வீர மரணமடைந்த இந்திய ராணுவ வீரர் முரளி நாயக்கிற்கு அதிமுக சார்பில் வீரவணக்கம்: போரில் வெற்றி பெறவும் சிறப்பு வழிபாடு..!

நேற்று, பாகிஸ்தான் நடத்திய தாக்குதலின்போது, ஆந்திர பிரதேச மாநிலம் சத்யசாய் மாவட்டத்தை சேர்ந்த எல்லை பாதுகாப்புப்படை வீரர் முரளி நாயக் வீர மரணம் அடைந்தார் அவருக்கு, ராமநாதபுரம் மாவட்ட அதிமுக சார்பில் மாவட்ட செயலாளர் எம்.ஏ.முனியசாமி தலைமையில் மண்டபம் மேற்கு ஒன்றிய கழக செயலாளர் மருதுபாண்டியன் ஏற்பாட்டில் வீரவணக்கம் செய்து அவருடைய உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. இந் நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அம்மா பேரவை இணைச் செயலாளர் ராஜவர்மன், எம்ஜிஆர் மன்ற செயலாளர் […]

மாவட்ட அளவிலான கால்பந்து போட்டியில் பெரியபட்டினம் அணியினருக்கு முதல் பரிசு..

இராமநாதபுரத்தில் மல்லி கன்ஸ்ட்ரக்சன் நிறுவனத்தின் சார்பாக லிமிட்லெஸ் டர்ஃப் மைதானத்தில் நேற்று நடைபெற்ற மாவட்ட அளவிலான ஐவர் கால்பந்து போட்டியில் மாவட்டம் முழுவதிலும் இருந்து 30 அணிகள் பங்கு பெற்றன. இதில் முதல் பரிசினை பெரியபட்டினம் A அணியினரும் இரண்டாவது பரிசினை குப்பன் வலசை அணியினரும் மூன்றாவது பரிசினை கீழக்கரை அணியினரும் நான்காவது பரிசினை பெரியபட்டினம் B பெற்றனர். சிறந்த கோல் கீப்பருக்கான விருதினை PFC A அணியின் மசூத் குப்பன் வலசை அணியின் மாசானம் ஆகியோர் […]

கீழக்கரையில் சிசிடிவி கேமராக்கள் வழங்கிய செல்வந்தர்கள் .! சார்பு ஆய்வாளர் வேண்டுகோள்.!!

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை காவல் நிலைய சார்பு ஆய்வாளர் வீர கணேஷ் நகர் முழுவதும் சிசிடிவி கேமராக்கள் அமைத்து வருவதாகவும் கூடுதலாக கேமராக்கள் தேவைப்படுவதால் தங்கள் முன் வருமாறு தொழிலதிபர்களிடம் கோரிக்கை வைத்தார். அதனைத் தொடர்ந்து கீழக்கரை தெற்கு தெரு ஜமாத் மஸ்ஜித் பரிபாலான கமிட்டியின் தலைவரும் தொழிலதிபருமான உமர் களஞ்சியம் மற்றும் ராமநாதபுரம் டுடேஸ் புட்வேர் உரிமையாளரும் தொழிலதிபருமான காசிம் ஆகியோர் சிசிடிவி கேமராக்கள் வழங்கினர். இதனை அகமது அதில் முஹம்மது பிலால் அப்துல்லாஹ் ஆகியோர் […]

மீண்டும் அத்து மீறும் பாகிஸ்தான்! போர் நிறுத்தம் என்ன ஆனது? ஸ்ரீநகர் முழுவதும் குண்டு வெடிப்பு சத்தங்கள் கேட்பதாக உமர் அப்துல்லா பதிவு..

காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22-ந்தேதி பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் செயல்பட்டு வந்த 9 பயங்கரவாத முகாம்களை இந்திய ராணுவம் ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கை மூலம் தாக்கி அழித்தது. இந்திய ராணுவத்தின் ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையை தொடர்ந்து இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்த நிலையில், எல்லையில் அத்துமீறி இந்திய பகுதிகளை குறிவைத்து கடந்த சில தினங்களாக பாகிஸ்தான் […]

மாநிலக் கட்சியாக அங்கீகரிக்கப்பட்ட நாம் தமிழர் கட்சிக்கு விவசாயி சின்னத்தை இந்தியத் தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்து அறிவிப்பு..

தமிழ்நாட்டில் ஒவ்வொரு தேர்தலிலும் சீமானின் நாம் தமிழர் கட்சி போட்டியிட்டு வருகிறது. மேலும், எல்லாத் தேர்தல்களிலும் கூட்டணி வைக்காமல் தனியாகவே நின்று ஓரளவுக்குக் கணிசமான வாக்குகளைப் பெற்று வருகிறது. எனினும், அது ஓர் அங்கீகரிக்கப்படாத கட்சியாக இருந்து வந்தது. இந்த நிலையில், அந்தக் கட்சி கடந்த ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் 8.22 சதவீதம் வாக்குகளைப் பெற்றது. இதையடுத்து நாம் தமிழர் கட்சியை மாநில கட்சியாக இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகரித்தது. இந்த நிலையில், அக்கட்சிக்கு தற்போது […]

இந்தியா- பாகிஸ்தான் இடையே தாக்குதல் நிறுத்தம்! இந்திய வெளியுறவுச் செயலாளர் அதிகாரபூர்வ அறிவிப்பு!

ஜம்மு – காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகளை குறிவைத்து கடந்த மாதம் 22-ம் தேதி தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் சுற்றுலாப் பயணிகள் உள்ளிட்ட 26 பேர் உயிரிழந்தனர். அதோடு ஏராளமானோர் காயமடைந்தனர். இந்த தாக்குதலின் பின்னணியில் பாகிஸ்தான் இருப்பதாக குற்றம் சாட்டிய இந்தியா பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியது. இதில் ஏராளமான தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடி தரும் வகையில் பாகிஸ்தான் இந்தியா மீது தாக்குதல் நடத்தியது.   […]

சோழவந்தான் சிவாலயங்களில் சனி பிரதோஷம் விழா

மதுரை மாவட்டம் சோழவந்தான் பிரளயநாத சுவாமி கோவிலில் நடந்த சனி பிரதோஷ விழாவில் நந்தி பெருமானுக்கு பால்,தயிர் உட்பட 12 திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. இதேபோல் மூலவருக்கும் அபிஷேகம் நடைபெற்று சுவாமியும் அம்பாளும் ரிஷப வாகனத்தில் கோவில் வளாகத்தில் வலம் வந்தனர். சுவாமி அம்பாளை தொடர்ந்து சிவ பக்தர்கள் சிவ சிவ என்று பாடி வந்தனர். எம்விஎம் குழுமம்தலைவரும் பாஜக விவசாய அணி மாநில துணைத்தலைவர் மணிமுத்தையா, வார்டு கவுன்சிலர்கள் வள்ளிமயில்,டாக்டர் மருதுபாண்டியன் ஆகியோர் பக்தர்களுக்கு சனி […]

கல்புளிச்சான் பட்டி கிராமத்தில் 4.ம் ஆண்டு கிடா முட்டு போட்டி

மதுரை மாவட்டம் விக்கிரமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட கல்புளிச்சான்பட்டி கிராமத்தில் ஆண்டுதோறும் பங்குனி மாத திருவிழாவில் கிடா முட்டு சண்டை நடந்து வந்தது. அரசு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளுடன் நேற்று கிடாய் முட்டு சண்டை நடந்தது. பல்வேறு கிராமங்களில் இருந்து கிடாய்கள் வந்து குவிந்தன.இந்நிகழ்ச்சிக்கு கமிட்டித் தலைவர் வீரசிங்கம் தலைமை தாங்கினார். முத்துப்பாண்டி,, கர்ணன் சதீஷ் ரகு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கமிட்டி நிர்வாகிகள் பவித்திர பால்பாண்டி கேப்டன் அப்பாசாமி ஆகியோர் வரவேற்றனர். முன்னாள் எம்எல்ஏ கதிரவன் கிடா முட்டு போட்டியில் […]

சோழவந்தான் திரௌபதி அம்மன் கோவிலில் தீர்த்தவாரி திருவிழா

மதுரை மாவட்டம் சோழவந்தான் திரௌபதி அம்மன் கோவில் சித்திரை மாத பூக்குழி திருவிழா 12 நாட்கள் நடந்தது.10ம் நாள் உபயதார் சங்கங்கோட்டை கிராமத்தார் சார்பாக பக்தர்கள் பூக்குழி இறங்கும் விழா நடந்தது. 11ம் நாள் விழாவை முன்னிட்டு தீர்த்தவாரி திருவிழா கொடி இறக்கம் நடந்து மஞ்சள் நீராட்டு விழா நடந்தது. அம்மன் வைகை ஆற்றுக்கு சென்று தீர்த்தம் ஆடி மீண்டும் கோவிலை வந்தடைந்தது. இங்கு அம்மன் வண்ணப் பூக்களால் மின்னொளி அலங்காரத்தில் ஊஞ்சல் ஆடும் நிகழ்ச்சி நடந்தது. […]

தென்கரை அகிலாண்டேஸ்வரி அம்மன் சமேத மூல நாத சாமி கோவிலில் திருதேரோட்டம்

சோழவந்தான் அருகே தென்கரை கிராமத்தில் உள்ள அகிலாண்டேஸ்வரி அம்மன் சமேத மூல நாத சுவாமி திருக்கோவில் சித்திரை திருவிழா 5 நாட்கள் நடைபெற்றது. அம்மன் ஒவ்வொரு நாளும் வெவ்வேறு வாகனத்தில் வீதி உலா நடந்தது. மூன்றாம் நாள் திருக்கல்யாணமும், நான்காம் நாள் திருத்தேர் நான்கு ரத வீதியும் உலாவும் நடந்தது. இன்று தீர்த்தவாரி உற்சவம் நடைபெற்று சுவாமி அம்பாளும் ரிஷப வாகனத்தில் பவனி வருதல் நடைபெறும். விழா ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்தனர். காடுபட்டி சப்இன்ஸ்பெக்டர் சிவக்குமார் […]

வஃக்ப்-திருடர்களும்..!திருத்தங்களும்..!

வஃக்ப்-திருடர்களும்..! திருத்தங்களும்..! (ஒரு சிறிய தொடர்) வஃக்ப் புரிதல் -22 ஒரு ஜனநாயக நாட்டில் இயற்றப்படுகிற சட்டங்கள் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பதாக இருக்கவேண்டும். ஒரே நாடு,ஒரே தேர்தல்,ஒரே ரேசன் போன்ற ஒரே என்று கட்டமைக்கப்படுகிற எந்தக் கருத்திலும் சர்வாதிகாரத்தை நோக்கி நகர்ந்து விடும். இந்தியா போன்ற பல மதங்கள்,பல மொழிகள்,பல இனங்கள்,பல கலாச்சாரங்கள் உள்ள நாட்டில் வேற்றுமையில் ஒற்றுமை (Unity in diversity) என்னும் கருத்தியலே ஆட்சியாளர்களால் முன்னெடுக்க படவேண்டும். மாறாக இயற்றப்படுகிற சட்டங்களை ஒரு மதத்தினரை […]

முள்ளிப்பள்ளத்தில் திமுக சார்பில் சாதனை விளக்க பொதுக்கூட்டம். வெங்கடேசன் எம் எல் ஏ சிறப்புரை

மதுரை வடக்கு மாவட்டம் சோழவந்தான் சட்டமன்ற தொகுதி வாடிப்பட்டி தெற்கு ஒன்றியம் சார்பாக சோழவந்தான் அருகே முள்ளிபள்ளத்தில் நான்கு ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது கூட்டத்திற்கு வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் பசும்பொன்மாறன் தலைமை தாங்கினார் வடக்கு ஒன்றிய செயலாளர் பால ராஜேந்திரன் சோழவந்தான் பேரூர் செயலாளர் வழக்கறிஞர் சத்யபிரகாஷ் வாடிப்பட்டி பேரூர் செயலாளர் மு.பால்பாண்டியன் பொதுக்குழு உறுப்பினர் ஸ்ரீதர் மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் முருகன் சோழவந்தான் பேரூராட்சி தலைவர் எஸ் எஸ் கே […]

குருவித்துறை குரு பெயர்ச்சி விழாவுக்கு செல்லும் சாலையில் உள்ள பள்ளங்களை சரி செய்ய பக்தர்கள் கோரிக்கை

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே குருவித்துறையில் குரு பெயர்ச்சி விழா நாளை நடைபெறுவதை ஒட்டி பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் பொதுமக்கள் தமிழக முழுவதிலிருந்தும் குரு பெயர்ச்சி விழாவில் பங்கு பெறுவர் இந்த நிலையில் சோழவந்தான் இல் இருந்து குருவித்துறை செல்லும் சாலையில் ஆங்காங்கே பள்ளங்கள் ஏற்பட்டுள்ளதால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் வாகன ஓட்டிகள் பல்வேறு சிரமங்கள் ஏற்படுவதாக தெரிவிக்கின்றனர் நெடுஞ்சாலை துறையினர் பக்தர்களின் நலனை கருத்தில் கொண்டு சோழவந்தானிலிருந்து முள்ளி பள்ளம் வரை ஆங்காங்கே உள்ள சிறிய […]

ஏர்வாடி தர்ஹா சந்தனக்கூடு மத நல்லிணக்க திருவிழா.! கொடியேற்றத்துடன் துவக்கம்.!!

ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி தர்ஹாவில் உலக பிரசித்தி பெற்ற மஹான் குத்புல் அக்தாப் சுல்தான் செய்யது இப்ராஹிம் ஷஹீத் ஒலியுல்லாஹ் தர்ஹாவில் வருடம் தோறும் மத நல்லிணக்கத்திற்கான சந்தனக்கூடு எனும் மத நல்லிணக்க விழா பெரும் விமர்சியாக நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த வருடத்தின் 851ம் ஆண்டின் சந்தனக்கூடு எனும் மத நல்லிணக்க விழா முதல் நிகழ்ச்சியாக ஏப் 29-ல் தொடங்குகிறது இந்த மவ்லிது ஷரீப் தர்ஹா மண்டபத்தில் மார்க்க அறிஞர்களால் தொடர்ந்து 23 நாட்களுக்கு இறை […]

மதவாத பிரச்சினையை ஏற்படுத்த பாகிஸ்தான் முயற்சி!-மத்திய அரசு குற்றச்சாட்டு..

ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கை குறித்து மத்திய அரசின் வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி, கர்னல் சோபியா குரேஷி மற்றும் விங் கமாண்டர் வியோமிகா சிங் ஆகியோர் செய்தியாளர்களுக்கு விளக்கமளித்தனர். கர்னல் சோபியா குரேஷி செய்தியாளர்களிடம் கூறியதாவது:- இந்திய ராணுவ நிலைகளை குறிவைத்து தாக்க பாகிஸ்தான் முயற்சித்தது. பாகிஸ்தான் படைகள் இந்திய எல்லைகளில் அதிக அளவில் தாக்குதல் நடத்தி உள்ளது. பயணிகள் பயன்படுத்தும் விமானங்களை பாகிஸ்தான் கேடயமாக பயன்படுத்தியது. 8-ம் தேதி இரவு 300 முதல் 400 டிரோன்கள் […]

ராணுவ நடவடிக்கைகளை நேரலையாக ஒளிபரப்பு செய்ய வேண்டாம்: ஊடகங்களுக்கு ஒன்றிய அரசு அறிவுறுத்தல்!!

பாதுகாப்புப் படையின் நடவடிக்கைகளை நேரலையாக ஒளிபரப்பு செய்ய வேண்டாம் என்று ஊடகங்கள், டிஜிட்டல் தளங்கள் மற்றும் தனிநபர்களுக்கு ஒன்றிய பாதுகாப்பு அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது. காஷ்மீரில் நிகழ்ந்த பஹல்காம் தாக்குதலுக்கு ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில், இந்தியா பதிலடி கொடுத்தது. இதையடுத்து இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் மூண்டது. இந்த நிலையில், ஒன்றிய பாதுகாப்புத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “அனைத்து ஊடக சேனல்கள், டிஜிட்டல் தளங்கள் மற்றும் தனிநபர்கள் ஆகியோர் இந்திய ராணுவ […]

போர் பதற்றம்; ஜம்மு-காஷ்மீரில் உள்ள தமிழ்நாட்டு மாணவர்களை மீட்க தமிழக அரசு நடவடிக்கை!உதவி எண் அறிவிப்பு!!

ஜம்மு-காஷ்மீர் ஆனந்த்நாக் மாவட்டத்தில் பைசரான் பள்ளத்தாக்குப் பகுதியில் கடந்த 22.4.2025-அன்று சுற்றுலாவிற்கு சென்றிருந்த பொது மக்கள் மீது தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த சிலர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைக்கப் பெற்றவுடன், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தீவிரவாதிகளால் தாக்குதலுக்கு உள்ளான தமிழ்நாட்டைச்சேர்ந்தவர்களை பாதுகாக்கும் முகமாக அவர்கள் தொடர்பு கொள்ள ஏதுவாக புதுடில்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் சிறப்பு உதவிமையம் தொடங்க உத்தரவிட்டு, அதனடிப்படையில் உதவி மையம்தொடங்கப்பட்டு, 011-24193300 (Landline), 9289516712 (Mobile Number with […]

முதல் முறை​யாக அமெரிக்​காவைச் சேர்ந்த கார்​டினல் ராபர்ட் பெர்​வோஸ்ட் என்​பவர் புதிய போப்​பாக தேர்வு..

கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் மத தலைவரான போப் பிரான்சிஸ் (வயது 88) கடந்த மாதம் 21 ஆம் தேதி உடல்நலக்குறைவால் மரணம் அடைந்தார். அவரது உடல் அடக்கம் கடந்த 26 ஆம் தேதி நடந்தது. 9 நாட்கள் வாடிகனில் துக்கம் அனுசரிக்கப்பட்ட நிலையில், புதிய போப் பிரான்சிஸை தேர்வு செய்வதற்கான நடைமுறைகள் தொடங்கின. அதன்படி நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை வாடிகனில் உள்ள சிஸ்டைன் சேப்பல் தேவாலயத்தில் கார்டினல்கள் பங்கேற்ற ரகசிய வாக்கெடுப்பு நடந்தது. இதற்காக வாடிகனில் 250 கார்டினல்கள் […]

இந்திய ராணுவத் தலைமை தளபதிக்கு மத்திய அரசு கூடுதல் அதிகாரம் வழங்கி உத்தரவு..

இந்திய ராணுவத் தலைமை தளபதிக்கு மத்திய அரசு கூடுதல் அதிகாரம் வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது. பிராந்தியங்களில் உள்ள படை வீரர்களை எல்லைப் பகுதிக்கு அழைத்துக் கொள்ள 3 ஆண்டுகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இந்தியா – பாகிஸ்தான் ராணுவத்தினர் நேற்று இரவு முதல் எல்லையோரப் பகுதிகளில் கடுமையான தாக்குதலில் ஈடுபட்டு வருவதால் இரு நாடுகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது. இந்திய எல்லைப் பகுதி நகரங்களை குறிவைத்து பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்திய நிலையில் முப்படைத் தளபதிகளையும் இன்று சந்தித்து […]

மணல் ஜல்லி விலையை குவாரி உரிமையாளர்கள் குறைக்காவிட்டால் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக டிப்பர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்

தமிழகத்தில் கட்டிடப் பணிகளுக்கு தேவையான எம் சாண்ட் பீ சாண்ட் மணல் மற்றும் ஜல்லி; விலையை; குவாரி உரிமையாளர்கள் சமீபத்தில் ரூபாய் ஆயிரம் அதிகமாக உயர்த்தி உள்ளனர். இந்நிலையில் இவ்விலை உயர்வால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படுவதாக என கருதிய தமிழக அரசு ரூ.1000 விலை குறைவாக வழங்கச் சொல்லி குவாரி உரிமையாளர்;களுக்கு உத்தரவிட்டது. ஆனால் குவாரி உரிமையாளர்கள் விலையை குறைக்காமல் அரசாங்க உத்தரவு தங்களுக்கு வரவில்லை எனக்கூறி புதிய விலையிலேயே விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது . ஆனால் […]

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!