கல்வி குழுமத்தின், கல்வி இன்டர்நேஷனல் பப்ளிக் பள்ளியில், அமெரிக்காவின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான Mobicip உடன் இணைந்து வேலைவாய்ப்பு இயக்கம் (Placement Drive) நடைபெற்றது. இந்த நிகழ்வில் 12 மாணவர்கள் Mobicip நிறுவனத்திலிருந்து நேரடியாக தேர்வு செய்யப்பட்டு, உடனடியாக வேலைவாய்ப்பு ஆணை பெற்றனர். இந்த நிகழ்ச்சியில் கல்வி குழுமத்தின் தலைவர் Dr. Senthilkumar தலைமையேற்று நடத்தினார். Mobicip நிறுவனத்தின் Founder & CEO திரு. Suren Ramasubbu மற்றும் Co-founder & CTO Pradeep Adhipathi ஆகியோர், […]
Category: செய்திகள்
சோழவந்தான் அருகே மேலக்காலில் தாழ்வாக சென்ற மின்வயர்கள்ஒரே நாளில் நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கு பொதுமக்கள் பாராட்டு
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே மேலக்கால் ஊராட்சிக்கு உட்பட்ட குடியிருப்பு பகுதிகளில் மின் வயர்கள் தாழ்வாக செல்வதால் விபத்துக்கள் ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் ஆகையால் பொதுமக்களின் நலன் கருதி மின்சார துறை அதிகாரிகள் உடனடியாக தாழ்வாக செல்லும் மின் வயர்களை உயர்வான பகுதிகளுக்கு மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தனர் இதுகுறித்து செய்தி கடந்த வியாழக்கிழமை பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சிகளில் செய்தியாக வெளிவந்திருந்தது இந்த நிலையில் சம்பந்தப்பட்ட இடத்திற்கு வந்த கீழமாத்தூர் மின்வாரிய […]
கொலை வழக்கில் 16 ஆண்டுகளுக்கு பிறகு தீர்ப்பு – 4 பேருக்கு ஆயுள் தண்டனை!
கும்பகோணத்தில் நடந்த கொலை வழக்கு ஒன்றில் 16 ஆண்டுகளுக்கு பிறகு குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கும்பகோணம் அருகே உள்ள தாராசுரம் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்நாதன்(29). இவர் தாராசுரம் காய்கறி மார்க்கெட்டில் லோடுமேனாக இருந்து வந்தார். மேலும் அங்கு கேன்டீன் ஒன்றையும் நடத்தி வந்தார். இதனால் இவரை அப்பகுதியினர் கேன்டீன் செந்தில் என்றே அழைத்து வந்தனர். இந்நிலையில், தாராசுரம், அனுமார்கோவில் தெருவைச் சேர்ந்த லெட்சுமணனுக்கும், செந்தில்நாதனுக்கும் இடையே பணம் கொடுக்கல், வாங்கல் காரணமாக தகராறு […]
இனி ஓடவும் முடியாது! ஒளியவும் முடியாது! ஹிஜாப் விவகாரம்: விரட்டும் ட்ரோன்கள்!
ஈரான் நாட்டில் பெண்கள் கண்டிப்பாக ஹிஜாப் அணிய வேண்டும் என்ற வழக்கம் இருக்கும் நிலையில், ஹிஜாப் அணியாத பெண்கள் தண்டிக்கப்பட்டு வருகின்றனர். கடந்த 2022ஆம் ஆண்டு, ஹிஜாப் அணிய முடியாது என்று கூறிய ஒரு பெண் கைது செய்யப்பட்டு, அதன் பின் சிறைச்சாலையில் மர்மமான முறையில் மரணமடைந்தார். இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதோடு, ஐநா இதற்கு கண்டனம் தெரிவித்தது. இருப்பினும், ஈரான் தனது கொள்கை முடிவுகளில் எந்தவித மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. இந்த நிலையில், ஹிஜாப் அணியாத பெண்களை […]
இனி வரும் காலங்களில் ஆபாசங்கள் இன்றி நடனங்கள்! நிலக்கோட்டையில் மேடை நடனக் கலைஞர்களின் ஆலோசனை கூட்டம்..
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் மேடை நடனக் கலைஞர்களின் ஆலோசனை கூட்டம் நிலக்கோட்டை ஓய்வூதியர் சங்க கட்டிடத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் உசேன், மாவட்ட செயலாளர் மணிமாறன், மாவட்ட பொருளாளர் விஜய், மாவட்டத் துணைத் தலைவர் கண்ணன், ஆகியோர் தலைமை வகித்தனர். மேலும் மாநிலத் தலைவர் சீனிவாசன், மாநில துணைச் செயலாளர் மூத்த கலைஞர் டிங் டாங் வெள்ளைச்சாமி ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு இந்த ஆலோசனை கூட்டத்தை சிறப்பித்தனர். இந்த கூட்டத்தில் வருகின்ற […]
வேளாண் நிதிநிலை அறிக்கையில் இடம் பெற்றுள்ள பல்வேறு முக்கிய சிறப்பம்சங்கள் என்னென்ன..!
இந்தாண்டுக்கான தமிழ்நாடு சட்டப்பேரவையின் முதல் கூட்டத் தொடர் கடந்த ஜனவரி 6 ஆம் தேதி தொடங்கி 11 ஆம் தேதி வரை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து சட்டப்பேரவையின் நிதிநிலை அறிக்கை கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது.இக்கூட்டத் தொடரின் முதல் நாளான நேற்று 2025-26 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்கிறார். இதனைத் தொடர்ந்து இன்று 2025- 2026 ஆம் ஆண்டுக்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் தாக்கல் […]
நிலக்கோட்டை சௌராஷ்டிரா நடுநிலைப்பள்ளியில் நூற்றாண்டு விழா கொண்டாட்டம்..
நிலக்கோட்டை சௌராஷ்டிரா நடுநிலைப்பள்ளியில் நூற்றாண்டு விழா கொண்டாட்டம்.. திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை சௌராஷ்டிரா நடுநிலைப் பள்ளியில் நூற்றாண்டு விழா மிகப் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு பள்ளியின் தாளாளர் சுதாகரன் தலைமை வகித்தார், தலைமை ஆசிரியர் ஸ்ரீநேரு முன்னிலையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. சிறப்பு விருந்தினர்களாக மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் வெற்றிச்செல்வி, வட்டார கல்வி அலுவலர் செல்லின் மேரி, நிலக்கோட்டை துணை காவல் கண்காணிப்பாளர் செந்தில்குமார், ஒன்றிய பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் டாக்டர் செல்வராஜ், வட்டார […]
தமிழ்நாட்டின் பன்முக வளர்ச்சியை உறுதி செய்துள்ள வரவு செலவுத் திட்டம்!- வைகோ பாராட்டு..
தமிழ்நாட்டின் பன்முக வளர்ச்சியை உறுதி செய்துள்ள வரவு செலவுத் திட்டம்!- வைகோ பாராட்டு.. “சமநிலையின்மை என்பது ஒரு வாய்ப்பு. ஆனால் நாம் வேறு பாதையை தேர்வு செய்வோம்” என்ற பொருளியல் அறிஞர் தாமஸ் பிக்கெட்டியின் மேற்கோளைச் சுட்டிக்காட்டி நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அவர்கள் தாக்கல் செய்துள்ள 2025-26 ஆம் நிதி ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் “எல்லோருக்கும் எல்லாம்” எனும் திட்டத்திற்கு செயல் வடிவம் கொடுப்பதாக அமைந்திருப்பது பாராட்டுக்குரியதாகும். ஒன்றிய அரசின் தடைகளை மீறி தமிழ்நாடு பொருளாதார […]
ஸ்ரீ வல்லபை ஐயப்பன் கோயிலில் முதல் பிரதிஷ்டை தின விழா .!
கணபதி ஹோமம் சிறப்பு பூஜைகள் செய்து வழிபாடு ஸ்ரீ வல்லபை ஐயப்பன் ஆலயம் முதல் பிரதிஷ்டை தின விழா ராமநாதபுரம் மாவட்டம் ரகுநாதபுரம் ஸ்ரீவல்லபை ஐயப்பன் ஆலயத்தில் கடந்த 13.03.2005ம் தேதி அன்று சபரிமலை தலைமை குருக்கள் மகா ஸ்ரீ கண்டரு ராஜீவரரு அவர்கள் தலைமையில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது, அதே மார்ச் 13ல் பிரதிஷ்டை தின விழா நாளில் காலை கணபதி ஹோமம், அஷ்டபிஷேகம் செய்யப்பட்டு சிறப்புடன் பூஜைகள் நடைபெற்றது. பக்தர்களின் பஜனை கோஷம் மற்றும் […]
தமிழ்நாடு பட்ஜெட் 2025-26/ புதிய கலைக்கல்லூரிகள்/ஐ.டி.ஐ.க்கள் எங்கெங்கே?
தமிழ்நாடு பட்ஜெட் 2025-26/ புதிய கலைக்கல்லூரிகள்/ஐ.டி.ஐ.க்கள் எங்கெங்கே? புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் போன்ற திட்டங்களால் உயர்கல்விச் சேர்க்கை அதிகரிப்பதன் தேவையை நிறைவேற்ற, கீழ் கண்ட இடங்களில் புதிய கலைக்கல்லூரிகளை அரசு அறிவித்துள்ளது குன்னூர் (நீலகிரி) நத்தம் (திண்டுக்கல்) ஆலந்தூர் (சென்னை) விக்கிரவாண்டி (விழுப்புரம்) செய்யூர் (செங்கல்பட்டு) மானாமதுரை (சிவகங்கை) முத்துப்பேட்டை (திருவாரூர்) திருவிடைமருதூர் (தஞ்சை) பெரம்பலூர் நகர் (பெரம்பலூர்) ஒட்டப்பிடாரம் (தூத்துக்குடி) மேலும், கட்டுமானத் தொழிலாளர்களின் குழந்தைகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில், கட்டுமானத் தொழிலாளர் நல வாரிய நிதியுதவியுடன் […]
ஜவாஹிருல்லாவிற்கு ஓராண்டு சிறை தண்டனையை உறுதி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்..
ஜவாஹிருல்லாவிற்கு ஓராண்டு சிறை தண்டனையை உறுதி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்.. வெளிநாடுகளில் இருந்து சட்டவிரோதமாக ஒரு கோடியே 55 லட்சம் ரூபாய் பெற்றது தொடர்பான வழக்கில் மனித நேய மக்கள் கட்சி எம்.எல்.ஏ. ஜவாஹிருல்லாவிற்கு ஒரு ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதத்தை எழும்பூர் நீதிமன்றம் விதித்தது. இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் ஜவாஹிருல்லாவின் சிறை தண்டனையை உறுதி செய்துள்ளது. இதனிடையே, […]
தமிழ்நாடு பட்ஜெட்; வருவாய் எவ்வளவு! செலவுத்திட்டங்கள் எவ்வளவு! நிதி பற்றாக்குறை எவ்வளவு!
2024-25 ஆம் ஆண்டின் வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் 1,95,173 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்ட மாநிலத்தின் சொந்த வரி வருவாய், திருத்த மதிப்பீடுகளில் 1,92,752 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டுள்ளது. 2025-26 ஆம் ஆண்டிற்கான வரவு – செலவுத் திட்ட மதிப்பீடுகளில் மாநிலத்தின் சொந்த வரி வருவாய் 2,20,895 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது வணிகவரிகளின் கீழ் 1,63,930 கோடி ரூபாய், முத்திரைத்தாள் மற்றும் பத்திரப்பதிவுக் கட்டணங்களின் கீழ் 26,109 கோடி ரூபாய், வாகனங்கள் மீதான வரிகளின் கீழ் 13,441 […]
வரலாறு காணாத வகையில் உச்சத்தை தொட்டது தங்கம் விலை! அதிர்ச்சியில் உறைந்து கிடக்கும் நகை பிரியர்கள்..
சென்னையில் இன்று (மார்ச் 14) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.880 உயர்ந்து ஒரு சவரன் ரூ.65,840க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த சில தினங்களாக தங்கம் விலை ஏற்றம், இறக்கம் கண்டு வருகிறது. கடந்த மார்ச் 12ம் தேதி செவ்வாய் கிழமை, 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.360 அதிகரித்து, ஒரு சவரன் ரூ.64,520க்கு விற்பனை செய்யப்பட்டது. நேற்று (மார்ச் 13) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.440 […]
நிலக்கோட்டை அருகேயுள்ள வாலாங்கோட்டையில் பகுதி நேர ரேஷன் கடை திறப்பு விழா! கிராம மக்கள் மகிழ்ச்சி..
நிலக்கோட்டை அருகேயுள்ள வாலாங்கோட்டையில் பகுதி நேர ரேஷன் கடை திறப்பு விழா.. திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகேயுள்ள கூவனூத்து வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திற்கு உட்பட்ட வாலாங்கோட்டை கிராமத்தில் ரேஷன் கடை திறக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் நீண்டகாலமாக கோரிக்கை விடுத்து வந்தனர். இதனை நிறை வேற்றும் வகையில் ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஐ.பெரியசாமி உத்தரவின் பேரில், திமுக கிழக்கு மாவட்ட செயலாளரும், பழநி எம்எல்ஏவுமான ஐபி செந்தில்குமார் வழி காட்டுதலின் படி வாலாங்கோட்டையில் […]
சோழவந்தானில் திமுக அரசை கண்டித்து அதிமுக சார்பில் துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது
தமிழகத்தில் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாத திமுக அரசை கண்டித்தும் விலைவாசி உயர்வை கண்டித்தும் மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் சோழவந்தானின் பல்வேறு பகுதிகளில் பொதுமக்களுக்கு துண்டு பிரசுரம் விநியோகிக்கப்பட்டது மாவட்ட அம்மா பேரவை தலைவர் தமிழழகன் தலைமை தாங்கினார் அமைப்புச் செயலாளர் மகேந்திரன் முன்னாள் எம்எல்ஏ மாணிக்கம் வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் கொரியர் கணேசன் முன்னாள் எம்எல்ஏஎம்.வி கருப்பையா முன்னாள் யூனியன் சேர்மன் ராஜேஷ் கண்ணா அம்மா பேரவை வெற்றிவேல் துரை தன்ராஜ் […]
“ரூ” தேசிய சின்னத்தை அவமதிப்பதோ, குறைத்து மதிப்பிடுவதோ எங்களின் நோக்கம் அல்ல; தமிழக நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம்..
தேசிய சின்னத்தை அவமதிப்பதோ, குறைத்து மதிப்பிடுவதோ எங்களின் நோக்கம் அல்ல என்று தமிழக நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம் அளித்துள்ளார். 2025-26 நிதிநிலை அறிக்கை ஆவணத்தில் இருந்து ரூபாயின் அதிகாரபூா்வ சின்னத்தை தமிழக அரசு ‘ரூ’ என்ற தமிழ் வாா்த்தையுடன் மாற்றியுள்ளது. இதற்கு எதிா்ப்பு தெரிவித்துள்ள மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன், ரூபாய் சின்னத்தில் உண்மையிலேயே திமுகவுக்கு பிரச்னை இருக்குமானால், அது 2010-ஆம் ஆண்டில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சியில் ஏற்றுக்கொள்ளப்பட்டபோது, அதன் அங்கமாக இருந்த […]
தமிழக சட்டப்பேரவை தொடங்கியது: பல தரப்பட்ட எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகுமா..?
தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகின்றன. 2025 – 26 ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு உரையாற்றி வருகிறார். அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தோ்தலை தமிழ்நாடு எதிா்கொள்ளவுள்ள நிலையில், அதற்கு முன்பாக திமுக தலைமையிலான அரசு தாக்கல் செய்துள்ள முழுமையான நிதிநிலை அறிக்கை இதுவாகும். எனவே, பொதுமக்கள், அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள் என பல்வேறு தரப்பினரின் கோரிக்கைகள், எதிா்பாா்ப்புகளை நிறைவேற்ற வேண்டிய கட்டாயம் அரசுக்கு ஏற்பட்டிருக்கிறது. இதனால், […]
பள்ளிவாசல்கள் மூடிய விவகாரம்: மதசார்பின்மையை சீர்குலைக்கும் நோக்கில் பாஜக அரசு செயல்படுவதாகவும், பல ஆண்டுகளாக மதங்களைக் கடந்து கொண்டாடப்பட்டு வரும் ஹோலி பண்டிகையை வைத்து பிரச்னையை ஏற்படுத்த முயல்வதாக எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு..
ஹோலி பண்டிகை இன்று (மார்ச் 14) கொண்டாடப்படவுள்ள நிலையில், பிகார், உத்தரப் பிரதேச மாநிலங்களில் உள்ள மசூதிகள் தார்பாய்களால் மூடப்பட்டு வருகின்றன. நாடு முழுவதும் மார்ச் 1 முதல் 31 வரை ரம்ஜான் மாதமாக இஸ்லாமிய மக்கள் கடைபிடித்து வருகின்றனர். ரம்ஜான் மாதத்தில் குறிப்பாக வெள்ளிக்கிழமைகளில் அதிகளவிலான இஸ்லாமிய மக்கள் மசூதிகளுக்கு சென்று தொழுகை நடத்துவது வழக்கம். இந்த நிலையில், ஹிந்துக்கள் கொண்டாடும் ஹோலி பண்டிகையும் முஸ்லிம்கள் கொண்டாடும் ரமலானின் ஜும்மா நோன்பும் வருகிற மார்ச் 14 […]
இன்று தொடங்குகின்ற நிதிநிலை அறிக்கையில் பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகள் இடம்பெறுமா..? தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பினர் ஆவலுடன் எதிர்பார்ப்பு..
இன்று தொடங்குகின்ற நிதிநிலை அறிக்கையில் பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகள் இடம்பெறுமா..? தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பினர் ஆவலுடன் எதிர்பார்ப்பு.. அரசு ஊழியர்கள் ஆசிரியர்களின் நீண்டநாள் எதிர்கால வாழ்வாதார கோரிக்கையான புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டுவர சென்ற ஆட்சியில் கோரிக்கை வைத்து போராடியபோது சுமார் 5000 ற்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் மீது வழக்கு தொடர்ந்து சிறையில் அடைத்து துறை […]
அரசு பள்ளி கட்டிடம் இடிந்து விழுவதால் மாணவர்கள் அச்சம் பள்ளியை புறக்கணித்து இன்று போராட்டம் நடத்தியதால் பரபரப்பு..!
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தாலுகாவிற்கு உட்பட்ட ‘பனையடியேந்தல்’ ஊராட்சியில் இயங்கி வரும் அரசு உயர்நிலைப்பள்ளியில் இருநூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்தப்பள்ளி கடந்த 03-11-2021 அன்று 1.62 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட பள்ளிக்கட்டிடம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களால் திறந்து வைக்கப்பட்டுள்ளது. ஆனால் தரமற்ற முறையில் இந்த கட்டிடப் பணி நடந்துள்ளதால் அவ்வப்போ கட்டிட மேற்கூரை இடிந்து விழுந்து மாணவ மாணவிகள் காயம் அடைந்து வருகின்றனர். புதிதாக கட்டப்பட்ட அரசு பள்ளி கட்டிடத்தின் […]
You must be logged in to post a comment.