பெஹல்காமில் தாக்குதல் நடத்திய 3 பயங்கரவாதிகளின் வரைபடம் வெளியீடு..

பெஹல்காமில் தாக்குதல் நடத்திய மூன்று பயங்கரவாதிகளின் வரைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. ஜம்மு – காஷ்மீரின் பிரபல சுற்றுலா நகரமான பெஹல்காமில் உள்ள பைசாரன் பள்ளத்தாக்கு பகுதியில் செவ்வாய்க்கிழமை நூற்றுக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் கூடியிருந்தனர். அப்போது ஆயுதங்களுடன் இந்தப் பகுதிக்குள் நுழைந்த பயங்கரவாதிகள் சுற்றுலா பயணிகள் மீது சரமாரி தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்தச் சம்பவத்தில் 2 வெளிநாட்டவர் உள்பட 28 பேர் கொல்லப்பட்ட நிலையில், 20 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். பெஹல்காம் தாக்குதலுக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு […]

பெஹல்காம் பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக உயர்நிலைக் குழுவுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை..

காஷ்மீரில் பஹல்காம் பயணிகளின் மீது நடந்த கொடூரமான பயங்கரவாத தாக்குதல் நாட்டை உலுக்கியுள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி சவுதி அரேபியா பயணத்தை தற்காலிகமாக நிறுத்திவிட்டு புதன்கிழமை காலை இந்தியா திரும்பினார். டெல்லி விமான நிலையத்திலேயே நேரடியாக, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்ஷங்கர் மற்றும் வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரியுடன் முக்கிய ஆலோசனை நடத்தினார் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். செவ்வாய்க்கிழமை ஜம்மு & காஷ்மீரின் தெற்கு பகுதியில் உள்ள பிரபல […]

ஜம்மு – காஷ்மீரில் நிலவும் அசாதாரண சூழலைத் தொடர்ந்து, சுற்றுலாப் பயணிகள் வெளியேறுவதற்கு வசதியாக கூடுதலாக 4 விமானங்கள்..

ஜம்மு – காஷ்மீரில் நிலவும் அசாதாரண சூழலைத் தொடர்ந்து, சுற்றுலாப் பயணிகள் வெளியேறுவதற்கு வசதியாக கூடுதலாக 4 விமானங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஜம்மு-காஷ்மீரின் பிரபல சுற்றுலா நகரமான பெஹல்காமில் உள்ள பைசாரன் பள்ளத்தாக்கு பகுதியில் கூடியிருந்த சுற்றுலாப் பயணிகள் மீது செவ்வாய்க்கிழமை பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்த கொடூரத் தாக்குதலில் 2 வெளிநாட்டவர்கள் உள்பட 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த நிலையில், பயங்கரவாத தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து ஜம்மு – காஷ்மீர் முழுவதும் முழு அடைப்புப் போராட்டம் […]

நேற்று ஏறிய வேகத்தில் இறங்கியது! ஒரு சவரனுக்கு ரூ.2200 குறைந்தது..

சென்னையில் இன்று (ஏப்ரல் 23) 22 காரட் தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,200 குறைந்து, ஒரு சவரன் ரூ. 72,120க்கு விற்பனை ஆகிறது. தமிழகத்தில் நேற்று முன்தினம், ஏப்ரல் 21ம் தேதி ஆபரண தங்கம் கிராம், 9,015 ரூபாய்க்கும், சவரன், 72,120 ரூபாய்க்கும் விற்பனையானது. நேற்று (ஏப்ரல் 22) ஒரே நாளில், தங்கம் விலை கிராமுக்கு, 275 ரூபாய் உயர்ந்து, 9,290 ரூபாய்க்கு விற்பனையானது. இந்நிலையில் இன்று (ஏப்ரல் 23) 22 காரட் தங்கம் விலை சவரனுக்கு […]

கொடைரோடு அருகே சிசுக்கொலையா? போலீசார் மற்றும் தாசில்தார் விசாரணை..

கொடைரோடு அருகே சிசுக்கொலையா? போலீசார் மற்றும் தாசில்தார் விசாரணை; திண்டுக்கல், கொடைரோடு அருகே ஜெ.ஊத்துப்பட்டியைச் சேர்ந்த பாலமுருகன் மனைவி சிவசக்தி(23) இவருக்கு 16-ம் தேதி பெண் குழந்தை பிறந்தது தாயும், குழந்தையும் நலமுடன் இருந்தனர் 20-ம் தேதி பிறந்த பெண் குழந்தை மர்மமான முறையில் இறந்தது. குழந்தை உடலை வீட்டின் பின்புறம் புதைத்தனர். குழந்தை ஆரோக்கியமாக வீடு திரும்பிய நிலையில் மர்மமான முறையில் உயிரிழந்தது அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. வட்டார மருத்துவ அலுவலர் வினோத், போலீசில் அளித்த […]

வஃக்ப்-திருடர்களும்..!திருத்தங்களும்..!

வஃக்ப்-திருடர்களும்..! திருத்தங்களும்..! (ஒரு சிறிய தொடர்) வஃக்ப் புரிதல்-5 முஸ்லிம்கள் தங்களின் பின்னடைவுகளை, இன்றைய வஃக்ப்பின் நிலைகளை, ஆக்ரமிப்புகளை, முஸ்லிம் சமூகம் இழந்த வஃக்ப்பின் பயன்களை அறிந்து கொள்ள கொஞ்சம் கடந்த கால வரலாறுகளையும் அறிந்து கொள்ள வேண்டும். அன்றைய காங்கிரசிலிருந்த பாசிசவாதிகளின் அழுத்தத்தால், முஸ்லிம்களின் நலன்களை பாதுகாக்க முஸ்லிம் லீக் உருவானது. அன்றைய பரந்த இந்திய நிலப்பரப்பில், இந்திய முஸ்லிம்கள் கல்வியிலும், பொருளாதாரத்திலும் சிறந்து விளங்கினாலும், ஆங்கிலேயர்களின் சூழ்ச்சிகளும், பாசிசவாதிகள் உருவாக்கிய இந்து முஸ்லிம் பிரிவினைகளும் […]

நெல்லையில் அபாயகரமான கழிவு நீரோடை; தடுப்பு சுவர் அமைக்க மஜக கோரிக்கை..

நெல்லை டவுண் கல்லணை பெண்கள் மேல் நிலைப்பள்ளி அமைந்துள்ள சாலையில் அபாயகரமாக உள்ள கழிவு நீரோடையின் பக்கவாட்டில் தடுப்புச் சுவர் அமைத்து பொதுமக்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தி திருநெல்வேலி மாநகராட்சி ஆணையரிடம் மனிதநேய ஜனநாயக கட்சியினர் கோரிக்கை மனு அளித்தனர். இது குறித்த மனுவில், நெல்லை டவுண் தெற்கு மவுண்ட் சாலை கல்லணை பெண்கள் மேல் நிலைப்பள்ளி அமைந்துள்ள பகுதி கடும் போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியாக உள்ளது. இந்த பகுதியில் உள்ள […]

ரேஷன் பொருட்கள் கடத்தலில் ஈடுபட்ட வாகனங்கள் பொது ஏலம்..

தென்காசி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பொது விநியோகத் திட்ட பொருட்கள் கடத்தலில் ஈடுபட்ட இரண்டு, மூன்று மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் திறந்த முறை பொது ஏலத்தில் விடப்பட உள்ளது என மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே. கமல் கிஷோர் அறிவித்து உள்ளார். தென்காசி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பொது விநியோகத் திட்ட பொருட்கள் கடத்தலில் ஈடுபட்ட இரண்டு, மூன்று மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் திருநெல்வேலி குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறையினரால் கைப்பற்றுகை […]

மேலக்கால் ஊராட்சி சார்பில் வைகை ஆற்றில் துப்புரவு பணி செய்து மரக்கன்றுகள் நடப்பட்டது

மதுரை ஒன்றியம் மேலக்கால் ஊராட்சியில் வைகை ஆற்று பாதையில் மயான முதல் வைகை ஆற்றுப்பகுதி வரை கரையோரம்இருந்த குப்பைகள்jcpஎந்திரம்மூலம் அகற்றப்பட்டு மரக்கன்றுகள் நடப்பட்டது இந்த நிகழ்ச்சியில் உதவி திட்ட அலுவலர் வீடுகள் பழனிவேல் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பாலமுருகன் வட்டார வளர்ச்சி அலுவலர் கிருஷ்ணவேணி மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பூர்ணிமா ஊராட்சி செயலாளர் விக்னேஷ் ஆகியோர் மேற்பார்வையில் தூய்மை பணியாளர்கள் துப்புரவு பணியாளர்கள் மற்றும் ஊராட்சி பணியாளர்கள் பணிகளை மேற்கொண்டனர்

போப் பிரான்சிஸ் இறுதி அஞ்சலி நிகழ்ச்சி:தமிழ்நாடு அரசு சார்பில் அமைச்சர் சா.மு. நாசர் பங்கேற்பு!!

கத்தோலிக்க திருச்சபையின் 266-வது தலைவராக அர்ஜென்டினாவை சேர்ந்த போப் பிரான்சிஸ் கடந்த 2013-ம் ஆண்டு தேர்வு செய்யப்பட்டார். இவர் LGPTQ சமூகத்தினர் மற்றும் பாலின சமத்துவம் குறித்து தெரிவித்த முற்போக்கு கருத்துக்கள் பெரும் ஆதரவை பெற்றுத்தந்தது.இதனிடையே உடல் நலக்குறைவால் கடந்த பிப்ரவரி 14-ல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ரோம் நகரின் ஜெமெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த போப் பிரான்சிஸ் மார்ச் 23ம் தேதி வாடிகன் திரும்பினார்.இந்நிலையில், நேற்று உடல்நலக்குறைவு காரணமாக தனது 88-வது வயதில் போப் […]

திண்டுக்கல் அருகே போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட வாலிபருக்கு 20 ஆண்டுகள் சிறை, ரூ.1 லட்சம் அபராதம் வழங்கி பரபரப்பு தீர்ப்பு..

திண்டுக்கல் அருகே போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட வாலிபருக்கு 20 ஆண்டுகள் சிறை, ரூ.1 லட்சம் அபராதம் வழங்கி பரபரப்பு தீர்ப்பு.. திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த சிறுமியை கடந்த 2023 ஆம் ஆண்டு காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் வன்கொடுமை செய்த பஞ்சம்பட்டியை சேர்ந்த கேத்தேஸ்ராஜா(19) என்பவரை சின்னாளப்பட்டி போலீசார் போக்சோவில் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் இவ்வழக்கு திண்டுக்கல் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் […]

அலங்காநல்லூர் அருகே அதலை கிராமத்தில் காட்டு பன்றிகளை வேட்டையாடுவதற்கு வைத்திருந்த 31 நாட்டு வெடிகுண்டுகளுடன் இருவர் கைது

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே அதலை கிராமம் கண்மாய் அருகே பட்டா இடத்தில் காட்டுப்பன்றியை பிடிப்பதற்காக சட்டவிரோதமாக 31 நாட்டுவெடிகுண்டுகளை வைத்திருந்ததாக திண்டுக்கல் மாவட்டம் நத்தம் லிங்கவாடி கிராமத்தை சேர்ந்த அழகர்.(70), சம்பா (43) ஆகிய இருவரையும் மாட்டுத்தாவணி சரக வனத்துறையினர் கைது செய்த நிலையில் 31 நாட்டுவெடிகுண்டுகள் பறிமுதல் நாட்டு வெடிகுண்டு வைத்திருந்தவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்

சோழவந்தான் அருகே முள்ளி பள்ளத்தில் கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை போலீசார் விசாரணை

சோழவந்தான் அருகேமுள்ளி பள்ளம் கிராமத்தைச் சேர்ந்த சித்தநாதன் என்பவரது மகன் முரளி வயது 19 மதுரை தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார் நேற்று மாலை முள்ளி பள்ளத்தில் உள்ள தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் உடலை கைப்பற்றிய காடுபட்டி போலீசார் உடல் கூறு ஆய்வுக்காக சோழவந்தான் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் மேலும் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்

வாடிப்பட்டி கொலையில் நண்பர்கள் 4 பேர் கைது

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே ஆண்டிபட்டி இந்திரா காலனியில் மதுரை ஜெயந்திபுரத்தைச் சேர்ந்த சரவண பாண்டி என்பவர் தனது நண்பர் முனியாண்டி வீட்டில் தங்கி இருந்து வீடுகளில் மொசைக் பால் சீலிங் வேலை செய்து வந்தார் இந்த நிலையில் அங்கு தனது நண்பர் மோகன்ராஜ் உடன் பேசிக்கொண்டிருந்துள்ளார் இந்த நிலையில் இந்திரா காலனி பகுதியைச் சேர்ந்த நண்பர்களான வினோத்குமார் மது பாலாஜி பாலமுருகன் மணிகண்டன் ஆகியோர் மோகன்ராஜ் மற்றும் சரவண பாண்டியை மம்பட்டியால் சரமாரியாக தாக்கியதில் சரவணபாண்டி […]

சோழவந்தான் ரயில் நிலையத்தில் 2 லட்சம் மதிப்புள்ள 95 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பாக்கெட்டுகளுடன் 3 பெண்கள் உட்பட்ட4 பேர் கைது போலீசார் விசாரணை

மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அரவிந்த் உத்தரவின் பேரில் மதுரை மாவட்ட மதுவிலக்கு அமலாக்க குற்ற புலனாய்வு பிரிவு துணை கண்காணிப்பாளர் சிவசுப்பு தலைமையில் மதுரை மாவட்டத்தில் அரசு தடை செய்யப்பட்ட புகையிலை பாக்கெட் மற்றும் கஞ்சா பொருட்கள் ரயில் மற்றும் பஸ்களில் கொண்டு வருகிறார்களா என்று ஆய்வு செய்து வருகின்றனர் இதே போல் இன்று காலை சோழவந்தான் ரயில் நிலையத்தில் துணை கண்காணிப்பாளர் சிவசுப்பு தலைமையில் போலீசார் சோழவந்தான் ரயில் நிலையத்தில் மைசூர் தூத்துக்குடி ரயில் […]

சோழவந்தான் மற்றும் சுற்றுப்புற கிராமப் பகுதிகளில் இரவு நேரங்களில் ஏற்படும் மின்தடையால் பச்சிளம் குழந்தைகள் தாய்மார்கள் கடும் அவதி

மதுரை மாவட்டம் சோழவந்தான் மற்றும் அதன் சுற்றுப்புற கிராமப் பகுதிகளான தென்கரை முள்ளிப்பள்ளம் மேலக் கால் திருவேடகம் தாராப்பட்டி கொடிமங்கலம் உள்ளிட்ட கிராம பகுதிகளில் இரவு நேரங்களில் 5 மணி நேரத்திற்கு மேலாக மின்தடை ஏற்படுவதால் பச்சிளம் குழந்தைகளை வைத்திருக்கும் தாய்மார்கள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர் மின்சார வாரியம் முறையாக அறிவிப்பு செய்யாமல் இரவு நேரங்களில் 11 மணிக்கு மேல் திடீரென மின்தடை செய்கிறது அவ்வாறு ஏற்படும் மின்தடையானது இரண்டு முதல் மூன்று மணி நேரம் […]

வக்ஃப் திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி கண்டன பொதுக் கூட்டம்..

தென்காசியில் சமூக நல்லிணக்க கூட்டமைப்பு சார்பில், வடக்கு மவுண்ட் சாலையில் உள்ள ஐந்து வர்ணம் கிளைப் பள்ளிவாசல் முன்பு, வக்ஃப் திருத்தச் சட்டத்தை திரும்ப பெறக்கோரி மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. தென்காசி 10-வது வார்டு நகர் மன்ற உறுப்பினர் முகமது மைதீன் (எ) ராசப்பா தலைமையில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் முகமது உவைஸ் இறைவசனம் ஓதினார். சமூக நல்லிணக்க கூட்டமைப்பின் தலைவர் கட்டி அப்துல் காதர் தொகுத்து வழங்கினார். முஸ்லிம் லீக் மாநில விவசாய அணி […]

வரலாற்று சாதனை படைக்கும் தங்கம் விலை! இன்று ஒரே நாளில் சவரனுக்கு 2,200 ரூபாய் உயர்வு..

தங்கம் விலை கடந்த 9-ந் தேதியில் இருந்து ‘கிடுகிடு’வென உயர்ந்து வந்து, கடந்த 12-ந்தேதி ஒரு சவரன் ரூ.70 ஆயிரத்து 160-க்கு விற்பனை ஆனது. இது அப்போது இதுவரை இல்லாத உச்சமாக பார்க்கப்பட்டது.அதனை தொடர்ந்து தங்கம் விலை உயர்ந்த வண்ணம் காணப்படுகிறது. தினந்தோறும் விலை உயர்ந்து இந்திய வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் புதிய உச்சத்தில் தங்கம் விலை உயர்ந்து வருகிறது. இந்த நிலையில், இன்றும் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. தங்கம் கிராமுக்கு 275 ரூபாய் […]

வஃக்ப்-திருடர்களும்..!திருத்தங்களும்..!

வஃக்ப்-திருடர்களும்..! திருத்தங்களும்..! (ஒரு சிறிய தொடர்) வஃக்ப் புரிதல் -4 இந்தியாவில் ஏறக்குறைய 800 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த முஸ்லிம் சமூகம், கல்வியறிவில் சிறப்பு பெற்றிருந்த சமூகம், பொருளாதாரத்தில் தன்னிறைவு அடைந்திருந்த சமூகம்,பல கட்டிடக்கலைகளை (Architecture) அறிமுகப்படுத்திய சமூகம், உலகப் பொருளாதாரத்தில் மிகப்பெரிய பங்களிப்புகளை வழங்கிய இந்திய முஸ்லிம் சமூகம், மொகலாயர்கள் வீழ்ச்சிக்கு பிறகு ஆங்கிலேயர்களின் பிரித்தாளும் சூழ்ச்சிகளால், இந்தியாவின் பிளவு இந்திய முஸ்லிம்களுக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தியது. அன்றைக்கு இருந்த மதரசாக்களே, கல்வியில் சிறந்து விளங்கி […]

பொதுமக்கள் குறைதீர் கூட்டம்

தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் 21.04.2025 அன்று மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் தலைமையில் நடைபெற்றது. இக் கூட்டத்தில் பொது மக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே. கமல் கிஷோர், தகுதி வாய்ந்த மனுக்கள் மீது விரைந்து விசாரணை மேற்கொண்டு மனுதாரர்களுக்கு உரிய பதில் அளிக்குமாறு அனைத்து துறை அலுவலர்களுக்கும் அறிவுறுத்தினார்.   தென்காசி மாவட்ட கூட்டுறவுத் துறையின் சார்பில் தொடக்க வேளாண்மை […]

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!