பாமகவை தொடர்ந்து ம.தி.மு.க.விலும் விரிசல்! கட்சி பொறுப்பில் இருந்து விலகுவதாக துரை வைகோ அறிவிப்பு..

அரசியல் குடும்பத்தில் பிறந்திருந்தாலும் தாமரை இலைத் தண்ணீர் போல இருந்தவன் நான் என்பதை அனைவரும் அறிவர். 2018ம் ஆண்டு இயக்கத் தந்தை வைகோ திடீரென உடல் நலம் குன்றி இதய பாதிப்புக்கு உள்ளானார். அந்த நேரத்தில் கனடா நாட்டில் எனது குழந்தைகள் படிப்புக்காக சென்று தங்கி இருந்த நான் உடனடியாக நாடு திரும்பினேன். வைகோவுக்கு இதய சிகிச்சை அளிக்கப்பட்டு பேஸ் மேக்கர்,ஸ்டன்ட் வைக்கப்பட்டது. இதனால் எப்போதும் சுற்றுப் பயணங்களில் சுறுசுறுப்பாக செயல்பட்டு வந்த எனது தந்தை வைகோ […]

பேருந்துகளில் அதிக ஒலி எழுப்பும் ஹாரன்.! போக்குவரத்து துறை அதிகாரிகள் அதிரடி சோதனை.!!

*பேருந்துகளில் அதிக ஒலி எழுப்பும் ஹாரன் போக்குவரத்து துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி அபராதம் விதிப்பு* கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில்அதிக ஒலி எழுப்பக் கூடிய ஏர் ஹாரன் பொருத்தப்பட்ட தனியார் பேருந்துகளில் இருந்து ஹாரன்களை அப்புறப்படுத்தி வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகள் அபராதம் விதித்தனர். மேட்டுப்பாளையம்  நிலையத்தில் அரசு மற்றும் தனியார் மற்றும் அரசு பேருந்துகளில் அதிக ஒலி எழுப்பக்கூடிய ஏர் ஹாரன் மற்றும் சவுண்ட் பாக்ஸ்கள் பொருத்தப்பட்டுள்ளதாகவும், இது பேருந்துகளில் செல்லும் பயணிகளுக்கும் சாலைகளில் பொதுமக்கள் […]

அடிக்கிற வெயிலுக்கு; சென்னையில் இனி குளு! குளு! பயணம்!  வந்தாச்சு ஏசி மின்சார ரயில்..

சென்னை கடற்கரை – செங்கல்பட்டு இடையே குளிர்சாதன(ஏசி) வசதி கொண்ட புறநகர் மின்சார ரயில் ரயில் சேவை இன்று (சனிக்கிழமை) தொடங்கியது. சென்னையின் முக்கியப் போக்குவரத்தாக மின்சார ரயில் விளங்குகிறது. இதில் தொலைதூரம் செல்லும் விரைவு மின்சார ரயில்கள் முக்கிய நேரங்களில் பயணிப்போருக்கு ஏதுவாக உள்ளது. செங்கல்பட்டு, தாம்பரம் உள்ளிட்ட புறநகா் பகுதியிலிருந்து பள்ளி, கல்லூரி மற்றும் பணிக்குச் செல்வோா் விரைவு மின்சார ரயிலை பயன்படுத்துவதால் நாளுக்கு நாள் கூட்டம் அதிகரித்து வருகிறது. இதைக் கருத்தில்கொண்டு சென்னை […]

அதிமுகவுடனான கூட்டணியிலிருந்து விலகுவதாக எஸ்.டி.பி.ஐ. கட்சி அறிவிப்பு!

அதிமுக கூட்டணியிலிருந்து எஸ்டிபிஐ கட்சி விலகுகிறது கட்சியின் பொதுச் செயலாளர் அறிவிப்பு! அதிமுகவுடனான கூட்டணியிலிருந்து விலகுவதாக எஸ்.டி.பி.ஐ. கட்சி அறிவிப்பு! பாஜக கட்சியுடன் கூட்டணி வைத்த எந்த அரசியல் கட்சியுடனும் கூட்டணி கிடையாது என திட்டவட்டம். பாஜகவை எதிர்க்கக்கூடிய அரசியல் கட்சிகள் இருக்கத்தான் செய்கிறது பாஜக கூட்டணிக் கட்சிகளை எஸ்டிபிஐ கட்சி அங்கீகரிக்காது. தமிழ்நாட்டில் திராவிட கட்சிகளை ஒழிப்போம் என்பதே பாஜகவின் முழக்கமாக இருந்தது ஆனால் திராவிட கட்சி மேலே சவாரி செய்ய வந்திருக்கிறார்கள் இப்போது முழக்கம் […]

வஃக்ப் -திருடர்களும்..!திருத்தங்களும்..!

வஃக்ப் – திருடர்களும்..! திருத்தங்களும்..! வஃக்ப் புரிதல்-1 வஃக்ப் என்றால் என்ன? வஃக்ப்பின் நன்மைகள் என்ன? வஃக்ப்பின் பயன்கள் என்ன? வஃக்ப் யாருக்கானது? வஃக்ப் செய்வதின் நோக்கம் என்ன? என்ற பல கேள்விகள் இப்போதுதான் பெரும்பாலான முஸ்லிம்களுக்கு தெரிய ஆரம்பித்திருக்கிறது. வஃக்ப்பின் முழுப் பரிமாணங்களை முஸ்லிம்கள் புரிந்து கொள்ள இந்த சர்வாதிகார சட்ட திருத்தம் வழி செய்திருக்கிறது. இந்த வஃக்புகளின் நிலைகளை இரண்டு பிரிவுகளாக நாம் புரிய வேண்டும். 1 . வஃக்ப்பின் முழு நிலைகளை அதன் […]

வரம்பு மீறி பேசும் குடியரசுத் துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர்!- இரா.முத்தரசன் கடும் கண்டனம்..

உச்ச நீதிமன்றத்துக்கும், நீதித்துறைக்கும் எதிராகப், குடியரசுத் துணைத் தலைவரின் வரம்பு மீறிய பேச்சுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-தமிழ்நாடு சட்டமன்றம் நிறைவேற்றி ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்ட மசோதாக்கள் மீது அரசியலமைப்புச் சட்டத்தின் படி, முடிவு எடுக்காமல், அவைகளை கிடப்பில் போடப்பட்டு, மக்கள் நலன்களை புறக்கணித்து வந்தார். தமிழ்நாடு ஆளுநரின் அத்துமீறிய செயல்கள் தொடர்பாக தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் முறையிட்டு, ஆளுநரின் அத்துமீறல்கள் மீது […]

தமிழ்நாடு எப்போதும் டெல்லிக்கு அவுட் ஆப் கண்ட்ரோல்தான்! அமித்ஷா அல்ல, எந்த ஷா வந்தாலும் தமிழ்நாட்டை ஆள முடியாது! கர்ஜித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியை அடுத்த ஆண்டார்குப்பத்தில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்று நடைபெற்றது. இதில், பங்கேற்ற முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், ரூ.418.15 கோடி மதிப்பிலான முடிவுற்ற திட்டப் பணிகளை தொடங்கி வைத்தார். ரூ.390.74 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினர். மேலும், ரூ.357.43 கோடி மதிப்பில் 2 லட்சத்து 2 ஆயிரத்து 531 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை அவர் வழங்கினார். விழாவில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:- பல்வேறு திட்டங்களை திராவிட மாடல் ஆட்சியில் வழங்கி […]

சமயநல்லூர் அருகேமின்சாரம் தாக்கி குடிநீர் விற்பனையாளர் பலி

மதுரை மாவட்டம் சமயநல்லூர் அருகே டபேதார் சந்தையை சேர்ந்தவர் கிருஷ்ணன் மகன் அரிச்சந்திரன் (45). இவர் டாட்டா ஏசி வாகனத்தில் குடிநீர் விற்பனை தொழில் செய்து வந்தார். நேற்று இரவு 11:30 மணிக்கு டபேதார்சந்தையில் இருந்து சமயநல்லூர் பர்மா காலனி சடச்சியம்மன் கோவில் தெருவில் விசேச வீட்டிற்கு சென்று வாகனத்திலிருந்து தண்ணீரை மின்மோட்டார் மூலமாக இறக்கும் போது மின்சாரம் தாக்கியது. இதில் காயமடைந்த ஹரி கிருஷ்ணனை 108 ஆம்புலன்ஸ் மூலம் சமயநல்லூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்காக […]

வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய கிளை கழகங்களில் பூத் கமிட்டி நிர்வாகிகள் கூட்டம். ஆர் பி உதயகுமார் சிறப்புரை

மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் வாடிப்பட்டி தெற்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட மன்னாடிமங்கலம் குருவித்துறை காடுபட்டி முள்ளிப்பள்ளம் தென்கரை உள்ளிட்ட கிளைக் கழகங்களில் பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது கூட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் கொரியர் கணேசன் தலைமை தாங்கினார் பூத் கமிட்டியில் கலந்து கொண்ட சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் நிர்வாகிகளுக்கு ஆலோசனைகள் வழங்கி சிறப்புரை ஆற்றினார் இதில் முன்னாள் எம்எல்ஏக்கள் எம் வி கருப்பையா மாணிக்கம் மகளிர் […]

காவல் உதவி ஆய்வாளர் பணிக்கு கட்டணமில்லா பயிற்சி வகுப்பு..

தென்காசி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் நடத்தும் காவல் உதவி ஆய்வாளர் பணியிடங்களுக்கு கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே. கமல் கிஷோர் அறிவித்துள்ளார். இது பற்றிய செய்திக் குறிப்பில், வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையால் தென்காசி மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம், கதவு எண்:168, முகமதியா நகர் (எபினேசர் டைல்ஸ் பின்புறம்), குத்துக்கல் […]

மேட்டுப்பாளையத்தில் ஐக்கிய ஜமாத் பேரவை கூட்டமைப்பின் சார்பாக வக்ஃப் திருத்த சட்டத்திற்கு எதிராக இறைவனிடம் பிரார்த்தனை 

மேட்டுப்பாளையத்தில் ஐக்கிய ஜமாத் பேரவை கூட்டமைப்பின் சார்பாக ஒரு நாள் நோன்பு வைத்து இறைவனிடம் பிரார்த்தனை கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் ஐக்கிய ஜமாத் பேரவை தலைவர் ஷரீப் மற்றும் செயலாளர் அக்பர்அலி ஆகியோர் தலைமையில் வக்ஃப் திருத்த சட்டத்திற்கு எதிராக இஸ்லாமியர்கள் நோன்பு வைத்து இறைவனிடம் பிரார்த்தனை செய்தனர் . இந்நிகழ்ச்சியில் எஸ் டி பி ஐ , எம் ஜே கே , ஐ எம் எம் கே , ஜமாத் இஸ்லாமிக் இந்து போன்ற […]

வக்ஃப் உடைமைகள் பாதுகாக்கப்பட்டுள்ளன: உச்சநீதிமன்ற உத்தரவுக்கு நன்றி கூறிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..

ஒன்றிய அரசின் வக்ஃப் திருத்த சட்டத்தை எதிர்த்து காங்கிரஸ், தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் உட்பட உச்சநீதிமன்றத்தில் 70க்கும் மேற்பட்ட வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இந்த மனுக்கள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா தலைமையிலான அமர்வு முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது.அப்போது, ஒன்றிய அரசின் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல், வக்ஃப் சட்டத்தின் சில பிரிவுகளுக்கு தடை விதிப்பது என்பது சில பாதிப்புகளை ஏற்படுத்தும் என்றும், ஒரு வாரத்தில் பதிலளிக்க ஒன்றிய அரசு தயாராக உள்ளது என்றும் வாதிட்டார்.  […]

விக்கிரமங்கலம் டாஸ்மாக்கில் வாடிக்கையாளரை தாக்கிய விற்பனையாளர் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை

மதுரை மாவட்டம் செல்லம்பட்டி ஒன்றியம் விக்கிரமங்கலத்தில் கீழப்பட்டி செல்லும் சாலையில் மலையூர் கிராமத்தில் அரசு மதுபானக் கடை உள்ளது இந்த கடையில் விற்பனைக்கு வரும் மதுபானங்களை தனியாருக்கு மொத்தமாக விற்பதாகவும் மது பிரியர்கள் விரும்பி கேட்கும் மதுபானங்கள் இருந்தாலும் அதை தர மறுப்பதாகவும் விற்பனையாளர் பவுன் என்பவர் மீது தொடர் புகார்கள் வந்த வண்ணம் இருந்தது இந்த நிலையில் நேற்று இரவு விக்கிரமங்கலத்தை சேர்ந்த மோகன் என்பவர் மது வாங்குவதற்கு சம்பந்தப்பட்ட டாஸ்மாக் கடைக்கு சென்று உள்ளார் […]

வாடிப்பட்டி அருகே இருசக்கர வாகனம் மீது கனரக வாகனம் மோதி விபத்து.கால்கள் துண்டான நிலையில் இறந்தவரின் உடலை 16 கிலோ மீட்டர் இழுத்து சென்ற அவலம்

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே வடுகபட்டியைச் சேர்ந்தவர் ஆனந்தன் மகன் சூரிய பிரகாஷ் (30) இவர் தனது மோட்டார் சைக்கிளில் வாடிப்பட்டியில் இருந்து வடுகபட்டிக்கு சென்று கொண்டிருந்தார். அதிகாலை 4.30 மணிக்கு ஆண்டிபட்டி பெட்ரோல் பங்க் அருகே ஹரியானாவில் இருந்து மதுரை நோக்கி சென்ற லாரி இடது புறம் வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் மோட்டார் சைக்கிள் சிக்கியது. அதை உணராமல் லாரி டிரைவர் லாரியை 16 கிலோமீட்டர் வரை ஓட்டிக்கொண்டு சென்றார். இதை பின்னால் […]

அலங்காநல்லூரில் தீரன் சின்னமலை சிலைக்கு அதிமுக சார்பில் மரியாதை

சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை பிறந்த நாளை முன்னிட்டு அலங்காநல்லூர் ஐயப்பன் கோவில் முன்பு உள்ள தீரன் சின்னமலையின் திருவுருவ சிலைக்கு அதிமுக சார்பில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது பின்னர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது இந்த நிகழ்ச்சியில் மதுரை புறநகர் மேற்கு மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் முடுவார்பட்டி ஜெயச்சந்திர மணியன் மாவட்ட விவசாய அணி இனைச் செயலாளர் வாவிடமருதூர் ஆர்.பி. குமார் மாவட்ட அம்மா பேரவை துணைச் செயலாளர் கல்லணை மனோகரன் […]

விக்கிரமங்கலம் அரசு கள்ளர் பள்ளியில் 100 நாள் சவால் தமிழ் ஆங்கிலம் வாசிப்பு திறன், கணித அடிப்படைத் திறன் ஆய்வு

மதுரை மாவட்டம் செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட விக்கிரமங்கலத்தில் உள்ள அரசு கள்ளர்ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 100 நாள் சவால் ஆய்வு நடைபெற்றது பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அரசு தொடக்கப்பள்ளியில் மாணவ மாணவிகள் 100% தமிழ் ஆங்கிலம் வாசிப்பு திறமை கணிதம் கணக்கிடும் திறமை ஆகியவற்றை மாணவர்களுக்கு ஏற்படுத்த வேண்டும் என்று ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார் .இதன் பேரில் அரசு தொடக்கப்பள்ளியில் படிக்கக்கூடிய மாணவ மாணவிகள் தமிழ் ஆங்கிலம் வாசிப்பு மற்றும் கணித திறன் ஆகியவற்றில் 100% கற்றிருக்க […]

வாடிப்பட்டியில்சாலையோரத்தின் இருபுற ஆக்கிரமிப்புகள் அகற்றம்

மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் மாவட்ட உரிமையியல் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் தொடங்கி தமிழ்நாடு நுகர் பொருள் வாணிப கிடங்கு வரை உள்ள நகர்புற சாலையில் இருபுறத்திலும் ஆக்கிரமிப்பு இருப்பதாக போடிநாயக்கன்பட்டியைச் சேர்ந்த தனிநபர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தொடர்ந்த வழக்கில்வாடிப்பட்டியில் சாலையின் இருபுறமும் தேசிய நெடுஞ்சாலை தறையினர் கடந்த மாதம் அளவீடு செய்தனர்.அதில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த கடைகள் தாழ்வாரங்கள் சிமெண்ட் தரைகள் இருப்பது தெரிய வந்தது. அவற்றை பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள்அகற்றிட கடந்த வாரம் […]

வக்ஃப் வாரியத்தில் இஸ்லாமியர்களே இருக்க வேண்டும்: மத்திய அரசிடம் சரமாரியாக கேள்வி எழுப்பிய உச்ச நீதிமன்றம்..

வக்ஃபு சட்டத்தில் மட்டும் புதிய நடைமுறை ஏன் என மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. மேலும், இந்து வாரியங்களில் இஸ்லாமியர்களை நியமிப்பீர்களா என்றும் கேள்வியை முன்வைத்துள்ளது.  மத்திய அரசு கொண்டு வந்த வக்ஃபு திருத்த மசோதா இஸ்லாமியர்களின் உரிமையை பறிப்பதாகக் கூறி காங்கிரஸ், திமுக உள்பட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. ஆனாலும் மக்களவை, மாநிலங்களவையில் நீண்ட விவாதங்களுக்குப் பிறகு மசோதா நிறைவேறியது. குடியரசுத் தலைவர் ஒப்புதலைத் தொடர்ந்து வக்ஃபு திருத்தச் சட்டம் அமலானது. […]

உசிலம்பட்டி நகர மன்ற கவுன்சிலர் கூட்டம்

உசிலம்பட்டி நகராட்சி ஆணையளர் மீது நகர் மன்ற உறுப்பினர்கள் சரமாரி குற்றச்சாட்டு – அடிப்படை பணிகளுக்கு கூட நிதி ஒதுக்குவதில்லை என வாக்குவாததில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.,

சோழவந்தான் அருகே இரும்பாடி அருள்மிகு ஸ்ரீ பாலமுருகன் திருக்கோவில் 54 ஆம் ஆண்டு பங்குனி பொங்கல் திருவிழா

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே இரும்பாடி கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ பாலமுருகன் திருக்கோவிலின் 54 ஆம் ஆண்டு பங்குனி பொங்கல் திருவிழா நடைபெற்றது திருவிழாவை முன்னிட்டு கடந்த வாரம் பக்தர்கள் பொதுமக்கள் காப்பு கட்டி விரதத்தை தொடங்கினர் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான அக்னி சட்டி பால்குடம் எடுக்கும் நிகழ்ச்சி மற்றும் பக்தர்கள் அழகு குத்தி நேர்த்திக் கடன் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது அதனைத் தொடர்ந்து மூலவர் மற்றும் உற்சவருக்கு பூக்களால் அலங்காரம் செய்துசிறப்பு அபிஷேகம் தீபாராதனை […]

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!