திமுக நகர் கழகம் சார்பில் நல திட்ட உதவிகள் வழங்கும் விழா

உசிலம்பட்டி நகர் திமுக சார்பாக மு.க. ஸ்டாலின் 72 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகர் திமுக சார்பாக மு.க. ஸ்டாலின் 72 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு சலவைத் தொழிலாளருக்கு அயன் பாக்ஸ் வழங்குதல் மருத்துவ முடி திருத்தும் தொழிலாளர்கள் 11 பொருட்கள் அடங்கிய சலூன் தொழில் உவாரணங்கள் வழங்குதல் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா வத்தலக்குண்டு சாலையில் எம் பி வசந்தி மஹாலில நடைபெற்றது. […]

உயர் கல்விக்கு வழிகாட்டுதல் முகாம்..

தென்காசி மாவட்டத்தில் ஆதி திராவிடர் நலத் துறையின் மூலம் 2024-2025 கல்வி ஆண்டில் 12-ஆம் வகுப்பு பயிலும் மாணாக்கர்களுக்கு உயர்கல்வி வழிகாட்டுதல் (Career Guidance) ஆலோசனை முகாம் நடைபெற உள்ளது. இம்முகாமில் மாணாக்கர்கள் கலந்து கொண்டு தொழில் மற்றும் வேலை வாய்ப்பு அதிகமுள்ள படிப்புகள் மற்றும் அப்படிப்புகளை வழங்கும் கல்வி நிறுவனங்கள் குறித்து தெரிந்து கொண்டு பயன்பெற வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் அறிவுறுத்தியுள்ளார்.   தென்காசி வட்டத்தில், ஆதிதிராவிடர் இன மாணவர்களின் உயர் […]

வக்ஃப் மசோதாவுக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றம்: அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆதரவு..

தமிழக சட்டப்பேரவையில் கொண்டுவரப்பட்ட வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிரான தனித் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. எதிர்க்கட்சிகளான அதிமுக, பாமக உள்ளிட்ட கட்சிகளும் தீர்மானத்துக்கு ஆதரவு தெரிவித்த நிலையில், பாஜக உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தனர். நாடு முழுவதும் ‘வக்ஃப்’ வாரிய சொத்துளை ஒழுங்குபடுத்த வழிவகுக்கும் வக்ஃப் சட்டத் திருத்த மசோதா, மக்களவையில் கடந்த ஆகஸ்டில் அறிமுகம் செய்யப்பட்டது. எதிா்க்கட்சிகளின் கடும் எதிா்ப்பைத் தொடா்ந்து மசோதாவை ஆய்வு செய்த நாடாளுமன்ற நிலைக் குழு, 655 பக்க […]

மத உரிமைகளைப் பறிக்கும் வக்ஃப் மசோதா.! தீர்மானத்தை முன்மொழிந்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை!

வக்ஃபு சட்டத் திருத்தமானது சிறுபான்மை இசுலாமிய இன மக்களை வஞ்சிப்பதாக அமைந்துள்ளதை நாம் கடுமையாக எதிர்க்க வேண்டும். அதற்கான தீர்மானத்தை இம்மாமன்றத்தில் நான் முன்மொழிய இருக்கிறேன் என்பதை முன்னுரையாகத் தெரிவித்துக்கொள்கிறேன். வக்ஃபு சட்டமானது 1954-ஆம் ஆண்டு இயற்றப்பட்டது. இச்சட்டத்தில் 1995, 2013 ஆகிய ஆண்டுகளில் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. இதில் இன்றைய ஒன்றிய பா.ஜ.க. கூட்டணி அரசு சில திருத்தங்களைக் கொண்டு வருவதற்கான முன்வரைவினைக் கடந்த 8-8-2024 அன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தது. வக்ஃபு நிர்வாகத்தில் அரசின் தலையீட்டை […]

சோழவந்தான் அருகே மேலக்காலில் மின்சாரம் தாக்கி கூலித் தொழிலாளி உயிரிழந்த பரிதாபம்

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே மேலக்கால் கிராமம் மண்டு கோவில் தெருவில் வசிப்பவர் சோனி முத்து மகன் பிச்சை வயது 55 மேலக்கல் கிராமத்தில் கிராம பணியாளராக வேலை பார்த்து வருகிறார் இவருக்கு லட்சுமி பிச்சையம்மாள் ஆகிய இரண்டு மனைவிகள்நாகஜோதி நாகமணி லட்சுமி முத்துமாரி 4 மகள்கள் உள்ளனர் இந்த நிலையில் இன்று காலை 6 மணி அளவில் வீட்டின் அருகே காலைக்கடன் கழிக்க சென்றவர் வாழைத்தோப்பில் மின் வயர் அறுந்து விழுந்து கிடந்ததில் கவனக்குறைவாக மின் […]

சோழவந்தான் அருகே திருவாலவாய நல்லூர் சித்திபாபு ஜூம்ஆ பள்ளிவாசலில் தமிழக வெற்றி கழகம் சார்பில் இப்தார் நோன்பு திறப்பு நடைபெற்றது.

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே திருவாலவாயநல்லூர் கிராமத்தில் அமைந்துள்ள சித்திபாபு ஜூம்ஆ பள்ளிவாசலில் தமிழக வெற்றி கழகம் சார்பில் இப்தார் நோன்பு திறப்பு விழா நடைபெற்றது. இளைஞர் அணி மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் தியாகராஜன் தலைமையில் ஒன்றிய இளைஞர் அணி செயலாளர் பிரகாஷ் முன்னிலையில் நடைபெற்றது. ஜமாத் தலைவர் சர்புதீன், செயலாளர் ஜபருல்லா, பொருளாளர் அஹமதுரியாஜ், தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் முத்துக்குமார், சிக்கந்தர் ராஜா, விக்னேஷ் ,நாகமணி முஷ்ரப் மற்றும் ஜமாத்தார்கள் கிராமத்தினர் தமிழக வெற்றி […]

டிஜிட்டல் கைது மோசடி தொடர்பாக 83,668 வாட்ஸ் அப் எண்கள் முடக்கம்! மத்திய அரசு தகவல்..

டிஜிட்டல் கைது மோசடி தொடர்பாக 83,668 வாட்ஸ் அப் எண்கள், 3,962 ஸ்கைப் அக்கவுன்டுகளை மத்திய அரசு முடக்கியுள்ளதாக மக்களவையில் தெரிவிக்கப்பட்டது. டிஜிட்டல் கைது மோசடி தொடர்பாக பாஜக உறுப்பினர் மகேஷ் கா்ஷ்யாப் எழுப்பிய கேள்விக்கு, உள்துறை இணையமைச்சர் பண்டி சஞ்சய் குமார் மக்களவையில் நேற்று அளித்த பதிலில் கூறியதாவது: சைபர் மோசடிகளை கட்டுப்படுத்தும் முயற்சியாக 7,81,000 சிம் கார்டுகள், 2,08,489 ஐஎம்இஐ எண்கள் செயல் இழக்கம் செய்யப்பட்டன. 83,668 வாட்ஸ் அப் எண்கள், 3,962 ஸ்கைப் […]

மேட்டுப்பாளையம் நகராட்சி தூய்மை பணி ஒப்பந்ததாரர் மீது வழக்கு பதிவு செய்ய CITU தொழிற்சங்கத்தினர் காவல் நிலையத்தில் புகார் மனு.!

*மேட்டுப்பாளையம் நகராட்சி தூய்மை பணி ஒப்பந்ததாரர் மீது வழக்கு பதிவு செய்ய CITU தொழிற்சங்கத்தினர் காவல் நிலையத்தில் புகார் மனு*     கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நகராட்சி பகுதிகளில் தூய்மை பணிகளை மேற்கொள்ள TECTUS INFRA Pvt லிமிடெட் என்ற நிறுவனம் கடந்த 2024 ஆம் ஆண்டு ஒப்பந்தம் எடுத்திருந்தது மேற்படி ஒப்பந்த நிறுவனத்திடம் சுமார் 180 க்கு மேற்பட்ட ஆண் பெண் உட்பட தூய்மை பணியாளர்கள் மேட்டுப்பாளையம் நகர பகுதியில் தூய்மை பணியை மேற்கொண்டு […]

மேட்டுப்பாளையத்தில் தமிழில் பெயர் பலகை வைக்க நகராட்சி ஆணையாளர் அறிவிப்பு.!

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நகராட்சிக்குட்பட்ட கடைகள் வணிக நிறுவனங்கள் தொழில் சார்ந்த மையங்கள் தமிழில் பெயர் பலகை வைக்க நகராட்சி ஆணையாளர் அறிவித்துள்ளார் மேட்டுப்பாளையம் நகராட்சி பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் இயங்கி வருகின்றன நகர்ப்புற உள்ளாட்சி விதிப்படி புதிதாக தொழில் தொடங்குபவர்கள் புதியதாக விண்ணப்பித்து தொழில் உரிமம் பெற வேண்டும் ஏற்கனவே தொழில் உரிமம் பெற்று தொழில் செய்பவர்கள் தொழில் உரிமங்களை புதுப்பித்துக் கொள்ள வேண்டும் தொழில் உரிமம் இல்லாமல் வியாபாரம் […]

மேட்டுப்பாளையம் நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழக கூட்டம்.!

*மேட்டுப்பாளையம் நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழக கூட்டம் நடைபெற்றது* கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் அவர்களின் உத்தரவின் பேரில் கோவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் பள்ளி தலைமை ஆசிரியர் இந்திரா அவர்களின் மேற்பார்வையில் பெற்றோர் ஆசிரியர் கழக கூட்டம் நடைபெற்றது இந்தக் கூட்டத்தில் பள்ளியின் வளர்ச்சி சம்பந்தமாகவும் குழந்தைகள் மீதான பாலியல் துன்புறுத்தல் தடுத்தல் குறித்தும் போக்சோ சட்டம் […]

முதல்வர் பிறந்த நாளை முன்னிட்டு நகரக் கழகம் சார்பில் நல திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகர் திமுக சார்பாக மு.க. ஸ்டாலின் 72 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு கிராமிய கலைஞர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா பேரையூர் சாலையில் குரு மஹாலில் நடைபெற்றது. உசிலம்பட்டி நகர் திமுக சார்பாக மு.க ஸ்டாலின் 72 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு 1500 நபர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் மதுரை தெற்கு மாவட்ட கழக செயலாளர் சேடபட்டி மு. மணிமாறன் தலைமையில் நகர செயலாளர் எஸ் ஓ ஆர் […]

விமான நிலையத்தில் நேற்று கைது செய்யப்பட்ட தொடர் செயின் பறிப்பு கொள்ளையனை என்கவுண்டர் செய்த போலீசார்..

சென்னையில் நேற்று ஒரே நாளில் 7 இடங்களில் செயின் பறிப்பு சம்பவத்தில் கைது செய்யப்பட்ட ஜாபர் குலாம் (28), என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். சென்னையில் நேற்று காலை, 6:00 முதல் 7:10 வரையிலான, ஒரு மணி நேரம், 10 நிமிடங்களில், சைதாப்பேட்டையில் துவங்கி வேளச்சேரி வரை, ஆறு பெண்களிடம், 22 சவரன் வரை செயின் பறிப்பு சம்பவங்கள் நடந்தன. இச்சம்பவத்தில் ஈடுபட்ட மும்பையை சேர்ந்த ஜாபர் குலாம் ஹூசைன் என்பவரை போலீசார் நேற்று கைது செய்தனர். இந்நிலையில், […]

குடியுரிமை திருத்த நட்ட நகலை கிழித்தெறிந்து அரசியல் வாழ்க்கையில் நுழைந்தவன் நான்!- துணை முதலமைச்சர் உதயநிதி!

சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி மைதானத்தில் தி.மு.க சிறுபான்மையினர் நல உரிமை பிரிவின் சார்பில் இஃப்தார் புனித ரமலான் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று சிறப்புரையாற்றினார்.அப்போது பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ”இஸ்லாமிய மக்களுக்கு எதிராக ஒன்றிய அரசு கொண்டுவந்த குடியுரிமை திருத்த சட்ட நகலை கிழித்தெறிந்துவிட்டுதான் எனது அரசியல் வாழ்க்கையில் அடியெடுத்து வைத்தேன். நான் முதன்முதலில் கைது செய்யப்பட்டது இஸ்லாமிய மக்களுக்காகத் தான் என்பதை பெருமையாக சொல்வேன்.’மனிதர்கள் […]

மத்திய அமைச்சர் அமித்ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு! அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு..

டில்லி சென்றுள்ள அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை, அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது அ.தி.மு.க., மூத்த தலைவர்கள், எம்.பி.,க்கள் உடன் இருந்தனர். வரும் 2026ம் ஆண்டு தமிழக சட்டசபைக்கு தேர்தல் நடக்க உள்ளது. ஓராண்டு உள்ள நிலையில், தமிழக அரசியல் களத்தில் எந்த கட்சிகள் யாருடன் கூட்டணி என்பது பற்றிய கணிப்புகள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன.ஆளும்கட்சியான தி.மு.க., தற்போதுள்ள கூட்டணியை தக்க வைத்துக் கொள்ளலாம் என்று பேச்சுகள் தொடரும் […]

நடிகர், இயக்குனர் மனோஜ்(இயக்குனர் பாரதிராஜா மகன்) மாரடைப்பால் காலமானார்..

திரைப்பட இயக்குநர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் காலமானார். உடல்நலம் பாதிக்கப்பட்ட மனோஜ் பாரதிராஜாவுக்கு ஆஞ்சியோ சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. ஒரு வாரகாலமாக வீட்டில் ஓய்வில் இருந்த மனோஜுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது… சிகிச்சைக்காக எம்.ஜி.எம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோது உயிர் பிரிந்தது. அவருடைய தந்தையின் இயக்கத்தில் ’தாஜ்மஹால்’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார் மனோஜ் பாரதி. ’சமுத்திரம்’ படத்தில் சரத்குமாரின் சகோதரர்களில் ஒருவராக நடித்தார். பின்னர் தன் தந்தை இயக்கத்தில், ’கடல் பூக்கள்’ படத்தில் நடித்தார். சரண் இயக்கத்தில் […]

திண்டுக்கல் அருகே கொலை முயற்சி வழக்கில் கைது செய்யப்பட்ட 2 பேருக்கு சிறை தண்டனை விதிப்பு..

திண்டுக்கல் அருகே கொலை முயற்சி வழக்கில் கைது செய்யப்பட்ட 2 பேருக்கு சிறை தண்டனை விதிப்பு.. திண்டுக்கல் மாவட்டம் விருவீடு அருகே சென்மார்பட்டி பகுதியைச் சேர்ந்த வனராஜா(40) என்பவரை கடந்த 2022-ம் ஆண்டு சொத்து பிரச்சனை காரணமாக உசிலம்பட்டியை சேர்ந்த ராஜேஷ்(35), நித்யா(33) ஆகிய 2 பேர் அரிவாளால் வெட்டி, பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொலை செய்ய முயற்சி செய்த வழக்கில் 2 பேரையும் விருவீடு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் இவ்வழக்கு […]

வட மாநில கொள்ளையர்கள்ஐதராபாத்திற்கு தப்பிச் செல்ல முயன்ற போது விமான நிலையத்தில் வைத்து சினிமா பாணியில் தட்டி தூக்கிய போலீசார்..

சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இண்டிகோ மற்றும் ஏர் இந்தியா விமான கவுண்டர்களில் இந்த கொள்ளையர்கள் பற்றிய விவரங்களை கொடுத்து, அவர்கள் விமானங்களில் செல்வதற்கு போர்டிங் பாஸ் வாங்க வந்தால் கொடுக்காமல் நிறுத்தி வைக்க படி தெரியப்படுத்தி இருந்தனர்.இந்த நிலையில் இன்று காலை சென்னையில் இருந்து டெல்லி செல்ல இருந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில் உத்தர பிரதேசத்தை சேர்ந்த சுராஜ் (28) என்பவர் விமானத்தில் செல்வதற்கு போர்டிங் பாஸ் வாங்க வந்திருந்தார். ஆனால் இண்டிகோ விமான […]

நம்மிடமிருந்து கல்வியை பறிக்க RSS துடிக்கிறது! ராகுல் காந்தி குற்றச்சாட்டு!

ஒன்றியத்தில் மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு ஆட்சிக்கு வந்ததில் இருந்தே கல்வியில் எப்படியாவது காவியை புகுத்திவிட வேண்டும் என்ற ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் சித்தாந்தத்தின் படியே செயல்பட்டு வருகிறது. அதனடிப்படையில்தான் பல்கலைக்கழக துணை வந்தர்களாக ஆர்.எஸ்.எஸ் ஆட்களை உள்ளே நுழைத்திட வேண்டும் என்ற அடிப்படையில் UGC – யின் புதிய விதிமுறைகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.இதனைத் தொடர்ந்து கல்வி உரிமையையும், சமூக நீதியையும் அழிக்கத் துடிக்கும் ஒன்றிய பா.ஜ.க அரசை கண்டித்து இந்தியா முழுவதும் மாணவர் அமைப்புகள் போராட்டத்தை முன்னெடுத்து வருகிறார்கள். […]

நிலக்கோட்டை பகுதிகளில் திடீரென பெய்த மழையில் தேங்கிய குப்பைகள்! உடனடி நடவடிக்கை எடுத்த கோட்டூர் ஊராட்சி நிர்வாகம்..

நிலக்கோட்டை பகுதிகளில் திடீரென பெய்த மழையில் தேங்கிய குப்பைகள்! உடனடி நடவடிக்கை எடுத்த கோட்டூர் ஊராட்சி நிர்வாகம்.. திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு திடீரென கன மழை பெய்தது. இதன் காரணமாக நிலக்கோட்டை அருகே உள்ள கோட்டூர் ஊராட்சிக்கு உட்பட்ட கோ.புதூர் கிராமத்தில் சாக்கடை நீர் தேங்கியுள்ள குப்பை கூளங்கள் ஆங்காங்கே அடைத்தும் இருந்தது. இதனை அறிந்த, தனிஅலுவலர்/வட்டார வளர்ச்சி அலுவலர் பஞ்சவர்ணம், மண்டல துணை […]

40 சுங்கச்சாவடிகளில் கட்டணங்கள் உயர்கிறதா.?

தமிழ்நாட்டில் உள்ள 78 சுங்கச்சாவடிகளில் சென்னையை அடுத்த வானகரம் உள்ளிட்ட 40 சுங்கச்சாவடிகளில் வரும் ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் சுங்கக்கட்டணம் உயர்த்தப்படும் என்று தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் அறிவித்திருக்கிறது. தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் ஆண்டுக்கு ஒருமுறை, இரு கட்டங்களாக, சுங்கக்கட்டணம் உயர்த்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் நடப்பாண்டில் முதற்கட்டமாக தமிழ்நாட்டில் உள்ள 78 சுங்கச்சாவடிகளில், வானகரம், செங்கல்பட்டு பரனூர், திண்டிவனம் ஆத்தூர், சூரப்பட்டு, பட்டறைப்பெரும்புதூர் உள்ளிட்ட 40 சுங்கச்சாவடிகளின் […]

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!