அச்சன்புதூர் அரசு தொடக்கப் பள்ளியில் நூற்றாண்டு விழா தென்காசி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரெஜினி தலைமையில் சிறப்பாக நடந்தது. தென்காசி மாவட்டம் அச்சன்புதூரில் செயல்பட்டு வரும் அரசு தொடக்கப் பள்ளி 1921 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு, 100 ஆண்டுகளை கடந்து செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் பள்ளியின் நூற்றாண்டு விழா தலைமை ஆசிரியர் ஜான் மைக்கேல் அந்தோணி முன்னிலையில் நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரெஜினி கலந்து கொண்டு நிகழ்ச்சியை […]
Category: செய்திகள்
கலைஞர் எழுதுகோல் விருது! நக்கீரன் கோபால், சுகிதா சாரங்கராஜ்-க்கு வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..
இதழியல் துறையில் சமூக மேம்பாட்டிற்காகவும், விளிம்பு நிலை மக்களின் மேம்பாட்டிற்காகவும் பங்காற்றி வரும் சிறந்த இதழியலாளர் ஒருவருக்கு ஆண்டுதோறும் ‘கலைஞர் எழுதுகோல் விருது’ மற்றும் ரூ.5 இலட்சம் பரிசுத் தொகையுடன் பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்படும் என்று 2021-22ஆம் ஆண்டிற்கான செய்தி மக்கள் தொடர்புத் துறையின் மானியக் கோரிக்கையில் அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பினைச் செயல்படுத்தும் வகையில், கடந்த 2021-ஆம் ஆண்டிற்கான ‘கலைஞர் எழுதுகோல் விருது’ மூத்த பத்திரிகையாளர் ஐ.சண்முகநாதன் அவர்களுக்கும், 2022-ஆம் ஆண்டிற்கான ‘கலைஞர் எழுதுகோல் விருது’ மூத்த […]
மேட்டுப்பாளையத்தில் சுட்டெரிக்கும் கொளுத்தும் வெயிலில் பாதுகாப்பற்ற சூழ்நிலையில் பள்ளிக் குழந்தைகள் அவதி.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நகரவை பெண்கள் மேல்நிலை பள்ளியில் அரசு தேர்வு நடைபெற்று வருகிறது இதன் காரணமாக மத்தியம் கல்விக்கூடம் வரும் குழந்தைகள் சுட்டெரிக்கும் வெயில் பாதுகாப்பற்ற சூழ்நிலையில் வெளியில் ஆங்காங்கே நிற்கின்றனர் இன்று மேட்டுப்பாளையம் சுற்றுவட்டார பகுதியில் 36 டிகிரிக்கு மேல் வெயில் கொளுத்துகின்றது ஆனால் ஆறாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகள் சுட்டெரிக்கும் கடும் வெயிலில் வெயிலில் நீண்ட நேரமாக வெயிலில் நிற்கின்றனர் கோடை தொடங்கும் முன்பு பயங்கரமாக சுட்டெரிக்கும் […]
மதுரையில் பாஜக கையெழுத்து இயக்கத்தை துவங்கி வைத்த பாஜக மாநில செயலாளர் இராம.ஸ்ரீனிவாசன்
மதுரை மாநகர பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் மதுரை சிம்மக்கல் பகுதியில் பாஜக மாநில செயலாளர் இராம.ஸ்ரீனிவாசன் தலைமையில் புதிய கல்விக் கொள்கையை ஆதரித்து கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது, பாஜகவினர் அப்பகுதியில் உள்ள வீடுகள் கடைகள் உள்ளிட்ட இடங்களில் புதிய கல்விக் கொள்கையை ஆதரித்து கையெழுத்துக்களை பெற்றனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த இராம.ஸ்ரீனிவாசன் கூறுகையில்._ புதிய கல்விக் கொள்கையை வாயிலாக இந்தியை திணிப்பது போல திமுக கபட நாடகம் ஆடி வருகிறது. இந்தியா முழுவதும் மூன்றாவது மொழியாக […]
பழனியில் அதிமுக மற்றும் விசுவாச அறக்கட்டளையின் சார்பில் மாரியம்மன் கோவிலில் ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
பழனியில் அதிமுக மற்றும் விசுவாச அறக்கட்டளையின் சார்பில் மாரியம்மன் கோவிலில் ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. பழனியில் மாரியம்மன் கோவில் மாசி திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்ற வருகிறது. இந்த நிலையில் அதிமுக பொதுக்குழு உறுப்பினரும் விசுவாச அறக்கட்டளையின் நிறுவனத் தலைவர் ராஜா முகமது தலைமையில் சாமி தரிசனம செய்ய வரும் பக்தர்களுக்கு ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் புளியோதரை, பொங்கல், தக்காளி சாதம், போன்ற உணவகங்கள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் அதிமுக மாவட்ட இளைஞரணி […]
ஆட்டம் காட்டும் தங்கம் விலை! காலையில் இறங்கி சற்று நேரத்தில் எகிறியது..
சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது ஏற்ற, இறக்கத்தை சந்தித்து வருகிறது. இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்தே தங்கத்தின் விலை யாரும் எதிர்பார்க்காத வகையில் உயர்ந்தவாறு இருக்கிறது. கடந்த மாதம் (பிப்ரவரி) 11-ந் தேதி தங்கம் விலை முதன் முறையாக பவுனுக்கு ரூ.64 ஆயிரத்தை தாண்டி புதிய உச்சத்தை எட்டியது. இதற்கிடையே கடந்த மாதம் 28-ந்தேதி தங்கம் விலை ரூ.64 ஆயிரத்துக்கு கீழ் குறைந்தது. அன்றைய தினம் பவுனுக்கு ரூ.400 குறைந்து ரூ.63 […]
ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடுக! வைகோ அறிக்கை..
தமிழ்நாட்டின் ஆழ்கடல் பகுதியில் ஹைட்ரோ கார்பன் எரிவாயு எடுக்கும் திட்டத்தை ஒன்றிய அரசு கைவிட வேண்டும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார். இது பற்றிய அறிக்கையில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி நிலப்பகுதியை ஒட்டிய ஆழமற்ற கடற் பகுதிகளில் 30ஆயிரம் சதுர கிலோ மீட்டர் பரப்பிலும், ஆழமான கடற் பகுதியில் 95 ஆயிரம் சதுர கிலோமீட்டர் பரப்பிலும் ஹைட்ரோ கார்பன் இருப்பு உள்ளதாக ஒன்றிய பெட்ரோலியத்துறை அமைச்சகம் கண்டறிந்துள்ளது. தமிழக ஆழ்கடல் பகுதிகளில் ஹைட்ரோ […]
விக்கிரமங்கலத்தில் மர்ம நபர்கள் தீ வைத்ததில் பெட்டிக்கடை எரிந்து நாசம்
விக்கிரமங்கலம் அரசு கள்ளர் நடுநிலைப்பள்ளி அருகில் பெட்டிக்கடை வைத்திருப்பவர் வீரபத்திரன் மனைவி ராஜலக்ஷ்மி நேற்று இரவு மர்ம நபர்கள் இவரது பெட்டிக்கடையில் தீ வைத்ததில்35 ஆயிரம் ரொக்கம் மற்றும் 50 ஆயிரம் மதிப்புள்ள பெட்டிக்கடை எரிந்து நாசமாகி உள்ளது இது குறித்து ராஜலட்சுமி கூறுகையில் 10 ஆண்டுகளுக்கு மேலாக பெட்டிக்கடை வைத்து நடத்தி வருகிறேன் எனது உறவினர்களே பெட்டி கடைக்கு தீ வைத்து சென்றுள்ளதாக தெரிகிறது இது குறித்து விக்கிரமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தால் காடுபட்டிக்கு […]
திருவேடகத்தில் சாலையின் நடுவே சரி செய்யப்படாமல் இருந்த பள்ளத்தில் கதிர் அறுக்கும் இயந்திரம் சிக்கியதால் ஒரு மணி நேர போக்குவரத்து பாதிப்பு
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே திருவேடகம் ஏடகநாதர் கோவில் செல்லும் மெயின் ரோட்டில் சாலையின் நடுவே ஆறு மாதங்களுக்கு முன்பு இடுப்பளவு பள்ளம் ஏற்பட்டது இதனால் அந்த வழியாக மதுரை மாநகராட்சி மற்றும் அவனியாபுரத்திற்கு சென்ற குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு சாலையில் குடிநீர் வீணாகியும் சாலை நடுவே ஏற்பட்ட பள்ளம் காரணமாக வாகன ஓட்டிகளுக்கு சிரமமும் ஏற்பட்டது இது குறித்து பொதுமக்கள் வாகன ஓட்டிகள் பலமுறை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றும் நடவடிக்கை எடுக்கவில்லை இந்த […]
தாய்மொழி என்பது தேன்கூடு. அதில் கை வைப்பது ஆபத்து!- திமுக தொண்டர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்
தாய்மொழி என்பது தேன்கூடு. அதில் கை வைப்பது ஆபத்து!- திமுக தொண்டர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் “ஒரு மொழியை கட்டாயமாக திணித்தால் அது பகை உணர்ச்சிக்கே இடம் கொடுக்கும். நாட்டின் ஒற்றுமைக்கு பாதிப்பை ஏற்படுத்தும். மொழித் திணிப்பால் பிளவுபட்ட தேசங்களின் வரலாறு, நம் பக்கத்திலேயே இருக்கிறது. ரூபாய் நோட்டில் அச்சிடப்பட்ட மொழிகள் அனைத்தையும் இந்தியாவின் ஆட்சிமொழியாக அறிவிக்க தயக்கம் ஏன்? அண்ணா அன்று மாநிலங்களவையில் கேட்டதைத்தான் அவரது தம்பிகளான நாங்களும் கேட்கிறோம், அவரால் பெயர் சூட்டப்பட்ட தமிழ்நாடும் […]
அவுரங்கசீப்’பை புகழ்ந்த சமாஜ்வாதி எம்எல்ஏ! சட்டசபையில் இருந்து இடைநீக்கம்! நடந்தது என்ன.?
மகாராஷ்டிராவில் அபார வெற்றி பெற்று மீண்டும் மஹாயுதி கூட்டணி ஆட்சி அமைத்தது. இதில் பாஜகவுடன் ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா, அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸும் உள்ளன. முதலமைச்சராக தேவேந்திர பட்னாவிஸும், துணை முதல்வர்களாக ஏக்நாத் ஷிண்டேவும், அஜித் பவாரும் பதவியில் உள்ளனர். மூன்று கட்சியைச் சேர்ந்தவர்களும் அமைச்சர்களாக உள்ளனர். இந்த நிலையில், முகலாயப் பேரரசர் ஔரங்கசீப்பைப் புகழ்ந்து பேசியதற்காக மகாராஷ்டிரா சமாஜ்வாடி கட்சி எம்எல்ஏ அபு அசீம் ஆஸ்மி கூட்டத்தொடரில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். மகாராஷ்டிர சட்டப்பேரவையில் […]
தொகுதி மறுசீரமைப்பு: பாசிச சூழ்ச்சியை வீழ்த்துவோம்!-துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!
தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கையினால் தமிழ்நாட்டிற்கு ஏற்படப்போகும் பேராபத்தைத் தடுத்து நிறுத்தும் நோக்கில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் இன்று அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பங்கேற்ற 63 அரசியல் கட்சிகள் அழைக்கப்பட்டிருந்த நிலையில் 58 அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டது ஒரு வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வாகும்.இக்கூட்டத்தில் பங்கேற்றவர்களிடம் தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கையால் தமிழ்நாட்டிற்கு ஏற்படப்போகும் பேராபத்தை விளக்கமாக எடுத்துரைத்து, பவர்பாய்ண்ட் மூலம் தகவல்களை விளக்கி அனைத்துக் கட்சிகளின் ஒருமித்த ஆதரவைக் கோரினார். இதையடுத்து தொகுதி […]
எஸ்டிபிஐ கட்சியின் தேசிய தலைவர் கைதை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்.!
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் வளாகம் முன்பாக SDPI கட்சியின் அகில தேசிய தலைவர் MKபைஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டதை கண்டித்தும், விடுதலை செய்யக்கோரியும் இந்தியா முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகிறது, அதன் தொடர்ச்சியாக மாவட்ட தலைவர் ரியாஸ் கான் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டம் பொது செயலாளர் முகம்மது சுலைமான் வரவேற்புரை ஆற்றினார். மாவட்ட அமைப்பு பொதுச்செயலாளர் அப்துல் ஜமீல் கண்டன உரையாற்றினார் . இராமநாதபுரம் சட்டமன்ற தொகுதி தலைவர் பீர் மைதீன் மற்றும் கீழக்கரை […]
மோடியின் தொகுதி மறுசீரமைப்பு திட்டத்தை தகர்த்தெறியும் தென் மாநிலங்கள்!- அமைச்சர் ரகுபதி பேட்டி!
தொகுதி மறுசீரமைப்பை இந்தியாவில் யாரும் எதிர்க்க மாட்டார்கள் அசுர பலத்துடன் இருக்கிறோம் என்று நினைத்த ஒன்றிய பா.ஜ.க அரசுக்கு தென் மாநில முதலமைச்சர்கள் ஒருமித்த குரலில் பதிலடி கொடுத்து இருக்கிறார்கள். ஒன்றிய அரசுக்கு முட்டுக்கட்டை கொடுக்கின்ற சந்திரபாபு நாயுடு கூட தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்” என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ரகுபதி, ”மனிதனுக்கு நாக்கு என்று ஒன்று இருக்க வேண்டும். எடப்பாடி பழனிசாமி 2 மாதத்திற்கு முன்பு அ.தி.மு.கவுக்கும் பா.ஜ.கவுக்கும் […]
பறந்த நாற்காலிகள்! முன்னாள் அமைச்சர் முன்பு அடிதடி! அதிமுக கூட்டத்தில் சலசலப்பு..
அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்ற அதிமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் 2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்கான செயல்வீரர்கள் கூட்டம் புதன்கிழமை காலை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்றிருந்தார். இந்த நிலையில், அந்தியூர் நிர்வாகிகளை தொடர்ச்சியாக அதிமுக கூட்டத்துக்கு அழைப்பு விடுக்காமல் புறக்கணித்து வருவதாக ஒருவர் புகார் அளித்தார். புகார் தெரிவித்த அந்தியூர் நிர்வாகியை மேடைக்கு அழைத்து செங்கோட்டையன் பேசினார். இதனைத் தொடர்ந்து, செங்கோட்டையன் ஆதரவாளர்கள் புகார் […]
சோழவந்தான் எம்எல்ஏவுக்காக 2 மணி நேரம் காத்திருந்த கர்ப்பிணி தாய்மார்கள்
மதுரை அலங்காநல்லூரில் நடைபெற்ற கர்ப்பிணி தாய்மார்களுக்கான சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சிக்கு இரண்டு மணி நேரம் தாமதமாக வந்த எம் எல் ஏவால் கர்ப்பிணி பெண்கள் கடும் சிரமம் மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் உள்ள தனியார் மஹாலில் கர்ப்பிணி தாய்மார்களுக்கான சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி இன்று காலை 10 மணிக்கு தொடங்கும் என சமூக நலத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது இதற்காக சுமார் 200க்கும் மேற்பட்ட கர்ப்பிணி தாய்மார்கள் காலை 10 மணி முதல் தங்களது பெற்றோர்கள் மற்றும் உறவினர்களுடன் […]
எஸ்டிபிஐ கட்சியின் தேசிய தலைவர் கைதை கண்டித்து ஆர்ப்பாட்டம்.!
SDPI கட்சியின் அகில தேசிய தலைவர் MKபைஜி அவர்கள் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டதை கண்டித்தும், விடுதலை செய்யக்கோரியும் இந்தியா முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகிறது, அதன் தொடர்ச்சியாக மதுரை தெற்குவாசல் (பள்ளிவாசல்) பகுதியில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு எஸ்டிபிஐ கட்சியின் மதுரை தெற்கு மாவட்ட தலைவர் சீமான் சிக்கந்தர் தலைமை தாங்கினார், மதுரை முஸ்லிம் ஐக்கிய ஜமாத்தின் தலைவர் M.அப்துல் காதர் முன்னிலை வகித்தார். மதுரை தெற்கு மாவட்ட செயலாளர் சாகுல் ஹமீது […]
வாடிப்பட்டியில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு சமுதாய வளைகாப்பு வெங்கடேசன் எம் எல் ஏ பங்கேற்பு
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தனியார் மஹாலில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் எம் எல் ஏ பங்கேற்று சிறப்பு செய்தார் வாடிப்பட்டி பேரூராட்சி தலைவர் பால்பாண்டியன் துணைத் தலைவர் வக்கீல் கார்த்தி சோழவந்தான் பேரூராட்சி தலைவர் எஸ் எஸ் கே ஜெயராமன் ஒன்றிய செயலாளர்கள் வாடிப்பட்டி வடக்கு பால ராஜேந்திரன் தெற்கு பசும்பொன் மாறன் வாடிப்பட்டி முன்னாள் பேரூர் செயலாளர் மு பா பிரகாஷ்மாவட்ட பிரதிநிதி பேட்டை பெரியசாமி […]
“கத்தி” தலைக்கு மேல் தொங்கிக்கொண்டு இருக்கிறது! அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முதலமைச்சர் உரை..
இந்த இரண்டு முறைகளிலும், நமக்கான பிரதிநிதித்துவம் குறைந்து, அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலங்களுக்கு, அதிக பிரதிநிதித்துவம் கிடைக்கும்! இதனால், தமிழ்நாட்டின் குரல் நசுக்கப்படும்.இது வெறும் உறுப்பினர்களின் எண்ணிக்கையை பற்றிய கவலையில்லை; நம்முடைய தமிழ்நாட்டின் உரிமை சார்ந்த கவலை! நம்முடைய தமிழ்நாடு எதிர்கொள்ளவிருக்கும் இந்த முக்கியமான பிரச்சினையில், அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் தலைவர்கள் ஒன்றிணைய வேண்டும் என்ற வேண்டுகோளை, உங்கள் அனைவரின் முன்பும் நான் வைக்கிறேன். அனைத்துக் கட்சிகளும், கட்சி எல்லைகளைக் கடந்து குரல் கொடுக்க […]
மோடிக்கு தமிழ்மீது பற்று இருப்பதாக பாஜக கூறுவது உண்மையெனில், ரயில்களின் சமஸ்கிருத பெயர்களை தமிழில் மாற்றுங்கள்!- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…
பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழ்மீது பற்று இருப்பதாக பாஜக கூறுவது உண்மையெனில், ரயில்களின் சமஸ்கிருத பெயர்களை தமிழில் மாற்ற வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மும்மொழிக் கல்விக் கொள்கையை ஏற்றுக் கொள்ளாததால், தமிழகத்துக்கான கல்வி நிதியை விடுவிக்க மத்திய அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு தமிழக அரசியல் கட்சிகள் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இதனிடையே, மும்மொழிக் கொள்கையால் தாய்மொழிக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றும் பிரதமர் மோடிக்கு தமிழ் மீது […]
You must be logged in to post a comment.