முன்பதிவு பயணச்சீட்டு வழங்க முழுநேர அதிகாரியை நியமித்திடுக!

பாவூர்சத்திரம் ரயில் நிலையத்தில் முன்பதிவு பயணச்சீட்டு வழங்க முழுநேர அதிகாரியை நியமிக்க வேண்டும் என்ற முக்கிய கோரிக்கையை தென்காசி மாவட்ட ரயில் பயணிகள் சங்கம் வலியுறுத்தி உள்ளது. தென்காசி மாவட்ட ரயில் பயணிகள் சங்கத்தின் சார்பில் சங்க செயலாளர் ஜெகன், சென்னையில் உள்ள தென்னக இரயில்வே தலைமை அலுவலகத்தில் முதுநிலை வணிக மேலாளர் பி.வி.மனோஜை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தார்.   அந்த மனுவில், பாவூர்சத்திரம் ரயில் நிலையத்திற்கு முன்பதிவு பயணச் சீட்டு வழங்க முழு […]

கஞ்சா விற்பனை; குற்றவாளிக்கு குண்டாஸ்..

சிவகிரியில் தொடர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த குற்றவாளி குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார். தென்காசி மாவட்டம், சிவகிரி காவல் நிலைய சரக பகுதிகளில் தொடர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த உள்ளார் பகுதியை சேர்ந்த பூலித்துரை என்பவரின் மகன் காசிதுரை தலைவனார் @ கார்த்திக் (25) மீது பிரிவு 14 தமிழ்நாடு குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். அரவிந்த் பரிந்துரையின் பேரில், […]

சிங்கப்பூர் எம்.பி தேர்தலில் கடையநல்லூர் டாக்டர் வெற்றி..

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் பகுதியை சேர்ந்த டாக்டர் ஹமீத் ரசாக் சிங்கப்பூர் எம்பி தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். சிங்கப்பூரில் 2025 நடைபெற்ற பொதுத் தேர்தலில் PAP கட்சியின் நாடாளுமன்ற வேட்பாளாராக சிங்கப்பூரின் ஜூரோங் மேற்கு தொகுதியில் போட்டியிட்ட சிங்கப்பூர் இந்திய வம்சா வழி தமிழரான டாக்டர் ஹமீத் ரசாக் வெற்றி பெற்று சிங்கப்பூர் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார்.    டாக்டர் ஹமீத் ரசாக் சிங்கப்பூரின் புகழ் பெற்ற எலும்பு அறுவை சிகிச்சை மருத்துவர் ஆவார். […]

இரும்பாடி பாலகிருஷ்ணா புரத்தில்நெல் கொள்முதல் நிலையம் திடீர் மூடல் விவசாயிகள் பஸ் மறியல்

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே இரும்பாடி மற்றும் பாலகிருஷ்ணாபுரம் பகுதியில் செயல்பட்டு வந்த நெல் கொள்முதல் நிலையங்களை எந்த முன்னறிவிப்பும் இன்றி திடீரென முடியாததால் ஆவேசம் அடைந்த விவசாயிகள் நேற்று மாலை 5 மணி அளவில் பாலகிருஷ்ணாபுரம் கருப்பட்டி சாலையில் நிலக்கோட்டையில் இருந்து மதுரை ஆரப்பாளையம் சென்ற அரசு பேருந்தை மறித்து திடீரென பஸ் மறியல் செய்தனர் உடனடியாக நெல் கொள்முதல் நிலையத்தை திறக்க வேண்டும் என கூறி பஸ் மறியல் செய்ததால் அந்த பகுதியில் பெரும் […]

வாடிப்பட்டியில்ஓமந்தூரார் நூல் வெளியீட்டு விழா

மதுரை இளங்கோ முத்தமிழ் மன்றம் வாடிப்பட்டி கவியரசு கண்ணதாசன் இலக்கிய பேரவை சார்பாக புலவர் வை. சங்கரலிங் கனாரின் ஓமந்தூரார் 100 நூல் வெளியீட்டு விழா வி எம் பள்ளியில் நடந்தது. இந்த விழாவிற்கு பேரூராட்சி தலைவர் மு பால் பாண்டியன் தலைமை தாங்கி நூலை வெளியிட்டார். ரெட்டி நலச்சங்க மாநில பொதுச் செயலாளர் ராஜா பூரணசந்திரன் முதல் பிரதியை பெற்றுக் கொண்டார். சர்வோதயா சுந்தர்ராஜன், பால. ராஜேந்திரன்.பேரூராட்சி துணை தலைவர் கார்த்திக், கௌரா ராஜசேகர் ஜெயகணேஷ் […]

ஐயப்பன் நாயக்கன்பட்டி ஸ்ரீ அருள்மிகு பத்ரகாளியம்மன் கோவில் திருவிழா பால்குடம் எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே அய்யப்பன் நாயக்கன்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள நாடார் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட ஸ்ரீ பத்திரகாளி அம்மன் கோவில் திருவிழாவில் பக்தர்கள் பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர் இன்று அதிகாலை 6 மணி அளவில் வைகை ஆற்றில் இருந்து சுமார் 2000க்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்தனர் பின்னர் அய்யப்ப நாயக்கன்பட்டி கிராமத்தின் பல்வேறு பகுதிகளில் ஊர்வலம் வந்தது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பால்குடத்துடன் சாமி ஆடி வந்தனர் தொடர்ந்து […]

சோழவந்தான் திரௌபதி அம்மன் கோவில் பூக்குழி முகூர்த்தக்கால் நடும் விழா

சோழவந்தான் திரௌபதி அம்மன் கோவில் பூக்குழி திருவிழா கடந்த ஏப்ரல் மாத 28ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிகழ்ச்சி ஒவ்வொரு வாகனத்தில் அம்மன் புறப்பாடு நடந்து வருகிறது இன்று அரவான் படுகளம் அம்மன் சிங்க வாகனத்தில் பவனி வருதல் காளி வேடம் கருப்பு சாமி வேடம் இரவு காவல் கொடுத்தல் நடைபெறும் நாளை துரியோதனன் படுகளம் திரௌபதி வேடம் அம்மன் கூந்தல் முடிப்பு அம்மன் புறப்பாடு நடைபெறுகிறது நாளை மறுநாள் மாலை 5 […]

ஆலங்குளம் கல்லூரி குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய நெல்லை எம்.பி வலியுறுத்தல்..

ஆலங்குளம் அரசு மகளிர் கல்லூரியின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு அரசின் உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியனை நேரில் சந்தித்து ராபர்ட் புரூஸ் எம்.பி மனு அளித்தார். அந்த மனுவில், திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட தென்காசி மாவட்டம், ஆலங்குளம் தாலுகா, ஆலங்குளத்தில் இயங்கி வரும் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தற்போது 892 மாணவிகள் கல்வி பயின்று வருகிறார்கள். ஆசிரியர் மற்றும் பணியாளர்கள் […]

நெல்லையில் கோடை கால அறிவியல் பயிற்சி முகாம்..

திருநெல்வேலி மாவட்ட அறிவியல் மையத்தில் பள்ளி மாணவ- மாணவிகள் கோடை கால விடுமுறையை பயனுள்ளதாக கழிக்கும் வகையில கோடை கால அறிவியல் பயிற்சி முகாம் இரண்டாம் நிலை (Vacation Hobby Courses Batch II) 2025 ஒன்றை வருகின்ற மே 19ஆம் தேதி முதல் 23ம் தேதி வரை தாமாக செய்து கற்கும் அறிவியல் மாதிரிகள் (DIY – Science Kits) என்னும் தலைப்பில் VI std முதல் VIII std முடித்திருக்கும் பள்ளி மாணவ மாணவிகளுக்காக […]

சோழவந்தானில் அடகு கடை பைனான்ஸ் உரிமையாளர்களின்24 ஆவது பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது

மதுரை மாவட்டம் சோழவந்தானில் வாடிப்பட்டி உசிலம்பட்டி திருமங்கலம் தாலுகா அடகு கடை பைனான்ஸ் உரிமையாளர்களின் 24 வது பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது கூட்டத்திற்கு அடகு கடை பைனான்ஸ் உரிமையாளர்கள் தலைவரும் தொழிலதிபரருமான டாக்டர் மருது பாண்டியன் தலைமை தாங்கினார் சங்கத்தின் செயலாளர் காளீஸ்வரன் முன்னிலை வகித்தார் சோழவந்தான் முத்துக்குமரன் நகை மாளிகை உரிமையாளர் இருளப்பன் வரவேற்புரை ஆற்றினார் கூட்டத்தில் அடகு கடை பைனான்ஸ் உரிமையாளர்கள் பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி பேசினார்கள் அதனைத் தொடர்ந்து பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன […]

வஃக்ப்-திருடர்களும்..!திருத்தங்களும்..

வஃக்ப்-திருடர்களும்..!திருத்தங்களும்.. (ஒரு சிறிய தொடர்) வஃக்ப் புரிதல் -17 காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் கே.சி.வேணுகோபால் அவர்கள் பேசும்போது,இந்த மசோதா கூட்டாட்சி என்னும் தத்துவத்தின் மீதான கடுமையான தாக்குதலாகும், வஃக்ப் சொத்துக்கள் தொடர்பான தரவுகளை (Datas) சேகரிக்கும் பணிகளை மாநில அரசுகள் பார்த்துக் கொள்கின்றன, இதனை ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவது அப்பட்டமான மத சுதந்திரத்தின் மீதான தாக்குதல் என்று ஆணித்தரமாக தமது கருத்துக்களை பதிவு செய்தார். சமாஜ்வாதி உறுப்பினர் மொஹிபுல்லா பேசும் போது, மற்ற […]

குணசித்திர நடிகை தண்டட்டி பெருமாயி காலமானார்

இயக்குனர் பாரதிராஜா வின் படங்கள், விஜய், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் பலருடனும் நடித்த உசிலம்பட்டியைச் சேர்ந்த மூதாட்டி பெருமாயி மாரடைப்பால் உயிரிழந்தார்., மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே அன்னம்பாரிபட்டியைச் சேர்ந்தவர் மூதாட்டி பெருமாயி., 73 வயதான இவர் இயக்குனர் பாரதிராஜாவின் தெற்கத்தி பொண்ணு சீரியல் மூலம் பிரபலமாகி அந்த சீரியல் துவங்கி பாரதிராஜாவின் பல்வேறு படங்களிலும் நடித்துள்ளார்., தண்டட்டியுடன் காணப்படும் இந்த மூதாட்டி,நடிகர் சிவகார்த்திகேயனின் மனம் கொத்தி பறவை, விஜய் ன் வில்லு உள்ளிட்ட படங்கள் […]

திண்டுக்கல் – நாகா்கோவிலுக்கு திங்கள்கிழமை (மே 5) முதல் சிறப்பு ரயில் இயக்கம்..

திண்டுக்கல் – நாகா்கோவிலுக்கு திங்கள்கிழமை (மே 5) முதல் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இதுகுறித்து மதுரை கோட்ட ரயில்வே மேலாளா் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: திண்டுக்கல் – நாகா்கோவில் இடையே மே 5-ஆம் தேதி முதல் மே 31-ஆம் தேதி வரை (புதன், வியாழன் தவிர) சிறப்பு ரயில் (06322) இயக்கப்படுகிறது. திண்டுக்கல் ரயில் நிலையத்திலிருந்து பிற்பகல் 3.45 மணிக்குப் புறப்படும் இந்த ரயில், இரவு 9.05 மணிக்கு நாகா்கோவில் சென்றடையும். இந்த ரயில், அம்பாத்துரை, […]

நெல்லையில் கடும் வெயில் பதிவாகும்..

தென் மாவட்டங்களில் இன்று (04.05.2025) கடுமையான வெயில் சுட்டெரிக்கும் எனவும், மக்கள் வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும் என்றும் தென்காசி வெதர்மேன் ராஜா தெரிவித்துள்ளார். இது பற்றிய அறிக்கையில், நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் இன்று அதிகபட்ச வெப்பநிலை பதிவாகும். கடந்த சில நாட்களாக வெப்பநிலை குறைவாக பதிவாகி வந்த நிலையில் இன்று கடுமையான வெயில் கொளுத்தும். தூத்துக்குடி, திருச்செந்தூர் உள்ளிட்ட கடலோர பகுதிகளில் அதிக புழுக்கம் காணப்படும். எனவே இன்று நெல்லை, தூத்துக்குடி மக்கள் வெளியே செல்வதை […]

வஃக்ப்-திருடர்களும்..!திருத்தங்களும்..!

வஃக்ப்-திருடர்களும்..! திருத்தங்களும்..! (ஒரு சிறிய தொடர்) வஃக்ப் புரிதல் -16 நாடாளுமன்ற விவாதங்களில் பேசப்படும் கருத்துக்கள் அவைக்குறிப்புகளில் பதியப்பட்டு அது ஆவணமாக பாதுகாக்கப்படுகிறது. சில சமயங்களில் இவர்கள் எல்லாம் பேசி என்ன பயன்? அவர்களின் பெரும்பாண்மை பலத்தில் சட்டங்களை நிறைவேற்றி சாதித்து விடுகிறார்களே என்று ஒரு போதும் மனச்சோர்வு அடையக்கூடாது. ஒரு ஜனநாயக நாட்டின் உயர்ந்த அவையாக கருதப்படுகிற நாடாளுமன்ற பதிவுகளுக்கு எப்போதும் மரியாதையும் மதிப்பும் உண்டு. சில சமயங்களில் தேவைப்படும் நேரங்களில் அந்த பதிவுக்குறிப்புகள் நீதிமன்றங்களுக்கு […]

சிறந்த கல்வி அளித்து வரும் டிரஸ்ட் இந்தியா பள்ளி..

தென்காசி மாவட்டம் கடையம்- பாவூர்சத்திரம் அருகே அமைந்துள்ளது வெங்காடம்பட்டி கிராமம். இந்த கிராமத்தில், சமூக நல ஆர்வலர் பூ.திருமாறன் சிறந்த கல்விச் சேவை அளிப்பதை நோக்கமாக கொண்டு “டிரஸ்ட்-இந்தியா” எனும் பள்ளியை நிறுவினார். கடந்த 14 ஆண்டுகளாக கல்வி சேவை வழங்கி வரும் இப்பள்ளியின் முதல்வராக சாந்தி திருமாறன் இருந்து வருகிறார். “எட்டு வருடங்கள் உங்கள் குழந்தை எங்கள் பள்ளியில் படிக்கட்டும் – அதன் மாற்றம், ஏற்றம், வளர்ச்சி, முன்னேற்றம் உங்களுக்குப் புரியும்” என்கிறார் இப்பள்ளி நிறுவனர் […]

பாலமேட்டில் பொதுமக்கள் கூடும் வாரச்சந்தை அருகே ஆபத்தான நிலையில் குடிநீர் மேல்நிலை நீர் தேக்க தொட்டி கட்டுவதால் விபத்து ஏற்படும் அபாயம்

மதுரை மாவட்டம் பாலமேடு பேரூராட்சியில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசிக்கின்றனர் இந்த பேரூராட்சியில் வாரம் தோறும் சனிக்கிழமை வாரச்சந்தை பாலமேடு பேரூராட்சி அருகே பேருந்து நிலைய பகுதிகளில் நடைபெறுவது வழக்கம் இந்த நிலையில் பாலமேடு பேரூராட்சி சார்பில் 5 லட்சம்லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் மேல்நிலை நீர் தேக்க தொட்டி கட்டும் பணி தற்போது நடைபெற்று வருகிறது இந்த பணியானது சுமார் 10,000 க்குமமேற்பட்ட பொதுமக்கள் கூடும் பாலமேடு வாரச்சந்தை நடைபெறும் மையப் பகுதியில் கட்டுமான […]

சோழவந்தான் – பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம். ஆர் பி உதயகுமார் சிறப்புரை

மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய அதிமுக சார்பில் இரும்பாடி கருப்பட்டி நாச்சிகுளம் ஆகிய ஊராட்சியில் பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது கூட்டத்திற்கு வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் கொரியர் கணேசன் தலைமை தாங்கினார் முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் கலந்துகொண்டு ஆலோசனைகள் வழங்கி சிறப்புரையாற்றினார் இந்த நிகழ்ச்சியில் முன்னாள் எம்எல்ஏக்கள் எம் வி கருப்பையா மாணிக்கம் அம்மா பேரவை துரை தன்ராஜ் வெற்றிவேல் வக்கீல் திருப்பதி மகளிர் அணி லட்சுமி […]

சோழவந்தான் ரயில் நிலையத்தில் பெட்ரோல் ஏற்றி வந்த ரயிலில் டேங்கில் பெட்ரோல் கசிவு ஏற்பட்டதால் அரை மணி நேரம் ரயில்கள் தாமதமாக புறப்பட்டது

மதுரை மாவட்டம் சோழவந்தான் ரயில் நிலையத்தில் இன்று காலை 8 மணி அளவில் பெட்ரோல் ஏற்றி வந்த ரயிலில் டேங்கில் பெட்ரோல் கசிவு ஏற்பட்டதால் சோழவந்தான் வழியாக செல்லும் ரயில்கள் அரை மணி நேரம் தாமதமாக சென்றதால்ரயில் பயணிகள் பாதிக்கப்பட்டனர் இன்று காலை 8 மணி அளவில் சோழவந்தான் ரயில் நிலையம் வழியாக பெட்ரோல் ஏற்றி வந்த சரக்கு ரயில் பெட்ரோல் கசிவு ஏற்பட்டதால் சோழவந்தான் ரயில் நிலையத்தில் சரக்கு ரயில் நிறுத்தப்பட்டது உடனடியாக சோழவந்தான் தீயணைப்புத் […]

கீழமாத்தூர் ஆதிதிராவிடர் காலனியில் கழிவுநீர் செல்ல வழி இல்லாததால் கோப்பைகளில் அள்ளி கால்வாயில் ஊற்றும் அவலம் மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

மதுரை மாவட்டம் கீழமாத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட 5வது வார்டு ஆதிதிராவிடர் காலனியில் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர் இந்த பகுதியில் கழிவு நீர் கால்வாய் இல்லாததால் பகுதி பொதுமக்கள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகி வருகின்றனர் இது குறித்து கிராம சபை கூட்டங்களில் பலமுறை கோரிக்கை வைத்தும் ஊராட்சி நிர்வாகம் மற்றும் யூனியன் அதிகாரிகள் தரப்பில் எந்த ஒரு நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை இந்த நிலையில் கடந்த மே 1ஆம் தேதி தொழிலாளர் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற […]

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!