சோழவந்தான் அருகே மன்னாடிமங்கலம்அரசு பள்ளி நூற்றாண்டு விழா வெங்கடேசன் எம் எல் ஏ பங்கேற்று சிறப்புரை

சோழவந்தான் அருகே மன்னாடி மங்கலம் அரசு நடுநிலைப்பள்ளி நூற்றாண்டு விழா விளையாட்டுப் போட்டி ஆண்டு விழா நடந்தது. சோழவந்தான் வெங்கடேசன் எம் எல் ஏ விழாவிற்கு தலைமையேற்று குத்துவிளக்கு ஏற்றி வைத்து நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். மதசார்பற்ற ஜனதா தளகட்சி நிர்வாகி செல்லப்பாண்டி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகி ஜெயக்கொடி, மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் வக்கீல் முருகன், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் ரேகாவீரபாண்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமை ஆசிரியை பூங்கொடி வரவேற்றார். ஆசிரியை […]

சென்னை – தூத்துக்குடி இடையே கூடுதல் விமான சேவைகள்;மத்திய அரசு அறிவிப்பு..

சென்னை – தூத்துக்குடி இடையே கூடுதல் விமான சேவைகள்;மத்திய அரசு அறிவிப்பு.. சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு கூடுதல் விமானங்கள் இயக்கப்படும் என்று மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ளது. சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடி, திருச்சி உள்ளிட்ட விமான நிலையங்களுக்குச் செல்லும் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகின்றது. தற்போது, சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு இரு வழித்தடங்களில் நாள்தோறும் 8 விமான சேவைகளும், திருச்சிக்கு 14 விமான சேவைகளும் இயக்கப்படுகிறது. இந்நிலையில், சென்னை – […]

ஸ்ரீவைகுண்டம் – அரியநாயகிபுரம் பள்ளி மாணவன் தேவேந்திரன் மீதான தாக்குதல் வன்மையாக கண்டிக்கத்தக்கது! டாக்டர். கிருஷ்ணசாமி..

ஸ்ரீவைகுண்டம் – அரியநாயகிபுரம் பள்ளி மாணவன் தேவேந்திரன் மீதான தாக்குதல் வன்மையாக கண்டிக்கத்தக்கது.! தென்மாவட்டங்களில் அதிகரிக்கும் சாதிய வன்கொடுமைகளை தடுக்க காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.! தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள அரியநாயகிபுரம் கிராமத்தைச் சார்ந்த தேவேந்திரன் என்ற 17 வயது பள்ளி மாணவன் ஆதிதிராவிடர் எனும் பறையர் சமுதாயத்தை சார்ந்தவர். அவர் இன்று காலை பள்ளிக்கு பேருந்தில் பயணித்த பொழுது அரியநாயகிபுரத்திற்கு அருகில் உள்ள கெட்டியம்மாள்புரம் என்ற கிராமத்தைச் சார்ந்த நான்கு பேர் […]

தூத்துக்குடி மாவட்டத்தில் மிக கனமழை வாய்ப்பு:மீனவர்கள், தாழ்வான பகுதி மக்களுக்கு எச்சரிக்கை!.

தூத்துக்குடி மாவட்டத்தில் மிக கனமழை வாய்ப்பு:மீனவர்கள், தாழ்வான பகுதி மக்களுக்கு எச்சரிக்கை!. இது தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் வெளியிட்ட செய்திக் குறிப்பில், தூத்துக்குடி மாவட்டம் மற்றும் தாமிரபரணி ஆற்றின் நீர்பிடிப்பு மாவட்டங்களான திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வுத்துறையின் சென்னை மண்டல மையத்தால் 11.03.2025 மற்றும் 12.03.2025 ஆகிய நாட்களில் மிக கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே, தூத்துக்குடி மாவட்டம் மருதூர் மற்றும் திருவைகுண்டம் அணைக்கட்டு பகுதிகள், கலியாவூர் […]

மும்மொழி கொள்கையை ஏற்க முடியாது! நாடாளுமன்றத்தில் அதிரடி காட்டிய கனிமொழி MP!

2025 ஆம் ஆண்டின் நாடாளுமன்ற முதல் கூட்டத் தொடர் கடந்த ஜனவரி 31ஆம் தேதி தொடங்கியது. பிப்ரவரி 1 ஆம் தேதி பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து பட்ஜெட் மீதான விவாதம் நாடாளுமன்றத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தொடரின் முதல் அமர்வு பிப்.13 ஆம் தேதி நிறைவடைந்தது. இதனைத் தொடர்ந்து 2 ஆவது அமர்வு இன்று தொடங்கியது.2 ஆவது அமர்வு இக்கூட்டத் தொடரின் முதல் நாளே தமிழ்நாட்டுக்கு கல்வி நிதி மறுக்கப்பட்டது தொடர்பாக திமுக எம்.பி. தமிழச்சி […]

நீறு பூத்த நெருப்பை விசிறி விடுவதற்கு சமம்!-ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு, துணை முதலமைச்சர் கண்டனம்!

தமிழ்நாட்டின் எம்.பி.க்களை பார்த்து அப்படி பேசுவது, அவர்களை வாக்களித்து தேர்ந்தெடுத்த ஒட்டுமொத்த தமிழர்களையுமே கொச்சைப்படுத்துவதாக தான் அர்த்தம்.திராவிட நாகரிகத்தின் தொன்மையும் சிறப்பும் அவருக்கு தெரியாது. நம் நாகரிகம் பற்றிய வரலாறு தெரியவில்லை என்றாலும் கூட பரவாயில்லை, நம்முடைய கடந்த ஒரு நூற்றாண்டு கால சமூக – அரசியல் வரலாற்றை தெரிந்திருந்தாலும் இதுபோன்று எல்லைமீறி அவர் பேசியிருக்க மாட்டார்.டெல்லியில் இருந்து ஆள்வதால், ஏதோ அவர் நமக்கு “மேல்” என்று தன்னை நினைத்துக் கொண்டிருக்கிறார்!தேசிய கல்விக் கொள்கையை அப்படியே முழுவதுமாக […]

புது மடத்தில் அரசு நிலத்தை தனிநபர் சொந்தமாக்க முயற்சி.!

புது மடத்தில் அரசு நிலத்தை தனிநபர் சொந்தமாக்க முயற்சி.! தொழுகை விடாமல் இடையூறு செய்வதால் ஜமாத்தார்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு .!! ராமநாதபுரம் மாவட்டம்  மண்டபம் ஒன்றியம் புதுமடம் கிராம மக்கள்  மஸ்ஜிதே நூர் ஜமாத் நிர்வாகத்திற்கு உட்பட்டு  சுமார் 500க்கும் மேற்பட்டோர் குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். அந்த கிராம மக்கள் மீனவத் தொழில் செய்து வருகின்றனர்   பெரும்பாலானோர் இஸ்லாமியர்களாக இருப்பதால் பெருநாள் தொழுகை தொழுவதற்கு போதுமான இடவசதி இல்லாத நிலையில் அரசுக்கு சொந்தமான நிலத்தின் 33 […]

தேவகோட்டையில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்.!

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பாக மாவட்ட தலைவர் குமரேசன் தலைமையில் ஊழியர்களுக்கு எதிராக செயல்படுதல், சத்துணவு ஊழியர்களை ஒருமையில் பேசுதல், அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தும் தேவகோட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் பாஸ்கரன் – ஐ கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது, இந்நிகழ்ச்சியில் பல்வேறு சங்கத்தின் மாவட்ட, வட்டார பொறுப்பாளர்கள், வட்டார தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க உறுப்பினர்கள், ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

பேராவூர் ஊராட்சியை ராமநாதபுரம் நகராட்சியோடு இணைக்க கடும் எதிர்ப்பு : 

பேராவூர் ஊராட்சியை ராமநாதபுரம் நகராட்சியோடு இணைக்க கடும் எதிர்ப்பு : திட்டத்தை கைவிடக் கோரி ஏராளமான பெண்கள் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு கோரிக்கை ராமநாதபுரம் அருகே உள்ள பேராவூர் ஊராட்சியைச் சேர்ந்த பெண்கள் உள்ளிட்ட ஏராளமானோர் ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு பேராவூர் ஊராட்சியை ராமநாதபுரம் நகராட்சியோடு இணைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர் . பேராவூர் ஊராட்சியை ராமநாதபுரம் நகராட்சியோடு இணைத்தால் தங்களுக்கு 100 நாள் வேலை திட்டம் கிடைக்காது, கிராமப்புற ஊராட்சிக்கு […]

மாற்றுத்திறனாளி குடும்பத்தோடு சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தியதால் பரபரப்பு:

மாற்றுத்திறனாளி குடும்பத்தோடு சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தியதால் பரபரப்பு: கமுதி பேருந்து நிலையத்தில் தரைக்கடை வைத்திருக்கும் அவருக்கு கூடுதல் வாடகை நிர்ணயித்திருப்பதாக குற்றச்சாட்டு..! ராமநாதபுரம் மாவட்டம் கமுதியைச் சேர்ந்தவர் அப்துல் ரகுமான். இவர் கமுதி பேருந்து நிலையத்தில் தரைக்கடை வைத்து நடத்தி வருகிறார்.இந்த நிலையில் இன்று அவர் திடீரென தன்னுடைய குடும்பத்தோடு ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகம் அருகே தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இது குறித்து கூறிய அவர், கமுதி பேருந்து நிலையத்தில் தரைக்கடை […]

கச்சத்தீவு அந்தோணியார் திருவிழாவுக்கு பைபர் படகுகளை அனுமதிக்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு.!

ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறும் கச்சத்தீவு திருவிழாவிற்கும் கச்சதீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழாவிற்கு இயந்திரம் பொருத்திய நாட்டுப்படகில் சங்குமால் பகுதியை சேர்ந்த பட்டங்கட்டி சமூதாயத்தை சேர்ந்த மீனவ மக்கள் சென்று வந்து கொண்டிருந்த நிலையில் தற்போது காலத்திற்கு ஏற்ப நவீன முறையில் இயந்திரம் பொருத்திய பைபர் படகுகளுக்கு மாறிவிட்டதால் உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் பைபர் படகில் கச்சத்தீவு திருவிழா செல்வதற்கு தொடரப்பட்ட வழக்கில் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள் பரிசீலனை செய்து அனுமதிக்க […]

செய்தி எதிரொலியாக குடிநீர் குழாய் உடைப்பை சரி செய்த அதிகாரிகள்

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே மன்னாடிமங்கலம் கல்லாங்காடு பகுதியில் சித்தாதிபுரம் அருகே வைகை ஆற்றில் இருந்து திருப்பரங்குன்றம் பகுதிக்கு செல்லும் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு இரண்டு நாட்களாக குடிநீர் வீணாகி சென்ற நிலையில் இதுகுறித்து பத்திரிகை மற்றும் தொலைக்காட்சிகளில் செய்தியாக வந்திருந்தது இதனை அடுத்து மன்னாடிமங்கலம் கல்லாங்காடு பகுதிக்கு வந்த மதுரை மாநகராட்சி அதிகாரிகள் குழாய் உடைப்பை சரி செய்து குடிநீர் வீணாகாமல் தடுத்து நிறுத்தினர் பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சி செய்தி எதிரொலி காரணமாக உடனடியாக […]

தஞ்சை ஹோட்டலில் பணிபுரிய பெண்களுக்கு சர்ப்ரைஸ் கிப்ட் வழங்கி மகளிர் தின வாழ்த்துகள் கூறிய தஞ்சை ஜோதி அறக்கட்டளை செயலாளர் .!

தஞ்சையில் வசித்து வரும் தஞ்சை ஜோதி அறக்கட்டளை செயலாளர் பிரபுராஜ்குமார் தனது அலுவலக பணியாளர்களுடன் தஞ்சையில் உள்ள ஹோட்டலுக்கு உணவருந்த சென்றார்.  ஹோட்டலில் இலை எடுக்கும் பெண்களுக்கு மகளிர் தின வாழ்த்துகள் தெரிவிக்க வேண்டும் அதோடு அவர்களுக்கு கிஃபட் வழங்கி மகிழ்ச்சியில் திளைக்க வைக்க வேண்டும் என நினைத்தார். தாங்கள் சாப்பிட்ட இலைக்கு அடியில் கவர் ஒன்றை வைத்தார்.சாப்பிட்டு முடித்ததும் வழக்கம்போல் இலை எடுத்த பெண்கள் கவர் ஒன்று இருப்பதை கண்டு எடுப்போமா?வேண்டாமா? என யோசித்த நேரத்தில் […]

தென்காசி மாவட்டத்திற்கு ஆரஞ்ச் அலர்ட்..

தென்காசி மாவட்டத்தில் வருகின்ற 11.03.2025 அன்று பரவலான கனமழை எச்சரிக்கையாக ஆரஞ்ச் எச்சரிக்கை (ORANGE ALERT) இந்திய வானிலை மையத்தினால் தெரிவிக்கப்பட்டு உள்ளது. எனவே மேற்குறிப்பிட்ட நாளில் நீர்நிலைகள் மற்றும் தாழ்வான பகுதிகளின் அருகில் வசிக்கும் பொது மக்கள், கீழ்கண்ட வழிமுறைகளைப் பின்பற்றி பாதுகாப்பாக இருக்குமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் கேட்டுக் கொண்டுள்ளார்.   கனமழை காலங்களில், பொது மக்கள் நீர்நிலைகள் மற்றும் ஆற்றில் குளிக்கச் செல்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். பொதுமக்கள் அனைவரும், இடி […]

சோழவந்தானில் பொது மருத்துவ முகாம்

சோழவந்தான் காமராஜர் நடுநிலைப் பள்ளியில் தமிழக முதலமைச்சர் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டம்,சாஜர் அறக்கட்டளை, மதுரை ராக்ஸ் மருத்துவமனை இணைந்து பொது மருத்துவ முகாம் நடத்தினர். முகாமிற்கு சோழவந்தான் பேரூராட்சி தலைவர் எஸ் எஸ் கே ஜெயராமன் தலைமையேற்று முகாமினை தொடங்கி வைத்தார். துணைத் தலைவர் லதாகண்ணன், மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் வக்கீல் சத்திய பிரகாஷ், கவுன்சிலர் கொத்தாலம் என்ற செந்தில்வேல், மாவட்ட பிரதிநிதி பெரியசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர், முகாமில் மருத்துவ குழுவினர் இருதய வீக்கம்,இருதய […]

மன்னாடிமங்கலத்தில் குடிநீர் குழாயில் உடைப்பு. பல லட்சம் லிட்டர் குடிநீர் வீணாகும் அவலம்

சோழவந்தான் அருகே மன்னாடி மங்கலத்தில் நடுரோட்டில் ஆறாக ஓடும் குடிநீர் சாலையோரத்தில் தோண்டப்பட்ட பள்ளம் மற்றும் முகூர்த்த நாளான இன்றுஅதிக வாகனங்கள் செல்வதால் விபத்து ஏற்படும் அபாயம் அருகில் ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் அதிக அளவு மணல் அள்ளிச் செல்லும் வாகனங்களால் அடிக்கடி குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டுமதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே குருவித்துறை மெயின் ரோட்டில் குருபகவான் கோவில் செல்லும் சாலை மன்னாடிமங்கலத்தில் இருந்து செல்லம்பட்டி ஒன்றிய பகுதிகளுக்கு குடிநீர் தேவைக்காக […]

தூய்மை பணியாளர்களுக்கு இலவச மருத்துவ முகாம்.!

  தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் ஒன்றியம் ,பாதிரகுடி பஞ்சாயத்தில் சில்ட்ரன் சாரிட்டபிள் டிரஸ்ட் இன் சார்பாக தூய்மை பணியாளர்களுக்கு இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.  இம்மருத்துவ முகாமில் பெண்கள் நலன் தன்னார்வலர்கள் ராகினி மற்றும் பரமேஸ்வரி மாறனேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பாக கலந்து கொண்டு தூய்மை பணியாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இலவசமாக சர்க்கரை மற்றும் ரத்த கொதிப்பின் அளவை சரி பார்த்து மருத்துவ உதவி தேவைப்படுவார்கள் அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதாரத்தை அணுகுமாறு […]

பழனி அருகே இருசக்கர வாகனம், கேஸ் சிலிண்டர் திருடிய பலே திருடன் கைது, 8 இருசக்கர வாகனம், 10 சிலிண்டர்கள் பறிமுதல்..!

பழனி அருகே இருசக்கர வாகனம், கேஸ் சிலிண்டர் திருடிய பலே திருடன் கைது, 8 இருசக்கர வாகனம், 10 சிலிண்டர்கள் பறிமுதல்..! திண்டுக்கல் மாவட்டம் பழனி, பழனி புறநகர், சத்திரப்பட்டி, சாமிநாதபுரம், கீரனூர் உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து இருசக்கர வாகனம் மற்றும் கேஸ் சிலிண்டர்கள் திருடு போனது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டது இதுகுறித்து எஸ்.பி. பிரதீப் உத்தரவின் பேரில் DSP. தனஞ்செயன் மேற்பார்வையில் சத்திரப்பட்டி காவல் நிலைய ஆய்வாளர் கவிதா தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை […]

விமன் இந்தியா மூவ்மெண்ட் சார்பாக மகளிர் தின பொதுக்கூட்டம்.!

ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினத்தில் விமன் இந்தியா மூவ்மெண்ட் சார்பாக மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்கள் முன்னேற்றம் குறித்து பொதுக்கூட்டம் மற்றும் இப்தார் நிகழ்ச்சி விம் மாவட்ட தலைவி ரம்ஜான் பேகம் தலைமை தாங்கினார்.நகர் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். தேவிபட்டினம் நகர் தலைவர் சமீரா வரவேற்புரை நிகழ்த்தினார். நஸ்ரின் ஆலீமா தொகுத்து வழங்கினார். சிறப்பு அழைப்பாளராக வருகை தந்த தமிழ் மாநில தலைவர் பாத்திமா கனி சிறப்புரை ஆற்றினர். மண்டல தலைவி கதீஜா பிவி கருத்துரை வழங்கினார். இறுதியாக […]

நிலக்கோட்டை அருகே அதிர்ச்சி சம்பவம்: 7-ம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை..

நிலக்கோட்டை அருகே அதிர்ச்சி சம்பவம்: 7-ம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை.. திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை நாகலிங்க கோவில் தெருவை சேர்ந்த 13 வயது சிறுமி ஒருவர் நிலக்கோட்டையில் உள்ள ஒரு தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தார் இந்நிலையில் மாணவி மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது இதனிடையே நிகழ்வு நேரத்தில் வீட்டின் குளியலறைக்குள் சென்ற பள்ளி மாணவி நீண்ட நேரமாக வெளியே வரவில்லை வீட்டிலிருந்தவர்கள் குளியலரை கதவை உடைத்து […]

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!