கடையம் அருகே அரசு பள்ளியில் ஆண்டுவிழா..

தென்காசி மாவட்டம் கடையம் அருகில் உள்ள முதலியார் பட்டி அரசு மேல் நிலைப் பள்ளியின் ஆண்டு விழா ஊராட்சி மன்ற தலைவி மைதீன் பீவி ஹசன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், உதவி தலைமை ஆசிரியர் ஸ்டீபன் வரவேற்றார். பள்ளி தலைமை ஆசிரியை முத்துலட்சுமி நாச்சியார் ஆண்டறிக்கை வாசித்தார். தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் அப்துல் ரஹ்மான், தென் பொதிகை வியாபாரிகள் நலச் சங்க தலைவர் கட்டி அப்துல் காதர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். ஊராட்சி மன்ற துணைத் […]

சோழவந்தானில் 1.67 கோடி மதிப்பில் புதிய சார் பதிவாளர் அலுவலக புதிய கட்டிடம் பூமி பூஜை. வெங்கடேசன் எம் எல் ஏ பங்கேற்பு

சோழவந்தானில் 1.67 கோடி மதிப்பில் சார்பதிவாளர் அலுவலகம் புதிய கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜை விழா பழைய சார் பதிவாளர் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது இந்த நிகழ்ச்சியில் சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் எம் எல் ஏ கலந்துகொண்டு பணிகளை தொடங்கி வைத்தார் ஒன்றிய செயலாளர் பசும்பொன் மாறன் பேரூராட்சித் தலைவர் எஸ் எஸ் கே ஜெயராமன் பேரூர் செயலாளர் வழக்கறிஞர் சத்திய பிரகாஷ் பொதுக்குழு உறுப்பினர் ஸ்ரீதர் சி பி ஆர் சரவணன் பிற்பட்டோர் நலத்துறை […]

தஞ்சாவூரில் மகாத்மா காந்தி நினைவு தினம்.! 

தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு மற்றும் தமிழ்நாடு மக்கள் ஒற்றுமை மேடை தஞ்சை மாநகரம் சார்பில், தஞ்சை மாநகராட்சி வளாகத்தில் உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, மத நல்லிணக்க உறுதிமொழி ஏற்கப்பட்டது.      இதில், சிறுபான்மை மக்கள் நலக்குழு மாநிலச் செயலாளர் பி.செந்தில்குமார் சிறப்புரையாற்றினார். மாவட்டச் செயலர் என்.குருசாமி,    மாநகரத் தலைவர் ஹெச்.அப்துல் நசீர், மக்கள் ஒற்றுமை மேடை நிர்வாகிகள் இரா.புண்ணியமூர்த்தி,    மக்கள் ஒற்றுமை மேடை ப.சத்தியநாதன்,  […]

கல்லூரி மாணவியின் கல்லூரி கட்டணத்தை செலுத்திய தஞ்சை ஜோதி அறக்கட்டளை.!

மகள் படித்து பட்டம் பெற வீட்டில் இருக்கும் கடைசி பொருளான மறைந்த கணவர் நினைவாக வைத்திருந்த தாலியை விற்று கல்விக்கட்டணம் செலுத்த முயன்ற ஏழைத்தாய் . அடகு கடைக்காரர் மூலம் கேள்விப்பட்டு கல்லூரி கல்விக்கட்டணம் உள்ளிட்டவற்றை முழுமையாக செலுத்தி தாயின் தாலியை மீட்ட சமூக ஆர்வலர் . நாகப்பட்டிணம் மாவட்டம், சிக்கல் கிரமத்தை சேர்ந்தவர் முருகதாஸ் – பெரியநாயகி தம்பதிகள் . இவர்களுக்கு ரோகிணி,துர்காதேவி என்ற இரு மகள்கள் உள்ளனர் . முருகதாஸ் அன்றாடம் கூலி வேலைக்கு […]

ராமேஸ்வரத்தில் 2 ஆண்டுகளுக்கு பின் சென்ற பயணிகள் இல்லாத ரயில் .!

ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் கடலில் ரூ.545 கோடி மதிப்பில் கட்டி முடித்த செங்குத்து தூக்கு புதிய ரயில் பாலம் திறப்பு விழாவிற்கு காத்திருக்கிறது. இந்நிலையில் பாம்பன் பழைய ரயில் பாலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக ராமேஸ்வரத்திற்கு 2022 டிச 23 முதல் ரயில் சேவை முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது.  இந்நிலையில் ராமேஸ்வரம் வரும் அனைத்து ரயில்களும் பயணிகளை மண்டபம் ரயில் நிலையத்தில் இறக்கி விட்டு ரயில் பெட்டிகளை சுத்தம் செய்ய மதுரை ரயில் நிலையத்திற்கு கடந்த 2 […]

தீண்டாமை ஒழிப்பு உறுதி மொழியேற்ற காவலர்கள்..

ஜனவரி 30 தீண்டாமை ஒழிப்பு நாளை முன்னிட்டு தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S. அரவிந்த் உத்தரவின் பேரில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் வேணு கோபால் தலைமையில் மாவட்ட காவல் அலுவலகத்தில் பணிபுரியும் அனைத்து காவல் துறையினர் மற்றும் அமைச்சுப் பணியாளர்கள் இணைந்து தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இதேபோல் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் காவல் துறையினர் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.   இதில் இந்திய அரசியலமைப்பின் பால் இடைவிடாத, […]

திருவாடானை வட்டச்சட்ட பணிகள் குழு சார்பில் புகைப்பட கண்காட்சி .! நீதி அரசர்கள் பங்கேற்பு .!!

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா அலுவலக அருகில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் செயல்படும் வரும் வட்ட சட்ட பணிகள் குழு சார்பில் சட்டப் பணிகள் பற்றியும் வழக்கறிஞர்கள் செய்த தொண்டுகளை பற்றியும் புகைப்பட கண்காட்சி நடைபெற்றது      புகைப்படக்கண்காட்சியில் நீதிபதி மனிஷ்குமார் நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி ஆண்டனி ரிசாட் சேவ் கலந்து கொண்டு சட்டம் பற்றியும்,  வட்டச் சட்டப் பணிகள் குழு ஆற்றிய தொண்டுகள் பற்றியும் எடுத்துரைத்தனர். எந்தவித பிரச்சினையாக இருந்தாலும் இலவசமாக வழக்குகள் நடத்தி […]

மேட்டுப்பாளையம்தலைமை அஞ்சல் நிலையத்தில்அஞ்சல் சமூக வளர்ச்சி விழா.!

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் தலைமை அஞ்சல் வளாகத்தில் அஞ்சல் சமூக வளர்ச்சி விழா தலைமை அஞ்சலக அதிகாரி நாகஜோதி  தலைமையில் நடைபெற்றது இவ்விழாவில் அஞ்சலகத்தில் வழங்கப்படும் சேவைகள் குறித்து தலைமை அதிகாரி விளங்கிக் கூறினார். இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களாக நகரவை பெண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் இந்திரா மற்றும் முதுகலை ‌வணிகவியல் ஆசிரியர் ஆனந்தகுமார் கலந்து கொண்டு அஞ்சல் துறை சேவைகளையும் தாங்கள் அடைந்த பயன்களையும் எடுத்துரைத்தனர் மேலும் பொதுமக்கள் சேமிக்க அஞ்சலகம் மட்டுமே சிறந்தது […]

ராமநாதபுரம் அருகே அழகன்குளம் நாடார்வலசை டாஸ்மாக் மதுபான கடையை அகற்றக்கோரி பெண்கள் போராட்டம் .!

ராமநாதபுரத்தை அடுத்த அழகன்குளம் நாடார்வலசையில் இயங்கி வரும் டாஸ்மாக் மதுபான கடையால் ஏராளமான பொதுமக்கள் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் ஊருக்குள் செயல்படும் அந்த டாஸ்மாக் மதுபான கடையால் பலரின் குடும்பம் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் பள்ளி மாணவ மாணவிகளுக்கும் வேலைக்குச் செல்லும் பெண்களுக்கும் கோயிலுக்கு செல்வோருக்கும் இடையராக இருந்து வருவதாகவும் இதற்காக ஏற்கனவே பலமுறை போராட்டங்கள் நடத்தியும் மதுபான கடையை அகற்றுவதாக வாக்குறுதி அளித்த அதிகாரிகள் இன்று வரை அந்த டாஸ்மாக் மதுபான கடையை அங்கிருந்து அகற்றவில்லை […]

தினைதுறை சார்பில் தொழில் முனைவோருக்கு தொடக்க வாய்ப்புகள் குறித்த பயிற்சி  முகாம்.!

ராமநாதபுரம் மாவட்டத்தில்  முகமது சதக் ஹமிது கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியில் மனையியல் துறை நடத்திய தினை துறையின் தொழில் முனைவோருக்கு தொடக்க வாய்ப்புகள் குறித்த பயிலரங்கு  நடைபெற்றது. கல்லூரி முதல்வர் மீரா தலைமை வகித்தார். சென்னை இயற்கை ஆர்வலர், . சீதா லட்சுமி, சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அவர் தினை பயன்படுத்தி எவ்வாறு தொழில் செய்வது என்றும் அதன் நுணுக்கங்கள் மற்றும் விதிமுறைகளை எடுத்துரைத்தார். கீழக்கரை, நுகர்வோர் நலச் சங்கம் தலைவர்,  செய்யது […]

பெரியாரை இழிவுபடுத்தும் கூலிக் காரர்களை எதிர்த்து அரசியல்; கனிமொழி எம்.பி பேச்சு..

“பெரியாரை இழிவுபடுத்தும் கூலிக் காரர்களை எதிர்த்து அரசியல் செய்யும் சூழல் உள்ளது” என தென்காசி  மாவட்டம் சுரண்டை பகுதியில் நடந்த திமுக பொதுக் கூட்டத்தில் கனிமொழி கருணாநிதி எம்.பி தெரிவித்துள்ளார். தென்காசி தெற்கு மாவட்ட திமுக சார்பில் திராவிட மாடல் ஆட்சியின் சாதனை விளக்கப் பொதுக் கூட்டம் தென்காசி மாவட்டம் சுரண்டை பகுதியில் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்ட நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி கலந்து கொண்டு […]

விஜய் உடன் கைகோர்க்கும் ஆதவ் அர்ஜுனா.. தவெகவில் முக்கிய பொறுப்பு..?

விஜய் உடன் கைகோர்க்கும் ஆதவ் அர்ஜுனா.. தவெகவில் முக்கிய பொறுப்பு..? தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய் உடன் விசிகவின் முன்னாள் துணை பொதுச்செயலாளராக இருந்த ஆதவ் அர்ஜுனா சந்திப்பு நடத்தியுள்ளார். இந்த சந்திப்புக்கு பின், ஆதவ் அர்ஜுனா விஜய் கட்சியில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் பலமான கட்டமைப்பை உருவாகக் விஜய் முயற்சித்து வருகிறார். அதற்கு வலுசேர்க்கும் வகையில் ஆதவ் அர்ஜுனாவை கட்சியில் இணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பான அறிவிப்பை […]

பொதுமக்கள் சாலை மறியல் எதிரொலி. அதிகாரிகள் உடனடி நடவடிக்கை

வாடிப்பட்டி அருகே நகரி பகுதியில் 3 மாதங்களாக குடிநீர் வரவில்லை எனக் கூறி நேற்று காலை மதுரை திண்டுக்கல் தேசிய நான்கு வழிச்சாலையில் பொதுமக்கள் சாலை மறியல் செய்தனர் இந்த நிலையில் உடனடியாக குடி நீர் கிடைப்பதற்கு ஏற்பாடு செய்யப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்ததன் பேரில் ஒரு மணி நேரம் நடைபெற்ற பஸ் மறியல் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டது இந்த நிலையில் நேற்று மாலை முதல் அலங்காநல்லூர் யூனியன் தனி அலுவலர் அய்யங் கோட்டை ஊராட்சி […]

பெண் தாசில்தார் அலுவலகத்தை முற்றுகையிட முயன்றதால் பரபரப்பு.!

அரசு நிலம் ஆக்கிரமிப்பு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் கண்டித்து பெண் தாசில்தார் அலுவலகத்தை முற்றுகையிட முயன்றதால் பரபரப்பு ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே கருங்கவயல் கிராமத்தில் அரசு புறம்போக்கு இடம் சுமார் மூன்று ஏக்கர் நிலம் உள்ளதாகவும் அந்த இடத்தை யாரும் ஆrக்கிரமிப்பு செய்யக்கூடாது எனவும் மாவட்ட வருவாய் அலுவலர் உத்தரவிட்டு இருந்த நிலையில் கடந்த காலங்களில் இருந்த கிராம நிர்வாக அலுவலர் யாரும் ஆக்கிரமிக்காத அளவில் நடவடிக்கை எடுத்து வந்துள்ளார். இந்நிலையில் தற்போது […]

பான் கார்டு விண்ணப்பிக்கும் இணையதளம் தமிழிலும் இருக்க வேண்டும் – நடிகர் விஜய் சேதுபதி

மதுரை தமுக்கம் மைதானத்தில் வருமான வரித்துறை சார்பில் வரி செலுத்துவோர் மையம் இன்று துவங்கி மூன்று நாட்கள் நடைபெறும் நிலையில் திரைப்பட நடிகர் விஜய் சேதுபதி சிறப்பு விருந்தினராக பங்கேற்று மையத்தினை திறந்து வைத்தார். பின்னர் மேடையில் பேசுகையில்,”பான் கார்டு விண்ணப்பிக்கும் இணையதளம் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே உள்ளது.தமிழில் இருந்தால் பார்த்து புரிந்து கொள்வதற்கு வசதியாக இருக்கும்.ஏதாவது பிரச்சினை வரும்போது தான் என்ன என்று தெரிந்து கொள்கிறோம்.அதுபற்றிய விளக்கமும் தெளிவும் நமக்கு புரிகின்ற மொழியில் இருந்தால் […]

தென்காசி மாவட்டத்தில் கனிமொழி எம்.பி..

திமுக பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி இன்று மாலை தென்காசி மாவட்டத்திற்கு வருகை தர உள்ளார். பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். அவருக்கு தெற்கு மாவட்ட திமுக சார்பில் ஆலங்குளம் பெருந்தலைவர் காமராஜர் சிலை அருகில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட உள்ளதாக தென்காசி தெற்கு மாவட்ட பொறுப்பாளர் வே.ஜெயபாலன் தெரிவித்து உள்ளார். மேலும், ஆலங்குளத்தில் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசுகிறார் கனிமொழி. தொடர்ந்து கீழப்பாவூர் கிழக்கு ஒன்றியம், மேலப் பட்டமுடையார் […]

தென் தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் மழை துவங்குகிறது..

தென் மாவட்டங்களில் நான்கு நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், அடுத்த 24 மணி நேரத்தில் மழை துவங்கும் எனவும் வானிலை ஆராய்ச்சியாளர் வெதர் மேன் ராஜா தெரிவித்துள்ளார். இது பற்றிய வானிலை அறிவிப்பில், பூமத்திய ரேகையை ஒட்டிய இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் நிலவும் காற்று சுழற்சி காரணமாக வரும் 24 மணி நேரத்தில்   தென் தமிழக மாவட்டங்களில் மழை துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்று முதல் அடுத்த 4 நாட்களுக்கு தென் மாவட்டங்களில் வானம் மேக மூட்டத்துடன் […]

திருச்சியில் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்.!  அடிக்கல் நாட்டிய துணை முதலமைச்சர் .!!

திருச்சியில் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்.!  அடிக்கல் நாட்டிய துணை முதலமைச்சர் .!!  திருச்சி கொட்டப்பட்டு அகதிகள் மறுவாழ்வு முகாம் அருகில் ரூ 33.29 கோடியில் திருச்சி கிழக்குத் தொகுதி கொட்டப்பட்டு இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் புதிய கட்டுமான பணி திருச்சி – புதுக்கோட்டை சாலை கொட்டப்பட்டு இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் ரூ 33.29 கோடியில் கட்டப்பட உள்ளது. இந்த புதிய கட்டுமான பணி அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது. விழாவில் துணை […]

நெல்லை மற்றும் தென்காசி மாவட்டத்தில் மின்தடை

திருநெல்வேலி மின் பகிர்மான வட்டத்தில் உள்ள பாளையங்கோட்டை மற்றும் கடையநல்லூர் உப மின் நிலையங்களில் மட்டும் 30.01.2025 (நாளை) வியாழக் கிழமை அன்று மாதந்திர பராமரிப்பு பணிகள் நடை பெற உள்ளதால் பாளையங்கோட்டை மற்றும் கடையநல்லூர் உப மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் 30.01.2024 அன்று மின் விநியோகம் இருக்காது என மின்வாரியம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.   திருநெல்வேலி மாவட்டம் பாளையங் கோட்டை (110/33-11KV) துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் வருகிற […]

வாறுகால் வசதி கேட்டு திடீரென திரண்டு வந்த பெண்கள்; சுரண்டையில் பரபரப்பு..

சுரண்டை நகராட்சி பகுதியில் வாறுகால் அமைத்திட வலியுறுத்தி திடீரென பெண்கள் திரண்டு வந்து மனு அளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தென்காசி மாவட்டம் சுரண்டை நகராட்சி 12-வது வார்டுக்கு உட்பட்ட 8-வது தெருவில் வாறுகால் வசதி இல்லை எனவும், இப்பகுதியில் உள்ள கழிவு நீர் அனைத்தும் தனியார் நிலத்தில் தேங்குவதாகவும், இதனால் துர்நாற்றம் ஏற்பட்டு சுகாதாரக் கேடு மற்றும் டெங்கு காய்ச்சல் போன்ற நோய்கள் ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது.  இந்த நிலையில், இப்பகுதியில் விரைவில் வாறுகால் வசதி அமைத்து தர […]

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!