வஃக்ப்-திருடர்களும்..! திருத்தங்களும்..! (ஒரு சிறிய தொடர்) வஃக்ப் புரிதல் -15 பாசிசம் எப்போதும் மக்களை பதட்டத்திலேயே வைத்திருக்கும். பாசிச சித்தாந்தம் மக்களை துன்புறுத்தி தனது சர்வாதிகாரத்தை நிலைநிறுத்துகிற கொள்கையில் பயணிப்பதால், நாட்டின் பொருளாதார முன்னேற்றம், வேலை வாய்ப்புகள், சமூக நல்லிணக்கம் என்று மக்கள் நலன் சார்ந்த எந்த சிந்தனையும் இல்லாமல் ஆட்சி செய்வதால் மக்களின் சிந்தனைகளை சிதறடித்து, மழுங்கடித்து, மதப்பிளவுகளை உருவாக்கி மக்களை ஒருவித மனப்பதட்டத்தில் வைத்திருப்பது சர்வாதிகாரம் மற்றும் பாசிசத்தின் ஒரு உத்தியாகும் (Techniqe). குறிப்பாக […]
Category: செய்திகள்
மே தின விழா..
நெல்லையில் மனிதநேய ஜனநாயக தொழிற் சங்கம் சார்பாக பாளை மார்க்கெட் பகுதியில் ஆட்டோ ஒட்டுனர்களுக்கு இனிப்பு வழங்கி மே தினம் அனுசரிக்கப்பட்டது. இந்த நிகழ்விற்கு பாளை பகுதி மஜக செயலாளர் சாகுல் ஹமீது தலைமை வகித்தார். மாநில துணை செயலாளர் அலிஃப் A..பிலால் ராஜா அனைவருக்கும் இனிப்பு வழங்கினார். தொடர்ந்து மே தின உறுதி மொழி ஏற்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மனிதநேய ஜனநாயக தொழிற்சங்க பாளை மண்டல செயலாளர் சிதம்பரம் செய்திருந்தார். செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
வஃக்ப்-திருடர்களும்..!திருத்தங்களும்..!
வஃக்ப்-திருடர்களும்..!திருத்தங்களும்..! (ஒரு சிறிய தொடர்) வஃக்ப் புரிதல் -13 பழைய காலங்களில் பொதுவாக வஃக்ப் அதிகமாக செய்யப்பட்டதால் பழைய பள்ளிவாசல்கள்மற்றும் மதரசாக்களுக்கு ஏராளமான சொத்துக்கள் கொடையாக கிடைத்தன. சமீபகாலங்களில் கட்டப்படும் பள்ளிவாசல்கள் மற்றும் மதரசாக்களுக்கு எந்த புதிய வஃக்ப்களும் கிடைப்பதில்லை. புதிய பள்ளிவாசல் மற்றும் மதரசாக்களை கட்டவே பலரின் உதவியை நாடி வசூல் செய்து கட்டி விடுகிறார்கள். ஆனால் அவைகளுக்கான நிரந்தர வருமானம் இல்லாமல் ஆகிவிடுவதால் நிர்வாக செலவுகளுக்கே பெரும் தடுமாற்றங்கள் ஏற்படுகிறது. ஹஜ்ரத் சம்பளம் முஅத்தின் […]
சோழவந்தானில் உள்ள ஆக்கிரமிப்புகள் அனைத்தும் அகற்றப்படும் பேரூராட்சி மூலம் அறிவிப்பு
மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சியில் பல்வேறு பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை நெடுஞ்சாலைத்துறை மூலம் 2.5.25 மற்றும் 3.5.25 ஆகிய இரண்டு நாட்கள் அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் கூடும் இடங்களில் பேரூராட்சி பணியாளர்கள் மூலம் அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது குறிப்பாக வர்த்தக நிறுவனங்கள் தனியார் அமைப்புகள் மற்றும் தனி நபர்கள் ஆகியோர் தங்கள் நிறுவனங்களின் முன்பு ஆக்கிரமிப்பில் ஈடுபட்டிருந்தால் தாங்களாகவே அவற்றை அகற்றிக் கொள்ள வேண்டும் இல்லையென்றால் நெடுஞ்சாலை துறை மூலம் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என்றும் ஆக்கிரமிப்புகளை அகற்றும் […]
கிராம சபை கூட்டத்தில் அதிகாரிகளை முற்றுகையிட்டு பொதுமக்கள் வாக்குவாதம்.கிராம சபை கூட்டத்தை பாதியிலேயே முடித்துச் சென்ற அதிகாரிகளால் பரபரப்பு
தொழிலாளர் தினத்தை முன்னிட்டு தமிழக முழுவதும் இன்று கிராம சபை கூட்டம் நடைபெற்றது மதுரை மாவட்டம் கீழமாத்தூர் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் கீழ மாத்தூர் ஊராட்சியின் 5 வது வார்டு ஆதிதிராவிடப் பொதுமக்கள் தங்கள் பகுதியில் கழிவுநீர் கால்வாய் செல்லாமல் தேங்கி இருப்பதாகவும் மேலும் 200 குடும்பங்கள் வசிக்கும் ஆதிதிராவிட பொதுமக்களுக்கு இதுவரை கழிப்பறை வசதி கூட கட்டித்தரவல்லை எனக்கூறி திருப்பரங்குன்றம் யூனியன் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயன் அவர்களை முற்றுகையிட்டு […]
சோழவந்தானில் சர்வதேச உரிமைகள் கழகம் மற்றும் மனித உரிமைகள் கழகம் சார்பில்உழைப்பாளர் தின கொண்டாட்டம்.
உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு சோழவந்தான் பேரூராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு மரியாதை செய்து இனிப்புகள் வழங்கி தொழிலாளர் தினம் கொண்டாடப்பட்டது. இவ்விழாவிற்கு சோழவந்தான் தொகுதி மாவட்டத் தலைவர் தவமணி தலைமை தாங்கினார். மாவட்ட துணைத் தலைவர் பரத் கவுசிகன், மாவட்ட செயலாளர் இளவரசன் துணைச் செயலாளர்கள் குருசாமி, பாபு ராஜ், காசி மாயன், பேரூராட்சி துப்புரவு ஆய்வாளர் சூரிய பிரகாஷ் முன்னிலை வகித்தனர் மதுரை மண்டல மாநிலத் துணை பொதுச் செயலாளர் செந்தில்குமார் தொழிலாளர்களுக்கு மரியாதை செய்து […]
சோழவந்தான் திரௌபதை அம்மன் கோவிலில் திருக்கல்யாண வைபவம்
சோழவந்தான் திரவுபதிஅம்மன் கோவில் பூக்குழி திருவிழா கடந்த திங்கட்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை முன்னிட்டு மேளதாளத்துடன் வடக்கு ரத வீதி வெள்ளாளர் உறவின் முறை சங்க தலைவர் சுகுமாரன் தலைமையில், நிர்வாகிகள் முன்னிலையில் பெண்கள் சீர்வரிசை எடுத்து வந்தனர். திரௌபதை அம்மன் அர்ச்சுனன் அலங்கரித்து கோவில் வளாகத்தில் சுற்றி வந்தனர்.திருமண மேடையில் வந்து திருமண கோலத்தில்அலங்காரம் செய்தனர். இதை தொடர்ந்துபிரசாந்த் சர்மா தலைமையில் திருக்கல்யாண யாகபூஜை நடந்தது. பரம்பரையை […]
சோழவந்தான் அருகே தென்கரை அகிலாண்டேஸ்வரி மூலநாத சாமி கோவில் சித்திரை திருவிழா முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே தென்கரையில் அமைந்துள்ள அருள்மிகு அகிலாண்டேஸ்வரி அம்மன் உடனுறை திரு மூலநாத சுவாமி திருக்கோவில் சித்திரை திருவிழா முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது கொடி மரத்திற்கு பால் பன்னீர் சந்தனம் உள்ளிட்ட பொருட்களைக் கொண்டு அபிஷேகம் நடைபெற்றது தொடர்ந்து சாமி திருவீதி உலா வரும் சப்பர தேருக்கும் அபிஷேகம் நடைபெற்றது விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் வருகின்ற 8ம் தேதியும் திருத்தேர் ஊர்வலம் 9ஆம் தேதியும் அதனைத் தொடர்ந்து 10ஆம் தேதி தீர்த்தவாரி […]
ஆபரணத் தங்கம் அதிரடி குறைவு! ஒரு சவரனுக்கு 1640 குறைந்தது..
தங்கம் விலை கடந்த 22-ந்தேதி ஒரே நாளில் ரூ.2 ஆயிரத்து 200 உயர்ந்து, சவரன் ரூ.74 ஆயிரத்து 320 எனும் இமாலய உச்சத்தை எட்டியது. இது, நடுத்தர, ஏழை, எளிய மக்களை அதிர்ச்சி அடைய செய்தது. ஆனால், மறுநாளே அந்தர் பல்டியாக எவ்வளவு உயர்ந்ததோ அதே அளவு சரிவை சந்தித்தது. அதாவது, கடந்த 23-ந்தேதி, சவரன் ரூ.2 ஆயிரத்து 200 குறைந்து, மீண்டும் ரூ.72 ஆயிரத்து 120-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதன்பிறகு, 24-ந்தேதி ஒரு சவரன் ரூ.80 […]
வஃக்ப்-திருடர்களும்..!திருத்தங்களும்..!
வஃக்ப்-திருடர்களும்..! திருத்தங்களும்..! (ஒரு சிறிய தொடர்) வஃக்ப் புரிதல் -13 முஸ்லிம் சமூகம் இன்று குறைகளை மட்டுமே பேசி சண்டையிட்டு கொள்கிறது. இன்றைக்கு பாசிச ஆட்சியாளர்கள் முஸ்லிம்களை இரண்டாம் தர குடிமக்களாக ஆக்க கொஞ்சம் கொஞ்சமாக சட்டங்களை வெளிப்படையாகவே அமல்படுத்த ஆரம்பித்து விட்டார்கள். இன்னமும் முஸ்லிம் சமூகம் விழித்து கொள்ளவில்லை எனில் முஸ்லிம்களின் எதிர்கால சந்ததியினர் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி விடுவார்கள். இனி முஸ்லிம் சமூகம் பிரச்சினைகளை பேசி பெரிதாக்காமல், அதற்கான தீர்வுகளை நோக்கி நகர வேண்டும். […]
மையோனைஸ் விற்பனைக்கு தடை; கலெக்டர் கமல் கிஷோர் தகவல்..
தென்காசி மாவட்டத்தில் முட்டையில் இருந்து தயார் செய்யப்படும் மையோனைஸ் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களால் மாசுபடுவதால், மையோனைஸை தயாரிக்க மற்றும் விற்பனை செய்ய தமிழக அரசு ஓராண்டு தடை விதித்துள்ளதாக மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அரசு அரசிதழ் எண்: 161, ஏப்ரல் 8, 2025 இன் படி, முட்டையில் இருந்து தயாரிக்கப்படும் மையோனைஸ்க்கு ஓராண்டு தடை விதித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. அரேபிய வகை உணவுகளான தந்தூரி சிக்கன், பார்பிகியூ ஷவர்மா போன்றவை […]
உசிலம்பட்டி டி இ எல் சி ஆசிரியர் பயிற்சி பள்ளி முன்னாள் தாளாளர் மதுரம் நினைவு நாள் அனுசரிப்பு
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பேரையூர் சாலையில் உள்ள டி இ எல் சி ஆலயம் வளாகத்தில் உள்ள வி மதுரம் நினைவிடத்தில் 4ம் ஆண்டு நினைவேந்தல் சர்வ கட்சியினர் கலந்து கண்டு அனுசரிக்கப்பட்டது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி டி இ எல் சி ஆலயம் வளாகத்தில் உள்ள டி இ எல் சி ஆசிரியர் பயிற்சி முன்னாள் தாளாளர் வி மதுரம் நாலாம் ஆண்டு நினைவேந்தல் விழாவில் குடும்பத்தினர் மனைவி ரதி எம். வசந்த ராஜன் பிரவீனா […]
வஃக்ப்-திருடர்களும்..!திருத்தங்களும்..!
வஃக்ப்-திருடர்களும்..! திருத்தங்களும்..! (ஒரு சிறிய தொடர்) வஃக்ப் புரிதல் -12 வஃக்ப்புக்கு கொடை வழங்குவது என்பது உலகில் வழங்கப்படும் கொடைகளிலேயே மிகச்சிறப்பான நன்மைகளை காலம் கடந்தும் தேடித்தரக்கூடிய கட்டாயமில்லாத கடமையில்லாத கொடையாகும். வஃக்ப் என்பது முக்கியமாக சொத்துக்களை மையப்படுத்தியே இருக்கிறது. ஒரு சொத்தை வஃக்ப் செய்து இதுபோன்ற காரியங்களுக்கு தொடர்ந்து செலவு செய்யவேண்டும் பயன்படுத்த வேண்டும் என்று நிர்ணயித்தே கொடையாளர்கள் வழங்குகிறார்கள். ஆனால் வஃக்பை நிர்வகிக்கும் நிர்வாகிகள் அவர்கள் நிர்ணயம் செய்து எழுதி வைத்த நிகழ்வுகளுக்கு அதனை […]
டூவீலர் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய சிறுமியின் தந்தை கைது..
தென்காசி மாவட்டத்தில் இரு சக்கர வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய 15 வயது சிறுமியின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார். தென்காசி மாவட்டத்தில் வாகன விபத்துகளை தடுக்கும் பொருட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.அரவிந்த் உத்தரவின் பேரில் விபத்துக்கள் ஏற்பட்ட இடங்கள் மற்றும் ஏற்பட வாய்ப்புள்ள இடங்களில் மீண்டும் விபத்துக்கள் ஏற்படாத வண்ணம் மஞ்சள் நிற மினுங்கும் விளக்குகள், வேகத்தை குறைக்க பேரிகேடுகள் (Barricade), ரிப்லெக்டிங் ஸ்டிக்கர்கள் (Reflecting Sticker), விபத்து பகுதி (Accident Zone) என்ற எச்சரிக்கை […]
வஃக்ப்-திருடர்களும்..!திருத்தங்களும்…!
வஃக்ப்-திருடர்களும்..! திருத்தங்களும்…! (ஒரு சிறிய தொடர்) வஃக்ப் புரிதல் -11 தர்ஹாக்களுக்கும் ஏராளமான வஃக்ப் சொத்துக்கள் இருப்பதே பலருக்கு தெரியவில்லை. இறைநேசர்கள் அவர்கள் வாழ்ந்த காலத்தில் அவர்களின் ஆன்மீக அறிவுரைகளாலோ அவர்களின் மருத்துவத்தாலோ அல்லது வேறு காரணங்களாலோ பலன் பெற்றவர்கள், அரசர்கள் மற்றும் செல்வந்தர்கள் என பலரும் பலவகைகளில் சொத்துக்களை அவர்களுக்கு வழங்கியுள்ளனர். அவர்களது மரணித்திற்கு பிறகும் பலர் சொத்துக்களை அந்த தர்ஹா நிர்வாகத்திற்கு கொடையாக வழங்கியுள்ளனர். இதில் பல சொத்துக்கள் வஃக்ப் வாரியத்தில் பதியப்பட்டு ஆவணங்களாக […]
குறைதீர் கூட்டத்தில் காதொலி கருவிகள் வழங்கல்..
தென்காசியில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.2,29,500 மதிப்பிலான காதொலி கருவிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் வழங்கினார். தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் 28.04.2025 திங்கள் கிழமை மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் தலைமையில் நடைபெற்றது. இக் கூட்டத்தில் பொது மக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் பெற்றுக் கொண்டார். தொடர்ந்து, மாவட்ட மாற்றுத் திறனாளிகள் […]
தமிழக அமைச்சரவையில் மீண்டும் மனோ தங்கராஜ்!
தமிழக அமைச்சராக இன்று(ஏப். 28) மீண்டும் பொறுப்பேற்றுக் கொண்டார் மனோ தங்கராஜ். அமைச்சர் மனோ தங்கராஜுக்கு தமிழக ஆளுநர் ஆர். என். ரவி பதவிப் பிரமாணமும் ரகசிய காப்பு உறுதிமொழியையும் செய்து வைத்தார். ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு நிகழ்வில், முதல்வர் ஸ்டாலின் துணை முதல்வர் உதயநிதி, அமைச்சர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். முன்னதாக, அமைச்சர் பதவியிலிருந்து செந்தில் பாலாஜி, பொன்முடி ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை ராஜிநாமா செய்தனா். முதல்வர் மு.க.ஸ்டாலின் பரிந்துரையை ஏற்று அந்த ராஜிநாமாவை ஏற்றுக்கொண்ட ஆளுநர் […]
அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மத்தியில் நம்பிக்கையூட்டும் முதலமைச்சரின் அறிவிப்புகள்!- சிபிஎம் வரவேற்பு!
ஆசிரியர்கள் பயன்பெறும் வகையில் முதல்வர் 9 அறிவிப்புகள் வெளியிட்டு இருப்பது, பல்லாண்டுகளாக போராடி வரும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மத்தியில் இவை நம்பிக்கையூட்டும் அறிவிப்புகளாகும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பு அளித்துள்ளது.இது குறித்து, மாநில செயலாளர் பெ.சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-தமிழ்நாடு சட்டமன்றத்தில் பேரவை விதி எண் 110-ன் கீழ், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பயன்பெறும் வகையில் முதல்வர் 9 அறிவிப்புகள் வெளியிட்டு இருப்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்கிறது. பல்லாண்டுகளாக போராடி வரும் அரசு […]
வாடிப்பட்டியில் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது
மதுரை புறநகர் வடக்கு மாவட்டம் வாடிப்பட்டியில் தமிழக வெற்றி கழகத்தின் மாநகர் மாவட்ட செயலாளர் விஜய் அண்பன் கல்லாணை அறிவுறுத்தலுக்கிணங்க நடைபெற்ற நீர்மோர் பந்தல் திறப்பு விழாவிற்கு மதுரை புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் விஷால் கிருஷ்ணா தலைமை வகித்தார் .வாடிப்பட்டி வடக்கு ஒன்றிய செயலாளர் தாமு முன்னிலை வகித்தார் .வாடிப்பட்டி மாதா கோவில் முன்பாக பந்தல் மூலம் கோடை வெப்பத்தை தவிர்க்கும் பொருட்டு நீர், மோர் ,சர்பத் தர்ப்பூசணி வழங்கப்பட்டது. இதில் நிர்வாகிகள் செயற்குழு உறுப்பினர் […]
தாராப்பட்டியில் ஆபத்தான நிலையில் கழிவு நீர் கால்வாய் கான்கிரீட். சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
மதுரை மாவட்டம் கொடிமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட தாராப்பட்டி கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர் இந்த கிராமத்தில் உள்ள எட்டாவது வார்டு பகுதியான நடுத்தெருவில்கழிவுநீர் செல்ல கால்வாய் கட்டி தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்த நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு கழிவு நீர் கால்வாய் கட்டியவர்கள் காங்கிரட் பூச்சுகள் மற்றும் கம்பிகளை அப்படியே கால்வாய் மீது போட்டுவிட்டு சென்றதால் பொதுமக்களுக்கு பல்வேறு சிரமங்கள் ஏற்படுவதாக புகார் தெரிவிக்கின்றனர் மேலும் கழிவுநீர் கால்வாய் கான்கிரீட்டுகளை […]
You must be logged in to post a comment.