ஆதரவற்ற மூதாட்டியின் உடலை இந்து முறைப்படி தகனம் செய்த இஸ்லாமிய பெண்கள்.. 

ஆதரவற்ற நிலையில் இறந்த மகமாயி பாட்டியின் உடலை இந்து முறைப்படி தகனம் செய்த இஸ்லாமிய பெண்களை பொது மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பாராட்டி வருகின்றனர். தென்காசி மாவட்டம் குற்றாலம் குடியிருப்பு பகுதியில் பசியில்லா தமிழகம் மூலமாக பெண்களால் பெண்களுக்காக நடத்தப்படும் ஆதரவற்ற முதியவர்களுக்கான கட்டணமில்லாத இல்லம், அன்னை பாத்திமா அலி அன்பு இல்லம் என்ற பெயரில் செயல்பட்டு வருகிறது. இந்த அன்பு இல்லத்தில் தென்காசி மாவட்டத்தைச் சார்ந்த ஆதரவற்ற பெண்கள் தங்க வைக்கப்பட்டு தொடர்ந்து பராமரிக்கப்பட்டு […]

பணி பாதுகாப்பு சட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி ஆசிரியர்கள் போராட்டம்..

தென்காசியில் பணி பாதுகாப்பு சட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தென்காசி மாவட்டத்தில், எம்.கே.வி.கே பள்ளியில் 12 ஆம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி நடைபெற்று வருகிறது. பணியில் ஈடுபட்ட ஆசிரியர்கள் பணி பாதுகாப்பு சட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி கருப்பு பட்டை அணிந்து போராட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட தலைவர் காளிராஜ் தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் முத்துகுமார், தமிழ்நாடு பதவி உயர்வு பெற்ற முதுகலைப் பட்டதாரி […]

சுரண்டை தீயணைப்பு நிலையத்தில் தீத்தொண்டு தியாகி நாள் அனுசரிப்பு..

தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகளின் போது வீரமரணம் அடைந்த தீயணைப்பு வீரர்களின் தியாகத்தை போற்றும் விதமாக, ஒவ்வோர் ஆண்டும் ஏப்ரல் 14 ஆம் தேதி தீத்தொண்டு நாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, தென்காசி மாவட்டம் சுரண்டை தீயணைப்பு நிலையத்தில் தீ தொண்டு நாள் நிகழ்ச்சி திருநெல்வேலி மண்டல துணை இயக்குனர் சரவணபாபு உத்தரவுபடியும், தென்காசி மாவட்ட தீயணைப்பு அலுவலர் பானுபிரியா ஆலோசனைப் படியும் அனுசரிக்க பட்டது. நிகழ்ச்சியில் சுரண்டை தீயணைப்பு நிலைய அலுவலர் போக்குவரத்து பாலசந்தர் தலைமையில் […]

சோழவந்தானில் தீயணைப்பு துறை சார்பில் நீத்தார் நினைவு நாள் அனுசரிப்பு

சோழவந்தான் தீயணைப்பு துறை சார்பில் தீ விபத்தில் இறந்த பணியாளர்களை நினைவு கூறும் வகையில் நீத்தார் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது சோழவந்தான் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நிலைய அலுவலர் தவுலத் பாதுஷா நிலைய போக்குவரத்து அலுவலர் நாகராஜ் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தீயணைப்புத் துறையினர் கலந்து கொண்டனர்

சோழவந்தான் அருள்மிகு ஸ்ரீ பொய்கை விநாயகர் கோவிலில் தினசரி அன்னதான துவக்கம்

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருள்மிகு ஸ்ரீ பொய்கை விநாயகர் கோவிலில் தினசரி அன்னதானத் துவக்கப்பட்டது. சோழவந்தான் திண்டுக்கல் சாலையில் பெண்கள் மேல்நிலைப்பள்ளி எதிரில் முற்காலத்தில் சோழ மன்னர்கள் ராணி மங்கம்மாள் காலத்தில் அன்னதானம் நடைபெற்று வந்தது. தற்போது ராணி மங்கம்மாள் சத்திரம் மேல்நிலைப் பள்ளியாக மாற்றமடைந்து உள்ளது. கோவில் சிதிலம்அடைந்ததன் காரணமாகவும் ஆக்கிரமிப்புகளாலும் சூழப்பட்டு அன்னதானம் நாளடைவில் நிறுத்தப்பட்டு இருந்தது. தற்போது இந்து சமய அறநிலைத்துறையின் மூலம் கோவில் கும்பாபிஷேகத்திற்காக புணரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. அதன் […]

சோழவந்தானில் அதிமுக சார்பில் பூத் கமிட்டி கிளை கழக கூட்டம் முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் தலைமையில் நடைபெற்றது.

மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் சோழவந்தான் பேரூர் அதிமுக சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம் சோழவந்தானின் 18 வார்டுகளுக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்றது கூட்டத்திற்கு வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் கொரியர் கணேசன் தலைமை தாங்கினார் பேரூர் செயலாளர் முருகேசன் வரவேற்புரை ஆற்றினார் அமைப்புச் செயலாளர் மகேந்திரன்முன்னாள் எம்எல்ஏக்கள் எம்வி கருப்பையா மாணிக்கம் வாடிப்பட்டி முன்னாள் சேர்மன் ராஜேஷ் கண்ணா செல்லம்பட்டி ஒன்றிய செயலாளர் எம் வி பி ராஜா ஆகியோர் முன்னிலை […]

சோழவந்தான் அருள்மிகு ஸ்ரீ செண்பகவள்ளி அம்மன் கோவில் 19 ஆவது ஆண்டு பால்குடம் நடைபெற்றது .திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருள்மிகு ஸ்ரீ செண்பகவள்ளி அம்மன் கோவில் 19 ஆம் ஆண்டு பால்குடம் விழா நடைபெற்றது. கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை காப்பு கட்டுதலுடன் திருவிழா தொடங்கியது. தொடர்ந்து இன்று காலை ஏராளமான பக்தர்கள் வைகை ஆற்றில் இருந்து பால்குடம் எடுத்து வந்து நான்கு ரத வீதிகளில் வலம் வந்து திருக்கோவிலை அடைந்தனர். தொடர்ந்து அம்மனுக்கு பால் தயிர் வெண்ணெய் மஞ்சள் பொடி மா பொடி திரவியம் உள்ளிட்ட பல்வேறு வகையான விஷயங்கள் செய்யப்பட்டு சிறப்பு […]

சோழவந்தான் பகுதி கோவில்களில் தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. ஏராளமான பொதுமக்கள் சாமி தரிசனம் செய்தனர்

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகிறது மதுரை மாவட்டம் சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பல்வேறு கோவில்களில் பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர் சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவிலில் அதிகாலை முதல் பொதுமக்கள் அதிக அளவில் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தனர் அர்ச்சகர் சண்முகவேல் பூஜைகள் செய்தார் செயல் அலுவலர் இளமதி பணியாளர்கள் பூபதி வசந்த் கவிதா ஆகியோர் ஏற்பாடுகளை […]

ஒன்றிய அரசின் வக்ஃப் சட்ட திருத்தத்தை எதிர்த்து மாபெரும் கண்டன பொதுக் கூட்டம்..

ஒன்றிய அரசின் வக்பு சட்ட திருத்தத்தை எதிர்த்து தென்காசியில் நடைபெற்ற கண்டன பொதுக் கூட்டத்தில், தென்காசி எம்பி மற்றும் எம்எல்ஏக்கள், நகர்மன்ற தலைவர்கள், அரசியல் கட்சிகளின் மாவட்ட, நகர, ஒன்றிய, கிளை நிர்வாகிகள், சமூக நல அமைப்புகள், பொதுமக்கள் திரளாக பங்கேற்று கண்டனத்தை பதிவு செய்தனர். தென்காசி மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை சார்பில் வக்பு சட்ட திருத்தத்தை எதிர்த்து கண்டன பொதுக் கூட்டம் மற்றும் ஆர்ப்பாட்டம் தென்காசி கொடி மரத்திடலில் உலமா சபை மாவட்ட தலைவர் […]

நீரேற்று நிலைய தடுப்பணை பகுதியில் பொதுமக்கள் இறங்கத் தடை.!

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நகராட்சி சாமண்ணா தலைமை நீரேற்று நிலைய தடுப்பணை பகுதியில் நீர் அதிகமாக உள்ளதால் பொதுமக்கள் நீர் நிலையில் இறங்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது மேட்டுப்பாளையம் நகராட்சி சாமண்ணா தலைமை நீரேற்று நிலையத்தின் அருகில் பவானி ஆற்றில் இருந்து திருப்பூர் குடிநீர் திட்டத்திற்காக தடுப்பணை அமைக்கப்பட்டுள்ளது தடுப்பணையில் பொதுமக்கள் விளையாடியும் நீந்தியும் வருகின்றனர் நீரேற்று நிலையத்தின் பகுதி ஆழம் அதிகமாக உள்ளதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது எனவே அசம்பாவிதம் ஏற்படா வண்ணம் தடுப்பணை பகுதியில் […]

மேட்டுப்பாளையம் சி.எஸ்.ஐ, தூய யோவான் ஆலயத்தில் ஈஸ்டர் பண்டிகை.!

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சி.எஸ்.ஐ, தூய யோவான் ஆலய மக்கள் மேட்டுப்பாளையம் வீதிகள் வழியாக குருதோலைகளை கையில் ஏந்தி பவனி வந்தனர் கிறிஸ்தவ மக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான ஈஸ்டர் பண்டிகை கடந்த மாதம் சாம்பல் புதன்கிழமை அன்று தொடங்கியது. தொடர்ந்து 7 வாரங்கள் கிறிஸ்தவ மக்கள் தவக்காலத்தை கடைபிடிக்கின்றனர் கிறிஸ்து உயிர்த்தெழுந்த பண்டிகைக்கு முந்தைய வாரம் குருத்தோலை ஞாயிறாக கடைபிடிக்கப்படுகிறது இந்த நாளில், கிறிஸ்தவ மக்கள் குருத்தோலைகளை கையில் ஏந்தி பவனியாக சென்று தேவாலயங்களில் வழிபடுவது வழக்கம். […]

பாப்பாபட்டியில் அய்யனார் குளம் இரண்டு தேவர் வகையறாவுக்கு பாத்தியப்பட்ட தேவர் பட்டம் சூட்டும் விழா நடைபெற்றது

மதுரை மாவட்டம் செல்லம்பட்டி ஒன்றியம் பாப்பாபட்டியில்‌ உள்ள மந்தையில் அய்யனார்குளம் இரண்டு தேவர் வகையறாவுக்கு பாத்தியப்பட்ட பெரிய தேவர் பட்டம் சூட்டும் விழா பாப்பாபட்டி பத்து தேவர் தலைமையில் அய்யனார்குளம் இரண்டு தேவர் முன்னிலையில் தேவர் பட்டம் சூட்டும் விழா நடைபெற்றது. பெரிய தேவர் வகையறா பிரகாஷ் என்பவருக்கு தேவர் பட்டம் சூட்டப்பட்டது. பத்து தேவர் மாமன் மார்கள் நெற்றியில் திருநீறு வைத்து தேவர் பட்டத்தினை சூட்டினார்கள். பின்னர் அவருக்கு மாலை சால்வை அணிவித்து தங்களது வாழ்த்துக்களை […]

தேவகோட்டை – கே எம் எஸ் சிந்தனைச் சோலையின் 102 வது மாதக் கூட்டம் நடைபெற்றது

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை ராம் நகர் அழகப்பா பூங்கா பின்புறம் அமைந்துள்ள பகத்சிங் மணி மண்டபத்தில் விடுதலை வீரர் கே எம் எஸ் சிந்தனை சோலையில் 102 வது மாதக் கூட்டம் முனைவர் ச ஆறுமுகம் தலைமையில் நடைபெற்றது, தமிழ்த்தாய் வாழ்த்துடன் நிகழ்ச்சி தொடங்கியது சிந்தனைச் சோலையின் நிறுவனர் தெய்வசிகாமணி வரவேற்புரை நிகழ்த்தினார் ,முனைவர் பெளலியன்ஸ் கனவு மெய்ப்பட வேண்டும் என்ற தலைப்பில் சிறப்பு உரையாற்றினார் , நிகழ்ச்சிகளை சிந்தனை சோலை துணைச் செயலாளர் செல்வம் நன்றியுரை […]

சோழவந்தானில் தேமுதிக சார்பாக உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.

மதுரை புறநகர் வடக்கு மாவட்டம் வாடிப்பட்டி தெற்கு ஒன்றியம் சோழவந்தான் பேரூர் தேமுதிக சார்பாக வட்ட பிள்ளையார் கோவிலில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. சோழவந்தான் பேரூர் செயலாளர் கிருஷ்ணன் தலைமை வகித்தார். மாவட்ட துணைச் செயலாளர் தங்கராஜ், வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் சோலை சசிகுமார், மாவட்ட அவைத் தலைவர் நல் கர்ணன் முன்னிலை வகித்தனர். மகளிர் அணி துணைச் செயலாளர் கண்ணம்மா, பூங்கொடி, பாண்டிச்செல்வி, சிறப்பு அழைப்பாளராக மாவட்ட நிர்வாகி தெய்வேந்திரன், முள்ளி பள்ளம் […]

அலங்காநல்லூர் அதிமுக மாவட்ட பிரதிநிதி முரளியின் தாயார மறைந்த 30 வது நாள் நினைவு நாளை யொட்டி எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர் பி உதயகுமார் நேரில் சென்று மரியாதை

மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அலங்காநல்லூர் ஒன்றிய அலங்கா நல்லூர் பேரூர் கழக மாவட்டபிரதிநிதி அலங்கை முரளியின் தாயார் சரோஜா அம்மாள் கடந்த17.03.25 அன்று இயற்கை எய்தினார் முரளியின் தாயார் சரோஜாவின் 30 வது நாள் நினைவு நாளை ஒட்டிமாவட்ட பிரதிநிதி அலங்கை முரளியின் இல்லத்திற்கு வருகை தந்த சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவரும் மதுரை புறநகர் மேற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான ஆர்பி.உதயகுமார் சரோஜாவின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தார் பின்னர் மாவட்ட […]

கீழக்கரை ஜல்லிக்கட்டில்மாடு முட்டியதில் தலைமை காவலர் படுகாயம்

மதுரை மாவட்டம்அலங்காநல்லூர் கீழக்கரை ஜல்லிக்கட்டு அரங்கில் பல்வேறு குளறுபடிகளுக்கு மத்தியில் தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பேரவை சார்பில் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு போட்டியில் ஜல்லிக்கட்டு காளை குத்தியதில் மதுரை பெருங்குடி காவல் நிலைய தலைமை காவலர் சித்தையன் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகிறார் ஏற்கனவே கீழக்கரையில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளில் பல்வேறு குளறுபடிகள் நடப்பதாக மாடுபிடி வீரர்கள் காளை உரிமையாளர்கள் தொடர்ந்து புகார் அளித்து வந்த நிலையில் இன்று காலை தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பேரவை சார்பில் ஜல்லிக்கட்டு […]

சட்டமன்ற தேர்தலில் பெண்களின் ஒருவாக்குகள் கூட திமுகவுக்கு போட மாட்டோம் என்று உறுதிமொழி ஏற்க வேண்டும்.ஆர்.பி. உதயகுமார் பேச்சு

மதுரை மாவட்டம் வாடிப் பட்டி தாலூ கா அலங்காநல்லூர் ஒன்றியத்தில் தனிச்சியம், மேல சின்னம்பட்டி புதுப்பட்டி ஆகிய பகுதிகளில் அ.திமு.க. பூத் கமிட்டி கிளை கழக கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மகேந்திரன், மாணிக்கம், கருப்பையா, மாநில நிர்வாகிகள் ராஜேஷ் கண்ணா, ராமகிருஷ்ணன், ஏ.கே.பி. சிவசுப்பிரமணியன், மாவட்ட பொருளாளர் திருப்பதி முன்னிலை வகித்தனர்.முன்னாள் ஒன்றிய செயலாளர் பாலகிருஷ்ணன் வரவேற்றார். இந்த கூட்டத்தில் மாவட்ட கழக செயலாளர் […]

இரண்டு ரெய்டுகளுக்குப் பயந்து அதிமுகவை அடமானம் வைத்தவர்கள், தமிழ்நாட்டை அடமானம் வைக்கத் துடிக்கிறார்கள்!- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..

அதிமுக – பாஜக தோல்விக் கூட்டணியே ஒரு ஊழல்தான் என திமுக தலைவரும் முதல்வருமான மு.க. ஸ்டாலின் விமரிசித்துள்ளார். இரண்டு ரெய்டுகளுக்குப் பயந்து அதிமுகவை அடமானம் வைத்தவர்கள், தமிழ்நாட்டை அடமானம் வைக்கத் துடிக்கிறார்கள் எனவும் குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அ.தி.மு.க. – பா.ஜ.க. கூட்டணி என்பது தோல்விக் கூட்டணி. தொடர் தோல்வியை அந்த அணிக்குக் கொடுத்தவர்கள் தமிழ்நாட்டு மக்கள். இதே தோல்விக் கூட்டணியை மீண்டும் உருவாக்கி இருக்கிறார் உள்துறை அமைச்சர் அமித்ஷா. நேற்றைய தினம் […]

அதிமுக-பாஜக கூட்டணி: கூடா நட்பு கேடாய் முடியும்!- எஸ்டிபிஐ

இதுதொடர்பாக எஸ்டிபிஐ கட்சியின் மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; அதிமுக-பாஜக கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ள செய்திகள் வெளியாகியுள்ளன. பாஜகவுடன் கூட்டணி அமைப்பதற்கு அதிமுக எத்தனை காரணங்களைக் கூறினாலும், அவற்றை தமிழக மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இந்தக் கூட்டணிக்குப் பின்னால், ஒன்றிய அரசு பல்வேறு வழிகளில் கொடுத்த அழுத்தம் மற்றும் நெருக்கடியே முக்கிய காரணம் என்பதை அரசியல் புரிந்தவர்கள் மட்டுமின்றி பாமர மக்களும் அறிவார்கள். இத்தகைய அழுத்தங்களுக்கு அடிபணிந்து, பாஜகவுடன் கூட்டணி என்கிற […]

தமிழகத்தின் புதிய பாஜக மாநிலத் தலைவராக, நயினார் நாகேந்திரன் ஒரு மனதாக தேர்வு..

தமிழக பாஜக மாநிலத் தலைவர் பதவிக்கு போட்டியிட விரும்புவர்கள், இன்று (ஏப்.11) பகல் 2 மணி முதல் மாலை 4 வரை விருப்ப மனுக்களை தாக்கல் செய்யலாம் என அக்கட்சியின் சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும், கட்சியில் குறைந்தது 10 வருடங்கள் அடிப்படை உறுப்பினராக இருக்க வேண்டும் என்று தகுதி நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இருப்பினும் அந்த விதி மாற்றப்பட்டது. இந்த நிலையில், மாநில தலைவர் பதவிக்கு இன்று நடைபெற்ற விருப்ப மனு தாக்கலின்போது நயினார் நாகேந்திரன் மட்டும் தாக்கல் செய்திருந்தார். […]

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!