கீழக்கரையில் தமிழக வெற்றி கழகம் சார்பில் கோடை கால நீர் மோர் பந்தல்.!

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் கோடை காலத்தை முன்னிட்டு தமிழக வெற்றி கழகம் நகர் செயலாளர் அகமது ஜலாலுதீன் ஏற்பாட்டில் பொது மக்களுக்கு தர்பூசணி நீர், மோர், பந்தல் திறப்பு விழா நடைபெற்றது. இந்நிகழ்வில் இராமநாதபுரம் கிழக்கு மாவட்ட செயலாளர் மலர்விழி ஜெயபாலா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பொதுமக்களுக்கு தர்பூசணி நீர், மோர்,விநியோகம் செய்தார். இந்நிகழ்ச்சியில் ஹபீஸ், முபித், ப்ரோஸ்கான்(சி.வி.சி.) மாவட்ட பொருளாளர் சண்முகநாதன், மாவட்ட மாணவரணி தளபதி தமிம், மாவட்ட தொண்டரணி கார்த்திக் ,சுகுமார், மாவட்ட […]

பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்தவருக்கு மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி.!

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சிஐடியு தாலுகா பொது தொழிலாளர் சங்க நிர்வாகிகள் மற்றும் தொழிலாளர்கள் உழைப்பாளர் மார்க்கெட் பகுதியில் இணைந்து ஜம்மு – காஷ்மீர், பஹல்காம் மாவட்டத்தில் பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட 28 பேருக்கு மெழுகுவர்த்தி ஏந்தி மெளன அஞ்சலி செலுத்தினர் ஜம்மு – காஷ்மீர், பஹல்காம் மாவட்டத்தில் உள்ள பைசரன் பள்ளத்தாக்கு பகுதிக்கு சுற்றுலா சென்றிருந்த பயணியர் மீது பயங்கரவாதிகள் கண்மூடித்தனமாக துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் 28 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவம் நாடு முழுவதும் […]

மேட்டுப்பாளையம் வட்டாட்சியர் அலுவலகத்தில் சி ஐ டி யு பொதுத் தொழிலாளர் சங்க நிர்வாகிகள் காத்திருப்பு போராட்டம் .!

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வட்டாட்சியர் அலுவலகத்தில் மேட்டுப்பாளையம் தாலுக்கா சி ஐ டி யு பொதுத் தொழிலாளர் சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர் மேட்டுப்பாளையத்தை சார்ந்த பொது மக்களுக்கு கடந்த ஓராண்டுக்கு முன்பு வழங்கப்பட்ட பட்டா இடத்தை அளந்து தரக் கோரியும் மேட்டுப்பாளையம் பகுதியில் உள்ள அரசு புறம்போக்கு இடங்களில் வீட்டு மனை கேட்டு விண்ணப்பித்த தகுதியான பயனாளிக்கு வீட்டுமனை பட்டா வழங்க கோரியும் மேட்டுப்பாளையம் வட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று சிஐடியு பொது தொழிலாளர் […]

செக்கானூரணி அருகே ஆதிதிராவிடர் காலனியில் ஆபத்தான நிலையில் உள்ள அங்கன்வாடி மையத்தை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

மதுரை மாவட்டம் செக்கானூரணி அருகே கொக்குளம் ஊராட்சிக்கு உட்பட்ட தேங்கள்பட்டி ஆதி திராவிடர் காலனியில் ஆபத்தான நிலையில் உள்ள அங்கன்வாடி மையத்தை சீரமைத்து தர பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் இந்த காலனியில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ள நிலையில் இவர்களுக்கான அங்கன்வாடி மையம் 16 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டு கடந்த ஆண்டு திறக்கப்பட்டது அங்கன்வாடி திறக்கப்பட்ட போது அங்கன்வாடி பின்புறம் கட்டப்பட்ட குழந்தைகளுக்கான கழிப்பறையில் செப்டிக் டேங்க் கட்டும் பணி ஆரம்பிக்கப்பட்டு சுமார் 10 […]

சோழவந்தானில் உள்ள தேனூர் பாசன கால்வாயை தூர்வார விவசாயிகள் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை.

மதுரை மாவட்டம் தேனூர் கிராமம் முழுவதும் விவசாயத்தை நம்பியுள்ள பகுதி. இங்கு அதிகப்படியாக நெல் பயிரிடப்பட்டு வருகிறது தேனூர் பகுதியில் விவசாயத்திற்காக குறிப்பிட்ட அளவு நீரானது சோழவந்தான் பேட்டை பகுதியிலுள்ள வைகை ஆற்றில் இருந்து பிரியும் தேனூர் கால்வாயில் இருந்து வருகிறது இந்த நிலையில் இந்த கால்வாய் கடந்த சில ஆண்டுகளாக தூர்வாராமல் பராமரிக்கப்படாத நிலையில் ஆகாயத்தாமரை மற்றும் மதகுகள் சேதமடைந்து பயன்படுத்த முடியாத அளவு உள்ளது சில ஆண்டுகளுக்கு முன்பு தான் விவசாயத்திற்காக இந்தப் பகுதி […]

சோழவந்தான் பேரூராட்சியில் தமிழில் பெயர் பலகை வைப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது

மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சியில் வணிக நிறுவனங்கள் வர்த்தக நிறுவனங்களுக்கு தமிழில் பெயர் பலகை வைப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் தொழிலாளர் துறை துணை ஆய்வாளர் வேலாயுதம், பேரூராட்சி செயல் அலுவலர் செல்வகுமார் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. சோழவந்தான் பேரூராட்சி எல்லைக்குட்பட்ட பகுதியில் வைக்கப்பட்டுள்ள பெயர் பலகையில் தமிழ் எழுத்து பெரியதாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. பிற மொழியில் பதிவு செய்தால் 5:3:2 என்ற விகிதாச்சாரத்தில் இருக்க வேண்டும் என ஆலோசனை வழங்கப்பட்டது. இதில் வர்த்தகர் […]

அதிகளவில் பாதிப்பு ஏற்படும் அபாயம்! மையோனைஸை உற்பத்தி செய்ய, சேமித்து வைத்து விநியோகம் செய்ய, விற்பனை செய்ய அதிரடி தடை..

பச்சை முட்டையில் இருந்து தயாரிக்கப்படும் மையோனைஸ் உணவினால் ஏற்படும் உடல்நல பாதிப்புகள் அதிகம் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும், சால்மோனெல்லா டைபிமுரியம் பாக்டீரியா காரணமாக இந்த உணவு விஷமாக மாறலாம் என்பதால் மையோனைஸ் விற்பனைக்கு ஓராண்டு தடை விதித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு உணவுப் பாதுகாப்புத் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஷவர்மா, தந்தூரி போன்ற உணவுகள் போன்றவற்றில் ஒரு முக்கிய சேர்க்கையாக மாறியுள்ளது முட்டையில் தயாரிக்கப்படும் மையோனைஸ். இதில், சால்மோனெல்லா டைபிமுரியம், சால்மோனெல்லா என்டிரிடிடிஸ், எஸ்கெரிச்சியா கோலி […]

வஃக்ப்-திருடர்களும்…!திருத்தங்களும்..!

வஃக்ப்-திருடர்களும்…! திருத்தங்களும்..! (ஒரு சிறிய தொடர்) வஃக்ப் புரிதல் -6 இந்தியாவில் வஃக்ப் சொத்து சம்பந்தப்பட்ட ஒரு வழக்கில் வழக்கமான சட்டப்படியான ஒரு தீர்ப்பு வழங்கப்பட்டபோது, அது வஃக்ப்பின் நோக்கத்தை சிதைப்பதாக இருந்தது. அந்த தீர்ப்பு வஃக்பு சொத்துக்களுக்கான தனி சட்டங்கள் இயற்றுவது அவசியம் என்று புரியவைத்தது. வஃக்ப் சொத்து ஒப்படைப்பு என்பது ஷரியத் ரீதியான நோக்கு (Religious Intension) கொண்டதாக இருக்க வேண்டும். ஷரியத் ரீதியான நோக்கு இல்லாமல் சொத்துக்கள் ஒப்படைக்கப்பட்டால், அது டிரஸ்ட் (Trust) […]

கொடைரோடு அருகே, பச்சிளம் பெண் குழந்தை கொலை! தாய் கைது!சம்பவ இடத்தில்,  வட்டாட்சியர் முன்னிலையில்குழந்தையின் உடல் பிரேத பரிசோதனை..

திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே ஜெ.ஊத்துப்பட்டியைச் சேர்ந்த பாலமுருகன் (32) – சிவசக்தி(23) தம்பதியினருக்கு சிவன்யா என்கிற 5, வயது மகள் உள்ளார். இந்நிலையில் சிவசக்திக்கு கடந்த ஏப்ரல் 16-ம் தேதி பெண் குழந்தை பிறந்தது. ஏப்ரல் 20ல் பிறந்த பெண் குழந்தை மர்மமான முறையில் இறந்தது. குழந்தை உடலை வீட்டின் பின்புறம் புதைத்தனர். குழந்தை மர்மமான முறையில் உயிரிழந்தது தொடர்பாக வட்டார மருத்துவ அலுவலர் வினோத், போலீசில் அளித்த புகாரின் பேரில் அம்மையநாயக்கனூர் இன்ஸ்பெக்டர் அமுதா […]

நிலக்கோட்டை புதுத் தெரு பகுதிகளில் அரைகுறையாக சப்ளை ஆகும் மின்சாரம்! அச்சத்தில் பொதுமக்கள்; விரைந்து நடவடிக்கை எடுக்க கோரிக்கை..

நிலக்கோட்டை புதுத் தெரு பகுதிகளில் அரைகுறையாக சப்ளை ஆகும் மின்சாரம்! அச்சத்தில் பொதுமக்கள்; விரைந்து நடவடிக்கை எடுக்க கோரிக்கை.. கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு நிலக்கோட்டை புதுத் தெரு பெண்கள் விடுதி முன்பு அமைந்துள்ள டிரான்ஸ்பார்மர் வெடித்து சிதறியது. இந்நிலையில் புது ட்ரான்ஸ்ஃபார்மர் வைக்காமல் தற்காலிகமாக அந்த பகுதிகளில் வேறு இடத்திலிருந்து நேரிடையாக மின்சாரம் சப்ளை செய்யப்பட்டது. அன்றிலிருந்து அந்தப் பகுதி முழுவதும் மின்சாரம் விட்டு விட்டு வருவதும், விளக்குகள் அனைத்தும் விட்டுவிட்டு எரிவதுமாக உள்ளது. மின்சாரம் […]

மக்களை காப்பாற்ற தீவிரவாதிகளை வீரத்துடன் எதிர்கொண்ட செய்யது ஆதில் ஹசன் என்ற உள்ளூர் குதிரை ஓட்டும் இளைஞர்: தீவிவாதிகளால் கொடூரமாக சுட்டுக் கொலை..

ஜம்மு-காஷ்மீரின் பெஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலில் பயங்கரவாதியை எதிர்த்துப் போராடிய குதிரை சவாரி செய்த ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜம்மு-காஷ்மீரின் சுற்றுலா நகரமான பெஹல்காமில் உள்ள பைசாரன் பள்ளத்தாக்குப் பகுதியில் செவ்வாய்க்கிழமையன்று ஆயுதமேந்திய பயங்கரவாதிகள் சுற்றுலாப் பயணிகள் மீது சரமாரியாகத் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்தத் தாக்குதலில் 2 வெளிநாட்டவர் உள்பட 28 பேர் கொல்லப்பட்டனர். 20 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில், சம்பவ இடத்தில் பயங்கரவாதிகளின் துப்பாக்கிச் சூட்டியிலிருந்து […]

பெஹல்காமில் தாக்குதல் நடத்திய 3 பயங்கரவாதிகளின் வரைபடம் வெளியீடு..

பெஹல்காமில் தாக்குதல் நடத்திய மூன்று பயங்கரவாதிகளின் வரைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. ஜம்மு – காஷ்மீரின் பிரபல சுற்றுலா நகரமான பெஹல்காமில் உள்ள பைசாரன் பள்ளத்தாக்கு பகுதியில் செவ்வாய்க்கிழமை நூற்றுக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் கூடியிருந்தனர். அப்போது ஆயுதங்களுடன் இந்தப் பகுதிக்குள் நுழைந்த பயங்கரவாதிகள் சுற்றுலா பயணிகள் மீது சரமாரி தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்தச் சம்பவத்தில் 2 வெளிநாட்டவர் உள்பட 28 பேர் கொல்லப்பட்ட நிலையில், 20 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். பெஹல்காம் தாக்குதலுக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு […]

பெஹல்காம் பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக உயர்நிலைக் குழுவுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை..

காஷ்மீரில் பஹல்காம் பயணிகளின் மீது நடந்த கொடூரமான பயங்கரவாத தாக்குதல் நாட்டை உலுக்கியுள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி சவுதி அரேபியா பயணத்தை தற்காலிகமாக நிறுத்திவிட்டு புதன்கிழமை காலை இந்தியா திரும்பினார். டெல்லி விமான நிலையத்திலேயே நேரடியாக, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்ஷங்கர் மற்றும் வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரியுடன் முக்கிய ஆலோசனை நடத்தினார் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். செவ்வாய்க்கிழமை ஜம்மு & காஷ்மீரின் தெற்கு பகுதியில் உள்ள பிரபல […]

ஜம்மு – காஷ்மீரில் நிலவும் அசாதாரண சூழலைத் தொடர்ந்து, சுற்றுலாப் பயணிகள் வெளியேறுவதற்கு வசதியாக கூடுதலாக 4 விமானங்கள்..

ஜம்மு – காஷ்மீரில் நிலவும் அசாதாரண சூழலைத் தொடர்ந்து, சுற்றுலாப் பயணிகள் வெளியேறுவதற்கு வசதியாக கூடுதலாக 4 விமானங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஜம்மு-காஷ்மீரின் பிரபல சுற்றுலா நகரமான பெஹல்காமில் உள்ள பைசாரன் பள்ளத்தாக்கு பகுதியில் கூடியிருந்த சுற்றுலாப் பயணிகள் மீது செவ்வாய்க்கிழமை பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்த கொடூரத் தாக்குதலில் 2 வெளிநாட்டவர்கள் உள்பட 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த நிலையில், பயங்கரவாத தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து ஜம்மு – காஷ்மீர் முழுவதும் முழு அடைப்புப் போராட்டம் […]

நேற்று ஏறிய வேகத்தில் இறங்கியது! ஒரு சவரனுக்கு ரூ.2200 குறைந்தது..

சென்னையில் இன்று (ஏப்ரல் 23) 22 காரட் தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,200 குறைந்து, ஒரு சவரன் ரூ. 72,120க்கு விற்பனை ஆகிறது. தமிழகத்தில் நேற்று முன்தினம், ஏப்ரல் 21ம் தேதி ஆபரண தங்கம் கிராம், 9,015 ரூபாய்க்கும், சவரன், 72,120 ரூபாய்க்கும் விற்பனையானது. நேற்று (ஏப்ரல் 22) ஒரே நாளில், தங்கம் விலை கிராமுக்கு, 275 ரூபாய் உயர்ந்து, 9,290 ரூபாய்க்கு விற்பனையானது. இந்நிலையில் இன்று (ஏப்ரல் 23) 22 காரட் தங்கம் விலை சவரனுக்கு […]

கொடைரோடு அருகே சிசுக்கொலையா? போலீசார் மற்றும் தாசில்தார் விசாரணை..

கொடைரோடு அருகே சிசுக்கொலையா? போலீசார் மற்றும் தாசில்தார் விசாரணை; திண்டுக்கல், கொடைரோடு அருகே ஜெ.ஊத்துப்பட்டியைச் சேர்ந்த பாலமுருகன் மனைவி சிவசக்தி(23) இவருக்கு 16-ம் தேதி பெண் குழந்தை பிறந்தது தாயும், குழந்தையும் நலமுடன் இருந்தனர் 20-ம் தேதி பிறந்த பெண் குழந்தை மர்மமான முறையில் இறந்தது. குழந்தை உடலை வீட்டின் பின்புறம் புதைத்தனர். குழந்தை ஆரோக்கியமாக வீடு திரும்பிய நிலையில் மர்மமான முறையில் உயிரிழந்தது அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. வட்டார மருத்துவ அலுவலர் வினோத், போலீசில் அளித்த […]

வஃக்ப்-திருடர்களும்..!திருத்தங்களும்..!

வஃக்ப்-திருடர்களும்..! திருத்தங்களும்..! (ஒரு சிறிய தொடர்) வஃக்ப் புரிதல்-5 முஸ்லிம்கள் தங்களின் பின்னடைவுகளை, இன்றைய வஃக்ப்பின் நிலைகளை, ஆக்ரமிப்புகளை, முஸ்லிம் சமூகம் இழந்த வஃக்ப்பின் பயன்களை அறிந்து கொள்ள கொஞ்சம் கடந்த கால வரலாறுகளையும் அறிந்து கொள்ள வேண்டும். அன்றைய காங்கிரசிலிருந்த பாசிசவாதிகளின் அழுத்தத்தால், முஸ்லிம்களின் நலன்களை பாதுகாக்க முஸ்லிம் லீக் உருவானது. அன்றைய பரந்த இந்திய நிலப்பரப்பில், இந்திய முஸ்லிம்கள் கல்வியிலும், பொருளாதாரத்திலும் சிறந்து விளங்கினாலும், ஆங்கிலேயர்களின் சூழ்ச்சிகளும், பாசிசவாதிகள் உருவாக்கிய இந்து முஸ்லிம் பிரிவினைகளும் […]

நெல்லையில் அபாயகரமான கழிவு நீரோடை; தடுப்பு சுவர் அமைக்க மஜக கோரிக்கை..

நெல்லை டவுண் கல்லணை பெண்கள் மேல் நிலைப்பள்ளி அமைந்துள்ள சாலையில் அபாயகரமாக உள்ள கழிவு நீரோடையின் பக்கவாட்டில் தடுப்புச் சுவர் அமைத்து பொதுமக்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தி திருநெல்வேலி மாநகராட்சி ஆணையரிடம் மனிதநேய ஜனநாயக கட்சியினர் கோரிக்கை மனு அளித்தனர். இது குறித்த மனுவில், நெல்லை டவுண் தெற்கு மவுண்ட் சாலை கல்லணை பெண்கள் மேல் நிலைப்பள்ளி அமைந்துள்ள பகுதி கடும் போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியாக உள்ளது. இந்த பகுதியில் உள்ள […]

ரேஷன் பொருட்கள் கடத்தலில் ஈடுபட்ட வாகனங்கள் பொது ஏலம்..

தென்காசி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பொது விநியோகத் திட்ட பொருட்கள் கடத்தலில் ஈடுபட்ட இரண்டு, மூன்று மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் திறந்த முறை பொது ஏலத்தில் விடப்பட உள்ளது என மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே. கமல் கிஷோர் அறிவித்து உள்ளார். தென்காசி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பொது விநியோகத் திட்ட பொருட்கள் கடத்தலில் ஈடுபட்ட இரண்டு, மூன்று மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் திருநெல்வேலி குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறையினரால் கைப்பற்றுகை […]

மேலக்கால் ஊராட்சி சார்பில் வைகை ஆற்றில் துப்புரவு பணி செய்து மரக்கன்றுகள் நடப்பட்டது

மதுரை ஒன்றியம் மேலக்கால் ஊராட்சியில் வைகை ஆற்று பாதையில் மயான முதல் வைகை ஆற்றுப்பகுதி வரை கரையோரம்இருந்த குப்பைகள்jcpஎந்திரம்மூலம் அகற்றப்பட்டு மரக்கன்றுகள் நடப்பட்டது இந்த நிகழ்ச்சியில் உதவி திட்ட அலுவலர் வீடுகள் பழனிவேல் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பாலமுருகன் வட்டார வளர்ச்சி அலுவலர் கிருஷ்ணவேணி மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பூர்ணிமா ஊராட்சி செயலாளர் விக்னேஷ் ஆகியோர் மேற்பார்வையில் தூய்மை பணியாளர்கள் துப்புரவு பணியாளர்கள் மற்றும் ஊராட்சி பணியாளர்கள் பணிகளை மேற்கொண்டனர்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!