மதிமுக முதன்மைச் செயலாளர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்த துரை வைகோ தனது ராஜினாமா கடிதத்தை வாபஸ் பெற்றுள்ளார்.மதிமுக நிர்வாகிகள் குழு கூட்டத்தின் முடிவில் ராஜினாமா முடிவை துரை வைகோ வாபஸ் பெற்றார்.முதன்மை செயலாளர் துரை வைகோவின் ராஜினாமா ஏற்றுக் கொள்ளப்படாது. அதேபோல், மல்லை சத்யாவையும் கட்சியை விட்டு செல்ல அனுமதிக்க மாட்டேன் என்று வைகோ தெரிவித்துள்ளார்.மேலும், துரை வைகோ மல்லை சத்யா இருவரும் பழைய நிகழ்வுகளை மறந்துவிட்டு இணைந்து பணியாற்ற கைகோ அறிவுறுத்தி உள்ளார்.மதிமுக நிர்வாக கூட்டத்தில் […]
Category: செய்திகள்
வாடிப்பட்டி அருகேமண்வெட்டியால் தொழிலாளி வெட்டிக்கொலை
மதுரை ஜெயந்திபுரம் நேதாஜி தெருவை சேர்ந்தவர் பாலகுமார் மகன் சரவணபாண்டி (வயது 24). இவர் மொசைக்கு தரைக்குபால் சீலிங் செய்யும் தொழிலாளி. இவர் வாடிப்பட்டி அருகேஆண்டிபட்டி இந்திரா காலனி பகுதியில் உள்ள தனது நண்பர் முனியாண்டி என்பவர் வீட்டில் கடந்த ஒரு மாதமாக தங்கி அந்த பகுதியில் வேலை செய்து வந்துள்ளார். இந்த நிலையில் இன்று காலை 9 மணி அளவில் அதேபகுதியை சேர்ந்த வினோத், மருதுபாண்டி, பாலமுருகன், மணி ஆகிய 4 பேர் கொண்ட கும்பலால் […]
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் மதிமுக நிர்வாக குழு கூட்டம்! பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன..
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிர்வாகக் குழுக் கூட்டம், அவைத் தலைவர் அர்ஜுனராஜ் தலைமையில் இன்று(ஏப். 20) சென்னை, எழும்பூரில் உள்ள தலைமை அலுவலகம் தாயகத்தில் நடைபெற்றது. மதிமுக பொதுச்செயலாளர் வைகோ எம்.பி., சிறப்புரை ஆற்றினார். பொருளாளர் மு.செந்திலதிபன், முதன்மைச் செயலாளர் துரை வைகோ எம்.பி., துணைப் பொதுச்செயலாளர்கள் மல்லை சத்யா, செஞ்சி ஏ.கே.மணி, ஆடுதுறை ரா.முருகன், தி.மு. ராசேந்திரன், டாக்டர் ரொஹையா மற்றும் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:- தீர்மானம் […]
சோழவந்தான் அருள்மிகு திரௌபதை அம்மன் கோவில் பூக்குழி விழாவிற்கான முகூர்த்தக்கால் நடப்பட்டது
மதுரை மாவட்டம் சோழவந்தானில் அமைந்துள்ள அருள்மிகு திரௌபதி அம்மன் கோவில் பூக்குழி திருவிழா வருகின்ற 28ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. அதற்காக முகூர்த்தக்கால் நடும் விழா இன்று காலை கோவில் முன்பு நடைபெற்றது கோவில் பரம்பரை அறங்காவலர்கள் அர்ச்சுனன்,திருப்பதி, ஜவஹர்லால், குப்புசாமி மற்றும் கோவிலைச் சேர்ந்தவர்கள் பக்தர்கள் ஆகியோர் முகூர்த்தக்கால் நட்டனர். இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து திரௌபதை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று தீபாதாரணை நடைபெற்றது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான […]
அரசியலமைப்புக்காக நாடுதழுவிய போராட்டங்களை அறிவிப்பு செய்தது காங்கிரஸ் கட்சி..
புதுதில்லியில் சனிக்கிழமை நடைபெற்ற காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச் செயலாளர்கள், மாநிலப் பொறுப்பாளர்கள் உள்பட முக்கிய நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். இந்தப் பொதுக்கூட்டத்தில், அரசியலமைப்பைக் காப்பாற்ற வலியுறுத்தி, ஏப்ரல் 25 முதல் மே 30 ஆம் தேதிவரையில் நாடுதழுவிய போராட்டம் நடத்தவிருப்பதாக அக்கட்சித் தலைமை அறிவித்துள்ளது. தொடர்ந்து, அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் செய்தியாளர்களுடன் பேசியதாவது, அரசியலமைப்பைக் காப்பாற்றும் போராட்டம் ஏப்ரல் 25 முதல் ஏப்ரல் 30 வரையில் பிரதேஷ் காங்கிரஸ் கமிட்டி அளவிலும், மே […]
மக்களுக்கு மிகவும் அத்தியாவசியமான குடிநீரைக்கூட சுகாதாரமாக அளிக்க முடியாத அரசு இருந்து என்ன பயன்? எடப்பாடி பழனிச்சாமி கேள்வி..
திருச்சியில் கழிவுநீர் கலந்த குடிநீரைக் குடித்ததால், 3 பேர் பலியான சம்பவத்தைக் குறிப்பிட்டு, திமுக அரசுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, அவர் தனது எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது, திருச்சி மாவட்டம் உறையூரில் கழிவுநீர் கலந்த குடிநீரைக் குடித்ததால் 3 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 50-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருவதாகவும் வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. 15 நாள்களாக குடிநீரில் பிரச்னை இருப்பதாக மக்கள் மாநகராட்சிக்கு புகார் அளித்தும், இந்த திமுக அரசு எந்தவித […]
வஞ்சக பாஜக துரோக அதிமுக கூட்டணியிடமிருந்து தமிழ்நாட்டை பாதுகாப்போம்: மாநிலம் முழுவதும் துண்டு பிரசுரங்களை வழங்கிய திமுகவினர்..
அந்த துண்டு பிரசுரங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது வருமாறு; வஞ்சக பாஜகவுடன் சேர்ந்து அடிமை அதிமுக தமிழ்நாட்டுக்கு செய்த துரோகப் பட்டியல்! நீட் தேர்வை தமிழ்நாட்டில் அனுமதித்து மாணவ மாணவியரின் உயிரை பறித்தது. நானும் விவசாயி என்று வேடம் போட்டு மூன்று வேளாண் சட்டத்திற்கு ஆதரவு, சிறுபான்மை மக்களுக்கு எதிரான சிஏஏ சட்டத்திற்கு ஆதரவு, மின்சார கட்டண உயர்வுக்கு காரணமான உதய் மின் திட்டத்திற்கு ஆதரவு, இஸ்லாமியர்களை இரண்டாம் தரவகுடிமக்களாக்கும் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவு, இதுபோன்ற மேலும் பல்வேறு,பாதகங்களுக்கு […]
திருவாடானை தீயணைப்பு நிலையம் அருகே புதிய சாலை சேதமடைந்ததாக புகார்.
. ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே சின்னக்கீரமங்கலத்தில் சேந்தினி செல்லும் சாலையில் பிரிவு சாலை சுமார் 200 மீட்டர் தூரத்தில் தீ அணைப்பு மீட்பு நிலையம் செயல்பட்டு வருகிறது. புதிதாக கட்டப்பட்ட இந்த நிலையத்திற்கு தார் சாலை அமைக்கப்பட்டது. அமைக்கப்பட்ட போதே தரமற்ற முறையில் அமைக்கப்பட்டதால் தற்போது ஆங்காங்கே சாலை முற்றிலும் சேதமடைந்து மண்சாலையாக மாறிவிட்டது.சாலை மோசமாக இருப்பதால் அவசர காலங்களில் பாதிப்பிற்குள்ளாகும் இடத்திற்கு உரிய நேரத்தில் செல்ல இயலாத அவலநிலையுடன் இருப்பதாக கவலை தெரிவிக்கின்றனர். […]
வஃக்ப் -திருடர்களும்..!திருத்தங்களும்..!
(ஒரு சிறிய தொடர்) வஃக்ப் புரிதல் -2 வஃக்ப் -திருடர்களும்..!திருத்தங்களும்..! (ஒரு சிறிய தொடர்) வஃக்ப் புரிதல் -2 பெருமானார் ஸல்லல்லாஹூ அலைஹிவ ஸல்லம் அவர்கள் காலத்திலேயே பொது சமூகத்திற்கானஅர்ப்பணங்கள் (வஃக்ப்) ஆரம்பமாகிவிட்டது. உமர்(ரலி) அவர்களுக்கு கைபர் போரில் கிடைத்த ஒரு விலையுயர்ந்த நிலத்தை பெருமானார் ஸல்லல்லாஹூ அலைஹிவ ஸல்லம் அவர்களின் ஆலோசனைப்படி, மக்கள் பயன்பாட்டிற்கு வழங்கியதே முதல் வஃக்ப் என்று குறிப்பிடப்படுகிறது. வஃக்ப் சமூகத்திற்கான கட்டாய விதியல்ல என்றாலும், மனிதனுக்குள் இது கருணையை விதைக்கிறது. மறு […]
உசிலம்பட்டி பள்ளியில் போக்சோ சட்டம் குறித்து விழிப்புணர்வு கூட்டம்
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி சக்கரவர்த்தி வித்யாலயா பள்ளியில் போக்சோ சட்டம் பற்றிய விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. பள்ளி தாளாளர் முனைவர் கல்வியாளர் வேல்முருகன் தலைமையில் ஆசிரியை லயன் அமுதப்பிரியா முன்னிலையில் இக்கூட்டம் நடைபெற்றது. காவல் ஆய்வாளர் பொம்மையராஜா தலைமை காவலர் விஜயலட்சுமி மற்றும் மனநல ஆலோசகர் ராஜாராம் ஆகியோர் போக்சோ சட்டம் குழந்தை திருமணம் 1098 குழந்தைகள் பாதுகாப்பு பற்றி எடுத்துக் கூறினார்கள் கூட்டத்தில் வளர் இளம்பெண்கள் பெற்றோர்கள் கல்லூரி மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டார்கள் […]
சோழவந்தான் அருள்மிகு திரௌபதி அம்மன் கோவில் பூக்குழி திருவிழா. 28ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது
மதுரை மாவட்டம் சோழவந்தான் திரௌபதி அம்மன் கோவில் பூக்குழி திருவிழா வருகின்ற 28ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது அதற்கான முகூர்த்தக்கால் நடும் விழா நாளை20.4.25 ஞாயிற்றுக்கிழமை காலை கோவில் வளாகத்தில் நடைபெற உள்ளது தொடர்ந்து ஏப்ரல் 28 தேதி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது திருவிழாவின் நிகழ்ச்சிகள் சித்திரை 15 முதல் சித்திரை 26 வரை வரை 12 நாட்கள் மகாபாரத்தில் வரக்கூடிய கதாபாத்திரத்திற்கு ஏற்ப தினசரி ஒவ்வொரு வேடம் புரிந்து திருவிழா நடைபெறும். அதன்படி திருவிழாவின் நிகழ்ச்சிகளாக […]
பாமகவை தொடர்ந்து ம.தி.மு.க.விலும் விரிசல்! கட்சி பொறுப்பில் இருந்து விலகுவதாக துரை வைகோ அறிவிப்பு..
அரசியல் குடும்பத்தில் பிறந்திருந்தாலும் தாமரை இலைத் தண்ணீர் போல இருந்தவன் நான் என்பதை அனைவரும் அறிவர். 2018ம் ஆண்டு இயக்கத் தந்தை வைகோ திடீரென உடல் நலம் குன்றி இதய பாதிப்புக்கு உள்ளானார். அந்த நேரத்தில் கனடா நாட்டில் எனது குழந்தைகள் படிப்புக்காக சென்று தங்கி இருந்த நான் உடனடியாக நாடு திரும்பினேன். வைகோவுக்கு இதய சிகிச்சை அளிக்கப்பட்டு பேஸ் மேக்கர்,ஸ்டன்ட் வைக்கப்பட்டது. இதனால் எப்போதும் சுற்றுப் பயணங்களில் சுறுசுறுப்பாக செயல்பட்டு வந்த எனது தந்தை வைகோ […]
பேருந்துகளில் அதிக ஒலி எழுப்பும் ஹாரன்.! போக்குவரத்து துறை அதிகாரிகள் அதிரடி சோதனை.!!
*பேருந்துகளில் அதிக ஒலி எழுப்பும் ஹாரன் போக்குவரத்து துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி அபராதம் விதிப்பு* கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில்அதிக ஒலி எழுப்பக் கூடிய ஏர் ஹாரன் பொருத்தப்பட்ட தனியார் பேருந்துகளில் இருந்து ஹாரன்களை அப்புறப்படுத்தி வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகள் அபராதம் விதித்தனர். மேட்டுப்பாளையம் நிலையத்தில் அரசு மற்றும் தனியார் மற்றும் அரசு பேருந்துகளில் அதிக ஒலி எழுப்பக்கூடிய ஏர் ஹாரன் மற்றும் சவுண்ட் பாக்ஸ்கள் பொருத்தப்பட்டுள்ளதாகவும், இது பேருந்துகளில் செல்லும் பயணிகளுக்கும் சாலைகளில் பொதுமக்கள் […]
அடிக்கிற வெயிலுக்கு; சென்னையில் இனி குளு! குளு! பயணம்! வந்தாச்சு ஏசி மின்சார ரயில்..
சென்னை கடற்கரை – செங்கல்பட்டு இடையே குளிர்சாதன(ஏசி) வசதி கொண்ட புறநகர் மின்சார ரயில் ரயில் சேவை இன்று (சனிக்கிழமை) தொடங்கியது. சென்னையின் முக்கியப் போக்குவரத்தாக மின்சார ரயில் விளங்குகிறது. இதில் தொலைதூரம் செல்லும் விரைவு மின்சார ரயில்கள் முக்கிய நேரங்களில் பயணிப்போருக்கு ஏதுவாக உள்ளது. செங்கல்பட்டு, தாம்பரம் உள்ளிட்ட புறநகா் பகுதியிலிருந்து பள்ளி, கல்லூரி மற்றும் பணிக்குச் செல்வோா் விரைவு மின்சார ரயிலை பயன்படுத்துவதால் நாளுக்கு நாள் கூட்டம் அதிகரித்து வருகிறது. இதைக் கருத்தில்கொண்டு சென்னை […]
அதிமுகவுடனான கூட்டணியிலிருந்து விலகுவதாக எஸ்.டி.பி.ஐ. கட்சி அறிவிப்பு!
அதிமுக கூட்டணியிலிருந்து எஸ்டிபிஐ கட்சி விலகுகிறது கட்சியின் பொதுச் செயலாளர் அறிவிப்பு! அதிமுகவுடனான கூட்டணியிலிருந்து விலகுவதாக எஸ்.டி.பி.ஐ. கட்சி அறிவிப்பு! பாஜக கட்சியுடன் கூட்டணி வைத்த எந்த அரசியல் கட்சியுடனும் கூட்டணி கிடையாது என திட்டவட்டம். பாஜகவை எதிர்க்கக்கூடிய அரசியல் கட்சிகள் இருக்கத்தான் செய்கிறது பாஜக கூட்டணிக் கட்சிகளை எஸ்டிபிஐ கட்சி அங்கீகரிக்காது. தமிழ்நாட்டில் திராவிட கட்சிகளை ஒழிப்போம் என்பதே பாஜகவின் முழக்கமாக இருந்தது ஆனால் திராவிட கட்சி மேலே சவாரி செய்ய வந்திருக்கிறார்கள் இப்போது முழக்கம் […]
வஃக்ப் -திருடர்களும்..!திருத்தங்களும்..!
வஃக்ப் – திருடர்களும்..! திருத்தங்களும்..! வஃக்ப் புரிதல்-1 வஃக்ப் என்றால் என்ன? வஃக்ப்பின் நன்மைகள் என்ன? வஃக்ப்பின் பயன்கள் என்ன? வஃக்ப் யாருக்கானது? வஃக்ப் செய்வதின் நோக்கம் என்ன? என்ற பல கேள்விகள் இப்போதுதான் பெரும்பாலான முஸ்லிம்களுக்கு தெரிய ஆரம்பித்திருக்கிறது. வஃக்ப்பின் முழுப் பரிமாணங்களை முஸ்லிம்கள் புரிந்து கொள்ள இந்த சர்வாதிகார சட்ட திருத்தம் வழி செய்திருக்கிறது. இந்த வஃக்புகளின் நிலைகளை இரண்டு பிரிவுகளாக நாம் புரிய வேண்டும். 1 . வஃக்ப்பின் முழு நிலைகளை அதன் […]
வரம்பு மீறி பேசும் குடியரசுத் துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர்!- இரா.முத்தரசன் கடும் கண்டனம்..
உச்ச நீதிமன்றத்துக்கும், நீதித்துறைக்கும் எதிராகப், குடியரசுத் துணைத் தலைவரின் வரம்பு மீறிய பேச்சுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-தமிழ்நாடு சட்டமன்றம் நிறைவேற்றி ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்ட மசோதாக்கள் மீது அரசியலமைப்புச் சட்டத்தின் படி, முடிவு எடுக்காமல், அவைகளை கிடப்பில் போடப்பட்டு, மக்கள் நலன்களை புறக்கணித்து வந்தார். தமிழ்நாடு ஆளுநரின் அத்துமீறிய செயல்கள் தொடர்பாக தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் முறையிட்டு, ஆளுநரின் அத்துமீறல்கள் மீது […]
தமிழ்நாடு எப்போதும் டெல்லிக்கு அவுட் ஆப் கண்ட்ரோல்தான்! அமித்ஷா அல்ல, எந்த ஷா வந்தாலும் தமிழ்நாட்டை ஆள முடியாது! கர்ஜித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியை அடுத்த ஆண்டார்குப்பத்தில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்று நடைபெற்றது. இதில், பங்கேற்ற முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், ரூ.418.15 கோடி மதிப்பிலான முடிவுற்ற திட்டப் பணிகளை தொடங்கி வைத்தார். ரூ.390.74 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினர். மேலும், ரூ.357.43 கோடி மதிப்பில் 2 லட்சத்து 2 ஆயிரத்து 531 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை அவர் வழங்கினார். விழாவில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:- பல்வேறு திட்டங்களை திராவிட மாடல் ஆட்சியில் வழங்கி […]
சமயநல்லூர் அருகேமின்சாரம் தாக்கி குடிநீர் விற்பனையாளர் பலி
மதுரை மாவட்டம் சமயநல்லூர் அருகே டபேதார் சந்தையை சேர்ந்தவர் கிருஷ்ணன் மகன் அரிச்சந்திரன் (45). இவர் டாட்டா ஏசி வாகனத்தில் குடிநீர் விற்பனை தொழில் செய்து வந்தார். நேற்று இரவு 11:30 மணிக்கு டபேதார்சந்தையில் இருந்து சமயநல்லூர் பர்மா காலனி சடச்சியம்மன் கோவில் தெருவில் விசேச வீட்டிற்கு சென்று வாகனத்திலிருந்து தண்ணீரை மின்மோட்டார் மூலமாக இறக்கும் போது மின்சாரம் தாக்கியது. இதில் காயமடைந்த ஹரி கிருஷ்ணனை 108 ஆம்புலன்ஸ் மூலம் சமயநல்லூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்காக […]
வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய கிளை கழகங்களில் பூத் கமிட்டி நிர்வாகிகள் கூட்டம். ஆர் பி உதயகுமார் சிறப்புரை
மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் வாடிப்பட்டி தெற்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட மன்னாடிமங்கலம் குருவித்துறை காடுபட்டி முள்ளிப்பள்ளம் தென்கரை உள்ளிட்ட கிளைக் கழகங்களில் பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது கூட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் கொரியர் கணேசன் தலைமை தாங்கினார் பூத் கமிட்டியில் கலந்து கொண்ட சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் நிர்வாகிகளுக்கு ஆலோசனைகள் வழங்கி சிறப்புரை ஆற்றினார் இதில் முன்னாள் எம்எல்ஏக்கள் எம் வி கருப்பையா மாணிக்கம் மகளிர் […]
You must be logged in to post a comment.