட 262 கிலோ கஞ்சா பொருட்கள் திருநெல்வேலி மாவட்டம் விஜய நாராயணம் பகுதியில் உள்ள தனியார் கம்பெனியில் வைத்து காவல் துறையினரால் தீயிட்டு அழிக்கப்பட்டன. திருநெல்வேலி சரகத்திற்கு உட்பட்ட திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கஞ்சா வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகளிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட 262 கிலோ 884 கிராம் பொருட்கள் காவல்துறை கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டு இருந்தது. அவற்றை அழிக்க நீதிமன்றங்கள் ஆணை பிறப்பித்திருந்தன. இந்நிலையில், திருநெல்வேலி சரக […]

ராமநாதபுரத்தில் அரசு பேருந்தும் காரும் மோதி விபத்து.! 03 பேர் இறப்பு ஒருவர் காயம்..!!

இராமநாதபுரம் அடுத்த புத்தேந்தல் விளக்கு பகுதியில் அரசு ஏசி பேருந்தும் காரும் நேருக்கு நேர் மோதி விபத்தில் காரில் வந்த மூவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர்.  ராமநாதபுரத்தில் இருந்து மதுரை சென்ற அரசு பேருந்தும் மதுரையிலிருந்து ராமநாதபுரம் வந்த குவாலிஸ்  காரும்  ராமநாதபுரம் சேதுபதி கலைக்கல்லூரி அருகே நேருக்கு  நேர் மோதி விபத்து ஏற்பட்டதில்  காரில் பயணம் செய்த விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து காவிரி கூட்டு குடிநீர் திட்ட பணிக்காக வந்த தனியார் […]

மதுரை ரேடியோ மிர்ச்சியின் (தனியார் பண்பலை) “லவ் மாங்க்” நிகழ்ச்சி.!

மதுரை, பிப்ரவரி 14: காதலர் தினத்தையும், வானொலி தினத்தையும் முன்னிட்டு 98.3 ரேடியோ மிர்ச்சி தனது நேயர்களுக்காக சிறப்பு நிகழ்ச்சி ஒன்றை நடத்தியது. “லவ் மாங்க்” என பெயரிடப்பட்ட இந்த நிகழ்ச்சி, அன்பை மட்டுமே பரப்பும் நோக்கத்தில் உருவாக்கப்பட்டு, இதில் மிர்ச்சி RJ நிதீஷ், “காதல் ஞானி” ஆக தோன்றி, நேயர்களை ஆச்சரியப்படுத்தினார். காதல், அன்பு, மனிதநேயத்தின் முக்கியத்துவத்தை வேடிக்கையான முறையில் விளக்கி, அனைவருக்கும் மனமகிழ்வை ஏற்படுத்தினார். இந்த நிகழ்ச்சியில் மதுரை கேகே நகரில் உள்ள ரேடியோ […]

கீழக்கரையில் பட்டமளிப்பு விழா.!

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தனியார் மகாலில் சின்னமாயாகுளம் அருகே அமைந்துள்ள இர்ஃபானுல் உலூம் எத்தீம்கானா & ஹிஃப்ளு மதரஸாவின் 10 ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா & 19 ஆம் ஆண்டு விழா மதரஸா நிறுவனரும் வட்டார ஜமாத்து உலமா சபை தலைவருமான அப்பாஸ் அலி மன்பஈ தலைமையில் நடைபெற்றது. இராமநாதபுரம் மாவட்ட ஜமாஅத்துல் உலமாசபை கௌரவ தலைவர் அஹ்மது இப்றாஹீம் மிஸ்பாஹி ஃபாழில் ரஷாதி ஜாமிஆ அருவிய்யா தைக்கா முதல்வர் ஸலாஹுத்தீன் ஜமாலி ஃபாழில் உமரி உட்பட […]

100 நாள் வேலை திட்ட தொழிலாளர்கள் போராட்டம் வாபஸ். அமைதி பேச்சு வார்த்தை கூட்டத்தில் முடிவு

பூதலூர் ஒன்றியத்தில் 100 நாள் திட்ட தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய நீண்ட நாள் சம்பள பாக்கியை உடனே விடுவிக்க கோரியும்,கன மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு பயிர் இழப்பீட்டு தொகை வழங்க வலியுறுத்தியும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கம் பூதலூர் தெற்கு ஒன்றியக்குழு சார்பில் பூதலூரில் பிப்ரவரி 14 அன்று கோரிக்கை ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது.இந்நிலையில் இன்று மாலை (பிப்ரவரி 13) போராட்டக்காரர்களுடன் பூதலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் மறிய ஜோசப் தலைமையில் […]

அரசால் தடை செய்யப்பட்ட ரூ.4 கோடி மதிப்பிலான 4 கிலோ திமிங்கலத்தின் உமிழ் நீர் பறிமுதல்.! ஆறு பேர் கைது.!!

ராமநாதபுரம் அருகே போலிசார் நடத்திய வாகன சோதனையின் போது விற்பனைக்காக காரில் எடுத்து வரப்பட்ட அரசால் தடை செய்யப்பட்ட திமிங்கலத்தின் உமிழ் நீர் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டு காரில் வந்த ஆறு பேரை கைது மேல் விசாரணைக்காக வனத்துறை அதிகாரிகளிடம்  ஒப்படைக்கப்பட்டனர். ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தீஷ்க்கு மதுரையை சேர்ந்த சிலர் அரசால் தடை செய்யப்பட்ட திமிங்கலத்தின் உமிழ்நீரை ஆன்லைனில் விற்பனை செய்வதாகவும், அதனை ராமநாதபுரத்தை சேர்ந்த சிலர் வாங்க இருப்பதாகவும் தகவல் கிடைத்தது. இதையடுத்து சட்டவிரோதமாக […]

இலங்கைக்கு கடத்த இருந்த ரூ.10 லட்சம் மதிப்பிலான 2 டன் உலர்ந்த இஞ்சி (சுக்கு) பறிமுதல் .!

இலங்கைக்கு கடத்த இருந்த ரூ.10 லட்சம் மதிப்பிலான 2 டன் உலர்ந்த இஞ்சி (சுக்கு) பறிமுதல்: ஒருங்கிணைந்த குற்ற தடுப்பு பிரிவு போலீசார் நடவடிக்கை..!   ராமநாதபுரம் மாவட்ட கடல் பகுதி இலங்கைக்கு மிக அருகே இருப்பதால் ராமநாதபுரம் கடல் வழியாக இலங்கைக்கு கஞ்சா, உலர்ந்த இஞ்சி, பீடி இலை பண்டல்கள், வலி நிவாரணி மாத்திரைகள், பூச்சிக்கொல்லி மருந்து உள்ளிட்ட பொருட்கள் நாட்டு படகுகளில் சமீபகாலமாக அதிக அளவில் கடத்தப்பட்டு வருகிறது.   இந்நிலையில், ராமநாதபுரம் ஒருங்கிணைந்த […]

திருவாடானை அருகே  புனித லூர்து அன்னை ஆலயம் விழா.!

திருவாடானை அருகே  புனித லூர்து அன்னை ஆலயம் திருப்பலி மற்றும் சப்பர பவனி விமரிசையாக நடந்தது.! ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகா, மங்களகுடியை அடுத்துள்ள கஸ்பார்நகர் புனித லூர்து அன்னை ஆலயம் திருப்பலி மற்றும் சப்பர பவனி விமர்சியாக நடந்தது.  இந்த ஆலயத்திற்கு திருப்பலி மற்றும் சப்பரபவனியானது கடந்த பிப் 3-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. கடைசி நாளான இன்று புனித லூர்து அன்னை ஆலயம் சிறப்பு சொரூபம் பல்லக்கில் எழுந்தருளி அதனை இறை மக்கள் கூட்டத்துடன்  குருந்தங்குடி […]

ராமநாதபுரம் அருகே காரில் கடத்தி வரப்பட்ட 250 கிலோ கஞ்சா பறிமுதல்..!

ராமநாதபுரம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் தெலுங்கானா மாநிலத்தில் இருந்து இலங்கைக்கு கடத்துவதற்காக காரில் கொண்டுவரப்பட்ட 250 கிலோ கஞ்சாவை போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். ராமேஸ்வரத்திற்கு காரில் இலங்கைக்கு கடல் வழியாக கடத்துவதற்காக தெலுங்கானா மாநிலத்தில் இருந்து கஞ்சா கடத்தி வருவதாக போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் ராமநாதபுரம் தேசிய நெடுஞ்சாலையில் ராம் நகர் பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த தெலுங்கான மாநில காரை போதைப்பொருள் தடுப்பு […]

கல்வியும்,சுகாதாரமும் இரு கண்களாக கருதி முதலைமைச்சர் வழியில் அமைச்சர்கள் பணியாற்றி வருகிறோம்- அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

மதுரை மத்திய சட்டமன்ற தொகுதி உறுப்பினரும், மாண்புமிகு தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சருமான பழனிவேல் தியாகராஜன் தத்தனேரி அருள்தாஸ்புரம் வார்டு 22இல், மாநகராட்சி திரு.வி.க மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு ஹனிவெல் நிறுவனத்தின் அறிவியல் உபகரணங்கள் தொகுப்பினை வழங்கினார்.இந்த நிகழ்வில் மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி பொன் வசந்த்,மாநகராட்சி ஆணையாளர் சித்ரா விஜயன்,மண்டலத்தலைவர் சரவண புவனேசுவரி,மாநகராட்சி கல்விக்குழுத்தலைவர் ரவிச்சந்திரன்,மாமன்ற உறுப்பினர் மகாலெட்சுமி,பள்ளித்தலைமை ஆசிரியர் அன்புச்செல்வன்,ஹனிவெல் நிறுவனத்தின் அதிகாரி கிருஷ்ணா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.இந்நிகழ்வில் பேசிய […]

பஸ் வசதி இல்லாதது லான விவசாயம் செய்ய முடியல -பரமன் பட்டி கிராம மக்கள் வேதனை

மதுரை மாவட்டம் சேடப்பட்டி ஊராட்சி ஒன்றியம் குப்பல்நத்தம் பஞ்சாயத்தைச் சேர்ந்தது பரமன்பட்டி கிராமம். இக் கிராமத்தில் 350 மேற்பட்ட குடும்பங்களும் அருகிலுள்ள ஆண்டிபட்டி கிராமத்தில் 450க்கும் மேற்ப்பட்ட குடும்பங்களும் வசித்து வருகின்றன. இக் கிராமங்களுக்கு செல்ல வேண்டுமென்றால் அருகில் உள்ள சின்ன கட்டளை கிராமத்தில் இறங்கி சுமார் மூன்று கிலோ மீட்டர் தூரம் நடந்து வர வேண்டும். மேலும் கிராமத்தில் உள்ள பள்ளி குழந்தைகள் மேல்நிலை பள்ளி மற்றும் கல்லூரியில் படிக்க வேண்டும் என்றால் சின்ன கட்டளை […]

பாவூர் சத்திரம் பகுதியில் அரசு கலை கல்லூரி; முதல்வருக்கு வைகோ கோரிக்கை..

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் பகுதியில் அரசு கலைக் கல்லூரி அமைக்க வேண்டும் என தமிழக முதல் அமைச்சருக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்த அறிக்கையில், தென்காசி மாவட்டம், கீழப்பாவூர் ஒன்றியம், பாவூர்சத்திரம் பகுதி கல்வியிலும், வர்த்தகத்திலும் வேகமாக வளர்ந்து வரும் பகுதியாக உள்ளது. கீழப்பாவூர் பேரூராட்சி, குலசேகரப் பட்டி, கல்லூரணி ஊராட்சிகள் உட்பட நூற்றுக் கணக்கான கிராமங்களுக்கு மையப் பகுதியாக பாவூர்சத்திரம் விளங்கி வருகிறது.   இவ்வட்டாரத்தில் உள்ள 11 அரசு […]

மதுரையில் அலங்கார மீன் வளர்ப்பு குழுவின் மதிப்பு கூட்டல் குறித்த கருத்தரங்கு

மதுரை பைபாஸ் ரோடு பகுதியில் உள்ள தனியார் அறையில் இந்திய அரசு மற்றும் தமிழ்நாடு மாநில மீன்வளத்துறை தேசிய மீன்வள அறுவடை பின்சார் தொழில்நுட்பம் மற்றும் பயிற்சி நிறுவனம் மற்றும் தேசிய மீன்வளம் மேம்பாட்டு வாரியம் சார்பாக அலங்கார மீன் வளர்ப்பு குழுவின் மதிப்பு கூட்டல் குறித்த கருத்தரங்கு நடைபெற்றது.இந்நிகழ்வில் மதுரை மாவட்ட வருவாய் அதிகாரி சக்திவேல் தொடங்கி வைத்தார்.தொடர்ந்து சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ஒடிசாவின் முதன்மை விஞ்ஞானி டாக்டர் சரோஜ் குமார் நன்னீர் அலங்கார […]

மாமன்னர் திருமலை நாயக்கர் அவர்களின் 442 வது பிறந்தநாள் விழா பண்டைய கால பாரம்பரிய முறைப்படி கொண்டாடப்பட்டது,

மாமன்னர் திருமலை நாயக்கர் அவர்களின் 442வது பிறந்த நாளை முன்னிட்டு மதுரை திருமலை நாயக்கர் மஹாலில் உள்ள மாமன்னர் திருமலை நாயக்கர் அவர்களின் திருஉருவசிலைக்கு தமிழ் வழி நாய்டு மக்கள் பேரவையின் தலைவர் செந்தில்குமார் நாயுடு அவர்கள் தலைமையில் மாமன்னர் திருமலை நாயக்கர் அவர்களின் திரு உருவசிலைக்கு பண்டைய கால பாரம்பரிய முறைப்படி 400 ஆண்டுகளுக்கு முன்பு மாமன்னர் திருமலை நாயக்கர் அவர்களின் ஜெயந்தி விழா அன்று அரண்மனையில் எவ்வாறு மரியாதை செலுத்தப்பட்டதோ, அதேபோன்று வரலாற்றை மீட்கும் […]

பாப்பாபட்டி ஆச்சி கிழவி அறக்கட்டளை துவக்கம்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பிரசித்திப்பெற்ற பாப்பாபட்டி ஒச்சாண்டம்மன் கோவில். இக்கோவில் சாமியை குல தெய்வமாக வழிபடுபவர்கள் இந்தியாவின் பல பகுதிகளிலும் உள்ளனர்.இந்நிலையில் தேனி மாவட்டம் கம்பத்தை பூர்விகமாகக் கொண்ட இக்கோவில் வம்சாவளியினர் பிற்படுத்தப்பட்ட சமுதாய மக்களின் குழந்தைகள் கல்வி வளர்ச்சிக்காக பாப்பாபட்டி ஆச்சி கிழவி அறக்கட்டளை என்னும் பெயரில் புதிதாக அறக்கட்டளை துவங்கியுள்ளனார்.இதன் அறிமுகநிகழ்ச்சியாக தைப்பூச திருநாளிலன்று உசிலம்பட்டி அருகே பாப்பாபட்டி ஒச்சாண்டம்மன் கோவிலில் பொங்கல் வைத்து ஒச்சாண்டம்மனை வழிபட்டனர்.பாப்பாபட்டி பத்து தேவர் சார்பாக முதற்கட்டமாக […]

திண்டுக்கல் அருகே சரக்கு வேனில் ரேஷன் அரிசி கடத்திய நபர் கைது! 1500 கிலோ ரேஷன் அரிசி, சரக்குவேன் பறிமுதல்..

திண்டுக்கல் அருகே சரக்கு வேனில் ரேஷன் அரிசி கடத்திய நபர் கைது! 1500 கிலோ ரேஷன் அரிசி, சரக்குவேன் பறிமுதல்.. திண்டுக்கல் குடிமை பொருள் வழங்கள் குற்ற புலனாய்வுத்துறை இன்ஸ்பெக்டர் சுகுணா அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் சார்பு ஆய்வாளர் ராதா மற்றும் காவலர்கள் திண்டுக்கல், வத்தலகுண்டுரோடு பைபாஸ் பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது வேகமாக வந்த சரக்கு வேனை நிறுத்தி சோதனை செய்ததில் அதில் ரேஷன் அரிசி கடத்திச் செல்வது தெரியவந்தது இதனை […]

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!