கத்தோலிக்க திருச்சபையின் 266-வது தலைவராக அர்ஜென்டினாவை சேர்ந்த போப் பிரான்சிஸ் கடந்த 2013-ம் ஆண்டு தேர்வு செய்யப்பட்டார். இவர் LGPTQ சமூகத்தினர் மற்றும் பாலின சமத்துவம் குறித்து தெரிவித்த முற்போக்கு கருத்துக்கள் பெரும் ஆதரவை பெற்றுத்தந்தது.இதனிடையே உடல் நலக்குறைவால் கடந்த பிப்ரவரி 14-ல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ரோம் நகரின் ஜெமெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த போப் பிரான்சிஸ் மார்ச் 23ம் தேதி வாடிகன் திரும்பினார்.இந்நிலையில், நேற்று உடல்நலக்குறைவு காரணமாக தனது 88-வது வயதில் போப் […]
Category: செய்திகள்
திண்டுக்கல் அருகே போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட வாலிபருக்கு 20 ஆண்டுகள் சிறை, ரூ.1 லட்சம் அபராதம் வழங்கி பரபரப்பு தீர்ப்பு..
திண்டுக்கல் அருகே போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட வாலிபருக்கு 20 ஆண்டுகள் சிறை, ரூ.1 லட்சம் அபராதம் வழங்கி பரபரப்பு தீர்ப்பு.. திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த சிறுமியை கடந்த 2023 ஆம் ஆண்டு காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் வன்கொடுமை செய்த பஞ்சம்பட்டியை சேர்ந்த கேத்தேஸ்ராஜா(19) என்பவரை சின்னாளப்பட்டி போலீசார் போக்சோவில் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் இவ்வழக்கு திண்டுக்கல் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் […]
அலங்காநல்லூர் அருகே அதலை கிராமத்தில் காட்டு பன்றிகளை வேட்டையாடுவதற்கு வைத்திருந்த 31 நாட்டு வெடிகுண்டுகளுடன் இருவர் கைது
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே அதலை கிராமம் கண்மாய் அருகே பட்டா இடத்தில் காட்டுப்பன்றியை பிடிப்பதற்காக சட்டவிரோதமாக 31 நாட்டுவெடிகுண்டுகளை வைத்திருந்ததாக திண்டுக்கல் மாவட்டம் நத்தம் லிங்கவாடி கிராமத்தை சேர்ந்த அழகர்.(70), சம்பா (43) ஆகிய இருவரையும் மாட்டுத்தாவணி சரக வனத்துறையினர் கைது செய்த நிலையில் 31 நாட்டுவெடிகுண்டுகள் பறிமுதல் நாட்டு வெடிகுண்டு வைத்திருந்தவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்
சோழவந்தான் அருகே முள்ளி பள்ளத்தில் கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை போலீசார் விசாரணை
சோழவந்தான் அருகேமுள்ளி பள்ளம் கிராமத்தைச் சேர்ந்த சித்தநாதன் என்பவரது மகன் முரளி வயது 19 மதுரை தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார் நேற்று மாலை முள்ளி பள்ளத்தில் உள்ள தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் உடலை கைப்பற்றிய காடுபட்டி போலீசார் உடல் கூறு ஆய்வுக்காக சோழவந்தான் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் மேலும் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்
வாடிப்பட்டி கொலையில் நண்பர்கள் 4 பேர் கைது
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே ஆண்டிபட்டி இந்திரா காலனியில் மதுரை ஜெயந்திபுரத்தைச் சேர்ந்த சரவண பாண்டி என்பவர் தனது நண்பர் முனியாண்டி வீட்டில் தங்கி இருந்து வீடுகளில் மொசைக் பால் சீலிங் வேலை செய்து வந்தார் இந்த நிலையில் அங்கு தனது நண்பர் மோகன்ராஜ் உடன் பேசிக்கொண்டிருந்துள்ளார் இந்த நிலையில் இந்திரா காலனி பகுதியைச் சேர்ந்த நண்பர்களான வினோத்குமார் மது பாலாஜி பாலமுருகன் மணிகண்டன் ஆகியோர் மோகன்ராஜ் மற்றும் சரவண பாண்டியை மம்பட்டியால் சரமாரியாக தாக்கியதில் சரவணபாண்டி […]
சோழவந்தான் ரயில் நிலையத்தில் 2 லட்சம் மதிப்புள்ள 95 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பாக்கெட்டுகளுடன் 3 பெண்கள் உட்பட்ட4 பேர் கைது போலீசார் விசாரணை
மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அரவிந்த் உத்தரவின் பேரில் மதுரை மாவட்ட மதுவிலக்கு அமலாக்க குற்ற புலனாய்வு பிரிவு துணை கண்காணிப்பாளர் சிவசுப்பு தலைமையில் மதுரை மாவட்டத்தில் அரசு தடை செய்யப்பட்ட புகையிலை பாக்கெட் மற்றும் கஞ்சா பொருட்கள் ரயில் மற்றும் பஸ்களில் கொண்டு வருகிறார்களா என்று ஆய்வு செய்து வருகின்றனர் இதே போல் இன்று காலை சோழவந்தான் ரயில் நிலையத்தில் துணை கண்காணிப்பாளர் சிவசுப்பு தலைமையில் போலீசார் சோழவந்தான் ரயில் நிலையத்தில் மைசூர் தூத்துக்குடி ரயில் […]
சோழவந்தான் மற்றும் சுற்றுப்புற கிராமப் பகுதிகளில் இரவு நேரங்களில் ஏற்படும் மின்தடையால் பச்சிளம் குழந்தைகள் தாய்மார்கள் கடும் அவதி
மதுரை மாவட்டம் சோழவந்தான் மற்றும் அதன் சுற்றுப்புற கிராமப் பகுதிகளான தென்கரை முள்ளிப்பள்ளம் மேலக் கால் திருவேடகம் தாராப்பட்டி கொடிமங்கலம் உள்ளிட்ட கிராம பகுதிகளில் இரவு நேரங்களில் 5 மணி நேரத்திற்கு மேலாக மின்தடை ஏற்படுவதால் பச்சிளம் குழந்தைகளை வைத்திருக்கும் தாய்மார்கள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர் மின்சார வாரியம் முறையாக அறிவிப்பு செய்யாமல் இரவு நேரங்களில் 11 மணிக்கு மேல் திடீரென மின்தடை செய்கிறது அவ்வாறு ஏற்படும் மின்தடையானது இரண்டு முதல் மூன்று மணி நேரம் […]
வக்ஃப் திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி கண்டன பொதுக் கூட்டம்..
தென்காசியில் சமூக நல்லிணக்க கூட்டமைப்பு சார்பில், வடக்கு மவுண்ட் சாலையில் உள்ள ஐந்து வர்ணம் கிளைப் பள்ளிவாசல் முன்பு, வக்ஃப் திருத்தச் சட்டத்தை திரும்ப பெறக்கோரி மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. தென்காசி 10-வது வார்டு நகர் மன்ற உறுப்பினர் முகமது மைதீன் (எ) ராசப்பா தலைமையில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் முகமது உவைஸ் இறைவசனம் ஓதினார். சமூக நல்லிணக்க கூட்டமைப்பின் தலைவர் கட்டி அப்துல் காதர் தொகுத்து வழங்கினார். முஸ்லிம் லீக் மாநில விவசாய அணி […]
வரலாற்று சாதனை படைக்கும் தங்கம் விலை! இன்று ஒரே நாளில் சவரனுக்கு 2,200 ரூபாய் உயர்வு..
தங்கம் விலை கடந்த 9-ந் தேதியில் இருந்து ‘கிடுகிடு’வென உயர்ந்து வந்து, கடந்த 12-ந்தேதி ஒரு சவரன் ரூ.70 ஆயிரத்து 160-க்கு விற்பனை ஆனது. இது அப்போது இதுவரை இல்லாத உச்சமாக பார்க்கப்பட்டது.அதனை தொடர்ந்து தங்கம் விலை உயர்ந்த வண்ணம் காணப்படுகிறது. தினந்தோறும் விலை உயர்ந்து இந்திய வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் புதிய உச்சத்தில் தங்கம் விலை உயர்ந்து வருகிறது. இந்த நிலையில், இன்றும் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. தங்கம் கிராமுக்கு 275 ரூபாய் […]
வஃக்ப்-திருடர்களும்..!திருத்தங்களும்..!
வஃக்ப்-திருடர்களும்..! திருத்தங்களும்..! (ஒரு சிறிய தொடர்) வஃக்ப் புரிதல் -4 இந்தியாவில் ஏறக்குறைய 800 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த முஸ்லிம் சமூகம், கல்வியறிவில் சிறப்பு பெற்றிருந்த சமூகம், பொருளாதாரத்தில் தன்னிறைவு அடைந்திருந்த சமூகம்,பல கட்டிடக்கலைகளை (Architecture) அறிமுகப்படுத்திய சமூகம், உலகப் பொருளாதாரத்தில் மிகப்பெரிய பங்களிப்புகளை வழங்கிய இந்திய முஸ்லிம் சமூகம், மொகலாயர்கள் வீழ்ச்சிக்கு பிறகு ஆங்கிலேயர்களின் பிரித்தாளும் சூழ்ச்சிகளால், இந்தியாவின் பிளவு இந்திய முஸ்லிம்களுக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தியது. அன்றைக்கு இருந்த மதரசாக்களே, கல்வியில் சிறந்து விளங்கி […]
பொதுமக்கள் குறைதீர் கூட்டம்
தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் 21.04.2025 அன்று மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் தலைமையில் நடைபெற்றது. இக் கூட்டத்தில் பொது மக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே. கமல் கிஷோர், தகுதி வாய்ந்த மனுக்கள் மீது விரைந்து விசாரணை மேற்கொண்டு மனுதாரர்களுக்கு உரிய பதில் அளிக்குமாறு அனைத்து துறை அலுவலர்களுக்கும் அறிவுறுத்தினார். தென்காசி மாவட்ட கூட்டுறவுத் துறையின் சார்பில் தொடக்க வேளாண்மை […]
துணை வேந்தர்கள் மாநாடு:-ஆளுநருக்கு யார் அதிகாரம் கொடுத்தது?- செல்வப்பெருந்தகை ஆவேசம்!!
உச்ச நீதிமன்ற தீர்ப்பை விமர்சித்த குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளானதை அனைவரும் அறிவார்கள். ஆனால், ஆளுநர் ஆர்.என். ரவி, தலைநகர் தில்லி சென்று, அவரை சந்தித்த பிறகு வருகிற ஏப்ரல் 25, 26, 27 ஆகிய தேதிகளில் துணை வேந்தர்கள் மாநாடு மூன்று நாட்கள் நீலகிரில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெறும் என்று அறிவிப்பு வெளியானதோடு, இதில் குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் பங்கேற்பார் எனவும் கூறப்பட்டுள்ளது. இதன்மூலம் குடியரசு […]
திண்டுக்கல்லில் திடீர் திடீரென கேட்கும் வெடிச்சத்தம்! உரிய நடவடிக்கை கோரி நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்..
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நாம் தமிழர் கட்சி (சுற்றுச்சூழல் பாசறை) சார்பாக சுற்றுச்சூழல் பாசறை மண்டல பொறுப்பாளர் ஜோசப்செல்வராஜ் தலைமையில் திண்டுக்கல் மாவட்டத்தில் தொடர்ந்து 7 ஆண்டுகளாக வெடிக்கும் பெரும் வெடி சத்தம் நில அதிர்வு குறித்து உரிய ஆய்வறிக்கை மற்றும் நடவடிக்கை எடுக்கக்கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் நாம் தமிழர் கட்சி மண்டலச்செயலாளர் சைமன் ஜஸ்டின், மாவட்ட செயலாளர்கள் கணேஷ்குமார், சங்கிலி பாண்டி உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் மறைவு! பிரதமர் மோடி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்..
கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் பிரான்சிஸ் இன்று காலமானார். இவரது மறைவுக்கு உலகத் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.இந்நிலையில், போப் பிரான்சிஸ் மறைவுக்கு பிரதமர் மோடி முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் இரங்லக தெரிவித்துள்ளனர்.இதுகுறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:- புனித திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் மறைவால் மிகுந்த வேதனை அடைகிறேன். இந்த துயரமான தருணத்தில், உலகளாவிய கத்தோலிக்க சமூகத்திற்கு எனது மனமார்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான மக்களால் […]
கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் காலமானார்!
கத்தோலிக்க திருச்சபை தலைமை மதகுரு போப் பிரான்சிஸ் (88), உடல்நலக் குறைவு காரணமாக கடந்த பிப். 14-ஆம் தேதி, ரோம் நகரின் ஜெமிலி மருத்துவமனையில் அவா் அனுமதிக்கப்பட்டாா். அங்கு பரிசோதனையில், போப் பிரான்சிஸுக்கு 2 நுரையீரல்களிலும் நிமோனியா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. மருத்துவமனையில் தொடா் சிகிச்சையில் இருந்த அவரின் உடல்நிலையில் சற்று முன்னேற்றம் காணப்பட்டது. 38 நாள்களுக்குப் பிறகு, கடந்த மார்ச் 23ஆம் தேதி மருத்துவமனையிலிருந்து போப் பிரான்சிஸ் வாடிகனுக்குத் திரும்பினாா். அவருக்கு 2 மாதங்கள் ஓய்வு […]
எட்டாத உயரத்தில் தங்கம் விலை! ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ. 9 ஆயிரத்தைக் கடந்து புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது..
சென்னையில் ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ. 9 ஆயிரத்தைக் கடந்து புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவுக்கு அதிகரித்து வருகிறது. . ஏப்.13-ல் தங்கம் விலை சவரனுக்கு ரூ.70,000-யைக் கடந்த நிலையில் பின்னர் சற்று சரிவடைந்த நிலையில் ஏப். 16-ல் மீண்டும் 70,000-யைக் கடந்தது. தற்போது தங்கத்தின் விலை ரூ. 72,000-யைக் கடந்துள்ளது. இன்று(திங்கள்கிழமை) தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 560 உயா்ந்து ரூ.72,120-க்கு விற்பனை செய்யப்படுகிறது. […]
துணை வேந்தர்கள் மாநாடு:தமிழக ஆளுநரின் அதிகார மீறல் கண்டிக்கத்தக்கது!- எஸ்டிபிஐ..
இதுதொடர்பாக எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; தமிழக அரசு, உச்ச நீதிமன்றத்தில் நடத்திய சட்டப் போராட்டத்தின் விளைவாக, சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாவின்படி, மாநில பல்கலைக்கழகங்களின் வேந்தர் பொறுப்பில் இருந்து ஆளுநர் ஆர்.என். ரவி விடுவிக்கப்பட்டு, மாநில முதலமைச்சர் அப்பொறுப்பை ஏற்றுள்ளார். இது மக்களாட்சி மற்றும் அரசியலமைப்பு தத்துவங்களுக்கு உட்பட்ட ஒரு முக்கிய வெற்றியாகும். ஆயினும், ஆளுநர் ஆர்.என். ரவி, தனது அதிகார வரம்பை மீறி, வரும் ஏப்ரல் 25, 26, […]
துணைவேந்தர்கள் மாநாட்டைக் கூட்ட ஆளுநர் ஆர்.என். ரவிக்கு அதிகாரமில்லை!- ஜவாஹிருல்லா கண்டனம்..
உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால், துணைவேந்தர்கள் மாநாட்டைக் கூட்ட ஆளுநர் ஆர்.என். ரவிக்கு அதிகாரமில்லை என மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா கூறியுள்ளார். நீதிமன்ற உத்தரவுக்குப் பின்னரும் பல்கலைக்கழக துணைவேந்தர்களுக்கான 3 நாள் மாநாடு நீலகிரியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெறும் என ஆர்.என். ரவி அறிவித்திருப்பது கடும் கண்டனத்துக்குரியது என்றும் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழ்நாடு அரசு நிறைவேற்றி தரும் மசோதாக்களுக்கு அங்கீகாரம் தராத ஆர்.என். ரவி தமிழ்நாடு அரசின் சட்டப் […]
வஃக்ப்-திருடர்களும்..!திருத்தங்களும்..!
வஃக்ப் -திருடர்களும்..! திருத்தங்களும்.. வஃக்ப் புரிதல் -3 ஒரு சொத்தை அதன் பயன்பாடுகளை வஃக்ப் என்னும் அர்ப்பணம் செய்துவிட்டால் அதன் உரிமையாளராக அல்லாஹ்வே ஆகிவிடுகின்றான். ஒருவர் வஃக்ப் செய்த சொத்துக்களை, அவரோ, அவரின் வாரிசுகளோ திரும்ப பெற முடியாது. வஃக்ப் என்பதற்கு ஆன்மீக ரீதியாக நிலைநாட்டுதல், நிறுத்துதல் என பொருள் கொள்ளலாம். வஃக்பின் மூலம் அதன் நன்மைகளை முஸ்லிம் சமூகம் தொடர்ந்து அடையவேண்டும் என்ற நோக்கமே முதன்மையாக இருந்தது. அந்த நோக்கங்கள் முழுமையாக நிறைவேறி இருக்கிறதா? என்பது […]
உச்சநீதிமன்ற தீர்ப்பை அவமதிக்கும் ஆர்.என்.ரவி – ஆளுநரின் அழைப்பை புறக்கணிக்க வேண்டும்!-பெ.சண்முகம் வலியுறுத்தல்..
ஆர்.எஸ்.எஸ் கையாளாக தொடர்ந்து செயல்பட்டு வரும் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு, உச்ச நீதிமன்ற தீர்ப்பின் மூலம் கடிவாளம் போட்டிருக்கிறது தமிழ்நாடு அரசு. இந்த பேரிடியை தாங்கிக் கொள்ள முடியாத ஆளுநர் ஆர்.என்.ரவி, பல்கலை கழக துணை வேர்ந்தர்களின் மாநாட்டுக்கு அழைப்பு விடுத்து புதிதாக ஒரு சர்ச்சையை உருவாக்கியுள்ளார்.ஆளுநர் ஆர்.என்.ரவி பல்கலை கழகங்களுக்கு வேந்தராக இருக்க வேண்டியதில்லை என்பதை ஏற்கனவே சட்டமன்றத்தில் மசோதாவாக நிறைவேற்றி அனுப்பியதுடன், உச்ச நீதிமன்ற தீர்ப்பின் மூலம் அதனை சட்டமாகவும் ஆக்கியுள்ளது தமிழ்நாடு அரசு. எனவே, […]
You must be logged in to post a comment.